சங்ககால ஊன்‌ உணவும்‌ சமகால உணவு அரசியலும்‌ - ஆய்வு கட்டுரை

 சங்ககால ஊன்‌ உணவும்‌ சமகால உணவு அரசியலும்‌

ரா.சிலம்பரசன்‌
முனைவர்பட்ட ஆய்வாளர்‌
தமிழ்த்துறை

பெரியார்‌ பல்கலைக்கழகம்‌
சேலம்‌ - 636 011

முகவுரை

உணவு என்பது வயிற்றுப்பசியைத்‌ ஜீக்கும்‌ வழிமுறை மட்டுமன்று. அது உயிரைத்‌ தாங்கும்‌ உடலுக்கும்‌, உடலை இயக்கும்‌ உயிருக்கும்‌ ஆதாரமானதாகும்‌. அவ்வகையான்‌ “உடம்பை வளர்க்கும்‌ உபாயமறிந்தே உடம்பை வளர்த்தேன்‌ உயிர்‌ வளர்த்தேனே” என்கிறார்‌ திருமூலர்‌. உலக உயிர்கள்‌ அனைத்திற்கும்‌ உணவென்பது பொது. யாதெனில்‌ வாழ்வதற்கு அதுவே அடிப்படை என்பதாம்‌. அந்நெறியே உணவுச்‌ சங்கிலியாலான உலக இயக்கம்‌. மனிதன்‌ தோன்றிய நாள்‌ முதலே உணவுத்‌ தேடலும்‌ தொடங்கிற்று. மனிதனது உணவுத்‌ தேடலுக்கு இயற்கையே பெரும்‌ நன்கொடை நல்கியது. மலைகளும்‌ காடுகளும்‌ மனிதனது வாழ்விடமான காலத்தில்‌ அவனது உணவுத்‌தேவைகளை அவைகளே பூர்த்தி செய்தன. காய்‌, கனி, பழங்கள்‌ என கிடைத்ததை உண்டான்‌. சில நேரங்களில்‌ விலங்குகளை வேட்டையாடியும்‌ உண்ணத்‌ தலைப்பட்டான்‌. எனவே மனித நாகரிக வளர்ச்சிப்‌ படிநிலைகளில்‌ வேட்டைச்‌ சமூகம்‌ முதலிடம்‌ பெறும்‌. இதனைத்‌ தொடர்ந்தே கால்நடை வளாப்பும்‌ வேளாண்மைச்‌ சமூகங்களும்‌ பின்‌ நின்றன. இவ்வாறான பண்பாட்டூப்‌ படிநிலைகளுக்குச்‌ சற்றும்‌ விதிவிலக்காகாதது தமிழினச்‌ சமூகம்‌.

இலக்கியங்களின்‌ அடிப்படையில்‌ தமிழினச்‌ சமூகத்தை அறிய முற்பட்டால்‌ சங்க இலக்கியங்களே அதற்கான முதன்மைச்‌ சான்றாதாரங்கள்‌. பொதுவெளியில்‌ சங்க இலக்கியங்கள்‌ ஒரு தலைச்சிறந்த பண்பாட்டின்‌ உச்சம்‌ என்றே போற்றப்படுகின்றன. அவை ஆராயப்படுமாயின்‌ அதுவே உண்மையாதலும்‌ திண்ணம்‌. அவ்வாறமைந்த சங்கத்‌ தமிழரின்‌ பண்பாட்டுப்‌ பழக்க வழக்கங்களைப்‌ பகுத்தாராயுமிடத்து அவர்தம்‌ உணவுப்‌ பழக்க வழக்கங்கள்‌ தனிச்சிறப்பிடம்‌ பெறுகின்றன.

இந்நிலையில்‌ சங்கப்‌ பனுவல்களை அணுகுமிடத்து சங்ககாலத்‌ தமிழாகள்‌ ஊன்‌ உணவின்‌ மீது அதீத நாட்டமும்‌ பிரியமும்‌ உள்ளவர்களாக விளங்கியமை நன்கு புலப்படூம்‌. மான்‌, முயல்‌, உடும்பு,

ஆடு, மாடு, ஈசல்‌, கோழி முதலான விலங்கு மற்றும்‌ பறவை உள்ளிட்ட ஊன்‌ உணவுகளை மிக விரும்பி உண்டு களித்திருப்பதைச்‌ சங்க இலக்கியங்களின்‌ வழியே கண்டூணரலாம்‌. இவை ஒருபுறமிருக்க திணையடிப்படையிலான வாழ்விடங்களில்‌ அதன்‌ மண்‌ சார்ந்த உணவுப்‌ பழக்க வழக்க முறைகளையும்‌ அறிய இயலுகிறது.

தொடக்கத்தில்‌ பசிக்காக உணவு என்றும்‌, பின்னாளில்‌ பண்பாட்டோடு உணவு என்றும்‌ உணவுகளின்‌ மீது குவிந்திருந்த சமூகப்‌ பார்வை. சமகாலத்தில்‌ வாழ்க்கைப்‌ பொருளாதார அடிப்படையிலும்‌, சமய அடிப்படையிலும்‌, சாதியப்‌ பாகுபாட்டு அடிப்படையிலும்‌ அரசியலாக்கப்படுகிறது. இவ்வரசியல்‌ பல அடக்குமுறைகளுக்கும்‌ ஒதுக்கு முறைகளுக்கும்‌ சாதகமாக இருக்கின்றது. இத்தகைய பிற்போக்குச்‌ சிந்தனையைச்‌ சுட்டிக்காட்டி உணவு என்பது அவரவா சுயச்சார்பு என்ற புரிதலை உண்டாக்குவதாகவும்‌, சங்க காலம்‌ முதலே ஊன்‌ உண்ணுதல்‌ என்பது தமிழா வாழ்வியலில்‌ தவிர்க்கவியலாத பழக்க வழக்கமாக இருந்து வந்துள்ளமையை விளக்குவதாகவும்‌, ஊன்‌ உண்ணுதல்‌ தொடாபான சமகாலப்‌ பார்வைக்குச்‌ சாதி, சமய மற்றும்‌ பொருளாதார ஏற்றத்‌ தாழ்வுகள்‌ பின்புலமாக இருப்பதனை எடூத்துரைப்பதாகவும்‌ இவ்வாய்வுக்கட்டுரை அமைகிறது.

சமூக வளர்ச்சிப்‌ படிநிலைகளில்‌ மனித இனம்‌ தொடக்க கால மனிதனின்‌ தேடல்‌ உணவுகளுக்காக மட்டுமே தொடங்கிற்று. அது நாகரிக வளர்ச்சியற்றக்‌ காலம்‌. மனிதன்‌ ஒரு சமூக விலங்கு என்னும்‌ சமூகவியலாளர்களின்‌ கருத்து அங்கிருந்துதான்‌ தொடங்கியிருக்க வேண்டும்‌. விலங்குகளைப்‌ போலவே பசியை மட்டும்‌ அறிந்திருந்த மனிதக்‌ கூட்டத்தின்‌ வாழ்வு ஓர்‌ ஒழுங்கு முறையற்ற இயற்கையுடனான வாழ்க்கைப்‌ போராட்டமாகவே அமைந்தது. இத்தகைய பின்புலத்தை அடியொற்றியே வளரத்‌ தொடங்கின மனித இன நாகரிக வளாச்சிப்‌ படிநிலைகள்‌. உணவும்‌ தொழிலும்‌ ஆகிய இரண்டூமே மனித இனத்தை வள்ச்சிப்‌ பாதைக்கு அழைத்து வந்த அடிப்படைக்‌ காரணிகளாகும்‌. அவற்றுள்‌ உணவை தாம்‌ வாழும்‌ புறச்சூழலிருந்தே மனிதன்‌ பெற்றுக்‌ கொண்டான்‌. இதனை, மனிதனின்‌ உணவுப்‌ பழக்கம்‌ அவன்‌ வாழும்‌ இடத்தின்‌ தட்பவெப்பநிலை, அப்பகுதியில்‌ விளையும்‌ தானியங்கள்‌, காய்கறிகள்‌, வளரும்‌ உயிரினங்கள்‌ மற்றும்‌ பல காரணிகளைக்‌ கொண்டு அமைவதாக கட்டுரையொன்றில்‌ இராமியா குறிப்பிடுவார்‌ (சிந்தனையாளன்‌,ப.23,செப்டம்பர்‌-2018). இவ்வாறான புறச்சூழல்களே அங்கு வாழும்‌ மனிதனுக்கு உணவை ஈந்தாலும்‌ தன்‌ அறிவின்‌ முயற்சியால்‌ அச்சூழலைத்‌ தன்வசமாக்கிக்‌ கொண்ட மனிதன்‌ தன்‌ உழைப்பினாலும்‌ உணவைப்‌ பெற முயன்றான்‌; அம்முயற்சியே தொழிலாகப்‌ பரிணமித்தது; அங்கிருந்துதான்‌ குழு அல்லது கூட்டு முயற்சியையுடைய ஒரு நாகரிகமான சமூகம்‌ தோன்றியது: அதன்‌ விளைவே வேட்டை, கால்நடை வளர்ப்பு, பயிர்த்தொழில்‌ என்னும்‌ சமூகக்‌ கட்டமைப்புகளாகும்‌.

இக்கட்டமைப்புகளின்‌ அடிப்படையில்‌ சங்ககாலத்‌ தமிழ்ச்‌ சமூகத்தை ஆராய முற்படும்‌ கா.சுப்பிரமணியன்‌, உணவு சேகரிக்கும்‌ நிலை (அகம்‌.309,331,377 பெரும்பாண்‌.89.97), வேட்டையாடும்‌ நிலை (அகம்‌.31,58,182,193,248.261,282,284: நற்றிணை 3,285), காடுகளை எரித்துப்‌ பயிர்செய்யும்‌ நிலை (ஐங்‌.252,259.266,270.,295 அகம்‌.140,194 நற்றிணை.122.209), கால்நடை வளர்ப்பு நிலை (அகம்‌.103,168,265,274 நற்றிணை.80,142,192), பயிர்த்தொழில்‌ (அகம்‌.204,237,249 நற்றிணை 60,210) என்னும்‌ சங்க காலச்‌ சமூக வளர்ச்சிப்‌ படிநிலைகளை ஐந்தாக வகுத்தும்‌, அதற்கான உரிய சான்றுகளைச்‌ சங்க இலக்கியங்களிலிருந்தே கொடுத்தும்‌ நிறுவ முயல்வார்‌. (சங்ககாலச்‌ சமுதாயம்‌, ப.2,2011) இவ்வரையறையின்‌ கீழ்‌ தமிழினச்‌ சமுதாயத்தை மட்டுமின்றி மனித இனச்‌ சமுதாயத்தையே பொருத்திக்காணவியலும்‌. சங்கத்‌ தமிழினச்‌ சமுதாயத்தில்‌ உணவு

உணவு என்னும்‌ சொல்‌ தொல்காப்பியத்தில்‌ காணக்கிடைக்கும்‌. தொல்காப்பியர்‌ அகப்பாட்டூ மரபிற்குரிய முதல்‌, ௧௬, உரிப்பொருட்களை எடுத்துரைக்கும்‌ முகத்து கருப்பொருள்களாவன 
  • “தெய்வம்‌ உணாவே மா மரம்‌ புள்‌ பறை செய்தி யாழின்‌ பகுதியொடு” (தொல்‌.964) 
 என்பார்‌. இவற்றுள்‌ அவர்‌ கூறும்‌ உணா என்பது உணவே ஆகும்‌. திணையடிப்படையிலான ஐவகை நிலங்களுக்குரிய உணவு வகைகளைப்‌ பட்டியலிடுவதே அதன்‌ நோக்கம்‌. இந்நிலையில்‌ தெய்வத்தையடுத்து உணவுக்கு முதன்மையிடம்‌ அளித்திருப்பதனால்‌ அதன்‌ இன்றியமையாமை நமக்கு நன்கு புலனாகும்‌. இதன்வழி முல்லைக்கு வரகு, சாமை- குறிஞ்சிக்கு ஐவன நெல்‌, திணை, மூங்கிலரிசி, கிழங்கு- மருதத்திற்குச்‌ செந்நெல்‌, வெண்ணெல்‌, கரும்பு- நெய்தலுக்கு மீன்‌, உப்பு- பாலைக்கு ஆறலைத்த பொருள்‌, சூறைகொள் பொருள்‌ என விளக்கம்‌ தருவார்‌ ச.பாலசுந்தரனார்‌ (பக்‌.43-44). மேலும்‌ உணவு என்ற பொருள்‌ தரும்‌ உணா என்ற சொல்லைப்‌ புறம்‌.160, புறம்‌.335 ஆம்‌ பாடல்களில்‌ காணலாம்‌.

சங்க இலக்கியத்தில்‌ சோறு என்னும்‌ பதத்தைப்‌ பல இடங்களில்‌ காணவியலும்‌. 
  • “சோறு ஆக்கிய கொழுங்‌ கஞ்சி” (பட்டின.44) 
என்ற பாடல்‌ வரியே அதற்குச்‌ சான்று பகரும்‌. 
 
சோற்றின்‌ அளவீட்டின்‌ அடிப்படையில்‌ அதனை சிறுசோறு, பெருஞ்சோறு என  பாகுபடூத்தியிருப்பதையும்‌ காணலாம்‌. பெரும்‌ படையுண்ணும்‌ மிகுதியான சோற்றினைப்‌
  • “பெருஞ்‌ சோற்று மிகு பதம்‌”(புறம்‌.2) என்றும்‌, 
  • “பெருஞ்‌ சோறு கொடுத்த ஞான்றை”(அகம்‌.233) என்றும்‌, 
அளவில்‌ குறைவானதைச்‌ 
  • “சிறுசோறு குவைஇயும்‌”(அகம்‌.110) என்றும்‌ சங்கப்பாடல்கள்‌ குறிப்பிடுகின்றன. 
உணவு சமைப்பதற்காக அடிுப்புகளைச்‌ சங்கத்‌ தமிழாகள்‌ பயன்படூத்தியுள்ளமைக்கு 
  • “*ஆடூ நனி மறந்த கோடூ உயர்‌ அடுப்பின்‌”(புறம்‌.164), 
  • “ஆண்தலை அணங்கு அடுப்பின்‌” (மதுரை.29) முதலிய சங்கப்‌ பாடல்‌ வரிகள்‌ சான்றுகளாகின்றன.

சங்க கால உணவு முறைகளுள்‌ கீரைகள்‌, காய்‌, கனிகள்‌, பழங்கள்‌, சிறுதானிய உணவு வகைகள்‌, தேன்‌, கிழங்கு வகைகள்‌, பால்‌, தயிர்‌, மோர்‌, மாவடூ, உப்பு எனப்‌ பல பண்டங்கள்‌ நிறைந்திருப்பினும்‌ நெல்லினாலான சோறு பெருஞ்சிறப்புடையது. அது விளையும்‌ மருதம்‌ செல்வச்‌ செழிப்பு மிக்கது. அதனானே சோழ நாடூ சோறுடைத்து என்பது மரபு. இதன்வழி நிலம்‌ உழுது, நெல்‌ விளைவித்து, நெல்லை அரிசியாக்கி பின்‌ அதனை சோறாக்கும்‌ கலன்களும்‌ கருவிகளும்‌ கண்டறிந்து வேளாண்‌ உற்பத்தியில்‌ தன்னிறைவுப்‌ பெற்ற சமூகமாகச்‌ சங்க மருதநிலச்‌ சமூகம்‌ இருந்திருப்பதனாலேதான்‌ அவை பற்றிய குறிப்புகளைச்‌ சங்க இலக்கியங்கள்‌ தாங்கி நிற்கின்றன.
அதுமட்டுமின்றி பிற நிலத்தவரும்‌ பண்டமாற்றால்‌ அரிசியினைப்‌ பெற்றிருப்பது நெல்லின்‌ உற்பத்தி உபரியையும்‌ அதன்‌ தேவையையும்‌ நன்கு புலப்படூத்துகிறது.

சங்ககால ஊன்‌ உணவு

சங்ககாலத்‌ தமிழாகளுக்கு உணவு குறித்த புரிதலும்‌ தெளிவும்‌ நிறைய உண்டு. சங்கத்தமிழா மரக்கறியுணவாயினும்‌, இறைச்சியாயினும்‌ நிரம்பவும்‌ நன்றாக உண்பதில்‌ அக்கறையுடையவாகள்‌. அவ்வாறு உண்டூ பழகியவர்கள்‌ என்பார்‌ ந.சுப்ரமண்யன்‌ (ப.399). உலக உயிர்கள்‌ அனைத்தும்‌ உணவுக்காக பிற உயிரினங்களையே சார்ந்திருக்கின்றன. அதன்‌ விளைவே உணவுச்‌ சங்கிலி என்னும்‌ தொடா்‌ சார்பு அமைப்பு. இதனடிப்படையிலேயே அமைந்துள்ளது உலகின்‌ இயக்கம்‌.

இறைச்சியைக்‌ குறிக்கும்‌ ஊன்‌ என்னும்‌ சொல்‌ புறம்‌.384, புறம்‌.359, அகம்‌.89, அகம்‌.265, பொருந.105 முதலிய சங்கப்‌ பாடல்களில்‌ வந்துள்ளது. மேலும்‌ நிணம்‌ என்னும்‌ சொல்‌ இறைச்சி அல்லது கொழுப்பு என்ற பொருண்மையில்‌ புறம்‌.150, புறம்‌.359 ஆம்‌ பாடல்களில்‌ வந்துள்ளமையைக்‌
காணமுடிகிறது. இறைச்சி (தொல்‌.1175, 1176) என்னும்‌ சொல்லே தொல்காப்பியத்தில்‌ இடம்‌ பெறுவதைக்‌ காணலாம்‌. ஆனால்‌ அது அகப்பாட்டுக்குரிய மறைபொருளான ஓர்‌ உத்தி முறையைக்‌
குறிப்பதாகும்‌. இருப்பினும்‌ அவ்வுத்தி விலங்குகளின்‌ ஒழுகலாற்றினால்‌ உணாத்தப்படும்‌. இதனால்‌ விலங்குகளோடூ தொடர்புடைய இறைச்சி என்னும்‌ சொல்லையே அவ்வுத்தி முறைக்கு பெயராகக்‌
கண்டிருக்கலாம்‌.

சங்ககால வெறியாட்டு நிகழ்வில்‌ ஆட்டினைப்‌ பலியிடும்‌ பழக்கம்‌ இருந்துள்ளமைக்கு 
  • “மறிக்‌ குரல்‌ அறுத்து”(குறு.263) என்ற பாடல்‌ வரியும்‌, 
  • “பலி கொடுத்து””(அகம்‌.22) என்ற பாடல்‌ வரியும்‌
நடுகல்‌ வழிபாட்டூ மரபில்‌ பலியிடும்‌ பழக்கம்‌ பின்பற்றப் பட்டுள்ளமைக்கு 
  • “ோப்பிக்‌ கள்ளொடூ துரூஉப்‌ பலி கொடுக்கும்‌”(அகம்‌.35)  என்ற பாடல்‌ வரியும்‌ 
காக்கைக்கு ஊன்‌ படைக்கும்‌ பழக்கம்‌ நடைமுறையிலிருந்தமைக்கு 
  • “பச்சூன்‌ பெய்த பைந்நிண வல்சி பொலம்‌ புனை கலத்தில்‌ தருகுவென்‌”(ஜஐங்குறு.391) என்ற பாடல்‌ வரியும்‌, 
  • “செஞ்சோற்ற பலி மாந்திய கருங்காக்கை””(பொருந.183)

என்ற பாடல்‌ வரியும்‌ சான்றுகளாகின்றன. இதன்வழி பலியிடூதலும்‌ அதன்‌ ஊனும்‌ சங்கத்‌ தமிழர்களின்‌ உணவு முறைகளோடு நெருங்கியுள்ள தொடர்பினை அறியலாம்‌.

மான்‌

மானை வேட்டையாடி உண்ணுதலை 
  • “மான்‌ கணம்‌ தொலைச்சிய குருதி அம்‌ கழற்கால்‌” (புறம்‌.150) 
என்ற பாடல்‌ வரியும்‌, 
  • “வருவிசை தவிர்த்த கடமான்‌ கொழுங்குறை””(மலை.175) 
என்ற பாடல்‌ வரியும்‌ எடுூத்துக்காட்டுகின்றன. முல்லைநில மக்கள்‌ வாழும்‌ இடங்களில்‌ மான்களும்‌ முயல்களும்‌ வான்கோழிகளும்‌ வழங்குவன. அவற்றைக்‌ கொன்று அவர்‌ உண்பர்‌ என்பது சு.வித்தியானந்தன்‌ தரும்‌ விளக்கம்‌ (ப.204).

முயல்‌

முயற்கறி உண்டமையைக்‌ 
  • “குறுமுயலின்‌ குழைச்‌ சூட்டோடூ” (புறம்‌.395), 
  • “எல்லு முயல்‌ எறிந்த வேட்டுவன்‌ சுவல”ருற்‌.59), 
  • “நெடுங்‌ செவிக்‌ குறுமுயல்‌ போக்குஅறை வளைஇ” (பெரும்‌.115)
முதலிய சங்கப்பாடல்‌ வரிகள்‌ விளக்கி நிற்கின்றன.

உடும்பு

சங்கத்‌ தமிழாகள்‌ உடும்புக்கறி உண்டமைக்கு 
  • “உடும்பு கொலீஇ”ரநற்‌.59), 
  • “குமலி தந்த மமனவுச்சூல்‌ உடும்பின்‌?” (பெரும்‌.132), 
  • “பிணவுநாய்‌ முடிக்கிய தடியொடுூ விரைஇ” (மலை.177)
ஆகிய பாடல்‌ வரிகள்‌ சான்றுகளாகின்றன. உடும்பு வேட்டைக்கு நாயைப்‌ பயன்படுத்தியுள்ளமையை மலைபடூகடாம்‌ நூலின்‌ வழி அறியவியலுகிறது.

ஆடு

கரிகாற்‌ பெருவளத்தான்‌ பொருநாகளுக்கு ஆட்டிறைச்சியைக்‌ கொடுத்து உண்பித்து மகிழ்ந்தான்‌ என்பதனைத்‌ 
 
  • “துராஅய்‌ துற்றிய துருவைஅம்‌ புழுக்கின்‌ பராஅரை வேவை பருகு எனத்‌ தண்டி, காழின்‌ சுட்ட கோழ்‌ஊன்‌ கொழுங்குறை”(பொரு.103-105) 
 
என்று முடத்தாமக்‌ கண்ணியார்‌ பாடியுள்ளார்‌.

மாடு

  • “தோகைத்‌ தூவித்‌ தொடைத்தார்‌ மழவர்‌ நாகுஆ வீழ்த்து” (அகம்‌.249), 
  • “இன்சிலை எழில்‌ஏறு கெண்டி, புரைய நிணம்‌ பொதி விழுத்தடி நெருப்பின்‌ வைத்து எடூத்து””(அகம்‌.265), 
  • “கொழுப்பு ஆ எறிந்து குருதி தூஉய்‌ புலவுப்புழுங்கு உண்ட” (அகம்‌.309), 
  • “கொழுப்புஆ தின்ற கூர்ம்படை மழவர்‌” (அகம்‌.129), 
  • “கேளா மன்னர்‌ கடிபுலம்‌ புக்கு நாள்‌ஆ தந்து” (பெரும்‌.140) 
 
முதலிய சங்கப்‌ பாடல்‌ வரிகள்‌ தொல்தமிழாகள்‌ மாட்டிறைச்சியினை உணவாக உட்கொண்ட செய்தியினை
எடூத்தியம்புகின்றன..

மீன்‌

மீன்‌ பிடித்தலும்‌ மீனை விற்றலும்‌ நெய்தல்‌ நில மக்களின்‌ தொழிலாகவே இருந்துள்ளமை சங்க இலக்கியங்களின்‌ வாயிலாக நன்கு புலனாகும்‌. 
 
  • “இருங்கெடிற்று மிசையொடுூ”(புறம்‌.384),
  • “நெடூவாளைப்‌ பல்‌ உவியல்‌”(புறம்‌.395). 
  • “வராஅல்‌ கோட்டுமீன்‌ கொழுங்குறை”(புறம்‌.399), 
  • “கருங்கண்‌ வராஅல்‌ பெருந்தடி மிளிர்வையொடூ”(நற்‌.60), 
  • “குறுக வாரல்‌”?(அகம்‌.196), “பெருங்கடற்‌ பரதவர்‌
  • கோள்மீன்‌ உணங்கலின்‌??(குறு.320), 
  • “கொழுமீன்‌ குறைஇய துடிக்கண்‌ துணியல்‌”(மதுரை.320),
  • “வறற்குழற்‌ சூட்டின்‌””(சிறுபாண்‌.163), 
  • “தண்‌ மீன்‌ சூட்டொடூ””(பெரும்பாண்‌.282), 
  • “கடல்‌ இறவின்‌ சூடூ தின்றும்‌” (பட்டினப்‌.63)  
 
முதலிய இப்பாடல்‌ வரிகள்‌ மீன்‌ உணவை மிக விரும்பி உண்டமையைப்‌ புலப்படூத்துகின்றன. 

முள்ளம் பன்றி
  • “முளவு மா வல்சி எயினர்‌”(ஞங்குறு.364) 
 
இங்கு முளவு மா என்றது முள்ளம் பன்றியை என்பது உரைக்காரர்கள்‌ கருத்து. 
  • “வீழ்‌ முகக்‌ கேழல்‌ அட்ட பூசல்‌”(மதுரை.295,) 
  • “முளவுமாத்‌ தொலைச்சிய பைந்நிணப்‌ பிளவை”(மலை.176) 
  • “வளைமருப்பு ஏனம்‌ வரவுபார்த்‌ திருக்கும்‌” (பெரும்பாண்‌.110)

முதலிய பாடல்‌ வரிகள்‌ முள்ளம் பன்றியை உணவாகக்‌ கொண்டமையை வெளிக்காட்டுகின்றன.

தவளை

தவளையை உணவாக உட்கொள்ளுதலை 
 
  • “வரி நுணல்‌ அகழ்ந்து? (நற்‌.59) 
 
என்னும்‌ பாடல்வரி விளக்கும்‌.

ஆமை

ஆமை இறைச்சியைச்‌ சங்க காலத்தவர்‌ உணவாக உட்கொண்டமைக்கு 
 
  • “யாமைப்‌ புழுக்கின்‌ காமம்‌ வீட ஆரா? (புறம்‌.212) 
 
என்னும்‌ பாடல்‌ வரி சான்றாக அமைகிறது.

ஈசல்‌

  • “செம்புற்று ஈயலின்‌ இன்‌ அளைப்‌ புளித்து” (புறம்‌.119), 
  • “நெடுங்‌ கோட்டுப்‌ புற்றத்து ஈயல்‌ கெண்டி”௫ந்‌.59), 
  • “புற்றத்து ஈயல்‌ பெய்துஅட்ட இன்புளி வெஞ்சோறு””(அகம்‌.394) 

முதலிய பாடல்‌ வரிகள்‌ ஈசலை உணவாக உண்டதற்கான சான்றுகளாகும்‌.

கோழி

  • கோழி வளாத்தலை “கோழி எறிந்த கொடூங்கால்‌ கனங்குழை” (பட்டினப்‌.23) 
 
என்பதன் வழி கண்டூணரலாம்‌. சங்கத்‌ தமிழர்கள்‌ கோழியின்‌ இறைச்சியை உணவாக பயன்படூத்தியமைக்கு

  • “வினைஞர்‌ தந்த வெண்ணெல்‌ வல்சி மனைவாழ்‌ அளகின்‌ வாட்டொடுூம்‌ பெறுகுவிர்‌””(பெரும்பாண்‌.255),

என்ற பாடல்‌ வரிகள்‌ உதாரணங்களாகின்றன. 

மான்‌, முயல்‌, உடும்பு, பன்றி முதலியன குறிஞ்சி மற்றும்‌ முல்லைநில மக்களின்‌ உணவுகளாக அறியப்படுகின்றன. மான்‌ முதலானவை வேவட்டைக்குரியனண எனவே அவை குறிஞ்சிக்குரியன. பன்றி தினைபுனத்தைத்‌ தகாக்க வருமிடத்து அதனை வேட்டையாடி கொன்றமையால்‌ அதுவும்‌ குறிஞ்சிக்குரியது. முயல்‌ முல்லைக்குரிய கருப்பொருளாகவே அறியப்படுவதாகும்‌. மாடு நிரைகவாதலால்‌ உணவின்பாற்பட்டது. ஆடூ பலியிடூதலுக்கான பொருளாகவே இருந்துள்ளது. ஆடு, கோழி முதலியன மருதநில வாழ்வுயிரினங்களாகவே அறியப்படுகின்றன. மீன்‌ நெய்தல்‌ நில மக்களாகிய பரதவார்களின்‌ உணவுப்‌ பொருளாக சங்ககாலந்‌ தொட்டு இன்றளவும்‌ இருந்துவருகின்றமை கண்கூடு.

சமகால உணவு அரசியல்‌

உணவு, உடை, உறையுள்‌ இம்மூன்றும்‌ மனித தேவைகளுக்கு அடிப்படையானவை. இம்மூன்றின்‌ மீதும்‌ நெடுங்காலந்தொட்டே ஓர்‌ ஆதிக்கம்‌ தனது அதிகாரத்தைச்‌ செலுத்தி வருகின்றது. அதிலும்‌ குறிப்பாக உணவின்‌ மீதான மேலாதிக்கம்‌ சமகாலத்தில்‌ சற்றே மிகுதியாக தென்படூகிறது. இதற்கான காரணங்களைக்‌ கீழ்க்காணும்‌ மூன்று நிலைக்களன்களை அடிப்படையாகக்‌ கொண்டூ ஆராய்வது பொருத்தமுடையதாகவிருக்கும்‌.

வாழ்க்கைப்‌ பொருளாதார அரசியல்‌ இந்த உலகில்‌ எல்லா மனித நுகா்வுகளும்‌ மூன்று விதமான அமைப்புகளுக்குள்‌ உள்ளடங்கியதாக உள்ளன. அவை பொருளாதாரத்தில்‌ தன்னிறைவு, பொருளாதாரத்‌ தன்னிறைவை நோக்கி, பொருளாதார தேக்கம்‌ அல்லது மந்தம்‌ முதலியன. பணம்‌ படைத்தவனுக்கு ஒன்றுமாய்‌, பணம்‌ அற்றவனுக்கு ஒன்றுமாய்‌ இந்த உலகம்‌ விலைபோய்‌ கொண்டிருப்பதுதான்‌ இச்சமகாலச்‌ சூழல்‌. உதாரணமாக கல்வியும்‌ மருத்துவமும்‌ இரண்டு விதமான போக்குகளை உள்ளடக்கியதாகதானே உள்ளன. அந்த போக்கு உணவின்‌ மீதும்‌ குவிந்திருக்கின்றது. இன்று பழைய சோறு என்பதன்‌ மீதான பார்வையும்‌, நியாய விலைக்‌ கடையின்‌ அரிசி என்பதன்‌ மீதான பார்வையும்‌ ஓர இழிநிலை உடையதாகவே பல்லோரால்‌ பார்க்கப்படுகின்றது. இந்தக்‌ கற்பனையே ஒரு சமுதாயத்தின்‌ கற்பிதம்‌ ஆக்கப்படுவதுதான்‌ இன்னும்‌ கொடுமை. சாலையோர உணவகங்கள்‌, நட்சத்திர உணவகங்கள்‌ இவற்றின்‌ தேவைகளை ஒப்பிட்டுப்‌ பார்த்தால்‌ அவை யாருக்காக யாரால்‌ நடத்தப்படுகின்றன என்பது தெளியவரும்‌. ஒரு பள்ளியில்‌ அரசு வழங்கும்‌ மதிய சத்துணவை வாங்கி உண்டூ பயிலும்‌ ஒரு மாணவனின்‌ மனநிலையும்‌, அதே பள்ளியில்‌ தன்‌ வீட்டு உணவை எடுத்துக்‌ கொண்டூ வந்து உண்டு மகிழும்‌ ஒரு மாணவனின்‌ மனநிலையும்‌ எவ்வாறு சரிநிகர்‌ சமானம்‌ ஆகும்‌. அங்குதான்‌ வேற்றுமை நிலவுகிறது. சீறுடையில்‌ இல்லை ஒற்றுமை. சிந்தனையில்‌ உண்டு. அவனிடம்‌ வசதி வாய்ப்பு உண்டு, இவனிடம்‌ இல்லை என அசாதாரண காரண காரியங்களைக்‌ கற்பித்துவிடலாம்‌. ஆனால்‌ அவனிடம்‌ உள்ள இருத்தலையும்‌, இவனிடம்‌ உள்ள இல்லாமையையும்‌ விளங்கிக்‌ கொள்ளும்‌ போதுதான்‌ அந்த சமூகம்‌ விழிப்படையும்‌.

சமய அரசியல்‌

சங்கத்‌ தமிழர்களின்‌ உணவுகள்‌ மீதான கட்டுப்பாட்டை சமண, பெளத்த சமயங்கள்‌ மேற்கொண்டன. சங்கத்‌ தமிழர்களின்‌ உணவுகளும்‌ பழக்கவழக்கங்களும்‌ சமண, பெளத்த சமயங்களுக்கு முரணானதால்‌ அவர்தம்‌ கொள்கைகளுக்கு ஏற்றாற்‌ போல சங்கத்‌ தமிழர்களை மாற்ற எண்ணினர்‌. உதாரணமாக வேட்டைத்‌ தொழில்‌, ஊன்‌ உண்ணுதல்‌, கள்ளுண்ணுதல்‌, பரத்தமை, போர்‌, பூசல்‌ முதலியன சமண பெளத்தர்களால்‌ எதிர்க்கப்பட்டன. ஆனால்‌ அவை யாவும்‌ சங்கத்தமிழா வாழ்வியலில்‌ இரண்டறக்‌ கலந்திருந்தன.

சமண, பெளத்த சமயங்களுக்குப்‌ போட்டியாக எழுந்த சைவ, வைணவ சமயங்களும்‌ சமண, பெளத்த சமயங்களைப்‌ போலவே உணவு மீதான கட்டூப்பாட்டினைத்‌ தொடர்ந்தன. குறிப்பாக அசைவ உணவின்‌ மீதான கட்டுப்பாடு பெரிதும்‌ மேலோங்கி நிறுத்தப்பட்டது. பிள்ளைக்‌ கறி கேட்கும்‌ இறைவனையும்‌, காளத்தி வேடனாகிய கண்ணப்பன்‌ தன்‌ அன்பின்‌ மிகுதியினால்‌ தந்த இறைச்சியை ஏற்றுக்‌ கொண்ட இறைவனையும்‌ சைவம்‌ பறைசாற்றினாலும்‌, கங்கை வேடனாகிய குகன்‌ தந்த மீன்‌ உணவை இராமபிரான்‌ ஏற்றுக்கொண்டதாக வைணவம்‌ விதந்து கூறிடினும்‌ நடைமுறையில்‌ உணவின்‌ அடிப்படையிலான சமய அரசியல்‌ சமூகத்தில்‌ இல்லாமலில்லை. பின்னாளில்‌ சைவ வைணவ

சமயங்களின்‌ இணைவு வைதீக சமய நெறிக்கும்‌ அது இந்து என்னும்‌ மத முயற்சிக்கும்‌ வித்திட்ட போதிலும்‌ இந்து என்னும்‌ கட்டமைப்பில்‌ கொணப்படும்‌ மனிதக்‌ கூட்டத்தின்‌ சில குழுக்கள்‌ உணவுமுறைகளின்‌ அடிப்படையிலேயே பாகுபடுத்தப்பட்டிருப்பது இங்கு வெளிப்படையான உண்மையாகும்‌. அதுமட்டுமின்றி அக்குழுக்கள்‌ மீதான பெரும்பான்மையோரின்‌ மேலாதிக்கமும்‌ அடக்குமுறைகளும்‌ கட்டவிழ்க்கப்படூவதுதான்‌ ஒரு சமூகத்தின்‌ பிற்போக்குச்‌ சிந்தனைக்கு வழிவகுத்துக்‌ கொடுக்கின்றது.

சாதியப்‌ பாகுபாட்டு அரசியல்‌

முன்பு வாழும்‌ நிலவியல்‌ சார்ந்தே உணவுகள்‌ அறியப்பட்டன. ஆனால்‌ சமகாலத்தில்‌ சாதியின்‌ அடிப்படையிலேயே சில உணவுகள்‌ அடையாளப்படுத்தப்படுகின்றன. சமீபத்தில்‌ உணவுகளுக்காக மாடுகளைப்‌ பயன்படுத்துவதற்கான தடை சட்டம்‌ கொண்டுவரப்பட்டது. அது மாடுகளின்‌ நலன்‌ கருதியன்றோ என கருத்தில்‌ கொள்ளத்தக்கது. இல்லை மாட்டின்‌ இறைச்சியுண்ணும்‌ சிறுபான்மையினத்தவரின்‌ நலனை நசுக்குவதாகவே அமைந்திருத்தல்‌ கண்கூடு. இங்குதான்‌ உணவின்‌ மீதான அடக்குமுறை தொடங்குகிறது.

அவ்வுணவுகளின்‌ மீது பல பொய்யான அறிவுப்‌ பூர்வமற்ற கற்பிதங்களை உருவாக்கி அவ்வுணவுகளின்‌ மீதும்‌, அவ்வுணவு உண்பவர்களின்‌ மீதும்‌ ஆரோக்கியமற்ற வெறுப்பு உணர்வையும்‌, தவறான புரிதலையும்‌ பார்வையையும்‌ உருவாக்குவதன்‌ மூலம்‌ அவ்வுணவு உண்ணும்‌ சிறுபான்மையின மக்களுக்குப்‌ பாதுகாப்பற்ற சூழலைத்‌ தந்தும்‌, அச்சுறுத்தியும்‌, அடக்குமுறைகளுக்கு உட்படுத்தியும்‌ பெரும்பான்மையினத்தவர்‌ மேலாத்திக்கம்‌ செய்திட வேண்டுமென்ற எண்ணம்‌ சமகாலத்தில்‌ மேலோங்கி நிற்பது சிறுபான்மையினத்தவருக்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த மனித இனத்தையே அச்சுறுத்துவதாக
அமைத்துவிடுகிறது. எனவே உணவு என்பது அவரவா்‌ சுய விருப்பு வெறுப்புகளுக்கு உட்படுத்தப்பட்ட சுயச்சார்பும்‌ தேவையுமே ஆகும்‌ என்ற கற்பிதம்‌ இன்றைய சமகாலத்திற்குத்‌ தேவைப்படுகிறது.

நிறைவுரை

சங்ககாலத்‌ தமிழ்ச்‌ சமூகம்‌ உணவு உற்பத்தியில்‌ தன்னிறைவுப்‌ பெற்ற சமூகமாகவே விளங்கிற்று என்பதற்குச்‌ சான்றுகள்‌ பல உள. சங்கத்‌ தமிழர்கள்‌ ஊன்‌ உணவை மிக விரும்பி உண்ணும்‌ பற்றாளர்கள்‌. ஊனை சமைத்து சுவைப்பட உண்டூ மகிழும்‌ அளவிற்கு சமையல்‌ நுட்பமும்‌ கருவிகளும்‌ வாய்க்கப்பெற்றவர்கள்‌. தொடர்ந்து வரும்‌ காலச்சுழற்சியால்‌ சங்கத்‌ தமிழாகளின்‌ உணவு பழக்க வழக்கங்கள்‌ சமயக்காராகளால்‌ தொடாந்து இருட்டடிப்புச்‌ செய்யப்பட்டே வந்துள்ளன. இந்நிலையில்‌ ஊன்‌ உணவு மீதான பார்வை காலந்தோறும்‌ புதிய புதிய சிக்கல்களுக்கு அடிகோலிய வண்ணம்‌ அமைந்துள்ளது. சமகாலச்‌ சூழலும்‌ பொருளாதாரம்‌, சமயம்‌, சாதி முதலான சார்புத்‌ தன்மை நோக்கில்‌ உணவு மீதான பார்வையைச்‌ செலுத்துகின்றது. அதன்‌ விளைவு பல பிற்போக்குத்தனமான செயற்பாடுகளுக்கு வழிவகுத்துக்‌ கொடுக்கின்றன. எனவே உணவு மீதான சரியான அறிவார்ந்த புரிதலை உண்டாக்குவது சமகாலத்திற்கான காலத்தேவையாக உள்ளது. 
 
துணை நின்ற நூல்கள்‌

  1. இராமியா (கட்டூரையாசிரியா்‌), சிந்தனையாளன்‌-திங்களிதழ்‌, சுவடி-43, ஏடூ-3, செப்டம்பர்‌ 2018.
  2. சுப்பிரமணியன்‌,கா. சங்ககாலச்‌ சமுதாயம்‌, நியூ செஞ்சுரி புக்‌ ஹவுஸ்‌(பி)லிட்‌., 2011.
  3. சுப்பிரமண்யன்‌.ந. சங்ககால வாழ்வியல்‌, நியூ செஞ்சுரி புக்‌ ஹவுஸ்‌(பி)லிட்‌., 2010.
  4. பாலசுந்தரம்‌,ச. தொல்காப்பியம்‌, பொருளதிகாரம்‌ தொகுதி-3, பகுதி-1, பெரியார்‌ பல்கலைக்கழகம்‌, சேலம்‌, 2012.
  5.  வித்தியானந்தன்‌.சு. தமிழா சால்பு, பாரி புத்தகப்‌ பண்ணை.

பதிற்றுப்பத்து

 பதிற்றுப்பத்து - உரை – வைதேகி

18, 25, 47, 52, 56, 61, 87

முதல் பத்து – நமக்கு கிடைக்கவில்லை (1 – 10)
இரண்டாம் பத்து – சேர மன்னன் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன் – குமட்டூர்க் கண்ணனார் பாடியது (11 – 20)
மூன்றாம் பத்து – சேர மன்னன் பல்யானைச் செல்கெழு குட்டுவன்  – பாலைக் கெளதமனார் பாடியது (21 – 30)
நான்காம் பத்து – சேர மன்னன் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் – காப்பியாற்றுக் காப்பியனார் பாடியது (31 – 40)
ஐந்தாம் பத்து – சேர மன்னன் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் – பரணர் பாடியது (41 – 50)
ஆறாம் பத்து – சேர மன்னன் ஆடுகோட் பாட்டுச் சேரலாதன் – காக்கைபாடினியார் நச்செள்ளையார் (பெண் புலவர்) பாடியது (51 – 60)
ஏழாம் பத்து – செல்வக்கடுங்கோ வாழியாதன் –  கபிலர் (61 – 70)
எட்டாம் பத்து – சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறை – அரிசில்கிழார் பாடியது (71 – 80)
ஒன்பதாம் பத்து  – சேர மன்னன் இளஞ்சேரல் இரும்பொறை – பெருங்குன்றூர் கிழார் பாடியது (81 – 90)
பத்தாம் பத்து  – நமக்கு கிடைக்கவில்லை (91 –  100)

ஒளவை துரைசாமி உரை:

துறை: செந்துறைப் பாடாண் – செந்துறையாவது விகார வகையான் அமரராக்கிச் செய்யும் அறுமுறை வாழ்த்தினைப் போலாது, உலகினுள் இயற்கை வகையான் இயன்ற மக்களைப் பாடுதல் (நச்சினார்க்கினியர் உரை, தொல்காப்பியம் பொருள் 82).

தூக்கு: செந்தூக்கு – அஃதாவது ஆசிரியப்பா (அகவல்பா) தூக்கு என்பது செய்யுள் அடி வரையறை கொண்டு பாக்களைத் துணிப்பது.  அஃதாவது பா வகையுள் இன்னபாவெனத் துணித்து கூறுவதெனவறிக.

வண்ணம்: ஒழுகு வண்ணம் – ஒழுகிய ஓசையால் செல்வது.

பதிற்றுப்பத்து 18,  பாடியவர் – குமட்டூர்க் கண்ணனார், பாடப்பட்டோன்  – இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்,*கூந்தல் விறலியர்*, துறை: இயன்மொழி வாழ்த்துதூக்கு: செந்தூக்குவண்ணம்: ஒழுகு வண்ணம்

உண்மின் கள்ளே, அடுமின் சோறே,
எறிக திற்றி, ஏற்றுமின் புழுக்கே,
வருநர்க்கு வரையாது பொலங்கலந் தெளிர்ப்ப
இருள் வணர் ஒலிவரும், புரி அவிழ் ஐம்பால்
ஏந்து கோட்டு அல்குல் முகிழ் நகை மடவரல்  5
*கூந்தல் விறலியர்* வழங்குக அடுப்பே,
பெற்றது உதவுமின், தப்பு இன்று, பின்னும்,
மன் உயிர் அழிய யாண்டு பல துளக்கி,
மண் உடை ஞாலம் புரவு எதிர் கொண்ட
தண் இயல் எழிலி தலையாது மாறி,  10
மாரி பொய்க்குவது ஆயினும்,
சேரலாதன் பொய்யலன் நசையே.

பொருளுரை:  மன்னனிடம் வரிசைப் பெற்ற கூந்தல் விறலியரே! கள்ளை உண்பீர்களாக, சோற்றை ஆக்குவீர்களாக, இறைச்சியை அறுப்பீர்களாக, வேக வைத்ததற்குரிய கறி வகைகளை உலையில் ஏற்றுவீர்களாக, முடி அவிழ்ந்து கருமையான, குழன்ற, அடர்ந்த ஐந்து பாகங்களாக முடிக்கப்பட்ட கூந்தலையும், உயர்ந்த பக்கங்களையுடைய அல்குலையும், அரும்பும் புன்னகையையும், இளமையினையும் உடையவர்களே! வருபவர்களுக்கு எல்லையில்லாமல் வழங்கும் பொருட்டு, உங்கள் பொன் அணிகள் ஒலிக்க, உண்ணுவதற்குச் சமைப்பீர்களாக.

நீங்கள் பெற்ற செல்வத்தைப் பிறருக்குக் கொடுத்து உதவுங்கள். அதனால் தவறு இல்லை. நிலைபெற்ற உயிர்கள் அழியுமாறு பல ஆண்டுகளாக உயிர்களை வருத்தி, மண்ணையுடைய உலகத்தில் காப்பதை மேற்கொண்ட, குளிர்ச்சியான இயல்பையுடைய முகில்கள் தாங்கள் மேற்கொண்ட மழைத் தொழிலிலிருந்து மாறி, மழைப் பெய்யாது பொய்த்தாலும், பின்னும், உங்கள் விருப்பம் பழுதாகா வண்ணம் சேரலாதன் உங்களுக்குக் கொடுப்பான்.

குறிப்பு:  கூந்தல் விறலியர் என்பவர்கள் ஆடல் பாடல் ஆகியவற்றில் சிறந்து, மன்னனின் வரிசைபெற்ற மகளிர்.  எதிர்கொண்ட (8) – ஒளவை துரைசாமி உரை – மேற்கொண்ட, அருள் அம்பலவாணர் உரை – ஏற்றுக்கொண்ட.

சொற்பொருள்:   உண்மின் கள்ளே – கள்ளை உண்பீர்களாக (மின் – முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி), அடுமின் சோறே – சோற்றை ஆக்குவீர்களாக, எறிக திற்றி – இறைச்சியை அறுப்பீர்களாக, ஏற்றுமின் புழுக்கே – வேக வைத்தற்குரிய கறி வகைகளை உலையில் ஏற்றுங்கள் (மின் – முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி), வருநர்க்கு வரையாது பொலங்கலந் தெளிர்ப்ப – வருபவர்களுக்கு எல்லையில்லாமல் வழங்கும் பொருட்டு உங்கள் பொன் அணிகள் ஒலிக்க, முடி அவிழ்ந்து இருள் வணர் ஒலிவரும் புரி அவிழ் ஐம்பால் – இருண்ட குழன்ற அடர்ந்த ஐந்து பாகங்களாக முடிக்கப்பட்ட கூந்தல், ஏந்து கோட்டு அல்குல் – உயர்ந்த பக்கத்தையுடைய அல்குல், முகிழ் நகை – அரும்பும் புன்னகை, மடவரல் – இளமையினை உடையவர்கள், கூந்தல் விறலியர் – மன்னனிடம் வரிசைப் பெற்ற விறலியர், வழங்குக அடுப்பே – உண்ணுவதற்கு சமைப்பீர்களாக, பெற்றது உதவுமின் – நீங்கள் பெற்ற செல்வத்தைப் பிறருக்குக் கொடுத்து உதவுங்கள் (மின் – முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி), தப்பு இன்று – தவறு இல்லை, பின்னும் – பின்பும், மன் உயிர் அழிய – நிலைபெற்ற உயிர்கள் அழிய, யாண்டு பல துளக்கி – பல ஆண்டுகளாக வருத்தி, மண் உடை ஞாலம் – மண்ணையுடைய உலகம், புரவு எதிர் கொண்ட – காப்பதை மேற்கொண்ட, தண் இயல் எழிலி தலையாது மாறி – குளிர்ச்சியான இயல்பையுடைய முகில்கள் மேற்கொண்ட மழைத் தொழிலிலிருந்து மாறி, மாரி பொய்க்குவது ஆயினும் – மழைப் பெய்யாது பொய்த்தாலும், சேரலாதன் பொய்யலன் நசையே – உங்கள் விருப்பம் பழுகாதாகா வண்ணம் சேரலாதன் கொடுப்பான் (நசையே – ஏகாரம் அசைநிலை)

பதிற்றுப்பத்து 25, *கான் உணங்கு கடு நெறி*, பாடியவர்: பாலைக் கெளதமனார், பாடப்பட்டவன்: பல்யானைச் செல்கெழு குட்டுவன், துறை: வஞ்சித்துறைப் பாடாண் பாட்டுதூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்வண்ணம்: ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்

மா ஆடிய புலன் நாஞ்சில் ஆடா;
கடாஅம் சென்னிய கடுங்கண் யானை
இனம் பரந்த புலம் வளம் பரப்பு அறியா;
நின் படைஞர் சேர்ந்த மன்றம் கழுதை போகி
நீ உடன்றோர் மன் எயில் தோட்டி வையா ; 5
கடுங்கால் ஒற்றலின், சுடர் சிறந்து உருத்துப்
பசும் பிசிர் ஒள் அழல் ஆடிய மருங்கின்,
ஆண்டலை வழங்கும் *கான் உணங்கு கடு நெறி*
முனை அகன் பெரும் பாழ் ஆக மன்னிய,
உரும் உறழ்பு இரங்கும் முரசின், பெருமலை  10
வரை இழி அருவியின் ஒளிறு கொடி நுடங்கக்,
கடும் பரி கதழ் சிறகு அகைப்ப, நீ
நெடுந்தேர் ஓட்டிய பிறர் அகன்தலை நாடே.

பொருளுரை:  உன்னுடைய குதிரைப்படை சென்று போரிட்ட வயல்கள் கலப்பைகள் உழ முடியாதபடி அழிந்தன, மதநீரை வடிக்கும் தலையையும் கடும் பார்வையையும் உடைய உன்னுடைய யானைக் கூட்டம் படர்ந்து போரிட்ட வயல்கள் வளமை பயன் இல்லாமல் அழிந்தன, உன்னுடைய படைகள் அடைந்து போரிட்ட மன்றங்களில் (மனிதர்கள் நீங்கி) கழுதைகள் போய் அவை பாழ்பட்டன, உன் பகைவர்களின் பெரிய மதில்கள் காவல் இல்லாது அழிந்தன, மிக்க காற்று எழுந்ததால் சுடர் மிக எழுந்து வெப்பம் ஆகி பசிய பொறிகளையுடைய காட்டுத் தீ பரவிய இடத்தில்,  பேராந்தைகள் வழங்கும் காட்டின் கடிய வழிகளும் ஆரலைக் கள்வர்கள் வழியில் செல்பவர்களை வருத்தும் அகன்ற பெரிய இடங்கள் பாழாகி அழிந்தன, இடிபோலும் முழங்கும் முரசுடன், பெரிய மலையிலிருந்து விழும் அருவிபோல் விளங்கும் துகில் கொடிகள் அசைய, விரைந்த செலவாகிய, சிறகுகளையுடைய பறவை போன்று குதிரைகள் ஓட, நீ உன்னுடைய நெடிய தேர்களைச் செலுத்திய பகைவரின் அகன்ற இடத்தையுடைய நாடுகள்,

குறிப்பு:  பட்டினப்பாலை 255-258 – பெரு விழாக் கழிந்த பேஎம் முதிர் மன்றத்துச் சிறு பூ நெருஞ்சியோடு அறுகை பம்பி அழல்வாய் ஓரி அஞ்சு வரக் கதிப்பவும் அழு குரல் கூகையோடு ஆண்டலை விளப்பவும்.  ஆண்டலை (8) – அருள் அம்பலவாணர் – ஆண்டலைப்புள், ஒளவை துரைசாமி உரை – காட்டுக்கோழி, பொ. வே. சோமசுந்தரனார் பட்டினப்பாலை 258 உரையில் – கோட்டான், ஆந்தை என மருவி வழங்குவதுமது.  கதழ் – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).

சொற்பொருள்:   மா ஆடிய புலன் நாஞ்சில் ஆடா – உன்னுடைய குதிரைப்படை சென்று போரிட்ட வயல்கள் கலப்பைகள் உழ முடியாதபடி அழிந்தன, கடாஅம் சென்னிய கடுங்கண் யானை இனம் பரந்த புலம் வளம் பரப்பு அறியா – மதநீரை வடிக்கும் தலையையும் கடும் பார்வையையும் உடைய உன்னுடைய யானைக் கூட்டம் படர்ந்து போரிட்ட வயல்கள் வளமை பயன் இல்லாமல் அழிந்தன (கடாஅம் – அளபெடை), நின் படைஞர் சேர்ந்த மன்றம் கழுதை போகி – உன்னுடைய படைகள் அடைந்து போரிட்ட மன்றங்களில் (மனிதர்கள் நீங்கி) கழுதைகள் போய் அவை பாழ்பட்டன, நீ உடன்றோர் மன் எயில் தோட்டி வையா – உன் பகைவர்களின் பெரிய மதில்கள் காவல் இல்லாது அழிந்தன, கடுங்கால் ஒற்றலின் – மிக்க காற்று எழுந்ததால், சுடர் சிறந்து உருத்துப் பசும் பிசிர் ஒள் அழல் ஆடிய மருங்கின் – சுடர் மிக எழுந்து வெப்பம் ஆகி பசிய பொறிகளையுடைய காட்டுத் தீ பரவிய இடத்தில், ஆண்டலை வழங்கும் கான் உணங்கு கடு நெறி – பேராந்தைகள் வழங்கும் காட்டின் கடிய வழி, முனை அகன் பெரும் பாழ் ஆக மன்னிய – ஆரலைக் கள்வர்கள் வழியில் செல்பவர்களை வருத்தும் இடங்கள் அகன்ற பெரிய இடங்கள் பாழாகி அழிந்தன, உரும் உறழ்பு இரங்கும் முரசின் – இடிபோலும் முழங்கும் முரசுடன் (உறழ் – உவம உருபு), பெருமலை வரை இழி அருவியின் ஒளிறு கொடி நுடங்க – பெரிய மலையிலிருந்து விழும் அருவிபோல் விளங்கும் துகில் கொடிகள் அசைய (அருவியின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), கடும் பரி கதழ் சிறகு அகைப்ப – விரைந்த செலவாகிய சிறகுகளையுடைய பறவை போன்று குதிரைகள் ஓட, நீ நெடுந்தேர் ஓட்டிய பிறர் அகன்தலை நாடே – நீ உன்னுடைய நெடிய தேர்களைச் செலுத்திய பகைவரின் அகன்ற இடத்தையுடைய நாடு (நாடே – ஏகாரம் அசைநிலை)

பதிற்றுப்பத்து 47, பாடியவர் – பரணர்,  பாடப்பட்டோன் – கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், *நன் நுதல் விறலியர்*, துறை: செந்துறைப் பாடாண் பாட்டுதூக்கு: செந்தூக்குவண்ணம்: ஒழுகு வண்ணம்

அட்டு ஆனானே குட்டுவன், அடுதொறும்
பெற்று ஆனாரே பரிசிலர் களிறே,
வரை மிசை இழிதரும் அருவியின், மாடத்து
வளி முனை அவிர்வரும் கொடி நுடங்கு தெருவில்,
சொரி சுரை கவரும் நெய் வழிபு உராலின்,  5
பாண்டில் விளக்குப் பரூஉச்சுடர் அழல,
*நன் நுதல் விறலியர்* ஆடும்
தொல் நகர் வரைப்பின், அவன் உரை ஆனாவே.

பொருளுரை:  சேரன் செங்குட்டுவன் பகைவரை அழித்தும் அமையாதவனாக இருக்கின்றான். அவன் போரிடும் பொழுதெல்லாம், களிற்று யானைகளைப் பெற்று அமையாதவர்கள் ஆகி அவன் போர்ச் சிறப்பைப் புகழ்ந்து பாடுவார்கள் பரிசில் மாக்கள். மலை மேலிருந்து கீழே விழும் அருவியைப் போல மாடங்களிலிருந்து காற்றால் அசையும் ஒளியுடைய கொடிகள் பறக்கும் தெருவில், எண்ணெயைச் சொரியும் திரிக்குழாயானது தான் ஏற்றுக் கொண்ட எண்ணெயைப் பரவுவதால், பாண்டில் விளக்கின் பருத்த திரி எரிய, அழகிய நெற்றியையுடைய விறலியர் ஆடும் பழைய நகரின் எல்லையில் அவனைப் புகழும் புகழுரைகள் நீங்காது நிலவின.

குறிப்பு:  நெய் வழிபு உராலின் (5) – அருள் அம்பலவாணர் உரை – நெய் வழிந்து பரவுவதால், ஒளவை துரைசாமி உரை – நெய் வழியுமாறு பெய்து நிரப்புவதால்.

சொற்பொருள்:  அட்டு ஆனானே குட்டுவன் – சேரன் செங்குட்டுவன் பகைவரை அழித்தும் அமையான் ஆகின்றான் (ஆனானே – ஏகாரம் அசைநிலை), அடுதொறும் – அவன் போரிடும் பொழுதெல்லாம், பெற்று ஆனாரே – அடைந்து அமையாதவர்கள் (ஆனாரே – ஏகாரம் – அசைநிலை), பரிசிலர் – பரிசில் மாக்கள், களிறே – களிற்று யானை, வரை மிசை இழிதரும் அருவியின் – மலை மேலிருந்து கீழே விழும் அருவியைப் போல (அருவியின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), மாடத்து வளி முனை அவிர்வரும் – மாடங்களிலிருந்து காற்றால் அசையும் ஒளியுடைய, கொடி நுடங்கு தெருவில் – கொடி பறக்கும் தெருவில், சொரி சுரை கவரும் நெய் வழிபு உராலின் – எண்ணெயைச் சொரியும் திரிக்குழாய் தான் ஏற்றுக் கொண்ட எண்ணெய் பரவுவதால், பாண்டில் விளக்குப் பரூஉச்சுடர் அழல – பாண்டில் விளக்கின் பருத்த திரி எரிய, நன் நுதல் விறலியர் ஆடும் – அழகிய நெற்றியையுடைய விறலியர் ஆடும், தொல் நகர் வரைப்பின் அவன் உரை ஆனாவே – பழைய நகரின் எல்லையில் அவனைப் புகழும் புகழுரைகள் நீங்காது நிலவின (ஆனாவே – ஏகாரம் அசைநிலை)

பதிற்றுப்பத்து 52, *சிறு செங்குவளை*, பாடியவர்: காக்கை பாடினியார் நச்செள்ளையார், பாடப்பட்டவன்: சேர மன்னன் ஆடுகோட் பாட்டுச் சேரலாதன்துறை: குரவை நிலைதூக்கு: செந்தூக்குவண்ணம்: ஒழுகு வண்ணம்

கொடி நுடங்கு நிலைய கொல் களிறு மிடைந்து,
வடி மணி நெடுந்தேர் வேறு புலம் பரப்பி,
அருங்கலந் தாண இயர் நீர்மிசை நிவக்கும்
பெருங்கலி வங்கம் திசை திரிந்தாங்கு,
மை அணிந்து எழுதரும் ஆயிரம் பஃறோல்  5
மெய் புதை அரணம் எண்ணாது எஃகு சுமந்து,
முன் சமத்து எழுதரும் வன்கண் ஆடவர்
தொலையாத் தும்பை தெவ்வழி விளங்க,
உயர் நிலை உலகம் எய்தினர் பலர் பட,
நல் அமர்க் கடந்த நின் செல் உறழ் தடக்கை,  10
இரப்போர்க்குக் கவிதல் அல்லதை இரைஇய
மலர்பு அறியா எனக் கேட்டிகும், இனியே,
சுடரும் பாண்டில் திருநாறு விளக்கத்து
முழா இமிழ் துணங்கைக்குத் தழூஉப்புணை ஆகச்
சிலைப்புவல் ஏற்றின் தலைக்கை தந்து நீ  15
நளிந்தனை வருதல் உடன்றனள் ஆகி,
உயவும் கோதை ஊரல் அம் தித்தி
ஈர் இதழ் மழைக்கண் பேர் இயல் அரிவை,
ஒள் இதழ் அவிழ் அகம் கடுக்கும் சீறடிப்
பல் சில கிண்கிணி சிறு பரடு அலைப்பக்  20
கொல் புனல் தளிரின் நடுங்குவனள் நின்று, நின்
எறியர் ஓக்கிய *சிறு செங்குவளை*
ஈஎன இரப்பவும் ஒல்லாள், “நீ எமக்கு
யாரையோ” எனப் பெயர்வோள் கைஅதை
கதுமென உருத்த நோக்கமோடு அது நீ  25
பாஅல் வல்லாய் ஆயினை பாஅல்
யாங்கு வல்லுநையோ? வாழ்க நின் கண்ணி,
அகல் இரு விசும்பில் பகல் இடம் தரீஇயர்,
தெறு கதிர் திகழ்தரும் உருகெழு ஞாயிற்று
உருபு கிளர் வண்ணம் கொண்ட  30
வான் தோய் வெண்குடை வேந்தர் தம் எயிலே.

பொருளுரை:  பிற நாடுகளிலிருந்து அரிய பொருட்களைக் கொண்டுவரும் பொருட்டுக் கடலின் மீது உயர்ந்து செல்லும் பெரிய ஆரவாரத்தையுடைய கப்பல்கள், செல்லும் திசைகளில் திரிந்தாற்போல, கொடிகள் அசையும் நிலையையுடைய போர் யானைகளை செறிந்து, வடித்த மணியுடைய உயர்ந்த தேரை வேறு பகைப்புலத்தில் பரப்பி, முகிலைப்போலக் கருமையுடன் எழும் கரிய பெரிய கேடயங்களுடன் வேலை ஏந்திக்கொண்டு, போரின் முன்னணியில் நின்று பொருதலை விரும்பி, உடலை மூடும் கவசத்தை எண்ணாது செல்லும் வலிமையுடைய போர் வீரர்கள், தோற்றுப் போகாமைக்கு ஏற்ற தும்பை மலர் மாலை அணிந்து பகைவர் தானை நடுவே நுழைந்து விளங்கிப் போரிட்டதால், பலர் உயிர் இழந்து மேலுலகம் அடைந்தனர்.  இவ்வாறு நல்ல போரில் வெற்றி அடைந்த இடியினின்றும் மாறுப்பட்ட உன்னுடைய பெரிய கைகள் உன்னிடம் உதவி வேண்டி வருபவர்களுக்குக் கொடுப்பதை அன்றிப் பிறரிடம் இரத்தற் பொருட்டு விரியாது என்பதை அறிந்தோம்.

இப்பொழுது, செல்வம் தோன்றும் ஒளிரும் பாண்டில் விளக்கின் ஒளியில், முழவு முழங்க, ஆடும் துணங்கை ஆட்டத்திற்கு, கைக் கோத்துக் கொள்ளும் புணையாக, முழங்குதலையுடைய ஏற்றினைப் போல, முதற்கை கொடுத்து, பிற மகளிருடன் நீ நெருங்கி ஆடுவதால் சினந்து, அசைகின்ற மாலையையும், பரவிய தேமலையும், குளிர்ந்த இமைகள் பொருந்திய ஈரமான கண்களையுடைய உன் மனைவியாகிய இளம் பெண், உன்னுடன் ஊடலுற்று, ஒளியுடைய இதழுடைய மலர் போன்ற சிறிய அடிகள் மீதுள்ள அவளுடைய பல மணிகளை உள்ளீடாகக் கொண்ட சிலம்பு ஒலிக்க, கரையை அழிக்கும் ஆற்றின் கரையில் உள்ள தளிரைப் போல் அவள் நடுங்கி நின்று, உன் மேல் எறிவதற்காக அவள் ஓங்கிய சிறு செங்குவளை மலரை நீ தா எனக் கேட்கவும் ஒத்துக்கொள்ளாள். “நீ எனக்கு யார்” எனக் கூறி நகர்வோள் கையிலிருந்து, சட்டெனச் சினம் கொண்ட பார்வையுடன் , மலரை அவளிடமிருந்து நின்பால் பற்றிக்கொள்ளத் திறமை இல்லாதவன் ஆயினை நீ.

அகன்ற பெரிய வானில், பகலுக்கு இடம் தரும் பொருட்டு, சுடுகின்ற கதிர்களைப் பரப்பி ஒளிரும் கதிரவனின் உருவத்தையும் விளங்குகின்ற தன்மையும் கொண்ட வான் அளவு உயர்ந்த வெண்குடை வேந்தர்களின் கோட்டைகளை நின்பால் கவர்ந்து கொள்ள எவ்வாறு வல்லமை உடையவனோ? உன் கண்ணி வாழ்வதாக!

குறிப்பு:   ஐங்குறுநூறு 400 – மள்ளர் அன்ன மரவம் தழீஇ மகளிர் அன்ன ஆடு கொடி நுடக்கும்.  இரா.  இராகவையங்கார் உரை – குறுந்தொகை 31ம் பாடல் – மகளிர் தம் ஆடவரைத் தழுவி ஆடும் இடமாதலால் மாண்டக் கோனை ஆண்டுந் தேடியது கூறினார்.  பெருங்கலி வங்கம் (4) – பெரிய ஆரவாரத்தையுடைய கப்பல்கள், அருள் அம்பலவாணர் உரை – பெரிய வலிமையையுடைய மரக்கலங்கள்.  பலர் பட (9) – ஒளவை துரைசாமி உரை- பகைவர் பலர் உயிர் இழந்தனர், அருள் அம்பலவாணர் உரை – பலர் உயிர் இழந்தனர்.  அலைப்ப (24) – ஒளவை துரைசாமி உரை – ஒலிக்க, அருள் அம்பலவாணர் உரை – பரட்டை வருத்த.  யாரையோ (24) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை (அகநானூறு 46ம் பாடலின் உரையில் கூறியது) ஐகாரம் முன்னிலைக்கண் வந்தது, சாரியையுமாம்.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).  உயவும் கோதை (17) – ஒளவை துரைசாமி உரை – அசைகின்ற மாலை, உயவுதல் ஈண்டு அசைதல் மேற்று, அருள் அம்பலவாணர் உரை – வருந்தும் மாலை, ஈண்டு அசைதல் மேற்று.

சொற்பொருள்:   கொடி நுடங்கு நிலைய கொல் களிறு மிடைந்து – கொடிகள் அசையும் நிலையையுடைய போர் யானைகள் செறிந்து திரிந்து, வடி மணி நெடுந்தேர் வேறு புலம் பரப்பி – வடித்த மணியுடைய உயர்ந்த தேரை வேறு பகைப்புலத்தில் பரப்பி, அருங்கலம் தரீஇயர் – பிற நாடுகளிலிருந்து அரிய பொருட்களைக் கொண்டுவரும் பொருட்டு, நீர்மிசை நிவக்கும் – கடலின் மீது உயர்ந்து செல்லும், பெருங்கலி வங்கம் – பெரிய ஆரவாரத்தையுடைய கப்பல்கள், திசை திரிந்தாங்கு – செல்லும் திசைகளில் திரிந்தாற்போல, மை அணிந்து எழுதரும் மா இரு பல் தோல் – முகிலைப்போல கருமையுடன் எழும் கரிய பெரிய கேடயங்கள், மெய் புதை அரணம் எண்ணாது – உடலை மூடும் கவசத்தை எண்ணாது, எஃகு சுமந்து – வேலை சுமந்து, முன் சமத்து – போர் முனையில், எழுதரும் வன்கண் ஆடவர் – செல்லும் வலிமையுடைய வீரர்கள், தொலையாத் தும்பை – தோற்றுப்போகாமைக்கு ஏற்ற தும்பை மலர் மாலை, தெவ்வழி விளங்க – பகைவர் தானை நடுவே நுழைந்து விளங்கிப் போரிட்டதால், உயர் நிலை உலகம் எய்தினர் பலர் பட – பகைவர் பலர் உயிர் இழந்து மேலுலகம் அடைந்தனர், நல் அமர்க் கடந்த நின் செல் உறழ் தடக்கை – நல்ல போரில் வெற்றி அடைந்த இடியினின்றும் மாறுப்பட்ட பெரிய கைகளையுடைய நீ, இரப்போர்க்குக் கவிதல் அல்லதை – உன்னிடம் உதவி வேண்டி வருபவர்களுக்கு கொடுப்பதை அன்றி, இரைஇய மலர்பு அறியா எனக் கேட்டிகும் – பிறரிடம் இரத்தற் பொருட்டு விரியாது என்பதை அறிந்தோம், இனியே – இப்பொழுது, சுடரும் பாண்டில் திருநாறு விளக்கத்து – செல்வம் தோன்றும் ஒளிரும் பாண்டில் விளக்கின் ஒளியில், முழா இமிழ் துணங்கைக்கு – முழவு முழங்க ஆடும் துணங்கை ஆட்டத்திற்கு, தழூஉப்புணை ஆக – கைக் கோத்துக்கொள்ளும் புணையாக, சிலைப்புவல் ஏற்றின் – முழங்குதலையுடைய ஏற்றினைப் போல, தலைக்கை தந்து – முதற்கை கொடுத்து, நீ நளிந்தனை வருதல் உடன்றனள் ஆகி – மகளிருடன் நீ நெருங்கி ஆடுவதால் அவள் சினந்து, உயவும் கோதை – அசைகின்ற மாலை, ஊரல் அம் தித்தி – பரவிய தேமல், ஈர் இதழ் மழைக்கண் பேர் இயல் அரிவை – குளிர்ந்த இமைகள் பொருந்திய ஈரமான கண்களையுடைய இளம் பெண், ஒள் இதழ் அவிழ் அகம் கடுக்கும் சீறடி – ஒளியுடைய இதழுடைய மலர் போன்ற சிறிய அடிகள், பல் சில கிண்கிணி – பல மணிகளையுடைய சிலம்பு, சிறு பரடு அலைப்ப – சிறிய பரட்டின் கண் ஒலிப்ப, அவளுடைய கொல் புனல் தளிரின் நடுங்குவனள் நின்று – கரையை அழிக்கும் ஆற்றின் கரையில் உள்ள தளிரைப் போல் நடுங்கி நின்று (தளிரின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), நின் எறியர் ஓக்கிய *சிறு செங்குவளை* ஈ என இரப்பவும் ஒல்லாள் – உன் மேல் எறிவதற்காக அவள் ஓங்கிய சிறு செங்குவளை மலரை நீ தா எனக் கேட்கவும் ஒத்துக்கொள்ளாள், “நீ எமக்கு யாரையோ” எனப் பெயர்வோள் – நீ எனக்கு யார் எனக் கூறி நகர்வோள், கையதை – கையிலிருந்து, கதுமென உருத்த நோக்கமோடு – சட்டென சினம் கொண்ட பார்வையுடன், அது நீ பாஅல் வல்லாய் ஆயினை – அவளிடமிருந்து நின்பால் அதை எடுத்துக்கொள்ள நீ திறமை இல்லாதவன் ஆயினை, பாஅல் யாங்கு வல்லுநையோ – நின்பால் கவர்ந்து கொள்ள எவ்வாறு வல்லமை உடையவனோ, வாழ்க நின் கண்ணி – உன் கண்ணி வாழ்வதாக, அகல் இரு விசும்பில் – அகன்ற பெரிய வானில், பகல் இடம் தரீஇயர் – பகலுக்கு இடம் தரும் பொருட்டு, தெறு கதிர் திகழ்தரும் உருகெழு ஞாயிற்று – சுடுகின்ற கதிர்களை பரப்பி ஒளிரும் கதிரவனின், உருபு கிளர் வண்ணம் கொண்ட – உருவத்தையும் விளங்குகின்ற தன்மையும் கொண்ட, வான் தோய் – வான் அளவு உயர்ந்த வெண்குடை வேந்தர் தம் எயிலே – வான் அளவு உயர்ந்த வெண்குடை உடைய வேந்தரின் கோட்டைகள்

பதிற்றுப்பத்து 56,  பாடியவர் – காக்கை பாடினியார் நச்செள்ளையார்பாடப்பட்டோன் – சேர மன்னன் ஆடுகோட் பாட்டுச் சேரலாதன், *வேந்து மெய்ம் மறந்த வாழ்ச்சி*, துறை – ஒள் வாள் அமலைதூக்கு – செந்தூக்குவண்ணம் – ஒழுகு வண்ணம் 

விழவு வீற்று இருந்த வியல் உள் ஆங்கண்,
கோடியர் முழவின் முன்னர், ஆடல்
வல்லான் அல்லன், வாழ்க அவன் கண்ணி,
வலம்படு முரசம் துவைப்ப வாள் உயர்த்தி,
இலங்கும் பூணன், பொலங்கொடி உழிஞையன்,  5
மடம் பெருமையின் உடன்று மேல் வந்த
*வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி*
வீந்து உகு போர்க்களத்து ஆடும் கோவே.

பொருளுரை:  விழாக்கள் சிறப்பாக எடுக்கப்பட்ட அகன்ற ஊரில் கூத்தர்களின் முழவு ஓசைக்கு ஏற்ப ஆடும் தொழிலில் வல்லவன் இல்லை சேர மன்னன் ஆடுகோட் பாட்டுச் சேரலாதன்.  அவன் சூடிய மலர்ச்சரம் நீடு வாழ்வதாக!

வெற்றி முரசம் ஒலிக்க வாளை உயர்த்தி, ஒளியுடைய அணிகலன்களை அணிந்து,  பொன்னால் செய்த உழிஞைக் கொடியைச் சூடி,  அறியாமையின் மிகுதியால் வெகுண்டு, தன் மேல் வந்த பகை வேந்தர்கள் தங்கள் உடம்பை மறந்ததால் வந்த வெற்றிச் செல்வத்தையுடைய, பகைவர்கள் வீழும் போர்க்களத்தில்,  ஆடுவான் மன்னன்!

சொற்பொருள்:  விழவு வீற்று இருந்த – விழாக்கள் சிறப்பாக எடுக்கப்பட்ட,  வியல் உள் ஆங்கண் – அகன்ற இடத்தில், கோடியர் முழவின் முன்னர் – கூத்தர்களின் முழவு ஓசைக்கு ஏற்ப,  ஆடல் வல்லான் அல்லன் – ஆடும் தொழிலில் வல்லவன் இல்லை,  வாழ்க அவன் கண்ணி – அவன் சூடிய கண்ணி நீடு வாழ்வதாக,  வலம்படு முரசம் துவைப்ப – வெற்றி முரசம் ஒலிக்க,  வாள் உயர்த்தி – வாளை உயர்த்தி,  இலங்கும் பூணன் –  ஒளியுடைய அணிகலன்களை அணிந்தவன், பொலங்கொடி உழிஞையன் – பொன்னால் செய்த உழிஞைக் கொடியைச் சூடி,  மடம் பெருமையின் – அறியாமையின் மிகுதியால்,  உடன்று மேல் வந்த – வெகுண்டு தன் மேல் வந்த, வேந்து  – பகை வேந்தர்கள், மெய்ம்மறந்த வாழ்ச்சி – தங்கள் உடம்பை மறந்ததால் வந்த வெற்றிச் செல்வம், வீந்து உகு – பட்டு வீழும், போர்க்களத்து ஆடும் கோவே – போர்க்களத்தில் ஆடும் மன்னன்

பதிற்றுப்பத்து 52, *சிறு செங்குவளை*, பாடியவர்: காக்கை பாடினியார் நச்செள்ளையார், பாடப்பட்டவன்: சேர மன்னன் ஆடுகோட் பாட்டுச் சேரலாதன்துறை: குரவை நிலைதூக்கு: செந்தூக்குவண்ணம்: ஒழுகு வண்ணம்

கொடி நுடங்கு நிலைய கொல் களிறு மிடைந்து,
வடி மணி நெடுந்தேர் வேறு புலம் பரப்பி,
அருங்கலந் தாண இயர் நீர்மிசை நிவக்கும்
பெருங்கலி வங்கம் திசை திரிந்தாங்கு,
மை அணிந்து எழுதரும் ஆயிரம் பஃறோல்  5
மெய் புதை அரணம் எண்ணாது எஃகு சுமந்து,
முன் சமத்து எழுதரும் வன்கண் ஆடவர்
தொலையாத் தும்பை தெவ்வழி விளங்க,
உயர் நிலை உலகம் எய்தினர் பலர் பட,
நல் அமர்க் கடந்த நின் செல் உறழ் தடக்கை,  10
இரப்போர்க்குக் கவிதல் அல்லதை இரைஇய
மலர்பு அறியா எனக் கேட்டிகும், இனியே,
சுடரும் பாண்டில் திருநாறு விளக்கத்து
முழா இமிழ் துணங்கைக்குத் தழூஉப்புணை ஆகச்
சிலைப்புவல் ஏற்றின் தலைக்கை தந்து நீ  15
நளிந்தனை வருதல் உடன்றனள் ஆகி,
உயவும் கோதை ஊரல் அம் தித்தி
ஈர் இதழ் மழைக்கண் பேர் இயல் அரிவை,
ஒள் இதழ் அவிழ் அகம் கடுக்கும் சீறடிப்
பல் சில கிண்கிணி சிறு பரடு அலைப்பக்  20
கொல் புனல் தளிரின் நடுங்குவனள் நின்று, நின்
எறியர் ஓக்கிய *சிறு செங்குவளை*
ஈஎன இரப்பவும் ஒல்லாள், “நீ எமக்கு
யாரையோ” எனப் பெயர்வோள் கைஅதை
கதுமென உருத்த நோக்கமோடு அது நீ  25
பாஅல் வல்லாய் ஆயினை பாஅல்
யாங்கு வல்லுநையோ? வாழ்க நின் கண்ணி,
அகல் இரு விசும்பில் பகல் இடம் தரீஇயர்,
தெறு கதிர் திகழ்தரும் உருகெழு ஞாயிற்று
உருபு கிளர் வண்ணம் கொண்ட  30
வான் தோய் வெண்குடை வேந்தர் தம் எயிலே.

குறிப்பு:   ஐங்குறுநூறு 400 – மள்ளர் அன்ன மரவம் தழீஇ மகளிர் அன்ன ஆடு கொடி நுடக்கும்.  இரா.  இராகவையங்கார் உரை – குறுந்தொகை 31ம் பாடல் – மகளிர் தம் ஆடவரைத் தழுவி ஆடும் இடமாதலால் மாண்டக் கோனை ஆண்டுந் தேடியது கூறினார்.  பெருங்கலி வங்கம் (4) – பெரிய ஆரவாரத்தையுடைய கப்பல்கள், அருள் அம்பலவாணர் உரை – பெரிய வலிமையையுடைய மரக்கலங்கள்.  பலர் பட (9) – ஒளவை துரைசாமி உரை- பகைவர் பலர் உயிர் இழந்தனர், அருள் அம்பலவாணர் உரை – பலர் உயிர் இழந்தனர்.

பொருளுரை:  பிற நாடுகளிலிருந்து அரிய பொருட்களைக் கொண்டுவரும் பொருட்டுக் கடலின் மீது உயர்ந்து செல்லும் பெரிய ஆரவாரத்தையுடைய கப்பல்கள், செல்லும் திசைகளில் திரிந்தாற்போல, கொடிகள் அசையும் நிலையையுடைய போர் யானைகளை செறிந்து, வடித்த மணியுடைய உயர்ந்த தேரை வேறு பகைப்புலத்தில் பரப்பி, முகிலைப்போலக் கருமையுடன் எழும் கரிய பெரிய கேடயங்களுடன் வேலை ஏந்திக்கொண்டு, போரின் முன்னணியில் நின்று பொருதலை விரும்பி, உடலை மூடும் கவசத்தை எண்ணாது செல்லும் வலிமையுடைய போர் வீரர்கள், தோற்றுப் போகாமைக்கு ஏற்ற தும்பை மலர் மாலை அணிந்து பகைவர் தானை நடுவே நுழைந்து விளங்கிப் போரிட்டதால், பலர் உயிர் இழந்து மேலுலகம் அடைந்தனர்.  இவ்வாறு நல்ல போரில் வெற்றி அடைந்த இடியினின்றும் மாறுப்பட்ட உன்னுடைய பெரிய கைகள் உன்னிடம் உதவி வேண்டி வருபவர்களுக்குக் கொடுப்பதை அன்றிப் பிறரிடம் இரத்தற் பொருட்டு விரியாது என்பதை அறிந்தோம்.

இப்பொழுது, ஒளிரும் பாண்டில் விளக்கின் ஒளியில், முழவு முழங்க, ஆடும் துணங்கை ஆட்டத்திற்கு, கைக் கோத்துக் கொள்ளும் புணையாக, முழங்குதலையுடைய ஏற்றினைப் போல, முதற்கை கொடுத்து, பிற மகளிருடன் நீ நெருங்கி ஆடுவதால் சினந்து, அசைகின்ற மாலையையும், பரவிய தேமலையும், குளிர்ந்த இமைகள் பொருந்திய ஈரமான கண்களையுடைய உன் மனைவியாகிய இளம் பெண், உன்னுடன் ஊடலுற்று, ஒளியுடைய இதழுடைய மலர் போன்ற சிறிய அடிகள் மீதுள்ள அவளுடைய பல மணிகளை உள்ளீடாகக் கொண்ட சிலம்பு ஒலிக்க, கரையை அழிக்கும் ஆற்றின் கரையில் உள்ள தளிரைப் போல் அவள் நடுங்கி நின்று, உன் மேல் எறிவதற்காக அவள் ஓங்கிய சிறு செங்குவளை மலரை நீ தா எனக் கேட்கவும் ஒத்துக்கொள்ளாள். “நீ எனக்கு யார்” எனக் கூறி நகர்வோள் கையிலிருந்து, சட்டெனச் சினம் கொண்ட பார்வையுடன் , மலரை அவளிடமிருந்து பற்றிக்கொள்ளத் திறமை இல்லாதவன் ஆயினை நீ.

அகன்ற பெரிய வானில், பகலுக்கு இடம் தரும் பொருட்டு, சுடுகின்ற கதிர்களைப் பரப்பி ஒளிரும் கதிரவனின் உருவத்தையும் விளங்குகின்ற தன்மையும் கொண்ட வான் அளவு உயர்ந்த வெண்குடை வேந்தர்களின் கோட்டைகளை நின்பால் கவர்ந்து கொள்ள எவ்வாறு வல்லமை உடையவனோ? உன் கண்ணி வாழ்வதாக!

சொற்பொருள்:   கொடி நுடங்கு நிலைய கொல் களிறு மிடைந்து – கொடிகள் அசையும் நிலையையுடைய போர் யானைகள் செறிந்து திரிந்து, வடி மணி நெடுந்தேர் வேறு புலம் பரப்பி – வடித்த மணியுடைய உயர்ந்த தேரை வேறு பகைப்புலத்தில் பரப்பி, அருங்கலம் தரீஇயர் – பிற நாடுகளிலிருந்து அரிய பொருட்களைக் கொண்டுவரும் பொருட்டு, நீர்மிசை நிவக்கும் – கடலின் மீது உயர்ந்து செல்லும், பெருங்கலி வங்கம் – பெரிய ஆரவாரத்தையுடைய கப்பல்கள், திசை திரிந்தாங்கு – செல்லும் திசைகளில் திரிந்தாற்போல, மை அணிந்து எழுதரும் மா இரு பல் தோல் – முகிலைப்போல கருமையுடன் எழும் கரிய பெரிய கேடயங்கள், மெய் புதை அரணம் எண்ணாது – உடலை மூடும் கவசத்தை எண்ணாது, எஃகு சுமந்து – வேலை சுமந்து, முன் சமத்து – போர் முனையில், எழுதரும் வன்கண் ஆடவர் – செல்லும் வலிமையுடைய வீரர்கள், தொலையாத் தும்பை – தோற்றுப்போகாமைக்கு ஏற்ற தும்பை மலர் மாலை, தெவ்வழி விளங்க – பகைவர் தானை நடுவே நுழைந்து விளங்கிப் போரிட்டதால், உயர் நிலை உலகம் எய்தினர் பலர் பட – பகைவர் பலர் உயிர் இழந்து மேலுலகம் அடைந்தனர், நல் அமர்க் கடந்த நின் செல் உறழ் தடக்கை – நல்ல போரில் வெற்றி அடைந்த இடியினின்றும் மாறுப்பட்ட பெரிய கைகளையுடைய நீ, இரப்போர்க்குக் கவிதல் அல்லதை – உன்னிடம் உதவி வேண்டி வருபவர்களுக்கு கொடுப்பதை அன்றி, இரைஇய மலர்பு அறியா எனக் கேட்டிகும் – பிறரிடம் இரத்தற் பொருட்டு விரியாது என்பதை அறிந்தோம், இனியே – இப்பொழுது, சுடரும் பாண்டில் திருநாறு விளக்கத்து – ஒளிரும் பாண்டில் விளக்கின் ஒளியில், முழா இமிழ் துணங்கைக்கு – முழவு முழங்க ஆடும் துணங்கை ஆட்டத்திற்கு, தழூஉப்புணை ஆக – கைக் கோத்துக்கொள்ளும் புணையாக, சிலைப்புவல் ஏற்றின் – முழங்குதலையுடைய ஏற்றினைப் போல, தலைக்கை தந்து – முதற்கை கொடுத்து, நீ நளிந்தனை வருதல் உடன்றனள் ஆகி – மகளிருடன் நீ நெருங்கி ஆடுவதால் அவள் சினந்து, உயவும் கோதை – அசைகின்ற மாலை, ஊரல் அம் தித்தி – பரவிய தேமல், ஈர் இதழ் மழைக்கண் பேர் இயல் அரிவை – குளிர்ந்த இமைகள் பொருந்திய ஈரமான கண்களையுடைய இளம் பெண், ஒள் இதழ் அவிழ் அகம் கடுக்கும் சீறடி – ஒளியுடைய இதழுடைய மலர் போன்ற சிறிய அடிகள், பல் சில கிண்கிணி – பல மணிகளையுடைய சிலம்பு, சிறு பரடு அலைப்ப – சிறிய பரட்டின் கண் ஒலிப்ப, அவளுடைய கொல் புனல் தளிரின் நடுங்குவனள் நின்று – கரையை அழிக்கும் ஆற்றின் கரையில் உள்ள தளிரைப் போல் நடுங்கி நின்று (தளிரின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), நின் எறியர் ஓக்கிய *சிறு செங்குவளை* ஈ என இரப்பவும் ஒல்லாள் – உன் மேல் எறிவதற்காக அவள் ஓங்கிய சிறு செங்குவளை மலரை நீ தா எனக் கேட்கவும் ஒத்துக்கொள்ளாள், “நீ எமக்கு யாரையோ” எனப் பெயர்வோள் – நீ எனக்கு யார் எனக் கூறி நகர்வோள், கையதை – கையிலிருந்து, கதுமென உருத்த நோக்கமோடு – சட்டென சினம் கொண்ட பார்வையுடன், அது நீ பாஅல் வல்லாய் ஆயினை – அவளிடமிருந்து அதை எடுத்துக்கொள்ள நீ திறமை இல்லாதவன் ஆயினை, பாஅல் யாங்கு வல்லுநையோ – நின்பால் கவர்ந்து கொள்ள எவ்வாறு வல்லமை உடையவனோ, வாழ்க நின் கண்ணி – உன் கண்ணி வாழ்வதாக, அகல் இரு விசும்பில் – அகன்ற பெரிய வானில், பகல் இடம் தரீஇயர் – பகலுக்கு இடம் தரும் பொருட்டு, தெறு கதிர் திகழ்தரும் உருகெழு ஞாயிற்று – சுடுகின்ற கதிர்களை பரப்பி ஒளிரும் கதிரவனின், உருபு கிளர் வண்ணம் கொண்ட – உருவத்தையும் விளங்குகின்ற தன்மையும் கொண்ட, வான் தோய் – வான் அளவு உயர்ந்த வெண்குடை வேந்தர் தம் எயிலே – வான் அளவு உயர்ந்த வெண்குடை உடைய வேந்தரின் கோட்டைகள்

பதிற்றுப்பத்து 56,  பாடியவர் – காக்கை பாடினியார் நச்செள்ளையார்பாடப்பட்டோன் – சேர மன்னன் ஆடுகோட் பாட்டுச் சேரலாதன், *வேந்து மெய்ம் மறந்த வாழ்ச்சி*, துறை – ஒள் வாள் அமலைதூக்கு – செந்தூக்குவண்ணம் – ஒழுகு வண்ணம் 

விழவு வீற்று இருந்த வியல் உள் ஆங்கண்,
கோடியர் முழவின் முன்னர், ஆடல்
வல்லான் அல்லன், வாழ்க அவன் கண்ணி,
வலம்படு முரசம் துவைப்ப வாள் உயர்த்தி,
இலங்கும் பூணன், பொலங்கொடி உழிஞையன்,  5
மடம் பெருமையின் உடன்று மேல் வந்த
*வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி*
வீந்து உகு போர்க்களத்து ஆடும் கோவே.

பொருளுரை:  விழாக்கள் சிறப்பாக எடுக்கப்பட்ட அகன்ற ஊரில் கூத்தர்களின் முழவு ஓசைக்கு ஏற்ப ஆடும் தொழிலில் வல்லவன் இல்லை சேர மன்னன் ஆடுகோட் பாட்டுச் சேரலாதன்.  அவன் சூடிய மலர்ச்சரம் நீடு வாழ்வதாக!

வெற்றி முரசம் ஒலிக்க வாளை உயர்த்தி, ஒளியுடைய அணிகலன்களை அணிந்து,  பொன்னால் செய்த உழிஞைக் கொடியைச் சூடி,  அறியாமையின் மிகுதியால் வெகுண்டு, தன் மேல் வந்த பகை வேந்தர்கள் தங்கள் உடம்பை மறந்ததால் வந்த வெற்றிச் செல்வத்தையுடைய, பகைவர்கள் வீழும் போர்க்களத்தில்,  ஆடுவான் மன்னன்!

குறிப்பு:  வாழ்ச்சி (7) – அருள் அம்பலவாணர் உரை – வெற்றிச் செல்வத்தையுடைய, ஒளவை துரைசாமி உரை – துறக்கத்தே வாழ்வு பெறுதலால்.

சொற்பொருள்:  விழவு வீற்று இருந்த – விழாக்கள் சிறப்பாக எடுக்கப்பட்ட,  வியல் உள் ஆங்கண் – அகன்ற இடத்தில், கோடியர் முழவின் முன்னர் – கூத்தர்களின் முழவு ஓசைக்கு ஏற்ப,  ஆடல் வல்லான் அல்லன் – ஆடும் தொழிலில் வல்லவன் இல்லை,  வாழ்க அவன் கண்ணி – அவன் சூடிய கண்ணி நீடு வாழ்வதாக,  வலம்படு முரசம் துவைப்ப – வெற்றி முரசம் ஒலிக்க,  வாள் உயர்த்தி – வாளை உயர்த்தி,  இலங்கும் பூணன் –  ஒளியுடைய அணிகலன்களை அணிந்தவன், பொலங்கொடி உழிஞையன் – பொன்னால் செய்த உழிஞைக் கொடியைச் சூடி,  மடம் பெருமையின் – அறியாமையின் மிகுதியால்,  உடன்று மேல் வந்த – வெகுண்டு தன் மேல் வந்த, வேந்து  – பகை வேந்தர்கள், மெய்ம்மறந்த வாழ்ச்சி – தங்கள் உடம்பை மறந்ததால் வந்த வெற்றிச் செல்வம், வீந்து உகு – பட்டு வீழும், போர்க்களத்து ஆடும் கோவே – போர்க்களத்தில் ஆடும் மன்னன்

பதிற்றுப்பத்து 61, பாடியவர் – கபிலர்,  பாடப்பட்டோன் – செல்வக்கடுங்கோ வாழியாதன் ,*புலாஅம் பாசறை*, துறை: காட்சி வாழ்த்துதூக்கு: செந்தூக்குவண்ணம்: ஒழுகு வண்ணம்

பலாஅம் பழுத்த பசும் புண் அரியல்
வாடை துரக்கும் நாடு கெழு பெரு விறல்,
ஓவத்து அன்ன வினை புனை நல் இல்,
பாவை அன்ன நல்லோள் கணவன்,
பொன்னின் அன்ன பூவின் சிறி இலைப்  5
புன்கால் உன்னத்துப் பகைவன், என் கோ,
புலர்ந்த சாந்தின், புலரா ஈகை,
மலர்ந்த மார்பின், மா வண் பாரி,
முழவு மண் புலர, இரவலர் இனைய,
வாராச் சேண் புலம் படர்ந்தோன், அளிக்கென  10
இரக்கு வாரேன், எஞ்சிக் கூறேன்,
ஈத்தது இரங்கான், ஈத்தொறும் மகிழான்,
ஈத்தொறும் மா வள்ளியன் என நுவலும் நின்
நல் இசை தரவந்திசினே, ஒள் வாள்
உரவுக் களிற்றுப் *புலாஅம் பாசறை*  15
நிலவின் அன்ன வெள் வேல் பாடினி
முழவின் போக்கிய வெண் கை
விழவின் அன்ன, நின் கலி மகிழானே.

குறிப்பு:  பாவை அன்ன (4) – அருள் அம்பலவாணர் உரை – கொல்லிப் பாவை போன்ற.  ஒளவை துரைசாமி உரை – பாவை போன்ற.  உன்னத்துப் பகைவன் (6) – ஒளவை துரைசாமி உரை – உன்ன மரம் போர் வீரர் நிமித்தம் காண நிற்கும் மரம்.  காண்பார்க்கு வெற்றி எய்துவதாயின் தழைத்தும் தோல்வி எய்துவதாயின் கரித்தும் காட்டும் என்ப.  அது கரித்து காட்டிய வழியும் அஞ்சாது அறமும் வலியும் துணையாகப் பொருது வெற்றி எய்தும் வேந்தன் என்றதற்கு ‘உன்னத்துப் பகைவன்’ என்றார்.  தான் எய்துவது தோல்வி என்று உன்ன மரம் காட்டவும் காணாது, பொருது வென்றி எய்தி உன்னத்தின் நிமித்தத்தைக் கெடுத்தல் பற்றிப் பகைவன் என்பாராயினர் என்க.  இரக்கு (11) – பழைய உரை – இரக்கென்றது தன்மை வினை.  எஞ்சிக் கூறேன் (11) – ஒளவை துரைசாமி உரை – குன்றவும் மிகை படவும் கூற மாட்டேன், அருள் அம்பலவாணர் உரை – உண்மையின் எல்லையைக் கடந்து பொய்யே புகழ்ந்து சொல்லேன்.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).

பொருளுரை:  பலா மரத்தில் பழுத்து வெடித்த பழத்திலிருந்து ஒழுகும் சாற்றினை வாடைக் காற்று எறியும் பறம்பு நாட்டின் கோமான், பெரிய வெற்றியுடையவன், ஓவியத்தைப் போன்ற வேலைப்பாடமைந்த நல்ல மனையில் உள்ள பாவையைப் போன்ற நல்ல அழகுடைய பெண்ணின் கணவன், பொன்னைப் போன்ற பூக்களையும் சிறிய இலைகளையும் புல்லிய அடிப்பகுதியையையும் உடைய உன்ன மரத்திற்குப் பகைவனான என் மன்னன், உலர்ந்தச் சந்தனத்தையுடைய அகன்ற மார்பையும் குன்றாத வள்ளன்மையுடைய பாரி. முழவின் மார்ச்சனை மண் புலர, பரிசிலர் வருந்த, திரும்பி வர முடியாத தொலைவில் உள்ள சாவிற்குச் சென்று விட்டான். எனக்கு அளிப்பாயாக என்று கேட்க வரவில்லை நான். உன் புகழை மிகைப்படவும் குறைவாகவும் கூற மாட்டேன். “ஈதலால் பொருள் செலவானது என்று மனம் இரங்குவான் இல்லை. ஈதலால் புகழ் மிகுவதால் மகிழ மாட்டான். ஈயும் பொழுதெல்லாம் மிகுந்த வள்ளன்மையுடையவன்” என்று கூறப்படும் உன் புகழ் எம்மை ஈர்ப்ப, நான் உன்னிடம் வந்தேன், ஒளியுடைய வாளினையும் வலிமையான களிற்று யானைகளையுமுடைய புலால் நாற்றமுடைய பாசறைக்கு. நிலவைப் போன்ற ஒளியுடைய வேலைச் சிறப்பித்துப் பாடும் பாடினி முழவின் தாளத்திற்கேற்ப வெறுங்கையை அசைத்துப் பாடும் உன்னுடைய ஆரவாரம் மிக்கத் திருவோலக்கத்தின்கண்.

சொற்பொருள்:   பலாஅம் பழுத்த பசும் புண் அரியல் – பலா மரத்தில் பழுத்து வெடித்த பழத்திலிருந்து ஒழுகும் சாறு, வாடை துரக்கும் – வாடைக் காற்று எறியும், நாடு கெழு பெரு விறல் – பறம்பு நாட்டின் பெரிய வெற்றியுடையவன், ஓவத்து அன்ன வினை புனை நல் இல் – ஓவியத்தைப் போன்ற வேலைப்பாடமைந்த நல்ல மனை, பாவை அன்ன நல்லோள் கணவன் – பாவையைப் போன்ற நல்ல அழகுடைய பெண்ணின் கணவன், பொன்னின் அன்ன பூவின் சிறி இலைப் புன்கால் உன்னத்துப் பகைவன் – பொன்னைப் போன்ற பூக்களையும் சிறிய இலைகளையும் புல்லிய அடிப்பகுதியையையும் உடைய உன்ன மரத்திற்கு பகைவன் (பொன்னின் – இன் சாரியை), என் கோ – என் மன்னன், புலர்ந்த சாந்தின் புலரா ஈகை மலர்ந்த மார்பின் மா வண் பாரி – உலர்ந்த சந்தனத்தையுடைய அகன்ற மார்பையும் குன்றாத வள்ளன்மையுடைய பாரி, முழவு மண் புலர – முழவின் மார்ச்சனை மண் புலர, இரவலர் இனைய – பரிசிலர் வருந்த, வாராச் சேண் புலம் படர்ந்தோன் – திரும்பி வர முடியாத தொலைவிற்குச் சென்று விட்டான், அளிக்கென இரக்கு வாரேன் – எனக்கு அளிப்பாயாக என்று கேட்க வரவில்லை நான், எஞ்சிக் கூறேன் – உன் புகழை மிகைப்படவும் குறைவாகவும் கூற மாட்டேன், ஈத்தது இரங்கான் – ஈதலால் பொருள் செலவானது என்று மனம் இரங்குவான் இல்லை, ஈத்தொறும் மகிழான் – ஈதலால் புகழ் மிகுவதால் மகிழ மாட்டான், ஈத்தொறும் மா வள்ளியன் என நுவலும் நின் நல் இசை – ஈயும் பொழுதெல்லாம் மிகுந்த வள்ளன்மையுடையவன் என்று கூறப்படும் உன் புகழ், தரவந்திசினே – எம்மை ஈர்ப்ப நான் வந்தேன், ஒள் வாள் உரவுக் களிற்றுப் புலாஅம் பாசறை – ஒளியுடைய வாட்களையும் வலிமையான களிற்று யானைகளையுமுடைய புலால் நாற்றமுடைய பாசறை, நிலவின் அன்ன – நிலவைப் போன்ற, வெள் வேல் பாடினி – ஒளியுடைய வேலைச் சிறப்பித்துப் பாடும் பாடினி, முழவின் போக்கிய வெண் கை விழவின் அன்ன நின் கலி மகிழானே – முழவின் தாளத்திற்கேற்ப வெறுங்கையை அசைத்துப் பாடும் உன்னுடைய ஆரவாரம் மிக்க திருவோலக்கத்தின்கண் (விழவின் – இன் சாரியை)

பதிற்றுப்பத்து 87, பாடியவர் – பெருங்குன்றூர்கிழார்,  பாடப்பட்டோன் – இளஞ்சேரல் இரும்பொறை, *வெண் தலைச் செம் புனல்*, துறை: விறலியாற்றுப்படைதூக்கு: செந்தூக்குவண்ணம்: ஒழுகு வண்ணம்

சென்மோ பாடினி! நன்கலம் பெறுகுவை,
சந்தம் பூழிலொடு பொங்கு நுரை சுமந்து
தெண் கடல் முன்னிய *வெண் தலைச் செம் புனல்*
ஒய்யும் நீர் வழிக் கரும்பினும்,
பல் வேல் பொறையன் வல்லனால், அளியே.  5

பொருளுரை:   செல்லுவாயாகப் பாடும் பெண்ணே! பொறையனிடம் நல்ல அணிகளை நீ பெறுவாய். சந்தனக் கட்டைகளோடும் அகில் கட்டைகளோடும், பொங்கும் நுரையைச் சுமத்துக் கொண்டு, தெளிந்த கடலை நோக்கிச் செல்லும் வெள்ளை நுரையையுடைய சிவந்த வெள்ளத்தின் நீரைக் கடப்பதற்குப் புணையாக உதவும் வேழக் கரும்பைக் காட்டிலும், பல வேற்படைகளையுடைய பொறையன், அளிக்க வல்லவன்.

குறிப்பு:  கரும்பினும் (4) – ஒளவை துரைசாமி உரை – வேழக்கரும்பைக் காட்டிலும், அருள் அம்பலவாணர் உரை – கருப்பந்தெப்பத்தினும், உ. வே. சாமிநாதையர் உரை – கரும்பென்றது கருப்பந்தெப்பத்தினை. ஒளவை துரைசாமி உரை – வேழப்புணை ஆற்று நீரைக் கடத்தற்குத் துணையாவது அல்லது கடந்த பின்னும் துணையாவதில்லை.  பொறையன் நினது இவ்வறுமைத் துன்பத்தைக் கடத்தற்குத் துணையாம் பெருவளம் நல்குவதே அன்றி, அத் துன்பமின்றி இனிது இருக்குங்காலத்தும் வழங்கி அருள்வர் என்றார்.  அகநானூறு 6 – வேழ வெண்புணை.

சொற்பொருள்:  சென்மோ – செல்லுவாயாக (மோ – முன்னிலையசை), பாடினி – பாடும் பெண்ணே, நன்கலம் பெறுகுவை – நல்ல அணிகள் பெறுவாய், சந்தம் பூழிலொடு – சந்தனக் கட்டைகளோடும் அகில் கட்டைகளோடும், பொங்கு நுரை சுமந்து – பொங்கும் நுரையைச் சுமத்துக் கொண்டு, தெண் கடல் முன்னிய – தெளிந்த கடலை நோக்கிச் செல்லும், வெண்தலைச் செம் புனல் – வெள்ளை நுரையையுடைய சிவந்த வெள்ளம், ஒய்யும் நீர் வழிக் கரும்பினும் – நீரைக் கடப்பதற்கு புணையாக உதவும் வேழக் கரும்பைக் காட்டிலும், பல் வேல் பொறையன் – பல வேற்படைகளையுடைய பொறையன், வல்லனால் அளியே – அளிக்க வல்லவன் (அளியே – ஏகாரம் அசைநிலை)