ஆடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஆடி - சொல்லாய்வு

 ஆடி என்பதே அன்றைக்கு கண்ணாடியைக் குறித்த பொதுப் பெயராகும். பிற்காலத்தில் கண்ணில் அணியப்படும் ஆடியை 'கண்ணாடி' என்றழைக்க அதுவே பொதுப் பெயராகவும் நிலை பெற்று விட்டது.

ஒளியைப் பிரதிபலிக்கும் பரப்பு 'ஆடி' எனப்பட்டது. (பெயர்க்காரணம் கீழே…)

நம் நாட்டில் தொடக்கத்தில் உலோகத் தகடுகளைத் தீயிலிட்டு ஒளியபக்குவப்படுத்தி ஆடிகளாகப் பயன்படுத்தி வந்தனர். இந் நிலைக்கண்ணாடியை அக்காலத்தில் படிமக்கலம், முகரம் என்றும் அழைப்பர்.

'சூத்திரம்தானே ஆடி நிழலின் அறியத் தோன்றி
நாடுதல் இன்றி பொருள் நனி விளங்க
யாப்பினுள் தோன்ற யாத்து அமைப்பதுவே' - 
தொல்காப்பியம்.

  • அடு = சுடு, (தீயிடு, பற்றவை, எரி).
    அடுதல் = சுடுதல்,தீயிலிடுதல்.
    அடு > அடுப்பு.
  • அட்டுதல் = சுடுதல்.
    அட்டப்பட்டது ஆடி!
  • அட்டு > ஆடு + இ = ஆடி.
    ஆடி > சாடி ( சுடப்பட்ட கலம்).
  • அடு > அட்டு > அட்டு + இ = அட்டி > சட்டி ( அடுப்பில் வைக்கப்படும் கலம்).

பொன்னி னாடியிற் பொருந்துபு நிற்போர் - மணிமேகலை.

கண்ணில் அணியக்கூடிய தொடக்க கால கண்ணாடிகள் கைப்பிடிகள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருந்தது. ஒன்று அல்லது இரண்டு குவிந்த வில்லைகளுடன் (லென்ஸ்) , உலோக அல்லது எலும்பு விளிம்புகளில் மூடப்பட்டிருந்ததாக அவை இருந்தன.பின்னர் காதுகளைச் சுற்றிலும் பட்டு நூல் கொண்டு பயன்படுத்தினர்.

முதலில் தோன்றிய கண்ணாடிகள் கைப்பிடிகளோடு கைகளைச் சார்ந்திருந்தமையால், பின்னர் வந்த மூக்கு மீது அமர்ந்தவைக்கு மூக்குக் கண்ணாடிகள் எனப் பெயரிட்டனர்.

துக்கடா : இன்றைய சிலிகான் (Silicone) நிலைக்கண்ணாடி ஒரு சமதள ஆடி வகை சார்ந்தது. பிரதிபலிக்கும் பரப்பு கோளமாக இருந்தால் கோள ஆடி என்று பெயர் . அவை குழியாடி, குவியாடி என இரண்டு வகைப்படும்.

முதன் முதலில் நிலைக்கண்ணாடியில் தன் பிம்பத்தைக் கண்டு மனிதன் 'மிரண்டு' போனதால் இடப்பட்ட 'மிரர்' (Mirror) என்ற ஆங்கிலச் சொல்
தமிழ் மூலம் தந்த ஒன்று!

* மிரள் > மிரர் ( MIRROR). மிரள வைப்பது மிரர் ஆனது. மிரண்டு போய் 'மிரர்' என்றனர்.
ஒத்த திரிபுகள் : அரள் > 
HORROR. அரள வைப்பதைக் கண்டு அரண்டு போய் அரர் / ஹாரர் என்றனர்.