கலித்தொகை - 1. கடவுள்வாழ்த்து
ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து,
தேறு நீர் சடைக் கரந்து, திரிபுரம் தீ மடுத்து,
கூறாமல் குறித்ததன் மேல் செல்லும் கடுங் கூளி; (கூளி - சாத்தான்)
மாறாப் போர், மணி மிடற்று, எண் கையாய்! கேள், இனி;
படு பறை பல இயம்பப், பல் உருவம் பெயர்த்து நீ, 5
கொடுகொட்டி ஆடுங்கால், கோடு உயர் அகல் அல்குல்,
கொடி புரை நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ?
மண்டு அமர் பல கடந்து, மதுகையால் நீறு அணிந்து,
பண்டரங்கம் ஆடுங்கால், பணை எழில் அணை மென் தோள்,
வண்டு அரற்றும் கூந்தலாள் வளர் தூக்குத் தருவாளோ? 10
கொலை உழுவைத் தோல் அசைஇக், கொன்றைத் தார் சுவல் புரள,
தலை அங்கை கொண்டு, நீ காபாலம் ஆடுங்கால்,
முலை அணிந்த முறுவலாள் முன் பாணி தருவாளோ?
என வாங்கு;
பாணியும், தூக்கும், சீரும், என்று இவை 15
மாண் இழை அரிவை காப்ப,
வாணம் இல் பொருள் எமக்கு அமர்ந்தனை, ஆடி.
கலித்தொகை - பாலைக் கலி - 2
தொடங்கற்கண் தோன்றிய முதியவன் முதலாக,
அடங்காதார் மிடல் சாய, அமரர் வந்து இரத்தலின், (மிடல் -வலிமை, அமரர் - தேவர்)
மடங்கல் போல், சினைஇ, மாயம் செய் அவுணரைக் (மடங்கல்- கோணம், அவுணர் - அசுரர்)
கடந்து அடு முன்பொடு, முக்கண்ணான் மூஎயிலும்
உடன்றக்கால், முகம் போல ஒண் கதிர் தெறுதலின், 5
சீறு அருங் கணிச்சியோன் சினவலின் அவ் எயில்
ஏறு பெற்று உதிர்வன போல், வரை பிளந்து, இயங்குநர்
ஆறு கெட விலங்கிய அழல் அவிர் ஆர் இடை-
மறப்பு அருங் காதல் இவள் ஈண்டு ஒழிய,
இறப்பத் துணிந்தனிர், கேண்மின் மற்றைஇய! 10
தொலைவு ஆகி, இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என,
மலை இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ
நிலைஇய கற்பினாள், நீ நீப்பின் வாழாதாள்,
முலை ஆகம் பிரியாமை பொருளாயின் அல்லதை;
இல் என, இரந்தார்க்கு ஒன்று ஈயாமை இழிவு என, 15
கல் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ-
தொல் இயல் வழாஅமைத் துணை எனப் புணர்ந்தவள்
புல் ஆகம் பிரியாமை பொருளாயின் அல்லதை;
இடன் இன்றி, இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என,
கடன் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ- 20
வடமீன் போல் தொழுது ஏத்த வயங்கிய கற்பினாள்
தட மென் தோள் பிரியாமை பொருளாயின் அல்லதை;
என, இவள்
புன் கண் கொண்டு இனையவும், பொருள்வயின் அகறல்
அன்பு அன்று, என்று யான் கூற, அன்புற்று, 25
காழ் வரை நில்லாக் கடுங் களிற்று ஒருத்தல்
யாழ் வரைத் தங்கியாங்குத், தாழ்பு, நின்
தொல் கவின் தொலைதல் அஞ்சி, என்
சொல் வரைத் தங்கினர், காதலோரே.
கலித்தொகை - பாலைக் கலி - 3
அறன் இன்றி அயல் தூற்றும் அம்பலை நாணியும்,
வறன் நீந்தி நீ செல்லும் நீள் இடை நினைப்பவும்-
இறை நில்லா வளை ஓட, இதழ் சோர்பு பனி மல்க,
பொறை நில்லா நோயோடு புல்லென்ற நுதல் இவள்
விறல் நலன் இழப்பவும், வினை வேட்டாய்! கேஎள், இனி; 5
'உடை இவள் உயிர் வாழாள், நீ நீப்பின்' எனப், பல
இடைகொண்டு யாம் இரப்பவும், எம கொள்ளாய்ஆயினை;
கடைஇய ஆற்றிடை, நீர் நீத்த வறுஞ் சுனை,
அடையொடு வாடிய அணி மலர்-தகைப்பன;
'வல்லை நீ துறப்பாயேல், வகை வாடும் இவள்' என, 10
ஒல் ஆங்கு யாம் இரப்பவும், உணர்ந்தீயாய் ஆயினை;
செல்லு நீள் ஆற்றிடைச், சேர்ந்து எழுந்த மரம் வாட,
புல்லு விட்டு இறைஞ்சிய பூங்கொடி தகைப்பன;
'பிணிபு நீ விடல் சூழின், பிறழ்தரும் இவள்' எனப்,
பணிபு வந்து இரப்பவும், பல சூழ்வாய்ஆயினை; 15
துணிபு நீ செலக் கண்ட ஆற்றிடை, அம் மரத்து
அணி செல, வாடிய அம் தளிர்-தகைப்பன;
எனவாங்கு
யாம் நிற் கூறவும் எம கொள்ளாய்ஆயினை;
ஆனாது இவள்போல் அருள் வந்தவை காட்டி, 20
மேல் நின்று மெய் கூறும் கேளிர் போல், நீ செல்லும்
கானம் தகைப்ப, செலவு.
கலித்தொகை - பாலைக் கலி - 4
வலி முன்பின், வல்லென்ற யாக்கைப், புலி நோக்கின்-
சுற்றமை வில்லர், சுரி வளர் பித்தையர்,
அற்றம் பார்த்து அல்கும்-கடுங்கண் மறவர் தாம்
கொள்ளும் பொருள் இலர்ஆயினும், வம்பலர்
துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்து, உயிர் வௌவலின், 5
புள்ளும் வழங்காப் புலம்பு கொள் ஆர் இடை,
வெள் வேல் வலத்திர் பொருள் தரல் வேட்கையின்,
உள்ளினிர் என்பது அறிந்தனள், என் தோழி;
'காழ் விரி வகை ஆரம் மீ வரும் இள முலை
போழ்து இடைப்படாஅமல் முயங்கியும் அமையார், என் 10
தாழ் கதுப்பு அணிகுவர், காதலர்; மற்று, அவர்
சூழ்வதை எவன்கொல்? அறியேன்!' என்னும்
'முள் உறழ் முளை எயிற்று அமிழ்து ஊறும் தீ நீரைக்
கள்ளினும் மகிழ்செயும் என உரைத்தும் அமையார், என்
ஒள் இழை திருத்துவர், காதலர்; மற்று, அவர் 15
உள்ளுவது எவன்கொல்? அறியேன்!" என்னும்
'நுண் எழில் மாமைச் சுணங்கு அணி ஆகம் தம்
கண்ணொடு தொடுத்தென நோக்கியும் அமையார், என்
ஒள் நுதல் நீவுவர், காதலர்; மற்று, அவர்
எண்ணுவது எவன்கொல்? அறியேன்!' என்னும்; 20
எனவாங்கு,
'கழி பெரு நல்கல் ஒன்று உடைத்து என!' என் தோழி
அழிவொடு கலங்கிய எவ்வத்தள்; ஒரு நாள், நீர்,
பொழுது இடைப்பட நீப்பின், வாழ்வாளோ?
ஒழிக இனி, பெரும! நின் பொருட் பிணிச் செலவே. 25
- ஆறு அறி அந்தணர்க்கு அருமறை பல பகர்ந்து,
- தொடங்கல் கண் தோன்றிய முதியவன் முதலாக
- அறன் இன்றி அயல் தூற்றும் அம்பலை நாணியும்
- வலி முன்பின் வல்லென்ற யாக்கைப் புலி நோக்கின் -
- பாஅல் அம் செவிப் பணைத் தாள் மா நிரை
- மரையா மரல் கவர மாரி வறப்ப -
- வேனில் உழந்த வறிது உயங்கு ஓய் களிறு
- நடுவு இகந்து ஒரீஇ நயன் இல்லான் வினை வாங்கக்
- எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல்
- வறியவன் இளமை போல் வாடிய சினையவாய்ச்,
- அரிது ஆய அறன் எய்தி அருளியோர்க்கு அளித்தலும்
- இடு முள் நெடு வேலி போலக் கொலைவர்
- செரு மிகு சின வேந்தன் சிவந்து இறுத்த புலம் போல
- அணை மருள் இன் துயில் அம் பணைத் தட மென் தோள்
- அரி மான் இடித்தன்ன அம் சிலை வல் வில்
- பாடு இன்றிப் பசந்தகண் பைதல பனிமல்க
- படை பண்ணிப் புனையவும் பா மாண்ட பல அணைப்
- அரும் பொருள் வேட்கையின் உள்ளம் துரப்பப்
- செவ்விய தீவிய சொல்லி அவற்றொடு
- பல் வளம் பகர்பு ஊட்டும் பயன் நிலம் பைது அறச்
- பால் மருள் மருப்பின் உரல் புரை பாவடி,
- உண் கடன் வழிமொழிந்து இரக்கும்கால் முகனும் தாம்
- இலங்கு ஒளி மருப்பின் கைம்மா உளம்புநர்
- நெஞ்சு நடுக்குறக் கேட்டும் கடுத்தும், தாம்
- வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர் பெற்ற
- ஒரு குழை ஒருவன் போல் இணர் சேர்ந்த மராஅமும்,
- ஈதலில் குறை காட்டாது அறன் அறிந்து ஒழுகிய
- பாடல் சால் சிறப்பின் சினையவும் சுனையவும்,
- தொல் எழில் வரைத்து அன்றி வயவு நோய் நலிதலின்
- அரும் தவம் ஆற்றியார் நுகர்ச்சி போல் அணி கொள
- கடும் புனல் கால் பட்டுக் கலுழ் தேறிக் கவின் பெற
- எ·கு இடை தொட்ட கார்க் கவின் பெற்ற ஐம்பால் போல் -
- வீறு சால் ஞாலத்து வியல் அணி காணிய
- மன் உயிர் ஏமுற மலர் ஞாலம் புரவு ஈன்று,
- மடி இலான் செல்வம் போல் மரன் நந்த அச் செல்வம்
- கொடு மிடல் நாஞ்சிலான் தார் போல் மராத்து
- கய மலர் உண் கண்ணாய்! காணாய்; ஒருவன்
- இமைய வில் வாங்கிய ஈர்ஞ் சடை அந்தணன்
- காமர் கடும் புனல் கலந்து எம்மோடு ஆடுவாள்
- அகவினம் பாடுவாம் தோழி! - அமர்க் கண்
- பாடுகம் வா - வாழி, தோழி! வயக் களிற்றுக்
- மறம் கொள் இரும் புலித் தொல் முரண் தொலைத்த
- வேங்கை தொலைத்த வெறி பொறி வாரணத்து
- கதிர் விரி கனை சுடர்க் கவின் கொண்ட நனம் சாரல்
- விடியல் வெம் கதிர் காயும் வேய் அமல் அகல் அறைக்
- வீ அகம் புலம்ப வேட்டம் போகிய
- ஒன்று இரப்பான் போல் எளிவந்தும் சொல்லும் உலகம்
- ஆம் இழி அணி மலை அலர் வேங்கைத் தகை போலத்
- கொடுவரி தாக்கி வென்ற வருத்தமொடு
- வாங்கு கோல் நெல்லொடு வாங்கி வரு வைகல்,
- சுடர் தொடீஇ! கேளாய் - தெருவில் நாம் ஆடும்
- முறம் செவி மறைப் பாய்பு முரண் செய்த புலி செத்து
- வறன் உறல் அறியாத வழை அமை நறும் சாரல்
- கொடியவும் கோட்டவும் நீர் இன்றி நிறம் பெறப்
- மின் ஒளிர் அவிர் அறல் இடை போழும் பெயலே போல்
- ஊர்க் கால் நிவந்த பொதும்பருள் நீர்க் கால்,
- வேய் எனத் திரண்ட தோள் வெறி கமழ் வணர் ஐம்பால்,
- வார் உறு வணர் ஐம்பால் வணங்கு இறை நெடு மென் தோள்,
- தளை நெகிழ் பிணி நிவந்த பாசு அடைத் தாமரை
- சுணங்கு அணி வன முலைச் சுடர் கொண்ட நறு நுதல்,
- எல்லா! இ·து ஒத்தன் என் பெறான்? கேட்டைக் காண்;
- ஏஎ! இ·து ஒத்தன் நாண் இலன் - தன்னொடு
- நோக்கும்கால் நோக்கித் தொழூஉம், பிறர் காண்பார்
- அணி முகம் மதி ஏய்ப்ப அம் மதியை நனி ஏய்க்கும்
- திருந்து இழாய்! கேளாய் நம் ஊர்க்கு எல்லாம் சாலும்
- வீங்கு நீர் அவிழ் நீலம் பகர்பவர் வயல் கொண்ட
- கார் முற்றி இணர் ஊழ்த்த கமழ் தோட்ட மலர் வேய்ந்து,
- பொது மொழி பிறர்க்கு இன்றி முழுது ஆளும் செல்வர்க்கு
- போது அவிழ் பனிப் பொய்கைப் புதுவது தளைவிட்ட
- மணி நிற மலர்ப் பொய்கை மகிழ்ந்து ஆடும் அன்னம் தன்
- விரி கதிர் மண்டிலம் வியல் விசும்பு ஊர்தரப்
- இணைபட நிவந்த நீல மென் சேக்கையுள்
- அகல் துறை அணிபெறப் புதலொடு தாழ்ந்த
- பொய்கைப் பூ புதிது உண்ட வரி வண்டு கழி பூத்த
- நீர் ஆர் செறுவில் நெய்தலொடு நீடிய
- புனை இழை நோக்கியும் புனல் ஆடப் புறம் சூழ்ந்தும்,
- இணை இரண்டு இயைந்து ஒத்த முகை நாப்பண் பிறிது யாதும்
- பல் மலர்ப் பழனத்த பாசடைத் தாமரை
- புள் இமிழ் அகல் வயல் ஒலி செந்நெல் இடைப் பூத்த
- நயம் தலை மாறுவார் மாறுக; மாறாக்
- மை அற விளங்கிய மணி மருள் அவ் வாய் தன்
- ஞாலம் வறம் தீரப் பெய்யக் குணக்கு ஏர்பு
- பெரு திரு நிலைஇய வீங்கு சோற்று அகல் மனைப்
- உறு வளி தூக்கும் உயர் சினை மாவின்
- காலவை சுடு பொன் வளைஇய ஈர் அமை சுற்றொடு
- மை படு சென்னி மழ களிற்று ஓடை போல்
- ஒரூஉ நீ; எம் கூந்தல் கொள்ளல் - யாம் நின்னை
- ஒரூஉக்! கொடி இயல் நல்லார் குரல் நாற்றத்து உற்ற
- யார் இவன்? எம் கூந்தல் கொள்வான்? இதுவும் ஓர்
- கண்டேன் நின் மாயம் களவு ஆதல்; பொய்ந் நகா,
- அரி நீர் அவிழ் நீலம் அல்லி, அனிச்சம்,
- புன வளர் பூங் கொடி அன்னாய்! கழியக்
- வண்டு ஊது சாந்தம் வடுக் கொள நீவிய
- என் நோற்றனை கொல்லோ? -
- நில் ஆங்கு; நில், ஆங்கு; இவர்தரல் - எல்லா! நீ
- ஏந்து எழில் மார்ப! எதிர் அல்ல நின் வாய் சொல்;
- அன்னை; கடுஞ் சொல் அறியாதாய் போல நீ
- யாரை நீ எம் இல் புகுதர்வாய்? ஓரும்
- நறவினை வரைந்தார்க்கும் வரையார்க்கும் அவை எடுத்து
- ஈண்டு நீர் மிசைத் தோன்றி இருள் சீக்கும் சுடரே போல்
- தளி பெறு தண் புலத்துத் தலை பெயற்கு அரும்பு ஈன்று
- கண் அகல் இரு விசும்பில் கதழ் பெயல் கலந்து ஏற்ற
- மெல் இணர்க் கொன்றையும் மென் மலர்க் காய®¾வும்,
- மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவலின்
- அரைசு படக் கடந்து அட்டு ஆற்றின் தந்த
- கழுவொடு சுடு படை சுருக்கிய தோல் கண்.
- எல்லா! இ·து ஒன்று - கூறு குறும்பு இவர்
- இகல் வேந்தன் சேனை இறுத்த வாய் போல -
- கார் ஆரப் பெய்த கடி கொள் வியன் புலத்துப்
- கடி கொள் இரும் காப்பில் புல் இனத்து ஆயர்
- தீம் பால் கறந்த கலம் மாற்றக் கன்று எல்லாம்
- யார் இவன் என்னை விலக்குவான்? நீர் உளர்
- நலம் மிக நந்திய நய வரு தட மென் தோள்
- வாரி நெறிப்பட்டு, இரும் புறம் தாஅழ்ந்த
- தோழி! நாம் காணாமை உண்ட கடும் கள்ளை, மெய் கூர
- பாங்கு அரும் பாட்டம் கால் கன்றொடு செல்வேம் எம்
- மாண உருக்கிய நல் பொன் மணி உறீஇ
- வெல் புகழ் மன்னவன் விளங்கிய ஒழுக்கத்தால்,
- அகல் ஞாலம் விளக்கும் தன் பல் கதிர் வாய் ஆக
- அருள் தீர்ந்த காட்சியான் அறன் நோக்கான், நயம் செய்யான்
- ஒள் சுடர் கல் சேர உலகு ஊரும் தகையது,
- கோதை ஆயமும் அன்னையும் அறிவுறப்
- கரும் கோட்டு நறும் புன்னை மலர் சினை மிசை தொறும்
- ஞாலம் மூன்று அடித் தாய முதல்வற்கு முது முறைப்
- கண்டவர் இல் என உலகத்துள் உணராதார்,
- பொன் மலை சுடர் சேரப் புலம்பிய இடன் நோக்கித்,
- தெரி இணர் ஞாழலும் தேம் கமழ் புன்னையும்,
- தோள் துறந்து அருளாதவர் போல் நின்று,
- தொல் ஊழி தடுமாறித் தொகல் வேண்டும் பருவத்தால்
- நயனும் வாய்மையும் நன்னர் நடுவும்
- பெரும் கடல் தெய்வம் நீர் நோக்கித் தெளித்து என்
- உரவு நீர்த் திரை பொர ஓங்கிய எக்கர் மேல்
- மா மலர் முண்டகம் தில்லையோடு ஒருங்கு உடன்
- மல்லரை மறம் சாய்த்த மலர் தண் தார் அகலத்தோன்
- துணை புணர்ந்து எழுதரும் தூ நிற வலம்புரி
- இவர் திமில் எறி திரை ஈண்டி வந்து அலைத்தக்கால்,
- அரிதே தோழி! நாண் நிறுப்பாம் என்று உணர்தல்;
- எழில் மருப்பு எழில் வேழம் இகுதரு கடாத்தால்
- சான்றவிர் வாழியோ! சான்றவிர்! என்றும்
- கண்டவிர் எல்லாம் கதுமென வந்து ஆங்கே,
- அரிதினின் தோன்றிய யாக்கை புரிபு தாம்
- புரிவு உண்ட புணர்ச்சிஉள் புல் ஆரா மாத்திரை
- அகல் ஆங்கண் இருள் நீங்க, அணி நிலாத் திகழ்ந்த பின்
- நல் நுதாஅல்! காண்டை; நினையா நெடிது உயிரா,
- துனையுநர் விழைதக்க சிறப்புp போல் கண்டார்க்கு
- உரை செல உயர்ந்து ஓங்கிச் சேர்ந்தாரை ஒரு நிலையே
- ஆறு அல்ல மொழி தோற்றி அற வினை கலக்கிய,
- தொல் இயல் ஞாலத்துத் தொழில் ஆற்றி ஞாயிறு
- நிரை திமில் களிறு ஆகத் திரை ஒலி பறை ஆகக்
- அயம் திகழ் நறும் கொன்றை அலங்கல் அம் தெரியலான்