சொல்லாய்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சொல்லாய்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

யோகா

யோகா என்பது தமிழ் சொல்லா? அல்லது வடமொழிச் சொல்லா?

இரண்டு மொழியையும் சார்ந்தது என்று கருத வாய்ப்பு உண்டு.

காரணம், யோக சாஸ்திர நூல் கூறிய பதஞ்சலி என்பவர் மனிதர் அல்ல, அவர் தேவர் இனத்தை சார்ந்தவர் ஆவார். சிவயோக மாமுனி, பதஞ்சலி, வியக்ரமர், மற்றும் எண்மர் எனும் நான்கு நந்திகளில் அவரும் ஒருவர்.


நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி,
மன்று தொழுத பதஞ்சலி, வியாக் ரமர்
என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே.

நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள்
நால்வரும் நானாவிதப் பொருள் கைக்கொண்டு
நால்வரும் யான் பெற்றது எல்லாம் பெறுக என
நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே. - திருமந்திரம்

இவர்கள் நால்வரும் ஒவ்வொரு திசையில் உள்ள முனிவர்களுக்கு நாதர்களாக அதாவது குருவாக இருந்து வந்துள்ளனர்.

தெற்கு திசைக்கு எண்மர் எனும் நந்தியும் வடக்கு திசைக்கு பதஞ்சலி எனும் நந்தியும் ஆசிரியராக இருந்து வந்துள்ளனர். மனிதர்களில் உள்ள குருமார்கள் பிறப்பு இறப்பின் கார்ணமாக மாறிக்கொண்டே இருப்பர் ஆனால் தேவர்கள் அமரர்கள் எனவே அவர்கள் மாறுவதில்லை.

தெற்கில் நான் அறிந்தவரை திருமந்திரம் யோகம் பற்றி பேசுகிறது. திருமந்திரம் என்பது எண்மர் எனும் நந்திதேவர் மூலம் திரு மூலருக்கு போதிக்க்கபட்ட நூல் ஆகும். நந்திகள் அனைவரும் இறைவனின் தூதுவர்கள் ஆவர்.


எனவே எதோ ஒரு மொழியில் யோகம் உருவாக்கப்பட்ட அல்லது கண்டுபிடிக்கப்பட்டு பிறகு வேறு மொழிக்கு கொண்டு செல்லப்பட்டது என்பது சாத்தியம் எப்பொழுது என்றால் அனைத்தும் மனிதர்களால் உருவக்கப்பட்டால். ஆனால் உலகம் முழுதும் படைத்த ஒருவனிடம் இருந்து தேவர்கள் மூலம் மக்களுக்கு போதிக்கப்பட்டது என்ற திருமந்திர பாடலை அடிப்படையாக வைத்து பார்த்தால் அது இரண்டு மொழியிலும் ஒரே நேரத்தில் போதாக்கப்பட்டு இருக்க வாய்ப்பு உண்டு.

எனவே இது என்னுடையது உண்ணுடைது என்கிற சண்டை தேவை இல்லை என்பது என் கருத்து.

நிகண்டுகள்

நிகண்டுகள் என்பன தமிழ் சொற்களின் அகராதியை விளக்கும் முகமாக அமைந்து உள்ளது. அவற்றை பற்றிய ஆய்வு கருத்துகள் இங்கே. சிலர் முரண்படலம், அனால் சில அடிப்படைகளை கொண்டு இந்த கருத்து எட்டப்பட்டது.

அடிப்படைகள்:

  1. எந்த நூலும் கடவுள் வாழ்த்தை கொண்டு துவங்கபடவேண்டும். அது பாரதம் பாடிய பெருந்தேவனார் போல பல நூல்களுக்கு இடைச்சொறுகளாக எழுதியது போலல்லாமல், நூலை எழுதியவர் மூலமாக கடவுள் வாழ்த்த்து இடம் பெற்று இருக்கவேண்டும்.  
  1. ஒப்பிட்டால் நான்மறைகளுக்கு முரண்படக்கூடாது
  1. முதல்நூலா வழிநூலா என்று அதிலோ அல்லது வேறு நம்பத்தகுந்த நூலிலோ ஆதாரங்கள் எட்டப்பட வேண்டும். 
  1. கிபி 5 ஆம் நூற்றாண்டுக்கு முன் இயற்றப்பட்டு இருக்க வேண்டும்.
உரிச்சொற் பனுவல்: உரிச்சொல் அல்லது உரிச்சொற் பனுவல் எனப்படுபவை தொல்காப்பியர் அடியொற்றி சொற்களுக்கு விளக்கம் தரும் நூல்கள் அல்லது படைப்புகளைக் குறிக்கும்.  இந்த வகைப் படைப்புகள் நிகண்டுகளுக்கும், தற்கால அகராதிகளுக்கும் முன்னோடியாகக் கருதப்படுகின்றன.
போகர் நிகண்டு
அகத்தியர் நிகண்டு: பஞ்சகாவிய நிகண்டு
அரும்பொருள் விளக்க நிகண்டு: சமீபத்தில் வெளியிடப்பட்ட நிகண்டு.

சேந்தன் திவாகர நிகண்டு: கி.பி. 6 -ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திவாகர முனிவர் என்ற சமண முனிவரால் இயற்றப்பட்டது. (சிலர் 8 ஆம் நூற்றாண்டு என்றும் 10 என்றும் சிலர் கூறுகின்றனர்) ஒன்றே தெய்வம் என்று அறுதியிட்டு கூறும் தமிழர் பண்பாட்டில் பல தெய்வங்களுக்கு உரிய பெயர்கள் ஊன்று என்பது போல துவங்கி இருப்பதும், இலிங்கம் போன்ற சொற்களுக்கு தவறான பொருள் கூறியதன் மூலம், இந்நூல் திட்டமிட்டு அல்லது அறிவு குறைபாட்டால் பல சொற்களுக்கு பொருள் திரிந்த விளக்கத்தை கொடுக்கிறது. மேலும் இந்த நூல் எழுதியவர் யார்? எக்காலத்தை சார்ந்தவர்? என்ன சமயத்தை சார்ந்தவர்? என்பது பற்றிய உறுதியான தகவல்கள் இல்லை. 

பிங்கல நிகண்டு: இது சோழர்கள் ஆண்ட கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் பிங்கல முனிவர் என்பவரால் இயற்றப்பட்டது. இவர் திவாகர முனிவரின்மாணவர்/மகனின் ஆவார். 


அகராதி நிகண்டு: இது கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இரேவண சித்தர் என்பவரால் இயற்றப்பட்டது. இவர் வீர சைவ சமயத்தைச் சார்ந்தவர்.

அகம்பொருள் விளக்க நிகண்டு: கி.பி. 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருமந்தைய தேசிகர் என்பவரால் இயற்றப்பட்டது.

ஆசிரிய நிகண்டு: ஆண்டிப் புலவரால் இயற்றப்பட்டது. நூலாசிரியர் தமிழ்நாட்டில் உள்ள செஞ்சியை அடுத்த ஊற்றங்காலில் பிறந்தவர். இவர் பாவாடை வாத்தியார் என்பவரின் மகன். இந்த நிகண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது ஆகும்.

உரிச்சொல் நிகண்டு: கி.பி.14-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காங்கேயர் என்னும் சைவ சமயத்தைச் சேர்ந்தவர் இயற்றினார்

ஐந்திணை மஞ்சிகன் சிறுநிகண்டு: இந்நூல் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்திணைகளுக்கு உரியத் தாவரங்களைப் பற்றிக் கூறும் சிறு நூல் ஆகும். ஆசிரியர்பெயர், ஐந்திணைச் சார்பு, அளவு, சிறுமை ஆகியவற்றால், இந்நூலுக்கு ஐந்திணை மஞ்சிகன் சிறுநிகண்டு எனப்பெயர் அமைந்தது. மஞ்சிகன் என்பவரால் எழுதப்பட்டது ஆகும். இந்நிகண்டு மாகறல் தி.பொன்னுசாமி முதலியாரால் பதிப்பிக்கப்பட்டுள்ளது.இவர் தமது முன்னுரையில், மாகறல் கார்த்திகேய முதலியாரிடமிருந்து இந்நிகண்டு கிடைத்ததாகக் கூறியுள்ளார்.

கயாதர நிகண்டு: கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கயாதர முனிவர் என்னும் சைவ சமயத்தைச் சேர்ந்தவரால் இயற்றப்பட்டது. இது காலத்தால் நான்காவதாக அறியப்படும் நிகண்டு நூல். இதில் புதிய சொற்களோ விளக்கங்களோ இல்லை, ஆனால் நூல் கட்டளைக் கலித்துறையில் இயற்றபட்டுள்ளது.

சிந்தாமணி நிகண்டு: 1876-இல் யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் வாழ்ந்த ச.வைத்தியலிங்கம்பிள்ளை என்பவரால் இயற்றப்பட்டது.

சூடாமணி நிகண்டு: கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மண்டல புருடர் என்னும் சமணரால் இயற்றப்பட்டது.

நாமதீப நிகண்டு: கி.பி. 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவசுப்பிரமணியக் கவிராயர் என்பவரால் இயற்றப்பட்டது.

பொதிகை நிகண்டு: கி.பி. 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சாமிநாத கவிராயர் என்பவரால் இயற்றப்பட்டது.

நானார்த்த தீபிகை: கி.பி. 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த முத்துசாமிப் பிள்ளை என்பவரால் இயற்றப்பட்டது.

பல்பொருட் சூளாமணி: இது ஒரு தமிழ் நிகண்டு. இதன் ஆசிரியர் ஈசுவர பாரதியார்

பொருள் தொகை நிகண்டு: கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுப்பிரமணிய பாரதியாரால் இயற்றப்பட்டது.

நிகண்டுகளின் ஆண்டுகள் பொறுத்தவரையில் முரண்பட்ட கருத்துகள் கிடைக்கின்றது. ஒரு நூலின் ஆண்டு என்பது ஒப்பீட்டளவில் பெறபபடக்கூடிய ஒன்று, எனவே கிடைக்கப்பெறும் தரவை பொறுத்துதான் ஆண்டை கூறமுடியும் தவிர உண்மையான ஆண்டினை கூறுவது கடினம். எனவே தாதுவா அளவில் பொருந்தும் நிகண்டுதான் சரியானதாக அமையும்.

ஆய்வு தொடர்கிறது . ..

தர்மம் - சொல்லாய்வு

 

“தருமம்” என்னும் சொல் தமிழ்ச்சொல்லா?

தருமம் என்பது தமிழ் சொல் என்றால் சங்க நூல்களில் காண கிடைத்து இருக்க வேண்டும்.

குறள், திருமந்திரம், நாலடியார், நல்வழி, தேவாரம் திருவாசகம், சிவவாக்கியம் உட்பட எந்த தமிழர் மறை நூல்களிலும் தருமம் எண்டும் சொல்லை காண முடியவில்லை.

தமிழ் அகராதி இணையமானது எந்த முதல் வழி நூலிலும் "தருமம்" எனும் சொல் இருப்பதாக கூறவில்லை.

கீதையை வாசித்தால் அதில் தருமம் எனும் சொல் அடிக்கடி வருவதை காணலாம். தருமம் என்றால் நன்மை/நற்செயல் என்று பொருள்.

ஆனால் அது பின்னாளில் மதம் என்ற பொருளிலும், தானம் என்ற பொருளிலும் பொருள்படத் துவங்கியது.

சமயம் கூறிய நல்ல செயல்களை செய்வது தரும காரியம் என்று சொல்லப்பட்டு இருக்கலாம்.

செய்யப்படும் நல்ல செயல்களில் தானமும் அடங்கி இருப்பதாலும், தானம் செய்யப்படுவது தர்மம் செய்யப்படுவதாக பொருள் கொள்ளப்பட்டு தானம் எனும் சொல்லை தர்மம் ஆக்கிரமித்து கொண்டு இருக்கலாம்.

எனவே தர்மம் தமிழ் சொல் அல்ல.

கலதி

 

கலதி

பொருள் 

  • கலதிபெயர்ச்சொல்.
  1. தலை வழுக்கைவிழும் நோய்
  2. கேடு
  3. மூதேவி
  4. தீக்குணமுடையோன்

 

கலதி

kalati   n. cf. khala-tā. 1. Ruin,destruction, disaster; கேடு கலதியம் பிவையுங்காய்ந்த (சீவக. 769). 2. The goddess of misfortune;மூதேவி. (பிங்.) 3. Villain, wicked man; தீக்குணமுடையவன். கள்வன் கடியன் கலதி யிவன் (திருவாச.10, 19). 

அறம் Vs அறன்

அறமும் அறனும் வேறு வேறு என்று கருதுகிறேன்.

அறம்  - ஒழுக்கம்

அறன்  - நற்குணம்

இரண்டும் ஒரே பொருள் போல் தோன்றலாம் ஆனால் அறம் என்பது விதிகள் அதாவது பெயர்ச்சொல் எனலாம். அறன் என்பது இல்வாழ்க்கையில் விதிகளின் படி நடத்தல். அதாவது வினைச்சொல் எனலாம்.

அறம் பறந்து பட்ட தலைப்புகளை உள்ளடக்கியது.

அறன் என்பது இல் வாழ்க்கையை மட்டும் உள்ளடக்கியது.

இதுதான் அகராதியையும் அறநூல்களையும் வாசிக்கும் பொழுது எனக்கு புரிந்த விளக்கங்கள்..

சிரத்தை, பக்தி, பயபக்தி, விசுவாசம்


சிரத்தை

சிரத்தை என்றால் சமகாலத்தில் "கூடுதல் கவனம் செலுத்து" என்கிற பொருளில் பயன்படுத்தப் படுகிறது.

அகராதியில், சிரத்தை என்றால் பத்தி (பக்தி), அன்பு, கவனம், பற்று, முயற்சி, ஈடுபாடு என்று பொருள் கூறப்படுகிறது.

சிரத்தை என்கிற சொல்லை தொல்காப்பிய பகுப்பு விதிப்படி பிரிக்க இயலவில்லை எனவே இது வடமொழியாக இருக்க வாய்ப்பு உண்டு. இயன்றால் விதியை குறிப்பிட்டு பிரித்து பின்னூட்டத்தில் இடவும்.

பக்தி

பக்தியின் தமிழ் சொல் பத்தி. பத்தி என்றால் கடவுள் மீதான நம்பிக்கை மற்றும் அன்பு என்று பொருள். நாம் செய்யும் நல்லறத்துக்கு நமக்கு நன்மை வழங்கும் இறைவன் மீது அந்த நன்மையை எண்ணி நாம் கொள்ளும் அன்பு என்று பொருள் கொள்ளலாம்.

பயபக்தி

பயபக்தி என்பது பயம் + பக்தி ஆகும். இங்கே பயம் என்றால் நாம் செய்யும் புல்லறத்துக்கு நமக்கு தண்டனை வழங்கும் இறைவன் மீது அவன் வழங்கும் துன்பத்தை எண்ணி நாம் கொள்ளும் அச்சம் என்று பொருள் கொள்ளலாம்.

விசுவாசம்

விசுவாசம் என்பது சமஸ்கிருத சொல், தமிழ் சொல் என்று சிலர் கூறுவர் ஆனால் சங்க தமிழ் நூல்களில் இந்த சொல் கிடைக்க பெறவில்லை. இருந்தால் கீழே பதிவிடுங்கள். விசுவாசம் என்ற சொல்லுக்கு பொதுவாக நம்பிக்கை என்று பொருள். ஆன்மீகத்தில் இறைநம்பிக்கை என்று பொருள்.

இந்த அனைத்து சொற்களையும் புரிந்துகொள்ள ஒரு உதாரண வாக்கியம்: "இறைவன் மீது விசுவாசம் கொண்டு பயபக்தி உடையவராக இருந்தால் சிரத்தையுடன் மக்கள் நற்கருமங்களை செய்ய முயல்வர்."

திருமணம் - சொல்லாய்வு

மணம்’ என்றால் ‘கூடுதல்’ என்பது பொருள். இதன் வேர்ச்சொல் ‘மண்’ என்றும், மண்ணுதல் என்பது கழுவுதல், தொங்குதல், கலத்தல், கூடுதல், அழகு பெறுதல், மணத்தல், இணைதல் என பல பொருளும் வழங்கப் பெறுவதாக சொற்பொருள் அகராதிகள் விளக்கம் தருகின்றன. அடிப்படையில் கலத்தல் கூடுதல், போன்ற சொற்கள் யாவும் ‘இணைதல்’ என்ற பொதுத்தன்மையான சொல் விளக்கத்தையே பெறுகின்றன. ஆக, இணைதல் என்பதன் அடிப்படையிலேயே ‘மணம்’ என்ற சொல்லாட்சி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக, “செயற்கைப் பொருளை ஆக்கமொடு கூறல்” (தொல். நூ.) என்ற கருத்திற்கு ஏற்ப காரணத்தின் அடிப்படையில் காரணப் பெயராக இச்சொல்லைக் கொள்ளலாம். மங்கல நிகழ்வாதலின் ‘திரு’ எனும் அடையைச் சேர்த்து ‘திருமணம்’ என்றனர் எனக் கருதலாம்.

‘மண்ணைப் போல பொறுமை, அமைதி, எதையும் தாங்கும் வலிமை இவற்றை மணமக்கள் பெறுதல் வேண்டும் என்பதே அடிப்படை என்று கூறுவோரும் உளர். சிறப்பான, மேன்மையான ஒன்றைக் குறிப்பிட ‘திரு’ என்ற அடைகொடுத்து அழைப்பது தமிழர் மரபாதலின் இல்லற வாழ்வில் அடிப்படையாக அமையும் ‘மணம்’இ திருமணம் என்று அழைக்கப்படுவதாக விக்கி பீடியாவில் திருமணம் என்ற பகுதியின் சொல் விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

இன்றைய சொல் வழக்கில் உள்ள ‘கல்யாணம்’ எனும் சொல் சங்க காலத்தில் இல்லை. அதற்கு பின் நீதி இலக்கியத்தில் ஒன்றான ஆசாரக் கோவையிலும், நாலடியாரிலும் ‘கல்யாணம்’ என்ற சொல் வழங்கப்பட்டிருக்கிறது.

கடி மணம்’ என்ற சொல் இருக்கின்றது. இதில், ‘கடி - நீக்குதல்; காப்பு என்பர். கடி - உரிச்சொல் ஆகும். இங்கு கன்னித்தன்மை நீங்கி கற்பு வாழ்வு மேற்கொள்ளும் நிலையிலும் ஆண், பெண் இருவரும் இணைந்து ஒருவருக்கொருவர் பாதுகாப்பாக அமையும் இல்லற வாழ்வைத் துவங்குதல் என்ற வகையிலும் ‘கடி’ என்ற சொல் திருமணத்தைக் குறித்தது என்பர்.

மணம் என்பது ஓர் ஆணும், பெண்ணும் இணைந்து இல்லறம் மேற்கொள்ள நடத்தப்பெறும் ஒரு வாழ்க்கை ஒப்பந்தம.; மனிதனால் மனித சமுதாயத்தின் நலன் கருதிப் படைத்துக் கொள்ளப்பட்டதோர் ஒழுக்க முறை. திருமணம் என்பது மனித இனத்தைப் பொறுத்தவரை ஒரு உலகளாவிய பொதுமையாக இருந்த போதிலும் வெவ்வேறு பண்பாட்டுக் குழுக்களுக்கிடையே திருமணம் தொடர்பில் வெவ்வேறு விதமான விதிகளும், நெறிமுறைகளும் காணப்படுகின்றன. திருமணம் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண், பெண் உறவு நிலையைக் குறிக்கிறது. அதோடு திருமணம் என்பது ஒரு புதிய சந்ததி தோன்றுவதற்குரிய ஒருவித பிணைப்பு ஆகும்” என்று விளக்கிச் செல்கிறது.

வித்தகம் - சொல்லாய்வு

வித்தகம்
vittakam n. vitta-ka. 
1.Knowledge, wisdom; ஞானம். 
2. Learning;கல்வி. (அரு. நி.) 
3. See வித்தம்¹, 3. (பிங்.) 
4.A hand-pose. See சின்முத்திரை. வித்தகந் தரித்தசெங்கை விமலையை (கம்பரா. காப்பு.)

வித்தகம்
vittakam n. vidagdha. 
1.Skill, ability; சாமர்த்தியம். வித்தகமும் விதிவசமும்வெவ்வேறே புறங்கிடப்ப (கம்பரா. கார்முக. 19). 
2.Accomplishment; perfection; திருத்தம். வித்தகத்தும்பை விளைத்ததால் (பரிபா. 9, 68). 
3. Wonder;அதிசயம். (நாமதீப. 643.) 
4. Greatness; பெருமை.(அரு. நி.) 
5. Goodness; நன்மை. (யாழ். அக.)
6. Regularity, as of form; symmetry; வடிவின்செம்மை. நூல் புடைத்தாற் போற்கிடந்த வித்தகஞ்சேர் வரிகள் (சீவக. 1044). 
7. cf. vyakta. Fine,artistic work; minute workmanship; சிற்பம் முதலிய சிறந்த கைத்தொழில். குத்துமுளை செறித்தவித்தக விதானத்து (பெருங். இலாவாண. 5, 24).

வித்தகம்
vittakam s. knowledge, wisdom, ஞானம்.
வித்தகன், a wise man.


வித்தகம்
vittakam
s. Knowledge, ஞானம்.
வித்தகர், s. Artificers, கம்மாளர். 
2. Messengers, தூதர். (சது.)
வித்தகன், s. A knowing one, ஞானி. 
2. B'hairava, வைரவன். (சது.)

ஊழி தோறூழி - சொல்லாய்வு

ஊழி
(பெ) 1. நெடுங்காலம், 
2. வாழ்நாள், 
3. யுகம், 
4. விதி 
 
ūḻi n. ஊழ்²-. 
1. Time of universaldeluge and destruction of all things, end of theworld; பிரளயத்தால் உலகம் முடியுங் காலம் (சீவக.1157.) 
2. Aeon; யுகம் பண்டை யூழியிற் பார்மலிவுற்றதே (சீவக. 2581). 
3. Very long time; நெடுங்காலம் ஊழிவாழ்கென்று (பு. வெ 8, 7). 
4. Life-time; வாழ்நாள் அன்ன வாக நின்னூழி (புறநா. 135). 
5. [M. ūḻi.] World; உலகம் ஊழியேழான வொருவா போற்றி (தேவா. 1160, 8). 
6. Fate; விதி நல்லூழிச் செல்வம்போல் (கலித். 130). 
7. Regularorder; முறைமை தீந்தேனூழி வாய்க்கொண்ட தொக்கும் பாடலும் (சீவக. 2974). 
 
 1. s. a long period of time, eternity, நெடுங்காலம்; 
2. the end of the world, யுகமுடிவு; 
3. a demon, பிசாசம்; 
4. world, உலகம்; 
5. fate, விதி. 
 
1. நீடூழி வாழ்க, may you live long.
2. உனக்கூழிவர, may you die of a pestilence.
3. ஊழிக்காய்ச்சல், ஊழிநோய், pestilence, an epidemic supposed to be produced by a malignant demon. 
 
1. ஊழிக்காற்று, ஊழிக்கால், a destructive wind that prevails at the end of the world; 
2. a demon that causes pestilence. ஊழித்தீ, submarine fire, வடவை.


1. s. The periodical termination of a great age, or the time of the univer sal deluge and destruction of all things, the end of the world, உகமுடிவு. 
2. A very long time, நெடுங்காலம். 
3. (p.) Life time, உறைகாலம். 
4. The earth, பூமி. ஊழிபெயரினுங்கலங்காருரவோர். Though the world should come to an end, the sages will not deviate from their purposes.  

 

1. ஊழியுள்ளளவும். Through all eternity, lit. to the end of an age.  
உனக்கூழிவர. may you die--an impre cation.  
2. நீடுழிவாழ்க. May you live long.
3. ஊழிகாலம், s. A very long time, ages without number, நெடுங்காலம். (சத. 2.)
4. ஊழிக்காய்ச்சல், s. An epidemic fever, or pestilence supposed to be produced by a malignant demon, தொத்து சுரம்.
5. ஊழிக்காற்று, s. A destructive wind that prevails at the end of the world, யுகமுடிவிலுண்டாகுங்காற்று. 
6. A de mon, or bad vapor that causes epidemic diseases, pestilence, &c., விஷக்காற்று.  
7. ஊழித்தீ, s. The deluge, or sub marine fire, usually described as a mare dwelling in the sea and breath ing fire, by which, at the end of every quadruple age, the fire is consumed, வட வைத்தீ. 
8. ஊழிநீர், s. The water which pre vails at the last deluge, described as rain poured down from the seven species of clouds united, also as the water of the circumfluent sea, உலகமுடிவிலுண்டாகுஞ்ச லப்பிரளயம்.
9. ஊழிநோய், s. A pestilence in duced by a malignant demon, தொத்து வியாதி.
10. ஊழியூழிகாலம், s. From age to age, eternity

 

ஊழி தோறூழி - இவ்வாறு சில பொழிப்புரைகள் கொடுக்கப்பட்டுள்ளது - சரியா பிழையா?  

பாடல் #1458: ஐந்தாம் தந்திரம் – 7. யோகம் (இறைவனை அடைவதற்கு அசையாத மனதுடன் செய்வதே யோகம் ஆகும்

ஊழி தோறூழி யுணர்ந்தவர்க் கல்லது
யூழி தோறூழி யுணரவுந் தானொட்டா
ராழி யமரு மரியய னென்றுளோ
ரூழி முயன்று மோருச்சியுள் ளானே. 
 
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஊழி தொறூழி யுணரநதவரக கலலது
யூழி தொறூழி யுணரவுந தானொடடா
ராழி யமரு மரியய னெனறுளொ
ரூழி முயனறு மொருசசியுள ளானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஊழி தோறும் ஊழி உணர்ந்தவர்க்கு அல்லது
ஊழி தோறும் ஊழி உணரவும் தான் ஒட்டார்
ஆழி அமரும் அரி அயன் என்று உளோர்
ஊழி முயன்றும் ஓர் உச்சி உள்ளானே.

பதப்பொருள்
ஊழி (ஊழிக்காலம்) தோறும் (ஒவ்வொன்றிலும்) ஊழி (ஊழியாக இருந்து அனைத்தையும் அழித்து மீண்டும் உருவாக்குகின்ற இறைவனை) உணர்ந்தவர்க்கு (யோகத்தின் வழியால் சென்று தமக்குள் உணர்ந்தவர்களை) அல்லது (தவிர வேறு யாராலும் உணர இயலாது) ஊழி (ஊழிக்காலம்) தோறும் (ஒவ்வொன்றிலும்) ஊழி (ஊழியாக இருந்து அனைத்தையும் அழித்து மீண்டும் உருவாக்குகின்ற இறைவனை) உணரவும் (தமக்குள் உணர்ந்து கொண்ட யோகியர்கள்) தான் (அந்த ஊழிக்காலத்தோடு தானும்) ஒட்டார் (ஒட்டாமல் விலகி இறைவனை மட்டுமே சார்ந்து இருப்பார்கள்) ஆழி (பாற் கடலில்) அமரும் (பள்ளி கொண்டு அமர்ந்து இருக்கும்) அரி (திருமால்) அயன் (அவரது தொப்புள் கொடியில் இருக்கும் தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மன்) என்று (என்று இருக்கின்ற) உளோர் (தெய்வங்களும் ஊழிக்காலத்தோடு ஒட்டாமல் இருக்கின்றார்கள்) ஊழி (ஊழிக்காலம்) முயன்றும் (எவ்வளவுதான் இவர்களை அழிக்க முயற்சி செய்தாலும்) ஓர் (அதனால் அழிக்க முடியாத ஒரு மாபெரும்) உச்சி (உயரத்தில் இருந்து அவர்களை பாதுகாக்கின்ற அரனாக) உள்ளானே (இறைவன் இருக்கின்றான்).

விளக்கம்: ஊழிக்காலம் ஒவ்வொன்றிலும் ஊழியாக இருந்து அனைத்தையும் அழித்து மீண்டும் உருவாக்குகின்ற இறைவனை யோகத்தின் வழியால் சென்று தமக்குள் உணர்ந்தவர்களை தவிர வேறு யாராலும் உணர இயலாது. ஊழிக்காலம் ஒவ்வொன்றிலும் ஊழியாக இருந்து அனைத்தையும் அழித்து மீண்டும் உருவாக்குகின்ற இறைவனை தமக்குள் உணர்ந்து கொண்ட யோகியர்கள் அந்த ஊழிக்காலத்தோடு தானும் ஒட்டாமல் விலகி இறைவனை மட்டுமே சார்ந்து இருப்பார்கள். பாற் கடலில் பள்ளி கொண்டு அமர்ந்து இருக்கும் திருமால் அவரது தொப்புள் கொடியில் இருக்கும் தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மன் என்று இருக்கின்ற தெய்வங்களும் ஊழிக்காலத்தோடு ஒட்டாமல் இருக்கின்றார்கள். ஊழிக்காலம் எவ்வளவுதான் இவர்களை அழிக்க முயற்சி செய்தாலும் அதனால் அழிக்க முடியாத ஒரு மாபெரும் உயரத்தில் இருந்து அவர்களை பாதுகாக்கின்ற அரனாக இறைவன் இருக்கின்றான்.

கருத்து: பாடல் #1457 இல் உள்ளபடி யோகம் செய்து தமக்குள் இறைவனை உணர்ந்து அவனை மட்டுமே சார்ந்து இருக்கின்றவர்களை ஊழிக்காலம் எவ்வளவு முயன்று பார்த்தாலும் அழிக்க முடியாத அளவு பாதுகாக்கின்றான் இறைவன். 
 
ஒன்றா வுலகனைத்து மானார் தாமே
ஊழிதோ றூழி உயர்ந்தார் தாமே
நின்றாகி யெங்கும் நிமிர்ந்தார் தாமே
நீர்வளிதீ யாகாச மானார் தாமே
கொன்றாடுங் கூற்றை யுதைத்தார் தாமே
கோலப் பழனை உடையார் தாமே
சென்றாடு தீர்த்தங்க ளானார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே 
 
பொருள்: தாமே கலந்து உலகங்கள் யாவும் ஆனவரும், ஊழிகள் தோறும் பல உயிர்களை வீடேற்றி உயர்ந்தவரும், ஒருநிலையே நின்று எல்லா இடங்கட்கும் உரியவராய்ப் பரந்தவரும், நீரும் வளியும் தீயும் ஆகாசமுமாகி நின்றவரும், கொன்று திரிகின்ற கூற்றுவனை உதைத்தவரும், அழகிய பழையனூரைத் தமக்குரியதாக உடையவரும், தேடிச்சென்று மூழ்கும் தீர்த்தங்கள் ஆனவரும் திருவாலங்காட்டுறையும் செல்வரே ஆவார்.

பூசனை - சொல்லாய்வு

பூசனை என்பது அன்றாட வழிபாடு எனப் பொருள்படும்.

காமக்கிழத்தியர் - சொல்லாய்வு

காமக்கிழத்தியர் என்பவர் சங்க காலச் சமூகத்தில் தலைவன், காதலால் தலைவியைத் திருமணம் செய்து கொண்ட பின்பும் காமம் காரணமாக உரிமை கொடுத்து மணந்து கொள்ளப்பட்ட பெண்கள் ஆவர் . "கிழமை" என்பது உரிமை என்ற பொருள்படும். 

இல்லக்கிழத்தியர் + காமக்கிழத்தியர் + பரத்தையர் = பண்டைச் சமூகம்

அரன் - சொல்லாய்வு

 அரன்’ தீவினைகளை அரிப்பவன்

அரன் என்னும் பெயர் அடியார் வினைகளை அரித்தல் அல்லது அராவுதல் பற்றி வந்தது.
சொல் பொருள் விளக்கம்

(1) ‘அரன்’ தீவினைகளை அரிப்பவன். இச்சொல் தமிழ் வடமொழி இரண்டற்கும் பொது. (திருவாசக விரிவுரை. மறைமலை. 92.)

(2) அரன் என்னும் பெயர் அடியார் வினைகளை அரித்தல் அல்லது அராவுதல் பற்றி வந்தது. தமிழில் இருந்து வட மொழிக்கட் சென்ற சொற்களுள் இதுவும் ஒன்று. (திருவாசக விரிவுரை. மறைமலை. 390.)

பகவர் - சொல்லாய்வு

 முக்கோல் பகவர் என்பவர்கள் ‘உள்ளம், மெய், நா’ ஆகியவற்றை அடக்கியவர்கள்.  கலித்தொகை 126 

 முக்கோல் கொள் அந்தணர், முல்லைப்பாட்டு 38 

கல் தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான் முக்கோல்.  நச்சினார்க்கினியர் உரை – ‘அரி, அயன், அரன் என்னும் மூவரும் ஒருவர் என்று சொல்லுதல் தன்னிடத்தே அமைந்த முக்கோல்’.

பகவர் என்கிற சொல்  - அடியார், மனிதர் என்கிற பொருளில் இவைகளில் கையாளப் பட்டுள்ளது 

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு - குறள் 1 

ஆனால் பகவர் மற்றும் பகவன் இரண்டும் ஒரே பொருளுடையவை. இரண்டும் இறை அடியாரை அல்லது மனிதரை குறிக்கும் சொல். 


ஸ்ரீபகவானுவாச் |
காலோத்யஸ்மி லோகக்ஷயகிருத்ப்ரவ்ருத்தோ
லோகான்ஸமாஹர்துமிஹ ப்ரவ்ருத்த: |
நோதேபி த்வாம் ந பவிஷ்யந்தி ஸர்வே
யேயவஸ்திதா: ப்ரத்யநீகேஷு யோதா: || 32||

ஶ்ரீ-பகவான் உவாச்சா - திரு பகவான் கூறினார் ; கலாஹ் - நேரம் ; அஸ்மி - நான் ; லோக-க்ஷய-கிருத் - உலகங்களின் அழிவின் ஆதாரம் ; ப்ரவ்ரித்த : - வலிமைமிக்க ; லோகன் - உலகங்கள் ; சமாஹர்தும் - அழித்தல் ; இஹ - இந்த உலகம் ; ப்ரவ்ரித்த: - பங்கேற்பு ; றிதே - இல்லாமல் ; அபி - கூட ; த்வம் - நீங்கள் ; ந பவிஷ்யந்தி - இல்லாமல் போகும் ; சேர் - அனைத்து ; நீ - யார் ; அவஸ்திதாล - வரிசையாக ; ப்ரதி-அனிகேஷு - எதிர்க்கும் படையில் ; யோதா - போர்வீரர்கள்

BG 11.32 : உன்னத பகவான் கூறினார்: நான் வலிமைமிக்க நேரம், உலகங்களை அழிக்க வரும் அழிவின் ஊற்று. உங்கள் பங்கேற்பு இல்லாவிட்டாலும், எதிரணியின் படையில் அணிவகுத்து நிற்கும் வீரர்கள் இல்லாமல் போய்விடுவார்கள்.

அழிதகவு - சொல்லாய்வு

அகநானூற்றில் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிகண்ணனார் பாடல் ‘அழி தகவு’ எனும் சொல்லை ஆண்டுள்ளது. அழிதகவு என்றால் வருந்துதல் என்று பொருள் சொல்கிறார் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார். 

அகநானூற்றில் ஓரம்போகியார் பாடல் ‘தற்தகவு’ என்ற சொல் தருகிறது. தன் தகவு என்பதே புணர்ச்சி விதிகளின்படி தற்தகவு ஆகிறது. தற்தகவு என்றால் தன் தகுதி என்று பொருள். தன் தகுதி என்ன என்று அறியாமல், அல்லது அபரிமிதமான மதிப்பீடு வைத்துக்கொண்டு சமூகப் பெருந்திரு என்று தம்மை நினைத்துக் கொள்பவர்கள் மக்களை மந்தை என்றெண்ணி அறிவுரையாக அருளிக் கொண்டிருக்கிறார்கள். 

ஆனால் ஐங்குறுநூறு நூலில் முல்லைத்திணை பாடும் பேயனார், பாணன் பத்து முதற்பாடலில் “என் அவர் தகவே?” என்று கேட்கிறார். அவனது தகுதி என்ன என்பது பொருள். அடியாட்களும் குண்டர்களும் தரகர்களுமே இன்றைய தகவுகள்.

கலித்தொகையில் மருதக்கலி பாடிய மருதன் இளநாகனார், காமக் கிழத்தி கூற்றாகக் கூறுகிறார், ‘தாழ்ந்தாய் போல் வந்து தகவில செய்யாது’ என்று. மனக்குறை உடையவன் போல இங்கு வந்து தகுதி இல்லாச் செயல்களைச் செய்யாதே என்பது பாடல்வரியின் பொருள்.

சத்தி - சொல்லாய்வு

சக்திஎன்கிற வார்த்தை தமிழ் மொழி அல்ல.

சத்தியை சக்தி என்று மாற்றி பொருள் கூறப் பட்டு வருகிறது அதுவும் பிழை

சத்தி: catti n. chardi. 1. Vomiting;வாந்திசெய்கை. (பிங்.) 2. Neem. See வேம்பு (மலை.) 3. A small water-melon. See கொம்மட்டி (மலை.) 4. Wild snake-gourd. See பேய்ப்புடல்

catti n. šakti. 1. Ability, power,strength, energy, prowess; ஆற்றல் (பிங்.) 2.Regal power of three kinds, viz., pirapu-catti,mantira-catti, uṟcāka-catti; பிரபுசத்தி மந்திரசத்தி உற்சாகசத்தியாகிய மூவகை அரசராற்றல்கள். 3.The number 3; மூன்று (தைலவ. தைல. 113.) 4.Banner, large flag; பெருங்கொடி (பிங்.) 5. Pit in 
 

ஆற்றல் தமிழ் வார்த்தை - தொல்காப்பியத்தில் இடம் பெற்று உள்ளது

ஆற்றலு மவள்வயி னான (தொல். பொ 129).

ஆடி - சொல்லாய்வு

 ஆடி என்பதே அன்றைக்கு கண்ணாடியைக் குறித்த பொதுப் பெயராகும். பிற்காலத்தில் கண்ணில் அணியப்படும் ஆடியை 'கண்ணாடி' என்றழைக்க அதுவே பொதுப் பெயராகவும் நிலை பெற்று விட்டது.

ஒளியைப் பிரதிபலிக்கும் பரப்பு 'ஆடி' எனப்பட்டது. (பெயர்க்காரணம் கீழே…)

நம் நாட்டில் தொடக்கத்தில் உலோகத் தகடுகளைத் தீயிலிட்டு ஒளியபக்குவப்படுத்தி ஆடிகளாகப் பயன்படுத்தி வந்தனர். இந் நிலைக்கண்ணாடியை அக்காலத்தில் படிமக்கலம், முகரம் என்றும் அழைப்பர்.

'சூத்திரம்தானே ஆடி நிழலின் அறியத் தோன்றி
நாடுதல் இன்றி பொருள் நனி விளங்க
யாப்பினுள் தோன்ற யாத்து அமைப்பதுவே' - 
தொல்காப்பியம்.

  • அடு = சுடு, (தீயிடு, பற்றவை, எரி).
    அடுதல் = சுடுதல்,தீயிலிடுதல்.
    அடு > அடுப்பு.
  • அட்டுதல் = சுடுதல்.
    அட்டப்பட்டது ஆடி!
  • அட்டு > ஆடு + இ = ஆடி.
    ஆடி > சாடி ( சுடப்பட்ட கலம்).
  • அடு > அட்டு > அட்டு + இ = அட்டி > சட்டி ( அடுப்பில் வைக்கப்படும் கலம்).

பொன்னி னாடியிற் பொருந்துபு நிற்போர் - மணிமேகலை.

கண்ணில் அணியக்கூடிய தொடக்க கால கண்ணாடிகள் கைப்பிடிகள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருந்தது. ஒன்று அல்லது இரண்டு குவிந்த வில்லைகளுடன் (லென்ஸ்) , உலோக அல்லது எலும்பு விளிம்புகளில் மூடப்பட்டிருந்ததாக அவை இருந்தன.பின்னர் காதுகளைச் சுற்றிலும் பட்டு நூல் கொண்டு பயன்படுத்தினர்.

முதலில் தோன்றிய கண்ணாடிகள் கைப்பிடிகளோடு கைகளைச் சார்ந்திருந்தமையால், பின்னர் வந்த மூக்கு மீது அமர்ந்தவைக்கு மூக்குக் கண்ணாடிகள் எனப் பெயரிட்டனர்.

துக்கடா : இன்றைய சிலிகான் (Silicone) நிலைக்கண்ணாடி ஒரு சமதள ஆடி வகை சார்ந்தது. பிரதிபலிக்கும் பரப்பு கோளமாக இருந்தால் கோள ஆடி என்று பெயர் . அவை குழியாடி, குவியாடி என இரண்டு வகைப்படும்.

முதன் முதலில் நிலைக்கண்ணாடியில் தன் பிம்பத்தைக் கண்டு மனிதன் 'மிரண்டு' போனதால் இடப்பட்ட 'மிரர்' (Mirror) என்ற ஆங்கிலச் சொல்
தமிழ் மூலம் தந்த ஒன்று!

* மிரள் > மிரர் ( MIRROR). மிரள வைப்பது மிரர் ஆனது. மிரண்டு போய் 'மிரர்' என்றனர்.
ஒத்த திரிபுகள் : அரள் > 
HORROR. அரள வைப்பதைக் கண்டு அரண்டு போய் அரர் / ஹாரர் என்றனர்.

வணக்கவழிபாடும் பயபக்தியும்.

 தமிழில் வணக்கவழிபாடு, பயபக்தி என்று இரு சொற்களை கூறுவார்.

இவைகள் இரு சொற்கள் இணைந்த ஒருசொல்.

வணக்கம் - வணங்குதல், தொழுதல் 

வழிபாடு - வழிபடுதல், உபதேசத்தை பின்பற்றுதல் 

பயம் - அஞ்சுதல், விளைவு பற்றி கவலை கொள்ளுதல் 

பக்தி - அன்பு செய்தல், அன்பு செய்யப் படுபவர் விரும்பியவற்றை செய்து தருதல் 

இரண்டையும் ஒன்றாக இணைத்து ஒரு சொல்லாக அடையாள படுத்துவதற்கு ஓர் நோக்கமுண்டு.

கடவுளை வணங்குவது மட்டுமல்லால் அவன் மறை நூல்கள் சொல்லும் நெறிகளை பின்பற்றுபவனாக இருக்கவேண்டும். இரண்டும் ஒரு சேர இருந்தால் தான் அவன் உண்மையிலேயே கடவுளை வாங்குபவனாவான்.

கடவுளின் மீதும் அன்பும் இருக்கவேண்டும், பயமும் இருக்கவேண்டும். இரண்டில் ஒன்று இல்லாது போனாலும் கடவுளை நம்புபவனின் குணம் முழுமை பெறாது, அவன் அடுத்தவருக்கு தீங்கு செய்ய எண்ணுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை. 

தெய்வம் சுட்டும் பெயர்கள் - சொல்லாய்வு

மனிதன் கண்களால் கண்டறிய முடியாத பொருட்களின் வார்த்தைகளின் வரையறைக்கும் நாம் சார்ந்தது இருக்க வேண்டியது  மறைநூல்களாகும். மறைநூல்கள் இல்லையென்றால் அது தொடர்பான சொல்லே நமக்கு கிடைத்து இருக்காது. எனவே வார்த்தையை அதிலிருந்து எடுத்துக் கொண்டு வரையறையை கற்பனை செய்ய முடியாது. 

 தெய்வம் 

தெய்வஞ் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும்
இவ்வென அறியும் அந்தந் தமக்கிலவே
உயர்திணை மருங்கிற் பால்பிரிந் திசைக்கும். - (தொல்காப்பியம்)

கருத்து: தெய்வம் - பாலினமற்றது ஆனால் உயர்திணை 

எங்கள் தெய்வம் உங்கள் தெய்வம் என்றிரண்டு பேதமோ
உங்கள் பேதம் அன்றியே உண்மை இரண்டும் இல்லையே. - (சிவவாக்கியம்-224)

கருத்து: தெய்வம் ஒன்றே ஒன்று தான், பன்மையில் இல்லை 

தன்னில் பிறிதில்லை தெய்வம் நெறி நிற்பில்
ஒன்றானும் தான்நெறி நில்லானேல் - தன்னை
இறைவனாச் செய்வானும் தானேதான் தன்னைச்
சிறுவனாச் செய்வானும் தான். - அறநெறிச்சாரம் 77

விளக்கவுரை ஒருவன் நல்ல நெறியில் நிற்பானாயின் அவனை விட வேறான வேறு ஒரு தெய்வம் இல்லை. அவன் அவ்வித நெறியில் நில்லாது போனால் அவனின் தாழ்ந்தது வேறு ஒன்றும் இல்லை. தன்னைப் பிறர்க்குத் தலைவனாகச் செய்து கொள்பவனும் அவனே ஆவான். தன்னை மற்றவர்க்குத் தாழ்ந்தவனாகச் செய்துகொள்பவனும் தானே ஆவான்

கருத்து: தெய்வம் ஒருவனே, அவன் தன்னை மக்களில் சிலரை தலைவனாக ஏற்க செய்கிறான், மற்றும் சிலரை அவனை பொருட்படுத்தாத அளவுக்கு சிறுவனாகவும் தானே காட்டிக் கொள்கிறான்.    

இறை

தெய்வம் கண்ணுக்குத் தெரியாத இறைவன் - திருக்குறள் 5, 10

தன்னில் பிறிதில்லை தெய்வம் நெறி நிற்பில்
ஒன்றானும் தான்நெறி நில்லானேல் - தன்னை
இறைவனாச் செய்வானும் தானேதான் தன்னைச்
சிறுவனாச் செய்வானும் தான். - அறநெறிச்சாரம் 77

விளக்கவுரை ஒருவன் நல்ல நெறியில் நிற்பானாயின் அவனை விட வேறான வேறு ஒரு தெய்வம் இல்லை. அவன் அவ்வித நெறியில் நில்லாது போனால் அவனின் தாழ்ந்தது வேறு ஒன்றும் இல்லை. தன்னைப் பிறர்க்குத் தலைவனாகச் செய்து கொள்பவனும் அவனே ஆவான். தன்னை மற்றவர்க்குத் தாழ்ந்தவனாகச் செய்துகொள்பவனும் தானே ஆவான் 

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு - (குறள் 5)

பொருள்இருள் சேர் இருவினையும் சேரா - மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு - இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். (குறள் 10)

பொருள்: இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.

அரசன் கண்ணுக்குத் தெரியும் இறைவன் - திருக்குறள் அதிகாரம் 39, 432, 436, 564, 778

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும் - (குறள் 388)

பொருள்: நீதிமுறை செய்து குடிமக்களைக்‌ காப்பாற்றும்‌ மன்னவன்‌, மக்களுக்குத்‌ தலைவன்‌ என்று தனியே கருதி மதிக்கப்படுவான்‌.

இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு - (குறள் 432)

பொருள்: பொருள்‌ கொடாத தன்மையும்‌, மாட்சியில்லாத மானமும்‌, தகுதியற்ற மகிழ்ச்சியும்‌ தலைவனாக இருப்பவனுக்குக்‌ குற்றங்களாகும்‌.

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு - 436

பொருள்: முன்னே தன்‌ குற்றத்தைக்‌ கண்டு நீக்கிப்‌ பிறகு பிறருடைய குற்றத்தை ஆராயவல்லவனானால்‌ தலைவனுக்கு என்ன குற்றமாகும்‌?

இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும் - 564

பொருள்: நம்‌ அரசன்‌ கடுமையானவன்‌ என்று குடிகளால்‌ கூறப்படும்‌ கொடுஞ்‌ சொல்லை உடைய வேந்தன்‌, தன்‌ ஆயுள்‌ குறைந்து விரைவில்‌ கெடுவான்‌

உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர்குன்றல் இலர். - குறள் 778

பொருள்: போர்வந்தால் உயிரின் பொருட்டு அஞ்சாமல் போர் செய்யத் துணியும் வீரர், அரசன் சினந்தாலும் தம்முடைய சிறப்புக் குன்றாதவர் ஆவர்.

கருத்து: தெய்வம் ஒருவனே, ஆனால் இறைவன் (அரசன்/தலைவன்) ஒருவன் அல்ல என்பது இந்த பாடல் மூலம் புலப்படுகிறது. தெய்வத்தை இறைவனாக வைக்க முடியும், ஆனால் இறைவனெல்லாம் தெய்வமாக முடியாது

மேலும் இறை என்பதற்கு பல்வேறு பொருள் உள்ளது, 

 அரசனாகிய இறைவனுக்கு நாம் தரும் வரி இறை எனப்படும். அவன் அதனை நமக்கு இறைப்பதனாலும் அதற்குப் பெயர் இறை: இறைவற்கு இறை ஒருங்கு ஈவது நாடு - திருக்குறள் 733

இறை என்னும் சொல் தோளைக் குறிக்கும். நமக்குத் தோள் கொடுப்பவனை இறைவன் என்கிறோம்: இறை இறவா நின்ற வளை - திருக்குறள் 1157

  • காப்பாற்றுதல் : இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை முறை காக்கும் முட்டாச் செயின் 547
  • முறைசெய்து காப்பாற்றுதல் : இறையென்று வைக்கப் படும் - குறள் 388
  • குற்றத்துக்குத் தண்டனை வழங்குதல் : ஓர்ந்து கண்ணோடாது யார்மாட்டும் இறை புரிந்து - திருக்குறள் 541

போன்ற செயல்களைப் புரிந்து தலைவனாக விளங்கிவதால் கடவுளும், அரசனும் இறைவன் எனப் போற்றப்படுகின்றனர்.

இறைவனைத் தலை தாழ்த்தி வணங்குகிறோம். இப்படித் தலை தாழ்த்துவதை இறைஞ்சுதல் என்கிறோம். (இறை – இறைஞ்சு) -  நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் - திருக்குறள் 1093

கடவுள்  

கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன முன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே. (தொல். புறத்திணைவியல்: 85)
      • வழிபடும் கடவுளின் ஏற்றம் கூறுவது கொடிநிலை
      • பெரும்பொருள் என்பது கந்தழி-யின் பொருள் 
      • வள்ளண்மையைக் கூறுவது வள்ளி
(பொருள்) கொடிநிலை கந்தழி வள்ளி முதலியனவற்றில் குற்றம் நீங்கி சிறப்பாக கடவுள் வாழ்த்தொடு பொருந்தி வரும்.

ஆயிரம் விரித்த கைம் மாய மள்ள!
பதினாயிரம் கை முதுமொழி முதல்வ!
நூறாயிரம் கை ஆறு அறி கடவுள்!
அனைத்தும் அல்ல பல அடுக்கல் ஆம்பல்
இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை! - 




சாமி 


ஆண்டவர் 


கர்த்தர் 


தேவன்