சிரத்தை, பக்தி, பயபக்தி, விசுவாசம்


சிரத்தை

சிரத்தை என்றால் சமகாலத்தில் "கூடுதல் கவனம் செலுத்து" என்கிற பொருளில் பயன்படுத்தப் படுகிறது.

அகராதியில், சிரத்தை என்றால் பத்தி (பக்தி), அன்பு, கவனம், பற்று, முயற்சி, ஈடுபாடு என்று பொருள் கூறப்படுகிறது.

சிரத்தை என்கிற சொல்லை தொல்காப்பிய பகுப்பு விதிப்படி பிரிக்க இயலவில்லை எனவே இது வடமொழியாக இருக்க வாய்ப்பு உண்டு. இயன்றால் விதியை குறிப்பிட்டு பிரித்து பின்னூட்டத்தில் இடவும்.

பக்தி

பக்தியின் தமிழ் சொல் பத்தி. பத்தி என்றால் கடவுள் மீதான நம்பிக்கை மற்றும் அன்பு என்று பொருள். நாம் செய்யும் நல்லறத்துக்கு நமக்கு நன்மை வழங்கும் இறைவன் மீது அந்த நன்மையை எண்ணி நாம் கொள்ளும் அன்பு என்று பொருள் கொள்ளலாம்.

பயபக்தி

பயபக்தி என்பது பயம் + பக்தி ஆகும். இங்கே பயம் என்றால் நாம் செய்யும் புல்லறத்துக்கு நமக்கு தண்டனை வழங்கும் இறைவன் மீது அவன் வழங்கும் துன்பத்தை எண்ணி நாம் கொள்ளும் அச்சம் என்று பொருள் கொள்ளலாம்.

விசுவாசம்

விசுவாசம் என்பது சமஸ்கிருத சொல், தமிழ் சொல் என்று சிலர் கூறுவர் ஆனால் சங்க தமிழ் நூல்களில் இந்த சொல் கிடைக்க பெறவில்லை. இருந்தால் கீழே பதிவிடுங்கள். விசுவாசம் என்ற சொல்லுக்கு பொதுவாக நம்பிக்கை என்று பொருள். ஆன்மீகத்தில் இறைநம்பிக்கை என்று பொருள்.

இந்த அனைத்து சொற்களையும் புரிந்துகொள்ள ஒரு உதாரண வாக்கியம்: "இறைவன் மீது விசுவாசம் கொண்டு பயபக்தி உடையவராக இருந்தால் சிரத்தையுடன் மக்கள் நற்கருமங்களை செய்ய முயல்வர்."

1 கருத்து:

  1. அறமும் அறனும் வேறு வேறு என்று கருதுகிறேன்.
    அறம் (https://agarathi.com/word/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D#google_vignette) - ஒழுக்கம்
    அறன் (https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D) - நற்குணம்
    இரண்டும் ஒரே பொருள் போல் தோன்றலாம் ஆனால் அறம் என்பது விதிகள் அதாவது பெயர்ச்சொல் எனலாம். அறன் என்பது இல்வாழ்க்கையில் விதிகளின் படி நடத்தல். அதாவது வினைச்சொல் எனலாம்.
    அறம் பறந்து பட்ட தலைப்புகளை உள்ளடக்கியது.
    அறன் என்பது இல் வாழ்க்கையை மட்டும் உள்ளடக்கியது.
    இதுதான் அகராதியையும் அறநூல்களையும் வாசிக்கும் பொழுது எனக்கு புரிந்த விளக்கங்கள்..

    பதிலளிநீக்கு