யோகா என்பது தமிழ் சொல்லா? அல்லது வடமொழிச் சொல்லா?
இரண்டு மொழியையும் சார்ந்தது என்று கருத வாய்ப்பு உண்டு.
காரணம், யோக சாஸ்திர நூல் கூறிய பதஞ்சலி என்பவர் மனிதர் அல்ல, அவர் தேவர் இனத்தை சார்ந்தவர் ஆவார். சிவயோக மாமுனி, பதஞ்சலி, வியக்ரமர், மற்றும் எண்மர் எனும் நான்கு நந்திகளில் அவரும் ஒருவர்.
நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி,
மன்று தொழுத பதஞ்சலி, வியாக் ரமர்
என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே.நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள்நால்வரும் நானாவிதப் பொருள் கைக்கொண்டுநால்வரும் யான் பெற்றது எல்லாம் பெறுக எனநால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே. - திருமந்திரம்
இவர்கள் நால்வரும் ஒவ்வொரு திசையில் உள்ள முனிவர்களுக்கு நாதர்களாக அதாவது குருவாக இருந்து வந்துள்ளனர்.
தெற்கு திசைக்கு எண்மர் எனும் நந்தியும் வடக்கு திசைக்கு பதஞ்சலி எனும் நந்தியும் ஆசிரியராக இருந்து வந்துள்ளனர். மனிதர்களில் உள்ள குருமார்கள் பிறப்பு இறப்பின் கார்ணமாக மாறிக்கொண்டே இருப்பர் ஆனால் தேவர்கள் அமரர்கள் எனவே அவர்கள் மாறுவதில்லை.
தெற்கில் நான் அறிந்தவரை திருமந்திரம் யோகம் பற்றி பேசுகிறது. திருமந்திரம் என்பது எண்மர் எனும் நந்திதேவர் மூலம் திரு மூலருக்கு போதிக்க்கபட்ட நூல் ஆகும். நந்திகள் அனைவரும் இறைவனின் தூதுவர்கள் ஆவர்.
எனவே எதோ ஒரு மொழியில் யோகம் உருவாக்கப்பட்ட அல்லது கண்டுபிடிக்கப்பட்டு பிறகு வேறு மொழிக்கு கொண்டு செல்லப்பட்டது என்பது சாத்தியம் எப்பொழுது என்றால் அனைத்தும் மனிதர்களால் உருவக்கப்பட்டால். ஆனால் உலகம் முழுதும் படைத்த ஒருவனிடம் இருந்து தேவர்கள் மூலம் மக்களுக்கு போதிக்கப்பட்டது என்ற திருமந்திர பாடலை அடிப்படையாக வைத்து பார்த்தால் அது இரண்டு மொழியிலும் ஒரே நேரத்தில் போதாக்கப்பட்டு இருக்க வாய்ப்பு உண்டு.
எனவே இது என்னுடையது உண்ணுடைது என்கிற சண்டை தேவை இல்லை என்பது என் கருத்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக