பாயிரம்
கடவுள் வாழ்த்து
1 ஒன்று அவன் தானே, இரண்டு அவன் இன் அருள்,நின்றனன் மூன்றின் உள், நான்கு உணர்ந்தான், ஐந்து
வென்றனன், ஆறு விரிந்தனன், ஏழ் உம்பர்ச்
சென்றனன், தான் இருந்தான் உணர்ந்து எட்டே.
2 போற்றி இசைத்து இன் உயிர் மன்னும் புனிதனை
நால் திசைக்கும் நல்ல மாதுக்கு நாதனை
மேல் திசைக்குள் தென் திசைக்கு ஒரு வேந்தனாம்
கூற்று உதைத்தானை யான் கூறுகின்றேனே.
3 ஒக்க நின்றானை உலப்பு இலி தேவர்கள்
நக்கன் என்று ஏத்திடு நாதனை நாள் தொறும்
பக்க நின்றார் அறியாத பரமனைப்
புக்கு நின்று உன்னி யான் போற்றி செய்வேனே.
4 சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்து அன்று பொன் ஒளி மின்னும்
தவனச் சடைமுடித் தாமரை யானே.
5 அவனை ஒழிய அமரரும் இல்லை
அவன் அன்றிச் செய்யும் அரும் தவம் இல்லை
அவன் அன்றி மூவரால் ஆவது ஒன்று இல்லை
அவன் அன்றி ஊர் புகுமாறு அறியேனே.
6 முன்னை ஒப்பாய் உள்ள மூவர்க்கு மூத்தவன்
தன்னை ஒப்பாய் ஒன்றும் இல்லாத் தலைமகன்
தன்னை அப்பா எனில் அப்பனும் ஆய் உளன்
பொன்னை ஒப்பு ஆகின்ற போதகத் தானே.
7 தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருள் அறிவார் இல்லை
சேயினும் நல்லன் அணியன் நல் அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே.
8 பொன்னால் புரிந்திட்ட பொன் சடை என்னப்
பின்னால் பிறங்க இருந்தவன் பேர் நந்தி
என்னால் தொழப் படும் எம் இறை மற்று அவன்
தன்னால் தொழப் படுவார் இல்லை தானே.
9 அயலும் புடையும் எம் ஆதியை நோக்கில்
இயலும் பெரும் தெய்வம் யாதும் ஒன்று இல்லை
முயலும் முயலில் முடிவும் மற்று ஆங்கே
பெயலும் மழை முகில் பேர் நந்தி தானே.
10 பிதற்றுகின்றேன் என்றும் பேர் நந்தி தன்னை
இயற்றுவன் நெஞ்சத்து இரவும் பகலும்
முயற்றுவன் ஓங்கு ஒளி வண்ணன் எம்மானை
இயல் திகழ் சோதி இறைவனும் ஆமே.
11 கண் நுதலான் ஒரு காதலின் நிற்கவும்
எண் இலிதேவர் இறந்தார் எனப்பலர்
மண் உறுவார்களும் வான் உறுவார்களும்
அண்ணல் இவன் என்று அறிய கிலார்களே.
12 மண் அளந்தான் மலரோன் முதல் தேவர்கள்
எண் அளந்து இன்ன நினைக்கிலார் ஈசனை
விண் அளந்தான் தன்னை மேல் அளந்தார் இல்லை
கண் அளந்து எங்கும் கடந்து நின்றானே.
13 கடந்து நின்றான் கமலம் மலர் ஆதி
கடந்து நின்றான் கடல்வண்ணன் எம் மாயன்
கடந்து நின்றான் அவர்க்கு அப்புறம் ஈசன்
கடந்து நின்றான் எங்கும் கண்டு நின்றானே.
14 ஆதியும் ஆய் அரனாய் உடல் உள் நின்ற
வேதியும் ஆய் விரிந்து ஆர்த்து இருந்தான் அருள்
சோதியும் ஆய்ச் சுருங்காதது ஓர் தன்மையுள்
நீதியும் ஆய் நித்தம் ஆகி நின்றானே.
15 கோது குலாவிய கொன்றைக் குழல் சடை
மாது குலாவிய வாள்நுதல் பாகனை
யாது குலாவி அமரரும் தேவரும்
கோது குலாவிக் குணம் பயில்வாரே.
16 காயம் இரண்டும் கலந்து கொதிக்கினும்
ஆயம் கத்தூரி அது மிகும் அவ்வழி
தேசம் கலந்து ஒரு தேவன் என்று எண்ணினும்
ஈசன் உறவுக்கு எதிர் இல்லை தானே.
17 அதிபதி செய்து அளகை வேந்தனை
நிதிபதி செய்த நிறை தவ நோக்கி
அதுபதி ஆதரித்து ஆக்கம் அது ஆக்கின்
இதுபதி கொள் என்ற எம் பெருமானே.
18 இதுபதி ஏலம் கமழ் பொழில் ஏழும்
முதுபதி செய்தவன் மூது அறிவாளன்
விதுபதி செய்தவன் மெய்த்தவம் நோக்கி
அதுபதி ஆக அமருகின்றானே.
19 முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த
அடிகள் உறையும் அறன் நெறி நாடில்
இடியும் முழக்கமும் ஈசர் உருவம்
கடிமலர்க் குன்ற மலையது தானே.
20 மன்னிய வாய்மொழியாலும் மதித்தவர்
இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனைப்
பின்னை உலகம் படைத்த பிரமனும்
உன்னும் அவனை உணரலும் ஆமே.
21 வானப் பெரும் கொண்டல் மால் அயன் வானவர்
ஊனப் பிறவி ஒழிக்கும் ஒருவனைக்
கானக் களிறு கதறப் பிளந்த எம்
கோனைப் புகழுமின் கூடலும் ஆமே.
22 மனத்தில் எழுகின்ற மாய நல் நாடன்
நினைத்தது அறிவன் எனில் தான் நினைக்கிலர்
எனக்கு இறை அன்பு இலன் என்பர் இறைவன்
பிழைக்க நின்றார் பக்கம் பேணி நின்றானே.
23 வல்லவன் வன்னிக்கு இறை இடை வாரணம்
நில் எயன நிற்பித்த நீதியுள் ஈசனை
இல் என வேண்டா இறையவர் தம் முதல்
அல்லும் பகலும் அருளு கின்றானே.
24 போற்றி இசைத்தும் புகழ்ந்தும் புனிதன் தன்னடி
தேற்றுமின் என்றும் சிவன் அடிக்கே செல்வம்
ஆற்றியது என்று மயல் உற்ற சிந்தையை
மாற்றி நின்றார் வழி மன்னி நின்றானே.
25 பிறப்பு இலி பிஞ்ஞகன் பேர் அருளாளன்
இறப்பு இலி யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்பு இலி தன்னைத் தொழுமின் தொழுதால்
மறப்பு இலி மாயா விருத்தமும் ஆமே.
26 தொடர்ந்து நின்றானைத் தொழுமின் தொழுதால்
படர்ந்து நின்றான் பரி பாரகம் முற்றும்
கடந்து நின்றான் கமலம் மலர் மேலே
உடந்து இருந்தான் அடிப் புண்ணியம் ஆமே.
27 சந்தி எனத் தக்க தாமரை வாள் முகத்து
அந்தம் இல் ஈசன் அருள் நமக்கே என்று
நந்தியை நாளும் வணங்கப் படும் அவர்
புந்தியின் உள்ளே புகுந்து நின்றானே.
28 இணங்கி நின்றான் எங்கும் ஆகி நின்றானும்
பிணங்கி நின்றான் பின் முன்னாகி நின்றானும்
உணங்கி நின்றான் அமரா பதி நாதன்
வணங்கி நின்றார்க்கே வழித்துணை ஆமே.
29 காண நில்லாய் அடியேற்கு உறவு ஆர் உளர்
நாண நில்லேன் உன்னை நான் தழுவிக் கொளக்
கோண நில்லாத குணத்து அடியார் மனத்து
ஆணியன் ஆகி அமர்ந்து நின்றானே.
30 வான் நின்று அழைக்கும் மழைபோல் இறைவனும்
தான் நின்று அழைக்கும்கொல் என்று தயங்குவார்
ஆன் நின்று அழைக்கும் அதுபோல் என் நந்தியை
நான் நின்று அழைப்பது ஞானம் கருதியே.
31 மண் அகத்தான் ஒக்கும் வான் அகத்தான் ஒக்கும்
விண் அகத்தான் ஒக்கும் வேதகத்தான் ஒக்கும்
பண் அகத்து இன் இசை பாடல் உற்றானுக்கே
கண் அகத்தே நின்று காதலித் தேனே.
32 தேவர் பிரான் நம்பிரான் திசை பத்தையும்
மேவு பிரான் விரி நீர் உலகு ஏழையும்
தாவும் பிரான் தன்மை தான் அறிவார் இல்லை
பாவு பிரான் அருள் பாடலும் ஆமே.
33 பதி பல ஆயது பண்டு இவ் உலகம்
விதி பல செய்து ஒன்று மெய்ம்மை உணரார்
துதி பல தோத்திரம் சொல்ல வல்லாரும்
மதி இலர் நெஞ்சினுள் வாடுகின்றாரே.
34 சாந்து கமழும் கவரியின் கந்தம் போல்
வேந்தன் அமரர்க்கு அருளிய மெய்ந் நெறி
ஆர்ந்த சுடர் அன்ன ஆயிரம் நாமமும்
போந்தும் இருந்தும் புகழுகின்றேனே.
35 ஆற்று கிலா வழியாகும் இறைவனைப்
போற்றுமின் போற்றிப் புகழ்மின் புகழ்ந்திடில்
மேல்திசைக்கும் கிழக்குத் திசை எட்டொடு
மாற்றுவன் அப்படி ஆட்டவும் ஆமே.
36 அப்பனை நந்தியை ஆரா அமுதினை
ஒப்பு இலி வள்ளலை ஊழி முதல்வனை
எப் பரிசு ஆயினும் ஏத்துமின் ஏத்தினால்
அப் பரிசு ஈசன் அருள் பெறலாமே.
37 நானும் நின்று ஏத்துவன் நாள் தொறும் நந்தியைத்
தானும் நின்றான் தழல் தான் ஒக்கும் மேனியன்
வானில் நின்றார் மதிபோல் உடல் உள் உவந்து
ஊனில் நின்று ஆங்கே உயிர்க்கின்ற ஆறே.
38 பிதற்று ஒழியேன் பெரியான் அரியானைப்
பிதற்று ஒழியேன் பிறவா உருவானைப்
பிதற்று ஒழியேன் எங்கள் பேர் நந்தி தன்னைப்
பிதற்று ஒழியேன் பெருமைத்தவன் யானே.
39 வாழ்த்த வல்லார் மனத்து உள் உறு சோதியைத்
தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை
ஏத்தியும் எம் பெருமான் என்று இறைஞ்சியும்
ஆத்தம் செய்து ஈசன் அருள் பெறலாமே.
40 குறைந்து அடைந்து ஈசன் குரை கழல் நாடும்
நிறைந்து அடை செம் பொனின் நேர் ஒளி ஒக்கும்
மறைஞ் சடம் செய்யாது வாழ்த்த வல்லார்க்குப்
புறம் சடம் செய்வான் புகுந்து நின்றானே.
41 சினம் செய்த நஞ்சு உண்ட தேவர் பிரானைப்
புனம் செய்த நெஞ்சு இடை போற்ற வல்லார்க்குக்
கனம் செய்த வாள் நுதல் பாகனும் அங்கே
இனம் செய்த மான்போல் இணங்கி நின்றானே.
42 போய் அரன் தன்னைப் புகழ்வார் பெறுவது
நாயகன் நான் முடி செய்ததுவே நல்கு
மாயகம் சூழ்ந்து வர வல்லார் ஆகிலும்
வேய் அன தோளிக்கு வேந்து ஒன்றும்தானே.
43 அரன் அடி சொல்லி அரற்றி அழுது
பரன் அடி நாடியே பாவிப்ப நாளும்
உரன் அடி செய்து அங்கு ஒதுங்க வல்லார்க்கு
நிரன் அடி செய்து நிறைந்து நின்றானே.
44 போற்றி என்பார் அமரர் புனிதன் அடி
போற்றி என்பார் அசுரர் புனிதன் அடி
போற்றி என்பார் மனிதர் புனிதன் அடி
போற்றி என் அன்புள் பொலிய வைத்தேனே.
45 விதிவழி அல்லது இவ் வேலை உலகம்
விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை
துதிவழி நித்தலும் சோதிப் பிரானும்
பதிவழி காட்டும் பகலவன் ஆமே.
46 அந்தி வண்ணா அரனே சிவனே என்று
சிந்தை செய் வண்ணம் திருந்து அடியார் தொழ
முந்தி வண்ணா முதல்வா பரனே என்று
வந்து இவ்வண்ணன் எம் மனம் புகுந்தானே.
47 மனை உள் இருந்தவர் மாதவர் ஒப்பர்
நினைவு உள் இருந்தவர் நேசத்து உள் நிற்பர்
பனையுள் இருந்த பருந்து அது போல
நினையாதவர்க்கு இல்லை நின் இன்பம் தானே.
48 அடியார் பரவும் அமரர் பிரானை
முடியால் வணங்கி முதல்வனை முன்னிப்
படியார் அருளும் பரம்பரன் எந்தை
விடியா விளக்கு என்று மேவி நின்றேனே.
49 பரை பசு பாசத்து நாதனை உள்ளி
உரை பசு பாசத்து ஒருங்க வல்லார்க்குத்
திரை பசு பாவச் செழும் கடல் நீந்திக்
கரை பசு பாசம் கடந்து எய்தலாமே.
50 சூடுவன் நெஞ்சு இடை வைப்பன் பிரான் என்று
பாடுவன் பன்மலர் தூவிப் பணிந்து நின்று
ஆடுவன் ஆடி அமரர் பிரான் என்று
நாடுவன் யான் இன்று அறிவது தானே.
2. மும் மூர்த்திகளின் முறைமை
1 அளவு இல் இளமையும் அந்தமும் ஈறும்
அளவு இயல் காலமும் நாலும் உணரில்
தளர்வு இலன் சங்கரன் தன் அடியார் சொல்
அளவு இல் பெருமை அரி அயற்கு ஆமே.
2 ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும்
ஆதிக் கமலத்து அலர் மிசையானும்
சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்று எனார்
பேதித்து உலகம் பிணங்கு கின்றார்களே.
3 ஈசன் இருக்கும் இருவினைக்கு அப்புறம்
பீசம் உலகில் பெரும் தெய்வம் ஆனது
ஈசன் அது இது என்பார் நினைப்பு இலார்
தூசு பிடித்தவர் தூர் அறிந்தார் களே.
4 சிவன் முதல் மூவரோடு ஐவர் சிறந்த
அவை முதல் ஆறு இரண்டு ஒன்றோடு ஒன்று ஆகும்
அவை முதல் விந்துவும் நாதமும் ஓங்கச்
சவை முதல் சங்கரன் தன் பெயர் தானே.
5 பயன் அறிந்து அவ்வழி எண்ணும் அளவில்
அயனொடு மால் நமக்கு அன்னியம் இல்லை
நயனங்கள் மூன்று உடை நந்தி தமர் ஆம்
வயனம் பெறுவீர் அவ் வானவராலே.
6 ஓலக்கம் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்
பால் ஒத்த மேனி பணிந்து அடியேன் தொழ
மாலுக்கும் ஆதிப் பிரமற்கும் ஒப்பு நீ
ஞாலத்து நம் அடி நல்கிடு என்றானே.
7 வானவர் என்றும் மனிதர் இவர் என்றும்
தேன் அமர் கொன்றைச் சிவன் அருள் அல்லது
தான் அமர்ந்து ஓரும் தனித் தெய்வம் மற்று இல்லை
ஊன் அமர்ந்தோரை உணர்வது தானே.
8 சோதித்த பேர் ஒளி மூன்று ஐந்து என நின்ற
ஆதிக் கண் ஆவது அறிகிலர் ஆதர்கள்
நீதிக்கண் ஈசன் நெடுமால் அயன் என்று
பேதித்து அவரைப் பிதற்றுகின்றாரே.
9 பரத்திலே ஒன்றாய் உள்ளாய்ப் புறம் ஆகி
வரத்தினுள் மாயவனாய் அயன் ஆகித்
தரத்தினுள் தான் பல தன்மையன் ஆகிக்
கரத்தினுள் நின்று கழிவு செய்தானே.
10 தான் ஒரு கூறு சதாசிவன் எம் இறை
வான் ஒரு கூறு மருவியும் அங்கு உளான்
கோன் ஒரு கூறு உடல் உள் நின்று உயிர்க்கின்ற
தான் ஒரு கூறு சலம் அயன் ஆமே.
3. வேதச் சிறப்பு
4. ஆகமச் சிறப்பு
1 அஞ்சன மேனி அரிவை ஓர் பாகத்தன்
அஞ்சொடு இருபத்து மூன்று உள ஆகமம்
அஞ்சலி கூப்பி அறுபத்து அறுவரும்
அஞ்சா முகத்தில் அரும் பொருள் கேட்டதே.
2 அண்ணல் அருளால் அருளும் சிவா ஆகமம்
எண்ணில் இருபத்து எண் கோடி நூறு ஆயிரம்
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்
எண்ணி நின்ற அப் பொருள் ஏத்துவன் யானே.
3 அண்ணல் அருளால் அருளும் திவ்யா கமம்
விண்ணில் அமரர் தமக்கும் விளங்க அரிது
எண்ணில் எழுபது கோடி நூறு ஆயிரம்
எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே.
4 பரனாய்ப் பரா பரம் காட்டி உலகில்
அரனாய்ச் சிவ தன்மம் தானே சொல் காலத்து
அரனாய் அமரர்கள் அர்ச்சிக்கும் நந்தி
உரன் ஆகி ஆகமம் ஓங்கி நின்றானே.
5 சிவம் ஆம் பரத்தினில் சத்தி சதாசிவம்
உவமா மகேசர் உருத்திர தேவர்
தவ மால் பிரமீசர் தம்மில் தாம் பெற்ற
நவ ஆகமம் எங்கள் நந்தி பெற்றானே.
6 பெற்ற நல் ஆகமம் காரணம் காமிகம்
உற்ற நல் வீரம் உயர் சித்தம் வாதுளம்
மற்று அவ் வியாமளம் ஆகும்கால் ஓத்தரந்து
உற்ற நல் சுப்பிரம் சொல்லு மகுடமே.
7 ஆகமம் ஒன்பான் அதில் ஆன நால் ஏழு
மேகம் இல் நால் ஏழு முப்பேதம் உற்று உடன்
வேகம் இல் வேதாந்த சித்தாந்த மெய்ம்மை ஒன்று
ஆக முடிந்த அரும் சுத்த சைவமே.
5. அந்தணர் ஒழுக்கம்
1 அந்தணர் ஆவோர் அறு தொழில் பூண்டு உளோர்
செந்தழல் ஓம்பி முப்போதும் நியமம் செய்
நம்தவ நல் கருமத்து நின்று ஆங்கு இட்டுச்
சந்தியும் ஓதிச் சடங்கு அறுப்போர்களே.
2 காயத்திரியே கருது சாவித்திரி
ஆய்தற்கு உவப்பர் மந்திரம் ஆங்கு உன்னி
நேயத் தேர் ஏறி நினைவு உற்று நேயத்தாய்
மாயத்துள் தோயா மறையோர்கள் தாமே.
3 பெருநெறி ஆன பிரணவம் ஓர்ந்து
குரு நெறியால் உரை கூடி நால் வேதத்து
இரு நெறி ஆன கிரியை இருந்து
சொருபம் அது ஆனோர் துகள் இல் பார்ப்பாரே.
4 சத்தியமும் தவம் தான் அவன் ஆதலும்
எய்த் தகும் இந்தியம் ஈட்டியே வாட்டலும்
ஒத்த உயிர்கள் உண்டாய் உணர்வு உற்றுப்
பெத்தம் அறுத்தலும் ஆகும் பிரமமே.
5 வேத அந்தம் கேட்க விரும்பிய வேதியர்
வேத அந்தம் கேட்டும் தம் வேட்கை ஒழிந்திலர்
வேத அந்தம் ஆவது வேட்கை ஒழிந்து இடம்
வேத அந்தம் கேட்டவர் வேட்கை விட்டாரே.
6 நூலும் சிகையும் நுவலில் பிரமமோ
நூல் அது கார்ப் பாச நுண்சிகை கேசம் ஆம்
நூல் அது வேதாந்தம் நுண் சிகை ஞானம் ஆம்
நூல் உடை அந்தணர் காணும் நுவலிலே.
7 சத்தியம் இன்றித் தனி ஞானம் தான் இன்றி
ஒத்த விடையம் விட்டோரும் உணர்வு இன்றிப்
பத்தியும் இன்றிப் பரன் உண்மை இன்றிப்
பித்து ஏறும் மூடர் பிராமணர் தாம் அன்றே.
8 திருநெறி ஆகிய சித்த சித்து இன்றிக்
குருநெறி யாலே குருபதம் சேர்ந்து
கரும நியம் ஆதி கை விட்டுக் காணும்
துரிய சமதி ஆம் தூய் மறை யோர்க்கே.
9 மறையோர் அவரே மறைவர் ஆனால்
மறையோர் தம் வேத அந்த வாய்மையில் தூய்மை
குறையோர் தன் மற்று உள்ள கோலாகலம் என்று
அறிவோர் மறை தெரிந்த அந்தணர் ஆமே.
10 அம் தண்மை பூண்ட அருமறை அந்தத்துச்
சிந்தை செய் அந்தணர் சேரும் செழும்புவி
நந்துதல் இல்லை நரபதி நன்று ஆகும்
அந்தியும் சந்தியும் ஆகுதி பண்ணுமே.
6. ஆகுதி வேட்டல்
1 வசை இல் விழுப் பொருள் வானும் நிலனும்
திசையும் திசை பெறு தேவர் குழாமும்
விசையம் பெருகிய வேத முதல் ஆம்
அசை இலா அந்தணர் ஆகுதி வேட்கிலே.
2 ஆகுதி வேட்கும் அருமறை அந்தணர்
போ கதி நாடிப் புறம் கொடுத்து உண்ணுவர்
தாம் விதி வேண்டித் தலைப்படு மெய்ந்நெறி
தாம் அறிவாலே தலைப் பட்ட வாறே.
3 அணை துணை அந்தணர் அங்கியுள் அங்கி
அணை துணை வைத்து அதன் உள் பொருள் ஆன
இணை துணை யாமத்து இயங்கும் பொழுது
துணை அணை ஆயது ஓர் தூய் நெறியாமே.
4 தானே விடும் பற்று இரண்டும் தரித்திட
யானே விடப் படும் ஏது ஒன்றை நாடாது
பூ மேவு நான் முகன் புண்ணிய போகனாய்
ஓ மேவும் ஓர் ஆகுதி அவி உண்ணவே.
5 நெய் நின்று எரியும் நெடும் சுடரே சென்று
மை நின்று எரியும் வகை அறிவார் கட்கு
மை நின்று அவிழ் தருமத்தின் ஆம் என்றும்
செய் நின்ற செல்வம் தீ யதுவாமே.
6 பாழி அகலும் எரியும் திரிபோல் இட்டு
ஊழி அகலும் உறுவினை நோய் பல
வாழி செய்து அங்கி உதிக்க அவை விழும்
வீழி செய்து அங்கி வினை சுடும் ஆமே.
7 பெரும் செல்வம் கேடு என்று முன்னே படைத்த
வரும் செல்வம் தந்த தலைவனை நாடும்
வரும் செல்வத்து இன்பம் வர இருந்து எண்ணி
அரும் செல்வத்து ஆகுதி வேட்க நின்றாரே.
8 ஒண் சுடரானை உலப்பு இலி நாதனை
ஒண் சுடர் ஆகி என் உள்ளத்து இருக்கின்ற
கண் சுடரோன் உலகு ஏழும் கடந்த அத்
தண் சுடர் ஓமத் தலைவனும் ஆமே.
9 ஓமத்துள் அங்கியின் உள் உளன் எம் இறை
ஈமத்துள் அங்கி இரதம் கொள்வான் உளன்
வேமத்துள் அங்கி விளைவு வினைக் கடல்
கோமத்துள் அங்கி குரை கடல் தானே.
10 அங்கி நிறுத்தும் அரும் தவர் ஆரத்து
அங்கி இருக்கும் வகை அருள் செய்தவர்
எங்கும் நிறுத்தி இளைப்பப் பெரும்பதி
பொங்கி நிறுத்தும் புகழ் அது ஆமே.
7. அரசாட்சி முறை
1 கல்லா அரசனும் காலனும் நேர் ஒப்பர்
கல்லா அரசனில் காலன் மிக நல்லன்
கல்லா அரசன் அறம் ஓரான் கொல் என்பான்
நல்லாரைக் காலன் நணுக நில்லானே.
2 நாள் தோறும் மன்னவன் நாட்டில் தவ நெறி
நாள் தோறும் நாடி அவன் நெறி நாடான் ஏல்
நாள் தோறும் நாடு கெடுமூட நண்ணும் ஆல்
நாள் தோறும் செல்வம் நரபதி குன்றுமே.
3 வேட நெறிநில்லார் வேடம் பூண்டு என்பயன்
வேட நெறி நிற்போர் வேடம் மெய் வேடமே
வேட நெறி நில்லார் தம்மை விறல் வேந்தன்
வேட நெறி செய்தால் வீடு அது ஆமே.
4 மூடம் கெடாதோர் சிகை நூல் முதல் கொள்ளில்
வாடும் புவியும் பெரு வாழ்வு மன்னனும்
பீடு ஒன்று இலன் ஆகும் ஆதலால் பேர்த்து உணர்ந்து
ஆடம் பர நூல் சிகை அறுத்தால் நன்றே.
5 ஞானம் இலாதார் சடை சிகை நூல் நண்ணி
ஞானிகள் போல நடிக் கின்றவர் தம்மை
ஞானி களாலே நரபதி சோதித்து
ஞான் உண்டு ஆக்குதல் நலம் ஆகும் நாட்டிற்கே.
6 ஆவையும் பாவையும் மற்ற அறவோரையும்
தேவர்கள் போற்றும் திரு வேடத்தாரையும்
காவலன் காப்பவன் காவாது ஒழிவனேல்
மேவும் மறுமைக்கு மீளா நரகமே.
7 திறம் தரு முத்தியும் செல்வமும் வேண்டின்
மறந்தும் அற நெறியே ஆற்றல் வேண்டும்
சிறந்த நீர் ஞாலம் செய் தொழில் யாவையும்
அறைந்திடில் வேந்தனுக்கு ஆறில் ஒன்று ஆமே.
8 வேந்தன் உலகை மிக நன்று காப்பது
வாய்ந்த மனிதர்கள் அவ்வழியாய் நிற்பர்
பேர்ந்து இவ் உலகைப் பிறர் கொள்ளத் தாம் கொள்ளப்
பாய்ந்த புலி அன்ன பாவகத் தானே.
9 கால் கொண்டு கட்டிக் கனல் கொண்டு மேல் ஏற்றிப்
பால் கொண்டு சோமன் முகம் பற்றி உண்ணாதோர்
மால் கொண்டு தேறலை உண்ணும் மருளரை
மேல் கொண்டு தண்டம் செய் வேந்தன்கடனே.
10 தம் தம் சமயத் தகுதி நில்லாதாரை
அத்தன் சிவன் சொன்ன ஆகம நூல்நெறி
எத் தண்டமும் செய்யும் அம்மை இல் இம்மைக்கே
மெய்த் தண்டம் செய்வது அவ் வேந்தன் கடனே.
8. வானச் சிறப்பு
1 அமுது ஊறும் மா மழை நீர் அதனாலே
அமுது ஊறும் பல் மரம் பார் மிசை தோற்றும்
கமுகூறு தெங்கு கரும்பொடு வாழை
அமுது ஊறும் காஞ்சிரை ஆங்கு அது ஆமே.
2 வரை இடை நின்று இழி வான் நீர் அருவி
உரை இல்லை உள்ளத்து அகத்து நின்று ஊறு
நுரை இல்லை மாசு இல்லை நுண்ணிய தெண்ணீர்க்
கரை இல்லை எந்தை கழுமணி யாறே.
9. அறம் செய்வான் திறம்
10. அறம் செயான் திறம்
11. அவையடக்கம்
தற்சிறப்புப் பாயிரம்
1. குரு பாரம்பரியம்
2. திருமூலர் வரலாறு |
1 | நந்தி இணை அடி யான் தலை மேல் கொண்டு புந்தியின் உள்ளே புகப் பெய்து போற்றிசெய்து அந்திமதி புனை அரன் அடி நாள்தொறும் சிந்தை செய்து ஆகமம் செப்பல் உற்றேனே. |
2 | செப்பும் சிவாகமம் என்னும் அப்பேர் பெற்றும் அப்படி நல்கும் அருள் நந்திதாள் பெற்றுத் தப்பு இலா மன்றில் தனிக் கூத்துக் கண்ட பின் ஒப்பு இல் எழுகோடி யுகம் இருந்தேனே. |
3 | இருந்த அக் காரணம் கேள் இந்திரனே பொருந்திய செல்வப் புவனா பதி ஆம் அருந்தவச் செல்வியைச் சேவித்து அடியேன் பரிந்து உடன் வந்தனன் பத்தியினாலே. |
4 | மாலாங்கனே இங்கு யான் வந்த காரணம் நீலாங்க மேனியாள் நேரிழையாள் ஒடு மூலாங்கம் ஆக மொழிந்த திருக் கூத்தின் சீலாங்க வேதத்தைச் செப்ப வந்தேனே. |
5 | நேரிழை ஆவாள் நிரதிச ஆனந்தப் பேர் உடையாள் என் பிறப்பு அறுத்து ஆண்டவள் சீர் உடையாள் சிவன் ஆவடு தண் துறை சீர் உடையாள் பதம் சேர்ந்து இருந்தேனே. |
6 | சேர்ந்து இருந்தேன் சிவ மங்கை தன் பங்கனைச் சேர்ந்து இருந்தேன் சிவன் ஆவடு தண் துறை சேர்ந்து இருந்தேன் சிவ போதியின் நீழலில் சேர்ந்து இருந்தேன் சிவன் நாமங்கள் ஓதியே. |
7 | அகல் இடத்தார் மெய்யை அண்டத்து வித்தைப் புகல் இடத்து எம்மெய்யைப் போத விட்டானைப் பகல் இடத்தும் இரவும் பணிந்து ஏத்தி இகல் இடத்தே இருள் நீங்கி நின்றேனே. |
8 | இருந்தேன் இக் காயத்தே எண் இலி கோடி இருந்தேன் இராப் பகல் அற்ற இடத்தே இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே இருந்தேன் என் நந்தி இணை அடிக் கீழே. |
9 | ஞானத் தலைவிதன் நந்தி நகர் புக்கு ஊனம் இல் ஒன்பது கோடி உகம் தனுள் ஞானப் பால் ஆட்டி நாதனை அர்ச்சித்து யானும் இருந்தேன் நல் போதியின் கீழே. |
10 | செல்கின்ற ஆறு அறி சிவ முனி சித்தசன் வெல்கின்ற ஞானத்து மிக்கு ஓர் முனிவராய்ப் பல்கின்ற தேவர் அசுரர் நரர் தம்பால் ஒல்கின்ற வான் வழி ஊடு வந்தேனே. |
11 | சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில் உத்தமம் ஆகவே ஓதிய வேதத்தின் ஒத்த உடலையும் உள் நின்ற உற்பத்தி அத்தன் எனக்கு இங்கு அருளால் அளித்ததே. |
12 | நேர்ந்திடு மூல சரியை நெறி இது என்று ஆய்ந்திடும் காலாங்கி கஞ்ச மலையமான் ஓர்ந்திடும் கந்துரு கேண்மின்கள் பூதலத்து ஓர்ந்திடுஞ் சுத்த சைவத்து உயிர் அதே. |
13 | யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் வான் பற்றி நின்ற மறைப் பொருள் சொல்லிடின் ஊன் பற்றி நின்ற உணர் உறு மந்திரம் தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே. |
14 | பிறப்பு இலி நாதனைப் பேர் நந்தி தன்னைச் சிறப்பொடு வானவர் சென்று கை கூப்பி மறப்பு இலர் நெஞ்சினுள் மந்திர மாலை உறைப் பொடும் கூடி நின்று ஓதலும் ஆமே. |
15 | சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம் மிதாசனியாது இருந்தேன் நின்ற காலம் இதாசனியாது இருந்தேன் மன நீங்கி உதாசனியாது உடனே உணர்ந்தேமால். |
16 | அங்கி மிகாமை வைத்தான் உடல் வைத்தான் எங்கும் மிகாமை வைத்தான் உலகு ஏழையும் தங்கி மிகாமை வைத்தான் தமிழ்ச் சாத்திரம் பொங்கி மிகாமை வைத்தான் பொருள் தானுமே. |
17 | பண்டிதர் ஆவார் பதினெடடுப் பாடையும் கண்டவர் கூறும் கருத்தறிவார் என்க பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும் அண்ட முதலான் அறம் சொன்ன வாறே. |
18 | பின்னை நின்று என்னே பிறவி பெறுவது முன்னை நன்றாக முயல் தவம் செய்கிலர் என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ்செய்யுமாறே. |
20 | பெற்றமும் மானும் மழுவும் பிறிவு அற்ற தற்பரன் கற்பனை ஆகும் சராசரத்து அற்றமும் நல்கி அடியேன் சிரத்தினில் நற் பதமும் அளித்தான் எங்கள் நந்தியே. |
21 | ஞேயத்தை ஞானத்தை ஞா துருவத்தினை மாயத்தை மா மாயை தன்னில் வரும் பரை ஆயத்தை அச்சிவன் தன்னை யகோசர வீயத்தை முற்றும் விளக்கி இட்டேனே. |
22 | விளக்கிப் பரம் ஆகும் மெய்ஞ் ஞானச் சோதி அளப்பு இல் பெருமையன் ஆனந்த நந்தி துளக்கு அறும் ஆனந்தக் கூத்தன் சொல் போந்து வளப்பு இல் கயிலை வழியில் வந்தேனே. |
23 | நந்தி அருளாலே மூலனை நாடிப் பின் நந்தி அருளாலே சதா சிவன் ஆயினேன் நந்தி அருளால் மெய்ஞ் ஞானத்துள் நண்ணினேன் நந்தி அருளாலே நான் இருந்தேனே. |
முதல் தந்திரம்1. உபதேசம் |
1 | விண்ணின்று இழிந்து வினைக்கு ஈடாய் மெய்கொண்டு தண் நின்ற தாளைத் தலைக் காவல் முன் வைத்து உள் நின்று உருக்கி ஓர் ஒப்பு இலா ஆனந்தக் கண் நின்று காட்டிக் களிம்பு அறுத்தானே. |
2 | களிம்பு அறுத்தான் எங்கள் கண்நுதல் நந்தி களிம்பு அறுத்தான் அருள் கண் விழிப் பித்துக் களிம்பு அணுகாத கதிர் ஒளி காட்டிப் பளிங்கில் பவளம் பதித்தான் பதியே. |
3 | பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில் பதியினைப் போல் பசு பாசம் அனாதி பதியினைச் சென்று அணுகாப் பசு பாசம் பதி அணுகில் பசு பாசம் நில்லாவே. |
4 | வேயின் எழும் கனல் போலே இம் மெய் எனும் கோயிலில் இருந்து குடி கொண்ட கோன் நந்தி தாயினும் மும்மலம் மாற்றித் தயா என்னும் தோயம் அதாய் எழும் சூரியன் ஆமே. |
5 | சூரிய காந்தமும் சூழ் பஞ்சும் போலவே சூரிய காந்தம் சூழ் பஞ்சைச் சுட்டிடா சூரியன் சந்நிதியில் சுடுமாறு போல் ஆரியன் தோற்றமுன் அற்ற மலங்களே. |
6 | மலம் களைந்தாம் என மாற்றி அருளித் தலம் களைந்தான் நல் சதா சிவம் ஆன புலம் களைந்தான் அப் பொதுவின் உள் நந்தி நலம் களைந்தான் உள் நயந்தான் அறிந்தே. |
7 | அறி ஐம்புலனுடன் நான்றது ஆகி நெறி அறியாது உற்ற நீர் ஆழம் போல அறிவறி உள்ளே அழிந்தது போலக் குறி அறிவிப்பான் குருபரன் ஆமே. |
8 | ஆ மேவுபால் நீர் பிரிக்கின்ற அன்னம்போல் தாமே தனி மன்றில் தன்னம் தனி நித்தம் தீ மேவு பல் கரணங்களுள் உற்றன தாம் ஏழ்பிறப்பு எரி சார்ந்தவித்தாமே. |
9 | வித்தைக் கெடுத்து வியாக் கிரத்தே மிகச் சுத்தத் துரியம் பிறந்து துடக்கு அற ஒத்துப் புலன் உயிர் ஒன்றாய் உடம்பொடு செத்திட்டு இருப்பர் சிவயோகியார்களே. |
10 | சிவ யோகம் ஆவது சித்த சித்து என்று தவ யோகத்து உள்புக்குத் தன்னொளி தானாய் அவயோகம் சாராது அவன் பதி போக நவ யோக நந்தி நமக்கு அளித்தானே. |
11 | அளித்தான் உலகு எங்கும் தான் ஆன உண்மை அளித்தான் அமரர் அறியா உலகம் அளித்தான் திருமன்றுள் ஆடும் திருத்தாள் அளித்தான் பேர் இன்பத்து அருள் வெளிதானே. |
12 | வெளியில் வெளிபோய் விரவிய வாறும் அளியில் அளிபோய் அடங்கியவாறும் ஒளியில் ஒளி போய் ஒடுங்கிய வாறும் தெளியும் அவரே சிவ சித்தர் தாமே. |
13 | சித்தர் சிவலோகம் இங்கே தெரிசித்தோர் சத்தமும் சத்த முடிவும் தம்முள் கொண்டோர் நித்தர் நிமலர் நிராமயர் நீள் பர முத்தர் தம் முத்தி முதல் முப்பத்து ஆறே. |
14 | முப்பதும் ஆறும் படி முத்தி ஏணியாய் ஒப்பு இலா ஆனந்தத்து உள் ஒளிபுக்குச் செப்ப அரிய சிவம் கண்டு தான் தெளிந்து அப்பரிசு ஆக அமர்ந்து இருந்தாரே. |
15 | இருந்தார் சிவம் ஆகி எங்கும் தாம் ஆகி இருந்தார் சிவன் செயல் யாவையும் நோக்கி இருந்தார் முக் காலத்து இயல்பைக் குறித்து அங்கு இருந்தார் இழவு வந்து எய்திய சோம்பே. |
16 | சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே சோம்பர் கிடப்பதும் சுத்த வெளியிலே சோம்பர் உணர்வு சுருதி முடிந்திடஞ் சோம்பர் கண்டு ஆரச் சுருதிக் கண்தூக்கமே. |
17 | தூங்கிக் கண்டார் சிவலோகமும் தம் உள்ளே தூங்கிக் கண்டார் சிவ யோகமும் தம் உள்ளே தூங்கிக் கண்டார் சிவ போகமும் தம் உள்ளே தூங்கிக் கண்டார் நிலை சொல்வது எவ்வாறே. |
18 | எவ்வாறு காண்பான் அறிவு தனக்கு எல்லை அவ்வாறு அருள் செய்வான் ஆதி அரன் தானும் ஒவ்வாத மன்றுள் உமைகாண ஆடிடும் செவ்வானில் செய்ய செழும் சுடர் மாணிக்கம். |
19 | மாணிக்கத்து உள்ளே மரகதச் சோதியாய் மாணிக்கத்து உள்ளே மரகத மாடமாய் ஆணிப் பொன் மன்றினில் ஆடும் திருக் கூடத்தைப் பேணித் தொழுது என்ன பேறு பெற்றாரே. |
20 | பெற்றார் உலகில் பிரியாப் பெரு நெறி பெற்றார் உலகில் பிறவாப் பெரும் பயன் பெற்றார் அம் மன்றில் பிரியாப் பெரும் பேறு பெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே. |
21 | பெருமை சிறுமை அறிந்து எம்பிரான் போல் அருமை எளிமை அறிந்து அறிவார் ஆர் ஒருமையுள் ஆமைபோல் உள் ஐந்து அடக்கி இருமையும் கேட்டு இருந்தார் புரை அற்றே. |
22 | புரை அற்ற பாலின் உள் நெய் கலந்தாற் போல் திரை அற்ற சிந்தை நல் ஆரியன் செப்பும் உரை அற்று உணர்வோர் உடம்பு இங்கு ஒழிந்தால் கரை அற்ற சோதி கலந்த அசத்தமே. |
23 | சத்தம் முதல் ஐந்தும் தன் வழித் தான் சாரில் சித்துக்குச் சித்தன்றிச் சேர்விடம் வேறு உண்டோ சுத்த வெளியில் சுடரில் சுடர் சேரும் அத்தம் இது குறித்து ஆண்டு கொள் அப்பிலே. |
24 | அப்பினில் கூர்மை ஆதித்தன் வெம்மையால் உப்பு எனப் பேர் பெற்று உருச் செய்த அவுரு அப்பினில் கூடியது ஒன்று ஆகுமாறு போல் செப்பினில் சீவன் சிவத்துள் அடங்குமே. |
25 | அடங்கும் பேர் அண்டத்து அணு அண்டம் சென்று அங்கு இடம் கொண்டது இல்லை இது அன்றி வேறு உண்டோ கடம் தொறும் நின்ற உயிர் கரைகாணில் திடம் பெற நின்றான் திருவடி தானே. |
26 | திருவடியே சிவம் ஆவது தேரில் திருவடியே சிவலோகம் சிந்திக்கில் திருவடியே செல் கதி அது செப்பில் திருவடியே தஞ்சம் உள் தெளிவார்க்கே. |
27 | தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே. |
28 | தானே புலன் ஐந்தும் தன்வசம் ஆயிடும் தானே புலன் ஐந்தும் தன்வசம் போயிடும் தானே புலன் ஐந்தும் தன்னில் மடைமாறும் தானே தனித்து எம்பிரான் தனைச் சந்தித்தே. |
29 | சந்திப்பது நந்தி தன் திருத்தாள் இணை சிந்திப்பது நந்தி செய்ய திருமேனி வந்திப்பது நந்தி நாமம் என் வாய்மையால் புந்திக்குள் நிற்பது நந்தி பொன் போதமே. |
30 | போதம் தரும் எங்கள் புண்ணிய நந்தியைப் போதம் தனில் வைத்துப் புண்ணியர் ஆயினார் நாதன் நடத்தால் நயனம் களிகூர வேதம் துதித்திடப் போய் அடைந்தார் விண்ணே. |
2. யாக்கை நிலையாமை |
1 | மண் ஒன்று கண்டீர் இருவகைப் பாத்திரம் திண் என்று இருந்தது தீவினை சேர்ந்தது விண் நின்று நீர் வீழின் மீண்டும் மண் ஆனால் போல் எண் இன்றி மாந்தர் இறக்கின்ற வாறே. |
2 | பண்டம் பெய் கூரை பழகி விழுந்தக்கால் உண்ட அப் பெண்டிரும் மக்களும் பின் செலார் கொண்ட விரதமும் ஞானமும் அல்லது மண்டி அவருடன் வழிநடவாதே. |
3 | ஊர் எலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப் பேரிரை நீக்கிப் பிணம் என்று பேர் இட்டுச் சூரை அம் காட்டு இடைக் கொண்டு போய் சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார் களே. |
4 | காலும் இரண்டு முகட்டு அலக் கென்று உள பாலுள் பரும் கழி முப்பத்து இரண்டு உள மேல் உள கூரை பிரியும் பிரிந்தால் முன் போல் உயிர் மீளப் புக அறியாதே. |
5 | சீக்கை விளைந்தது செய்வினை முட்டு இற்ற ஆக்கை பிரிந்த அலகு பழுத்தது மூக்கினில் கைவைத்து மூடு இட்டுக் கொண்டுபோய்க் காக்கைக்குப் பலி காட்டிய வாறே. |
6 | அடப் பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார் மடக் கொடியா ரொடு மந்தணம் கொண்டார் இடப் பக்கமே இறை நொந்தது என்றார் கிடக்கப் படுத்தார் கிடந்து ஒழிந்தாரே. |
7 | மன்றத்தே நம்பி மாடம் எடுத்தது மன்றத்தே நம்பி சிவிகை பெற்று ஏறினான் மன்றத்தே நம்பி முக்கோடி வழங்கினான் சென்றத்தா என்னத் திரிந்திலன் தானே. |
8 | வாசந்தி பேசி மணம் புணர்ந்த அப்பதி நேசம் தெவிட்டி நினைப்பு ஒழிவார் பின்னை ஆ சந்தி மேல் வைத்து அமைய அழுதிட்டுப் பாசம் தீ சுட்டுப் பலி அட்டினார்களே. |
9 | கைவிட்டு நாடிக் கருத்து அழிந்து அச்சற நெய் அட்டிச் சோறு உண்ணும் ஐவரும் போயினார் மை இட்ட கண்ணாளும் மாடும் இருக்கவே மெய் விட்டுப் போக விடை கொள்ளும் ஆறே. |
10 | பந்தல் பிரிந்தது பண்டாரம் கட்டு அற்ற ஒன்பது வாசலும் ஒக்க அடைத்தன துன்புறு காலம் துரிசுவர மேல் மேல் அன்பு உடையார்கள் அழுது அகன்றார் களே. |
11 | நாட்டுக்கு நாயகன் நம் ஊர்த் தலைமகன் காட்டுச் சிவிகை ஒன்று ஏறிக் கடைமுறை நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறை கொட்ட நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே. |
12 | முப்பதும் முப்பதும் முப்பத்து அறுவரும் செப்ப மதிள் உடைக் கோயிலுள் வாழ்பவர் செப்ப மதிள் உடைக் கோயில் சிதைந்த பின் ஒப்ப அனைவரும் ஓட்டு எடுத்தார் களே. |
13 | மது ஊர் குழலியும் மாடும் மனையும் இது ஊர் ஒழிய இதணம் அது ஏறிப் பொது ஊர் புறம் சுடு காடு அது நோக்கி மது ஊர வாங்கியே வைத்து அகன்றார்களே. |
14 | வைச்ச அகல் உற்றது கண்டு மனிதர்கள் அச்ச அகலாது என நாடும் அரும்பொருள் பிச்சது வாய்ப்பின் தொடர் உறு மற்றவர் எச்ச அகலா நின்று இளைக்கின்ற வாறே. |
15 | ஆர்த்து எழும் சுற்றமும் பெண்டிரும் மக்களும் ஊர்த் துறைக் காலே ஒழிவர் ஒழிந்த பின் வேர்த் தலை போக்கி விறகு இட்டு எரிமூட்டி நீர்த் தலை மூழ்குவர் நீதி இலோரே. |
16 | வளத்து இடை முற்றத் தோர் மா நிலம் முற்றும் குளத்தின் மண் கொண்டு குயவன் வனைந்தான் குடம் உடைந்தால் அவை ஓடு என்று வைப்பர் உடல் உடைந்தால் இறைப் போதும் வையாரே. |
17 | ஐந்து தலைப் பறி ஆறு சடை உள சந்தவை முப்பது சார்வு பதினெட்டுப் பந்தலும் ஒன்பது பந்தி பதினைந்து வெந்து கிடந்தது மேல் அறியோமே. |
18 | அத்திப் பழமும் அறைக்கீரை நல்வித்தும் கொத்தி உலைப் பெய்து கூழ் அட்டு வைத்தனர் அத்திப் பழத்தை அறைக் கீரை வித்து உண்ணக் கத்தி எடுத்தவர் காடுபுக்காரே. |
19 | மேலும் முகடு இல்லை கீழும் வடிம்பு இல்லை காலும் இரண்டு முகட்டு அலக் கொன்று உண்டு ஓலையான் மேய்ந்தவர் ஊடு வரியாமை வேலையான் மேய்ந்தது ஓர் வெள்ளித் தளிகையே. |
20 | கூடம் கிடந்தது கோலங்கள் இங்கு இல்லை ஆடும் இலையமும் அற்றது அறுதலும் பாடுகின்றார் சிலர் பண்ணில் அழுத்தி இட்டுத் தேடிய தீயினில் தீய வைத்தார்களே. |
21 | முட்டை பிறந்தது முந்நூறு நாளினில் இட்டது தான் இலை ஏதேனும் ஏழைகாள் பட்டது பார் மணம் பன்னிரண்டு ஆண்டினில் கெட்டது எழு பதில் கேடு அறியீரே. |
22 | இடிஞ்சி இல் இருக்க விளக்கு எரி கொண்டான் முடிஞ்சது அறியார் முழங்குவர் மூடர் விடிஞ்சி இருளாவது அறியா உலகம் படிஞ்சு கிடந்தது பதைக்கின்ற வாறே. |
23 | மடல் விரி கொன்றையான் மாயன் படைத்த உடலும் உயிரும் உருவம் தொழாமல் இடர் படர்ந்து ஏழா நரகில் கிடப்பர் குடர் பட வெம் தமர் கூப்பிடும் ஆறே. |
24 | குடையும் குதிரையும் கொற்ற வாளும் கொண்டு இடையும் அக்காலம் இருந்து நடுவே புடையும் மனிதனார் போகும் அப்போதே அடையும் இடம் வலம் ஆர் உயிர் ஆமே. |
25 | காக்கை கவரில் என் கண்டார் பழிக்கில் என் பால் துளி பெய்யில் என் பல்லோர் பழிச்சில் என் தோல் பையுள் நின்று தொழில் அறச் செய்து ஊட்டும் கூத்தன் புறப்பட்டுப் போன இக் கூட்டையே. |
3. செல்வம் நிலையாமை |
1 | அருளும் அரசனும் ஆனையும் தேரும் பொருளும் பிறர் கொள்ளப் போவதன் முன்னம் தெருளும் உயிரொடும் செல்வனைச் சேரின் மருளும் பினையவன் மாதவம் அன்றே. |
2 | இயக்கு உறுதிங்கள் இருள் பிழம்பு ஒக்கும் துயக்கு உறு செல்வத்தைச் சொல்லவும் வேண்டா மயக்கு அற நாடுமின் வானவர் கோனைப் பெயல் கொண்டல் போலப் பெரும் செல்வம் ஆமே. |
3 | தன்னது சாயை தனக்கு உதவாது கண்டு என்னது மாடு என்று இருப்பார்கள் ஏழைகள் உன் உயிர் போம் உடல் ஒக்கப் பிறந்தது கண் அது கண் ஒளி கண்டு கொளீரே. |
4 | ஈட்டிய தேன் பூ மணம் கண்டு இரதமும் கூட்டிக் கொணர்ந்து ஒரு கொம்பு இடை வைத்திடும் ஓட்டித் துரந்திட்டது வலியார் கொளக் காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே. |
5 | தேற்றத் தெளிமின் தெளிந்தீர் கலங்கன் மின் ஆற்றுப் பெருக்கில் கலக்கி மலக்காதே மாற்றிக் களைவீர் மறுத்து உங்கள் செல்வத்தைக் கூற்றன் வரும் கால் குதிக்கலும் ஆமே. |
6 | மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே கவிழ்கின்ற நீர் மிசைச் செல்லும் கலம் போல் அவிழ்கின்ற ஆக்கைக்கும் ஓர் வீடு பேறு ஆகச் சிமிழ் ஒன்று வைத்தமை தேர்ந்து அறியாரே. |
7 | வாழ்வும் மனைவியும் மக்கள் உடன் பிறந் தாரும் அளவேது எமக்கு என்பர் ஒண்பொருள் மேவும் அதனை விரவு செய்வார் கட்குக் கூவும் துணை ஒன்று கூடலும் ஆமே. |
8 | வேட்கை மிகுத்தது மெய்கொள்வார் இங்கு இலை பூட்டும் தறி ஒன்று போம் வழி ஒன்பது நாட்டிய தாய் தமர் வந்து வணங்கிப் பின் காட்டிக் கொடுத்தவர் கை விட்ட வாறே. |
9 | உடம் பொடு உயிரிடை விட்டோடும் போது அடும் பரிசு ஒன்று இல்லை அண்ணலை எண்ணும் விடும் பரிசு ஆய்நின்ற மெய்ந் நமன் தூதர் சுடும் பரிசத்தையும் சூழ்கிலாரே. |
4. இளமை நிலையாமை |
1 | கிழக்கு எழுந்து ஓடிய ஞாயிறு மேற்கே விழக் கண்டும் தேறார் விழி இலா மாந்தர் குழக் கன்று மூத்து எருதாய்ச் சில நாளில் விழக் கண்டும் தேறார் வியன் உலகோரே. |
2 | ஆண்டு பலவும் கழிந்தன அப்பனைப் பூண்டு கொண்டாரும் புகுந்து அறிவார் இல்லை நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினும் தூண்டு விளக்கின் சுடர் அறியாரே. |
3 | தேய்ந்து அற்று ஒழிந்த இளமை கடை முறை ஆய்ந்து அற்ற பின்னை அரிய கருமங்கள் பாய்ந்து அற்ற கங்கைப் படர் சடை நந்தியை ஓர்ந்து உற்றுக் கொள்ளும் உயிர் உள்ள போதே. |
4 | விரும்புவர் முன் என்னை மெல் இயல் மாதர் கரும்பு தகர்த்துக் கடைக் கொண்ட நீர் போல் அரும்பு ஒத்த மென் முலை ஆய் இழையார்க்குக் கரும்பு ஒத்துக் காஞ்சிரங் காயும் ஒத்தேனே. |
5 | பாலன் இளையன் விருத்தன் என நின்ற காலம் கழிவன கண்டும் அறிகிலார் ஞாலம் கடந்து அண்டம் ஊடு அறுத்தான் அடி மேலும் கிடந்து விரும்புவன் யானே. |
6 | காலை எழுந்தவர் நித்தலும் நித்தலும் மாலை படுவதும் வாழ்நாள் கழிவதும் சாலும் அவ் ஈசன் சலவியன் ஆகிலும் ஏல நினைப்பவர்க்கு இன்பம் செய்தானே. |
8 | கண்ணதும் காய் கதி ரோனும் உலகினை உள் நின்று அளக்கின்றது ஒன்றும் அறிகிலார் விண் உறுவாரையும் வினை உறுவாரையும் எண் உறும் முப்பதில் ஈர்ந்து ஒழிந்தாரே. |
9 | எய்திய நாளில் இளமை கழியாமை எய்திய நாளில் இசையினால் ஏத்துமின் எய்திய நாளில் எறிவது அறியாமல் எய்திய நாளில் இருந்து கண்டேனே. |
5. உயிர் நிலையாமை |
1 | தழைக் கின்ற செம் தளிர்த் தண் மலர்க் கொம்பில் இழைக் கின்றது எல்லாம் இறக்கின்ற கண்டும் பிழைப்பு இன்றி எம்பெருமான் அடி ஏத்தார் அழைக்கின்ற போது அறியார் அவர் தாமே. |
2 | ஐவர்க்கு ஒரு செய் விளைந்து கிடந்தது ஐவரும் அச் செய்யைக் காத்து வருவார்கள் ஐவர்க்கும் நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச் செய்யைக் காவல் விட்டாரே. |
3 | மத்தளி ஒன்று உள தாளம் இரண்டு உள அத்துள்ளே வாழும் அரசரும் அஞ்சு உள்ள அத்துள்ளே வாழும் அரசனும் அங்கு உளன் மத்தளி மண்ணாய் மயங்கிய வாறே. |
4 | வேங்கட நாதனை வேதாந்தக் கூத்தனை வேங்கடத்து உள்ளே விளையாடு நந்தியை வேங்கடம் என்றே விரகு அறியாதவர் தாங்க வல்லார் உயிர் தாம் அறியாரே. |
5 | சென்று உணர்வான் திசை பத்தும் திவாகரன் அன்று உணர்வால் அளக்கின்றது அறிகிலர் நின்று உணரார் இந் நிலத்தின் மனிதர்கள் பொன்று உணர்வாரில் புணர்க்கின்ற மாயமே. |
6 | மாறு திருத்தி வரம்பு இட்ட பட்டிகை பீறும் அதனைப் பெரிது உணர்ந்தார் இலை கூறும் கருமயிர் வெண்மயிர் ஆவது ஈறும் பிறப்பும் ஓர் ஆண்டு எனும் நீரே. |
7 | துடுப்பு இடு பானைக்கும் ஒன்றே அரிசி அடுப்பு இடு மூன்றிற்கும் அஞ்சு எரிகொள்ளி அடுத்து எரியாமல் கொடுமின் அரிசி விடுத்தன நாள்களும் மேல் சென்றனவே. |
8 | இன்புறு வண்டு இங்கு இனமலர் மேல் போய் உண்பது வாச மது போல் உயிர் நிலை இன்பு உற நாடி நினைக்கிலும் மூன்று ஒளி கண்புற நின்ற கருத்துள் நில்லானே. |
9 | ஆம் விதி நாடி அறம் செய்மின் அந்நிலம் போம் விதி நாடிப் புனிதனைப் போற்று மின் நாம் விதி வேண்டும் அது என் சொலின் மானிடர் ஆம் விதி பெற்ற அருமை வல்லார்க்கே. |
10 | அவ்வியம் பேசி அறம் கெட நில்லன்மின் வெவ்வியன் ஆகிப் பிறர்பொருள் வவ்வன்மின் செவ்வியன் ஆகிச் சிறந்து உண்ணும் போது ஒரு தவ்விக் கொடு உண்மின் தலைப் பட்ட போதே. |
6. கொல்லாமை |
1 | பற்று ஆய நல்குரு பூசைக்கும் பல்மலர் மற்று ஓர் அணுக்களைக் கொல்லாமை ஒண் மலர் நற்றார் நடுக்கு அற்ற தீபமும் சித்தமும் உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே. |
2 | கொல்லிடு குத்து என்று கூறிய மாக்களை வல்லடிக் காரர் வலிக் கயிற்றால் கட்டிச் செல்லிடு நில் என்று தீவாய் நரகு இடை நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே. |
7.புலால் மறுத்தல் |
1 | பொல்லாப் புலாலை நுகரும் புலையரை எல்லாரும் காண இயமன் தன் தூதுவர் செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில் மல்லாக்கத் தள்ளி மறித்து வைப்பாரே. |
2 | கொலையே களவுகள் காமம் பொய் கூறல் மலைவான பாதகம் ஆம் அவை நீக்கித் தலை ஆம் சிவன் அடி சார்ந்து இன்பம் சார்ந்தோர்க்கு இலையாம் இவை ஞான ஆனந்தத்து இருத்தலே. |
3 | கொன்றிலாரைக் கொலச் சொலிக் கூறினார் தின்றிலாரைத் தினச் சொலித் தெண்டித்தார் பன்றியாப் படியில் பிறந்து ஏழ் நரகு ஒன்றிவார் அரன் ஆணையிது உண்மையே. |
8. பிறன் மனை நயவாமை |
1 | ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே காத்த மனையாளைக் காமுறும் காளையர் காய்ச்ச பலாவின் கனி உண்ண மாட்டாமல் ஈச்சம் பழத்துக்கு இடர் உற்ற வாறே. |
2 | திருத்தி வளர்த்த ஓர் தேமாங் கனியை அருத்தம் என்று எண்ணி அறையில் புதைத்துப் பொருத்தம் இலாத புளிமாங் கொம்பு ஏறிக் கருத்து அறியாதவர் கால் அற்றவாறே. |
3 | பொருள் கொண்ட கண்டனும் போதகை யாளும் இருள் கொண்ட மின்வெளி கொண்டு நின்றோரும் மருள் கொண்டு மாதர் மயல் உறு வார்கள் மருள் கொண்ட சிந்தையை மாற்ற கில்லாரே. |
9. மகளிர் இழிவு |
1 | இலை நல ஆயினும் எட்டி பழுத்தால் குலை நலவாம் கனி கொண்டு உணல் ஆகா முலை நலம் கொண்டு முறுவல் செய்வார் மேல் விலகுறு நெஞ்சினை வெய்து கொள்ளீரே. |
2 | மனை புகுவார்கள் மனைவியை நாடில் சுனை புகு நீர் போல் சுழித்து உடன் வாங்கும் கனவு அது போலக் கசிந்து எழும் இன்பம் நனவு அது போலவும் நாட ஒண்ணாதே. |
3 | இயல் உறும் வாழ்க்கை இளம் பிடி மாதர் புயன் உறப் புல்லிப் புணர்ந்தவர் எய்தும் மயல் உறும் வானவர் சார் இது என்பார் அயல் உறப் பேசி அகன்று ஒழிந்தாரே. |
4 | வையகத்தே மடவா ரொடும் கூடி என் மெய் அகத்தோர் உளம் வைத்த விதி அது கையகத்தே கரும்பு ஆலையின் சாறுகொள் மெய்யகத்தே பெறும் வேம்பு அதுவாமே. |
5 | கோழை ஒழுக்கம் குளம் மூடு பாசியில் ஆழ நடுவார் அளப்பு உறுவார்களைத் தாழத் துடக்கித் தடுக்க இல்லா விடில் பூழை நுழைந்தவர் போகின்ற வாறே. |
10. நல்குரவு |
1 | புடைவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை அடையப் பட்டார்களும் அன்பு இலர் ஆனார் கொடை இல்லை கோள் இல்லை கொண்டாட்டம் இல்லை நடை இல்லை நாட்டில் இயங்கு கின்றார் கட்கே. |
2 | பொய்க்குழி தூர்ப்பான் புலரி புலருது என்று அக்குழி தூர்க்கும் அரும் பண்டம் தேடுவீர் எக்குழி தூர்த்தும் இறைவனை ஏத்துமின் அக்குழி தூரும் அழுக்கு அற்ற போதே. |
3 | கல்குழி தூரக் கனகமும் தேடுவர் அக்குழி தூர்க்கை யாவர்க்கும் அரியது அக்குழி தூர்க்கும் அறிவை அறிந்தபின் அக்குழி தூரும் அழுக்கு அற்றவாறே. |
4 | தொடர்ந்து எழு சுற்றம் வினையினும் தீய கடந்தோர் ஆவி கழிவதன் முன்னே உடந்து ஒரு காலத்து உணர் விளக்கு ஏற்றித் தொடர்ந்து நின்று அவ்வழி தூர்க்கலும் ஆமே. |
5 | அறுத்தன ஆறினும் ஆன் இனம் மேவி அறுத்தனர் ஐவரும் எண் இலி துன்பம் ஒறுத்தன வல்வினை ஒன்று அல்ல வாழ்வை வெறுத்தனன் ஈசனை வேண்டி நின்றானே. |
11. அன்புடைமை |
1 | அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவு இலார் அன்பே சிவம் ஆவது ஆரும் அறிகிலார் அன்பே சிவம் ஆவது ஆரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே. |
2 | பொன்னைக் கடந்து இலங்கும் புலித் தோலினன் மின்னிக் கிடந்து மிளிரும் இளம் பிறை துன்னிக் கிடந்த சுடு பொடி ஆடிக்குப் பின்னிக் கிடந்தது என் பேர் அன்பு தானே. |
3 | என்பே விறகா இறைச்சி அறுத்து இட்டுப் பொன் போல் கனலில் பொரிய வறுப்பினும் அன்போடு உருகி அகம் குழைவார்க்கு அன்றி என் போல் மணியினை எய்த ஒண்ணாதே. |
4 | ஆர்வம் உடையவர் காண்பார் அரன் தன்னை ஈரம் உடையவர் காண்பார் இணை அடி பாரம் உடையவர் காண்பார் பவம் தன்னைக் கோர நெறிகொடு கொங்கு புக்காரே. |
5 | என் அன்பு உருக்கி இறைவனை ஏத்துமின் முன் அன்பு உருக்கி முதல்வனை நாடுமின் பின் அன்பு உருக்கி பெரும் தகை நந்தியும் தன் அன்பு எனக்கே தலை நின்ற வாறே. |
6 | தான் ஒரு காலம் சயம்பு என்று ஏத்தினும் வான் ஒரு காலம் வழித்துணை ஆய் நிற்கும் தேன் ஒரு பால் திகழ் கொன்றை அணி சிவன் தான் ஒரு வண்ணம் என் அன்பில் நின்றானே. |
7 | முன் படைத்து இன்பம் படைத்த முதல் இடை அன்பு அடைத்து எம் பெருமானை அறிகிலார் வன்பு அடைத்து இந்த அகல் இடம் வாழ்வினில் அன்பு அடைத்தான் தன் அகல் இடத் தானே. |
8 | கருத்து உறு செம் பொன் செய் காய் கதிர்ச் சோதி இருத்தியும் வைத்தும் இறைவன் என்று ஏத்தியும் அருத்தியுள் ஈசனை ஆர் அருள் வேண்டில் விருத்தி கொடுத்திடும் விண்ணவர் கோனே. |
9 | நித்தலும் துஞ்சும் பிறப்பையும் செய்தவன் வைத்த பரிசு அறிந்தேயும் மனிதர்கள் இச்சை உளே வைப்பர் எந்தைபிரான் என்று நச்சியே அண்ணலை நாடு கிலாரே. |
10 | அன்பின் உள்ளான் புறத்தான் உடலாய் உளான் முன் பின் உள்ளான் முனிவர்க்கும் பிரான் அவன் அன்பின் உள் ஆகி அமரும் அரும் பொருள் அன்பின் உள்ளார்க்கே அணை துணை ஆமே. |
12. அன்பு செய்வாரை அறிவன் சிவன் |
1 | இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும் உகந்து அருள் செய்திடும் உத்தம நாதன் கொழுந்து அன்பு செய்து அருள் கூரவல்லார்க்கு மகிழ்ந்து அன்பு செய்யும் அருள் அதுவாமே. |
2 | இன்பப் பிறவிக்கு இயல்வது செய்தவன் துன்பப் பிறவித் தொழில் பல என்னினும் அன்பில் கலவி செய்து ஆதிப் பிரான் வைத்த முன்பு இப் பிறவி முடிவது தானே. |
3 | அன்பு உறு சிந்தையின் மேல் எழும் அவ் ஒளி இன்பு உறு கண்ணியொடு ஏற்க இசைந்தன துன்பு உறு கண்ணி ஐந்து ஆடும் துடக்கு அற்று நண்பு உறு சிந்தையை நாடுமின் நீரே. |
4 | புணர்ச்சியுள் ஆயிழை மேல் அன்பு போல உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்க வல்லாருக்கு உணர்ச்சி இல்லாது குலாவி உலாவி அணைத்தலும் இன்பம் அது இது ஆமே. |
5 | உற்று நின்றாரொடு அத்தகு சோதியைச் சித்தர்கள் என்றும் தெரிந்து அறிவார் இல்லை பத்திமையாலே பணிந்து அடியார் தொழ முத்தி கொடுத்து அவர் முன்பு நின்றானே. |
6 | கண்டேன் கமழ் தரு கொன்றையினான் அடி கண்டேன் கரி உரியான் தன் கழல் இணை கண்டேன் கமல மலர் உறைவான் அடி கண்டேன் கழல் அது என் அன்பினுள் யானே. |
7 | நம்பனை நானா விதப் பொருள் ஆகும் என்று உம்பரில் வானவர் ஓதும் தலைவனை இன்பனை இன்பத்து இடை நின்று இரதிக்கும் அன்பனை யாரும் அறிய கிலாரே. |
8 | முன்பு பிறப்பும் இறப்பும் அறியாதார் அன்பில் இறைவனை யாம் அறிவோம் என்பர் இன்பப் பிறப்பும் இறப்பும் இலான் நந்தி அன்பில் அவனை அறிய கிலாரே. |
9 | ஈசன் அறியும் இராப் பகலும் தன்னைப் பாசத்துள் வைத்துப் பரிவு செய்வார்களைத் தேசு உற்று அறிந்து செயல் அற்று இருந்திடில் ஈசன் வந்து எம் இடை ஈட்டி நின்றானே. |
10 | விட்டுப் பிடிப்பது என் மே தகு சோதியைத் தொட்டுத் தொடர்வன் தொலையாப் பெருமையை எட்டும் என் ஆர் உயிராய் நின்ற ஈசனை மட்டுக் கலப்பது மஞ்சனம் ஆமே. |
13. கல்வி |
1 | குறிப்பு அறிந்தேன் உடல் உயிர் அது கூடிச் செறிப்பு அறிந்தேன் மிகு தேவர் பிரானை மறிப்பு அறியாது வந்து உள்ளம் புகுந்தான் கறிப்பு அறியா மிகும் கல்வி கற்றேனே. |
2 | கற்று அறிவாளர் கருதிய காலத்துக் கற்று அறிவாளர் கருத்தில் ஓர் கண் உண்டு கற்று அறிவாளர் கருதி செய்யும் கற்று அறி காட்டக் கயல் உள ஆக்குமே. |
3 | நிற்கின்ற போதே நிலை உடையான் கழல் கற்கின்ற செய்மின் கழிந்து அறும் பாவங்கள் சொல் குன்றல் இன்றித் தொழுமின் தொழுதபின் மற்று ஒன்று இலாத மணி விளக்கு ஆமே. |
4 | கல்வி உடையார் கழிந்து ஓடிப் போகின்றார் பல்லி உடையார் பாம்பு அரிந்து உண்கின்றார் எல்லியும் காலையும் ஏத்தும் இறைவனை வல்லியுள் வாதித்த காயமும் ஆமே. |
5 | துணை அதுவாய் வரும் தூய நல் சோதி துணை அதுவாய் வரும் தூய நல் சொல் ஆம் துணை அதுவாய் வரும் தூய நல் கந்தம் துணை அதுவாய் வரும் தூய நல் கல்வியே. |
6 | நூல் ஒன்று பற்றி நுனி ஏற மாட்டாதார் பால் ஒன்று பற்றினால் பண்பின் பயன் கெடும் கோல் ஒன்று பற்றினால் கூடா பறவைகள் மால் ஒன்று பற்றி மயங்குகின்றார்களே. |
7 | ஆய்ந்து கொள்வார்க்கு அரன் வெளிப்படும் தோய்ந்த நெருப்பு அது தூய் மணி சிந்திடும் ஏய்ந்த இளமதி எட்ட வல்லார் கட்கு வாய்ந்த மனம் மல்கு நூல் ஏணி ஆமே. |
8 | வழித்துணையாய் மருந்தாய் இருந்தார் முன் கழித்துணையாய் கற்று இலாதவர் சிந்தை ஒழித் துணை யாம் உம்பராய் உலகு ஏழும் வழித்துணை ஆம் பெரும் தன்மை வல்லானே. |
9 | பற்று அது பற்றில் பரமனைப் பற்றுமின் முற்றது எல்லா முதல்வன் அருள் பெறில் கிற்ற விரகில் கிளர் ஒளி வானவர் கற்றவர் பேர் இன்பம் உற்று நின்றாரே. |
10 | கடல் உடையான் மலையான் ஐந்து பூதத்து உடல் உடையான் பல ஊழிதொறு ஊழி அடல் விடை யேறும் அமரர்கள் நாதன் இடம் உடையார் நெஞ்சத்தில் இருந்தானே. |
14. கேள்வி கேட்டு அமைதல் |
1 | அறம் கேட்டும் அந்தணர் வாய்மொழி கேட்டும் மறம் கேட்டும் வானவர் மந்திரம் கேட்டும் புறம் கேட்டும் பொன் மேனி எம் ஈசன் திறம் கேட்டும் பெற்ற சிவ கதி தானே. |
2 | தேவர் பிரான் தனைத் திவ்விய மூர்த்தியை யாவர் ஒருவர் அறிவார் அறிந்தபின் ஓதுமின் கேள்மின் உணர்மின் உணர்ந்த பின் ஓதி உணர்ந்தவர் ஓங்கி நின்றாரே. |
3 | மாயன் பணி கேட்பது மா நந்தி வேண்டின் அயன் பணி கேட்பது அரன் பணியால் ஏ சிவன் பணி கேட்பவர் தேவரும் ஆவர் பயன் பணி கேட்பது பற்று அதுவாமே. |
4 | பெருமான் இவன் என்று பேசி இருக்கும் திருமானிடர் பின்னைத் தேவரும் ஆவர் வரு மாதவர்க்கு மகிழ்ந்து அருள் செய்யும் அருமாதவத்து எங்கள் ஆதிப் பிரானே. |
5 | ஈசன் அருளும் இறப்பும் பிறப்பையும் பேசி இருந்து பிதற்றி மகிழ்வு எய்தி நேசமும் ஆகும் நிகழ் ஒளியாய் நின்று வாச மலர்க் கந்தம் மன்னி நின்றானே. |
6 | விழுப்பமும் கேள்வியும் மெய் நின்ற ஞானத்து ஒழுக்கமும் சிந்தை உணர்கின்ற போது வழுக்கி விடாவிடில் வானவர் கோனும் இழுக்கு இன்றி எண் இலி காலம் அது ஆமே. |
7 | சிறியார் மணல் சோற்றில் தேக்கு இடுமாப் போல் செறிவால் அனுபோகம் சித்திக்கும் என்னில் குறியாதது ஒன்றைக் குறியாதார் தம்மை அறியாது இருந்தார் அவர் ஆவர் அன்றே. |
8 | உறு துணை ஆவது உயிரும் உடம்பும் உறு துணை ஆவது உலகு உறு கேள்வி செறி துணை ஆவது சிவன் அடிச் சிந்தை பெறு துணை கேட்கில் பிறப்பு இல்லை தானே. |
9 | புகழ நின்றார்க்கும் புராணன் எம் ஈசன் இகழ நின்றார்க்கும் இடும்பைக்கு இடமாம் மகிழ நின்று ஆதியை ஓதி உணராக் கழிய நின்றார்க்கு ஒரு கல் பசுவாமே. |
10 | வைத்து உணர்ந்தான் மனத்தோடும் வாய் பேசி ஒத்து உணர்ந்தான் உரு ஒன்றோடு ஒன்று ஒவ்வாது அச்சு உழன்று ஆணி கலங்கினும் ஆதியை நச்சு உணர்ந்தார்க்கே நணுகலும் ஆமே. |
15. கல்லாமை |
1 | கல்லாதவரும் கருத்து அறி காட்சியை வல்லார் எனில் அருள் கண்ணான் மதித்து உளோர் கல்லாதார் உண்மை பற்றா நிற்பர் கற்றோரும் கல்லாதார் இன்பம் காணு கிலாரே. |
2 | வல்லார்கள் என்றும் வழி ஒன்றி வாழ்கின்றார் அல்லாதவர்கள் அறிவுபல என்பார் எல்லா இடத்தும் உளன் எங்கள்தம் இறை கல்லாதவர்கள் கலப்பு அறியாரே. |
3 | நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து நில்லாக் குரம்பை நிலை என்று உணர்வீர்காள் எல்லா உயிர்க்கும் இறைவனே ஆயினும் கல்லாதார் நெஞ்சத்துக் காண ஒண்ணாதே. |
4 | கில்லேன் வினை துயர் ஆக்கும் மயல் ஆனேன் கல்லேன் அரன் நெறி அறியாத் தகைமையின் வல்லேன் வழங்கும் பொருளே மனத்தின் உள் கல்லேன் கழிய நின்று ஆட வல்லேனே. |
5 | நில்லாது சீவன் நிலை அன்று என எண்ணி வல்லார் அறத்தும் தத்துவத்து உளும் ஆயினோர் கல்லா மனித்தர் கயவர் உலகினில் பொல்லா வினைத் துயர் போகம் செய்வாரே. |
6 | விண்ணினின் உள்ளே விளைந்த விளங்கனி கண்ணினின் உள்ளே கலந்து அங்கு இருந்தது மண்ணினின் உள்ளே மதித்து மதித்து நின்று எண்ணி எழுதி இளைத்து விட்டாரே. |
7 | கணக்கு அறிந்தார்க்கு அன்றிக் காண ஒண்ணாது கணக்கு அறிந்தார்க்கு அன்றிக்கை கூடா காட்சி கணக்கு அறிந்து உண்மையைக் கண்டு அண்ட நிற்கும் கணக்கு அறிந்தார் கல்வி கற்று அறிந்தாரே. |
8 | கல்லாத மூடரைக் காணவும் ஆகாது கல்லாத மூடர் சொல் கேட்கக் கடன் அன்று கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம் கல்லாத மூடர் கருத்து அறியாரே. |
9 | கற்றும் சிவஞானம் இல்லாக் கலதிகள் சுற்றமும் வீடார் துரிசு அறார் மூடர்கள் மற்றும் பல திசை காணார் மதி இலோர் கற்று அன்பில் நிற்போர் கணக்கு அறிந்தார்களே. |
10 | ஆதிப் பிரான் அமரர்க்கும் பரஞ்சுடர் சோதி அடியார் தொடரும் பெரும் தெய்வம் ஓதி உணர வல்லோம் என்பர் உள் நின்ற சோதி நடத்தும் தொடர் அறியாரே. |
16. நடுவு நிலைமை |
1 | நடுவு நின்றார்க்கு அன்றி ஞானமும் இல்லை நடுவு நின்றார்க்கு நரகமும் இல்லை நடுவு நின்றார் நல்ல தேவரும் ஆவர் நடுவு நின்றார் வழி யானும் நின்றேனே. |
2 | நடுவு நின்றான் நல்ல கார் முகில் வண்ணன் நடுவு நின்றான் நல்ல நால் மறை ஓதி நடுவு நின்றார் சிலர் ஞானிகள் ஆவோர் நடுவு நின்றார் நல்ல நம்பனும் ஆமே. |
3 | நடுவு நின்றார் சிலர் ஞானிகள் ஆவர் நடுவு நின்றார் சிலர் தேவரும் ஆவர் நடுவு நின்றார் சிலர் நம்பனும் ஆவர் நடுவு நின்றாரொடு யானும் நின்றேனே. |
4 | தோன்றிய எல்லாம் துடைப்பன் அவன் அன்றி ஏன்று நின்றார் என்றும் ஈசன் இணை அடி மூன்று நின்றார் முதல்வன் திரு நாமத்தை நான்று நின்றார் நடு ஆகி நின்றாரே. |
17. கள்ளுண்ணாமை |
1 | கழுநீர்ப் பசுப் பெறில் கயம் தொறும் தேரா கழுநீர் விடாய்த்துத் தம் காயம் சுருக்கும் முழுநீர்க் கள் உண்போர் முறைமை அகன்றோர் செழுநீர்ச் சிவன் தன் சிவ ஆனந்தத் தேறலே. |
2 | சித்தம் உருக்கிச் சிவம் ஆம் சமாதியில் ஒத்த சிவ ஆனந்தத்து ஓவாத தேறலைச் சுத்த மது உண்ணச் சுவ ஆனந்தம் விட்டிடா நித்தல் இருத்தல் கிடத்தல் கீழ்க் காலே. |
3 | காமமும் கள்ளும் கலதி கட்கே ஆகும் மா மலமும் சமயத்துள் மயல் உறும் போ மதி ஆகும் புனிதன் இணை அடி ஓமய ஆனந்தத் தேறல் உணர்வு உண்டே. |
4 | வாமத்தோர் தாமும் மது உண்டு மாள்பவர் காமத்தோர் காமக் கள் உண்டே கலங்குவர் ஓமத்தோர் உள் ஒளிக்கு உள்ளே உணர்வார்கள் நாமத்தோர் அன்றே நணுகுவர் தாமே. |
5 | உள் உண்மை ஓரார் உணரார் பசு பாசம் வள்ளன்மை நாதன் அருளினின் வாழ்வு உறார் தெள் உண்மை ஞானச் சிவயோகம் சேர் உறார் கள் உண்ணும் மாந்தர் கருத்து அறியாரே. |
6 | மயக்கும் சமய மலம் மன்னு மூடர் மயக்கும் மது உண்ணும் மா மூடர் தேரார் மயக்கு உறு மா மாயையை மாயையின் வீடு மயக்கில் தெளியின் மயக்கு உறும் அன்றே. |
7 | மயங்கும் தியங்கும் கள் வாய்மை அழிக்கும் இயங்கும் மடவார் தம் இன்பமே எய்தி முயங்கும் நயம் கொண்ட ஞானத்து முந்தார் இயங்கும் இடை அறா ஆனந்தம் எய்துமே. |
8 | இராப் பகல் அற்ற இடத்தே இருந்து பராக்கு அற ஆனந்தத் தேறல் பருகார் இராப் பகல் அற்ற இறை அடி இன்பத்து இராப் பகல் மாயை இரண்டு இடத்தேனே. |
9 | சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள் உண்பர் சத்தி அழிந்தது தம்மை மறத்தலால் சத்தி சிவ ஞானம் தன்னில் தலைப்பட்டுச் சத்திய ஞான ஆனந்தத்தில் சார்தலே. |
10 | சத்தன் அருள் தரில் சத்தி அருள் உண்டாம் சத்தி அருள் தரில் சத்தன் அருள் உண்டாம் சத்தி சிவம் ஆம் இரண்டும் தன் உள் வைக்கச் சத்தியம் எண் சித்தித் தன்மையும் ஆமே. |
11 | தத்துவம் நீக்கி மருள் நீக்கித் தான் ஆகிப் பொய்த்தவம் நீக்கி மெய்ப் போகத்துள் போகியே மெய்த்த சகம் உண்டு விட்டுப் பரானந்தச் சித்தி அது ஆக்கும் சிவ ஆனந்தத் தேறலே. |
12 | யோகிகள் கால் கட்டி ஒண் மதி ஆனந்தப் போத அமுதைப் பொசித்தவர் எண் சித்தி மோகியர் கள் உண்டு மூடராய் மோகம் உற்று ஆகும் மதத்தால் அறிவு அழிந்தாரே. |
இரண்டாம் தந்திரம்1. அகத்தியம் |
1 | நடுவு நில்லாது இவ் உலகம் சரிந்து கெடு கின்றது எம் பெருமான் என்ன ஈசன் நடு உள அங்கி அகத்திய நீ போய் முடுகிய வையத்து முன்னிர் என்றானே. |
2 | அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன் அங்கி உதயம் செய் மேல் பால் அவனொடு மங்கி உதயம் செய் வடபால் தவமுனி எங்கும் வளம் கொள் இலங்கு ஒளிதானே. |
2. பதிவலியில் வீரட்டம் எட்டு |
1 | கருத்துறை அந்தகன் தன்போல் அசுரன் வரத்தின் உலகத்து உயிர்களை எல்லாம் வருத்தம் செய்தான் என்றும் வானவர் வேண்டக் குருத்து உயர் சூலம் கைக் கொண்டு கொன்றானே. |
2 | கொலையில் பிழைத்த பிரசா பதியைத் தலையைத் தடிந்திட்டுத் தான் அங்கி இட்டு நிலை உலகுக்கு இவன் வேண்டும் என்று எண்ணித் தலையை அரிந்திட்டுச் சந்தி செய்தானே. |
3 | எங்கும் பரந்தும் இரு நிலம் தாங்கியும் தங்கும் படித் தவன் தாள் உணர் தேவர்கள் பொங்கும் சினத்துள் அயன் தலை முன் அற அங்கு அச்சுதனை உதிரம் கொண்டானே. |
4 | எங்கும் கலந்தும் என் உள்ளத்து எழுகின்ற அங்க முதல்வன் அருமறை ஓதிபால் பொங்கும் சலந்தரன் போர் செய்ய நீர்மையின் அங்கு விரல் குறித்து ஆழி செய்தானே. |
5 | அப்பணி செம்சடை ஆதி புராதனன் முப்புரம் செற்றனன் என்பார்கள் மூடர்கள் முப்புரம் ஆவது மும் மலக் காரியம் அப்புரம் எய்தமை யார் அறிவாரே. |
6 | முத் தீக் கொளுவி முழங்கு எரி வேள்வியுள் அத்தி உரி அரன் ஆவது அறிகிலர் சத்தி கருதிய தாம் பல தேவரும் அத்தீயின் உள் எழுந்தன்று கொலையே. |
7 | மூலத் துவாரத்து மூளும் ஒருவனை மேலைத் துவாரத்து மேல் உற நோக்கி முன் கால் உற்றுக் காலனைக் காய்ந்து அங்கி யோகமாய் ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே. |
8 | இருந்த மனத்தை இசைய இருத்திப் பொருந்தி இலிங்க வழியது போக்கித் திருந்திய காமன் செயல் அழித்து அம்கண் அரும்தவ யோகம் கொறுக்கை அமர்ந்ததே. |
3. இலிங்க புராணம் |
1 | அடி சேர்வன் என்ன எம் ஆதியை நோக்கி முடி சேர் மலை மகனார் மகள் ஆகித் திடமார் தவம் செய்து தேவர் அறியப் படியார அர்ச்சித்துப் பத்தி செய்தாளே. |
2 | திரிகின்ற முப்புரம் செற்ற பிரானை அரியன் என்று எண்ணி அயர் உற வேண்டா பரி உடை யாளர்க்குப் பொய் அலன் ஈசன் பரிவொடு நின்று பரிசு அறிவானே. |
3 | ஆழி வலம் கொண்டு அயன் மால் இருவரும் ஊழி வலம் செய்ய ஒண் சுடர் ஆதியும் ஆழி கொடுத்தனன் அச்சுதற்கு அவ்வழி வாழி பிரமற்கும் வாள் கொடுத்தானே. |
4 | தாங்கி இருபது தோளும் தடவரை ஓங்க எடுத்தவன் ஒப்பு இல் பெருவலி ஆங்கு நெரித்து அமரா என்று அழைத்த பின் நீங்கா அருள் செய்தான் நின் மலன் தானே. |
5 | உறுவது அறி தண்டி ஒண் மணல் கூட்டி அறுவகை ஆன் ஐந்தும் ஆட்டத் தன் தாதை செறுவகை செய்து சிதைப்ப முனிந்து மறு மழுவால் வெட்டி மாலை பெற்றானே. |
6 | ஓடி வந்து எல்லாம் ஒருங்கிய தேவர்கள் வாடி முகமும் வருத்தத்துத் தாஞ் சென்று நாடி இறைவா நம என்று கும்பிட ஈடு இல் புகழோன் எழுக என்றானே. |
4. தக்கன் வேள்வி |
1 | தந்தை பிரான் வெகுண்டான் தக்கன் வேள்வியை வெம் தழல் ஊடே புறப்பட விண்ணவர் முந்திய பூசை முடியார் முறை கெட்டுச் சிந்தினர் அண்ணல் சினம் செய்த போதே. |
2 | சந்தி செயக் கண்டு எழுகின்ற அரிதானும் எந்தை இவன் அல்ல யாமே உலகினில் பந்தம் செய் பாசத்து வீழ்ந்து தவம் செய்ய அந்தம் இலானும் அருள் புரிந்தானே. |
3 | அப்பரிசே அயனார் பதி வேள்வியுள் அப்பரிசே அங்கி அதிசயம் ஆகிலும் அப்பரிசே அது நீர்மையை உள் கலந்து அப்பரிசே சிவன் ஆலிக் கின்றானே. |
4 | அப்பரிசே அயன் மால் முதல் தேவர்கள் அப்பரிசே அவர் ஆகிய காரணம் அப்பரிசு அங்கி உள நாளும் உள்ளிட்டு அப்பரிசு ஆகி அலர்ந்து இருந்தானே. |
5 | அலர்ந்து இருந்தான் என்று அமரர் துதிப்பக் குலம்தரும் கீழ் அங்கி கோள் உற நோக்கிச் சிவந்த பரம் இது சென்று கதுவ உவந்த பெருவழி ஓடி வந்தானே. |
6 | அரி பிரமன் தக்கன் அருக்கன் உடனே வருமதி வாலை வன்னி நல் இந்திரன் சிர முக நாசி சிறந்த கை தோள் தான் அரன் அருள் இன்றி அழிந்த நல்லோரே. |
7 | செவி மந்திரம் சொல்லும் செய் தவத் தேவர் அவி மந்திரத்தின் அடுக்களை கோலிச் செவி மந்திரம் செய்து தாம் உற நோக்கும் குவி மந்திரம் கொல் கொடியது ஆமே. |
8 | நல்லார் நவகுண்டம் ஒன்பதும் இன்புறப் பல்லார் அமரர் பரிந்து அருள் செய்க என வில்லால் புரத்தை விளங்கு எரி கோத்தவன் பொல்லா அசுரர்கள் பொன்றும் படிக்கே. |
9 | தெளிந்தார் கலங்கினும் நீ கலங்காதே அளித்து ஆங்கு அடைவது எம் ஆதிப் பிரானை விளிந்தான் அது தக்கன் வேள்வியை வீயச் சுளிந்தாங்கு அருள் செய்த தூய் மொழியானே. |
5. பிரளயம் |
1 | கருவரை மூடிக் கலந்து எழும் வெள்ளத்து இருவரும் கோ என்று இகல இறைவன் ஒருவனும் நீர் உற ஓங்கு ஒளி ஆகி அருவரையாய் நின்று அருள்புரிந்தானே. |
2 | அலை கடல் ஊடு அறுத்து அண்டத்து வானோர் தலைவன் எனும் பெயர் தான் தலை மேல் கொண்டு உலகார் அழல் கண்டு உள் விழாது ஓடி அலை வாயில் வீழாமல் அஞ்சல் என்றானே. |
3 | தண் கடல் விட்டது அமரரும் தேவரும் எண் கடல் சூழ் எம்பிரான் என்று இறைஞ்சுவர் விண் கடல் செய்தவர் மேல் எழுந்து அப்புறம் கண் கடல் செய்யும் கருத்து அறியாரே. |
4 | சமைக்க வல்லானைச் சயம்பு என்று ஏத்தி அமைக்க வல்லார் இவ் உலகத்து உளாரே திகைத் தெண் நீரில் கடல் ஒலி ஓசை மிகைக் கொள அங்கி மிகாமை வைத்தானே. |
5 | பண்பழி செய் வழி பாடு சென்று அப்புறம் கண் பழியாத கமலத்து இருக்கின்ற நண்பழி யாளனை நாடிச் சென்று அச்சிரம் விண் பழியாத விருத்தி கொண்டானே. |
6. சக்கரப் பேறு |
1 | மால் போதகன் என்னும் வண்மைக்கு இங்கு ஆங்காரம் கால் போதம் கையினோடு அந்தரச் சக்கரம் மேல் போக வெள்ளி மலை அமரர்பதி பார் போகம் ஏழும் படைத்து உடையானே. |
2 | சக்கரம் பெற்று நல் தாமோதரன் தானும் சக்கரம் தன்னைத் தரிக்க ஒண்ணாமையால் மிக்கரன் தன்னை விருப்புடன் அர்ச்சிக்கத் தக்க நல் சத்தியைத் தான் கூறு செய்ததே. |
3 | கூறதுவாகக் குறித்து நல் சக்கரம் கூறது செய்து கொடுத்தனன் மாலுக்குக் கூறது செய்து கொடுத்தனன் சத்திக்குக் கூறது செய்து தரித்தனன் கோலமே. |
4 | தக்கன் தன் வேள்வி தகர்த்த நல் வீரர்பால் தக்கன் தன் வேள்வியில் தாமோதரன் தானும் சக்கரம் தன்னைச் சசி முடிமேல் விட அக்கி உமிழ்ந்தது வாயுக் கரத்திலே. |
7. எலும்பும் கபாலமும் |
1 | எலும்பும் கபாலமும் ஏந்தி எழுந்த வலம்பன் மணிமுடி வானவர் ஆதி எலும்பும் கபாலமும் ஏந்திலன் ஆகில் எலும்பும் கபாலமும் இற்று மண் ஆமே. |
8. அடிமுடி தேடல் |
1 | பிரமனும் மாலும் பிரானே நான் என்னப் பிரமன் மால் தங்கள் தம் பேதைமை யாலே பரமன் அனலாய்ப் பரந்து முன் நிற்க அரன் அடி தேடி அரற்று கின்றாரே. |
2 | அடிமுடி காண்பார் அயன்மால் இருவர் படிகண்டு இலர் மீண்டும் பார் மிசைக் கூடி அடிகண் டு இலேன் என்று அச்சுதன் சொல்ல முடி கண்டேன் என்று அயன் பொய்மொழிந் தானே. |
3 | ஆம் ஏழ் உலகு உற நின்ற எம் அண்ணலும் தாம் ஏழ் உலகில் தழல் பிழம்பாய் நிற்கும் வான் ஏழ் உலகு உறும் மா மணி கண்டனை யானே அறிந்தேன் அவன் ஆண்மை யாலே. |
4 | ஊனாய் உயிராய் உணர் அங்கியாய் முன்னம் சேணாய் வான் ஓங்கித் திரு உருவாய் அண்டத் தாணுவும் ஞாயிறும் தண் மதியும் கடந்து தாண் முழுது அண்டமும் ஆகி நின்றானே. |
5 | நின்றான் நில முழுது அண்டத்துள் நீளியன் அன்றே அவன் வடிவு அஞ்சினர் ஆய்ந்தது சென்றார் இருவர் திருமுடி மேல் செல நன்று ஆம் கழல் அடி நாட ஒண்ணாதே. |
6 | சேவடி ஏத்தும் செறிவுடை வானவர் மூவடி தா என்றானும் முனிவரும் பாவடியாலே பதம் செய் பிரமனும் தாவடி இட்டுத் தலைப் பெய்தும் மாறே. |
7 | தானக் கமலத்து இருந்த சதுமுகன் தானக் கரும் கடல் ஊழித் தலைவனும் ஊனத்தின் உள்ளே உயிர் போல் உணர்கின்ற தானப் பெரும் பொருள் தன்மையது ஆமே. |
8 | ஆலிங்கனம் செய்து எழுந்த பரஞ்சுடர் மேல் இங்ஙன் வைத்தது ஓர் மெய்ந் நெறி முன் கண்டு ஆலிங்கனம் செய்து உலகம் வலம் வரும் கோலிங்கு அமைஞ்சருள் கூடலும் ஆமே. |
9 | வாள் கொடுத்தானை வழிபட்ட தேவர்கள் ஆள் கொடுத்து எம்போல் அரனை அறிகிலர் ஆள் கொடுத்து இன்பம் கொடுத்துக் கோளாகத் தாள் கொடுத்தான் அடி சார கிலாரே. |
10 | ஊழி வலம் செய்து அங்கு ஓரும் ஒருவற்கு வாழி சது முகன் வந்து வெளிப்படும் வீழித் தலைநீர் விதித்தது தா என ஊழிக் கதிரோன் ஒளியை வென்றானே. |
9. படைத்தல் |
1 | ஆதியோடு அந்தம் இலாத பரா பரம் போதம் அது ஆகப் புணரும் பராபரை சோதி அதனில் பரம் தோன்றத் தோன்றுமாம் தீதுஇல் பரை அதன் பால் திகழ் நாதமே. |
2 | நாதத்தில் விந்துவும் நாத விந்துக் களில் தீது அற்று அகம்வந்த சிவன் சத்தி என்னவே பேதித்து ஞானம் கிரியை பிறத்தலால் வாதித்த விச்சையில் வந்து எழும் விந்துவே. |
3 | இல்லது சத்தி இடம் தனில் உண்டாகிக் கல் ஒளி போலக் கலந்து உள் இருந்திடும் வல்லது ஆக வழி செய்த அப் பொருள் சொல்லது சொல்லிடில் தூராதி தூரமே. |
4 | தூரத்தில் சோதி தொடர்ந்து ஒரு சத்தியாய் ஆர்வத்து நாதம் அணைந்து ஒரு விந்துவாய் பாரச் சதா சிவம் பார் முதல் ஐந்துக்கும் சார்வத்துச் சத்தி ஓர் சாத்தும் ஆனாமே. |
5 | மானின் கண் வான் ஆகி வாயு வளர்ந்திடும் கானின் கண் நீரும் கலந்து கடினமாய்த் தேனின் கண் ஐந்தும் செறிந்து ஐந்து பூதமாய்ப் பூவின் கண் நின்று பொருந்தும் புவனமே. |
6 | புவனம் படைப்பான் ஒருவன் ஒருத்தி புவனம் படைப் பார்க்குப் புத்திரர் ஐவர் புவனம் படைப் பானும் பூமிசையான் ஆய் புவனம் படைப்பான் அப்புண்ணியன் தானே. |
7 | புண்ணியன் நந்தி பொருந்தி உலகு எங்கும் தண்ணிய மானை வளர்த்திடும் சத்தியும் கண் இயல் பாகக் கலவி முழுதும் ஆய் மண் இயல் பாக மலர்ந்து எழு பூவிலே. |
8 | நீர் அகத்து இன்பம் பிறக்கும் நெருப்பு இடை காயத்தில் சோதி பிறக்கும் அக் காற்று இடை ஓர் உடை நல் உயிர்ப் பாதம் ஒலி சத்தி நீர் இடை மண்ணின் நிலைப் பிறப்பு ஆமே. |
9 | உண்டு உலகு ஏழும் உமிழ்ந்தான் உடன் ஆகி அண்டத்து அமரர் தலைவனும் ஆதியும் கண்டச் சதுமுகக் காரணன் தன்னொடும் பண்டு இவ் உலகம் படைக்கும் பொருளே. |
10 | ஓங்கு பெரும் கடல் உள் உறு வானொடும் பாங்கர் கயிலைப் பராபரன் தானும் வீங்கும் கமல மலர்மிசை மேல் அயன் ஆங்கு உயிர் வைக்கும் அது உணர்ந்தானே. |
11 | காரணன் அன்பில் கலந்து எங்கும் நின்றவன் நாரணன் நின்ற நடு உடலாய் நிற்கும் பாரணன் அன்பில் பதம் செய்யும் நான்முகன் ஆரணமாய் உலகாய் அமர்ந்தானே. |
12 | பயன் எளிது ஆம் பரு மா மணி செய்ய நயன் எளிது ஆகிய நம்பன் ஒன்று உண்டு அயன் ஒளியாய் இருந்து அங்கே படைக்கும் பயன் எளிதாம் வயணம் தெளிந்தேனே. |
13 | போக்கும் வரவும் புனிதன் அருள் புரிந்து ஆக்கமும் சிந்தை அது ஆகின்ற காலத்து மேக்கு மிக நின்ற எட்டுத் திசை யொடும் தாக்கும் கலக்கும் தயா பரன் தானே. |
14 | நின்று உயிர் ஆக்கும் நிமலன் என் ஆருயிர் ஒன்று உயிர் ஆக்கும் அளவை உடல் உற முன்துயர் ஆக்கும் உடற்கும் துணை அதா நன்று உயிர்ப் பானே நடுவு நின்றானே. |
15 | ஆகின்ற தன்மையில் அக்கணி கொன்றையன் வேகின்ற செம் பொனின் மேல் அணி மேனியன் போகின்ற சீவன் புகுந்து உடலாய் உளன் ஆகின்ற தன்மை செய் ஆண் தகை யானே. |
16 | ஒருவன் ஒருத்தி விளையாடல் உற்றார் இருவர் விளையாட்டும் எல்லாம் விளைக்கும் பருவங்கள் தோறும் பயன் பல ஆன திரு ஒன்றில் செய்கை செகம் முற்றும் ஆமே. |
17 | புகுந்து அறிவான் புவனா பதி அண்ணல் புகுந்து அறிவான் புரி சக்கரத்து அண்ணல் புகுந்து அறிவான் மலர் மேல் உறை புத்தேள் புகுந்து அறியும் முடிக்கு ஆகி நின்றாரே. |
18 | ஆணவச் சத்தியும் ஆம் அதில் ஐவரும் காரிய காரண ஈசர் கடை முறை பேணிய ஐந் தொழிலால் விந்துவில் பிறந்து ஆணவம் நீங்காதவர் எனல் ஆகுமே. |
19 | உற்ற முப்பால் ஒன்று மாயாள் உதய மா மற்றைய மூன்று மாயோதயம் விந்து பெற்றவன் நாதம் பரையில் பிறந்ததால் துற்ற பரசிவன் தொல் விளையாட்டு இதே. |
20 | ஆகாயம் ஆதி சதாசிவர் ஆதி என் போகாத சத்தியுள் போந்து உடன் போந்தனர் மாகாய ஈசன் அரன் மால் பிரமன் ஆம் ஆகாயம் பூமி காண அளித்தலே. |
21 | அளியார் முக்கோணம் வயிந்தவம் தன்னில் அளியார் திரிபுரை ஆம் அவள் தானே அளியார் சதா சிவம் ஆகி அமைவாள் அளியார் கருமங்கள் ஐந்து செய்வாளே. |
22 | வார் அணி கொங்கை மனோன்மணி மங்கலி காரணி காரியம் ஆகக் கலந்தவள் வாரணி ஆரணி வானவர் மோகினி பூரணி போதாதி போதமும் ஆமே. |
23 | நின்றது தானாய் நிறைந்த மகேசுரன் சென்று அங்கு இயங்கும் அரன் திருமாலவன் மன்றது செய்யும் மலர் மிசை மேல் அயன் என்று இவர் ஆக இசைந்து இருந்தானே. |
24 | ஒருவனுமே உலகு ஏழும் படைத்தான் ஒருவனுமே உலகு ஏழும் அளித்தான் ஒருவனுமே உலகு ஏழும் துடைத்தான் ஒருவனுமே உலகோடு உயிர் தானே. |
25 | செந்தாமரை வண்ணன் தீ வண்ணன் எம் இறை மைந்தார் முகில் வண்ணன் மாயம் செய் பாசத்தும் கொந்தார் குழலியர் கூடிய கூட்டத்தும் அந்தார் பிறவி அறுத்து நின்றானே. |
26 | தேடும் திசை எட்டும் சீவன் உடல் உயிர் கூடும் பிறவிக் குணம் செய்த மா நந்தி ஊடும் அவர் தமது உள்ளத்துள்ளே நின்று நாடும் வழக்கமும் நான் அறிந்தேனே. |
27 | ஓராய மே உலகு ஏழும் படைப்பதும் ஓராய மே உலகு ஏழும் அளிப்பதும் ஓராய மே உலகு ஏழும் துடைப்பதும் ஓராய மே உலகோடு உயிர்தானே. |
28 | நாதன் ஒருவனும் நல்ல இருவரும் கோது குலத்தொடும் கூட்டிக் குழைத்தனர் ஏதுபணி என்று இசையும் இருவருக்கு ஆதி இவனே அருளுகின்றானே. |
29 | அப்பரிசு எண்பத்து நான்கு நூறாயிரம் மெய்ப் பரிசு எய்தி விரிந்து உயிராய் நிற்கும் பொய்ப் பரிசு எய்திப் புகலும் மனிதர் கட்கு இப்பரிசே இருள் மூடி நின்றானே. |
30 | ஆதித்தன் சந்திரன் அங்கி எண் பாலர்கள் போதித்த வான் ஒலி பொங்கிய நீர் புவி வாதித்த சத்தாதி வாக்கு மனாதிகள் ஓதுற்ற மாயையின் விந்துவின் உற்றதே. |
10. காத்தல் |
1 | புகுந்து நின்றான் வெளியாய் இருள் ஆகிப் புகுந்து நின்றான் புகழ் வாய் இகழ்வாகிப் புகுந்து நின்றான் உடலாய் உயிராகிப் புகுந்து நின்றான் புந்தி மன்னி நின்றானே. |
2 | தானே திசையொடு தேவருமாய் நிற்கும் தானே உடல் உயிர் தத்துவமாய் நிற்கும் தானே கடல் மலை ஆதியும் ஆய் நிற்கும் தானே உலகில் தலைவனும் ஆமே. |
3 | உடலாய் உயிராய் உலகம் அது ஆகிக் கடலாய்க் கார் முகில் நீர் பொழிவானாய் இடையாய் உலப்பு இலி எங்கும் தான் ஆகி அடையார் பெருவழி அண்ணல் நின்றானே. |
4 | தான் ஒரு காலம் தனிச் சுடராய் நிற்கும் தான் ஒரு கால் சண்ட மாருதமாய் நிற்கும் தான் ஒரு காலம் தண் மழையாய் நிற்கும் தான் ஒரு காலம் தண் மாயனும் ஆமே. |
5 | அன்பும் அறிவும் அடக்கமுமாய் நிற்கும் இன்பமும் இன்பக் கலவியு மாய் நிற்கும் முன்புறு காலமும் ஊழியுமாய் நிற்கும் அன்புற ஐந்தில் அமர்ந்து நின்றானே. |
6 | உற்று வனைவான் அவனே உலகினைப் பெற்று வனைவான் அவனே பிறவியைச் சுற்றிய சாலும் குடமும் சிறுதூதை மற்றும் அவனே வனைய வல்லானே. |
7 | உள் உயிர்ப்பாய் உடல் ஆகி நின்றான் நந்தி வெள் உயிராகும் வெளியாய் நிலம் கொளி உள் உயிர்க்கும் உணர்வே உடல் உள் பரந்து தள் உயிரா வண்ணம் தாங்கி நின்றானே. |
8 | தாங்கரும் தன்மையும் தான் அவை பல் உயிர் வாங்கிய காலத்து மற்றோர் பிறிது இல்லை ஓங்கி எழுமைக்கும் யோகாந்தம் அவ்வழி தாங்கி நின்றானும் அத் தாரணி தானே. |
9 | அணுகினும் சேயவன் அங்கியில் கூடி நணுகினும் ஞானக் கொழுந்து ஒன்று நல்கும் பணிகினும் பார்மிசைப் பல் உயிராகித் தணிகினும் மண்ணுடல் அண்ணல் செய்வானே. |
11. அழித்தல் |
1 | அங்கி செய்து ஈசன் அகல் இடம் சுட்டது அங்கி செய்து ஈசன் அலை கடல் சுட்டது அங்கி செய்து ஈசன் அசுரரைச் சுட்டது அங்கி அவ் ஈசற்குக் கை அம்பு தானே. |
2 | இலயங்கள் மூன்றினும் ஒன்று கல் பாந்த நிலை அன்று அழிந்தமை நின்று உணர்ந்தேன் ஆல் உலை தந்த மெல்லரி போலும் உலகம் மலை தந்த மா நிலம் தான் வெந்ததுவே. |
3 | பதம் செய்யும் பாரும் பனிவரை எட்டும் உதம் செய்யும் ஏழ்கடல் ஓதம் முதலாம் குதம் செய்யும் அங்கி கொளுவி ஆகாசம் விதம் செய்யும் நெஞ்சில் வியப்பு இல்லை தானே. |
4 | கொண்டல் வரை நின்று இழிந்த குலக்கொடி அண்டத்துள் ஊறி இருந்து எண் திரை ஆகி ஒன்றின் பதம் செய்த ஓம் என்ற அப்புறக் குண்டத்தின் மேல் அங்கி கோலிக் கொண்டானே. |
5 | நித்த சங்காரம் உறக்கத்து நீள் மூடம் வைத்த சங்காரமும் சாக்கிரா தீதம் ஆம் சுத்த சங்காரம் தொழில் அற்ற கேவலம் உய்த்த சங்காரம் பரன் அருள் உண்மையே. |
6 | நித்த சங்காரம் இரண்டு உடல் நீவுதல் வைத்த சங்காரமும் மாயா சங்காரம் ஆம் சுத்த சங்காரம் மனாதீதம் தோயுறல் உய்த்த சங்காரம் சிவன் அருள் உண்மையே. |
7 | நித்த சங்காரம் கரு இடர் நீக்கினால் ஒத்த சங்காரம் உடல் உயிர் நீவுதல் சுத்த சங்காரம் அதீதத்துள் தோய் உறல் உய்த்த சங்காரம் பரன் அருள் உண்மையே. |
8 | நித்த சங்காரமும் நீடு இளைப் பாற்றலின் வைத்த சங்காரமும் மன்னும் அனாதியில் சுத்த சங்காரமும் தோயாப் பரன் அருள் உய்த்த சங்காரமும் நாலாம் உதிக்கிலே. |
9 | பாழே முதலா எழும்பயிர் அப்பயிர் பாழாய் அடங்கினும் பண்டைப் பாழ் பாழ் ஆகா வாழாச் சங்காரத்தின் மால் அயன் செய்தி ஆம் பாழாம் பயிராய் அடங்கும் அப்பாழிலே. |
10 | தீய வைத்து ஆர்மின்கள் சேரும் வினைதனை மாய வைத்தான் வைத்தவன் பதி ஒன்று உண்டு காயம் வைத்தான் கலந்து எங்கும் நினைப்பது ஓர் ஆயம் வைத்தான் உணர் வார வைத்தானே. |
12. மறைத்தல் |
1 | உள்ளத்து ஒருவனை உள் உறு சோதியை உள்ளம் விட்டு ஓர் அடி நீங்கா ஒருவனை உள்ளமும் தானும் உடனே இருக்கினும் உள்ளம் அவனை உரு அறியாதே. |
2 | இன்பப் பிறவி படைத்த இறைவனும் துன்பம் செய் பாசத் துயருள் அடைத்தனன் என்பில் கொளுவி இசைந்துறு தோற்றசை முன்பில் கொளுவி முடி குவ தாமே. |
3 | இறையவன் மாதவன் இன்பம் படைத்த மறையவன் மூவரும் வந்து உடன் கூடி இறையவன் செய்த இரும் பொறியாக்கை மறையவன் வைத்த பரிசு அறியாதே. |
4 | காண்கின்ற கண் ஒளி காதல் செய்து ஈசனை ஆண் பெண் அலி உருவாய் நின்ற ஆதியை ஊண் படு நா உடை நெஞ்சம் உணர்ந்திட்டுச் சேண் படு பொய்கைச் செயல் அணையாரே. |
5 | தெருளும் உலகிற்கும் தேவர்க்கும் இன்பம் அருளும் வகை செய்யும் ஆதிப் பிரானும் சுருளும் சுடர் உறு தூவெண் சுடரும் இருளும் அற நின்ற இருட்டு அறையாமே. |
6 | அரைக்கின்ற அருள் தரும் அங்கங்கள் ஓசை க்கின்ற ஆசையும் ஒன்றொடு ஒன்று ஒவ்வாப் பரக்கும் உருவமும் பாரகம் தானாய்க் கரக்கின்றவை செய்த காண் தகையானே. |
7 | ஒளித்து வைத்தேன் உள் உற உணர்ந்து ஈசனை வெளிப்பட்டு நின்று அருள் செய்திடும் ஈண்டே களிப்பொடும் காதன்மை என்னும் பெருமை வெளிப்பட்டு இறைஞ்சினும் வேட்சியும் ஆமே. |
8 | ஒருங்கிய பாசத்துள் உத்தம சித்தன் இருங்கரை மேல் இருந்து இன்புற நாடி வருங்கரை ஓரா வகையினில் கங்கை அருங் கரை பேணில் அழுக்கு அறலாமே. |
9 | மண் ஒன்று தான் பல நல் கலம் ஆயிடும் உள் நின்ற யோனி கட்கு எல்லாம் ஒருவனே கண் ஒன்று தான் பல காணும் தனைக் காணா அண்ணலும் இவ் வண்ணம் ஆகி நின்றானே. |
13. அருளல் |
1 | எட்டுத் திசையும் எறிகின்ற காற்றொடு வட்டத் திரை அனல் மாநிலம் ஆகாயம் ஒட்டி உயிர் நிலை என்னும் இக் காயப்பை கட்டி அவிழ்ப்பான் கண் நுதல் காணுமே. |
2 | உச்சியில் ஓங்கி ஒளிதிகழ் நாதத்தை நச்சியே இன்பம் கொள்வார்க்கு நமன் இல்லை விச்சும் விரிசுடர் மூன்றும் உலகுக்குத் தச்சும் அவனே சமைக்க வல்லானே. |
3 | குசவன் திரிகையில் ஏற்றிய மண்ணைக் குசவன் மனத்து உற்றது எல்லாம் வனைவன் குசவனைப் போல் எங்கள் கோன் நந்தி வேண்டில் அசைவு இல் உலகம் அது இது ஆமே. |
4 | விடை உடையான் விகிர்தன் மிகு பூதப் படை உடையான் பரிசே உலகு ஆக்கும் கொடை உடையான் குணம் எண் குணம் ஆகும் சடை உடையான் சிந்தை சார்ந்து நின்றானே. |
5 | உகந்து நின்றே படைத்தான் உலகு ஏழும் உகந்து நின்றே படைத்தான் பல ஊழி உகந்து நின்றே படைத்தான் ஐந்து பூதம் உகந்து நின்றே உயிர் ஊன் படைத்தானே. |
6 | படைத்து உடையான் பண்டு உலகங்கள் ஏழும் படைத்து உடையான் பல தேவரை முன்னே படைத்து உடையான் பல சீவரை முன்னே படைத்து உடையான் பரம் ஆகி நின்றானே. |
7 | ஆதி படைத்தனன் ஐம் பெரும் பூதம் ஆதி படைத்தனன் ஆசு இல் பல் ஊழி ஆதி படைத்தனன் எண் இலி தேவரை ஆதி படைத்தவை தாங்கி நின்றானே. |
8 | அகன்றான் அகல் இடம் ஏழும் ஒன்று ஆகி இவன் தான் என நின்று எளியனும் அல்லன் சிவன் தான் பலபல சீவனும் ஆகி நவின்றான் உலகுஉறு நம்பனும் ஆமே. |
9 | உள் நின்ற சோதி உற நின்ற ஓர் உடல் விண் நின்ற அமரர் விரும்பும் விழுப்பொருள் மண் நின்ற வானோர் புகழ் திருமேனியன் கண் நின்ற மா மணி மா போதம் ஆமே. |
10 | ஆரும் அறியாத அண்டத் திரு உருப் பார் முதலாகப் பயிலும் கடத்திலே நீரினில் பால் போல நிற்கின்ற நேர்மையைச் சோராமல் காணும் சுகம் அறிந்தேனே. |
14. கரு உற்பத்தி |
1 | ஆக்குகின்றான் முன் பிரிந்த இருபத்து அஞ்சு ஆக்குகின்றான் அவன் ஆதி எம் ஆர் உயிர் ஆக்குகின்றான் கர்ப்பக் கோளகை உள்ளிருந்து ஆக்குகின்றான் அவன் ஆவது அறிந்தே. |
2 | அறிகின்ற மூலத்தின் மேல் அங்கி அப்புச் செறிகின்ற ஞானத்துச் செந்தாள் கொளுவிப் பொறை கின்ற இன் உயிர் போந்து உற நாடிப் பறிகின்ற பத்து எனும் பாரம் செய்தானே. |
3 | இன்புறு காலத்து இருவர் முன் பூறிய துன்புறு பாசத்து உயர்மனை வான் உளன் பண்பு உறு காலமும் பார் மிசை வாழ்க்கையும் அன்பு உறு காலத்து அமைத்து ஒழிந்தானே. |
4 | கருவை ஒழிந்தவர் கண்ட நால் மூ ஏழ் புருடன் உடலில் பொருந்து மற்று ஓரார் திருவின் கருக்குழி தேடிப் புகுந்த துருவம் இரண்டு ஆக ஓடி விழுந்ததே. |
5 | விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி ஒழிந்த முதல் ஐந்தும் ஈர் ஐந்தொடு ஏறிப் பொழிந்த புனல் பூதம் போற்றும் கரணம் ஒழிந்த நுதல் உச்சி உள்ளே ஒளித்ததே. |
6 | பூவின் மணத்தைப் பொருந்திய வாயுவும் தாவி உலகில் தரிப்பித்த வாறு போல் மேவிய சீவனில் மெல்ல நீள் வாயுவும் கூவி அவிழும் குறிக்கொண்ட போதே. |
7 | ஏற எதிர்க்கில் இறையவன் தான் ஆகும் மாற எதிர்க்கில் அரியவன் தான் ஆகும் நேர் ஒக்க வைக்கின் நிகர் போதத்தான் ஆகும் பேர் ஒத்த மைந்தனும் பேர் அரசு ஆளுமே. |
8 | ஏயம் கலந்த இருவர் தஞ்சாயத்துப் பாயும் கருவும் உருவாம் எனப் பல காயம் கலந்தது காணப் பதிந்த பின் மாயம் கலந்த மனோலயம் ஆனதே. |
9 | கர்ப்பத்துக்கே வலமாயாள் கிளை கூட்ட நிற்கும் துரியமும் பேதித்து நினைவு எழ வற்புறு காமியம் எட்டாதல் மாயே அம் சொற்புறு தூய்மறை வாக்கின் ஆம் சொல்லே. |
10 | என்பால் மிடைந்து நரம்பு வரிக்கட்டிச் செம்பால் இறைச்சி திருத்த மனைசெய்து இன்பால் உயிர் நிலை செய்த இறை ஓங்கும் நன்பால் ஒருவனை நாடுகின்றேனே. |
11 | பதம் செய்யும் பால் வண்ணன் மேனிப் பகலோன் இதம் செய்யும் ஒத்து உடல் எங்கும் புகுந்து குதம் செய்யும் அங்கியின் கோபம் தணிப்பான் விதம் செய்யும் ஆறே விதித்து ஒழிந்தானே. |
12 | ஒழிபல செய்யும் வினை உற்ற நாளே வழி பல நீர் ஆடி வைத்து எழுவாங்கிப் பழி பல செய்கின்ற பாசக் கருவைச் சுழி பல வாங்கிச் சுடாமல் வைத்தானே. |
13 | சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும் அக்கிரமத்தே தோன்றும் அவ் யோனியும் புக்கிடும் எண்விரல் புறப்பட்டு நால்விரல் அக்கரம் எட்டும் எண் சாண் அது ஆகுமே. |
14 | போகத்துள் ஆங்கே புகுந்த புனிதனும் கோசத்துள் ஆங்கு கொணர்ந்த கொடைத் தொழில் ஏகத்துள் ஆங்கே இரண்டு எட்டு மூன்று ஐந்து மோகத்துள் ஆங்கு ஒரு முட்டை செய்தானே. |
15 | பிண்டத்தில் உள் உறு பேதைப் புலன் ஐந்தும் பிண்டத்தின் ஊடே பிறந்து மரித்தது அண்டத்தின் உள் உறு சீவனும் அவ்வகை அண்டத்து நாதத்து அமர்ந்திடும் தானே. |
16 | இலைப் பொறி ஏற்றி எனது உடல் ஈசன் துலைப் பொறியில் கரு ஐந்துடன் ஆட்டி நிலைப் பொறி முப்பது நீர்மை கொளுவி உலைப் பொறி ஒன்பதில் ஒன்று செய்தானே. |
17 | இன்பு உற்று இருவர் இசைவித்து வைத்த மண் துன்பக் கலசம் அணைவான் ஒருவனே ஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு வெந்தது சூளை விளைந்தது தானே. |
18 | அறியீர் உடம்பினில் ஆகிய வாறும் பிறியீர் அதனில் பெருகும் குணங்கள் செறியீர் அவற்றினுள் சித்திகள் இட்ட தறிய ஈர் ஐந்தினுள் ஆனது பிண்டமே. |
19 | உடல் வைத்த வாறும் உயிர் வைத்த வாறும் மடை வைத்த ஒன்பது வாய்தலும் வைத்துத் திடம் வைத்த தாமரைச் சென்னியுள் அங்கிக் கடை வைத்த ஈசனைக் கை கலந்தேனே. |
20 | கேட்டு நின்றேன் எங்கும் கேடு இல் பெரும் சுடர் மூட்டுகின்றான் முதல் யோனி மயன் அவன் கூட்டு கின்றான் குழம்பின் கருவை உரு நீட்டி நின்று ஆகத்து நேர் பட்ட வாறே. |
21 | பூவுடன் மொட்டுப் பொருந்த அலர்ந்தபின் காவுடைத் தீபம் கலந்து பிறந்திடும் நீர் இடை நின்ற குமிழி நிழலதாய்ப் பாருடல் எங்கும் பரந்து எட்டும் பற்றுமே. |
22 | எட்டினுள் ஐந்தாகும் இந்திரியங்களும் கட்டிய மூன்று கரணமும் ஆய்விடும் ஒட்டிய பாச உணர்வு என்னும் காயப்பை கட்டி அவிழ்த்திடும் கண் நுதல் காணுமே. |
23 | கண் நுதல் நாமம் கலந்து உடம்பாய் இடைப் பண் நுதல் செய்து பசு பாசம் நீங்கிட எண்ணிய வேதம் இசைந்த பரப்பினை மண் முதலாக வகுத்து வைத்தானே. |
24 | அருள் அல்லது இல்லை அரன் அவன் அன்றி அருள் இல்லை ஆதலின் அவ் ஓர் உயிரைத் தருகின்றபோது இருகைத் தாயர் தம்பால் வருகின்ற நண்பு வகுத்திடும் தானே. |
25 | வகுத்த பிறவியை மாது நல்லாளும் தொகுத்து இருள் நீக்கிய சோதி அவனும் பகுத்து உணர் ஆகிய பல் உயிர் எல்லாம் வகுத்து உள்ளும் நின்றது ஓர் மாண்பு அதுவாமே. |
26 | மாண்பு அது ஆக வளர்கின்ற வன்னியும் காண்பது ஆண் பெண் அலி எனும் கற்பனை பூண்பது மாதா பிதா வழி போலவே ஆம் பதி செய்தான் அச்சோதி தன் ஆண்மையே. |
27 | ஆண் மிகில் ஆண் ஆகும் பெண் மிகில் பெண் ஆகும் பூண் இரண்டு ஒத்துப் பொருந்தில் அலி ஆகும் தாண் மிகும் ஆகில் தரணி முழுது ஆளும் பாணவம் மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே. |
28 | பாய்ந்த பின் அஞ்சு ஓடில் ஆயுளும் நூறு ஆகும் பாய்ந்த பின்னால் ஓடில் பாரினில் எண்பதாம் பாய்ந்திடும் வாயுப் பகுத்து அறிந்து இவ்வகை பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலும் ஆமே. |
29 | பாய்கின்ற வாயுக் குறையில் குறள் ஆகும் பாய்கின்ற வாயு விளைக்கின் முடம் ஆகும் பாய்கின்ற வாயு நடுப்படில் கூன் ஆகும் பாய்கின்ற வாயு மாதர்க்கு இல்லை பார்க்கிலே. |
30 | மாதா உதரம் மலம் மிகில் மந்தன் ஆம் மாதா உதரம் சலம் மிகில் மூங்கை ஆம் மாதா உதரம் இரண்டும் ஒக்கில் கண் இல்லை மாதா உதரத்தில் வந்த குழவிக்கே. |
31 | குழவியும் ஆண் ஆம் வலத்தது ஆகில் குழவியும் பெண் ஆம் இடத்தது ஆகில் குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில் குழவி அலி ஆகும் கொண்ட கால் ஒக்கிலே. |
32 | கொண்ட நல் வாயு இருவர்க்கும் ஒத்து எழில் கொண்ட குழவியும் கோமளம் ஆயிடும் கொண்ட நல் வாயு இருவர்க்கும் குழறிடில் கொண்டதும் இல்லையாம் கோல் வளையாட்கே. |
33 | கோல் வளை உந்தியில் கொண்ட குழவியும் தால் வளை உள்ளே தயங்கிய சோதி ஆம் பால் வளர்ந்து உள்ளே பகலவன் பொன் உருப் போல் வளர்ந்து உள்ளே பொருந்து உருவாமே. |
34 | உருவம் வளர்ந்திடும் ஒண் திங்கள் பத்தில் பருவம் அது ஆகவே பாரினில் வந்திடும் மருவி வளர்ந்திடும் மாயையினாலே அருவம் அது ஆவது இங்கு ஆர் அறிவாரே. |
35 | இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் தட்டான் அறிந்தும் ஒருவர்க்கு த்திலன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்கு உளன் கெட்டேன் இம் மாயையின் கீழ்மை எவ்வாறே. |
36 | இன்புற நாடி இருவரும் சந்தித்துத் துன்பு உறு பாசத்தில் தோன்றி வளர்ந்தபின் முன்புற நாடி நிலத்தின் முன் தோன்றிய தொன்புற நாடி நின்று ஓதலும் ஆமே. |
37 | குயில் குஞ்சு முட்டையைக் காக்கைக் கூட்டிட்டால் அயிர்ப்பு இன்றிக் காக்கை வளர்க்கின்றது போல் இயக்கு இல்லை போக்கு இல்லை ஏன் என்பது இல்லை மயக்கத்தால் காக்கை வளர்கின்ற வாறே. |
38 | முதல் கிழங்காய் முளையாய் அம் முளைப்பின் அதல் புதலாய்ப் பலமாய் நின்று அளிக்கும் அதற்கு அதுவாய் இன்பம் ஆவது போல் அதற்கு அதுவாய் நிற்கும் ஆதிப்பிரானே. |
39 | பரத்தில் கரைந்தது பதிந்த நல்காயம் உருத் தரித்து இவ் உடல் ஓங்கிட வேண்டி திரைக்கடல் உப்புத் திரண்டது போலத் திரித்துப் பிறக்கும் திரு அருளாலே. |
15. மூவகைச் சீவ வர்க்கம் |
1 | சக்தி சிவன் விளையாட்டால் உயிர் ஆக்கி ஒத்த இருமாயா கூட்டத்து இடை பூட்டிச் சுத்தம் அது ஆகும் துரியம் பிரிவித்துச் சித்தம் புகுந்து சிவ மயம் ஆக்குமே. |
2 | விஞ்ஞானர் நால்வரும் மெய்ப் பிரள யாகல் அத் தஞ்ஞானர் மூவரும் தாங்கு சகலத்தின் அஞ்ஞானர் மூவரும் ஆகும் பதின்மராம் விஞ்ஞானர் ஆதியர் வேற்றுமை தானே. |
3 | விஞ்ஞானர் கேவலத் தாரது விட்டவர் தஞ் ஞானர் அட்டவித் தேசராம் சார்ந்து உளோர் எஞ்ஞானர் ஏழ்கோடி மந்திர நாயகர் மெய்ஞ்ஞானர் ஆணவம் விட்டு நின்றாரே. |
4 | இரண்டாவதில் முத்தி எய்துவர் அத்தனை இரண்டாவது உள்ளே இருமல பெத்தர் இரண்டாகும் நூற்று எட்டு ருத்திரர் என்பர் முரண் சேர் சகலத்தர் மும்மலத்தாரே. |
5 | பெத்தத்த சித்தொடு பேண் முகத்தச் சித்து அது ஒத்திட்டு இரண்டிடை ஊடு உற்றார் சித்தும் ஆய் மத்தது மும்மலம் வாட்டுகை மாட்டாதார் சத்கத்து அமிழ்ந்து சகலத்து உளாரே. |
6 | சிவம் ஆகி ஐவகைத் திண்மலம் செற்றோர் அவம் ஆகார் சித்தர் முத் தாந் தத்து வாழ்வார் பவம் ஆன தீர்வோர் பசு பாசம் அற்றோர் நவம் ஆன தத்துவம் நாடிக் கண்டோரே. |
7 | விஞ்ஞானர் ஆணவ கேவல மேவுவோர் விஞ்ஞானர் மாயையில் தங்கும் இருமலர் அஞ்ஞானர் அச் சகலத்தர் சகலராம் விஞ்ஞானர் ஆதிகள் ஒன்பான் வேறு உயிர்களே. |
8 | விஞ்ஞான கன்மத்தால் மெய் அகம் கூடிய அஞ்ஞான கன்மத்தினால் சுவர் யோனி புக்கு எஞ்ஞான மெய் தீண்டியே இடை இட்டுப் போய் மெய்ஞ் ஞானர் ஆகிச் சிவம் மேவல் உண்மையே. |
9 | ஆண வந்துற்ற வவித்தா நனவு அற்றோர் காணிய விந்துவா நாத சகலாதி ஆணவம் ஆதி அடைந்தோர் அவர் அன்றே சேண் உயர் சத்தி சிவ தத்துவம் ஆமே. |
16. பாத்திரம் |
1 | திலம் அத்தனையே சிவ ஞானிக்கு ஈந்தால் பல முத்தி சித்தி பரபோகமும் தரும் நிலம் அத்தனை பொன்னை நின் மூடர்க்கு ஈந்தால் பலமும் அற்றே பர போகமும் குன்றுமே. |
2 | கண்டு இருந்து ஆர் உயிர் உண்டிடும் காலனைக் கொண்டு இருந்து ஆர் உயிர் கொள்ளும் குணத்தனை நன்று உணர்ந்தார்க்கு அருள் செய்திடும் நாதனைச் சென்று உணர்ந்தார் சிலர் தேவரும் ஆமே. |
3 | கை விட்டிலேன் கருவாகிய காலத்து மெய் விட்டிலேன் விகிர்தன் அடி தேடுவன் பொய் விட்டு நானே புரிசடையான் அடி நெய் விட்டிலாத இடிஞ்சிலும் ஆமே. |
4 | ஆவன ஆவ அழிவ அழிவன போவன போவ புகுவ புகுவன காவலன் பேர் நந்தி காட்டத்துக் கண்டவன் ஏவன செய்யும் இளம் கிளையோனே. |
17. அபாத்திரம் |
1 | கோல வறட்டைக் குனிந்து குளகு இட்டுப் பாலைக் கறந்து பருகுவதே ஒக்கும் சீலமும் நோன்பும் இலாதவர்க்கு ஈந்து காலம் கழிந்த பயிர் அது ஆகுமே. |
2 | ஈவது யோக இயம நியமங்கள் சார்வது அறிந்து அன்பு தங்கும் அவர்க்கு அன்றி ஆவது அறிந்து அன்பு தங்காதவர்களுக்கு ஈவ பெரும் பிழை என்று கொளீரே. |
3 | ஆம் ஆறு அறியான் அதி பஞ்சபாதகன் தோம் ஆறும் ஈசற்கும் தூய குரவற்கும் காமாதி விட்டோர்க்கும் தரல் தந்து கற்பிப்போன் போமா நரகில் புகான் போதம் கற்கவே. |
4 | மண் மலை யத்தனை மாதனம் ஈயினும் அண்ணல் இவன் என்றே அஞ்சலி அத்தனாய் எண்ணி இறைஞ்சா தார்க்கு ஈந்த இருவரும் நண்ணுவர் ஏழா நரகக் குழியிலே. |
18. தீர்த்தம் |
1 | உள்ளத்தின் உள்ளே உள பல தீர்த்தங்கள் மெள்ளக் குடைந்து நின்று ஆடார் வினை கெடப் பள்ளமும் மேடும் பரந்து திரிவரே கள்ள மனம் உடைக் கல்வி இலோரே. |
2 | தளி அறி வாளர்க்குத் தண்ணிதாய்த் தோன்றும் குளி அறி வாளர்க்குக் கூடவும் ஒண்ணான் வளி அறி வாளர்க்கு வாய்க்கினும் வாய்க்கும் தெளி அறிவாளர் தம் சிந்தை உளானே. |
3 | உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனைக் கள்ளத்தினாரும் கலந்து அறிவார் இல்லை வெள்ளத்தை நாடி விடும் அவர் தீவினைப் பள்ளத்தில் இட்டது ஓர் பந்தர் உள்ளானே. |
4 | அறிவார் அமரர்கள் ஆதிப் பிரானைச் செறிவான் உறை பதம் சென்று வலம் கொள் மறியார் வளைக் கை வருபுனல் கங்கைப் பொறியார் புனல் மூழ்கப் புண்ணியர் ஆமே. |
5 | கடலில் கெடுத்துக் குளத்தினில் காண்டல் உடல் உற்றுத் தேடுவார் தம்மை ஒப்பார் இலர் திடம் உற்ற நந்தி திரு அருளால் சென்று உடலில் புகுந்தமை ஒன்று அறியாரே. |
6 | கலந்தது நீர் அது உடம்பில் கறுக்கும் கலந்தது நீர் அது உடம்பில் சிவக்கும் கலந்தது நீர் அது உடம்பில் வெளுக்கும் கலந்தது நீர் நிலம் காற்று அதுவாமே. |
19. திருக்கோயில் |
1 | தாவர லிங்கம் பறித்து ஒன்றில் தாபித்தால் ஆவதன் முன்னே அரசு நிலை கெடும் சாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும் காவலன் பேர் நந்தி கட்டு த்தானே. |
2 | கட்டு வித்தார் மதில் கல்லொன்று வாங்கிடில் வெட்டு விக்கும் அபிடேகத்து அரசரை முட்டு விக்கும் முனி வேதியர் ஆயினும் வெட்டு வித்தே விடும் விண்ணவன் ஆணையே. |
3 | ஆற்ற அரு நோய் மிக்கு அவனி மழை இன்றிப் போற்ற அரு மன்னரும் போர் வலி குன்றுவர் கூற்று உதைத்தான் திருக் கோயில்கள் எல்லாம் சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே. |
4 | முன்னவனார் கோயில் பூசைகள் முட்டிடின் மன்னர்க்குத் தீங்கு உள வாரி வளம் குன்றும் கன்னம் களவு மிகுந்திடும் காசினி என் அரு நந்தி எடுத்து த்தானே. |
5 | பேர் கொண்ட பார்ப்பான் பிரான் தன்னை அர்ச்சித்தால் போர் கொண்ட நாட்டுக்குப் பொல்லா வியாதியாம் பார் கொண்ட நாட்டுக்குப் பஞ்சமும் ஆம் என்றே சீர் கொண்ட நந்தி தெரிந்து த்தானே. |
19. திருக்கோயில் |
1 | தாவர லிங்கம் பறித்து ஒன்றில் தாபித்தால் ஆவதன் முன்னே அரசு நிலை கெடும் சாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும் காவலன் பேர் நந்தி கட்டு த்தானே. |
2 | கட்டு வித்தார் மதில் கல்லொன்று வாங்கிடில் வெட்டு விக்கும் அபிடேகத்து அரசரை முட்டு விக்கும் முனி வேதியர் ஆயினும் வெட்டு வித்தே விடும் விண்ணவன் ஆணையே. |
3 | ஆற்ற அரு நோய் மிக்கு அவனி மழை இன்றிப் போற்ற அரு மன்னரும் போர் வலி குன்றுவர் கூற்று உதைத்தான் திருக் கோயில்கள் எல்லாம் சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே. |
4 | முன்னவனார் கோயில் பூசைகள் முட்டிடின் மன்னர்க்குத் தீங்கு உள வாரி வளம் குன்றும் கன்னம் களவு மிகுந்திடும் காசினி என் அரு நந்தி எடுத்து த்தானே. |
5 | பேர் கொண்ட பார்ப்பான் பிரான் தன்னை அர்ச்சித்தால் போர் கொண்ட நாட்டுக்குப் பொல்லா வியாதியாம் பார் கொண்ட நாட்டுக்குப் பஞ்சமும் ஆம் என்றே சீர் கொண்ட நந்தி தெரிந்து த்தானே. |
20. அதோமுக தரிசனம் |
1 | எம்பெருமான் இறைவா முறையோ என்று வம்பு அவிழ் வானோர் அசுரன் வலி சொல்ல அம் பவள மேனி அறுமுகன் போய் அவர் தம் பகை கொல் என்ற தற்பரன் தானே. |
2 | அண்ட மொடு எண்திசை தாங்கும் அதோ முகம் கண்டம் கறுத்த கருத்து அறிவார் இல்லை உண்டது நஞ்சு என்று ப்பர் உணர்வு இலோர் வெண் தலை மாலை விரிசடை யோற்கே. |
3 | செய்தான் அறியும் செழும் கடல் வட்டத்துப் பொய்யே த்துப் புகழும் மனிதர்கள் மெய்யே க்கில் விண்ணோர் தொழச் செய்வன் மை தாழ்ந்து இலங்கு மிடறு உடையோனே. |
4 | நந்தி எழுந்து நடுஉற ஓங்கிய செந்தீ கலந்து உள் சிவன் என நிற்கும் முந்திக் கலந்து அங்கு உலகம் வலம்வரும் அந்தி இறைவன் அதோ முகம் ஆமே. |
5 | அதோ முகம் கீழ் அண்டம் ஆன புராணன் அதோ முகத் தன்னொடும் எங்கும் முயலும் சதோ முகத்து ஒண்மலர்க் கண்ணிப் பிரானும் அதோ முகன் ஊழித் தலைவனும் ஆமே. |
6 | அதோ முகம் மா மலர் ஆயது கேளும் அதோ முகத்தால் ஒரு நூறாய் விரிந்து அதோ முகம் ஆகிய அந்தம் இல் சத்தி அதோ முகம் ஆகி அமர்ந்து இருந்தானே. |
21. சிவநிந்தை |
1 | தெளி உறு ஞானத்துச் சிந்தையின் உள்ளே அளி உறுவார் அமரா பதி நாடி எளியன் என்று ஈசனை நீசர் இகழில் கிளி ஒன்று பூஞையில் கீழ் அது ஆகுமே. |
2 | முளிந்தவர் வானவர் தானவர் எல்லாம் விளிந்தவர் மெய்ந்நின்ற ஞானம் உணரார் அளிந்து அமுது ஊறிய ஆதிப் பிரானைத் தளிந்தவர்க்கு அல்லது தாங்க ஒண்ணாதே. |
3 | அப்பகை யாலே அசுரரும் தேவரும் நல் பகை செய்து நடுவே முடிந்தனர் எப்பகைஆகிலும் எய்தார் இறைவனைப் பொய்ப் பகை செய்யினும் ஒன்று பத்து ஆமே. |
4 | போகமும் மாதர் புலவி அது நினைந்து ஆகமும் உள் கலந்து அங்கு உளன் ஆதலினால் வேதியராயும் விகிர்தன் ஆம் என்கின்ற நீதியுள் ஈசன் நினைப்பு ஒழிவாரே. |
22. குரு நிந்தை |
1 | பெற்று இருந்தாரையும் பேணார் கயவர்கள் உற்று இருந்தாரை உளைவன சொல்லுவர் கற்று இருந்தார் வழி உற்று இருந்தார் அவர் பெற்று இருந்தார் அன்றி யார் பெறும் பேறே. |
2 | ஓர் எழுத்து ஒரு பொருள் உணரக் கூறிய சீர் எழுத்தாளரைச் சிதையச் செப்பினோர் ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்து அங்கு ஓர் உகம் வாரிடைக் கிருமியாய் மாய்வர் மண்ணிலே. |
3 | பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள் சித்தம் கலங்கச் சிதைவுகள் செய்தவர் அத்தமும் ஆவியும் ஆண்டு ஒன்றில் மாண்டிடும் சத்தியம் ஈது சதா நந்தி ஆணையே. |
4 | மந்திரம் ஓர் எழுத்து த்த மாதவர் சிந்தையில் நொந்திடத் தீமைகள் செய்தவர் நுந்திய சுணங்கனாய்ப் பிறந்து நூறு உரு வந்திடும் புலையராய் மாய்வர் மண்ணிலே. |
5 | ஈசன் அடியார் இதயம் கலங்கிடத் தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும் வாசவன் பீடமும் மா மன்னர் பீடமும் நாசம் அது ஆகுமே நந் நந்தி ஆணையே. |
6 | சன்மார்க்க சற்குரு சந்நிதி பொய் வரின் நன் மார்க்கமும் குன்றி ஞானமும் தங்காது தொன் மார்க்கம் ஆய துறையும் மறந்திட்டு பல் மார்க்கமும் கெட்டுப் பஞ்சமும் ஆமே. |
7 | கைப்பட்ட மா மணி தான் இடை கைவிட்டு மெய்ப்பட்ட கல்லைச் சுமப்போன் விதி போன்றும் கைப்பட்ட நெய் பால் தயிர் நிற்கத் தான் அறக் கைப்பிட்டு உண்பான் போன்றும் கன்மி ஞானிக்கு ஒப்பே. |
23. மகேசுர நிந்தை |
1 | ஆண்டான் அடியவர் ஆர்க்கும் விரோதிகள் ஆண்டான் அடியவர் ஐயம் ஏற்று உண்பவர் ஆண்டான் அடியாரை வேண்டாது பேசினோர் தாம் தாம் விழுவது தாழ் நரகு ஆகுமே. |
2 | ஞானியை நிந்திப் பவனும் நலன் என்றே ஞானியை வந்திப் பவனுமே நல்வினை ஆன கொடுவினை தீர்வார் அவன் வயம் போன பொழுதே புகும் சிவ போகமே. |
24. பொறையுடைமை |
1 | பற்றி நின்றார் நெஞ்சில் பல்லிதான் ஒன்று உண்டு முற்றிக் கிடந்தது மூக்கையும் நாவையும் தெற்றிக் கிடந்தது சிதைக்கின்ற சிந்தையுள் வற்றாது ஒழிவது மாகமை ஆமே. |
2 | ஞானம் விளைந்தவர் நம்மிட மன்னவர் சேனை வளைந்து திசை தொறும் கைதொழ ஊனை விளைத்திடும் உம்பர் தம் ஆதியை ஏனை விளைந்து அருள் எட்டலும் ஆமே. |
3 | வல்வகை யாலும் மனையிலும் மன்றிலும் பல்வகை யாலும் பயிற்றிப் பதம் செய்யும் கொல்லையில் நின்று குதி கொள்ளும் கூத்தனுக்கு எல்லை இல்லாத இலயம் உண்டாமே. |
25. பெரியாரைத் துணைக்கோடல் |
1 | ஓடவல்லார் தமரோடு நடா வுவன் பாடவல்லார் ஒளி பார்மிசை வாழ்குவன் தேட வல்லார்க்கு அருள் தேவர் பிரான் ஒடும் கூட வல்லார் அடி கூடுவன் யானே. |
2 | தாம் இடர்ப் பட்டுத் தளிர் போல் தயங்கினும் மா மனத்து அங்கு அன்பு வைத்த நிலையாகும் நீ இடர்ப் பட்டு இருந்து என் செய்வாய் நெஞ்சமே போம் இடத்து என்னொடும் போது கண்டாயே. |
3 | அறிவார் அமரர் தலைவனை நாடிச் செறிவார் பெறுவர் சிலர் தத்துவத்தை நெறிதான் மிக மிக நின்று அருள் செய்யும் பெரியாருடன் கூடல் பேர் இன்பம் ஆமே. |
4 | தார் சடையான் தன் தமராய் உலகினில் போர் புகழான் எந்தை பொன்னடி சேருவார் வாய் அடையா உள்ளம் தேவர்க்கு அருள் செய்யும் கோ அடைந்து அந்நெறி கூடலும் ஆமே. |
5 | உடையான் அடியார் அடியாருடன் போய் படையார் அழல் மேனிப் பதி சென்று புக்கேன் கடையார் நின்றவர் கண்டு அறிவிப்ப உடையான் வருக என ஓலம் என்றாரே. |
6 | அருமை வல்லான் கலை ஞானத்துள் தோன்றும் பெருமை வல்லோன் பிறவிச் சுழி நீந்தும் உரிமை வல்லோன் உணர்ந்து ஊழி இருக்கும் இருமை வல்லாரோடு சேர்ந்தனன் யானே. |
மூன்றாம் தந்திரம் 1. அட்டாங்க யோகம் |
1 | த்தன வல்கரி ஒன்று மூடிய நிரைத்த இராசி நிரை முறை எண்ணிப் பிரைச் சதம் எட்டும் பேசியே நந்தி நிரைத்த இயமம் நியமம் செய்தானே. |
2 | செய்த இயம நியமம் சமாதி சென்று உய்யப் பராசத்தி உத்தர பூருவ மெய்த கவச நியாசங்கள் முத்திரை எய்த செய்வன் இந்நிலை தானே. |
3 | அந்நெறி இந்நெறி என்னாது அட்டாங்கத் தன் நெறி சென்று சமாதியிலே நின்மின் நல் நெறி செல்வார்க்கு ஞானத்தில் ஏகலாம் புல் நெறி யாகத்தில் போக்கு இல்லை ஆகுமே. |
4 | இயம நியமமே எண் இலா ஆதனம் நயம் உறு பிரணா யாமம் பிரத்தி ஆகாரம் சயமிகு தாரணை தியானம் சமாதி அயம் உறும் அட்டாங்கம் ஆவது ஆமே. |
2. இயமம் |
1 | எழுந்து நீர் பெய்யினும் எட்டுத் திசையும் செழும் தண் நியமங்கள் செய்மின் என்று அண்ணல் கொழும் தண் பவளக் குளிர் சடை யோடே அழுந்திய நால்வருக்கு அருள் புரிந்தானே. |
2 | கொல்லான் பொய் கூறான் களவு இலான் எண் குணன் நல்லான் அடக்கம் உடையான் நடுச்செய்ய வல்லான் பகுத்து உண்பான் மாசு இலான் கள் காமம் இல்லான் நியமத்து இடையில் நின்றானே. |
3. நியமம் |
1 | ஆதியை வேதத்தின் அப் பொருளானைச் சோதியை அங்கே சுடுகின்ற அங்கியைப் பாதியுள் மன்னும் பராசத்தியோடு உடன் நீதி உணர்ந்து நியமத்தன் ஆமே. |
2 | தூய்மை அருள் ஊண் சுருக்கம் பொறை செவ்வை வாய்மை நிலைமை வளர்த்தலே மற்று இவை காமம் களவு கொலை எனக் காண்பவை நேமி ஈர் ஐந்து நியமத்தன் ஆமே. |
3 | தவம் செபம் சந்தோடம் ஆத்திகம் தானம் சிவன் தன் விரதமே சித்தாந்தக் கேள்வி மகம் சிவபூசை ஒண் மதி சொல்லீர் ஐந்து நிவம் பல செய்யின் நியமத்தன் ஆமே. |
4. ஆதனம் |
1 | பங்கயம் ஆதி பரந்த பல் ஆதனம் அங்கு உளவாம் இரு நாலும் அவற்றின் உள் செங்கு இல்லை ஆகச் சுவத்திகம் என மிகத் தங்க இருப்பத் தலைவனும் ஆமே. |
2 | ஓர் அணை அப்பதம் ஊருவின் மேல் ஏறி இட்டு ஆர வலித்து அதன்மேல் வைத்து அழகுறச் சீர் திகழ் கைகள் அதனைத் தன் மேல் வைக்கப் பார் திகழ் பத்மாசனம் எனல் ஆமே. |
3 | துரிசு இவ் வலக்காலைத் தோன்றவே மேல் வைத்து அரிய முழந் தாளில் அம் கையை நீட்டி உருசியொடும் உடல் செவ்வே இருத்திப் பரிசு பெறும் அது பத்திர ஆசனமே. |
4 | ஒக்க அடி இணை ஊருவில் ஏறிட்டு முக்கி உடலை முழங் கை தனில் ஏற்றித் தொக்க அறிந்து துளங்காது இருந்திடல் குக்குட ஆசனம் கொள்ளலும் ஆமே. |
5 | பாத முழந்தாளில் பாணிகளை நீட்டி ஆதர வோடும் வாய் அங்காந்து அழகு உறக் கோது இல் நயனம் கொடி மூக்கிலே உறச் சீர் திகழ் சிங்காதனம் எனச் செப்புமே. |
6 | பத்திரம் கோமுகம் பங்கயம் கேசரி சொத்திரம் வீரம் சுகாதனம் ஓர் ஏழு உத்தமம் ஆம் முது ஆசனம் எட்டு எட்டுப் பத்தொடு நூறு பல ஆசனமே. |
5. பிராணாயாமம் |
1 | ஐவர்க்கு நாயகன் அவ் ஊர்த் தலைமகன் உய்யக் கொண்டு ஏறும் குதிரை மற்று ஒன்று உண்டு மெய்யர்க்குப் பற்றுக் கொடுக்கும் கொடாது போய்ப் பொய்யரைத் துள்ளி விழுத்திடும் தானே. |
2 | ஆரியன் அல்லன் குதிரை இரண்டு உள வீசிப் பிடிக்கும் விரகு அறிவார் இல்லை கூரிய நாதன் குருவின் அருள் பெற்றால் வாரிப் பிடிக்க வசப்படும் தானே. |
3 | புள்ளினும் மிக்க புரவியை மேல் கொண்டால் கள் உண்ண வேண்டாம் தானே களிதரும் துள்ளி நடப்பிக்கும் சோம்பு தவிர்ப்பிக்கும் உள்ளது சொன்னோம் உணர்வு உடையோர்க்கே. |
4 | பிராணன் மனத்தொடும் பேராது அடங்கிப் பிராணன் இருக்கில் பிறப்பு இறப்பு இல்லை பிராணன் மடைமாறிப் பேச்சு அறிவித்துப் பிராணன் அடை பேறு பெற்று உண்டீர் நீரே. |
5 | ஏறுதல் பூரகம் ஈர் எட்டு வாமத்தால் ஆறுதல் கும்பம் அறுபத்து நாலு அதில் ஊறுதல் முப்பத்து இரண்டு அதி ரேசகம் மாறுதல் ஒன்றின் கண் வஞ்சகம் ஆமே. |
6 | வளியினை வாங்கி வயத்தில் அடக்கில் பளிங்கு ஒத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம் தெளியக் குருவின் திரு அருள் பெற்றால் வளியினும் வேட்டு வளியனும் ஆமே. |
7 | எங்கே இருக்கினும் பூரி இடத்திலே அங்கே அது செய்ய ஆக்கைக்கு அழிவு இல்லை அங்கே பிடித்தது விட்டு அளவும் செல்லச் சங்கே குறிக்கத் தலைவனும் ஆமே. |
8 | ஏற்றி இரக்கி இருகாலும் பூரிக்கும் காற்றைப் பிடிக்கும் கணக்கு அறிவார் இல்லை காற்றைப் பிடிக்கும் கணக்கு அறிவாளர்க்குக் கூற்றை உதைக்கும் குறி அது ஆமே. |
9 | மேல் கீழ் நடுப்பக்கம் மிக்கு உறப் பூரித்துப் பால் ஆம் இரேசகத்தால் உள் பாவித்து மால் ஆகி உந்தியுள் கும்பித்து வாங்கவே ஆலாலம் உண்டான் அருள் பெறலாமே. |
10 | இட்டது அவ்வீடு இளகாது இரேசித்துப் புட்டிப் படத் தச நாடியும் பூரித்துக் கொட்டிப் பிராணன் அபானனுங் கும்பித்து நட்டம் இருக்க நமன் இல்லை தானே. |
11 | புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை நெறிப்பட உள்ளே நின்மலம் ஆக்கில் உறுப்புச் சிவக்கும் உரோமம் கறுக்கும் புறப்பட்டுப் போகான் புரி சடையோனே. |
12 | கூடம் எடுத்துக் குடி புக்க மங்கையர் ஓடுவர் மீளுவர் பன்னிரண்டு அங்குலம் நீடுவர் எண்விரல் கண்டிப்பர் நால்விரல் கூடிக் கொளில் கோல அஞ்சு எழுத்து ஆமே. |
13 | பன்னிரண்டு ஆனை பகல் இரவு உள்ளது பன்னிரண்டு ஆனையைப் பாகன் அறிகிலன் பன்னிரண்டு ஆனையைப் பாகன் அறிந்தபின் பன்னிரண்டு ஆனைக்குப் பகல் இரவு இல்லையே. |
6. பிரத்தியாகாரம் |
1 | கண்டுகண்டு உள்ளே கருத்து உற வாங்கிடில் கொண்டு கொண்டு உள்ளே குணம் பல காணலாம் பண்டு உகந்து எங்கும் பழமறை தேடியை இன்று கண்டு இங்கே இருக்கலும் ஆமே. |
2 | நாபிக்குக் கீழே பன்னிரண்டு அங்குலம் தாபிக்கு மந்திரம் தன்னை அறிகிலர் தாபிக்கும் மந்திரம் தன்னை அறிந்தபின் கூவிக் கொண்டு ஈசன் குடி இருந்தானே. |
3 | மூலத்து இருவிரல் மேலுக்கு முன் நின்ற பாலித்த யோனிக்கு இருவிரல் கீழ் நின்ற கோலித்த குண்டலி உள் எழும் செம் சுடர் ஞாலத்து நாபிக்கு நால்விரல் கீழதே. |
4 | நாசிக்கு அதோ முகம் பன்னிரண்டு அங்குலம் நீ சித்தம் வைத்து நினையவும் வல்லையேல் மா சித்த மா யோகம் வந்து தலைப் பெய்தும் தேகத்துக்கு என்றும் சிதைவு இல்லை ஆமே. |
5 | சோதி இரேகைச் சுடர் ஒளி தோன்றிடில் கோது இல் பரானந்தம் என்றே குறிக் கொண்மின் நேர்திகழ் கண்டத்தே நிலவு ஒளி எய்தினால் ஓதுவது உன் உடல் உன் மத்தம் ஆமே. |
6 | மூலத் துவாரத்தை ஒக்கரம் இட்டு இரு மேலைத் துவாரத்தின் மேல் மனம் வைத்து இரு வேல் ஒத்த கண்ணை வெளியில் விழித்து இரு காலத்தை வெல்லும் கருத்து இது தானே. |
7 | எரு இடும் வாசற்கு இருவிரல் மேலே கரு இடும் வாசற்கு இருவிரல் கீழே உரு இடும் சோதியை உள்க வல்லார்க்குக் கரு இடும் சோதி கலந்து நின்றானே. |
8 | ஒருக்கால் உபாதியை ஒண் சோதி தன்னைப் பிரித்து உணர் வந்த உபாதிப் பிரிவைக் கரைத்து உணர்வு உன்னல் கரைதல் உள் நோக்கால் பிரத்தி ஆகாரப் பெருமையை அது ஆமே. |
9 | புறப்பட்ட வாயுப் புகவிடா வண்ணம் திறப்பட்டு நிச்சயம் சேர்ந்து உடன் நின்றால் உறப்பட்டு நின்றது உள்ளமும் ஆங்கே புறப்பட்டுப் போகான் பெரும் தகையானே. |
7. தாரணை |
1 | கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி வீணாத்தண்டு ஊடே வெளி உறத்தான் நோக்கிக் காணாக் கண் கேளாச் செவி என்று இருப்பார்க்கு வாழ்நாள் அடைக்கும் வழி அது ஆமே. |
2 | மலையார் சிரத்து இடை வான் நீர் அருவி நிலையாரப் பாயும் நெடுநாடி ஊடே சிலையார் பொதுவில் திரு நடம் ஆடும் தொலையாத ஆனந்தச் சோதி கண்டேனே. |
3 | மேலை நிலத்தினாள் வேதகப் பெண் பிள்ளை மூல நிலத்தில் எழுகின்ற மூர்த்தியை ஏல எழுப்பி இவளுடன் சந்திக்கப் பாலனும் ஆவான் பரா நந்தி ஆணையே. |
4 | கடை வாசலைக் கட்டிக் காலை எழுப்பி இடை வாசல் நோக்கி இனிது உள் இருத்தி மடை வாயில் கொக்குப் போல் வந்தித்து இருப்பார்க்கு உடையாமல் ஊழி இருக்கலும் ஆமே. |
5 | கலந்த உயிருடன் காலம் அறியில் கலந்த உயிர் அது காலின் நெருக்கம் கலந்த உயிர் அது கால் அது கட்டில் கலந்த உயிர் உடல் காலமும் நிற்குமே. |
6 | வாய் திறவாதார் மனத்தில் ஓர் மாடு உண்டு வாய் திறப்பாரே வளி இட்டுப் பாய்ச்சுவர் வாய் திறவாதார் மதி இட்டு மூட்டுவர் கோய் திறவா விடில் கோழையும் ஆமே. |
7 | வாழலும் ஆம் பலகாலும் மனத்து இடைப் போழ்கின்ற வாயு புறம் படாப் பாய்ச்சு உறில் ஏழு சாலேகம் இரண்டு பெருவாய்தல் பாழி பெரியது ஓர் பள்ளி அறையே. |
8 | நிரம்பிய ஈர் ஐந்தில் ஐந்து இவை போனால் இரங்கி விழித்து இருந்து என் செய்வை பேதாய் வரம்பினைக் கோலி வழி செய்குவார்க்குக் குரங்கினைக் கொட்டை பொதியலும் ஆமே. |
9 | முன்னம் வந்தனர் எல்லாம் முடிந்தனர் பின்னை வந்தவர்க்கு என்ன பிரமாணம் முன்னுறு கோடி உறு கதி பேசிடில் என்ன மாயம் இடி கரை நிற்குமே. |
10 | அரித்த உடலை ஐம் பூதத்தில் வைத்துப் பொருத்த ஐம்பூதம் சத்தாதியில் போந்து தெரித்தமன் ஆதி சத்தாதியில் செல்லத் தரித்தது தாரணை தற்பரத் தோடே. |
8. தியானம் |
1 | வரும் ஆதி ஈர் எட்டுள் வந்த தியானம் பொருவாத புந்தி புலன் போகம் ஏவல் உரு ஆய சத்தி பரத் தியான முன்னும் குருவார் சிவத் தியானம் யோகத்தின் கூறே. |
2 | கண்நாக்கு மூக்குச் செவி ஞானக் கூட்டத்துள் பண்ணாக்கி நின்ற பழம் பொருள் ஒன்று உண்டு அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டிப் புண்ணாக்கி நம்மை பிழைப்பித்த வாறே. |
3 | ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளி தன்னைக் கண்ணாரப் பார்த்துக் கலந்து ஆங்கு இருந்திடில் விண்ணாறு வந்து வெளி கண்டிட ஓடிப் பண்ணாமல் நின்றது பார்க்கலும் ஆமே. |
4 | ஒரு பொழுது உன்னார் உடலோடு உயிரை ஒரு பொழுது உன்னார் உயிருள் சிவனை ஒரு பொழுது உன்னார் சிவன் உறை சிந்தையை ஒரு பொழுது உன்னார் சந்திரப் பூவே. |
5 | மனத்து விளக்கினை மாண்பட ஏற்றிச் சினத்து விளக்கினைச் செல்ல நெருக்கி அனைத்து விளக்கும் திரி ஒக்கத் தூண்ட மனத்து விளக்கது மாயா விளக்கே. |
6 | எண் ஆயிரத்து ஆண்டு யோகம் இருக்கினும் கண்ணார் அமுதினைக் கண்டு அறிவார் இல்லை உள் நாடி உள்ளே ஒளி உற நோக்கினால் கண்ணாடி போலக் கலந்து நின்றானே. |
7 | நாட்டம் இரண்டும் நடு மூக்கில் வைத்திடில் வாட்டம் இல்லை மனைக்கும் அழிவு இல்லை ஓட்டமும் இல்லை உணர்வு இல்லை தான் இல்லை தேட்டமும் இல்லை சிவன் அவன் ஆமே. |
8 | நயனம் இரண்டும் நாசிமேல் வைத்திட்டு உயர்வு எழா வாயுவை உள்ளே அடக்கித் துயர் அற நாடியே தூங்க வல்லார்க்குப் பயன் இது காயம் பயம் இல்லை தானே. |
9 | மணி கடல் யானை வார் குழல் மேகம் அணி வண்டு தும்பி வளை பேரிகை யாழ் தணிந்து எழு நாதங்கள் தாம் இவை பத்தும் பணிந்தவர்க்கு அல்லது பார்க்க ஒண்ணாதே. |
10 | கடலொடு மேகம் களிறொடும் ஓசை அட எழும் வீணை அண்டர் அண்டத்துச் சுடர் மன்னு வேணுச் சுரிசங்கின் ஓசை திடம் அறி யோகிக்கு அல்லால் தெரியாதே. |
11 | ஈசன் இயல்பும் இமையவர் ஈட்டமும் பாசம் இயங்கும் பரிந்து துயராய் நிற்கும் ஓசை அதன் மணம் போல விடுவது ஓர் ஓசை ஆம் ஈசன் உணர வல்லார்க்கே. |
12 | நாத முடிவிலே நல்லாள் இருப்பது நாத முடிவிலே நல் யோகம் இருப்பது நாத முடிவிலே நாட்டம் இருப்பது நாத முடிவிலே நஞ்சு உண்ட கண்டனே. |
13 | உதிக்கின்ற ஆறினும் உள் அங்கி ஐந்தும் துதிக்கின்ற தேசுடைத் தூங்கு இருள் நீங்கி அதிக்கின்ற ஐவருள் நாதம் ஒடுங்கக் கதிக் கொன்றை ஈசன் கழல் சேரலாமே. |
14 | பள்ளி அறையில் பகலே இருள் இல்லை கொள்ளி அறையில் கொளுந்தாமல் காக்கலாம் ஒள்ளிது அறியிலோர் ஓசனை நீள் இது வெள்ளி அறையில் விடிவு இல்லை தானே. |
15 | கொண்ட விரதம் குறையாமல் தான் ஒன்றித் தண்டு உடன் ஓடித் தலைப்பட்ட யோகிக்கு மண்டலம் மூன்றினும் ஒக்க வளர்ந்தபின் பிண்டமும் ஊழி பிரியாது இருக்குமே. |
16 | அவ் அவர் மண்டலம் ஆம் பரிசு ஒன்று உண்டு அவ் அவர் மண்டலத்து அவ் அவர் தேவராம் அவ் அவர் மண்டலம் அவ் அவர்க்கே வரில் அவ் அவர் மண்டலம் மாயம் மற்றோர்க்கே. |
17 | இளைக் கின்ற நெஞ்சத்து இருட்டு அறை உள்ளே முளைக் கின்ற மண்டலம் மூன்றினும் ஒன்றித் துளைப் பெரும் பாசம் துருவிடும் ஆகில் இளைப்பு இன்றி மார்கழி ஏற்றம் அது ஆமே. |
18 | முக்குண மூடற வாயுவை மூலத்தே சிக்கென மூடித் திரித்துப் பிடித்திட்டுத் தக்க வலம் இடம் நாழிகை சாதிக்க வைக்கும் உயர் நிலை வானவர் கோனே. |
19 | நடல் இத்த நாபிக்கு நால் விரல் மேலே மடல் இத்த வாணிக்கு இருவிரல் உள்ளே கடலித்து இருந்து கருத வல்லார்கள் சடலத் தலைவனைத் தாம் அறிந்தாரே. |
20 | அறிவாய சத்து என்னு மாறா அகன்று செறிவான மாயை சிதைத்து அருளாலே பிரியாத பேர் அருள் ஆயிடும் பெற்றி நெறியான அன்பர் நிலை அறிந்தாரே. |
9. சமாதி |
1 | சமாதி யமாதியில் தான் செல்லக் கூடும் சமாதி யமாதியில் தான் எட்டுச் சித்தி சமாதி யமாதியில் தங்கினோர்க்கு அன்றே சமாதி யமாதி தலைப்படும் தானே. |
2 | விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிடில் சந்தியில் ஆன சமாதியில் கூடிடும் அந்தம் இலாத அறிவின் அரும் பொருள் சுந்தரச் சோதியும் தோன்றிடும் தானே. |
3 | மன் மனம் எங்கு உண்டு வாயுவும் அங்கு உண்டு மன் மனம் எங்கு இல்லை வாயுவும் அங்கு இல்லை மன் மனத்து உள்ளே மகிழ்ந்து இருப்பார்க்கு மன் மனத்து உள்ளே மனோலயம் ஆமே. |
4 | விண்டு அலர் கூபமும் விஞ்சத்து அடவியும் கண்டு உணர்வாகக் கருதி இருப்பார்கள் செண்டு வெளியில் செழும் கிரியத்து இடை கொண்டு குதிரை குசை செறுத்தாரே. |
5 | மூல நாடி முகட்டலகு உச்சியுள் நாலு வாசல் நடுவுள் இருப்பிர்காள் மேலை வாசல் வெளியுறக் கண்ட பின் காலன் வார்த்தை கனவிலும் இல்லையே. |
6 | மண்டலம் ஐந்து வரைகளும் ஈர் ஆறு கொண்டிட நிற்கும் குடிகளும் ஆறு எண்மர் கண்டிட நிற்கும் கருத்து நடு ஆக உண்டு நிலாவிடும் ஓடும் பதத்தையே. |
7 | பூட்டு ஒத்து மெய்யில் பொறிபட்ட வாயுவைத் தேட்டு அற்ற அந்நிலம் சேரும்படி வைத்து நாட்டத்தை மீட்டு நயனத்து இருப்பார்க்கு தோட்டத்து மாம்பழம் தூங்கலும் ஆமே. |
8 | உரு அறியும் பரிசு ஒன்று உண்டு வானோர் கருவரை பற்றிக் கடைந்து அமுது உண்டார் அருவரை ஏறி அமுது உண்ண மாட்டார் திருவரை ஆம் மனம் தீர்ந்து அற்றவாறே. |
9 | நம்பனை ஆதியை நால் மறை ஓதியைச் செம் பொனின் உள்ளே திகழ்கின்ற சோதியை அன்பினை ஆக்கி அருத்தி ஒடுங்கிப் போய்க் கொம்பு ஏறிக் கும்பிட்டுக் கூட்டம் இட்டாரே. |
10 | மூலத்து மேல் அது முச்சதுரத்து காலத் திசையில் கலக்கின்ற சந்தினில் மேலைப் பிறையினில் நெற்றி நேர் நின்ற கோலத்தின் கோலங்கள் வெவ்வேறு கொண்டதே. |
11 | கற்பனை அற்றுக் கனல் வழியே சென்று சிற்பனை எல்லாம் சிருட்டித்த பேர் ஒளிப் பொற்பினை நாடிப் புணர் மதியோடு உற்றுத் தற்பரம் ஆகத் தகும் தண் சமாதியே. |
12 | தலைப்பட்டு இருந்திடத் தத்துவம் கூடும் வலைப் பட்டு இருந்திடும் மாது நல்லாளும் குலைப் பட்டு இருந்திடும் கோபம் அகலும் துலைப் பட்டு இருந்திடும் தூங்க வல்லார்க்கே. |
13 | சோதித் தனிச் சுடராய் நின்ற தேவனும் ஆதியும் உள்நின்ற சீவனும் ஆகும் ஆல் ஆதிப் பிரமன் பெரும் கடல் வண்ணனும் ஆதி அடிபணிந்து அன்புறு வாரே. |
14 | சமாதி செய்வார்க்குத் தகும் பல யோகம் சமாதிகள் வேண்டாம் இறையுடன் ஏகில் சமாதி தான் இல்லை தான் அவன் ஆகில் சமாதியில் எட்டுஎட்டுச் சித்தியும் எய்துமே. |
10. அட்டாங்க யோகப் பேறு |
1 | போது உகந்து ஏறும் புரிசடையான் அடி யாது உகந்தார் அமரா பதிக்கே செல்வர் ஏது உகந்தான் இவன் என்று அருள் செய்திடும் மாது உகந்து ஆடிடும் ஆல் விடையோனே. |
நியமம் |
2 | பற்றிப் பதத்து அன்பு வைத்துப் பரன்புகழ் கற்று இருந்து ஆங்கே கருதும் அவர்கட்கு முற்று எழுந்து ஆங்கே முனிவர் எதிர்வரத் தெற்றும் சிவபதம் சேரலும் ஆமே. |
ஆதனம் |
3 | வருந்தித் தவம் செய்து வானவர் கோவாய்த் திருந்து அமராபதிச் செல்வன் இவன் எனத் தரும் தண் முழவம் குழலும் இயம்ப இருந்து இன்பம் எய்துவர் ஈசன் அருளே. |
பிராணாயாமம் |
4 | செம் பொன் சிவகதி சென்று எய்தும் காலத்துக் கும்பத்து அமரர் குழாம் வந்து எதிர் கொள்ள எம் பொன் தலைவன் இவனாம் எனச் சொல்ல இன்பக் கலவி இருக்கலும் ஆமே. |
பிரத்தியாகாரம் |
5 | சேர் உறு காலத்து இசை நின்ற தேவர்கள் ஆர் இவன் என்ன அரனாம் இவன் என்ன ஏர் உறு தேவர்கள் எல்லாம் எதிர்கொள்ளக் கார் உரு கண்டனை மெய் கண்டவாறே. |
தாரணை |
6 | நல்வழி நாடி நமன் வழி மாற்றிடும் சொல் வழியாளர் சுருங்காப் பெரும் கொடை இல்வழி யாளர் இமையவர் எண்திசைப் பல்வழி எய்தினும் பார்வழி ஆகுமே. |
தியானம் |
7 | தூங்க வல்லார்க்கும் துணை ஏழ் புவனமும் வாங்க வல்லார்க்கும் வலிசெய்து நின்றிடும் தேங்க வல்லார்க்கும் திளைக்கும் அமுதமும் தாங்க வல்லார்க்கும் தன் இடம் ஆமே. |
சமாதி |
8 | காரியம் ஆன உபாதியைத் தான் கடந்து ஆரிய காரணம் ஏழும் தன்பால் உற ஆரிய காரணம் ஆய தவத்து இடைத் தாரியல் தற்பரம் சேர்தல் சமாதியே. |
11. அட்டமா சித்திபரகாயப் பிரவேசம் |
1 | பணிந்து எண்திசையும் பரமனை நாடித் துணிந்து எண் திசையும் தொழுது எம் பிரானை அணிந்து எண் திசையினும் அட்டமா சித்தி தணிந்து எண் திசை சென்று தாபித்த வாறே. |
2 | பரிசு அறி வானவர் பண்பன் அடி எனத் துரிசு அற நாடியே தூவெளி கண்டேன் அரியது எனக்கு இல்லை அட்டமா சித்தி பெரியது அருள் செய்து பிறப்பு அறுத்தானே. |
3 | குரவன் அருளில் குறிவழி மூலன் பரையின் மணம்மிகு சங்கட்டம் பார்த்துத் தெரிதரு சாம்பவி கேசரி சேரப் பெரிய சிவகதி பேர் எட்டாம் சித்தியே. |
4 | காயாதி பூதம் கலை கால மாயையில் ஆயாது அகல அறிவு ஒன்றன் அனாதியே ஓயாப் பதி அதன் உண்மையைக் கூடினால் வீயாப் பரகாயம் மேவலும் ஆமே. |
5 | இருபதினாயிரத்து எண்ணூறு பேதம் மருவிய கன்ம மாம் அந்த யோகம் தரும் இவை காய உழைப்பு ஆகும் தானே அருமிகு நான்காய் அடங்குமா சித்திக்கே. |
6 | மதி தனில் ஈர் ஆறாய் மன்னும் கலையின் உதயம் அது நால் ஒழிய ஓர் எட்டுப் பதியும் ஈர் ஆறு ஆண்டு பற்று அறப் பார்க்கில் திதமான ஈர் ஆறு சித்திகள் ஆமே. |
7 | நாடும் பிணி ஆகும் நஞ்சனம் சூழ்ந்தக்கால் நீடும் கலை கல்வி நீள் மேதை கூர் ஞானம் பீடு ஒன்றினால் வாயாச் சித்தி பேதத்தின் நீடும் துரம் கேட்டல் நீள் முடி ஈர் ஆறே. |
8 | ஏழ் ஆனதில் சண்ட வாயுவின் வேகி ஆம் தாழா நடை பல யோசனை சார்ந்திடும் சூழான ஓர் எட்டில் தோன்றா நரைதிரை தாழான ஒன் பதிற்றான் பர காயமே. |
9 | ஈர் ஐந்தில் பூரித்துத் தியான உருத்திரன் ஏர் ஒன்று பன் ஒன்றில் ஈர் ஆறாம் எண்சித்தி சீர் ஒன்று மேல் ஏழ் கீழ் ஏழ் புவிச் சென்று ஏர் ஒன்று வியாபியாய் நிற்றல் ஈர் ஆறே. |
10 | தானே அனுவும் சகத்துத்தன் நொய்ம்மையும் மானாக் கனமும் பரகாயத்து ஏகமும் தான் ஆவதும் பரகாயம் சேர் தன்மையும் ஆனாத உண்மையும் வியாபியும் ஆம் எட்டே. |
11 | தாங்கிய தன்மையும் தான் அணுப் பல் உயிர் வாங்கிய காலத்து மற்று ஓர் குறை இல்லை ஆங்கே எழுந்தோம் அவற்றுள் எழுந்துமிக்கு ஓங்கி வர முத்தி முந்தியவாறே. |
12 | முந்திய முந்நூற்று அறுபது காலமும் வந்தது நாழிகை வான் முதலாய் இடச் சிந்தை செயச் செய மண் முதல் தேர்ந்து அறிந்து உந்தியுள் நின்று உதித்து எழும் ஆறே. |
13 | சித்தம் திரிந்து சிவ மயம் ஆகிய முத்தம் தெரிந்து உற்ற மோனர் சிவமுத்தர் சுத்தம் பெறலாம் ஐந்தில் தொடக்கு அற்றோர் சித்தம் பரத்தில் திரு நடத்தோரே. |
14 | ஒத்த இவ் ஒன்பது வாயுவும் ஒத்தன ஒத்த இவ் ஒன்பதின் மிக்க தனம் செயன் ஒத்த இவ் ஒன்பதில் ஒக்க இருந்திட ஒத்த உடலும் உயிரும் இருந்ததே. |
15 | இருக்கும் தனம் செயன் ஒன்பது காலில் இருக்கும் இருநூற்று இருபத்து மூன்று ஆய் இருக்கும் உடலில் இருந்தில ஆகில் இருக்கும் உடல் அது வீங்கி வெடித்ததே. |
16 | வீங்கும் கழலை சிரங்கொடு குட்டமும் வீங்கும் வியாதிகள் சோகை பலவதாய் வீங்கிய வாதமும் கூனும் முடம் அதாய் வீங்கு வியாதிகள் கண்ணில் மருவியே. |
17 | கண்ணில் வியாதி ரோகம் தனஞ் செயன் கண்ணில் இவ் வாணிகள் காசம் அவன் அல்லன் கண்ணினில் கூர்மன் கலந்திலன் ஆதலால் கண்ணினில் சோதி கலந்ததும் இல்லையே. |
18 | நாடியின் ஓசை நயனம் இருதயம் தூடி அளவும் சுடர் விடு சோதியைத் தேவருள் ஈசன் திருமால் பிரமனும் ஓவற நின்று அங்கு உணர்ந்து இருந்தாரே. |
19 | ஒன்பது வாசல் உடையது ஓர் பிண்டத்துள் ஒன்பது நாடி உடையது ஓர் இடம் ஒன்பது நாடி ஒடுங்க வல்லார் கட்கு ஒன்பது காட்சி இலை பல ஆமே. |
20 | ஓங்கிய அங்கிக் கீழ் ஒண் சுழுனைச் செல்ல வாங்கி இரவி மதி வழி ஓடிடத் தாங்கி உலகங்கள் ஏழும் தரித்திட ஆங்கு அது சொன்னோம் அருவழி யோர்க்கே....... |
21 | தலைப் பட்ட வாறு அண்ணல் தையலை நாடி வலைப் பட்ட பாசத்து வன் பிணை மான் போல் துலைப் பட்ட நாடியைத் தூவழி செய்தால் விலைக்கு உண்ண வைத்தது ஓர் வித்து அது ஆமே. |
22 | ஓடிச் சென்று அங்கே ஒரு பொருள் கண்டவர் நாடியின் உள் ஆக நாதம் எழுப்புவர் தேடிச் சென்று அங்கே தேனை முகந்து உண்டு பாடியுள் நின்ற பகைவரைக் கட்டுமே. |
23 | கட்டி இட்ட தாமரை ஞாளத்தில் ஒன்பது மட்டு இட்ட கன்னியர் மாதுடன் சேர்ந்தனர் கட்டி இட்டு நின்று களம் கனி ஊடுபோய்ப் பொட்டு இட்டு நின்று பூரணம் ஆனதே. |
24 | பூரண சத்தி எழுமூன்று அறை ஆக ஏர் அணி கன்னியர் எழு நூற்று அம் சாக்கினார் நாரணன் நான்முகன் ஆதிய ஐவர்க்கும் காரணம் ஆகிக் கலந்து விரிந்ததே. |
25 | விரிந்து குவிந்து விளைந்த இம் மங்கை கரந்து உள் எழுந்து கரந்து அங்கு இருக்கில் பரந்து குவிந்தது பார் முதல் பூதம் இரைந்து எழு வாயு இடத்தினில் ஒடுங்கே. |
26 | இடையொடு பிங்கலை என்னும் இரண்டு மடை படு வாயுவும் மாறியே நிற்கும் தடை அவை ஆறு ஏழும் தண் சுடர் உள்ளே மிடை வளர் மின் கொடி தன்னில் ஒடுங்கே. |
27 | ஒடுங்கி ஒருங்கி உணர்ந்து அங்கு இருக்கில் மடங்கி அடங்கிடும் வாயு அதன் உள் மடங்கி மடங்கிடும் மன் உயிர் உள்ளே நடம் கொண்ட கூத்தனும் நாடு கின்றானே. |
28 | நாடியின் உள்ளே நாதத் தொனியுடன் தேடி உடன் சென்று அத் திருவினைக் கைக் கொண்டு பாடி உள் நின்ற பகைவரைக் கட்டி இட்டு மாடி ஒரு கை மணி விளக்கு ஆனதே. |
29 | அணு ஆதி சித்திகள் ஆனவை கூறில் அணுவில் அணுவின் பெருமையில் நேர்மை இணுகாத வேகார் பாகாயம் ஏவல் அணு அத்தனை எங்கும் தான் ஆதல் என்று எட்டே. |
30 | எட்டு ஆகிய சித்தி ஓர் எட்டி யோகத்தால் கிட்டாப் பிராணனே செய்தால் கிடைத்திடும் ஒட்டா நடு நாடி மூலத்தன் அல் பானு விட்டான் மதி உண்ணவும் வரும் மேல் அதே. |
31 | சித்திகள் எட்டு அன்றிச் சேர் எட்டியோகத்தால் புத்திகள் ஆனவை எல்லாம் புலப்படும் சித்திகள் எண் சித்தி தான் ஆம் திரிபுரை சத்தி அருள் தரத் தான் உள ஆகுமே. |
அணிமா |
32 | எட்டு இவை தன்னோடு எழில் பரம் கை கூடப் பட்டவர் சித்தர் பர லோகம் சேர்தலால் இட்டம் அது உள்ளே இறுக்கல் பரகாட்சி எட்டும் வரப்பு இடம் தான் நின்று எட்டுமே. |
33 | மந்திரம் ஏறு மதி பானுவை மாற்றிக் கந்தாய்க் குழியில் கசடு அற வல்லார்க்குத் தந்து இன்றி நல் காமிய லோகம் சார்வாகும் அந்த உலகம் அணிமாதி ஆமே. |
34 | முடிந்திட்டு வைத்து முயங்கி ஓர் ஆண்டில் அணிந்த அணிமாகை தான் ஆம் இவனும் தணிந்த அப் பஞ்சினும் தான் ஒய்யது ஆகி மெலிந்து அங்கு இருந்திடும் வெல்ல ஒண்ணாதே. |
லகிமா |
35 | ஆகின்ற அத் தனி நாயகி தன்னுடன் போகின்ற தத்துவம் எங்கும் புகலது ஆய்ச் சாகின்ற காலங்கள் தன்வழி நின்றிடின் மாய்கின்றதை ஆண்டின் மால் அகு ஆகுமே. |
36 | மால் அகு ஆகிய மாயனைக் கண்டபின் தான் ஒளி ஆகித் தழைத்து அங்கு இருந்திடும் பால் ஒளி ஆகிப் பரந்து எங்கும் நின்றது மேல் ஒளி ஆகிய மெய்ப் பொருள் காணுமே. |
மகிமா |
37 | மெய்ப்பொருள் சொல்லிய மெல் இயலாள் உடன் தன் பொருள் ஆகிய தத்துவம் கூடிடக் கைப் பொருள் ஆகக் கலந்திடும் ஓர் ஆண்டின் மைப் பொருள் ஆகும் மகிமா அது ஆகுமே. |
38 | ஆகின்ற கால் ஒளி ஆவது கண்டபின் போகின்ற காலங்கள் போவது இல்லை ஆம் மேல் நின்ற காலம் வெளி உற நின்றன தான் நின்ற காலங்கள் தன்வழி ஆகுமே. |
39 | தன்வழி ஆகத் தழைத்திடும் ஞானமும் தன் வழி ஆகத் தழைத்திடும் வையகம் தன் வழி ஆகத் தழைத்த பொருள் எல்லாம் தன் வழி தன் அருள் ஆகி நின்றானே. |
பிராத்தி |
40 | நின்றன தத்துவ நாயகி தன்னுடன் கண்டன பூதப் படை அவை எல்லாம் கொண்டவை ஓர் ஆண்டு கூட இருந்திடில் விண்டதுவே நல்ல பிராத்தி அது ஆகுமே. |
கரிமா |
41 | ஆகின்ற மின் ஒளி ஆவது கண்டபின் பாகின்ற பூவில் பரப்பவை காணலாம் ஏகின்ற காலம் வெளிஉற நின்றது போகின்ற காலங்கள் போவதும் இல்லைஏ. |
42 | போவது ஒன்று இல்லை வருவது தான் இல்லை சாவது ஒன்று இல்லை தழைப்பது தான் இல்லை தாமதம் இல்லை தமர் அகத்து இன் ஒளி யாவதும் இல்லை அறிந்து கொள்வார்க்கே. |
43 | அறிந்த பராசத்தி உள்ளே அமரில் பறிந்தது பூதப் படை அவை எல்லாம் குவிந்து அவை ஓர் ஆண்டு கூட இருக்கில் விரிந்தது பரகயம் மேவலும் ஆமே. |
பிராகாமியம் |
44 | ஆன விளக்கு ஒளி ஆவது அறிகிலர் மூல விளக்கு ஒளி முன்னே உடையவர் கான விளக்கு ஒளி கண்டு கொள்வார் கட்கு மேலை விளக்கு ஒளி வீடு எளிதா நின்றே. |
ஈசத்துவம் |
45 | நின்ற சதாசிவ நாயகி தன்னுடன் கண்டன பூதப் படை அவை எல்லாம் கொண்டவை ஓர் ஆண்டு கூடி இருந்திடில் பண்டை அவ் ஈசன் தத்துவம் ஆகுமே. |
46 | ஆகின்ற சந்திரன் தன் ஒளி ஆய் அவன் ஆகின்ற சந்திரன் தட்பமும் ஆயிடும் ஆகின்ற சந்திரன் தன் கலை கூடிடில் ஆகின்ற சந்திரன் தான் அவன் ஆமே. |
47 | தானே படைத்திட வல்லவன் ஆயிடும் தானே அளித்திட வல்லவன் ஆயிடும் தானே சங்காரத் தலைவனும் ஆயிடும் தானே இவன் எனும் தன்மயன் ஆமே. |
48 | தன்மை அது ஆகத் தழைத்த கலையின் உள் பன்மை அது ஆகப் பரந்த ஐம் பூதத்தை வன்மை அது ஆக மறித்திடில் ஓர் ஆண்டின் மென்மை அது ஆகிய மெய்ப் பொருள் காணுமே. |
வசித்துவம் |
49 | மெய்ப் பொருள் ஆக விளைந்தது ஏது எனின் நல் பொருள் ஆகிய நல்ல வசித்துவம் கைப் பொருள் ஆகக் கலந்த உயிர்க்கு எல்லாம் தன் பொருள் ஆகிய தன்மையன் ஆகுமே. |
50 | தன்மை அது ஆகத் தழைத்த பகலவன் மென்மை அது ஆகிய மெய்ப் பொருள் கண்டிடின் பொன்மை அது ஆகப் புலன்களும் போயிட நன்மை அது ஆகிய நல்கொடி காணுமே. |
51 | நல் கொடி ஆகிய நாயகி தன்னுடன் அக் கொடி ஆகம் அறிந்திடில் ஓராண்டு பொன் கொடி ஆகிய புவனங்கள் போய்வரும் கல் கொடி ஆகிய காமுகன் ஆமே. |
52 | காமரு தத்துவம் ஆனது வந்தபின் பூமரு கந்தம் புவனம் அது ஆயிடும் மா மரு உன் இடை மெய்த் தடுமானன் ஆய் நா மருவும் ஒளி நாயகம் ஆனதே. |
53 | நாயகம் ஆகிய நல் ஒளி கண்டபின் தாயகம் ஆகத் தழைத்து அங்கு இருந்திடும் போய் அகம் ஆன புவனங்கள் கண்டபின் பேய் அகம் ஆகிய பேர் ஒளி காணுமே. |
54 | பேர் ஒளி ஆகிய பெரிய அவ் வேட்டையும் பார் ஒளி ஆகப் பதைப்பு அறக் கண்டவன் தார் ஒளி ஆகத் தரணி முழுதும் ஆம் ஓர் ஒளி ஆகிய கால் ஒளி காணுமே. |
55 | காலோடு உயிரும் கலக்கும் வகை சொல்லில் கால் அது அக்கொடி நாயகி தன்னுடன் கால் அது ஐஞ்ஞூற்று ஒரு பத்து மூன்றையும் கால் அது வேண்டிக் கொண்ட இவ் ஆறே. |
56 | ஆறது ஆகும் அமிர்தத் தலையின் உள் ஆறது ஆயிர முந்நூற்று தொடைஞ்சு உள ஆறது ஆயிரம் ஆகும் அருவழி ஆறது ஆக வளர்ப்பது இரண்டே. |
57 | இரண்டின் மேலே சதா சிவ நாயகி இரண்டது கால் கொண்டு எழுவகை சொல்லில் இரண்டது ஆயிரம் ஐம்பதோடு ஒன்றாய்த் திரண்டது காலம் எடுத்ததும் அஞ்சே. |
58 | அஞ்சுடன் அஞ்சு முகம் உள நாயகி அஞ்சுடன் அஞ்சு அது ஆயுதம் ஆவது அஞ்சு அது அன்றி இரண்டு அது ஆயிரம் அஞ்சது காலம் எடுத்துளும் ஒன்றே. |
59 | ஒன்று அது ஆகிய தத்துவ நாயகி ஒன்று அது கால் கொண்டு ஊர்வகை சொல்லிடில் ஒன்று அது வென்றி கொள் ஆயிரம் ஆயிரம் ஒன்று அது காலம் எடுத்துளும் முன்னே. |
60 | முன் எழும் அக் கலை நாயகி தன்னுடன் முன் உறு வாயு முடிவகை சொல்லிடின் முன் உறும் ஐம்பத்து ஒன்றுடன் அஞ்சும் ஆய் முன் உறு வாயு முடி வகை ஆமே. |
61 | ஆய் வரும் அத்தனி நாயகி தன்னுடன் ஆய் வரும் வாயு அளப்பது சொல்லிடில் ஆய் வரும் ஐஞ்ஞூற்று முப்பதோடு ஒன்பது மாய் வரு வாயு வளப்பு உள் இருந்தே. |
62 | இருநிதி ஆகிய எந்தை இடத்து இருநிதி வாயு இயங்கு நெறியில் இருநூற்று முப்பத்து மூன்று உடன் அஞ்சாய் இருநிதி வாயு இயங்கும் எழுத்தே. |
63 | எழுகின்ற சோதியுள் நாயகி தன் பால் எழுகின்ற வாயு இடம் அது சொல்லில் எழுநூற்று இருபத்து ஒன்பான் அது நாலாய் எழுந்து உடன் அங்கி இருந்தது இவ்வாறே. |
64 | ஆறு அது கால் கொண்டு இரதம் விளைத்திடும் ஏழ் அது கால் கொண்டு இரட்டி இறக்கிட எட்டு அது கால் கொண்டிட வகை ஒத்தபின் ஒன்பது மாநிலம் ஒத்தது வாயுவே. |
65 | சந்திரன் சூரியன் தற்பரன் தாணுவில் சந்திரன் தானும் தலைப்படும் தன்மையைச் சந்தியிலே கண்டு தான் ஆம் சக முகத்து உந்திச் சமாதி யுடை ஒளியோகியே. |
66 | அணங்கு அற்றம் ஆதல் அரும்சன நீவல் வணங்கு உற்ற கல்விமா ஞானம் மிகுத்தல் சுணங்கு உற்ற வாயர் சித்தி தூரம் கேட்டல் நுணங்கு அற்று இரோதல் கால் வேகத்து நுந்தலே. |
67 | மரணம் சரை விடல் வண்பர காயம் இரணம் சேர் பூமி இறந்தோர்க்கு அளித்தல் அரணன் திருஉற வாதன் மூ ஏழாங் கரன் உறு கேள்வி கணக்கு அறிந்தேனே. |
68 | ஓதம் ஒலிக்கும் உலகை வலம் வந்து பாதங்கள் நோவ நடந்தும் பயன் இல்லை காதலில் அண்ணலைக் காண இனியவர் நாதன் இருந்த நகர் அறிவாரே. |
69 | மூல முதல் வேதா மால் அரன் முன் நிற்கக் கோலிய ஐம் முகன் கூறப் பரவிந்து சாலப் பரநாதம் விந்துத் தனி நாதம் பாலித்த சத்தி பரை பரன் பாதமே. |
70 | ஆதார யோகத்து அதி தேவொடும் சென்று மீது ஆன தற்பரை மேவும் பரன் ஒடு மேதாதி ஈர் எண் கலை செல்லம் மீது ஒளி ஓதா அசிந்த மீது ஆனந்த யோகமே. |
71 | மதியமும் ஞாயிறும் வந்து உடன் கூடித் துதி செய்பவர் அவர் தொல் வானவர்கள் விதி அது செய்கின்ற மெய் அடியார்க்குப் பதி அது காட்டும் பரமன் நின்றானே. |
72 | கட்ட வல்லார்கள் கரந்து எங்கும் தான் ஆவர் மட்டு அவிழ் தாமரை உள்ளே மணம் செய்து பொட்டு எழக் குத்திப் பொறி எழத் தண்டு இட்டு நட்டு அறிவார்க்கு நமன் இல்லை தானே. |
12. கலைநிலை |
1 | காதல் வழி செய்த கண் நுதல் அண்ணலைக் காதல் வழி செய்து கண் உற நோக்கிடில் காதல் வழி செய்து கங்கை வழிதரும் காதல் வழி செய்து காக்கலும் ஆமே. |
2 | காக்கலும் ஆகும் கரணங்கள் நான்கையும் காக்கலும் ஆகும் கலை பதினாரையும் காக்கலும் ஆகும் கலந்த நல் வாயுவும் காக்கலும் ஆகும் கருத்து உற நில்லே. |
3 | நிலை பெற நின்றது நேர்தரு வாயு சிலை பெற நின்றது தீபமும் ஒத்து கலை வழி நின்ற கலப்பை அறியில் மலைவற ஆகும் வழி இது ஆமே. |
4 | புடை ஒன்றி நின்றிடும் பூதப் பிரானை மடை ஒன்றி நின்றிட வாய்த்த வழியும் சடை ஒன்றி நின்ற அச் சங்கர நாதன் விடை ஒன்றில் ஏறியே வீற்று இருந்தானே. |
5 | இருக்கின்ற காலங்கள் ஏதும் அறியார் பெருக்கின்ற காலப் பெருமையை நோக்கி ஒருக்கின்ற வாயு ஒளி பெற நிற்கத் தருக்கு ஒன்றி நின்றிடும் சாதகன் ஆமே. |
6 | சாதகம் ஆன அத்தன்மையை நோக்கியே மாதவம் ஆன வழிபாடு செய்திடும் போதகம் ஆகப் புகல் உறப் பாய்ச்சினால் வேதகம் ஆக விளைந்தது கிடக்குமே. |
7 | கிடந்தது தானே கிளர் பயன் மூன்று நடந்தது தானே உள் நாடியுள் நோக்கிப் படர்ந்தது தானே பங்கயம் ஆகத் தொடர்ந்தது தானே அச் சேதியுள் நின்றே. |
8 | தானே எழுந்த அத் தத்துவ நாயகி ஊனே வழி செய்து எம் உள்ளே இருந்திடும் வானோர் உலகு ஈன்ற அம்மை மதித்திடத் தேனே பருகிச் சிவ ஆலயம் ஆகுமே. |
9 | திகழும் படியே செறிதரு வாயு அழியும் படியை அறிகிலர் ஆரும் அழியும் படியை அறிந்தபின் நந்தி திகழ்கின்ற வாயுவைச் சேர்தலும் ஆமே. |
10 | சோதனை தன்னில் துரிசறக் காணலாம் நாதனும் நாயகி தன்னில் பிரியும் நாள் சாதனம் ஆகும் குருவை வழிபட்டு மாதனம் ஆக மதித்துக் கொள்ளீரே. |
11 | ஈர் ஆறு கால் கொண்டு எழுந்த புரவியைப் பேராமல் கட்டிப் பெரிது உண்ண வல்லீரேல் நீர் ஆயிரமும் நிலம் ஆயிரத்து ஆண்டும் பேராது காயம் பிரான் நந்தி ஆணையே. |
12 | ஓசையில் ஏழும் ஒளியின்கண் ஐந்தும் நாசியின் மூன்றும் நாவில் இரண்டும் தேசியும் தேசனும் தன்னில் பிரியும் நாள் மாசு அறு சோதி வகுத்து வைத்தானே. |
13. காரியசித்தி உபாயம் |
1 | உடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே. |
2 | உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன் உடம்பினுக்கு உள்ளே உறு பொருள் கண்டேன் உடம்பு உளே உத்தமன் கோயில் கொண்டான் என்று உடம்பினை யான் இருந்து ஓம்பு கின்றேனே. |
3 | சுழற்றிக் கொடுக்கவே சுத்திக் கழியும் கழற்றி மலத்தைக் கமலத்தைப் பூரித்து உழற்றிக் கொடுக்கும் உபாயம் அறிவார்க்கு அழற்றித் தவிர்ந்து உடல் அஞ்சனம் ஆமே. |
4 | அஞ்சனம் போன்று உடலை அறு மந்தியில் வஞ்சக வாத மறுமத் தியானத்தில் செம் சிறு காலையில் செய்திடல் பித்து அறும் நஞ்சு அறச் சொன்னோம் நரை திரை நாசமே. |
5 | மூன்று மடக்கு உடைப் பாம்பு இரண்டு எட்டுள் வேன்ற இயந்திரம் பன்னிரண்டு அங்குலம் நான்ற இம் முட்டை இரண்டையும் கட்டி இட்டு ஊன்றி இருக்க உடம்பு அழியாதே. |
6 | நூறும் அறுபதும் ஆறும் வலம் வர நூறும் அறுபதும் ஆறும் இடம் வர நூறும் அறுபதும் ஆறும் எதிர் இட நூறும் அறுபதும் ஆறும் புகுவரே. |
7 | சத்தியார் கோயில் இடம் வலம் சாதித்தான் மத்தியானத் திலே வாத்தியம் கேட்கலாம் தித் தித்த கூத்தும் சிவனும் வெளிப்படும் சத்தியம் சொன்னோம் சதா நந்தி ஆணையே. |
8 | திறத் திறம் விந்து திகழும் ஆகாரம் உறப் பெறவே நினைந்து ஓதும் சகார மறிப்பது மந்திர மன்னிய நாதம் மறப் பெற யோகிக்கு அற நெறி ஆமே. |
9 | உந்திச் சுழியின் உடன் நேர் பிராணனைச் சிந்தித்து எழுப்பிச் சிவ மந்திரத்தினால் முந்தி முகட்டின் நிறுத்தி அபானனைச் சிந்தித்து எழுப்பச் சிவன் அவன் ஆமே. |
10 | மாறா மலக் குதம் தன் மேல் இரு விரல் கூறா இலிங்கத்தின் கீழே குறிக் கொண்மின் ஆறா உடம்பு இடை அண்ணலும் அங்கு உளன் கூறா உபதேசம் கொண்டது காணுமே. |
11 | நீல நிறன் உடை நேர் இழையா ளொடும் சாலவும் புல்லிச் சதம் என்று இருப்பார்க்கு ஞாலம் அறிய நரை திரை மாறிடும் பாலனும் ஆவர் பரா நந்தி ஆணையே. |
12 | அண்டம் சுருங்கில் அதற்கு ஓர் அழிவு இல்லை பிண்டம் சுருங்கில் பிராணன் நிலை பெறும் உண்டி சுருங்கில் உபாயம் பல உள கண்டம் கறுத்த கபாலியும் ஆமே. |
13 | பிண்டத்து உள் உற்ற பிழக் கடை வாசலை அண்டத்து உள் உற்று அடுத்து அடுத்து ஏகிடில் வண்டிச் சிக்கு மலர்க் குழல் மாதரார் கண்டிச் சிக்கு நல் காயமும் ஆமே. |
14 | சுழலும் பெரும் கூற்றுத் தொல்லை முன் சீறி சுழலும் இரத்தத்து உள் அங்கி உள் ஈசன் கழல் கொள் திருவடி காண்கு உறில் ஆங்கே நிழல் உளுந்து எற்றுளும் நிற்றலும் ஆமே. |
15 | நான் கண்ட வன்னியும் நாலு கலை ஏழும் தான் கண்ட வாயுச் சரீரம் முழுதொடும் ஊன் கண்டு கொண்ட உணர்வும் மருந்து ஆக மான் கன்று நின்று வளர்கின்ற வாறே. |
16 | ஆகும் சன வேத சத்தியை அன்பு உற நீ கொள்ளின் நெல்லின் வளர்கின்ற நேர்மையை பாகு படுத்திப் பல் கோடி களத்தினால் ஊழ் கொண்ட மந்திரம் தன்னால் ஒடுங்கே. |
14. கால சக்கரம் |
1 | மதி வட்டம் ஆக வரை ஐந்து நாடி இது விட்டு இங்கு ஈராறு அமர்ந்த அதனால் பதி வட்டத்துள் நின்று பாலிக்குமாறு மது விட்டுப் போம் ஆறு மாயல் உற்றேனே. |
2 | உற்ற அறிவு ஐந்தும் உணர்ந்த அறிவு ஆறும் ஏழும் கற்ற அறிவு எட்டும் கலந்த அறிவு ஒன்பதும் பற்றிய பத்தும் பலவகை நாழிகை அற்றது அறியாது அழிகின்ற வாறே. |
3 | அழிகின்ற ஆண்டு அவை ஐ ஐஞ்சு மூன்று மொழிகின்ற முப்பத்து மூன்று என்பது ஆகும் கழிகின்ற கால் அறுபத்திரண்டு என்ப எழுகின்ற ஈர் ஐம்பத்து எண் அற்று இருந்ததே. |
4 | திருந்து தினம் அத் தினத்தினொடு நின்று இருந்து அறி நாள் ஒன்று இரண்டு எட்டு மூன்று பொருந்திய நாளொடு புக்கு அறிந்து ஓங்கி வருந்துதல் இன்றி மனை புகல் ஆமே. |
5 | மனை புகு வீரும் மகத்து இடை நாடி என இருபத்து அஞ்சும் ஈர் ஆறு அதனால் தனை அறிந்து ஏறட்டுத்தற் குறி ஆறு வினை அறி ஆறு விளங்கிய நாலே. |
6 | நாலும் கடந்தது நால்வரும் நால் ஐந்து பாலம் கடந்தது பத்துப் பதினைந்து கோலம் கடந்த குணத்து ஆண்டு மூ இரண்டு ஆலம் கடந்தது ஒன்று ஆர் அறிவாரே. |
7 | ஆறும் இருபதுக்கு ஐ அஞ்சு மூன்றுக்கும் தேறும் இரண்டும் இருபத்தொடு ஆறு இவை கூறு மதி ஒன்றினுக்கு இருபத்து ஏழு வேறு பதி அம் கண் நாள் விதித்தானே. |
8 | விதித்த இருபத்து எட்டொடு மூன்று அறையாகத் தொகுத்து அறி முப்பத்து மூன்று தொகுமின் பகுத்து அறி பத்து எட்டும் பாராதி கணால் உதித்து அறி மூன்று இரண்டு ஒன்றின் முறையே. |
9 | முறை முறை ஆய்ந்து முயன்றிலர் ஆகில் இறை இறை யார்க்கும் இருக்க அரிது மறை அது காரணம் மற்று ஒன்றும் இல்லை பறை அறையாது பணிந்து முடியே. |
10 | முடிந்தது அறியார் முயல்கின்ற மூர்க்கர் இடிஞ்சில் இருக்க விளக்கு எரி கொண்டு கடிந்தனன் மூளக் கதுவ வல்லார்க்கு நடந்திடும் பாரினில் நண்ணலும் ஆமே. |
11 | நண்ணு சிறு விரல் நாண் ஆக மூன்றுக்கும் பின்னிய மார்பு இடைப் பேராமல் ஒத்திடும் சென்னியின் மூன்றுக்கும் சேரவே நின்றிடும் உன்னி உணர்ந்திடும் ஓவியம் தானே. |
12 | ஓவியம் ஆன உணர்வை அறிமின்கள் பாவிகள் இத்தின் பயன் அறிவார் இல்லை தீவினையாம் உடன் மண்டலம் மூன்றுக்கும் பூவில் இருந்திடும் புண்ணியத் தண்டே. |
13 | தண்டுடன் ஓடித் தலைப் பெய்த யோகிக்கு மண்டலம் மூன்றும் மகிழ்ந்து உடல் ஒத்திடும் கண்டவர் கண்டனர் காணார் வினைப்பயன் பிண்டம் பிரியப் பிணங்கு கின்றாரே. |
14 | பிணங்கி அழிந்திடும் பேர் அது கேள் நீ அணங்கு உடன் ஆதித்தன் ஆறு விரியின் வணங்கு உடனே வந்த வாழ்வு குலைந்து சுணங்கனுக்கு ஆகச் சுழல்கின்ற வாறே. |
15 | சுழல் கின்ற ஆறின் துணை மலர் காணான் தழல் இடைப் புக்கிடும் தன் உள் இலாமல் கழல் கண்டு போம் வழி காண வல்லார்க்குக் குழல் வழி நின்றிடும் கூத்தனும் ஆமே. |
16 | கூத்தன் குறியில் குணம் பல கண்டவர் சாத்திரம் தன்னைத் தலைப் பெய்து நிற்பர்கள் பார்த்துஇருந்து உள்ளே அனு போகம் நோக்கிடில் ஆத்தனும் ஆகி அலர்ந்து இரும் ஒன்றே. |
17 | ஒன்றில் வளர்ச்சி உலப்பு இலி கேள் இனி நன்று என்று மூன்றுக்கு நாள் அது சென்றிடும் சென்றிடும் முப்பதும் சேர இருந்திடில் குன்று இடைப் பொன் திகழ் கூத்தனும் ஆமே. |
18 | கூத்தவன் ஒன்றிடும் கூர்மை அறிந்து அங்கே ஏத்துவர் பத்தினில் எண்திசை தோன்றிடப் பார்த்து மகிழ்ந்து பதுமரை நோக்கிடில் சாத்திடு நூறு தலைப் பெய்யலாமே. |
19 | சாத்திடும் நூறு தலைப் பெய்து நின்றவர் காத்து உடல் ஆயிரம் கட்டு உறக் காண்பர்கள் சேர்த்து உடல் ஆயிரம் சேர இருந்தவர் மூத்து உடன் கோடி உகம் அது ஆமே. |
20 | உகம் கோடி கண்டும் ஒசிவற நின்று அகம் கோடி கண்டு உள் அலறக் காண்பர்கள் சிவம் கோடி விட்டுச் செறிய இருந்து அங்கு உகம் கோடி கண்டு அங்கு உயர் உறுவாரே. |
21 | உயர் உறுவார் உலகத்தொடும் கூடிப் பயன் உறுவார் பலர் தாம் அறியாமல் செயல் உறுவார் சிலர் சிந்தை இலாமல் கயல் உறு கண்ணியைக் காண கிலாரே. |
22 | காண இலாதார் கழிந்து ஓடிப் போவர்கள் காண இலாதார் நயம் பேசி விடுவார்கள் காண இலாதார் கழிந்த பொருள் எலாம் காண இலாமல் கழிகின்ற வாறே. |
23 | கழிகின்ற அப்பொருள் காண இலாதார் கழிகின்ற அப் பொருள் காணலும் ஆகும் கழிகின்ற உள்ளே கருத்து உற நோக்கில் கழியாத அப்பொருள் காணலும் ஆமே. |
24 | கண்ணன் பிறப்பு இலி காண் நந்தியாய் உள்ளே எண்ணும் திசையுடன் ஏகாந்தன் ஆயிடும் திண் என்று இருக்கும் சிவகதியாய் நிற்கும் நண்ணும் பதம் இது நாட வல்லார் கட்கே. |
25 | நாட வல்லார்க்கு நமன் இல்லை கேடு இல்லை நாட வல்லார்கள் நரபதியாய் நிற்பர் தேட வல்லார்கள் தெரிந்த பொருள் இது கூட வல்லார் கட்குக் கூறலும் ஆமே. |
26 | கூறும் பொருளில் தகார உகாரங்கள் தேறும் பொருள் இது சிந்தை உள் நின்றிடக் கூறும் மகாரம் குழல் வழி ஓடிட ஆறும் அமர்ந்திடும் அண்ணலும் ஆமே. |
27 | அண்ணல் இருப்பிடம் ஆரும் அறிகிலர் அண்ணல் இருப்பிடம் ஆய்ந்து கொள்வார் களுக்கு கண்ணல் அழிவு இன்றி உள்ளே அமர்ந்திடும் அண்ணலைக் காணில் அவன் இவன் ஆகுமே. |
28 | அவன் இவன் ஆகும் பரிசு அறிவார் இல்லை அவன் இவன் ஆகும் பரிசு அது கேள் நீ அவன் இவன் ஓசை ஒளியின் உள் ஒன்றிடும் அவன் இவன் வட்டம் அது ஆகி நின்றானே. |
29 | வட்டங்கள் ஏழும் மலர்ந்திடும் உம் உளே சிட்டன் இருப்பிடம் சேர அறிகிலீர் ஒட்டி இருந்து உள் உபாயம் உணர்ந்திடக் கட்டி இருப்பிடம் காணலும் ஆகுமே. |
30 | காணலும் ஆகும் பிரமன் அரி என்று காணலும் ஆகும் கறைக் கண்டன் ஈசனைக் காணலும் ஆகும் சதா சிவ சத்தியும் காணலும் ஆகும் கலந்து உடன் வைத்ததே. |
15. ஆயுள் பரீட்சை |
1 | வைத்த கை சென்னியில் நேரிதாய்த் தோன்றிடில் உத்தமம் மிக்கிடில் ஓர் ஆறு திங்கள் ஆம் அத்தம் மிகுத்து இட்டு இரட்டியது ஆயிடில் நித்தல் உயிர்க்கு ஒரு திங்களில் ஓசையே. |
2 | ஓசையும் ஈசனும் ஒக்கும் உணர்வின் கண் ஓசை இறந்தவர் ஈசனை உள் குவர் ஓசை இறந்தவர் நெஞ்சின் உள் ஈசனும் ஓசை உணர்ந்த உணர்வு இது ஆமே. |
3 | ஆமே அழிகின்ற வாயுவை நோக்கிடில் நாமே உறைகின்ற நன்மை அளித்திடும் பூ மேல் உறைகின்ற போதகம் வந்திடும் தாமேல் உலகில் தலைவனும் ஆமே. |
4 | தலைவனிடம் வலம் சாதிப்பார் இல்லை தலைவனிடம் வலம் ஆயிடில் தையல் தலைவனிடம் வலம் தன் வழி அஞ்சில் தலைவனிடம் வலம் தன் வழி நூறே. |
5 | ஏறிய வானில் எண்பது சென்றிடும் தேறிய ஏழில் சிறக்கும் வகை எண்ணில் ஆறு ஒரு பத்தாய் அமர்ந்த இரண்டையும் தேறியே நின்று தெளி இவ் வகையே. |
6 | இவ்வகை எட்டும் இடம் பெற ஓடிடில் அவ் வகை ஐம்பதே என்ன அறியலாம் செவ் வகை ஒன்பதும் சேரவே நின்றிடின் மூவ் வகை ஆம் அது முப்பத்து மூன்றே. |
7 | மும் மூன்றும் ஒன்றும் முடிவு உற நின்றிடில் எண் மூன்றும் நாலும் இடவகையாய் நிற்கும் ஐம் மூன்றும் ஓடி அகலவே நின்றிடில் பன் மூன்றொடு ஈர் ஆறு பார்க்கலும் ஆமே. |
8 | பார்க்கலும் ஆகும் பகல் முப்பதும் ஆகில் ஆக்கலும் ஆகும் அவ்வாறு இரண்டு உள் இட்டுப் போக்கலும் ஆகும் புகல் அற ஒன்று எனில் தேக்கலும் ஆகும் திருந்திய பத்தே. |
9 | ஏ இரு நாளும் இயல்பு உற ஓடிடில் பாய் இரு நாளும் பகை அற நின்றிடும் தேய் உற மூன்றும் திகழவே நின்றிடில் ஆய் உரு ஆறு என்று அளக்கலும் ஆமே. |
10 | அளக்கும் வகை நாலும் அவ்வழியே ஓடில் விளக்கும் ஒரு நாலும் மெய்ப் பட நிற்கும் துளக்கும் வகை ஐந்தும் தூய் நெறி ஓடில் களக்கம் அற மூன்றில் காணலும் ஆமே. |
11 | காணலும் ஆகும் கருதிய பத்து ஓடில் காணலும் ஆகும் கலந்த இரண்டையும் காணலும் ஆகும் கலப்பு அற மூ ஐந்தேல் காணலும் ஆகும் கருத்து உற ஒன்றே. |
12 | கருதும் இருபதில் காண ஆறு ஆகும் கருதும் ஐ ஐந்தில் காண்பது மூன்று ஆம் கருதும் இருபது உடன் ஆறு காணில் கருதும் இரண்டு எனக் காட்டலும் ஆமே. |
13 | காட்டலும் ஆகும் கலந்து இருபத்து ஏழில் காட்டலும் ஆகும் கலந்து எழும் ஒன்று எனக் காட்டலும் ஆகும் கலந்து இரு பத்து எட்டில் காட்டலும் ஆகும் கலந்த ஈர் ஐந்தே. |
14 | ஈர் ஐந்தும் ஐந்தும் இரு மூன்று எட்டுக்கும் பார் அஞ்சி நின்ற பகை பத்து நாளாகும் வாரம் செய்கின்ற வகை ஆறு அஞ்சாம் ஆகில் ஓர் அஞ்சொடு ஒன்று என ஒன்று நாளே. |
15 | ஒன்றிய நாள்கள் ஒரு முப்பத்து ஒன்று ஆகில் கன்றிய நாளும் கருத்து உற மூன்று ஆகும் சென்று உயிர் நால் எட்டும் சேரவே நின்றிடின் மன்று இயல்பாகும் மனையில் இரண்டே. |
16 | மனையில் ஒன்று ஆகும் மாதம் மும் மூன்றும் சுனையில் ஒன்று ஆகத் தொனித்தனன் நந்தி வினை அற ஓங்கி வெளிசெய்து நின்றால் தனை உற நின்ற தலைவனும் ஆமே. |
17 | ஆரும் அறியார் அளக்கின்ற வன்னியை ஆரும் அறியார் அளக்கின்ற வாயுவை ஆரும் அறியார் அழிகின்ற அப்பொருள் ஆரும் அறியார் அறிவு அறிந்தேனே. |
18 | அறிவது வாயுவொடு அடைந்து அறிவு ஆய அறிவாவது தான் உலகு உயிர் அத்தின் பிறிவு செய்யா வகை பேணி உள் நாடில் செறிவது நின்று திகழும் அதுஏ. |
19 | அது அருளும் மருள் ஆன உலகம் பொது அருளும் புகழாளர்க்கு நாளும் மது அருளும் மலர் மங்கையர் செல்வி இது அருள் செய்யும் இறையவன் ஆமே. |
20 | பிறப்பது சூழ்ந்த பெருந்தகை நந்தி குறிப்பது கூடிய கோலக் குரம்பைப் பழப்பதி ஆவது பற்று அறும் பாசம் அழப்படி செய்வார்க்கு அகலும் மதியே. |
16. வாரசரம் |
1 | வெள்ளி வெண் திங்கள் விளங்கும் புதனிடம் ஒள்ளிய மந்தன் இரவி செவ்வாய் வலம் வள்ளிய பொன்னே வளரும் பிறை இடம் தெள்ளிய தேய் பிறை தான் வலம் ஆமே. |
2 | வெள்ளி வெண் திங்கள் விளங்கும் புதன் மூன்றும் தள்ளி இடத்தே தயங்குமே யாம் ஆகில் ஒள்ளிய காயத்துக்கு ஊனம் இலை என்று வள்ளல் நமக்கு மகிழ்ந்து த்தானே. |
3 | செவ்வாய் வியாழன் சனி ஞாயிறு என்னும் இவ்வாறு அறிகின்ற யோகி இறைவனே ஒவ்வாத வாயு வலத்துப் புரிய விட்டு அவ்வாறு அறிவார்க்கு அவ் ஆனந்தம் ஆமே. |
4 | மாறி வரும் இருபான் மதி வெய்யவன் ஏறி இழியும் இடைபிங்கலை இடை ஊறும் உயிர் நடுவே உயிர் இருக்கு இரந்து ஏறி அறிமின் தெரிந்து தெளிந்தே. |
5 | உதித்து வலத்து இடம் போகின்ற போது அதிர்த்து அஞ்சி ஓடுதல் ஆம் அகன்றாரும் உதித்தது வே மிக ஓடிடும் ஆகில் உதித்த இவ் ராசி உணர்ந்து கொள் உற்றே. |
6 | நடுவு நில்லாமல் இடம் வலம் ஓடி அடுகின்ற வாயுவை அந்தணன் கூடி இடுகின்ற வாறு சென்றின் பணி சேர முடிகின்ற தீபத்தின் முன் உண்டு என்றானே. |
7 | ஆயும் பொருளும் அணி மலர் மேல் அது வாயு விதமும் பதினாறு உள வலி போய மனத்தைப் பொருகின்ற ஆதாரம் ஆயுவும் நாளும் முகூர்த்தமும் ஆமே. |
17. வாசசூலம் |
1 | வாரத்தில் சூலம் வரும் வழி கூறுங்கால் நேர் ஒத்த திங்கள் சனி கிழக்கே ஆகும் பார் ஒத்த சேய் புதன் உத்தரம் பானு நாள் நேர் ஒத்த வெள்ளி குடக்கு ஆக நிற்குமே. |
2 | தெக்கணம் ஆகும் வியாழத்துச் சேர் திசை அக்கணி சூலமும் ஆம் இடம் பின் ஆகில் துக்கமும் இல்லை வலம் முன்னே தோன்றிடின் மிக்கது மேல் வினை மேல் மேல் விளையுமே. |
18. கேசரி யோகம் |
1 | கட்டக் கழன்று கீழ் நான்று வீழாமல் அட்டத்தைக் கட்டி அடுப்பை அணை கோலி விட்டத்தைப் பூட்டி மேல் பையைத் தாள் கோத்து நட்டம் இருக்க நரன் இல்லை தானே. |
2 | வண்ணான் ஒலிக்கும் சதுரப் பலகை மேல் கண்ணாறு மோழை படாமல் கரை கட்டி விண் ஆறு பாய்ச்சிக் குளத்தை நிரப்பினால் அண்ணாந்து பார்க்க அழுக்கு அற்ற வாறே. |
3 | இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றித் துதிக்கையால் உண்பார்க்குச் சேரவும் வேண்டாம் உறக்கத்தை நீக்கி உணர வல்லார்கட்கு இறக்கம் வேண்டாம் இருக்கலும் ஆமே. |
4 | ஆய்ந்து செய்யில் அமுதம் நின்று ஊறிடும் வாய்ந்து செய்யும் வருகின்ற காலத்து நீந்து செய்யில் நிலா மண்டலம் அதாய்ப் பாய்ந்து செய்தது பாலிக்கு மாறே. |
5 | நாவின் நுனியை நடுவே சிவிறிடில் சீவனும் அங்கே சிவனும் உறைவிடம் மூவரும் முப்பத்து மூவரும் தோன்றுவர் சாவதும் இல்லை சத கோடி ஊனே. |
6 | ஊன் ஊறல் பாயும் உயர் வரை உச்சி மேல் வான் ஊறல் பாயும் வகை அறிவார் இல்லை வான் ஊறல் வகை அறி வாளர்க்குத் தேன் ஊறல் உண்டு தெளியலும் ஆமே. |
7 | மேலை அண் நாவில் விரைந்து இருகால் இடில் காலனும் இல்லை கதவும் திறந்திடும் ஞாலம் அறிய நரை திரை மாறிடும் பாலனும் ஆவான் பரா நந்தி ஆணையே. |
8 | நந்தி முதல் ஆக நாம் மேலே ஏறிட்டுச் சந்தித்து இருக்கில் தரணி முழுது ஆளும் பந்தித்து இருக்கும் பகலோன் வெளியாகச் சிந்தித்து இருப்பவர் தீவினையாளரே. |
9 | தீவினை ஆடத் திகைத்து அங்கு இருந்தவர் நாவினை நாடின் நமனுக்கு இடம் இல்லை பாவினை நாடிப் பயன் அறக் கண்டவர் தேவினை ஆடிய தீம் கரும்பு ஆமே. |
10 | தீம் கரும்பு ஆகவே செய் தொழில் உள்ளவர் ஆம் கரும்பு ஆக அடைய நாவு ஏறிட்டு கோங் கரும்பு ஆகிய கோணை நிமிர்த்திட ஊன் கரும்பு ஆகியே ஊன் நீர் வருமே. |
11 | ஊன் நீர் வழியாக உள் நாவை ஏறிட்டுத் தேன் நீர் பருகிச் சிவாய நம என்று கான் நீர் வரும் வழி கங்கை தருவிக்கும் வான் நீர் வரும் வழி வாய்ந்து அறிவீரே. |
12 | வாய்ந்து அறிந்து உள்ளே வழிபாடு செய்தவர் காய்ந்து அறிவு ஆகக் கருணை பொழிந்திடும் பாய்ந்து அறிந்து உள்ளே படிக் கதவு ஒன்று இட்டுக் கூய்ந்து அறிந்து உள் உறை கோயிலும் ஆமே. |
13 | கோயிலின் உள்ளே குடி செய்து வாழ்பவர் தாயினும் நல்லார் தரணி முழுதுக்கும் காயினும் நல்லவர் காய்ந்தவர் தம் உளும் தீயினும் தீயரத் தீவினை யாளர்க்கே. |
14 | தீவினை யாளர் தம் சென்னியில் உள்ளவன் பூவினை யாளர் தம் பொன் பதி ஆனவன் பாவினை யாளர் தம் பாகவத்து உள்ளவன் மாவினை யாளர் தம் மதியில் உள்ளானே. |
15 | மதியின் எழும் கதிர் போலப் பதினாறாய்ப் பதிமனை நூறு நூற்று இருபத்து நாலாய்க் கதி மனை உள்ளே கணைகள் பரப்பி எதிர் மலையாமல் இருந்தனன் தானே. |
16 | இருந்தனள் சத்தியும் அக்கலை சூழ இருந்தனள் கன்னியும் அந் நடு ஆக இருந்தனள் மான் நேர் முக நிலவார இருந்தனள் தானும் அமுதம் பொழிந்தே. |
17 | பொழிந்த இரு வெள்ளி பொன் மண் நடையில் வழிந்து உள் இருந்தது வான் முதல் அங்கு கழிந்து அது போகாமல் காக்க வல்லார்க்குக் கொழுந்து அது ஆகும் குணம் அது தானே. |
18 | குணம் அது ஆகிய கோமள வல்லி மணம் அது ஆக மகிழ்ந்து அங்கு இருக்கில் தனம் அது ஆகிய தத்துவ ஞானம் இனம் அது ஆக இருந்தனன் தானே. |
19 | இருந்த பிராணனும் உள்ளே எழும் ஆம் பரிந்த இத் தண்டுடன் அண்டம் பரிய விரிந்த அப் பூவுடன் மேல் எழ வைக்கின் மலர்ந்தது மண்டலம் வாழலும் ஆமே. |
20 | மண்டலத்து உள்ளே மன ஒட்டியாணத்தைக் கண்டகத்து அங்கே கருதியே கீழ்க் கட்டிப் பண்டகத்து உள்ளே பகலே ஒளி ஆகக் குண்டலக் காதனும் கூத்து ஒழிந்தானே. |
21 | ஒழிகின்ற வாயுவும் உள்ளே அமரும் கழிகின்ற வாயுவும் காக்கலும் ஆகும் வழிகின்ற காலத்து வட்டக் கழலைப் பழிகின்ற காலத்துப் பை அகற்றீரே. |
22 | பையினின் உள்ளே படிக் கதவு ஒன்று இடின் மெய்யினின் உள்ளே விளக்கும் ஒளியது ஆம் கையின் உள் வாயுக் கதித்து அங்கு எழுந்திடின் மை அணி கோயில் மணி விளக்கு ஆமே. |
23 | விளங்கிடும் வாயுவை மேல் எழ உன்னி நலங்கிடும் கண்டத்து நாபியின் உள்ளே வணங்கிடும் மண்டலம் வாய்த்திடக் கும்பிச் சுணங்கிட நின்றவை சொல்லலும் ஆமே. |
24 | சொல்லலும் ஆயிடும் ஆகத்து வாயுவும் சொல்லலும் ஆகும் மண் நீர்க் கடினமும் சொல்லலும் ஆகும் இவை அஞ்சும் கூடிடில் சொல்லலும் ஆம் தூர தரிசனம் தானே. |
25 | தூர தரிசனம் சொல்லுவான் காணலாம் கார் ஆரும் கண்ணி கடை ஞானம் உட்பு எய்தி ஏர் ஆரும் தீபத்து எழில் சிந்தை வைத்திடில் பாரார் உலகம் பகன் முன்னது ஆமே. |
26 | முன் எழு நாபிக்கு முந்நால் விரல் கீழே பன் எழு வேதப் பகல் ஒளி உண்டு என்னும் நன் எழு நாதத்து நல் தீபம் வைத்திடத் தன் எழு கோயில் தலைவனும் ஆமே. |
19. பரியங்கயோகம் |
1 | பூசுவன எல்லாம் பூசிப் புலர்த்திய வாச நறும் குழல் மாலையும் சாத்திக் காயக் குழலி கலவியொடும் கலந்து தூசி துளை உறத் தூங்காது போகமே. |
2 | போகத்தை உன்னவே போகாது வாயுவும் மோகத்தை வெள்ளியும் மீளும் வியாழத்தில் சூது ஒத்த மென் முலையாளும் நல் சூதனும் தாதில் குழைந்து தலை கண்ட வாறே. |
3 | கண்டனும் கண்டியும் காதல் செய் யோகத்து மண்டலம் கொண்டு இருபாலும் வெளிநிற்கும் வண்டியை மேற் கொண்டு வான் நீர் உருட்டிடத் தண்டு ஒரு காலும் தளராது அங்கமே. |
4 | அங்கப் புணர்ச்சியும் ஆகின்ற தத்துவம் அங்கத்தில் விந்து வருகின்ற போகத்துப் பங்கப் படாமல் பரிகரித்துத் தம்மைத் தங்கிக் கொடுக்கத் தலைவனும் ஆமே. |
5 | தலைவனும் ஆயிடும் தன் வழி ஞானம் தலைவனும் ஆயிடும் தன்வழி போகம் தலைவனும் ஆயிடும் தன்வழி உள்ளே தலைவனும் ஆயிடும் தன்வழி அஞ்சே. |
6 | அஞ்சு கடிகை மேல் ஆறாம் கடிகையில் துஞ்சுவது ஒன்றத் துணைவி துணைவன்பால் நெஞ்சு நிறைந்தது வாய் கொளாது என்றது பஞ்ச கடிகை பரியங்க யோகமே. |
7 | பரி அங்க யோகத்துப் பஞ்ச கடிகை அரிய இவ் வியோகம் அடைந்தவர்க்கு அல்லது சரிவளை முன் கைச்சி சந்தனக் கொங்கை உருவித் தழுவ ஒருவற்கு ஒண்ணாதே. |
8 | ஒண்ணாத யோகத்தை உற்றவர் ஆர் என்னில் விண் ஆர்ந்த கங்கை விரிசடை வைத்தவன் பண்ணார் அமுதினைப் பஞ்ச கடிகையில் எண்ணாம் என எண்ணி இருந்தான் இருந்ததே. |
9 | ஏய்ந்த பிராயம் இருபது முப்பதும் வாய்ந்த குழலிக்கு மன்னர்க்கும் ஆனந்தம் வாய்ந்த குழலியோடு அடைந்து மலர்ந்திடச் சோர்ந்தன சித்தமும் சோர்வு இல்லை வெள்ளிக்கே. |
10 | வெள்ளி உருகிப் பொன்வழி ஓடாமே கள்ளத் தட்டானார் கரி இட்டு மூடினார் கொள்ளி பறியக் குழல் வழியே சென்று வள்ளி உள் நாவில் அடக்கி வைத்தாரே. |
11 | வைத்த இருவரும் தம்மின் மகிழ்ந்து உடன் சித்தம் கலங்காது செய்கின்ற ஆனந்தம் பத்து வகைக்கும் பதின் எண் கணத்துக்கும் வித்தகன் ஆய் நிற்கும் வெம் கதிரோனே. |
12 | வெம் கதிருக்கும் சனிக்கும் இடைநின்ற நங்கையைப் புல்லிய நம்பிக்கு ஓர் ஆனந்தம் தங்களில் பொன் இடை வெள்ளி தாழா முனம் திங்களில் செவ்வாய் புதைந்து இருந்தாரே. |
13 | திருத்திப் புதனைத் திருத்தல் செய்வார்க்குக் கருத்து அழகாலே கலந்து அங்கு இருக்கில் வருத்தமும் இல்லை ஆம் மங்கை பங்கற்கும் துருத்தி உள் வெள்ளியும் சோராது எழுமே. |
14 | எழுகின்ற தீயை முன்னே கொண்டு சென்று இட்டால் மெழுகு உருகும் பரி செய்திடும் மெய்யே உழுகின்றது இல்லை ஒளியை அறிந்தபின் விழுகின்ற தில்லை வெளி அறிவார்க்கே. |
15 | வெளியை அறிந்து வெளியின் நடுவே ஒளியை அறியின் உளி முறி ஆம் ஏ தெளிவை அறிந்து செழும் நந்தியாலே வெளியை அறிந்தனன் மேல் அறியேனே. |
16 | மேல் ஆம் தலத்தில் விரிந்தவர் ஆர் எனின் மால் ஆம் திசைமுகன் மா நந்தியாய் அவர் நாலா நிலத்தின் நடு ஆன அப்பொருள் மேலா த்தனர் மின் இடை யாளுக்கே. |
17 | மின் இடையாளும் மின்னாளனும் கூட்டத்துப் பொன் இடை வட்டத்தின் உள்ளே புகப் பெய்து தன்னொடு தன்னைத் தலைப் பெய்ய வல்லார் ஏன் மண் இடைப் பல் ஊழி வாழலும் ஆமே. |
18 | வாங்கல் இறுதலை வாங்கலில் வாங்கிய வீங்க வலிக்கும் விரகு அறிவார் இல்லை வீங்க வலிக்கும் விரகு அறிவாளரும் ஓங்கிய தன்னை உதம் பண்ணினாரே. |
19 | உதம் அறிந்து அங்கே ஒரு சுழிப் பட்டால் கதம் அறிந்து அங்கே கபாலம் கறுக்கும் இதம் அறிந்து என்றும் இருப்பாள் ஒருத்தி பதம் அறிந்து உம் உளே பார்க் கடிந்தாளே. |
20 | பார் இல்லை நீர் இல்லை பங்கயம் ஒன்று உண்டு தார் இல்லை வேர் இல்லை தாமரை பூத்தது ஊர் இல்லை காணும் ஒளி அது ஒன்று உண்டு கீழ் இல்லை மேல் இல்லை கேள்வி இல் பூவே. |
20. அமுரிதாரணை |
1 | உடலில் கிடந்த உறுதிக் குடிநீர்க் கடலில் சிறு கிணறு ஏற்றம் இட்டால் ஒக்கும் உடலில் ஒருவழி ஒன்றுக்கு இறைக்கில் நடலைப் படாது உயிர் நாடலும் ஆமே. |
2 | தெளிதரும் இந்தச் சிவ நீர் பருகில் ஒளிதரும் ஓர் ஆண்டில் ஊனம் ஒன்று இல்லை வளி உறும் எட்டின் மனமும் ஒடுங்கும் களிதரும் காயம் கனகம் அது ஆமே. |
3 | நூறு மிளகு நுகரும் சிவத்தின் நீர் மாறும் இதற்கு மருந்து இல்லை மாந்தர்கள் தேறில் இதனைத் தெளி உச்சி அப்பிடின் மாறும் இதற்கு மறு மயிர் ஆமே. |
4 | கரை அருகே நின்ற கானல் உவரி வரை வரை என்பவர் மதி இலா மாந்தர் நுரை திரை நீக்கி நுகர வல்லார்க்கு நரை திரை மாறும் நமனும் அங்கு இல்லையே. |
5 | அளக நல் நுதலாய் ஓர் அதிசயம் களவு காயம் கலந்த இந் நீரிலே மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பு இடில் இளகும் மேனி இருளும் கபாலமே. |
6 | வீர மருந்து என்றும் விண்ணோர் மருந்து என்றும் நாரி மருந்து என்றும் நந்தி அருள் செய்தான் ஆதி மருந்து என்று அறிவார் அகல் இடம் சோதி மருந்து இது சொல்ல ஒண்ணாதே. |
21. சந்திர யோகம் |
1 | எய்து மதிக்கலை சூக்கத்தில் ஏறியே எய்துவ தூலம் இருவகைப் பக்கத்துள் எய்தும் கலை போல ஏறி இறங்கும் ஆந்து உய்யது சூக்கத்து ஊலத்த காயமே. |
2 | ஆகின்ற சந்திரன் சூரியன் அங்கி உள் ஆகின்ற ஈர் எட்டொடு ஆறு இரண்டு ஈர் ஐந்துள் ஏகின்ற அக்கலை எல்லாம் இடைவழி ஆகின்ற யோகி அறிந்த அறிவே. |
3 | ஆறாதது ஆம் கலை ஆதித்தன் சந்திரன் நாறா நலம் கினார் ஞாலம் அங்கு அவர் கொளப் பேறு ஆம் கலை முற்றும் பெருங்கால் ஈர் எட்டு மாறாக் கதிர் கொள்ளும் மற்று அங்கி கூடவே. |
4 | பத்தும் இரண்டும் பகலோன் உயர் கலை பத்தினொடு ஆறும் உயர் கலை பால் மதி ஒத்த நல் அங்கி அது எட்டு எட்டு உயர் கலை அத்திறன் நின்றமை ஆய்ந்து கொள்வீரே. |
5 | எட்டு எட்ட அனலின் கலை ஆகும் ஈர் ஆறுள் சுட்டப் படும் கதிரோனுக்கும் சூழ் கலை கட்டப் படும் ஈர் எட்டாம் மதிக் கலை ஒட்டப் படா இவை ஒன்றோடு ஒன்றாவே. |
6 | எட்டு எட்டும் ஈர் ஆறும் ஈர் எட்டும் தீக் கதிர் சுட்டு இட்ட சோமனில் தோன்றும் கலை எனக் கட்டப் படும் தாரகை கதிர் நாலு உள கட்டி இட்ட தொண்ணூற்றொடு ஆறும் கால் ஆதியே. |
7 | எல்லாக் கலையும் இடை பிங்கலை நடுச் சொல்லா நடு நாடி ஊடே தொடர் மூலம் செல்லா எழுப்பிச் சிரத்துடன் சேர்தலால் நல்லோர் திருவடி நண்ணி நிற்பாரே. |
8 | அங்கியில் சின்னக் கதிர் இரண்டு ஆட்டத்துத் தங்கிய தாரகை ஆகும் சசி பானு வங்கிய தாரகை ஆகும் பரை ஒளி தங்கு நவ சக்கரம் ஆகும் தரணிக்கே. |
9 | தரணி சலம் கனல் கால் தக்க வானம் அரணிய பானு அரும் திங்கள் அங்கி முரணிய தாரகை முன்னிய ஒன்பான் பிரணவம் ஆகும் பெரு நெறி தானே. |
10 | தாரகை மின்னும் சசி தேயும் பக்கத்துத் தாரகை மின்னா சசிவளர் பக்கத்துத் தாரகை பூவில் சகலத்தி யோனிகள் தாரகைத் தாரகை தான் ஆம் சொரூபமே. |
11 | முன் பதினைந்தின் முளைத்துப் பெருத்திடும் முன் பதினைந்தில் பெருத்துச் சிறுத்திடும் அப் பதினைஞ்சும் அறிவல்லார் கட்குச் செப்ப அரியான் கழல் சேர்தலும் ஆமே. |
12 | அங்கி எழுப்பி அரும் கதிர் ஊட்டத்துத் தங்கும் சசியால் தாமம் ஐந்து ஐந்து ஆகிப் பொங்கிய தாரகை ஆம் புலன் போக்கு அறத் திங்கள் கதிர் அங்கி சேர்கின்ற யோகமே. |
13 | ஒன்றிய ஈர் எண்கலையும் உடல் உற நின்றது கண்டும் நினைக்கிலர் நீதர்கள் கன்றிய காலன் கருத்து உழி வைத்த பின் சென்று அதில் வீழ்வர் திகைப்பு ஒழியாரே. |
14 | அங்கி மதி கூட ஆகும் கதிர் ஒளி அங்கி கதிர் கூட ஆகும் மதி ஒளி அங்கி சசி கதிர் கூட அத்தாரகை தங்கிய அதுவே சகலமும் ஆமே. |
15 | ஈர் ஆறு பெண்கலை எண் இரண்டு ஆண் கலை பேராமல் புக்குப் பிடித்துக் கொடு வந்து நேராகத் தோன்றும் நெருப்பு உறவே பெய்யில் ஆராத ஆனந்தம் ஆனந்தம் ஆனதே. |
16 | காணும் பரிதியின் காலை இடத்து இட்டு மாணும் மதி அதன் காலை வலத்து இட்டு பேணியே இவ்வாறு பிழையாமல் செய்வீர் ஏல் ஆணி கலங்காது அவ் ஆயிரத்து ஆண்டே. |
17 | பாலிக்கும் நெஞ்சம் பறை ஓசை ஒன்பதில் ஆலிக்கும் அங்கே அமரர் பராபரன் மேலைக்கு முன்னே விளக்கு ஒளியாய் நிற்கும் காலைக்குச் சங்கு கதிரவன் தானே. |
18 | கதிரவன் சந்திரன் காலம் அளக்கும் பொதிரவன் உள்ளே பொழி மழை நிற்கும் அதிரவன் அண்டப் புறம் சென்று அடர்ப்ப எதிரவன் ஈசன் இடம் அது தானே. |
19 | உந்திக் கமலத்து உதித்து எழும் சோதியை அந்திக்கும் மந்திரம் ஆரும் அறிகிலர் அந்திக்கும் மந்திரம் ஆரும் அறிந்த பின் தந்தைக்கு முன்னே மகன் பிறந்தானே. |
20 | ஊதியம் ஏதும் அறியார் ப்பினும் ஓதியும் ஏதும் அறியாத ஊமர்கள் ஆதியும் அந்தமும் அந்திக்க வல்லீர் ஏல் வேதியன் அங்கே வெளிப்படும் தானே. |
21 | பாம்பு மதியைத் தினல் உறும் பாம்பினைத் தீங்கு கதிரையும் சோதித்தனல் உறும் பாம்பு மதியும் பகை தீர்த்து உடன் கொளீஇ நீங்கல் கொடானே நெடும் தகையானே. |
22 | அயின்றது வீழ் அளவும் துயில் இன்றிப் பயின்ற சசி வீழ் பொழுதில் துயின்று நயம் தரு பூரணை உள்ள நடத்தி வியம் தரு பூரணை மேவும் சசியே. |
23 | சசி உதிக்கும் அளவும் துயில் இன்றிச் சசி உதித்தானேல் தனது ஊண் அருந்திச் சசி சரிக்கின்ற அளவும் துயிலாமல் சசி சரிப்பின் கட்டன் கண் துயில் கொண்டதே. |
24 | ஊழி பிரியாது இருக்கின்ற யோகிகள் நாழிகை ஆக நமனை அளப்பர்கள் ஊழி முதலாய் உயர்வார் உலகினில் தாழ வல்லார் இச் சசி வன்னர் ஆமே. |
25 | தண் மதி பானுச் சரி பூமியே சென்று மண் மதி காலங்கள் மூன்றும் வழி கண்டு வெண் மதி தோன்றிய நாளில் விளைந்தபின் தண் மதி வீழ் அளவில் கணம் இன்றே. |
26 | வளர்கின்ற ஆதித்தன் தன் கலை ஆறும் தளர்கின்ற சந்திரன் தன் கலை ஆறும் மலர்ந்து எழு பன்னிரண்டு அங்குலம் ஓடி அலர்ந்து விழுந்தமை யார் அறிவாரே. |
27 | ஆம் உயிர்த் தேய் மதி நாளே எனல் விந்து போம் வழி எங்கணும் போகாது யோகிக்குக் காமுற இன்மையில் கட்டு உண்ணும் மூலத்தில் ஓ மதியத்து உள் விட்டு உணர்வாலே. |
28 | வேறு உறச் செம் கதிர் மெய்க்கலை ஆறு ஓடும் சூர் உற நான்கும் தொடர்ந்து உறவே நிற்கும் ஈறிலி நன் கலை ஈர் ஐந் தொடே மதித்து ஆறுள் கலையுள் அகலுவா வாமே. |
29 | உணர் விந்து சோணி உறவினன் வீசும் புணர் விந்து வீசும் கதிரில் குறையில் உணர்வும் உடம்பும் உவை ஒக்க நிற்கில் உணர்வும் உடம்பும் ஒரு கால் விடாவே. |
30 | விடாத மனம் பவனத் தொடு மேவி நடாவு சிவ சங்கின் நாதம் கொளுவிக் கடா விடா ஐம் புலன் கட்டு உண்ணும் வீடு படாதன இன்பம் பருகார் அமுதமே. |
31 | அமுதப் புனல் வரு மாற்றம் கரைமேல் குமிழிக் குள் சுடர் ஐந்தையும் கூட்டிச் சமையத் தண் தோட்டித் தரிக்க வல்லார்க்கு நமன் இல்லை நல் கலை நாள் இல்லை தானே. |
32 | உண்ணீர் அமுதம் உறும் ஊறலைத் திறந்து எண்ணீர் இணை அடித் தாமரைக்கே செலத் தெண்ணீர் சமாதி அமர்ந்து தீரா நலம் கண்ணால் தொடே சென்று கால் வழி மாறுமே. |
33 | மாறு மதியும் மதித்து இரு மாறு இன்றித் தாறு படாமல் தண்டோடே தலைப் படில் ஊறு படாது உடல் வேண்டும் உபாயமும் பாறு படா இன்பம் பார்மிசைப் பொங்குமே. |
நான்காம் தந்திரம் 1. அசபை |
1 | போற்று கின்றேன் புகழ்ந்தும் புகல் ஞானத்தைத் தேற்று கின்றேன் சிந்தை நாயகன் சேவடி சாற்று கின்றேன் அறையோ சிவ யோகத்தை ஏற்று கின்றேன் நம்பிரான் ஓர் எழுத்தே. |
2 | ஓர் எழுத்தாலே உலகு எங்கும் தான் ஆகி ஈர் எழுத்தாலே இசைந்து அங்கு இருவராய் மூ எழுத்தாலே முளைக்கின்ற சோதியை மா எழுத்தாலே மயக்கமே உற்றதுஏ. |
3 | தேவர் உறைகின்ற சிற்றம்பலம் என்றும் தேவர் உறைகின்ற சிதம்பரம் என்றும் தேவர் உறைகின்ற திரு அம்பலம் என்றும் தேவர் உறை கின்ற தென் பொது ஆமே. |
4 | ஆமே பொன் அம்பலம் அற்புதம் ஆனந்தம் ஆமே திருக்கூத்து அனவரத தாண்டவம் ஆமே பிரளயம் ஆகும் அத் தாண்டவம் ஆமே சங்காரத்து அரும் தாண்டவங்களே. |
5 | தாண்டவம் ஆன தனி எழுத்து ஓர் எழுத்து தாண்டவம் ஆனது அனுகிரகத் தொழில் தாண்டவக் கூத்துத் தனி நின்ற தற்பரம் தாண்டவக் கூத்துத் தமனியம் தானே. |
6 | தானே பரஞ்சுடர் தத்துவமாய் நிற்கும் தானே அகார உகாரம் அதாய் நிற்கும் தானே பரஞ் சுடர் தத்துவக் கூத்துக்குத் தானே தனக்குத் தராதலம் தானே. |
7 | தராதல மூலைக்குத் தற்பர மா பரன் தராதலம் வெப்பு நமசிவாய வாம் தராதலம் சொல்லில் தான் வாசிய ஆகும் தராதல யோகம் தயா வாசி ஆமே. |
8 | ஆமே சிவங்கள் அகார உகாரங்கள் ஆமே பரங்கள் அறியா இடம் என்ப ஆமே திருக்கூத்து அடங்கிய சிற்பரம் ஆமே சிவகதி ஆனந்தம் ஆமே. |
9 | ஆனந்தம் மூன்றும் அறிவு இரண்டு ஒன்று ஆகும் ஆனந்தம் சிவாய அறிவார் பலர் இல்லை ஆனந்த மோடும் அறிய வல்லார் கட்கு ஆனந்தக் கூத்தாய் அகப்படும் தானே. |
10 | படுவது இரண்டும் பலகலை வல்லார் படுவது ஓங்காரம் பஞ்சாக் கரங்கள் படுவது சங்காரத் தாண்டவப் பத்தி படுவது கோணம் பரந்திடும் ஆறே. |
11 | வாறே சதாசிவ மாறு இலா ஆகமம் வாறே சிவகதி வண்டு உறை புன்னையும் வாறே திருக் கூத்து ஆகம வசனங்கள் வாறே பொது ஆகும் மன்றின் அமலமே. |
12 | அமலம் பதி பசு பாசங்கள் ஆகமம் அலமந்து இரோதாய் ஆகும் ஆனந்தம் ஆம் அமலம் சொல் ஆணவ மாயை காமியம் அலமந்து திருக்கூத்து அங்கு ஆமிடம் தானே. |
13 | தானே தனக்குத் தலைவியும் ஆய் நிற்கும் தானே தனக்குத் தன் மலையாய் நிற்கும் தானே தனக்குத் தன் மயம் ஆய் நிற்கும் தானே தனக்குத் தலைவனும் ஆமே. |
14 | தலைவனுமாய் நின்ற தற்பரக் கூத்தனைத் தலைவனுமாய் நின்ற சற் பாத்திரத்தைத் தலைவனுமாய் நின்ற தாது அவிழ் ஞானத் தலைவனுமாய் நின்ற தாள் இணை தானே. |
15 | இணையார் திருவடி எட்டு எழுத்து ஆகும் இணையார் கழல் இணை ஈர் அஞ்சது ஆகும் இணையார் கழல் இணை ஐம்பத்து ஒன்று ஆகும் இணையார் கழல் இணை ஏழாயிரமே. |
16 | ஏழாயிரம் ஆய் இருபதாய் முப்பதாய் ஏழாயிரத்தும் எழுகோடி தான் ஆகி ஏழாயிரத்து உயிர் எண் இலா மந்திரம் ஏழாய் இரண்டாய் இருக்கின்ற வாறே. |
17 | இருக்கின்ற மந்திரம் ஏழாயிரம் ஆம் இருக்கின்ற மந்திரம் எத்திறம் இல்லை இருக்கின்ற மந்திரம் சிவன் திருமேனி இருக்கின்ற மந்திரம் இவ் வண்ணம் தானே. |
18 | தானே தனக்குத் தகு நட்டம் தான் ஆகும் தானே அகார உகாரம் அதாய் நிற்கும் தானே ரீங்காரத் தத்துவக் கூத்துக்குத் தானே உலகில் தனி நடம் தானே. |
19 | நடம் இரண்டு ஒன்றே நளினம் அது ஆகும் நடம் இரண்டு ஒன்றே நமன் செய்யும் கூத்து நடம் இரண்டு ஒன்றே நகை செயா மந்திரம் நடம் சிவலிங்கம் நலம் செம்பு பொன்னே. |
20 | செம்பு பொன் ஆகும் சிவாய நம என்னில் செம்பு பொன் ஆகத் திரண்டது சிற்பரம் செம்பு பொன் ஆகும் ஸ்ரீயும் கிரீயும் எனச் செம்பு பொன் ஆன திரு அம்பலமே. |
21 | திரு அம்பலம் ஆகச் சீர்ச் சக்கரத்தைத் திரு அம்பலம் ஆக ஈர் ஆறு கீறித் திரு அம்பலம் ஆக இருபத்து அஞ்சு ஆக்கித் திரு அம்பலம் ஆகச் செபிக்கின்ற ஆறே. |
22 | வாறே சிவாய நமச்சி வாய நம வாறே செபிக்கில் வரும் பேர் பிறப்பு இல்லை வாறே அருளால் வளர் கூத்துக் காணலாம் வாறே செபிக்கில் வரும் செம்பு பொன்னே. |
23 | பொன் ஆன மந்திரம் புகலவும் ஒண்ணாது பொன் ஆன மந்திரம் பொறிகிம் சுகத்து ஆகும் பொன் ஆன மந்திரம் புகையுண்டு பூரிக்கில் பொன் ஆகும் வல்லோர்க்கு உடம்பு பொன் பாதமே. |
24 | பொன் பாதம் காணலாம் புத்திரர் உண்டாகும் பொன் பாதத்து ஆணையே செம்பு பொன் ஆயிடும் பொன் பாதம் காணத் திருமேனி ஆயிடும் பொன் பாத நல் நடம் சிந்தனை சொல்லுமே. |
25 | சொல்லும் ஒரு கூட்டில் புக்குச் சுகிக்கலாம் நல்ல மடவார் நயந்துடனே வரும் சொல்லினும் பாசச் சுடர் பாம்பு நீங்கிடும் சொல்லும் திருக் கூத்தின் சூக்குமம் தானே. |
26 | சூக்குமம் எண்ணாயிரம் செபித்தாலும் மேல் சூக்குமம் ஆன வழி இடைக் காணலாம் சூக்குமம் ஆன வினையைக் கெடுக்கலாம் சூக்குமம் ஆன சிவனது ஆனந்தமே. |
27 | ஆனந்தம் ஆனந்தம் ஒன்று என்று அறைந்திட ஆனந்தம் ஆனந்தம் ஆ-ஈ-ஊ-ஏ-ஓம் என்று ஐந்திடம் ஆனந்தம் ஆனந்தம் அஞ்சும் அது ஆயிடும் ஆனந்தம் ஆனந்தம் அம்-ஹரீம்-அம்-க்ஷம்-ஆம் ஆகுமே. |
28 | மேனி இரண்டும் விலங்காமல் மேல் கொள்ள மேனி இரண்டும் இகார விகாரியா மேனி இரண்டும் ஊ-ஆ-ஈ-ஏ-ஓ என்னும் மேனி இரண்டும் ஈ-ஓ-ஊ-ஆ-ஏ-கூத்து ஆமே. |
29 | கூத்தே சிவாய நம மசி வாயிடும் கூத்தே ஈ-ஊ-ஆ-ஏ-ஓம் சிவாய நம ஆயிடும் கூத்தே ஈ-ஊ-ஆ-ஏ-ஓம் சிவய நம ஆயிடும் கூத்தே ஈ-ஊ-ஆ-ஏ-ஓம் நமசிவாய கோள் ஒன்றும் ஆறே. |
30 | ஒன்று இரண்டு ஆடவோர் ஒன்று உடன் ஆட ஒன்றினின் மூன்று ஆட ஓர் ஏழும் ஒத்து ஆட ஒன்றினால் ஆட ஓர் ஒன்பதும் உடன் ஆட மன்றினில் ஆடினான் மாணிக்கக் கூத்தே. |
2. திருவம்பலச் சக்கரம் |
1 | இருந்த இவ் வட்டங்கள் ஈராறு ரேகை இருந்த இரேகை மேல் ஈர் ஆறு இருத்தி இருந்த மனைகளும் ஈர் ஆறு பத்து ஒன்று இருந்த மனை ஒன்றில் எய்துவன் தானே. |
2 | தான் ஒன்றி வாழிடம் தன் எழுத்தே ஆகும் தான் ஒன்று அந்நான்கும் தன் பேர் எழுத்து ஆகும் தான் ஒன்று நால் கோணம் தன் ஐந்து எழுத்து ஆகும் தான் ஒன்றிலே ஒன்று அவ் அரன் தானே. |
3 | அரகர என்ன அரியது ஒன்று இல்லை அரகர என்ன அறிகிலர் மாந்தர் அரகர என்ன அமரரும் ஆவர் அரகர என்ன அறும் பிறப்பு அன்றே. |
4 | எட்டு நிலை உள எம் கோன் இருப்பிடம் எட்டினில் ஒன்றும் இரு மூன்றும் ஈர் ஏழும் ஒட்டிய விந்துவும் நாதமும் ஓங்கிடப் பட்டது மந்திரம் பான் மொழி பாலே. |
5 | மட்டு அவிழ் தாமரை மாது நல்லா ளுடன் ஒட்டி இருந்த உபாயம் அறிகிலர் விட்ட எழுத்தை விடாத எழுத்துடன் கட்ட வல்லார் உயிர் காக்க வல்லாரே. |
6 | ஆலயம் ஆக அமர்ந்த பஞ் சாக்கரம் ஆலயம் ஆக அமர்ந்த இத் தூலம் போய் ஆலயம் ஆக அறிகின்ற சூக்குமம் ஆலயம் ஆக அமர்ந்து இருந்தானே. |
7 | இருந்த இவ்வட்டம் இருமூன்று ரேகை இருந்த அதன் உள் இரேகை ஐந்து ஆக இருந்த அறைகள் இருபத்து ஐந்து ஆக இருந்த அறை ஒன்றில் எய்தும் அகாரமே. |
8 | மகாரம் நடுவே வளைத்திடும் சத்தியை ஓகாரம் வளைத்திட்டும் பிளந்து ஏற்றி அகாரம் தலையாய் இரு கண் சிகாரம் ஆய் நகார வகார நல் காலது நாடுமே. |
9 | நாடும் பிரணவ நடு இரு பக்கமும் ஆடும் அவர் வாய் அமர்ந்து அங்கு நின்றது நாடு நடுவுள் முக நமசிவாய வாடும் சிவாய நம புற வட்டத்து ஆயதே. |
10 | ஆயும் சிவாய நம மசி வாய ந வாயு நமசி வாய யநம சிவாய ந வாயுமே வாய நமசி எனும் மந்திரம் ஆயும் சிகாரம் தொட்ட அந்தத்து அடைவிலே. |
11 | அடைவினில் ஐம்பதும் ஐ ஐந்து அறையின் அடையும் அறை ஒன்றுக்குக் கீழ் எழுத்து ஆக்கி அடையும் மகாரத்தில் அந்தம் ஆம் க்ஷவ்வும் அடைவின் எழுத்து ஐம் பத்து ஒன்றும் அமர்ந்ததே. |
12 | அமர்ந்த அரகர ஆம் புற வட்டம் அமர்ந்த அரிகரி ஆம் அதன் உள் வட்டம் அமர்ந்த அசபை ஆம் அதன் உள் வட்டம் அமர்ந்த ரேகையும் ஆகின்ற சூலமே. |
13 | சூலத் தலையினில் தோற்றிடும் சத்தியும் சூலத் தலையினில் சூழும் ஓங் காரத்தால் சூலத்து இடை வெளி தோற்றிடும் அஞ்சு எழுத்து ஆலப் பதிக்கும் அடைவது ஆமே. |
14 | அதுவாம் அகார இகார உகாரம் அதுவாம் எகாரம் ஒகாரம் அது அஞ்சாம் அது ஆகும் சக்கர வட்டம் மேல் வட்டம் பொது ஆம் இடைவெளி பொங்கு நம் பேரே. |
15 | பேர் பெற்றது மூல மந்திரம் பின்னது சோர் உற்ற சக்கர வட்டத்து உள் சந்தியின் நேர் பெற்று இருந்திட நின்றது சக்கரம் ஏர் பெற்று இருந்த இயல்பு இது ஆமே. |
16 | இயலும் இம் மந்திரம் எய்தும் வழியின் செயலும் அறியத் தெளிவிக்கும் நாதன் புயலும் புனலும் பொருந்து அங்கி மண் விண் முயலும் எழுத்துக்கு முன்னா இருந்ததே. |
17 | ஆறு எட்டு எழுத்தின் மேல் ஆறும் பதினாலும் ஏறு இட்ட அதன் மேல் விந்துவும் நாதமும் சீறிட்டு நின்று சிவாய நம என்னக் கூறிட்டு மும் மலம் கூப்பிட்டுப் போமே. |
18 | அண்ணல் இருப்பது அவளக் கரத்து உளே பெண்ணின் நல்லாளும் பிரான் அக் கரத்து உளே எண்ணி இருவர் இசைந்து அங்கு இருந்திடப் புண்ணிய வாளர் பொருள் அறிவார்களே. |
19 | அவ்விட்டு வைத்து அங்கு அரவிட்டு மேல் வைத்து இவ்விட்டுப் பார்க்கில் இலிங்கம் அதாய் நிற்கும் மவ்விட்டு மேலே வளி உறக் கண்ட பின் தொம் இட்டு நின்ற சுடக் கொழுந்து ஆமே. |
20 | அவ் உண்டு சவ் உண்டு அனைத்தும் அங்கு உள்ளது கவ் உண்டு நிற்கும் கருத்து அறிவார் இல்லை கவ் உண்டு நிற்கும் கருத்து அறிவாளர்க்குச் சவ் உண்டு சத்தி சதா சிவன் தானே. |
21 | அஞ்சு எழுத்தாலே அமர்ந்தனன் நந்தியும் அஞ்சு எழுத்தாலே அமர்ந்த பஞ்சாக்கரம் அஞ்சு எழுத்து ஆகிய வக்கர சக்கரம் அஞ்சு எழுத்து உள்ளே அமர்ந்து இருந்தானே. |
22 | கூத்தனைக் காணும் குறிபல பேசிடில் கூத்தன் எழுத்தின் முதல் எழுத்து ஓதினார் கூத்தனொடு ஒன்றிய கொள்கைய ராய் நிற்பர் கூத்தனைக் காணும் குறி அது ஆமே. |
23 | அத் திசைக்குள் நின்ற அனலை எழுப்பியே அத் திசைக்குள் நின்ற நவ் எழுத்து ஓதினால் அத் திசைக்குள் நின்ற அந்த மறையனை அத் திசைக்குள் உறவு ஆக்கினன் தானே. |
24 | தானே அளித்திடும் தையலை நோக்கினால் தானே அளித்திட்டு மேல் உற வைத்திடும் தானே அளித்த மகாரத்தை ஓதிடத் தானே அளித்தது ஓர் கல் ஒளி ஆகுமே. |
25 | கல் ஒளியே என நின்ற வட திசை கல் ஒளியே என நின்றனன் இந்திரன் கல் ஒளியே என நின்ற சிகாரத்தை கல் ஒளியே எனக் காட்டி நின்றானே. |
26 | தானே எழுகுணம் தண் சுடராய் நிற்கும் தானே எழுகுணம் வேதமும் ஆய் நிற்கும் தானே எழுகுணம் ஆவதும் ஓதிடில் தானே எழுந்த மறையவன் ஆமே. |
27 | மறையவன் ஆக மதித்த பிறவி மறையவன் ஆக மதித்திடக் காண்பர் மறையவன் அஞ்சு எழுத்து உள் நிற்கப் பெற்ற மறையவன் அஞ்சு எழுத்தாம் அது ஆகுமே. |
28 | ஆகின்ற பாதமும் அந் நவாய் நின்றிடும் ஆகின்ற நாபியுள் அங்கே மகாரம் ஆம் ஆகின்ற சீய் இரு தோள் வவ்வாய் கண்ட பின் ஆகின்ற அச் சுடர் அவ் இயல்பு ஆமே. |
29 | அவ் இயல்பு ஆய இரு மூன்று எழுத்து ஐந்தையும் செவ் இயல்பு ஆகச் சிறந்தனன் நந்தியும் ஒவ் இயல்பு ஆக ஒளி உற நோக்கிடில் பவ் இயல்பு ஆகப் பரந்து நின்றானே. |
30 | பரந்தது மந்திரம் பல் உயிர்க்கு எல்லாம் வரம்தரு மந்திரம் வாய்த்திட வாங்கித் துரந்திடு மந்திரம் சூழ்பகை போக உரம் தரு மந்திரம் ஓம் என்று எழுப்பே. |
31 | ஓம் என்று எழுப்பித் தன் உத்தம நந்தியை நாம் என்று எழுப்பி நடு எழு தீபத்தை ஆம் என்று எழுப்பி அவ்வாறு அறிவார்கள் மா மன்று கண்டு மகிழ்ந்து இருந்தாரே. |
32 | ஆகின்ற சக்கரத்து உள்ளே எழுத்து ஐந்தும் பாகு ஒன்றி நின்ற பதங்களில் வர்த்திக்கும் ஆகின்ற ஐம்பத்து ஓர் எழுத்துள் நிற்கப் பாகு ஒன்றி நிற்கும் பரா பரன் தானே. |
33 | பரம் ஆய அஞ்சு எழுத்துள் நடு ஆகப் பரம் ஆய நவசிம பார்க்கில் மவய நசி பரம் ஆய சிய நம ஆம் பரத்து ஓதில் பரம் ஆய வாசி மய நம ஆய் நின்றே. |
34 | நின்ற எழுத்துக்கள் நேர் தரு பூதமும் நின்ற எழுத்துக்கள் நேர் தரு வண்ணமும் நின்ற எழுத்துக்கள் நேர் தர நின்றிடில் நின்ற எழுத்து உள்ளும் நின்றனன் தானே. |
35 | நின்றது சக்கரம் நீளும் புவி எல்லாம் மன்ற அதுவாய் நின்ற மாய நல் நாடனைக் கன்று அது ஆகக் கறந்தனன் நந்தியும் குன்று இடை நின்றிடும் கொள்கையன் ஆமே. |
36 | கொண்ட இச் சக்கரத்து உள்ளே குணம் பல கொண்ட இச் சக்கரத்து உள்ளே குறி ஐந்தும் கொண்ட இச் சக்கரம் கூத்தன் எழுத்து ஐந்தும் கொண்ட இச் சக்கரத்து உள் நின்ற கூத்தே. |
37 | வெளியில் இரேகை இரேகையில் அத்தலை சுளியில் உகாரம் ஆம் சுற்றிய வன்னி நெளிதரு கால் கொம்பு நேர் விந்து நாதம் தெளியும் பிரகாரம் சிவ மந்திரமே. |
38 | அகார உகார சிகார நடுவாய் வகார மோடு ஆறும் வளியுடன் கூடிச் சிகாரம் உடனே சிவன் சிந்தை செய்ய ஒகார முதல்வன் உவந்து நின்றானே. |
39 | அற்ற இடத்தே அகாரம் அது ஆவது உற்ற இடத்தே உறு பொருள் கண்டிடச் செற்றம் அறுத்த செழும் சுடர் மெய்ப்பொருள் குற்றம் அறுத்த பொன் போலும் குளிகையே. |
40 | அவ் என்ற போதினில் உவ் எழுத்து ஆலித்தால் உவ் என்ற முத்தி உருகிக் கலந்திடும் மவ் என்று என் உள்ளே வழி பட்ட நந்தியை எவ் வணம் சொல்லுகேன் எந்தை இயற்கையே. |
41 | நீரில் எழுத்து இவ் உலகர் அறிவது வானில் எழுத்து ஒன்று கண்டு அறிவார் இல்லை யார் இவ் எழுத்தை அறிவார் அவர்கள் ஊனில் எழுத்தை உணர்கிலர் தாமே. |
42 | காலை நடுஉறக் காயத்தில் அக்கரம் மாலை நடுஉற ஐம்பதும் ஆவன மேலை நடுஉற வேதம் விளம்பிய மூலம் நடு உற முத்தித் தானே. |
43 | நாவியின் கீழ் அது நல்ல எழுத்து ஒன்று பாவிகளத்தின் பயன் அறிவார் இல்லை ஓவியராலும் அறிய ஒண்ணாது அது தேவியும் தானும் திகழ்ந்து இருந்தானே. |
44 | அவ்வொடு சவ் என்றது அரன் உற்ற மந்திரம் அவ்வொடு சவ் என்றது ஆரும் அறிகிலர் அவ்வொடு சவ் என்றது ஆரும் அறிந்த பின் அவ்வொடு சவ்வும் அனாதியும் ஆமே. |
45 | மந்திரம் ஒன்றுள் மலரால் உதிப்பது உந்தியின் உள்ளே உதயம் பண்ணா நிற்கும் சந்தி செய்யா நிற்பர் தாம் அறிகிலர் அந்தி தொழுது போய் ஆர்த்து அகன்றார்களே. |
46 | சேவிக்கும் மந்திரம் செல்லும் திசை பெற ஆவிக்குள் மந்திரம் ஆதாரம் ஆவன பூவுக்குள் மந்திரம் போக்கு அற நோக்கிடில் ஆவிக்குள் மந்திரம் அங்குசம் ஆமே. |
47 | அருவினில் அம்பரம் அங்கு எழு நாதம் பெருகு துடி இடை பேணிய விந்து மருவி அகார சிகார நடுவாய் உருவிட ஊறும் உறு மந்திரமே. |
48 | ஆறு எழுத்து ஓதும் அறிவார் அறிகிலார் ஆறு எழுத்து ஒன்று ஆக ஓதி உணரார்கள் வேறு எழுத்து இன்றி விளம்ப வல்லார்கட்கு ஓர் எழுத்தாலே உயிர் பெறலாமே. |
49 | ஓதும் எழுத்தோடு உயிர்க் கலை மூ அஞ்சும் ஆதி எழுத்து அவை ஐம்பதோடு ஒன்று என்பர் சோதி எழுத்தினில் ஐ இரு மூன்று உள நாத எழுத்து இட்டு நாடிக் கொள்ளீரே. |
50 | விந்துவிலும் சுழி நாதம் எழுந்திடப் பந்தத் தலைவி பதினாறு கலை அதாய்க் கந்தர வாகரம் கால் உடம்பு ஆயினாள் அந்தமும் இன்றியே ஐம்பத்து ஒன்று ஆயதே. |
51 | ஐம்பது எழுத்தே அனைத்தும் வேதங்களும் ஐம்பது எழுத்தே அனைத்து ஆகமம் களும் ஐம்பது எழுத்தேயும் ஆவது அறிந்த பின் ஐம்பது எழுத்தும் போய் அஞ்சு எழுத்து ஆமே. |
52 | அஞ்சு எழுத்தால் ஐந்து பூதம் படைத்தனன் அஞ்சு எழுத்தால் பல யோனி படைத்தனன் அஞ்சு எழுத்தால் இவ் அகல் இடம் தாங்கினன் அஞ்சு எழுத்தாலே அமர்ந்து நின்றானே. |
53 | வீழ்ந்து எழலாம் விகிர்தன் திருநாமத்தைச் சோர்ந்து ஒழியாமல் தொடங்கும் ஒருவற்குச் சார்ந்த வினைத் துயர் போகத் தலைவனும் போந்திடும் என்னும் புரி சடையோனே. |
54 | உண்ணும் மருந்தும் உலப்பு இலி காலமும் பண் உறு கேள்வியும் பாடலும் ஆய் நிற்கும் விண் நின்று அமரர் விரும்பி அடி தொழ எண் நின்று எழுத்து அஞ்சும் ஆகிநின்றானே. |
55 | ஐந்தின் பெருமையே அகல் இடம் ஆவதும் ஐந்தின் பெருமையே ஆலயம் ஆவதும் ஐந்தின் பெருமையே அறவோன் வழக்கமும் ஐந்தின் வகை செயப் பாலனும் ஆமே. |
56 | வேர் எழுத்தாய் விண்ணாய் அப்புறமாய் நிற்கும் நீர் எழுத்தாய் நிலம் தாங்கியும் அங்கு உளன் சீர் எழுத்தாய் அங்கியாய் உயிராம் எழுத்து ஓர் எழுத்து ஈசனும் ஒண் சுடர் ஆமே. |
57 | நால் ஆம் எழுத்து ஓசை ஞாலம் உருவது நால் ஆம் எழுத்தின் உள் ஞாலம் அடங்கிற்று நால் ஆம் எழுத்தே நவில வல்லார் கட்கு நால் ஆம் எழுத்து அது நல் நெறி தானே. |
58 | பட்ட பரிசே பரம் அஞ்சு எழுத்து அதின் இட்டம் அறிந்திட்டு இரவு பகல் வர நட்டம் அது ஆடு நடுவே நிலயம் கொண்டு அட்ட தேசப் பொருள் ஆகி நின்றாளே. |
59 | அகாரம் உயிரே உகாரம் பரமே மகார மலமாய் வரு முப்பதத்தில் சிகாரம் சிவம் ஆய் வகாரம் வடிவமாய் அகாரம் உயிர் என்று அறையலும் ஆமே. |
60 | நகார மகார சிகார நடுவாய் வகாரம் இரண்டும் வளியுடன் கூடி ஒகார முதல் கொண்டு ஒருகால் உரைக்க மகார முதல்வன் மனத்து அகத்தானே. |
61 | அஞ்சுள வானை அடவியுள் வாழ்வன அஞ்சுக்கும் அஞ்சு எழுத்து அங்குசம் ஆவன அஞ்சையும் கூடத் தடுக்க வல்லார் கட்கே அஞ்சு ஆதி ஆதி அகம் புகல் ஆமே. |
62 | ஐந்து கலையில் அகராதி தன்னிலே வந்த நகர் ஆதி மாற்றி மகர் ஆதி நந்தியை மூலத்தே நாடிப் பரை யொடும் சந்தி செய்வார்க்குச் சடங்கு இல்லை தானே. |
63 | மருவும் சிவாயமே மன்னும் உயிரும் அருமந்த யோகமும் ஞானமும் ஆகும் தெருள் வந்த சிவனார் சென்று இவற்றாலே அருள் தங்கி அச் சிவம் ஆவது வீடே. |
64 | அஞ்சுக அஞ்சு எழுத்து உண்மை அறிந்தபின் நெஞ்சு அகத்து உள்ளே நிறையும் பராபரம் வஞ்சகம் இல்லை மனைக்கும் அழிவு இல்லை தஞ்சம் இது என்று சாற்றுகின்றேனே. |
65 | சிவாயவொடு அவ்வே தெளிந்து உளத்து ஓதச் சிவாயவொடு அவ்வே சிவன் உரு ஆகும் சிவாயவொடு அவ்வும் தெளிய வல்லார்கள் சிவாயவொடு அவ்வே தெளிந்து இருந்தாரே |
66 | சிகார வகார யகாரம் உடனே நகார மகார நடுஉற நாடி ஒகாரம் உடனே ஒருகால் உரைக்க மகார முதல்வன் மதித்து நின்றானே. |
67 | நம் முதல் ஓர் ஐந்தின் நாடும் கருமங்கள் அம் முதல் ஐந்தில் அடங்கிய வல்வினை சிம் முதல் உள்ளே தெளிய வல்லார் கட்குத் தம் முதல் ஆகும் சதா சிவம் தானே. |
68 | நவமும் சிவமும் உயிர் பரம் ஆகும் தவம் ஒன்று இலாதன தத்துவம் ஆகும் சிவம் ஒன்றி ஆய்பவர் ஆதரவால் அச் சிவம் என்பது ஆனாம் எனும் தெளி உற்றதே. |
69 | கூடிய எட்டும் இரண்டும் குவிந்து அறி நாடிய நந்தியை ஞானத்து உள்ளே வைத்து ஆடிய ஐவரும் அங்கு உறவு ஆவார்கள் தேடி அதனைத் தெளிந்து அறியீரே. |
70 | எட்டும் இரண்டும் இனிது அறிகின்றிலர் எட்டும் இரண்டும் அறியாத ஏழையர் எட்டும் இரண்டும் இரு மூன்று நான்கு எனப் பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே. |
71 | எட்டு வரையின் மேல் எட்டு வரை கீறி இட்ட நடுவுள் இறைவன் எழுத்து ஒன்றில் வட்டத்திலே அறை நாற்பத்து எட்டும் இட்டுச் சிட்டம் அஞ்சு எழுத்தும் செபி சீக்கிரமே. |
72 | தானவர் சட்டர் சதிரர் இருவர்கள் ஆன இம் மூவரோடு ஆற்றவர் ஆதிகள் ஏனைப் பதினைந்தும் விந்துவும் நாதமும் சேனையும் செய் சிவ சக்கரத்தானே. |
73 | பட்டன மாதவம் ஆறும் பராபரம் விட்டனர் தம்மை விகிர்தா நம என்பர் எட்டனை ஆயினும் ஈசன் திறத்திறம் ஒட்டுவன் பேசுவன் ஒன்று அறியேனே. |
74 | வித்து ஆம் செக மயம் ஆக வரை கீறி நத்தார் கலைகள் பதினாறு நாட்டிப் பின் உத்தாரம் பன்னிரண்டு ஆதி கலை தொகும் பத்து ஆம் பிரம சடங்கு பார்த்து ஓதிடே. |
75 | கண்டு எழுந்தேன் கமலம் மலர் உள் இடை கொண்டு ஒழிந்தேன் உடன் கூடிய காலத்துப் பண்டு அழியாத பதிவழியே சென்று நண் பழியாமே நம எனல் ஆமே. |
76 | புண்ணிய வானவர் பூ மழை தூவி நின்று எண்ணுவர் அண்ணல் இணை அடி மந்திரம் நண்ணுவர் நண்ணி நம என்று நாமத்தைக் கண் என உன்னிக் கலந்து நின்றாரே. |
77 | ஆறு எழுத்து ஆவது ஆறு சமயங்கள் ஆறுக்கு நாலே இருபத்து நாலு என்பர் சாவித்திரியில் தலை எழுத்து ஒன்று உள பேதிக்க வல்லார் பிறவி அற்றார்களே. |
78 | எட்டினில் எட்டு அறை இட்டு ஓர் அறையிலே கட்டிய ஒன்று எட்டாய்க் காண நிறை இட்டுச் சுட்டி இவற்றைப் பிரணவம் சூழ்ந்திட்டு மட்டும் உயிர்கட்கு உமாபதியான் உண்டே. |
79 | நம் முதல் அவ்வொடு நாவினர் ஆகியே அம் முதல் ஆகிய எட்டு இடை உற்று இட்டு உம் முதல் ஆகவே உண்பவர் உச்சி மேல் உம் முதல் ஆயவன் உற்று நின்றானே. |
80 | நின்ற அரசு அம் பலகை மேல் நேர் ஆக ஒன்றிட மவ்விட்டு ஓலையில் சாதகம் துன்று எழுகையுள் பூசிச் சுடர் இடைத்து அன்ற வெதுப்பு இடத் தம்பனம் காணுமே. |
81 | கரண விறளிப் பலகை யமன் திசை மரணம் இட்டு எட்டின் மகார எழுத்து இட்டு வரணம் இல் ஐங்காயம் பூசி அடுப்பு இடை முரணில் புதைத்திட மோகனம் ஆகுமே. |
82 | ஆங்கு வடமேற்கில் ஐயனார் கோட்டத்தில் பங்கு படவே பலாசப் பலகையில் ஆங்கு அரு மேட்டில் கடுப் பூசி விந்து விட்டு ஓங்காரம் வைத்திடும் உச்சாடனத்துக்கே. |
83 | உச்சி அம் போதில் ஒளிவன்னி மூலையில் பச் சோலையில் பஞ்ச காயத்தைப் பாரித்து முச்சதுரத்தின் முது காட்டில் வைத்திட வைச்சபின் மேலோர் மாரணம் வேண்டிலே. |
84 | ஏய்ந்த அரிதாரம் ஏட்டின் மேலே பூசி ஏய்ந்த வகாரம் உகாரம் எழுத்து இட்டு வாய்ந்தது ஓர் வில்லம் பலகை வசியத்துக்கு ஏய்ந்தவைத்து எண் பதினாயிரம் வேண்டிலே. |
85 | எண்ணாக் கருடனை ஏட்டின் அகாரம் இட்டு எண்ணாப் பொன் ஒளி எழுவெள்ளி பூசிடா வெண் நாவல் பலகையில் இட்டு மேற்கே நோக்கி எண்ணா எழுத்து எட்டாயிரம் வேண்டிலே. |
3. அருச்சனை |
1 | அம்புயம் நீலம் கழுநீர் அணி நெய்தல் வம்பு அவிழ் பூகமும் மாதவி மந்தாரம் தும்பை வகுளம் சுரபுன்னை மல்லிகை செண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திடே. |
2 | சாங்கம் அது ஆகவே சந்தொடு சந்தனம் தேம் கமழ் குங்குமம் கர்ப்பூரம் கார் அகில் பாங்கு படப் பனி நீரால் குழைத்து வைத்து ஆங்கே அணிந்து நீர் அர்ச்சியும் அன்பு ஒடே. |
3 | அன்புடனே நின்று அமுதம் ஏற்றியே பொன் செய் விளக்கும் புகைதீபம் திசைதொறும் துன்பம் அகற்றித் தொழுவோர் நினையுங்கால் இன்டனே வந்து எய்திடும் முத்தியே. |
4 | எய்தி வழிப் படில் எய்தாதன இல்லை எய்தி வழிப் படில் இந்திரன் செல்வம் முன் எய்தி வழிப் படில் எண் சித்தி உண்டாகும் எய்தி வழிப் படில் எய்திடும் முத்தியே. |
5 | நண்ணும் பிறதார நீத்தார் அவித்தார் மண்ணிய நைவேத்தியம் அனு சந்தான நண்ணிய பஞ்சாங்க நண்ணும் செபம் என்னும் மன்னும் அன பவனத் தொடு வைகுமே. |
6 | வேண்டார்கள் கன்மம் விமலனுக்கு ஆட்பட்டோர் வேண்டார்கள் கன்மம் அதில் இச்சை அற்ற பேர் வேண்டார்கள் கன்மம் மிகுசிவ யோகிகள் வேண்டார்கள் கன்மம் மிகுதி ஓர் ஆய்ந்த அன்பே. |
7 | அறிவரும் ஞானத்து எவரும் அறியார் பொறிவழி தேடிப் புலம்பு கின்றார்கள் நெறி மனை உள்ளே நிலை பெற நோக்கில் எறி மணி உள்ளே இருக்கலும் ஆமே. |
8 | இருளும் வெளியும் போல் இரண்டு ஆம் இதய மருள் அறியாமையும் மன்னும் அறிவு மருள் இவை விட்டு அறியாமை மயக்கும் மருளும் சிதைத்தோர் அவர்கள் ஆம் அன்றே. |
9 | தானவன் ஆக அவனே தான் ஆயிட ஆன இரண்டில் அறிவன் சிவம் ஆகப் போனவன் அன்பு இது நால் ஆம் மரபுறத் தானவன் ஆகும் ஓர் ஆதித்த தேவரே. |
10 | ஓங்கார உந்திக்கு கீழ் உற்றிடும் எந் நாளும் நீங்கா வகாரமும் நீள் கண்டத்து ஆயிடும் பாங்கார் நகாரம் பயில் நெற்றி உற்றிடும் வீங்கு ஆகும் விந்துவும் நாதம் மேல் ஆகுமே. |
11 | நமவது ஆசனம் ஆன பசுவே சிவமது சித்திச் சிவமாம் பதியே நமஅற ஆதி நாடுவது அன்றாம் சிவம் ஆகும் மா மோனம் சேர்தல் மெய் வீடே. |
12 | தெளி வரும் நாளில் சிவ அமுது ஊறும் ஒளி வரு நாளில் ஓர் எட்டில் உகளும் ஒளி வரும் அப் பதத்து ஓர் இரண்டு ஆகில் வெளிதரு நாதன் வெளியாய் இருந்துஏ. |
4. நவகுண்டம் |
1 | நவ குண்டம் ஆனவை நான் செய்யின் நவ குண்டத்து உள் எழு நல் தீபம் தானும் நவ குண்டத்து உள் எழு நன்மைகள் எல்லாம் நவ குண்டம் ஆனவை நான் உரைப்பேனே. |
2 | உரைத்திடும் குண்டத்தின் உள்ளே முக்காலும் நகைத்து எழு நால் கோண நன்மைகள் ஐந்தும் பகைத்திடும் முப்புரம் பார் அங்கி யோடே மிகைத்து எழு கண்டங்கள் மேல் அறியோமே. |
3 | மேல் அறிந்து உள்ளே வெளி செய்த அப்பொருள் கால் அறிந்து உள்ளே கருத்து உற்ற செம் சுடர் பார் அறிந்து அண்டம் சிறகு அற நின்றது நான் அறிந்து உள்ளே நாடிக் கொண்டேனே. |
4 | கொண்ட இக் குண்டத்தின் உள் எழு சோதியாய் அண்டங்கள் ஈர் ஏழும் ஆக்கி அழிக்கலாம் பண்டை உள் வேதம் பரந்த பரப்பு எல்லாம் இன்று சொல் நூலாய் எடுத்து உரைத்தேனே. |
5 | எடுத்த அக் குண்டத்து இடம் பதினாறில் பதித்த கலைகளும் பாலித்து நிற்கும் கதித்து அனல் உள் எழக் கண்டு கொள்வார்க்கே கொதித்து எழும் வல்வினை கூட இலாவே. |
6 | கூட முக் கூடத்தின் உள் எழு குண்டத்துள் ஆடிய ஐந்தும் அகம் புறம்பாய் நிற்கும் பாடிய பன்னீர் இராசியும் அங்கு எழ நாடிக் கொள்வார் கட்கு நல் சுடர் தானே. |
7 | நல் சுடர் ஆகும் சிர முக வட்டம் ஆம் கைச்சுடர் ஆகும் கருத்து உற்ற கைகளில் பைச் சுடர் மேனி பதைப்பு உற்று இலிங்கமும் நல் சுடராய் எழு நல்லது என்றாளே. |
8 | நல்லது என்றாளே நமக்கு உற்ற நாயகம் சொல் அது என்றாளே சுடர் முடி பாதம் ஆம் மெல்ல நின்றாளை வினவ கில்லாதவர் கல் அதன் தாளையும் கற்றும் இன்னாளே. |
9 | இன்னா இளம் பிறை மேவிய குண்டத்துச் சொன்னால் இரண்டும் சுடர் நாகம் திக்கு எங்கும் பன்னாலு நாகம் பரந்த பரம் சுடர் என் ஆகத்து உள்ளே இடம் கொண்டவாறே. |
10 | இடம் கொண்ட பாதம் எழில் சுடர் ஏக நடம் கொண்ட பாதங்கள் நண்ணீர் அதற்குச் சகம் கொண்ட கை இரண்டு ஆறும் தழைப்ப முகம் கொண்ட செம் சுடர் முக்கணனார்க்கே. |
11 | முக்கணன் தானே முழுச் சுடர் ஆயவன் அக் கணன் தானே அகிலமும் உண்டவன் திக் கணன் ஆகித் திகை எட்டும் கண்டவன் எக் கணன் தானுக்கும் எந்தை பிரானே. |
12 | எந்தை பிரானுக்கு இரு மூன்று வட்டம் ஆய்த் தந்தை தன் முன்னே சண்முகம் தோன்றலால் கந்தன் சுவாமி கலந்து அங்கு இருத்தலான் மைந்தன் இவன் என்று மாட்டிக் கொள்ளீரே. |
13 | மாட்டிய குண்டத்தின் உள் எழு வேதத்துள் ஆட்டிய கால் ஒன்றும் இரண்டும் அலர்ந்திடும் வாட்டிய கை இரண்டு ஒன்று பதைத்து எழ நாட்டும் சுரர் இவர் நல் ஒளி தானே. |
14 | நல் ஒளியாக நடந்து உலகு எங்கும் கல் ஒளியாகக் கலந்து உள் இருந்திடும்; சொல் ஒளியாகத் தொடர்ந்த உயிர்க்கு எலாம் கல் ஒளி கண் உளும் ஆகி நின்றானே. |
15 | நின்ற இக் குண்டம் நிலைஆறு கோணமாய் பண்டையில் வட்டம் பதைத்து எழும் ஆறு ஆறும் கொண்ட இத் தத்துவம் உள்ளே கலந்து எழ விண் உளும் என்ன எடுக்கலும் ஆமே. |
16 | எடுக்கின்ற பாதங்கள் மூன்றது எழுத்தைக் கடுத்த முகம் இரண்டு ஆறு கண்ணாகப் படித்து எண்ணு நா எழு கொம்பு ஒரு நாலும் அடுத்து எழு கண்ணான அந்தம் இலாற்கே. |
17 | அந்தம் இல்லானுக்கு அகல் இடம் தான் இல்லை அந்தம் இல்லானை அளப்பவர் தாம் இல்லை அந்தம் இல்லானுக்கு அடுத்த சொல் தான் இல்லை அந்தம் இல்லானை அறிந்து கொள் பத்தே. |
18 | பத்து இட்டு அங்கு எட்டு இட்டு ஆறு இட்டு நால் இட்டு மட்டு இட்ட குண்டம் மலர்ந்து எழு தாமரை கட்டு இட்டு நின்று கலந்த மெய் ஆகமும் பட்டு இட்டு நின்றது பார்ப்பதி பாலே. |
19 | பார்ப்பதி பாகன் பரந்தகை நால் அஞ்சு கால் பதி பத்து முகம் பார்த்துக் கண்களும் பூப் பதி பாதம் இரண்டு சுடர் முடி நாற்பது சோத்திரம் நல் இருபத்து அஞ்சே. |
20 | அஞ்சிட்ட கோலம் அளப்பன ஐ ஐந்தும் மஞ்சிட்ட குண்டம் மலர்ந்து அங்கு இருத்தலால் பஞ்சிட்ட சோதி பரந்த பரம் சுடர் கொஞ்சிட்ட வன்னியைக் கூடுதல் முத்தியே. |
21 | முத்தி நல் சோதி முழுச் சுடர் ஆயவன் கற்று அற்று நின்றார் கருத்துள் இருந்திடும் பற்று அற நாடிப் பரந்து ஒளி ஊடு போய்ச் செற்று அற்று இருந்தவர் சேர்ந்து இருந்தாரே. |
22 | சேர்ந்த கலை அஞ்சும் சேரும் இக் குண்டமும் ஆர்த்த திசைகளும் அங்கே அமர்ந்திடும் பாய்ந்த ஐம் பூதமும் பார்க்கின்ற வன்னியைக் காய்ந்தவர் என்றும் கலந்தவர் தாமே. |
23 | மெய் கண்டம் ஆம் விரி நீர் உலகு ஏழையும் உய் கண்டம் செய்த ஒருவனைச் சேருமின் மெய் கண்ட ஞானம் திருந்திய தேவர்கள் பொய் கண்டம் இல்லாப் பொருள் கலந்தாரே. |
24 | கலந்து இருபாதம் இருகரம் ஆகும் மலர்ந்து இரு குண்டம் அகாரத்து ஓர் மூக்கு மலர்ந்து எழு செம் முகம் மற்றைக் கண் நெற்றி உணர்ந்து இரும் குஞ்சி அங்கு உத்தமனார்க்கே. |
25 | உத்தமன் சோதி உளன் ஒரு பாலன் ஆய் மத்திமன் ஆகி மலர்ந்து அங்கு இருந்திடும் பச்சி மதிக்கும் பரந்து குழிந்தன சத்திமான் ஆகத் தழைத்த கொடியே. |
26 | கொடியாறு சென்று குலாவிய குண்டம் அடி இரு கோணம் ஆய் அந்தமும் ஒக்கும் படி ஏழ் உலகும் பரந்த சுடரை மடியாது கண்டவர் மாதனம் ஆமே. |
27 | மாதனம் ஆக வளர்கின்ற வன்னியைச் சாதனம் ஆகச் சமைந்த குரு என்று போதனம் ஆகப் பொருந்த உலகு ஆளும் பாதனம் ஆகப் பிரிந்தது பார்த்தே. |
28 | பார்த்த இடம் எங்கும் பரந்து எழு சோதியை ஆத்தம் அது ஆகவே ஆய்ந்து அறிவார் இல்லை காத்து உடல் உள்ளே கருதி இருந்தவர் மூத்து உடல் கோடி உகம் கண்ட வாறே. |
29 | உகம் கண்ட ஒன்பது குண்டமும் ஒக்க அகம் கண்ட யோகி உள் நாடி எழுப்பும் பயம் கண்டு கொண்ட இப்பாய் கரு ஒப்பச் சகம் கண்டு கொண்டது சாதனம் ஆமே. |
30 | சாதனை நாலு தழல் மூன்று வில்வயம் வேதனை வட்டம் விளை ஆறு பூநிலை போதனை போதஞ்சு பொற்கய வாரண நாதனை நாடு நவகோடி தானே. |
5. சத்தி பேதம் - திரிபுரை சக்கரம் |
1 | மா மாயை மாயை வயிந்தவம் வைகரி ஓ மாயை உள் ஒளி ஓர் ஆறு கோடியில் தாம் ஆன மந்திரம் சத்தி தன் மூர்த்திகள் ஆம் ஆய அலவாம் திரிபுரை ஆங்கே. |
2 | திரிபுரை சுந்தரி அந்தரி சிந்துரப் பரிபுரை நாரணி ஆம் பல வன்னத்தி இருள்புரை ஈசி மனோன்மணி என்ன வரு பலவாய் நிற்கும் மாமாது தானே. |
3 | தானா அமைந்த அம் முப்புரம் தன் இடைத் தான் ஆன மூ உரு ஓர் உருத் தன்மையள் தான் ஆன பொன் செம்மை வெண் நிறத்தாள் கல்வி தான் ஆன போகமும் முத்தியும் நல்குமே. |
4 | நல்கும் திரிபுரை நாத நாதாந்தங்கள் பல்கும் பரவிந்து பார் அண்டம் ஆனவை நல்கும் பரை அபிராமி அகோசரி புல்கும் அருளும் அப்போதம் தந்து ஆளும். |
5 | தாள் அணி நூபுரம் செம்பட்டுத் தான் உடை வார் அணி கொங்கை மலர்க் கன்னல் வாளி வில் ஏர் அணி அங்குச பாசம் எழில் முடி கார் அணி மா மணிக் குண்டலக் காதிக்கே. |
6 | குண்டலக் காதி கொலை வில் புருவத்தாள் கொண்ட அரத்த நிறம் மன்னும் கோலத்தள் கண்டிகை ஆரம் கதிர்முடி மா மதிச் சண்டிகை நால் திசை தாங்கி நின்றாளே. |
7 | நின்ற திரிபுரை நீளும் புராதனி குன்றல் இல் மோகினி மா திருக் குஞ்சிகை நன்று அறி கண்டிகை நால்கால் கரீடணி துன்றிய நல் சுத்த தாமரைச் சுத்தையே. |
8 | சுத்த அம் பாரத் தனத்தி சுகோதயள் வத்துவ மாயாள் உமா சத்தி மா பரை அத்தகை யாவும் அணோரணி தானும் ஆய் வைத் தவக் கோலம் மதி அவள் ஆகுமே. |
9 | அவளை அறியா அமரரும் இல்லை அவள் அன்றிச் செய்யும் அரும் தவம் இல்லை அவள் அன்றி ஐவரால் ஆவது ஒன்று இல்லை அவள் அன்றி ஊர் புகுமாறு அறியேனே. |
10 | அறிவார் பராசத்தி ஆனந்தம் என்பர் அறிவார் அரு உருவாம் அவள் என்பர் அறிவார் கருமம் அவள் இச்சை என்பர் அறிவார் பரனும் அவள் இடத்தானே. |
11 | தான் எங்கு உளன் அங்கு உளள் தையல் மா தேவி ஊன் எங்கு உள அங்கு உளன் உயிர்க் காவலன் வான் எங்கு உள அங்கு உளே வந்து அப்பால் ஆம் கோன் எங்கும் நின்ற குறிபல பாரே. |
12 | பரா சத்தி மா சத்தி பல வகையாலும் தரா சத்தியாய் நின்ற தன்மை உணராய் உரா சத்தி ஊழிகள் தோறும் உடனே புரா சத்தி புண்ணியம் ஆகிய போகமே. |
13 | போகம் செய் சத்தி புரி குழலா ளொடும் பாகம் செய்து ஆங்கே பராசத்தியாய் நிற்கும் ஆகம் செய்து ஆங்கே அடியவர் நாள் தொறும் பாகம் செய் ஞானம் படர்கின்ற கொம்பே. |
14 | கொம்பு அனையாளை குவிமுலை மங்கையை வம்பு அவிழ் கோதையை வானவர் நாடியைச் செம் பவளத் திருமேனிச் சிறுமியை நம்பி என் உள்ளே நயந்து வைத்தேனே. |
15 | வைத்த பொருளும் மரு உயிர்ப் பன்மையும் பத்து முகமும் பரையும் பரா பரைச் சித்தக் கரணச் செயல்களும் செய்திடும் சத்தியும் வித்தைத் தலை அவள் ஆமே. |
16 | தலைவி தடமுலை மேல்நின்ற தையல் தொலைவில் தவம் செயும் தூய்நெறித் தோகை கலை பல வென்றிடும் கன்னி என் உள்ளம் நிலை பெற இங்கே நிறைந்து நின்றாளே. |
17 | நின்றவள் நேர் இழை நீள் கலை யோடு உற என்றன் அகம் படிந்து ஏழ் உலகும் தொழ மன்றது ஒன்றி மனோன் மணி மங்கலி ஒன்று எனோடு ஒன்றி நின்று ஒத்து அடைந்தாளே. |
18 | ஒத்து அடங்கும் கமலத்து இடை ஆயிழை அத்தகை செய்கின்ற ஆய பெரும்பதி மத்து அடைகின்ற மனோன்மணி மங்கலி சித்து அடைக்கும் வழி தேர்ந்து உணரார்களே. |
19 | உணர்ந்து உடனே நிற்கும் உள் ஒளி ஆகி மணம் கமழ் பூங் குழலாள் மங்கையும் தானும் புணர்ந்து உடனே நிற்கும் போதரும் காலைக் கணிந்து எழுவார்க்குக் கதி அளிப்பாளே. |
20 | அளி ஒத்த பெண் பிள்ளை ஆனந்த சுந்தரி புளி உறு புன் பழம் போல் உள்ளே நோக்கித் தெளி உறு வித்துச் சிவகதி காட்டி ஒளி உற வைத்து என்னை உய்ய உண்டாளே. |
21 | உண்டு இல்லை என்றது உருச் செய்து நின்றது வண்டு இல்லை மன்றின் உள் மன்னி நிறைந்தது கண்டிலர் காரண காரணி தம்மொடு மண்டலம் மூன்று உற மன்னி நின்றாளே. |
22 | நின்றாள் அவன் தன் உடலும் உயிருமாய் சென்றாள் சிவகதி சேரும் பராசத்தி ஒன்றாக என்னுள் புகுந்து உணர்வு ஆகியே நின்றாள் பரம் சுடர் ஏடு அம் கையாளே. |
23 | ஏடு அம் கை நங்கை இறை எங்கள் முக் கண்ணி வேடம் படிகம் விரும்பும் வெண் தாமரை பாடும் திருமுறை பார்ப்பதி பாதங்கள் சூடுமின் சென்னி வாய்த் தோத்திரம் சொல்லுமே. |
24 | தோத்திரம் செய்து தொழுது துணை அடி வாய்த்திட ஏத்திவழிபடுமாறு இரும்பு ஆர்த்திடும் அங்குச பாசம் பசும் கரும்பு ஆர்த்திடும் பூம்பிள்ளை ஆகும் ஆம் ஆதிக்கே. |
25 | ஆதி விதமிகுத்து அண்ட அந்த மால் தங்கை நீதி மலரின் மேல் நேர் இழை நாமத்தைப் பாதியில் வைத்துப் பல்கால் பயில்விரேல் சோதி மிகுத்து முக்காலமும் தோன்றுமே. |
26 | மேதாதி ஈர் எட்டும் ஆகிய மெல் இயல் வேத ஆதி நூலின் விளங்கும் பரா பரை ஆதாரம் ஆகியே ஆய்ந்த பரப்பினள் நாதாதி நாதத்து நல்ல அருளாலே. |
27 | அருள் பெற்றவர் சொல்ல வாரீர் மனிதர் பொருள் பெற்ற சிந்தைப் புவனா பதியார் மருள் உற்ற சிந்தையை மாற்றி அருமைப் பொருள் உற்ற சேவடி போற்றுவன் யானே. |
28 | ஆன வராக முகத்தி பதத்தினள் ஈனவர் ஆகம் இடிக்கும் முசலத்தோடு ஏனை உழுபடை ஏந்திய வெண் நகை ஊனம் அற உணர்ந்தார் உளத்து ஓங்குமே. |
29 | ஓம் காரி என்பாள் அவள் ஒரு பெண் பிள்ளை நீங்காத பச்சை நிறத்தை உடையவள் ஆங்காரி ஆகியே ஐவரைப் பெற்றிட்டு ரீங்காரத்து உள்ளே இனிது இருந்தாளே. |
30 | தானே தலைவி என நின்ற தற்பரை தானே உயிர் வித்துத் தந்த பதினாலும் வானோர் தலமும் மனமும் நல் புத்தியும் தானே சிவகதி தன்மையும் ஆமே. |
6. வயிரவி மந்திரம் |
1 | பன்னிரண்டு ஆம் கலை ஆதி வயிரவி தன்னில் அகாரமும் மாயையும் கற்பித்துப் பன்னிரண்டு ஆதியோடு அந்தம் பதினாலும் சொல்நிலை சோடசம் அந்தம் என்று ஓதிடே. |
2 | அந்தம் பதினாலும் அதுவே வயிரவி முந்து நடுவும் முடிவும் முதலாகச் சிந்தைக் கமலத்து எழுகின்ற மாசத்தி அந்தமும் ஆதியும் ஆகி நின்றாளே. |
3 | ஆகின்ற மூவரும் அங்கே அடங்குவர் போகின்ற பூதம் பொருந்து புராதரர் சார்கின்ற சார்வுழிச் சாரார் சதிர்பெறப் போகும் திரிபுரை புண்ணியத் தோரே. |
4 | புண்ணிய நந்தி புனிதன் திரு ஆகும் எண்ணிய நாட்கள் இருபத்து ஏழ் சூழ்மதி பண்ணிய வன்னி பகலோன் மதி ஈறு திண்ணிய சிந்தை தன் தென்னனும் ஆமே. |
5 | தென்னன் திரு நந்தி சேவகன் தன்னொடும் பொன் அம் கிரியில் பூதலம் போற்றிடும் பன்னும் பரிபிடி அந்தம் பகவனோடு உன்னும் திரிபுரை ஓதி நின்றானுக்கே. |
6 | ஓதிய நந்தி உணரும் திரு அருள் நீதியில் வேத நெறிவந்து செய்யும் போதம் இருபத்து எழுநாள் புணர்மதி சோதி வயிரவி சூலம் வந்து ஆளுமே. |
7 | சூலம் கபாலம் கை ஏந்திய சூலிக்கு நாலு அம் கரம் உள நாக பாச அங்குச மால் அங்கு அயன் அறியாத வடிவுக்கு மேல் அங்கம் ஆய் நின்ற மெல் இயலாளே. |
8 | மெல் இயல் வஞ்சி விடமி கலை ஞானி சொல்லிய கிஞ்சுக நிறம் மன்னு சேய் இழை கல் இயல் ஒப்பது காணும் திரு மேனி பல் இயல் ஆடையும் பல் மணிதானே. |
9 | பல் மணி சந்திர கோடி திரு முடி சொல்மணி குண்டலக் காதி உழைக் கண்ணி நல் மணி சூரிய சோம நயனத்தாள் பொன் மணி வன்னியும் பூரிக்கின்றாளே. |
10 | பூரித்த பூஇதழ் எட்டினுக்கு உள்ளே ஓர் ஆரியத் தாள் உண்டு அங்கு எண்மர் கன்னியர் பாரித்த பெண்கள் அறுபத்து நால்வரும் சாரித்துச் சத்தியைத் தாங்கள் கண்டாரே. |
11 | கண்ட சிலம்பு வளை சங்கு சக்கரம் எண் திசை யோகி இறைவி பராசத்தி அண்ட மொடு எண் திசை தாங்கும் அருள்செல்வி புண்டரிகத்தின் உள் பூசனையாளே. |
12 | பூசனை கந்தம் புனைமலர் மா கோடி யோசனை பஞ்சத்து ஒலி வந்து உரைசெய்யும் வாசம் இலாத மணி மந்திர யோகம் தேசம் திகழும் திரிபுரை காணே. |
13 | காணும் பல பல தெய்வங்கள் வெவ் வேறு பூணும் பல பல பொன் போலத் தோற்றிடும் பேணும் சிவனும் பிரமனும் மாயனும் காணும் தலைவி நல் காரணி காணே. |
14 | காரணி மந்திரம் ஓதும் கமலத்துப் பூரண கும்ப விரேசம் பொருந்திய நாரணி நந்தி நடு அங்கு செய்த ஆரண வேதநூல் அந்தமும் ஆமே. |
15 | அந்த நடு விரல் ஆதி சிறுவிரல் வந்த வழி முறை மாறி செய்யும் செம் தமிழ் ஆதி தெளிந்து வழிபடு நந்தி இதனை நவம் உரைத்தானே. |
16 | உரைத்த நவ சத்தி ஒன்று முடிய நிரைத்த விராசி நெடு முறை எண்ணிப் பிரைச் சதம் எட்டு முன் பேசிய நந்தி நிரைத்து நியதி நியமம் செய்தானே. |
17 | தாமக் குழலி தயைக் கண்ணி உள் நின்ற ஏமத்து இருள் அற வீசும் இளங்கொடி ஓமப் பெருஞ்சுடர் உள் எழு நுண்புகை மேவித்து அமுதொடு மீண்டது காணே. |
18 | காணும் இருதய மந்திரமும் கண்டு பேணு நமஎன்று பேசும் தலை மேலே வேணு நடுவு மிக நின்ற ஆகுதி பூணு நடு என்ற அந்தம் சிகையே. |
19 | சிகை நின்ற அந்தக் கவசம் கொண்டு ஆதி பகை நின்ற அங்கத்தைப் பார் என்று மாறித் தொகை நின்ற நேத்திர முத்திரை சூலம் வகை நின்ற யோனி வருத்தலும் ஆமே. |
20 | வருத்தம் இரண்டும் சிறு விரல் மாறிப் பொருத்தி அணிவிரல் சுட்டிப் பிடித்து நெரித்து ஒன்ற வைத்து நெடிது நடுவே பெருந்த விரல் இரண்டு உள் புக்குப் பேசே. |
21 | பேசிய மந்திரம் இகாரம் பிரித்து உரை கூசம் இலாத சகாரத்தை முன் கொண்டு வாசிப் பிராணன் உபதேச மாகைக்குக் கூசிய விந்து உடன் கொண்டு கூவே. |
22 | கூவிய சீவன் பிராணன் முதல் ஆகப் பாவிய ச உடன் பண்ணும் அகாரத்தை மேவிய மாயை விரி சங்கு முத்திரை தேவி நடுவுள் நிகழ்ந்து நின்றாளே. |
23 | நின்ற வயிரவி நீலி நிசா சரி ஒன்றும் இரண்டும் ஒருங்கிய உள்ளத்துச் சென்று அருள் நாயகி தேவர் பிரானுக்கே நன்று அருள் ஞாலத்து நாடிடும் சாற்றியே. |
24 | சாற்றிய வேதம் சராசரம் ஐம் பூதம் நால் திசை முக் கண்ணி நடும் இருள் வெளி தோற்றும் உயிர்ப் பன்மை சோதி பராபரை ஆற்றலொடு ஆய் நிற்கும் ஆதி முதல்வியே. |
25 | ஆதி வயிரவி கன்னித் துறை மன்னி ஓதி உணரில் உடல் உயிர் ஈசன் ஆம் பேதை உலகில் பிறவிகள் நாசம் ஆம் ஓத உலவாத கோலம் ஒன்று ஆகுமே. |
26 | கோலக் குழலி குலாய புருவத்தள் நீலக் குவளை மலர் அன்ன கண்ணினாள் ஆலிக்கும் இன் அமுது ஆனந்த சுந்தரி மேலைச் சிவத்தை வெளிப் படுத்தாளே. |
27 | வெளிப்படு வித்து விளை அறிவித்துத் தெளிப் படுவித்து என் சிந்தையின் உள்ளே களிப்படு வித்துக் கதிர்ப்படு சோதி ஒளிப் படுவித்து என்னை உய்யக் கொண்டாளே. |
28 | கொண்டனள் கோலம் கோடி அநேகங்கள் கண்டனள் எண் எண் கலையின் கண் மாலைகள் விண்டனள் மேலை விரிகதிர் மூன்றையும் தண்டலை மேல் நின்ற தையல் நல்லாளே. |
29 | தையல் நல்லாளைத் தவத்தின் தலைவியை மையலை நோக்கும் மனோன்மணி மங்கையைப் பைய நின்று ஏத்திப் பணிமின் பணிந்த பின் வெய்ய பவம் இனி மேவ கிலாவே. |
30 | வேய் அன தோளி விரை உறு மெல் மலர் ஏய குழலி இளம் பிறை ஏந்திழை தூய சடை முடிச் சூலினி சுந்தரி ஏய் எனது உள்ளத்து இனிது இருந்தாளே. |
31 | இனியது என் மூலை இருக்கும் குமரி தனி ஒரு நாயகி தானே தலைவி தனிப் படுவித்தனள் சார்வு படுத்து நனிப் படுவித்து உள்ளம் நாடி நின்றாளே. |
32 | நாடிகள் மூன்று நடு எழு ஞாளத்துக் கூடி இருந்த குமரி குலக் கன்னி பாடகச் சீறடிப் பைம் பொன் சிலம்பு ஒலி ஊடகம் மேவி உறங்கு கின்றாளே. |
33 | உறங்கும் அளவின் மனோன்மணி வந்து கறங்கு வளைக்கைக் கழுத்து ஆரப் புல்லிப் பிறங்கு ஒளித் தம்பலம் வாயில் உமிழந்திட்டு ‘உறங்கல் ஐயா’ என்று உபாயம் செய்தாளே. |
34 | உபாயம் அளிக்கும் ஒருத்தி என் உள்ளத்து அபாயம் அறக்கெடுத்து அன்பு விளைத்து சுவாவை விளக்கும் சுழி அகத்து உள்ளே அவாவை அடக்கி வைத்து அஞ்சல் என்றாளே. |
35 | அம் சொல் மொழியாள் அரும்தவப் பெண்பிள்ளை செம் சொல் மடமொழி சீர் உடைச் சேயிழை தஞ்சம் என்று எண்ணித் தன் சேவடி போற்றுவார்க்கு இன்சொல் அளிக்கும் இறைவி என்றாரே. |
36 | ஆர் உயிராயும் அரும் தவப் பெண் பிள்ளை கார் இயல் கோதையள் காரணி நாரணி ஊரும் உயிரும் உலகும் ஒடுக்கிடும் கோரி என் உள்ளம் குலாவி நின்றாளே. |
37 | குலாவிய கோலக் குமரி என் உள்ளம் நிலாவி இருந்து நெடுநாள் அணைந்தும் உலாவி இருந்து உணர்ந்து உச்சியின் உள்ளே கலாவி இருந்த கலைத் தலையாளே. |
38 | கலைத்தலை நெற்றி ஓர் கண் உடைக் கண்ணுள் முலைத் தலை மங்கை முயங்கி இருக்கும் சிலைத் தலை ஆய தெரிவினை நோக்கி அலைத்த பூங் கொம்பினள் அங்கு இருந்தாளே. |
39 | இருந்தனள் ஏந்திழை என் உள்ளம் மேவிப் பொருந்திய நால்விரல் புக்கனள் புல்லித் திருந்திய தாணுவில் சேர்த்து உடன் ஒன்றி அரும் தவம் எய்தினள் ஆதியின் ஆளே. |
40 | ஆதி அனாதி அகாரணி காரணி சோதிய சோதி சுகபர சுந்தரி மாது சமாதி மனோன் மணி மங்கலி ஓதி என் உள்ளத்து உடன் இயைந்தாளே. |
41 | இயைந்தனள் ஏந்திழை என் உள்ளம் மேவி நயந்தனள் அங்கே நம சிவ என்னும் அயன் தனை யோரும் பதம் அது பற்றும் பெயர்ந்தனள் மற்றும் பிதற்று அறுத்தாளே. |
42 | பிதற்றிக் கழிந்தனர் பேதை மனிதர் முயற்றியின் முத்தி அருளும் முதல்வி கயல் திகழ் முக்கண்ணும் கம்பலைச் செவ்வாய் முகத்து அருள் நோக்கமும் முன் உள்ளது ஆமே. |
43 | உள்ளத்து இதயத்து நெஞ்சத்து ஒரு மூன்றுள் பிள்ளைத் தடம் உள்ளே பேசப் பிறந்தது வள்ளல் திருவின் வயிற்றின் உள் மா மாயைக் கள்ள ஒளியின் கருத்து ஆகும் கன்னியே. |
44 | கன்னியும் கன்னி அழிந்திலள் காதலி துன்னி அம் ஐவரைப் பெற்றனள் தூய்மொழி பன்னிய நல் நூல் பகவரும் அங்கு உள என்னே இம் மாயை இருள் அது தானே. |
45 | இருள் அது சத்தி வெளியது எம் அண்ணல் பொருள் அது புண்ணியர் போகத்துள் இன்பம் தெருள் அது சிந்தையைத் தெய்வம் என்று எண்ணில் அருள் அது செய்யும் எம் ஆதிப் பிரானே. |
46 | ஆதி அனாதியும் ஆய பராசத்தி பாதிபரா பரை மேல் உறை பைந்தொடி மாது சமாதி மனோன்மணி மங்கலி ஓதும் என் உள்ளத்து உடன் முகிழ்த்தாளே. |
47 | ஓதிய வண்ணம் கலையின் உயர்கலை ஆதியில் வேதமே யாம் என்று அறிகிலர் சாதியும் பேதமும் தத்துவம் ஆய் நிற்பள் ஆதி என்று ஓதினள் ஆவின் கிழத்தியே. |
48 | ஆவின் கிழத்தி நல் ஆவடு தண் துறை நாவின் கிழத்தி நலம் புகழ்ந்து ஏத்திடும் தேவின் கிழத்தி திரு ஆம் சிவ மங்கை மேவும் கிழத்தி வினை கடிந்தாளே. |
49 | வினை கடிந்தார் உள்ளத்து உள் ஒளி மேவித் தனை அடைந்தோர்க்கு எல்லாம் தத்துவமாய் நிற்பள் எனை அடிமை கொண்ட ஏந்திழை ஈசன் கணவனைக் காண அனாதியும் ஆமே. |
50 | ஆதி அனாதி அகாரணி காரணி வேதம் அது ஆய்ந்தனள் வேதியர்க்காய் நின்ற சோதி தனிச் சுடர் சொரூபம் ஆய் நிற்கும் பாதி பராபரை பன்னிரண்டு ஆதியே. |
7. பூரண சத்தி |
1 | அளந்தேன் அகல் இடத்து அந்தமும் ஈறும் அளந்தேன் அகல் இடத்து ஆதிப் பிரானை அளந்தேன் அகல் இடத்து ஆணொடு பெண்ணும் அளந்தேன் அவன் அருள் ஆய்ந்து உணர்ந்தேனே. |
2 | உணர்ந்து இலர் ஈசனை ஊழி செய் சத்தி புணர்ந்தது பூரணம் புண்ணியர் தங்கள் கணங்களைத் தன் அருள் செய்கின்ற கன்னி கொணர்ந்த வழிகொண்டு கும்பகம் ஆமே. |
3 | கும்பக் களிறு ஐந்தும் கோலொடு பாகனும் வம்பில் திகழும் மணிமுடி வண்ணனும் இன்பக் கலவி இனிது உறை தையலும் அன்பில் கலவி உள் ஆய் ஒழிந்தாரே. |
4 | இன்பக் கலவியில் இட்டு எழுகின்றது ஓர் அன்பில் புக வல்லன் ஆம் எங்கள் அப்பனும் துன்பக் குழம்பில் துயர் உறும் பாசத்துள் என்பில் பராசத்தி என் அம்மை தானே. |
5 | என் அம்மை என் அப்பன் என்னும் செருக்கு அற்று உன் அம்மை ஊழித் தலைவனும் அங்கு உளன் மன் அம்மை ஆகி மருவி செய்யும் பின் அம்மை ஆய் நின்ற பேர் நந்தி தானே. |
6 | தார் மேல் உறைகின்ற தண்மலர் நான் முகன் பார் மேல் இருப்பது ஒரு நூறு தான் உள பூ மேல் உறைகின்ற போது அகம் வந்தனள் நா மேல் உறைகின்ற நாயகி ஆணையே. |
7 | ஆணையம் ஆய் அருந்தாது உள் இருந்தவர் மாண் ஐயம் ஆய மனத்தை ஒருக்கிப் பின் பாழ்நயம் ஆய பரத்தை அறிந்தபின் தாள்நயம் ஆய அனாதனன் தானே. |
8 | தானே எழுந்த இத்தத்துவ நாயகி வான் நேர் எழுந்து மதியை விளக்கினள் தேன் நேர் எழுகின்ற தீபத்து ஒளியுடன் மானே நடம் உடை மன்று அறியீரே. |
9 | அறிவு ஆன மாயையும் ஐம்புலக் கூட்டத்து அறிவு ஆன மங்கை அருள் அது சேரில் பிறியா அறிவு அறிவார் உளம் பேணும் நெறி ஆய சித்தம் நினைந்து இருந்தாளே. |
10 | இரவும் பகலும் இலாத இடத்தே குரவம் செய்கின்ற குழலியை நாடி அரவம் செய்யாமல் அருளுடன் தூங்கப் பருவம் செய்யாத ஓர் பாலனும் ஆமே. |
11 | பாலனும் ஆகும் பரா சத்தி தன்னொடு மேல் அணுகா விந்து நாதங்கள் விட்டிட மூலம் அது ஆம் எனும் முத்திக்கு நேர்படச் சாலவும் ஆய் நின்ற தற் பரத்தாளே. |
12 | நின்ற பரா சத்தி நீள் பரன் தன்னொடு நின்று அறி ஞானமும் இச்சையும் ஆய் நிற்கும் நன்று அறியும் கிரியா சத்தி நண்ணவே மன்றன் அவற்றுள் மருவிடும் தானே. |
13 | மரு ஒத்த மங்கையும் தானும் உடனே உரு ஒத்து நின்றமை ஒன்றும் உணரார் கரு ஒத்து நின்று கலங்கின போது திரு ஒத்த சிந்தை வைத்து எந்தை நின்றானே. |
14 | சிந்தையின் உள்ளே திரியும் சிவ சத்தி விந்துவும் நாதமும் ஆயே விரிந்தனள் சந்திர பூமி சடாதரி சாத்தவி அந்தம் ஒடு ஆதி அதாம் வண்ணத் தாளே. |
15 | ஆறி இருந்த அமுத பயோதரி மாறி இருந்த வழி அறிவார் இல்லை தேறி இருந்து நல்தீபத்து ஒளியுடன் ஊறி இருந்தனள் உள் உடையார்க்கே. |
16 | உடையவன் அங்கி உருத்திர சோதி விடை அவன் ஏறி விளங்கி இருக்கும் கடையவர் போயிடும் கண்டவர் நெஞ்சத்து அடை அது ஆகிய சாதகர் தாமே. |
17 | தாம் மேல் உறைவிடம் மாறு இதழ் ஆனது பார் மேல் இதழ் பதின் எட்டின் இருநூறு உள பூ மேல் உறைகின்ற புண்ணியம் வந்தனள் பார் மேல் உறைகின்ற பைந் தொடியாளே. |
18 | பைங்கொடியாளும் பரமன் இருந்திடத் திண் கொடி ஆகத் திகழ் தரு சோதி ஆம் விண் கொடி ஆகி விளங்கி வருதலால் பெண் கொடி ஆக நடந்தது உலகே. |
19 | நடந்தது அம் மலர் நாலுடன் அஞ்சாய் இருந்தனர் கன்னிகள் எட்டுடன் ஒன்றாய்ப் படர்ந்தது தன் வழி பங்கயத்து உள்ளே தொடர்ந்தது உள்வழி சோதி அடுத்தே. |
20 | அடுக்கும் தாமரை ஆதி இருப்பிடம் எடுக்கும் தாமரை இல் அகத்து உள்ளது மடுக்கும் தாமரை மத்தகத்தே செல முடுக்கும் தாமரை முச் சதுரத்தே. |
21 | முச் சதுரத்தே எழுந்த முளைச் சுடர் எச் சதுரத்தும் இடம் பெற ஓடிடக் கைச் சதுரத்துக் கடந்து உள் ஒளிபெற எச்சதுரத்தும் இருந்தனள் தானே. |
22 | இருந்தனள் தன் முகம் ஆறு ஒடு நால் ஆய் பரந்தன வாயு திசை திசை தோறும் குவிந்தன முத்தின் முக ஒளி நோக்கி நடந்தது தேறல் அதோ முகம் அம்பே. |
23 | அம்பு அன்ன கண்ணி அரிவை மனோன்மணி கொம்பு அன்ன நுண் இடை கோதை குலாவிய செம் பொன் செய் யாக்கை செறிகமழ் நாள்தொறும் நம்பனை நோக்கி நவிலுகின்றாளே. |
24 | நவிலும் பெரும் தெய்வம் நால் மறைச் சத்தி துகில் உடை ஆடை நிலம் பொதி பாதம் அகிலமும் அண்டம் முழுதும் செம்மாந்து புகலும் முச்சோதி புனைய நிற்பாளே. |
25 | புனைய வல்லாள் புவனத்து இறை எங்கள் வனைய வல்லாள் அண்ட கோடிகள் உள்ளே புனைய வல்லாள் மண்டலத்து ஒளி தன்னைப் புனைய வல்லாளையும் போற்றி என்பேனே. |
26 | போற்றி என்பேன் புவனா பதி அம்மை என் ஆற்றல் உள் நிற்கும் அரும் தவப் பெண் பிள்ளை சீற்றம் கடிந்த திரு நுதல் சேயிழை கூற்றம் துரக்கின்ற கோள் பைந் தொடியே. |
27 | தொடியார் தடக்கைச் சுகோதய சுந்தரி வடிவார் திரிபுரை ஆம் மங்கை சங்கைச் செடியார் வினை கெடச் சேர்வரை என்று என்று அடியார் வினை கெடுத்து ஆதியும் ஆமே. |
28 | மெல் இசைப் பாவை வியோமத்தின் மென் கொடி பல் இசைப் பாவை பயன் தரு பைங் கொடி புல் இசைப் பாவையைப் போகத்துரந்திட்டு வல் இசைப் பாவை மனம் புகுந்தாளே. |
29 | தாவித் தவப் பொருள் தானவன் எம் இறை பாவித்து உலகம் படைக்கின்ற காலத்து மேவிப் பரா சத்தி மேலொடு கீழ் தொடர்ந்து ஆவிக்கும் அப் பொருள் தான் அது தானே. |
30 | அது இது என்பார் அவனை அறியார் கதி வர நின்றது ஓர் காரணம் காணார் மது விரி பூங் குழல் மா மங்கை நங்கை திதம் அது உன்னார்கள் தேர்ந்து அறியாரே. |
8. ஆதார வாதேயம் |
1 | நாலிதழ் ஆறில் விர்ந்தது தொண்ணூறு தான் இதழ் ஆனவை நாற்பத்து நால் உள பால் இதழ் ஆனவள் பங்கயம் மூலமாய்த் தான் இதழ் ஆகித் தரித்து இருந்தாளே. |
2 | தரித்து இருந்தாள் அவள் தன் ஒளி நோக்கி விரித்து இருந்தாள் அவள் வேதப் பொருளைக் குறித்து இருந்தாள் அவள் கூறிய ஐந்து மறித்து இருந்தாள் அவள் மாது நல்லாளே. |
3 | மாது நல்லாளும் மணாளன் இருந்திடப் பாதி நல்லாளும் பகவனும் ஆனது சோதி நல்லாளைத் துணைப் பெய்ய வல்லிர் ஏல் வேதனை தீர் தரும் வெள்ளடை ஆமே. |
4 | வெள் அடையான் இரு மா மிகு மா மலர்க் கள் அடையார் அக் கமழ் குழலார் மன மள் அடையானும் வகைத் திறம் ஆய் நின்ற பெண் ஒரு பாகம் பிறவி பெண் ஆமே. |
5 | பெண் ஒரு பெண்ணைப் புணர்ந்திடும் பேதைமை பெண் இடை ஆணும் பிறந்து கிடந்தது பெண் உடை ஆண் என் பிறப்பு அறிந்து ஈர்க்கின்ற பெண் உடை ஆண் இடைப் பேச்சு அற்ற வாறே. |
6 | பேச்சு அற்ற நல் பொருள் காணும் பெரும் தகை மாச்சு அற்ற சோதி மனோன்மணி மங்கை ஆம் காச்சு அற்ற சோதி கடவுளுடன் புணர்ந்து ஆச்சு அற்று என் உள் புகுந்து ஆலிக்கும் தானே. |
7 | ஆலிக்கும் கன்னி அரிவை மனோன் மணி பாலித்து உலகில் பரந்து பெண் ஆகும் வேலைத் தலைவியை வேத முதல்வியை ஆலித்து ஒருவன் உகந்து நின்றானே. |
8 | உகந்து நின்றான் நம்பி ஒள் நுதல் கண்ணோடு உகந்து நின்றான் நம் முழை புக நோக்கி உகந்து நின்றான் இவ் உலகங்கள் எல்லாம் உகந்து நின்றான் அவன் அன்றோ தொகுத்தே. |
9 | குத்து முலைச்சி குழைந்த மருங்கினள் துத்தி விரிந்த சுணங்கினள் தூ மொழி புத்தகச் சீறடிப் பாவை புணர்வினைத் தொத்த கருத்து அது சொல்ல கிலேனே. |
10 | சொல்ல ஒண்ணாத அழல் பொதி மண்டலம் சொல்ல ஒண்ணாது திகைத்து அங்கு இருப்பார்கள் வெல்ல ஒண்ணாத வினைத் தனி நாயகி மல்ல ஒண்ணாத மனோன்மணி தானே. |
11 | தானே இரு நிலம் தாங்கி விண்ணாய் நிற்கும் தானே சுடும் அங்கி ஞாயிறும் திங்களும் தானே மழை பொழி தையலும் ஆய் நிற்கும் தானே வடவரைத் தண் கடல் கண்ணே. |
12 | கண் உடையாளைக் கலந்து அங்கு இருந்தவர் மண் உடையாரை மனித்தரில் கூட்டு ஒணாப் பண் உடையார்கள் பதைப்பு அற்று இருந்தவர் விண் உடையார்களை மேல் உறக் கண்டே. |
13 | கண்டு எண் திசையும் கலந்து வரும் கன்னி பண்டு எண் திசையும் பராசத்தியாய் நிற்கும் விண்டு எண் திசையும் விரைமலர் கைக் கொண்டு தொண்டு எண் திசையும் தொழ நின்ற கன்னியே. |
14 | கன்னி ஒளி என நின்ற இச் சந்திரன் மன்னி இருக்கின்ற மாளிகை செந்நிறம் சென்னி இருப்பிடம் சேர் பதினாறு உடன் பன்னி இருப்பப் பராசத்தி ஆமே. |
15 | பரா சத்தி என்று என்று பல் வகையாலும் தரா சத்தி ஆன தலைப் பிரமாணி இராசத்தி யாமள ஆகமத்தாள் ஆகும் குராசத்தி கோலம் பல உணர்ந்தேனே. |
16 | உணர்ந்து உலகு ஏழையும் யோகினி சத்தி உணர்ந்து உயிராய் நிற்கும் உன்னதன் ஈசன் புணர்ந்து ஒரு காலத்துப் போகம் அதுஆதி இணைந்து பரம் என்று இசைந்து இது தானே. |
17 | இது அப் பெருந்தகை எம்பெருமானும் பொது அக் கல்வியும் போகமும் ஆகி மதுவக் குழலி மனோன்மணி மங்கை அது அக் கல்வியுள் ஆயுழி யோகமே. |
18 | யோக நல் சத்தி ஒளி பீடம் தான் ஆகும் யோக நல் சத்தி ஒளி முகம் தெற்கு ஆகும் யோக நல் சத்தி உதர நடு ஆகும் யோக நல் சத்தி தாள் உத்தரம் தேரே. |
19 | தேர்ந்து எழு மேல் ஆம் சிவன் அங்கியோடு உற வார்ந்து எழு மாயையும் மந்தம் அதாய் நிற்கும் ஓர்ந்து எழு விந்துவும் நாதமும் ஓங்கிடக் கூர்ந்து எழு கின்றனள் கோல்வளைதானே. |
20 | தான் ஆன ஆறு எட்டு அது ஆம் பரைக்கு உள்மிசை தான் ஆன ஆறும் ஈர் ஏழும் சமகலை தான் ஆன விந்து சகமே பரம் எனும் தான் ஆம் பரவாதனை எனத் தக்கதே. |
21 | தக்க பராவித்தை தான் இருபான் ஏழில் தக்கு எழு ஓரும் திரம் சொல்லச் சொல்லவே மிக்கிடும் எண் சத்தி வெண் நிற முக் கண்ணி தொக்க கதையோடு தொல் முத்திரை யாளே. |
22 | முத்திரை மூன்றின் முடிந்த மெய்ஞ் ஞானத்தாள் தத்துவமாய் அல்ல வாய சகலத்தாள் வைத்த பராபரனாய பராபரை சத்தியும் ஆனந்த சத்தியும் கொங்கே. |
23 | கொங்கு ஈன்ற கொம்பின் குரும்பைக் குலாம் கன்னி பொங்கிய குங்குமத்து ஒளி பொருந்தினள் அங்குச பாசம் எனும் அகிலம் கனி தங்கும் அவள் மனை தான் அறிவாயே. |
24 | வாயும் மனமும் கடந்த மனோன்மணி பேயும் கணமும் பெரிது உடைப் பெண் பிள்ளை ஆயும் அறிவும் கடந்த அரசனுக்குத் தாயும் மகளும் தாரமும் ஆமே. |
25 | தாரமும் ஆகுவள் தத்துவமாய் நிற்பள் காரண காரியம் ஆகும் கலப்பினள் பூரண விந்து பொதிந்த புராதனி பார் அளவாம் திசை பத்து உடையாளே. |
26 | பத்து முகம் உடையாள் நம் பராசத்தி வைத்தனள் ஆறு அங்க நாலுடன் தான் வேதம் ஒத்தனள் ஆதாரம் ஒன்றுடன் ஓங்கியே நித்தமாய் நின்றாள் எம் நேர் இழை கூறே. |
27 | கூறிய கன்னி குலாய புருவத்தள் சீறியள் ஆய் உலகு ஏழும் திகழ்ந்தவள் ஆரிய நங்கை அமுத பயோதரி பேர் உயிர் ஆளி பிறிவு அறுத்தாளே. |
28 | பிறிவு இன்றி நின்ற பெருந்தகைப் பேதை குறி ஒன்றி நின்றிடும் கோமளக் கொம்பு பொறி ஒன்றி நின்று புணர்ச்சி செய்து ஆங்கே அறிவு ஒன்ற நின்றனள் ஆர் உயிர் உள்ளே. |
29 | உள்ளத்தின் உள்ளே உடன் இருந்தவர் ஐவர் தம் கள்ளத்தை நீக்கிக் கலந்து உடனே புல்கிக் கொள்ளத் தவநெறி கூடிய இன்பத்து வள்ளல் தலைவி மருட்டிப் புரிந்தே. |
30 | புரிந்து அருள் செய்கின்ற போகமா சத்தி இருந்து அருள் செய்கின்ற இன்பம் அறியார் பொருந்தி இருந்த புதல்வி பூ வண்ணத்து இருந்த இலக்கில் இனிது இருந்தாளே. |
31 | இருந்தனள் ஏந்திழை என் உளம் மேவித் திருந்து புணர்ச்சியில் தேர்ந்து உணர்ந்து உன்னி நிரந்தரம் ஆகிய நிரதி சய மொடு பொருந்த இலக்கில் புணர்ச்சி அதுவே. |
32 | அது இது என்னும் அவாவினை நீக்கித் துதி அது செய்து சுழி உற நோக்கில் விதி அது தன்னையும் வென்றிடல் ஆகும் மதிமலராள் சொன்ன மண்டலம் மூன்றே. |
33 | மூன்று மண்டலம் மோகினி சேர்விடம் என்று உள ஈராறு எழுகலை உச்சியில் தோன்றும் இலக்குற ஆகுதல் மாமாயை ஏன்றனள் ஏழ் இரண்டு இந்துவொடு ஈறே. |
34 | இந்துவினின்று எழு நாதம் இரவி போல் வந்து பின் நாக்கின் மதித்து எழும் கண்டத்தில் உந்திய சோதி இதயத்து எழும் ஒலி இந்துவின் மேல் உற்ற ஈறு அது தானே. |
35 | ஈறு அது தான் முதல் எண் இரண்டு ஆயிரம் மாறுதல் இன்றி மனோ வசமாய் எழில் தூறு அது செய்யும் சுகந்தச் சுழி அது பேறு அது செய்து பிறந்து இருந்தாளே. |
36 | இருந்தனள் ஏந்திழை ஈறு அது இலாகத் திருந்திய ஆனந்தம் செல் நெறி நண்ணிப் பொருந்து புவனங்கள் போற்றி செய்து ஏத்தி வருந்த இருந்தனள் மங்கை நல்லாளே. |
37 | மங்கையும் மாரனும் தம்மொடு கூடி நின்று அங்குலி கூட்டி அகம்புறம் பார்த்தனர் கொங்கை நல்லாளும் குமாரர்கள் ஐவரும் தங்களின் மேவிச் சடங்கு செய்தாரே. |
38 | சடங்கு அது செய்து தவம் புரிவார்கள் கடந்தனின் உள்ளே கருதுவர் ஆகில் தொடர்ந்து எழு சோதி துளை வழி ஏறி அடங்கிடும் அன்பினது ஆயிழை பாலே. |
39 | பாலித்து இருக்கும் பனிமலர் ஆறினும் ஆலித்து இருக்கும் அவற்றின் அகம் படி சீலத்தை நீக்கத் திகழ்ந்து எழு மந்திரம் மூலத்து மேல் அது முத்து அது ஆமே. |
40 | முத்து வதனத்தி முகம் தொறும் முக் கண்ணி சத்தி சதிரி சகளி சடாதரி பத்துக் கரத்தி பராபரன் பைந்தொடி வித்தகி என் உள்ளம் மேவி நின்றாளே. |
41 | மேவிய மண்டலம் மூன்றுடன் கீழ் எரி தாவிய நல் பதத் தண் மதியம் கதிர் மூவரும் கூடி முதல்வியாய் முன்நிற்பார் ஓவினும் மேலிடும் உள் ஒளி ஆமே. |
42 | உள் ஒளி மூ இரண்டு ஓங்கிய அங்கங்கள் வெள் ஒளி அங்கியின் மேவி அவரொடும் கள் அவிழ் கோதைக் கலந்து உடனே நிற்கும் கொள்ள விசுத்திக் கொடி அமுதம் ஆமே. |
43 | கொடிய திரேகை குருஉள் இருப்பப் படி அதுவார் உனைப் பைங் கழல் ஈசன் வடிவு அது ஆனந்தம் வந்து முறையே இடு முதல் ஆறு அங்கம் ஏந்திழையாளே. |
44 | ஏந்திழை யாளும் இறைவர்கள் மூவரும் காந்தாரம் ஆறும் கலை முதல் ஈர் எட்டும் ஆந்தக் குளத்தியும் மந்திரர் ஆயவும் சார்ந்தனர் ஏத்த இருந்தனள் சத்தியே. |
45 | சத்தி என்பாள் ஒரு சாதகப் பெண் பிள்ளை முத்திக்கு நாயகி என்பது அறிகிலர் பத்தியைப் பாழில் உகுத்த அப்பாவிகள் கத்திய நாய் போல் கதறு கின்றாரே. |
46 | ஆரே திருவின் திருவடி காண்பார்கள் நேரே நின்று ஓதி நினையவும் வல்லார்க்குக் கார் ஏர் குழலி கமல மலர் அன்ன சீர் ஏயும் சேவடி சிந்தை வைத்தாளே. |
47 | சிந்தையில் வைத்துச் சிராதியிலே வைத்து முந்தையில் வைத்துத் தம் மூலத்திலே வைத்து நிந்தையில் வையா நினைவு அதிலே வைத்துச் சந்தையில் வைத்துச் சமாதி செய்வீரே. |
48 | சமாதி செய்வார் கட்குத் தான் முதல் ஆகிச் சிவாதி இலாரும் சிலை நுதலாளை நவாதியில் ஆக நயந்து அது ஓதில் உவாதி அவளுக்குறைவில தாமே. |
49 | உறைபதி தோறும் முறைமுறை மேவி நறைகமழ் கோதையை நாள்தொரு நண்ணி மறையுடனே நிற்கும் மற்றுள்ள நான்கும் இறை தினைப் போதினில் எய்திடல் ஆமே. |
50 | எய்திடல் ஆகும் இருவினையின் பயன் கொய் தளிர் மேனிக் குமரி குலாம் கன்னி மை தவழ் கண்ணி நல் மாதுரி கையொடு கை தவம் இன்றிக் கருத்து உறும் வாறே. |
51 | கருத்து உறும் காலம் கருதும் மனமும் திருத்தி இருந்தவை சேரும் நிலத்து ஒருத்தியை உன்னி உணர்ந்திடும் மண்மேல் இருத்திடும் எண் குணம் எய்தலும் ஆகுமே. |
52 | ஆமை ஒன்று ஏறி அகம்படியான் என ஓம என்று ஓதி எம் உள் ஒளியாய் நிற்கும் தாம நறும் குழல் தையலைக் கண்ட பின் சோம நறு மலர் சூடி நின்றாளே. |
53 | சூடிடும் அங்குச பாசத் துளை வழி கூடும் இருவளைக் கோலக்கை குண்டிகை நாடும் இருபத நல் நெடு ருத்திரம் ஆடிடும் சீர்புனை ஆடகம் ஆமே. |
54 | ஆம் அயன் மலரான் ஈசன் சதா சிவன் தாம் அடி சூடி நின்று எய்தினர் தம் பதம் காமனும் சாமன் இரவி கனல் உடன் சோமனும் வந்து அடி சூட நின்றாளே. |
55 | சூடும் இளம் பிறை சூலி கபாலினி நீடும் இளம் கொடி நின் மலி நேர் இழை நாடி நடு இடை ஞானம் உருவ நின்று ஆடும் அதன் வழி அண்ட முதல்வியே. |
56 | அண்டம் முதலாய் அவனி பரியந்தம் கண்டது ஒன்று இல்லை கனம் குழை அல்லது கண்டனும் கண்டியும் ஆகிய காரணம் குண்டிகை கோளிகை கண்ட அதனாலே. |
57 | ஆலம் உண்டான் அமுது ஆங்கு அவர் தம் பதம் சால வந்து எய்தும் தவத்து இன்பம் தான் வரும் கோலி வந்து எய்தும் குவிந்த பதவை யோடு ஏல வந்து ஈண்டி இருந்தனள் மேலே. |
58 | மேல் ஆம் அரும்தவம் மேல் மேலும் வந்து எய்தக் காலால் வருந்திக் கழிவர் கணத்து இடை நாலா நளின நின்று ஏத்தி நட்டு உச்சி தன் மேல் ஆம் எழுத்தினள் ஆம் மத்தினாளே. |
59 | ஆமத்து இனிது இருந்தன்ன மயத்தினள் ஓமத்திலேயும் ஒருத்தி பொருந்தினள் நாம நமசிவ என்று இருப்பார்க்கு நேமத் துணைவி நிலாவி நின்றாளே. |
60 | நிலா மயம் ஆகிய நீள் படிகத்தின் சிலா மயம் ஆகும் செழும் தரளத்தின் சுலா மயம் ஆகும் சுரிகுழல் கோதை கலா மயம் ஆகக் கலந்து நின்றாளே. |
61 | கலந்து நின்றாள் கன்னி காதலனோடும் கலந்து நின்றாள் உயிர் கற்பனை எல்லாம் கலந்து நின்றாள் கலை ஞானங்கள் எல்லாம் கலந்து நின்றாள் கன்னி காலமும் ஆயே. |
62 | காலவி எங்கும் கருத்தும் அருத்தியும் கூலவி ஒன்று ஆகும் கூட இழைத்தனள் மாலினி மாகுலி மந்திர சண்டிகை பாலினி பாலவன் பாகம் அது ஆமே. |
63 | பாகம் பரா சத்தி பைம் பொன் சடை முடி ஏகம் இருதயம் ஈர் ஐந்து திண்புய மோக முகம் ஐந்து முக் கண் முகம் தொறும் நாகம் உரித்து நடம் செய்யும் நாதர்க்கே. |
64 | நாதனும் நால் ஒன்பதின்மரும் கூடி நின்று ஓதிடும் கூட்டங்கள் ஓர் ஐந்து உள அவை வேதனும் ஈர் ஒன்பதின்மரும் மேவி நின்று ஆதியும் அந்தமும் ஆகி நின்றாளே. |
65 | ஆகின்ற நாள்கலை ஐம்பத்து ஒருவர்கள் ஆகி நின்றார்களில் ஆருயிராம் அவள் ஆகி நின்றாள் உடன் ஆகிய சக்கரத்து ஆகி நின்றான் அவன் ஆயிழை பாடே. |
66 | ஆய் இழையாள் ஒடும் ஆதிப் பரம் இடம் ஆயதொர் அண்டவை ஆறும் இரண்டு உள ஆய மனம் தொறும் அறுமுகம் அவை தனில் ஏய வார் குழலி இனிது நின்றாளே. |
67 | நின்றனள் நேர் இழையோடு உடன் நேர்பட இன்று என் அகம் படி ஏழும் உயிர்ப்பு எய்தும் துன்றிய ஓர் ஒன்பதின்மரும் சூழல் உள் ஒன்று உயர் ஓதி உணர்ந்து நின்றாளே. |
68 | உணர்ந்து எழு மந்திரம் ஓம் எனும் உள்ளே மணந்து எழும் ஆம் கதி ஆகியது ஆகும் குணர்ந்து எழு சூதனும் சூதியும் கூடிக் கணந்து எழும் காணும் அக் காமுகை ஆமே. |
69 | ஆம் அது அங்கியும் ஆதியும் ஈசனும் மா மது மண்டலம் மாருதம் ஆதியும் ஏமது சீவன் சிகை அங்கு இருண்டிடக் கோமலர் கோதையும் கோதண்டம் ஆகுமே. |
70 | ஆகிய கோதண்டத்து ஆகும் மனோன்மணி ஆகிய ஐம்பது உடனே அடங்கிடும் ஆகும் பரா பரையோடு அப்பரையவள் ஆகும் அவள் ஐங் கருமத்தள் தானே. |
71 | தான் இகழ் மோகினி சார்வான யோகினி போன மயம் உடையார் அடி போற்றுவர் ஆனவர் ஆவியின் ஆகிய வச்சி வந்து ஆனாம் பரசிவம் மேலது தானே. |
72 | தான் அந்தம் மேலே தரும் சிகை தன்னுடன் ஆனந்த மோகினி ஆம் பொன் திருவொடு மோனையில் வைத்து மொழி தரு கூறது ஆனவை ஓம் எனும் அவ் உயிர் மார்க்கமே. |
73 | மார்க்கங்கள் ஈன்ற மனோன் மணி மங்கலி யார்க்கும் அறிய அரியவள் ஆகும் வாக்கும் மனமும் மருவி ஒன்றாய் விட்ட நோக்கும் பெருமைக்கு நுண் அறிவு ஆமே. |
74 | நுண் அறிவு ஆகும் நுழை புலன் மாந்தர்க்குப் பின் அறிவு ஆகும் பிரான் அறி அத்தடம் செந் நெறி ஆகும் சிவ கதி சேர்வார்க்குத் தன் நெறி ஆவது சன்மார்க்கம் ஆமே. |
75 | சன்மார்க்கம் ஆகச் சமைதரு மார்க்கமும் துன்மார்க்கம் ஆனவை எல்லாம் துரந்திடும் நன்மார்க்கத் தேவரும் நல்நெறி ஆவதும் சன்மார்க்கத் தேவியும் சத்தி என்பாளே. |
76 | சத்தியும் நானும் சயம்புவும் அல்லது முத்தியை யாரும் முதல் அறிவார் இல்லை அத்தி மேல் வித்து இடில் அத்தி பழுத்தக்கால் மத்தில் ஏற வழி அதுவாமே. |
77 | அது இது என்ற அவமே கழியாதே மது விரி பூங் குழல் மங்கை நல்லாளைப் பதி மது மேவிப் பணிய வல்லார்க்கு விதி வழி தன்னையும் வென்றிடல் ஆமே. |
78 | வென்றிடல் ஆகும் விதி வழி தன்னையும் வென்றிடல் ஆகும் வினைப் பெரும் பாசத்தை வென்றிடல் ஆகும் விழை புலன் தன்னையும் வென்றிடு மங்கை தன் மெய் உணர்வோர்க்கே. |
79 | ஓர் ஐம் பதின்மருள் ஒன்றியே நின்றது பாரம் பரியத்து வந்த பரம் இது மாரம் குழலாளும் அப்பதி தானும் முன் சாரும் பதம் இது சத்தியம் ஆமே. |
80 | சத்தியி னோடு சயம்புவும் நேர் படில் வித்து அது இன்றியே எல்லாம் விளைந்தன அத்தகை ஆகிய ஐம்பத்தொருவரும் சித்தது மேவித் திருந்திடுவாரே. |
81 | திருந்து சிவனும் சிலைநுதலாளும் பொருந்திய வானவர் போற்றி செய்து ஏத்த அருந்திட அவ்விடம் ஆரமுதாக இருந்தனள் தான் அங்கு இளம் பிறை என்றே. |
82 | என்றும் எழுகின்ற வேரினை எய்தினார் அன்று அது ஆகுவர் தார் குழலாளொடு மன் தரு கங்கை மதியொடு மாதவர் துன்றிய தாரகை சோதி நின்றாளே. |
83 | நின்றனள் நேர் இழையா ளொடு நேர்பட ஒன்றிய உள் ஒளியாலே உணர்ந்தது சென்ற பிராணிகள் சிந்தையில் வேண்டிய துன்றிடு ஞானங்கள் தோன்றிடும் தானே. |
84 | தோன்றிடும் வேண்டு உரு ஆகிய தூய் நெறி ஈன்றிடும் ஆங்கு அவள் எய்திய பல்கலை மான் தரு கண்ணியும் மாரனும் வந்து எதிர் சான்று அது ஆகுவர் தாம் அவள் ஆயுமே. |
85 | ஆயும் அறிவும் கடந்து அணு வாரணி மாயம் அது ஆகி மதோ மதி ஆயிடும் சேய அரிவை சிவ ஆனந்த சுந்தரி நேயம் அதா நெறி ஆகி நின்றாளே. |
86 | நெறி அதுவாய் நின்ற நேர் இழை யாளைப் பிறிவது செய்யாது பிஞ்ஞக னோடும் குறியது கூடிக் குறிக் கொண்டு நோக்கும் அறிவொடும் ஆங்கே அடங்கிடல் ஆமே. |
87 | ஆம் அயன் மால் அரன் ஈசன் மால் ஆம் கதி ஓம் மயம் ஆகிய ஒன்பதும் ஒன்றிடத் தேம் மயம் ஆளும் தெனாது என என்றிடும், மா மயம் ஆனது வந்து எய்தலாமே. |
88 | வந்து அடி போற்றுவர் வானவர் தானவர் இந்து முதல் ஆக எண் திசையோர் களும் கொந்து அணியும் குழலாள் ஒடு கோனையும் வந்தனை செய்யும் வழி நவில் வீரே. |
89 | நவிற்று நல் மந்திரம் நல் மலர் தூபம் கவற்றிய கந்தம் கவர்ந்து எரிதீபம் பயிற்றும் உலகினில் பார்ப்பதி பூசை அவிக் கொண்ட சோதிக்கு ஓர் அர்ச்சனைதானே. |
90 | தாங்கி உலகில் தரித்த பராபரன் ஓங்கிய காலத்து ஒருவன் உலப்பு இலி பூங்கிளி தங்கும் புரிகுழலாள் அன்று பாங்குடன் ஏற்பப் பராசத்தி போற்றே. |
91 | பொன் கொடி மாதர் புனை கழல் ஏத்துவர் அற் கொடி மாது உமையார் அத் தலைமகள் நல் கொடி மாதை நயனங்கள் மூன்று உடை வில் கொடி மாதை விரும்பி விளங்கே. |
92 | விளங்கு ஒளி ஆய விரிசுடர் மாலை துளங்கு பரா சத்தி தூங்கு இருள் நீங்கக் களம் கொள் மணியுடன் காம வினோதம் உளம் கொள் இலம்பியம் ஒன்று தொடரே. |
93 | தொடங்கி உலகினில் சோதி மணாளன் அடங்கி இருப்பது என் அன்பின் பெருமை விடம் கொள் பெரும் சடை மேல் வரு கங்கை ஒடுங்கி உமை யொடும் ஓர் உரு ஆமே. |
94 | உருவம் பல உயிராய் வல்ல நந்தி தெருவம் புகுந்தமை தேர் உற நாடில் புரிவளைக் கைச்சி எம் பொன் அணி மாதை மருவி இறைவன் மகிழ்வன மாயமே. |
95 | மாயம் புணர்க்கும் வளர் சடையான் அடித் தாயம் புணர்க்கும் சல நதி அமலனைக் காயம் புணர்க்கும் கலவியுள் மா சத்தி ஆயம் புணர்க்கும் அவ் யோனியும் ஆமே. |
96 | உணர்ந்து ஒழிந்தேன் அவன் ஆம் எங்கள் ஈசனை புணர்ந்து ஒழிந்தேன் புவனா பதியாரை அணைந்து ஒழிந்தேன் எங்கள் ஆதிதன் பாதம் பிணைந்து ஒழிந்தேன் தன் அருள் பெற்றவாறே. |
97 | பெற்றான் பெருமை பெரிய மனோன்மணி நற்றாள் இறைவனே நன்பயனே என்பர் கற்றான் அறியும் கருத்து அறிவார் கட்குப் பொன்தான் உலகம் புகல் தனியாமே. |
98 | தனி நாயகன் தனோடு என் நெஞ்சம் நாடி இனியார் இருப்பிடம் ஏழ் உலகு என்பர் பனியான் மலர்ந்த பைம் போதுகை ஏந்தி கனியாய் நினைவது என் காரணம் அம்மையே. |
99 | அம்மனை அம்மை அரிவை மனோன்மணி செம்மனை செய்து திருமங்கையாய் நிற்கும் இம்மனை செய்த இந் நில மங்கையும் அம்மனை ஆகி அமர்ந்து நின்றாளே. |
100 | அம்மையும் அத்தனும் அன்பு உற்றது அல்லது அம்மையும் அத்தனும் ஆர் அறிவார் என்னை அம்மே யோடு அத்தனும் யானும் உடன் இருந்து அம்மை யொடு அத்தனை யான் புரிந்தேனே. |
9. ஏரொளிச் சக்கரம் |
1 | ஏர் ஒளி உள் எழு தாமரை நால் இதழ் ஏர் ஒளி விந்துவினால் எழு நாதம் ஆம் ஏர் ஒளி அக்கலை எங்கும் நிறைந்தபின் ஏர் ஒளிச் சக்கரம் அந் நடு வன்னியே. |
2 | வன்னி எழுத்து அவை மாபலம் உள்ளன வன்னி எழுத்து அவை வான் உற ஓங்கின வன்னி எழுத்து அவை மா பெரும் சக்கரம் வன்னி எழுத்து இடுவார் அது சொல்லுமே. |
3 | சொல்லிய விந்துவும் ஈர் ஆறு நாதம் ஆம் சொல்லிடும் அப்பதி அவ் எழுத்து ஆவன சொல் இடு நூறு ஒடு நால் பத்து நால் உரு சொல் இடும் சக்கரம் ஆய் வரும் மேல் அதே. |
4 | மேல் வரும் விந்துவும் அவ் எழுத்தாய் விடும் மேல் வரும் நாதமும் ஓங்கும் எழுத்து உடன் மேல் வரும் அப்பதி அவ் எழுத்தே வரின் மேல் வரும் சக்கரமாய் வரும் ஞாலமே. |
5 | ஞாலம் அது ஆக விரிந்தது சக்கரம் ஞாலம் அது ஆயிடும் விந்துவும் நாதமும் ஞாலம் அது ஆயிடும் அப்பதி யோசனை ஞாலம் அது ஆக விரிந்தது எழுத்தே. |
6 | விரிந்த எழுத்து அது விந்துவும் நாதமும் விரிந்த எழுத்து அது சக்கரம் ஆக விரிந்த எழுத்து அது மேல் வரும் பூமி விரிந்த எழுத்தினில் அப்புறம் அப்பே. |
7 | அப்பு அது ஆக விரிந்தது சக்கரம் அப்பினில் அப்புறம் அவ் அனல் ஆயிடும் அப்பினில் அப்புறம் மாருதமாய் எழ அப்பினில் அப்புறம் ஆகாசம் ஆமே. |
8 | ஆகாச அக்கரம் ஆவது சொல்லிடில் ஆகாச அக்கரத்து உள்ளே எழுத்து அவை ஆகாச அவ் எழுத்து ஆகிச் சிவானந்தம் ஆகாச அக்கரம் ஆவது அறிமினே. |
9 | அறிந்திடும் சக்கரம் ஐ ஐந்து விந்து அறிந்திடும் சக்கரம் நாத முதலா அறிந்திடும் அவ் எழுத்து அப்பதி யோர்க்கும் அறிந்திடும் அப் பகலோன் இல்லை ஆமே. |
10 | அம் முதல் ஆறும் அவ் ஆதி எழுத்து ஆகும் அம் முதல் ஆறும் அவ் அம்மை எழுத்து ஆகும் இம் முதல் நாலும் இருந்திடும் வன்னியே இம் முதல் ஆகும் எழுத்து அவை எல்லாம். |
11 | எழுத்து அவை நூறொடு நாற்பத்து நாலும் எழுத்து அவை ஆறு அது அந் நடு வன்னி எழுத்து அவை அந் நடு அச் சுடர் ஆகி எழுத்து அவைதான் முதல் அந்தமும் ஆமே. |
12 | அந்தமும் ஈறு முதலா நவைஅற அந்தமும் அப் பதினெட்டுடன் ஆதலால் அந்தமும் அப் பதின்மூன்றில் அமர்ந்தபின் அந்தமும் இந்துகை ஆருடம் ஆனதே. |
13 | ஆவினம் ஆனவை முந்நூற்று அறுபது ஆவினம் அப் பதினைந்து இனம் ஆய் உறு ஆவினம் அப் பதினெட்டுடன் ஆய் உறு அவினம் அக் கதிரோன் வர வந்தே. |
14 | வந்திடும் ஆகாசம் ஆறு அது நாழிகை வந்திடும் அக்கரம் முப்பது ராசியும் வந்திடும் நாள் அது முந்நூற்று அறுபதும் வந்திடும் ஆண்டு வகுத்து அவ்வியே. |
15 | அவ் வினம் மூன்றும் அவ் ஆடு அது வாய் வரும் எவ்வினம் மூன்றும் கிளர் தரு வேர் அதாம் சவ் வினம் மூன்றும் தழைத்திடும் தண்டு அதாம் இவ் வினம் மூன்றும் இராசிகள் எல்லாம். |
16 | இராசியுள் சக்கரம் எங்கும் நிறைந்த பின் இராசியுள் சக்கரம் என்று அறி விந்து ஆம் இராசியுள் சக்கரம் நாதமும் ஒத்தபின் இராசியுள் சக்கரம் நின்றிடும் ஆறே. |
17 | நின்றிடு விந்து என்று உள்ள எழுத்து எல்லாம் நின்றிடு நாதமும் ஓங்கும் எழுத்துடன் நின்றிடும் அப்பதி அவ் எழுத்தே வரில் நின்றிடும் அப்புறம் தாரகை ஆனதே. |
18 | தாரகை ஆகச் சமைந்தது சக்கரம் தாரகை மேல் ஓர் தழைத்தது பேர் ஒளி தாரகை சந்திரன் நல் பகலோன் வரத் தாரகை தாரகை தாரகை கண்டதே. |
19 | கண்டிடும் சக்கரம் விந்து வளர்வது ஆங்கு கண்டிடும் நாதமும் தன் மேல் எழுந்திடக் கண்டிடும் வன்னிக் கொழுந்து அன ஒத்தபின் கண்டிடும் அப்புறம் கார் ஒளி ஆனதே. |
20 | கார் ஒளி அண்டம் பொதிந்து உலகு எங்கும் பார் ஒளி நீர் ஒளி சார் ஒளி கால் ஒளி வான் ஒளி ஒக்க வளர்ந்து கிடந்த பின் நேர் ஒளி ஒன்றாய் நிறைந்து அங்கு நின்றதே. |
21 | நின்றது அண்டமும் நீளும் புவி எலாம் நின்ற இவ் அண்டம் நிலைபெறக் கண்டிட நின்ற இவ் அண்டமும் மூல மலம் ஒக்கும் நின்ற இவ் அண்டம் பலமது விந்துவே. |
22 | விந்துவும் நாதமும் ஒக்க விழுந்திடில் விந்துவும் நாதமும் ஒக்க விரை அதாம் விந்தில் குறைந்திடு நாதம் எழுந்திடில் விந்துவை எண் மடி கொண்டது வீசமே. |
23 | வீசம் இரண்டு உள நாதத்து எழுவன வீசமும் ஒன்று விரைந்திடும் மேல் உற வீசமும் நாதமும் எழுந்து உடன் ஒத்தபின் வீசமும் விந்து விரிந்தது காணுமே. |
24 | விரிந்தது விந்துவும் கெட்டது வீசம் விரிந்தது விந்துவும் நாதத்து அளவினில் விரிந்தது உள் கட்டம் எட்டு எட்டும் ஆகில் விரிந்தது விந்து விரையது ஆமே. |
25 | விரையது விந்து விளைந்தன எல்லாம் விரையது விந்து விளைந்த உயிரும் விரையது விந்து விளைந்த இஞ் ஞாலம் விரையது விந்து விளைந்தவன் தாளே. |
26 | விளைந்த எழுத்து அது விந்துவும் நாதமும் விளைந்த எழுத்து அது சக்கரம் ஆக விளைந்த எழுத்து அவை மெய்யின் உள் நிற்கும் விளைந்த எழுத்து அவை மந்திரம் ஆமே. |
27 | மந்திரம் சக்கரம் ஆனவை சொல்லிடில் தந்திரத்து உள் எழுத்து ஒன்று எரி வட்டம் ஆம் கந்தரத்து உள்ளும் இரேகையில் ஒன்று இல்லை பந்தம் அது ஆகும் பிரணவம் உன்னிடே. |
28 | உன்னிட்ட வட்டத்தில் ஒத்துஎழு மந்திரம் பின்னிட்ட ரேகை பிழைப்பது தான் இல்லை தன்னிட்டு எழுந்த தகைப்பு அறப் பின் நிற்கப் பன்னிட்ட மந்திரம் பார்க்கலும் ஆமே. |
29 | பார்க்கலும் ஆகும் பகை அறு சக்கரம் காக்கலும் ஆகும் கருத்தில் தடம் எங்கும் நோக்கலும் ஆகும் நுணுக்கு அற்றநுண் பொருள் ஆக்கலும் ஆகும் அறிந்து கொள்வார்க்கே. |
30 | அறிந்திடும் சக்கரம் ஆதி எழுத்து விரிந்திடும் சக்கரம் மேல் எழுத்து அம்மை பரிந்திடும் சக்கரம் பாரங்கி நாலும் குவிந்திடும் சக்கரம் கூறலும் ஆமே. |
31 | கூறிய சக்கரத்து உள் எழு மந்திரம் மாறு இயல்பு ஆக அமைந்து விரிந்திடும் தேறிய அஞ்சுடன் சேர்ந்து எழு மாரணம் மாறு இயல்பாக மதித்துக் கொள்வார்க்கே. |
32 | மதித்திடும் அம்மையும் மா மாதும் ஆகும் மதித்திடும் அம்மையும் அம் கனல் ஒக்கும் மதித்து அங்கு எழுந்தவை காரணம் ஆகில் கொதித்து அங்கு எழுந்தவை கூட கிலாவே. |
33 | கூடிய தம்பனம் மாரணம் வசியம் ஆடு இயல்பாக அமைந்து செறிந்திடும் பாடி உள் ஆகப் பகைவரும் வந்து உறார் தேடி உள் ஆகத் தெளிந்து கொள்வார்க்கே. |
34 | தெளிந்திடும் சக்கர மூலத்தின் உள்ளே அளிந்த அகாரத்தை அந் நடு ஆக்கிக் குளிர்ந்த வரனைக் கூடி உள் வைத்து வளிந்து அவை அங்கு எழு நாடிய காலே. |
35 | கால் அரை முக்கால் முழுது எனும் மந்திரம் ஆலித்து எழுந்து அமைந்து ஊறி எழுந்து அதாய் பாலித்து எழுந்து பகை அற நின்றபின் மால் உற்ற மந்திரம் மாறிக் கொள்வார்க்கே. |
36 | கொண்ட இம் மந்திரம் கூத்தன் எழுத்து அதாய்ப் பண்டை உள் நாவில் பகை அற விண்ட பின் மன்றுள் நிறைந்த மணி விளக்கு ஆயிடும் இன்றும் இதயத்து எழுந்து நம எனே. |
10. வயிரவச் சக்கரம் |
1 | அறிந்த பிரதமை யோடு ஆறும் அறிஞ்சு அறிந்த அச்சத்தம் இம் மேல் இவை குற்றம் அறிந்தவை ஒன்று விட்டு ஒன்று பத்து ஆக அறிந்து வலம் அது ஆக நடவே. |
2 | நடந்து வயிரவன் சூல கபாலி கடந்த பகைவனைக் கண் அது போக்கித் தொடர்ந்த உயிர் அது உண்ணும் பொழுது படர்ந்த உடல் கொடு பந்து ஆடல் ஆமே. |
3 | ஆமே அப் பூண்ட அருள் ஆதி வயிரவன் ஆமே கபாலமும் சூலமும் கைக் கொண்டு அங்கு ஆமே தமருக பாசமும் கை அது ஆமே சிரத்தொடு வாள் அது கையே. |
4 | கை அவை ஆறும் கருத்து உற நோக்கிடும் மெய் அது செம்மை விளங்கு வயிரவன் துய்யர் உளத்தில் துளங்கு மெய் உற்றது ஆய்ப் பொய் வகை விட்டு நீ பூசனை செய்யே. |
5 | பூசனை செய்யப் பொருந்தி ஓர் ஆயிரம் பூசனை செய்ய மது உடன் ஆடும் ஆல் பூசனை சாந்து சவாது புழுகு நெய் பூசனை செய்து நீர் பூசலை வேண்டுமே. |
6 | வேண்டிய வாறு கலகமும் ஆயிடும் வேண்டிய ஆறின் நுண் மெய்யது பெற்றபின் வேண்டியவாறு வரும் வழி நீ நட வேண்டிய வாறு அது ஆகும் கருத்தே. |
11. சாம்பவி மண்டலச் சக்கரம் |
1 | சாம்பவி மண்டலச் சக்கரம் சொல்லிடில் ஆம்பதம் எட்டாக இட்டிடின் மேல் அதாம் காண்பதம் தத்துவம் நாலுள் நயனமும் நாம் பதம் கண்டபின் நாடறிந்தோமே. |
2 | நாடு அறி மண்டலம் நல்ல இக் குண்டத்துக் கேடு அற வீதியும் கொடர்ந்து உள் இரண்டழி பாடு அறி பத்துடன் ஆறு நடு வீதி ஏடு அற நாலு ஐந்து இட வகை ஆமே. |
3 | நாலு ஐந்து இடவகை உள்ளது ஓர் மண்டலம் நாலு நல் வீதியுள் நல்ல இலிங்கம் ஆய் நாலு நல் கோணமும் நல் நால் இலிங்கம் ஆய் நாலு நல் பூ நடு நண்ணல் அவ்வாறே. |
4 | ஆறு இருபத்து நால் அஞ்சு எழுத்து அஞ்சையும் வேறு உரு ஆக விளைந்து கிடந்தது தேறி நிருமல சிவாய நம என்று கூறு மின் கூறில் குறைகளும் இல்லையே. |
5 | குறைவதும் இல்லை குரை கழல் கூடும் அறைவதும் ஆரணம் அவ் எழுத்து ஆகித் திறம் அது ஆகத் தெளிய வல்லார்க்கு இறவு இல்லை என்று என்று இயம்பினர் காணே. |
6 | காணும் பொருளும் கருதிய தெய்வமும் பேணும் பதியும் பெருகிய தீர்த்தமும் ஊணும் உணர்வும் உறக்கமும் தான் ஆகக் காணும் கனகமும் காரிகை ஆமே. |
7 | ஆமே எழுத்து அஞ்சு ஆம் வழியே ஆகப் போமே அது தானும் போம் வழியே போனால் நாமே நினைத்தன செய்யலும் ஆகும் பார் மேல் ஒருவர் பகை இல்லை தானே. |
8 | பகை இல்லை என்றும் பணிந்தவர் தம்பால் நகை இல்லை நாள் நாளும் நன்மைகள் ஆகும் வினை இல்லை என்றும் விருத்தமும் இல்லை தகை இல்லை தானும் சலம் அது ஆமே. |
9 | ஆரும் செய்யலாம் அஞ்சு எழுத்தாலே யாரும் அறியாத ஆனந்த ரூபம் ஆம் பாரும் விசும்பும் பகலும் அதி அதி ஊனும் உயிரும் உணர்வு அது ஆமே. |
12. புவனாபதி சக்கரம் |
1 | ககர் ஆதி ஓர் ஐந்தும் காணிய பொன்மை அகர் ஆதி ஓர் அரத்தமே போலும் சகர் ஆதி ஓர் நான்கும் தான் சுத்த வெண்மை ககர் ஆதி மூவித்தை காமிய முத்தியே. |
2 | ஓரில் இதுவே உரையும் இத் தெய்வத்தைத் தேரில் பிறிது இல்லை யான் ஒன்று செப்பக்கேள் வாரில் திரிகோணம் மனம் இன்ப முத்தியும் தேரில் அறியும் சிவ காயம் தானே. |
3 | ஏக பராசத்தி ஈசற்கு ஆம் அங்கமே ஆகம் பரா வித்தை ஆம் முத்தி சித்தியே ஏகம் பரா சத்தி ஆகச் சிவ குரு யோகம் பரா சத்தி உண்மை எட்டு ஆமே. |
4 | எட்டு ஆகிய சத்தி எட்டு ஆகும் யோகத்துக் கட்டு ஆகும் நாதாந்தத்து எட்டும் கலப்பித்த தொட்டாத விந்துவும் தான் அற்று ஒழிந்தது கிட்டாது ஒழிந்தது கீழ் ஆன மூடர்க்கே. |
5 | ஏதும் பலம் ஆம் இயந்திராசன் அடி ஓதிக் குருவின் உபதேசம் கொண்டு நீ தங்கும் அங்க நியாசம்தனைப் பண்ணிச் சாதம் கெடச் செம்பில் சட்கோணம் தான் இடே. |
6 | சட் கோணம் தன்னில் ஸ்ரீம் ஹிரீம் தான் இட்டு அக் கோணம் மாறின் தலையில் ரீங்காரம் இட்டு எக்கோணமும் சூழ எழில் வட்டம் இட்டுப் பின் மிக்கு ஈர் எட்டு அக்கரமம் முதன் மேல் இடே. |
7 | இட்ட இதழ்கள் இடை அந்தரத் திலே அட்ட ஹவ் விட்டத்தின் மேலே உவ் இட்டுக் கிட்ட இதழ்களின் மேலே கிரோம் சிரோம் இட்டு வாமத்து ஆங்கு கிரோம் என்று மேவிடே. |
8 | மேவிய சக்கரம் மீது வலத்திலே கோவை அடையவே குரோம் சிரோம் என்று இட்டுத் தாவுஇல் ரீங்காரத்தால் சக்கரம் சூழ்ந்து பூவைப் புவனா பதியைப் பின் பூசியே. |
9 | பூசிக்கும் போது புவனா பதி தன்னை ஆசற்று அகத்தினில் ஆவா கனம் பண்ணிப் பேசிய பிராணப் பிஅதிட்டை அது செய்து தேசு உற்றிடவே தியானம் அது செய்யே. |
10 | செய்ய திருமேனி செம்பட்டு உடைத் தானும் கையில் படை அங்குச பாசத்தோடு அபய மெய்யில் அணிகலன் இரத்தின மா மேனி துய்ய முடியும் அவ யவத்தில் தோற்றமே. |
11 | தோல் போர்வை நீக்கித் துதித்து அடைவில் பூசித்துப் பால் போனகம் மந்திரத்தால் பயின்று ஏத்தி நால் பால நாரதா யா சுவாகா என்று சீர்ப் பாகச் சேடத்தை மாற்றிப் பின் சேவியே. |
12 | சேவிப்பதன் முன்னே தேவியையும் உத் வாகனத்தால் பாவித்து இதய கமலம் பதிவித்து அங்கு யாவருக்கும் எட்டா இயந்திர ராசனை நீ வைத்துச் சேமி நினைந்தது தருமே. |
13. நவாக்கரி சக்கரம் |
1 | நவாக்கரி சக்கரம் நான் செய்யின் நவாக்கரி ஒன்று நவாக் கரி ஆக நவாக்கரி எண்பத்து ஒரு வகை ஆக நவாக்கரி அக்கிலி சௌ முதல் ஈறே. |
2 | சௌ முதல் அவ்வொடு ஹௌவுடனாம் கிரீம் கௌவுள் உமையுளும் கலந்து இரீம் சிரீம் என்று ஒவ்வில் எழும் கிலீ மந்திர பாதம் ஆச் செவ்வுள் எழுந்து சிவாய நம என்னே. |
3 | நவாக்கரி ஆவது நான் அறி வித்தை நவாக்கரி உள் எழும் நன்மைகள் எல்லாம் நவாக்கரி மந்திரம் நாவுளே ஓத நவாக்கரி சத்தி நலம் தரும் தானே. |
4 | நலம்தரு ஞானமும் கல்வியும் எல்லாம் உரம்தரு வல் வினை உம்மை விட்டு ஓடிச் சிரம்தரு தீவினை செய்வது அகற்றி வரம்தரு சோதியும் வாய்த்திடும் காணே. |
5 | கண்டிடும் சக்கரம் வெள்ளி பொன் செம்பு இடை கொண்டிடும் உள்ளே குறித்த வினைகளை வென்றிடும் மண்டலம் வெற்றி தருவிக்கும் நின்றிடும் சக்கரம் நினைக்கும் அளவே. |
6 | நினைத்திடும் மச்சிரீ மக்கிலீம் ஈறா நினைத்திடும் சக்கரம் ஆதியும் ஈறு நினைத்திடு நெல்லொடு புல்லினை உள்ளே நினைத்திடும் அருச்சனை நேர் தருவாளே. |
7 | நேர் தரும் அத்திரு நாயகி ஆனவள் யாது ஒரு வண்ணம் அறிந்திடும் பொன் பூவை கார் தரு வண்ணம் கருதின கைவரும் நார் தரு வண்ணம் நடந்திடு நீயே. |
8 | நடந்திடும் பாரினில் நன்மைகள் எல்லாம் கடந்திடும் காலனும் எண்ணிய நாளும் படர்ந்திடு நாமமும் பாய் கதிர் போல அடைந்திடு வண்ணம் அடைந்திடு நீயே. |
9 | அடைந்திடும் பொன் வெள்ளி கல்லுடன் எல்லாம் அடைந்திடும் ஆதி அருளும் திருவும் அடைந்திடும் அண்டத்து அமரர்கள் வாழ்வும் அடைந்திடும் வண்ணம் அறிந்திடு நீயே. |
10 | அறிந்திடுவார்கள் அமரர் களாகத் தெரிந்திடு வானோர் தேவர்கள் தேவன் பரிந்திடும் வானவன் பாய்புனல் சூடி முரிந்திடு வானை முயன்றிடு நீரே. |
11 | நீர் பணி சக்கரம் நேர்தரு வண்ணங்கள் பார் அணியும் ஹிரீ முன்ஷ்றீம் ஈறாம் தார் அணியும் புகழ்த் தையல் நல்லாள் தனைக் கார் அணியும் பொழில் கண்டு கொள்ளீரே. |
12 | கண்டும் கொள்ளும் தனி நாயகி தன்னையும் மொண்டு கொளும் முக வசியம் அது ஆயிடும் பண்டு கொளும் மரம் ஆய பரம் சுடர் நின்று கொளும் நிலை பேறு உடையாளே. |
13 | பேறு உடையாள் தன் பெருமையை எண்ணிடில் நாடு உடையார்களும் நம்வசம் ஆகுவர் மாறு உடையார்களும் வாழ்வது தான் இலை கூறு உடையாளையும் கூறுமின் நீரே. |
14 | கூறுமின் எட்டுத் திசைக்கும் தலைவியை ஆறுமின் அண்டத்து அமரர்கள் வாழ்வு என மாறுமின் வையம் வரும் வழி தன்னையும் தேறுமின் நாயகி சேவடி சேர்ந்தே. |
15 | சேவடி சேரச் செறிய இருந்தவர் நாவடி உள்ளே நவின்று நின்று ஏத்துவர் பூ அடி இட்டுப் பொலிய இருந்தவர் மா அடி காணும் வகை அறிவாரே. |
16 | ஐம் முதல் ஆக வளர்ந்து எழு சக்கரம் மைம் முதல் ஆக அமர்ந்து இரீம் ஈறு ஆகும் அம் முதல் ஆகி அவர்க்கு உடையாள் தனை மைம் முதல் ஆக வழுத்திடு நீயே. |
17 | வழுத்திடும் நாவுக்கு அரசி இவள் தன்னைப் பகுத்திடும் வேத மெய் ஆகமம் எல்லாம் தொகுத்து ஒரு நாவிடை சொல்ல வல்லாளை முகத்துளும் முன் எழக் கண்டு கொளீரே. |
18 | கண்ட இச் சக்கரம் நாவில் எழுதிடில் கொண்ட இம் மந்திரம் கூத்தன் குறி அதாம் மன்றினுள் வித்தையும் மானுடர் கையது ஆய் வென்றிடும் வையகம் மெல்லியல் மேவியே. |
19 | மெல்லியல் ஆகிய மெய்ப் பொருளாள் தனைச் சொல் இயலாலே தொடர்ந்து அங்கு இருந்திடும் பல் இயல் ஆகப் பரந்து எழு நாள் பல நல் இயல்பாலே நடந்திடும் தானே. |
20 | நடந்திடும் நாவின் உள் நன்மைகள் எல்லாம் தொடர்ந்திடும் சொல்லொடு சொல் பொருள் தானும் கடந்திடும் கல்விக்கு அரசி இவள் ஆகப் படர்ந்திடும் பாரில் பகை இல்லை தானே. |
21 | பகை இல்லை கௌ முதல் ஐ அது ஈறா நகை இல்லை சக்கரம் நன்று அறிவார்க்கு மிகை இல்லை சொல்லிய பல் உரு எல்லாம் வகை இல்லை ஆக வணங்கிடும் தானே. |
22 | வணங்கிடும் தத்துவ நாயகி தன்னை நலங்கிடு நல் உயிர் ஆனவை எல்லாம் கலங்கிடும் காம வெகுளி மயக்கம் துலங்கிடும் சொல்லிய சூழ் வினைதானே. |
23 | தானே கழறித் தணியவும் வல்லன் ஆய்த் தானே நினைத்து அவை சொல்லவும் வல்லன் ஆய்த் தானே தனி நடம் கண்டவள் தன்னையும் தானே வணங்கித் தலைவனும் ஆமே. |
24 | ஆமே அனைத்து உயிர் ஆகிய அம்மையும் தாமே சகலமும் ஈன்ற அத் தையலும் ஆமே அவள் அடி போற்றி வணங்கிடில் போமே வினைகளும் புண்ணியன் ஆகுமே. |
25 | புண்ணியன் ஆகிப் பொருந்தி உலகு எங்கும் கண்ணியன் ஆகிக் கலந்து அங்கு இருந்திடும் தண்ணியன் ஆகித் தரணி முழுதுக்கும் அண்ணியன் ஆகி அமர்ந்து இருந்தானே. |
26 | தான் அது கம் இறீம்க் கௌ அது ஈறு ஆம் நானது சக்கரம் நன்று அறிவார்க்கு எலாம் கானது கன்னி கலந்த பராசத்தி கேள் அது வையம் கிளர் ஒளி ஆனதே. |
27 | ஒளிக்கும் பராசத்தி உள்ளே அமரில் களிக்கும் இச்சிந்தையில் காரணம் காட்டித் தெளிக்கும் மழையுடன் செல்வம் உண்டாக்கும் அளிக்கும் இவளை அறிந்து கொள்வார்க்கே. |
28 | அறிந்திடும் சக்கரம் அருச்சனை யோடே எறிந்திடும் வையத்து இடர் அவை காணின் மறிந்திடும் மன்னனும் வந்தனை செய்யும் பொறிந்திடும் சிந்தை புகை இல்லை தானே. |
29 | புகை இல்லை சொல்லிய பொன் ஒளி உண்டாம் குகை இல்லை கொல்வது இலாமை யினாலே வகை இல்லை வாழ்கின்ற மன் உயிர்க்கு எல்லாம் சிகை இல்லை சக்கரம் சேர்ந்தவர் தாமே. |
30 | சேர்ந்தவர் என்றும் திசை ஒளி ஆனவர் காய்ந்து எழுமேல் வினை காண கிலாதவர் பாய்ந்து எழும் உள் ஒளி பாரில் பரந்தது மாய்ந்தது கார் இருள் மாறு ஒளி தானே. |
31 | ஒளி அது ஹௌ முன் கிரீம் அது ஈறு ஆம் களி அது சக்கரம் கண்டு அறிவார்க்குத் தெளிவது ஞானமும் சிந்தையும் தேறப் பணிவது பஞ்சாக் கரம் அது ஆமே. |
32 | ஆமே சதாசிவ நாயகி ஆனவள் ஆமே அதோ முகத்து உள் அறிவு ஆனவள் ஆமே சுவை ஒளி ஊறு ஓசை கண்டவள் ஆமே அனைத்து உயிர் தன் உளும் ஆமே. |
33 | தன் உளும் ஆகித் தரணி முழுதும் கொண்டு என் உளும் ஆகி இடம் பெற நின்றவள் மண் உளும் நீர் அனல் கால் உளும் வான் உளும் கண் உளும் மெய் உளும் காணலும் ஆமே. |
34 | காணலும் ஆகும் கலந்து உயிர் செய்வன காணலும் ஆகும் கருத்து உள் இருந்திடில் காணலும் ஆகும் கலந்து வழி செயக் காணலும் ஆகும் கருத்து உற நில்லே. |
35 | நின்றிடும் ஏழு புவனமும் ஒன்றாகக் கண்டிடும் உள்ளம் கலந்து எங்கும் தான் ஆகத் கொண்டிடும் வையம் குணம் பல தன்னையும் விண்டிடும் வல்வினை மெய்ப் பொருள் ஆகுமே. |
36 | மெய்ப் பொருள் ஓள முதல் ஹௌ அது ஈறு ஆக் கைப் பொருள் ஆகக் கலந்து எழு சக்கரம் தற் பொருள் ஆகச் சமைந்த அமுதேஸ்வரி நல் பொருள் ஆக நடு இருந்தாளே. |
37 | தாள் அதன் உள்ளே சமைந்த அமுதேஸ்வரி கால் அது கொண்டு கலந்து உற வீசிடின் நாள் அது நாளும் புதுமைகள் கண்ட பின் கேள் அது காயமும் கேடு இல்லை காணுமே. |
38 | கேடு இல்லை காணும் கிளர் ஒளி கண்டபின் நாடு இல்லை காணும் நாள் முதல் அற்றபின் மாடு இல்லை காணும் வரும்வழி கண்டபின் காடு இல்லை காணும் கருத்துள் இடத்துக்கே. |
39 | உற்ற இடம் எல்லாம் உலப்பு இல் பாழ் ஆக்கிக் கற்ற இடம் எல்லாம் கடுவெளி ஆனது மற்ற இடம் இல்லை வழி இல்லை தான் இல்லை சற்று இடம் இல்லை சலிப்பு அற நின்றிடே. |
40 | நின்றிடும் ஏழ்கடல் ஏழ்புவி எல்லாம் நின்றிடும் உள்ளம் நினைத்து அவை தான் ஒக்கும் நின்றிடும் சத்தி நிலைபெறக் கண்டிட நின்றிடும் மேலை விளக்கு ஒளி தானே. |
41 | விளக்கு ஒளி ஸௌ முதல் லௌ அது ஈறா விளக்கு ஒளி சக்கரம் மெய்ப் பொருள் ஆகும் விளக்கு ஒளி ஆகிய மின் கொடியாளை விளக்கு ஒளி ஆக விளங்கிடும் நீயே. |
42 | விளங்கிடும் மேல் வரும் மெய்ப் பொருள் சொல்லின் விளங்கிடும் மெல்லியல் ஆனது ஆகும் விளங்கிடும் மெய்ந் நின்ற ஞானப் பொருளை விளங்கிடு வார்கள் விளங்கினர் தானே. |
43 | தானே வெளி என எங்கும் நிறைந்தவள் தானே பரம வெளி அது ஆனவள் தானே சகலமும் ஆக்கி அழித்தவள் தானே அனைத்து உள அண்ட சகலமே. |
44 | அண்டத்தின் உள்ளே அளப்பு அரிது ஆனவள் பிண்டத்தின் உள்ளே பெருவெளி கண்டவள் குண்டத்தின் உள்ளே குணம் பல காணினும் கண்டத்தில் நின்ற கலப்பு அறியார் களே. |
45 | கலப்பு அறியார் கடல் சூழ் உலகு எல்லாம் உலப்பு அறியார் உடலோடு உயிர்தன்னைச் சிலப்பு அறியார் சில தேவரை நாடித் தலைப் பறி ஆகச் சமைந்தவர் தானே. |
46 | தானே எழுந்த அச் சக்கரம் சொல்லிடின் மானே மதிவரை பத்து இட்டு வைத்தபின் தேனே இரேகை திகைப்பு அற ஒன்பதில் தானே கலந்த வரை எண்பத்து ஒன்றுமே. |
47 | ஒன்றிய சக்கரம் ஓதிடும் வேளையில் வென்றி கொள் மேனி மதி வட்டம் பொன்மை ஆம் கன்றிய ரேகை கலந்திடும் செம்மையில் என்று இயல் அம்மை எழுத்து அவை பச்சையே. |
48 | ஏய்ந்த மரவுரி தன்னில் எழுதிய வாய்ந்த இப் பெண் எண்பத்து ஒன்றில் நிரைத்தபின் காய்ந்த அவி நெய்யுள் கலந்து உடன் ஓமமும் ஆம்தலத்து ஆம் உயிர் ஆகுதி பண்ணுமே. |
49 | பண்ணிய பொன்னைப் பரப்பு அற நீ பிடி எண்ணிய நாட்களில் இன்பமும் எய்திடும் நண்ணிய நாமமும் நான்முகன் ஒத்தபின் துண் என நேய நல் சேர்க்கலும் ஆமே. |
50 | ஆகின்ற சந்தனம் குங்குமம் கத்தூரி போகின்ற சாந்து சவாது புழுகு நெய் ஆகின்ற கற்பூரம் ஆ கோசன நீரும் சேர்கின்ற ஒன்பதும் சேர நீ வைத்திடே. |
51 | வைத்திடும் பொன்னுடன் மாதவம் நோக்கிடில் கைச் சிறு கொங்கை கலந்து எழு கன்னியைத் தச்சிது ஆகச் சமைந்த இம் மந்திரம் அர்ச்சனை ஆயிரம் ஆயிரம் சிந்தியே. |
52 | சிந்தையின் உள்ளே திகழ் தரு சோதியாய் எந்தை கரங்கள் இருமூன்றும் உள்ளது பந்தம் ஆம் சூலம் படை பாசம் வில் அம்பு முந்தை கிலீம் எழ முன் இருந்தாளே. |
53 | இருந்தனர் சத்திகள் அறுபத்து நால்வர் இருந்தனர் கன்னிகள் எண் வகை எண்மர் இருந்தனர் சூழ எதிர் சக்கரத்தே இருந்த கரம் இரு வில் அம்பு கொண்டே. |
54 | கொண்ட கனகம் குழை முடி ஆடை ஆய்க் கண்ட இம் முத்தம் கனல் திரு மேனி ஆய்ப் பண்டு அமர் சோதிப் படர் இதழ் ஆனவள் உண்டு அங்கு ஒருத்தி உணர வல்லார்க்கே. |
55 | உணர்ந்து இருந்து உள்ளே ஒருத்தியை நோக்கில் கலந்து இருந்து எங்கும் கருணை பொழியும் மணந்து எழும் ஓசை ஒளிஅது காணும் தணந்து எழு சக்கரம் தான் தருவாளே. |
56 | தருவழி ஆகிய தத்துவ ஞானம் குருவழி ஆகும் குணங்கள் உள் நின்று கருவழி ஆகும் கணக்கை அறுத்துப் பெருவழி ஆக்கும் பேர் ஒளி தானே. |
57 | பேர் ஒளி ஆய பெரிய பெரும் சுடர் சீர் ஒளி ஆகித் திகழ் தரு நாயகி கார் ஒளி ஆகிய கன்னிகை பொன் நிறம் பார் ஒளி ஆகிப் பரந்து நின்றாளே. |
58 | பரந்த கரம் இரு பங்கயம் ஏந்திக் குவிந்த கரம் இரு கொய் தளிர்ப் பாணி பரிந்து அருள் கொங்கைகள் முத்து ஆர் பவளம் இருந்த நல் ஆடை மணி பொதிந்து அன்றே. |
59 | மணி முடி பாதம் சிலம்பு அணி மங்கை அணிபவள் அன்றி அருள் இல்லை ஆகும் தணிபவர் நெஞ்சின் உள் தன் அருள் ஆகிப் பணிபவர்க்கு அன்றோ பரகதி ஆமே. |
60 | பரந்து இருந்து உள்ளே அறுபது சத்தி கரந்தன கன்னிகள் அப்படி சூழ மலர்ந்து இருகையின் மலர் அவை ஏந்தச் சிறந்தவர் ஏத்தும் சிறீம் தனம் ஆமே. |
61 | தனம் அது ஆகிய தையலை நோக்கி மனம் அது ஓடி மரிக்கில் ஓர் ஆண்டில் கனம் அவை அற்றுக் கருதிய நெஞ்சம் தினகரன் ஆரிட செய்தி அது ஆமே. |
62 | ஆகின்ற மூலத்து எழுந்த முழுமலர் போகின்ற பேர் ஒளி ஆய மலர் அதாய்ப் போகின்ற பூரணம் ஆக நிறைந்த பின் சேர்கின்ற செந் அழல் மண்டலம் ஆனதே. |
63 | ஆகின்ற மண்டலத்து உள்ளே அமர்ந்தவள் ஆகின்ற ஐம்பத்து அறுவகை ஆனவள் ஆகின்ற ஐம்பத்து அறு சத்தி நேர்தரு ஆகின்ற ஐம்பத்து அறுவகை சூழவே. |
64 | சூழ்ந்து எழு சோதி சுடர் முடி பாதம் ஆய் ஆங்கு அணி முத்தம் அழகிய மேனியும் தாங்கிய கை அவை தார் கிளி ஞானம் ஆய் ஏந்து கரங்கள் எடுத்து அமர் பாசமே. |
65 | பாசம் அது ஆகிய வேரை அறுத்து இட்டு நேசம் அது ஆக நினைத்து இரும் உம்ளே நாசம் அது எல்லாம் நடந்திடும் ஐ ஆண்டில் காசினி மேல் அமர் கண் நுதல் ஆகுமே. |
66 | கண் உடை நாயகி தன் அருள் ஆம் வழி பண் உறு நாதம் பகை அற நின்றிடில் விண் அமர் சோதி விளங்க ஹிரீங்கார மண் உடைய நாயகி மண்டலம் ஆகுமே. |
67 | மண்டலத்து உள்ளே மலர்ந்து எழு தீபத்தைக் கண்டு அகத்து உள்ளே கருதி இருந்திடும் விண்டு அகத்து உள்ளே விளங்கி வருதலால் தண்டு அகத்து உள்ளவை தாங்கலும் ஆமே. |
68 | தாங்கிய நாபித் தட மலர் மண்டலத்து ஓங்கி எழுங் கலைக்குள் உள் உணர்வு ஆனவள் ஏங்க வரும் பிறப்பு எண்ணி உறுத்திட வாங்கிய நாதம் வலியுடன் ஆகுமே. |
69 | நாவுக்கு நாயகி நல் மணிய பூண் ஆரம் பூவுக்கு நாயகி பொன் முடி ஆடை ஆம் பாவுக்கு நாயகி பால் ஒத்த வண்ணத்தள் ஆவுக்கு நாயகி அங்கு அமர்ந்தாளே. |
70 | அன்று இரு கையில் அளந்த பொருள் முறை இன்று இரு கையில் எடுத்த வெண் குண்டிகை மன்று அது காணும் வழி அது ஆகவே கண்டு அங்கு இருந்தவர் காரணி காணுமே. |
71 | காரணி சத்திகள் ஐம் பத்து இரண்டு எனக் காரணி கன்னிகள் ஐம் பத்து இருவராய்க் காரணி சக்கரத்து உள்ளே கரந்து எங்கும் காரணி தன் அருள் ஆகி நின்றாளே. |
72 | நின்ற இச் சத்தி நிலை பெற நின்றிடில் கண்ட இவ் வன்னி கலந்திடும் ஓர் ஆண்டில் கொண்ட விரத நீர் குன்றாமல் நின்றிடின் மன்றினில் ஆடும் மணி அது காணுமே. |
73 | கண்ட இச் சத்தி இருதய பங்கயம் கொண்ட இத் தத்துவ நாயகி ஆனவள் பண்டை அவ் வாயுப் பகையை அறுத்திட இன்று என் மனத்துள் இனிது இருந்தாளே. |
74 | இருந்த இச் சத்தி இரு நாலு கையில் பரந்த இப் பூங் கிளி பாசம் மழுவாள் கரந்திடும் கேடகம் வில் அம்பு கொண்டு அங்கு உரந்து அங்கு இருந்தவள் கூத்து உகந்தாளே. |
75 | உகந்தனள் பொன்முடி முத்து ஆரம் ஆகப் பரந்த பவளமும் பட்டு ஆடை சாத்தி மலர்ந்து எழு கொங்கை மணிக் கச்சு அணிந்து தழைத்து அங்கு இருந்தவள் தான் பச்சை ஆமே. |
76 | பச்சை இவளுக்குப் பாங்கிமார் ஆறு எட்டு கொச்சையார் எண்மர்கள் கூடி வருதலால் கச்சு அணி கொங்கைகள் கை இரு காப்பு அதாய் எச்ச இடைச்சி இனிது இருந்தாளே. |
77 | தாள் அத்தின் உள்ளே தாங்கிய சோதியைக் கால் அது ஆகக் கலந்து கொள் என்று மால் அது ஆக வழிபாடு செய்து நீ பால் அது போலப் பரந்து எழு விண்ணிலே. |
78 | விண் அமர் நாபி இருதயம் ஆங்கு இடைக் கண் அமர் கூபம் கலந்து வருதலால் பண் அமர்ந்து ஆதித்த மண்டலம் ஆனது தண் அமர் கூபம் தழைத்தது காணுமே. |
79 | கூபத்துச் சத்தி குளிர் முகம் பத்து உள தா பத்துச் சத்தி தயங்கி வருதல் ஆல் ஆ பத்துக் கைகள் அடைந்தன நால் ஐந்து பாசம் அறுக்கப் பரந்தன சூலமே. |
80 | சூலம் தண்டு ஒள் வாள் சுடர் பறை ஞானம் ஆய் வேல் அம்பு தமருகம் மா கிளி வில் கொண்டு கால் அம் பூப் பாசம் மழு கத்தி கைக் கொண்டு கோலம் சேர் சங்கு குவிந்தகை எண் அதே. |
81 | எண் அமர் சத்திகள் நால் பத்து நால் உடன் எண் அமர் சத்திகள் நால் பத்து நால்வர் ஆம் எண்ணிய பூ இதழ் உள்ளே இருந்தவள் எண்ணிய எண்ணம் கடந்து நின்றாளே. |
82 | கடந்தவள் பொன் முடி மாணிக்கத் தோடு தொடர்ந்து அணி முத்து பவளம் கச்சு ஆகப் படர்ந்த அல்குல் பட்டு ஆடை பாதச் சிலம்பு மடந்தை சிறியவள் வந்து நின்றாளே. |
83 | நின்ற இச் சத்தி நிரந்தரம் ஆகவே கண்டிடும் மேரு வணிமாதி தான் ஆகிப் பண்டைய வானின் பகட்டை அறுத்திட்டு ஒன்றிய தீபம் உணர்ந்தார்க்கு உண்டாமே. |
84 | உண்டு ஓர் அதோ முகம் உத்தமம் ஆனது கண்ட இச் சத்தி சதாசிவ நாயகி கொண்ட முகம் ஐந்து கூறும் கரங்களும் ஒன்று இரண்டு ஆகவே மூன்று நாலு ஆனதே. |
85 | நல் மணி சூலம் கபாலம் கிளியுடன் பல் மணி நாகம் மழுகத்தி பந்து ஆகும் கல் மணி தாமரைக் கையில் தமருகம் பொன் மணி பூண் ஆரம் பூசனை ஆனதே. |
86 | பூசனைச் சத்திகள் எண் ஐவர் சூழவே நேசவள் கன்னிகள் நால் பத்து நேர் அதாய்க் காசினிச் சக்கரத்து உள்ளே கலந்து அவள் மாசு அடையாமல் மகிழ்ந்து இருந்தார்களே. |
87 | தாரத்தின் உள்ளே தயங்கிய சோதியைப் பாரத்தின் உள்ளே பரந்து உள் எழுந்திட வேர் அது ஒன்றி நின்று எண்ணு மனோமயம் கார் அது போலக் கலந்து எழு மண்ணிலே. |
88 | மண்ணில் எழுந்த அகார உகாரங்கள் விண்ணில் எழுந்து சிவாய நம என்று கண்ணில் எழுந்தது காண்பு அரிது அன்று கொல் கண்ணில் எழுந்தது காட்சி தர என்றே. |
89 | என்று அங்கு இருந்த அமுத கலை இடைச் சென்று அங்கு இருந்த அமுத பயோதரி கண்டம் கரம் இரு வெள்ளி பொன் மண் அடை கொண்டு அங்கு இருந்தது வண்ணம் அமுதே. |
90 | அமுதம் அது ஆக அழகிய மேனி படிகம் அது ஆகப் பரந்து எழும் உள்ளே குமுதம் அது ஆகக் குளிர்ந்து எழு முத்துக் கெமுதம் அது ஆகிய கேடு இலிதானே. |
91 | கேடு இலி சத்திகள் முப்பத்து அறுவரும் நாடு இலி கன்னிகள் நால் ஒன்பதின் மரும் பூ இலி பூ இதழ் உள்ளே இருந்தவர் நாள் இலி தன்னை நணுகி நின்றார்களே. |
92 | நின்றது புந்தி நிறைந்திடும் வன்னியும் கண்டது சோதி கருத்து உள் இருந்திடக் கொண்டது ஓர் ஆண்டு கூடி வருகைக்கு விண்ட வௌகாரம் விளங்கின அன்றே. |
93 | விளங்கிடும் வான் இடை நின்றவை எல்லாம் வணங்கிடும் மண்டலம் மன் உயிர் ஆக நலம் கிளர் நன்மைகள் நாரணன் ஒத்துச் சுணங்கு இடை நின்று இவை செல்லலும் ஆமே. |
94 | ஆமே அதோ முகம் மேலே அமுதம் ஆய்த் தாமே உகாரம் தழைத்து எழும் சோமனும் கா மேல் வருகின்ற கற்பகம் ஆனது பூ மேல் வருகின்ற பொன் கொடி ஆனதே. |
95 | பொன் கொடியாள் உடைப் பூசனை செய்திட அக் களி ஆகிய ஆங்காரம் போயிடும் மற் கடம் ஆகிய மண்டலம் தன் உளே பிற் கொடி ஆகிய பேதையைக் காணுமே. |
96 | பேதை இவளுக்குப் பெண்மை அழகு ஆகும் தாதை இவளுக்குத் தாணுவும் ஆய் நிற்கும் மாதை அவளுக்கு மண்ணும் திலகம் ஆய்க் கோதையர் சூழக் குவிந்திடக் காணுமே. |
97 | குவிந்தனர் சத்திகள் முப்பத்து இருவர் நடந்தனர் கன்னிகள் நால் எண்மர் சூழப் பரந்து இதழ் ஆகிய பங்கயத்து உள்ளே இருந்தனள் காணும் இடம் பல கொண்டே. |
98 | கொண்டு அங்கு இருந்தனர் கூத்தன் ஒளியினைக் கண்டு அங்கு இருந்தனர் காரணத்து உள்ளது பண்டை மறைகள் பரந்து எங்கும் தேடும் ஆல் இன்று என் மனத்து உளே இல் அடைந்து ஆளுமே. |
99 | இல் அடைந்தானுக்கும் இல்லாதது ஒன்று இல்லை இல் அடைந்தானுக்கு இரப்பது தான் இல்லை இல் அடைந்தானுக்கு இமையவர் தாம் ஒவ்வார் இல் அடைந்தானுக்கு இல்லாதது இல்லானையே. |
100 | ஆனை மயக்கும் அறுபத்து நால் தறி ஆனை இருக்கும் அறு பத்து நால் ஒளி ஆனை இருக்கும் அறுபத்து நால் அறை ஆனையும் கோடும் அறுபத்து நாலிலே. |
ஐந்தாம் தந்திரம் 1. சுத்த சைவம் |
1 | ஊரும் உலகமும் ஒக்கப் படைக்கின்ற பேர் அறிவாளன் பெருமை குறித்திடின் மேருவும் மூ உலகு ஆளி இலங்கு எழுந்து தாரணி நால் வகைச் சைவமும் ஆமே. |
2 | சத்தும் அசத்தும் சத சத்தும் தான் கண்டு சித்தும் அசித்தும் சேர் உறாமே நீத்த சுத்தம் அசுத்தமும் தோய் உறாமே நின்று நித்தம் பரஞ் சுத்தம் சைவர்க்கு நேயமே. |
3 | கற்பன கற்றுக் கலை மன்னும் மெய் யோகம் முற்பத ஞான முறை முறை நண்ணியே சொற் பதம் மேவித் துரிசு அற்று மேல் ஆன தற்பரம் கண்டு உளோர் சைவ சிந்தாந்தரே. |
4 | வேதாந்தம் சுத்தம் விளங்கிய சித்தாந்த நாதாந்தம் கண்டோர் நடுக்கு அற்ற காட்சியர் பூதாந்த போதாந்தம் ஆகப் புனம் செய்ய நாதாந்த பூரணர் ஞான நேயத்தரே. |
2. அசுத்த சைவம் |
1 | இணையார் திருவடி ஏத்தும் சீர் அங்கத்து இணையார் இணைக் குழை ஈர் அணை முத்திரை குணம் ஆர் இணைக் கண்ட மாலையும் குன்றாது அணைவாம் சரியை கிரியை யினார்க்கே. |
2 | காதுப் பொன் ஆர்ந்த கடுக்கன் இரண்டு சேர்த்து ஓதும் திரு மேனியுள் கட்டு இரண்டுடன் சோதனை செய்து துவா தெச மார்க்கர் ஆய் ஓதி இருப்பார் ஒரு சைவர் ஆகுமே. |
3 | கண்டங்கள் ஒன்பதும் கண்டவர் கண்டனர் கண்டங்கள் ஒன்பதும் கண்டாய் அரும் பொருள் கண்டங்கள் ஒன்பதும் கண்டவர் கண்டம் ஆம் கண்டங்கள் கண்டோர் கடும் சுத்த சைவரே. |
4 | ஞானி புவி எழு நல் நூல் அனைத்துடன் மோன திசையும் முழு எண் எண் சித்தியும் ஏனை நிலமும் எழுதா மறை ஈறும் கோனொடு தன்னையும் காணும் குணத்தனே. |
3. மார்க்க சைவம் |
1 | பொன்னால் சிவ சாதனம் பூதி சாதனம் நன் மார்க்க சாதனம் மா ஞான சாதனம் துன் மார்க்க சாதனம் தோன்றாத சாதனம் சன் மார்க்க சாதனம் ஆம் சுத்த சைவர்க்கே. |
2 | கேடு அறு ஞானி கிளர் ஞான பூபதி பாடு அறு வேதாந்த சித்தாந்த பாகத்தின் ஊடு உறு ஞான உதய உண்மை முத்தியோன் பாடு உறு சுத்த சைவப் பத்த நித்தனே. |
3 | சுத்தம் அசுத்தம் துரியங்கள் ஓர் ஏழும் சத்தும் அசத்தும் தணந்த பரா பரை உய்த்த பரா பரை உள்ளாம் பராபரை அத்தன் அருள் சத்தியாய் எங்கும் ஆமே. |
4 | சத்தும் அசத்தும் தணந்தவர் தான் ஆகிச் சித்தும் அசித்தும் தெரியாச் சிவோகம் ஆய் முத்தியுள் ஆனந்த சத்தியுள் மூழ்கினார் சித்தியும் அங்கே சிறந்து உள தானே. |
5 | தன்னைப் பரனைச் சதா சிவன் என்கின்ற மன்னைப் பதி பசு பாசத்தை மாசு அற்ற முன்னைப் பழ மல முன் கட்டை வீட்டினை உன்னத் தகும் சுத்த சைவர் உபாயமே. |
6 | பூரணம் தன்னிலே வைத்து அற்ற அப்போதம் ஆரணம் அந்தம் மதித்து ஆனந்தந்தோடு நேர் என ஈர் ஆறு நீதி நெடும் போகம் காரணம் ஆம் சுத்த சைவர்க்குக் காட்சியே. |
7 | மாறாத ஞான மதிப்பு அற மாயோகம் தேறாத சிந்தையைத் தேற்றிச் சிவம் ஆக்கிப் பேறு ஆன பாவனை பேணி நெறி நிற்றல் கூறு ஆகும் ஞானி சரிதை குறிக்கிலே. |
8 | வேத அந்தம் கண்டோர் பிரமம் இத்தியா தரர் நாத அந்தம் கண்டோர் நடுக்கு அற்ற யோகிகள் வேத அந்தம் அல்லாத சித்தாந்தம் கண்டு உள்ளோர் சாதாரணம் அன்ன சைவர் உபாயமே. |
9 | விண்ணினைச் சென்று அணுகா வியன் மேகங்கள் கண்ண்னைச் சென்று அணுகாப் பல காட்சிகள் எண்ணினைச் சென்று அணுகாமல் எணப்படும் அண்ணலைச் சென்று அணுகா பசு பாசமே. |
10 | ஒன்றும் இரண்டும் இலதும் ஆய் ஒன்று ஆக நின்று சமய நிரா கார நீங்கியே நின்று பரா பரை நேயத்தைப் பாதத்தால் சென்று சிவம் ஆதல் சித்தாந்த சித்தியே. |
4. கடும் சுத்த சைவம் |
1 | வேடம் கடந்து விகிர்தன் தன் பால் மேவி ஆடம்பரம் இன்றி ஆசாபாசம் செற்றுப் பாடு ஒன்று பாசம் பசுத்துவம் பாழ்படச் சாடும் சிவ போதகர் சுத்த சைவரே. |
2 | உடல் ஆன ஐந்தையும் ஓர் ஆறும் ஐந்தும் மடல் ஆன மா மாயை மற்று உள்ள நீவப் படல் ஆன கேவல பாசம் துடைத்துத் திடம் ஆய்த் தனை உறல் சித்தாந்த மார்க்கமே. |
3 | சுத்தச் சிவன் தான் அதில் தோயாமல் முத்தர் பதப் பொருள் முத்தி வித்து ஆம் மூலம் அத் தகையான் மா அரனை அடைந்தற்றால் சுத்த சிவம் ஆவரே சுத்த சைவரே. |
4 | நான் என்றும் தான் என்றும் நாடி நான் சாரவே தான் என்று நான் என்று இரண்டு இலாத் தற்பதம் தான் என்று நான் என்ற தத்துவம் நல்கலால் தான் என்று நான் என்றும் சாற்ற கில்லேனே. |
5 | சாற்ற அரிது ஆகிய தத்துவம் சிந்தித்தால் ஆற்ற அரிது ஆகிய ஐந்தும் அடங்கிடும் மேல் திகழ் ஞானம் விளக்கு ஒளியாய் நிற்கும் பாற்பர சாயுச்சியம் ஆகும் பதியே. |
5. சரியை |
1 | உயிர்க்கு உயிராய் நிற்றல் ஒண் ஞான பூசை உயிர்க்கு ஒளி நோக்கல் மகா யோக பூசை உயிர் பெறு ஆவாகனம் புறப் பூசை செயின் கடை நேசம் சிவ பூசை ஆமே. |
2 | நாடு நகரமும் நல் திருக் கோயிலும் தேடித் திரிந்து சிவபெருமான் என்று பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின் கூடிய நெஞ்சத்துக் கோயிலாய்க் கொள்வனே. |
3 | பத்தர் சரிதை படுவோர் கிரியை ஓர் அத்தகு தொண்டர் அருள் வேடத்து ஆகுவோர் சுத்தவியம் ஆதி சாதகர் தூ யோகர் சித்தர் சிவஞானம் சென்று எய்து வோர் களே. |
4 | சார்ந்த மெய்ஞ் ஞானத்தோர் தான் அவன் ஆயினோர் சேர்ந்த வெண் யோகத்தர் சித்தர் சமாதியோர் ஆய்ந்த கிரியையோர் அருச்சனை தப்பாதோர் நேர்ந்த சரியை யோர் நீள் நிலத்தோரே. |
5 | கிரியை யோகங்கள் கிளர் ஞான பூசை அரிய சிவன் உரு அமரும் அரூபம் தெரியும் பருவத்துத் தேர்ந்திடும் பூசை உரியன நேயத்து உயர் பூசை ஆமே. |
6 | சரி ஆதி நான்கும் தரு ஞானம் நான்கும் விரிவு ஆன வேதாந்த சித்தாந்தம் ஆறும் பொருள் ஆனது நந்தி பொன் நகர் போந்து மருள் ஆகும் மாந்தர் வணங்க வைத்தானே. |
7 | சமையம் பல சுத்தித் தன் செயல் அற்றிடும் அமையும் விசேடமும் அரன் மந்திர சுத்தி சமைய நிருவாணம் கலா சுத்தி ஆகும் அமை மன்னும் ஞான மார்க்கம் அபிடேகமே. |
6. கிரியை |
1 | பத்துத் திசையும் பரம் ஒரு தெய்வம் உண்டு எத்திக் கிலர் இல்லை என்பதின் அமலர்க்கு ஒத்துத் திருவடி நீழல் சரண் எனத் தத்தும் வினைக் கடல் சாராது காணுமே. |
2 | கான் உறு கோடி கடி கமழ் சந்தனம் வான் உறு மா மலர் இட்டு வணங்கினும் ஊனினை நீக்கி உண்பவர்க்கு அல்லது தேன் அமர் பூங் கழல் சேர ஒண்ணாதே. |
3 | கோனக் கன்று ஆயே குரைகழல் ஏத்து மின் ஞானக் கன்று ஆகிய நடுவே உழிதரும் வானக் கன்று ஆகிய வானவர் கைதொழு மானக் கன்று ஈசன் அருள் வள்ளம் ஆமே. |
4 | இது பணிந்து எண் திசை மண்டலம் எல்லாம் அது பணி செய்கின்றவள் ஒரு கூறன் இது பணி மானுடர் செய் பணி ஈசன் பதி பணி செய்வது பத்திமை காணே. |
5 | பத்தன் கிரியை சரியை பயில் உற்றுச் சுத்த அருளால் துரிசு அற்ற யோகத்தில் உய்த்த நெறி உற்று உணர் கின்ற ஞானத்தால் சித்தம் குரு அருளால் சிவம் ஆகுமே. |
6 | அன்பின் உருகுவன் நாளும் பணி செய்வன் செம் பொன் செய் மேனி கமலத் திருவடி முன்பு நின்று ஆங்கே மொழிவது எனக்கு அருள் என்பின் உள் சோதி இலங்கு கின்றானே. |
7. யோகம் |
1 | நெறி வழியே சென்று நேர்மையுள் ஒன்றித் தறி இருந்தால் போல் தம்மை இருத்திச் சொறியினும் தாக்கினும் துண் என்று உணராக் குறி அறி வாளர்க்குக் கூடலும் ஆமே. |
2 | ஊழிதோறு ஊழி உணர்ந்தவர்க்கு அல்லால் ஊழிதோறு ஊழி உணரவும் தான் ஒட்டான் ஆழி அமரும் அரி அயன் என்று உளார் ஊழி முயன்றும் ஒருச்சி உளானே. |
3 | பூவினில் கந்தம் பொருந்திய வாறு போல் சீவனுக்கு உள்ளே சிவ மணம் பூத்தது ஓவியம் போல உணர்ந்து அறிவாளர்க்கு நாவி அணைந்த நடுதறி ஆமே. |
4 | உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர் கந்த மலரில் கலக்கின்ற நந்தியைச் சிந்தை உறவே தெளிந்து இருள் நீங்கினால் முந்தைப் பிறவிக்கு மூல வித்து ஆமே. |
5 | எழுத்தொடு பாடலும் எண் எண் கலையும் பழித்தலை பாசப் பிறவியும் நீங்கா வழித்தலை சோமனோடு அங்கி அருக்கன் வழித்தலை செய்யும் வகை உணர்ந்தேனே. |
6 | விரும்பி நின்றே செயின் மெய்த்தவர் ஆகும் விரும்பி நின்றே செயின் மெய் ஆகும் விரும்பி நின்றே செயின் மெய்த்தவம் ஆகும் விரும்பி நின்றே செயின் விண்ணவன் ஆகுமே. |
7 | பேணில் பிறவா உலகுஅருள் செய்திடும் காணில் தனது கலவி உளே நிற்கும் நாணில் நரக நெறிக்கே வழி செயும் ஊனில் சுடும் அங்கி உத்தமன் தானே. |
8 | ஒத்த செங் கோலார் உலப்பு இலி மாதவர் எத்தனை ஆயிரம் வீழ்ந்தனர் எண் இலி சித்தர்கள் தேவர்கள் மூவர் பெருமையாய் அத்தன் இவன் என்றே அன்பு உறுவார்களே. |
9 | யோகிக்கு யோக ஆதி மூன்று உள கொண்டு உற்றோர் ஆகத் தகு கிரி ஆதி சரியை ஆம் தாகத்தை விட்ட சரியை ஒன்றாம் ஒன்றுள் ஆதித்தன் பத்தியுள் அன்பு வைத்தேனே. |
10 | யோகச் சமயமே யோகம் பல உன்னல் யோக விசேடமே அட்டாங்க யோகம் ஆம் யோக நிர்வாணமே உற்ற பரோதயம் யோக அபிடேகமே ஒண் சித்தி உற்றலே. |
8. ஞானம் |
1 | ஞானத்தின் மிக்க அற நெறி நாட்டில்லை ஞானத்தின் மிக்க சமயமும் நன்று அன்று ஞானத்தின் மிக்கவை நல் முத்தி நல்காவா ஞானத்தின் மிக்கார் நரரின் மிக்காரே. |
2 | சத்தமும் சத்த மனனும் தகுமனம் உய்த்த உணர்வு உணர்த்தும் அகந்தையும் சித்தம் என்று இம் மூன்றும் சிந்திக்கும் செய்கையும் சத்தம் கடந்தவர் பெற்ற சன்மார்க்கமே. |
3 | தன்பால் உலகும் தனக்கு அருகு ஆவதும் அன்பால் எனக்கு அருள் ஆவதும் ஆவன என்பார்கள் ஞானமும் எய்தும் சிவயோகமும் பின்பாலின் நேயமும் பெற்றிடும் தானே. |
4 | இருக்கும் சேம இடம் பிரமம் ஆகும் வருக்கம் சராசரம் ஆகும் உலகம் தருக்கிய ஆசாரம் எல்லாம் தருமே திருக்கிலா ஞானத்தைத் தேர்ந்து உணர்ந்தோர்க்கே. |
5 | அறிவும் அடக்கமும் அன்பும் உடனே பிறியா நகர் மன்னும் பேர் அருளாளன் குறியும் குணமும் குரை கழல் நீங்கா நெறி அறிவார்க்கு இது நீர்த் தொனியாமே. |
6 | ஞானம் விளைந்து எழுகின்றது ஓர் சிந்தையுள் ஏனம் விளைந்து எதிரே காண்வழி தொறும் கூனல் மதி மண்டலத்து எதிர் நீர் கண்டு ஊனம் அறுத்து நின்று ஒண் சுடர் ஆகுமே. |
7 | ஞானிக்கு உடன் குண ஞானத்தில் நான்கும் ஆம் மோனிக்கு இவை ஒன்றும் கூடா முன் மோகித்து மேல் நிற்றல் ஆம் சத்தி வித்தை விளைத்திடும் தான் இக் குலத்தோர் சரியை கிரியையே. |
8 | ஞானத்தின் ஞானாதி நான்கும் மா ஞானிக்கு ஞானத்தின் ஞானமே நான் எனது என்னாமல் ஞானத்தில் யோகமே நாத அந்த நல் ஒளி ஞானக் கிரியையே நல் முத்தி நாடலே. |
9 | நண்ணிய ஞானத்தின் ஞான ஆதி நண்ணுவோன் புண்ணிய பாவம் கடந்த பிணக்கு அற்றோன் கண்ணிய நேயம் கரைஞானம் கண்டு உளோன் திண்ணிய சுத்தன் சிவ முத்தன் சித்தனே. |
10 | ஞானச் சமயமே நாடும் தனைக் காண்டல் ஞான விசேடமே நாடு பரோதய ஞான நிர்வாணமே நன்று அறிவான் அருள் ஞான அபிடேகமே நற்குரு பாதமே. |
9. சன்மார்க்கம் |
1 | சாற்றும் சன்மார்க்கம் ஆம் தற் சிவ தத்துவத் தோற்றங்கள் ஆன சுருதிச் சுடர் கண்டு சீற்றம் ஒழிந்து சிவயோக சித்தராய்க் கூற்றத்தை வென்றார் குறிப்பு அறிந்தார்களே. |
2 | சைவப் பெருமைத் தனி நாயகன் நந்தி உய்ய வகுத்த குருநெறி ஒன்று உண்டு தெய்வச் சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்து உய்ய வையத்து உள்ளார்க்கு வகுத்து வைத்தானே. |
3 | தெரிசிக்கப் பூசிக்கச் சிந்தனை செய்யப் பரிசிக்கக் கீர்த்திக்கப் பாதுகம் சூடக் குருபத்தி செய்யும் குவலயத் தோர்க்குத் தரு முத்திச் சார்பு ஊட்டும் சன்மார்க்கம் தானே. |
4 | தெளிவு அறியாதார் சிவனை அறியார் தெளிவு அறியாதார் சீவனும் ஆகார் தெளிவு அறியாதார் சிவம் ஆக மாட்டார் தெளிவு அறியா தவர் தீரார் பிறப்பே. |
5 | தான் அவன் ஆகித் தான் ஐந்தாம் மலம் செற்று மோனம் அதாம் மொழிப் பால் முத்தர் ஆவதும் ஈனம் இல் ஞான அனு பூதியில் இன்பமும் தான் அவனாய் உறல் ஆன சன் மார்க்கமே. |
6 | சன்மார்க்கத் தார்க்கு முகத்தொடு பீடமும் சன் மார்க்கத் தார்க்கும் இடத் தொடு தெய்வமும் சன்மார்க்கத் தார்க்கு வருக்கம் தெரிசனம் எம் மார்க்கத் தார்க்கும் இயம்புவன் கேண்மினோ. |
7 | சன் மார்க்க சாதனம் தான் ஞான ஞேயம் ஆம் பின் மார்க்க சாதனம் பேதையர்க்கு ஆய் நிற்கும் துன் மார்க்கம் விட்ட துரியத் துரிசு அற்றார் சன் மார்க்கம் தான் ஆகும் சன்மார்க்கமே. |
8 | சன் மார்க்கம் எய்த வரும் அரும் சீடர்க்குப் பின் மார்க்கம் மூன்றும் பெற இயல்பாம் என்றால் நன் மார்க்கம் தானே சிவனொடு நாடலே சொன் மார்க்கம் என்னச் சுருதிகைக் கொள்ளுமே. |
9 | அன்னிய பாசமும் ஆகும் கருமமும் முஇன்னும் அவத்தையும் மூலப் பகுதியும் பின்னிய ஞானமும் போதாதி பேதமும் தன்னொடும் கண்டவர் சன்மார்க்கத்தோரே. |
10 | பசு பாசம் நீக்கிப் பதியுடன் கூட்டிக் கசி யாத நெஞ்சம் கசியக் கசிவித்து ஒசியாத உண்மைச் சொரு போதயத்து உற்று அசைவானது இல்லாமை ஆன சன்மார்க்கமே. |
11 | மார்க்கம் சன் மார்க்கிகள் கிட்ட வகுப்பது மார்க்கம் சன் மார்க்கமே அன்றி மற்று ஒன்று இல்லை மார்க்கம் சன்மார்க்கம் எனும் நெறிவைகா தோர் மார்க்கம் சன் மார்க்கம் ஆம் சித்த யோகமே. |
10. சகமார்க்கம் |
1 | சன் மார்க்கம் தானே சக மார்க்கம் ஆனது மன் மார்க்கம் ஆம் முத்தி சித்திக்குள் வைப்பது ஆம் பின் மார்க்கம் ஆனது பேராப் பிறந்து இறந்து உன் மார்க்க ஞானத்து உறுதியும் ஆமே. |
2 | மருவும் துவாதச மார்க்கம் இல்லாதார் குருவும் சிவனும் சமயமும் கூடார் வெருவும் திருமகள் வீட்டு இல்லை ஆகும் உருவும் கிளையும் ஒருங்கு இழப்பாரே. |
3 | யோகச் சமாதியின் உள்ளே அகல் இடம் யோகச் சமாதியின் உள்ளே உளர் ஒளி யோகச் சமாதியின் உள்ளே உள சத்தி யோகச் சமாதி உகந்தவர் சித்தரே. |
4 | யோகமும் போகமும் யோகியர்க்கு ஆகும் ஆல் யோகம் சிவரூபம் உற்றிடும் உள்ளத்து ஓர் போகம் புவியில் புருடார்த்த சித்தியது ஆகும் இரண்டும் அழியாத யோகிக்கே. |
5 | ஆதார சோதனையால் நாடி சுத்திகள் மேதாதி ஈர் எண் கலாந்தது விண் ஒளி போதஆலயத்துப் புலன் கரணம் புந்தி சாதாரணம் கெடல் ஆம் சக மார்க்கமே. |
6 | பிணங்கி நிற்கின்றவை ஐந்தையும் பின்னை அணங்கி எறிவன் அயிர் மன வாளால் கணம் பதினெட்டும் கருதும் ஒருவன் வணங்க வல்லான் சிந்தை வந்து நின்றானே. |
7 | வளம் கனி ஒக்கும் வள நிறத் தார்க்கும் வளம் கனி ஒப்பது ஓர் வாய்மையன் ஆகும் உளம் கனிந்து உள்ளம் உகந்து இருப்பார்க்குப் பழம் கனிந்து உள்ளே பகுந்து நின்றானே. |
11. சற்புத்திர மார்க்கம் |
1 | மேவிய சற்புத்திர மார்க்கம் மெய்த் தொழில் தாவிப் பதாஞ்சக மார்க்கம் சகத் தொழில் ஆவது இரண்டும் அகன்று சக மார்க்கத் தேவி யோடு ஒன்றல் சன்மார்க்கத் தெளிவு அதே. |
2 | பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல் ஆசு அற்ற நல் தவம் வாய்மை அழுக்கு இன்மை நேசித்திட்டு அன்னமும் நீ சுத்தி செய்தல் மற்று ஆசு அற்ற சற்புத்திர மார்க்கம் ஆகுமே. |
3 | அறு கால் பறவை அலர் தேர்ந்து உழலும் மறுகா நரை அன்னம் தாமரை நீலம் குறுகா நறுமலர் கொய்வன கண்டும் சிறுகால் அற நெறி சேர கிலாரே. |
4 | அரும் கரை ஆவது அவ் அடி நீழல் பெரும் கரை ஆவது பிஞ்ஞகன் ஆணை வரும் கரை ஏகின்ற மன் உயிர்க்கு எல்லாம் ஒரும் கரையாய் உலகு ஏழின் ஒத்தானே. |
5 | உயர்ந்தும் பணிந்தும் முகந்தும் தழுவி வியந்தும் அரன் அடிக்கே முறை செய்மின் பயந்தும் பிறவிப் பயன் அது ஆகும் பயந்து பரிக்கில் அப் பான்மையன் ஆமே. |
6 | நின்று தொழுவன் கிடந்து எம்பிரான் தன்னை என்றும் தொழுவன் எழில் பரஞ் சோதியைத் துன்று மலர் தூவித் தொழுமின் தொழும் தோறும் சென்று வெளிப்படும் தேவர் பிரானே. |
7 | திரு மன்னும் சற்புத்திர மார்க்கச் சரியை உரு மன்னி வாழும் உலகத்தீர் கேண் மின் கரு மன்னும் பாசம் கை கூம்பத் தொழுது இரு மன்னும் நாள் தோறும் இன்பு உற்று இருந்தே. |
13. சாலோகம் |
1 | சாலோகம் ஆதி சரி ஆதியில் பெறும் சாலோகம் சாமீபம் தங்கும் சரியை ஆல் மாலோகம் சேரில் வழி ஆகும் சாரூபம் பா லோகம் இல்லாப் பரன் உரு ஆமே. |
2 | சமயம் கிரியையில் தன் மனம் கோயில் சமய மனு முறை தானே விசேடம் சமயத்து மூலம் தனைத் தேறல் மூன்று ஆம் சமய அபிடேகம் தான் ஆம் சமாதியே. |
4. சாமீபம்
15. சாரூபம்
17. சத்திநி பாதம் - மந்தரம் |
1 | இருட்டு அறை மூலை இருந்த கிழவி குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக் குருட்டினை நீங்கிக் குணம் பல காட்டி மருட்டி அவனை மணம் புரிந்தாளே. |
2 | தீம் புலன் ஆன திசை அது சிந்திக்கில் ஆம் புலன் ஆய அறிவார்க்கு அமுதாய் நிற்கும் தேம் புலன் ஆன தெளிவு அறிவார்கட்கு ஓம் புலன் ஆடிய கொல்லையும் ஆமே. |
3 | இருள் நீக்கி எண் இல் பிறவி கடத்தி அருள் நீங்கா வண்ணமே ஆதி அருளும் மருள் நீங்கா வானவர் கோன் ஒடும் கூடிப் பொருள் நீங்கா இன்பம் புலம் பயில் தானே. |
4 | இருள் சூழ் அறையில் இருந்தது நாடில் பொருள் சூழ் விளக்கு அது புக்கு எரிந்தால் போன்று மருள் சூழ் மயக்கத்து மா மலர் நந்தி அருள் சூழ் இறைவனும் அம்மையும் ஆமே. |
மந்ததரம் |
5 | மருட்டிப் புணர்ந்து மயக்கமும் நீக்கி வெருட்டி வினை அறுத்து இன்பம் விளைத்துக் குருட்டினை நீக்கிக் குணம் பல காட்டி அருள் திகழ் ஞானம் அது புரிந்தானே. |
6 | கன்னித் துறை படிந்து ஆடிய ஆடவர் கன்னித் துறை படிந்து ஆடும் கருத்து இலர் கன்னித் துறை படிந்து ஆடும் கருத்து உண்டேல் பின்னைப் பிறவி பிறிது இல்லை தானே. |
7 | செய்யன் கரியன் வெளியன் நல் பச்சையன் எய்த உணர்ந்தவர் எய்வர் இறைவனை மை வென்று அகன்ற படுகரி போர்த்த வெம் கையன் இவன் என்று காதல் செய்வீரே. |
8 | எய்திய காலங்கள் எத்தனை ஆயினும் தையலும் தானும் தனி நாயகம் என்பர் வைகலும் தன்னை வணங்கும் அவர் கட்குக் கையில் கருமம் செய் காட்டு அது ஆமே. |
9 | கண்டு கொண்டோம் இரண்டும் தொடர்ந்து ஆங்கு ஒளி பண்டு பண்டு ஓயும் பரமன் பரம்சுடர் வண்டு கொண்டு ஆடும் மலர் வார் சடை அண்ணல் நின்று கண்டார்க்கு இருள் நீக்கி நின்றானே. |
தீவிரம் |
10 | அண்ணிக்கும் பெண் பிள்ளை அப்பனார் தோட்டத்தில் எண்ணிக்கும் ஏழ் ஏழ் பிறவி உணர்விக்கும் உள் நிற்பது எல்லாம் ஒழிய முதல்வனைக் கண் உற்று நின்ற கனி அது ஆகுமே. |
11 | பிறப்பை அறுக்கும் பெரும்தவம் நல்கும் மறப்பை அறுக்கும் வழிபட வைக்கும் குறப் பெண் குவி முலை கோமள வல்லி சிறப்பொடு பூசனை செய்ய நின்றார்க்கே. |
12 | தாங்குமின் எட்டுத் திசைக்கும் தலைமகன் பூங் கமழ் கோதைப் புரிகுழலாள் ஒடும் ஆங்கு அது சேரும் அறிவு உடையார் கட்குத் தூங்கு ஒளி நீலம் தொடர்தலும் ஆமே. |
13 | நணுகினும் ஞானக் கொழுந்து ஒன்று நல்கும் பணிகிலும் பல்மலர் தூவிப் பணிவன் அணுகியது ஒன்று அறியாத ஒருவன் அணுகும் உலகு எங்கும் ஆவியும் ஆமே. |
தீவிரரரம் |
14 | இருவினை நேர் ஒப்பு இல் இன் அருள் சத்தி குருஎன வந்து குணம் பல நீக்கித் தரும் எனும் ஞானத்தால் தன் செயல் அற்றால் திரி மலம் தீர்ந்து சிவன் அவன் ஆமே. |
15 | மாலை விளக்கும் மதியமும் ஞாயிறும் சாலை விளக்கும் தனிச்சுடர் அண்ணல் உள் ஞானம் விளக்கிய நாதன் என் உள் புகுந்து ஊனை விளக்கி உடன் இருந்தானே. |
18. புறச் சமயதூடணம் |
1 | ஆயத்து உள் நின்ற அறு சமயங்களும் காயத்து உள் நின்ற கடவுளைக் காண்கிலா மாயக் குழியில் விழுவர் மனை மக்கள் பாசத்தில் உற்றுப் பதைக்கின்ற வாறே. |
2 | ஆறு சமய முதலாம் சமயங்கள் ஊறு அது எனவும் உணர்க உணர்பவர் வேறு அது அற உணர்வார் மெய்க் குரு நந்தி ஆறி அமைபவர்க்கு அண்ணிக்கும் தானே. |
3 | உள்ளத்து உளே தான் கரந்து எங்கும் நின்றவன் வள்ளல் தலைவன் மலர் உறை மாதவன் பொள்ளல் குரம்பைப் புகுந்து புறப்படும் கள்ளத் தலைவன் கருத்து அறியார்களே. |
4 | உள்ளத்தும் உள்ளன் புறத்து உள்ளன் என்பவர்க்கு உள்ளத்தும் உள்ளன் புறத்து உள்ளன் எம் இறை உள்ளத்தும் இல்லை புறத்து இல்லை என்பவர்க்கு உள்ளத்தும் இல்லை புறத்து இல்லை தானே. |
5 | முதல் ஒன்றாம் ஆனை முதுகுடன் வாலும் திதமுறு கொம்பு செவி துதிக்கை கான் மதியுடன் அந்தகர் வகைவகை பார்த்தே அது கூறல் ஒக்கும் ஆறு சமயமே. |
6 | ஆறு சமயமும் கண்டவர் கண்டிலர் ஆறு சமயப் பொருளும் அவன் அலன் தேறுமின் தேறித் தெளிமின் தெளிந்த பின் மாறுதல் இன்றி மனைபுகல் ஆமே. |
7 | சிவம் அல்லது இல்லை அறையே சிவம் ஆம் தவம் அல்லது இல்லை தலைப்படு வார்க்கு இங்கு அவம் அல்லது இல்லை அறு சமயங்கள் தவம் வல்ல நந்தி தாள் சார்ந்து உய்யும் நீரே. |
8 | அண்ணலை நாடிய ஆறு சமயமும் விண்ணவர் ஆக மிகவும் விரும்பியே முண் நின்று அழியும் முயன்று இலர் ஆதலால் மண் நின்று ஒழியும் வகை அறியார்களே. |
9 | சிவகதியே கதி மற்று உள்ள எல்லாம் மவகதி பாசப் பிறவி ஒன்று உண்டு தவகதி தன்னொடு நேர் ஒன்று தோன்றில் அவகதி மூவரும் அவ் வகை ஆமே. |
10 | நூறு சமயம் உளவா நுவலுங்கால் ஆறு சமயம் அவ் ஆறு உட்படுவன கூறு சமயங்கள் கொண்ட நெறி நில்லா வீறு பர நெறி இல்லா நெறி யன்றே. |
11 | கத்தும் கழுதைகள் போலும் கலதிகள் சுத்த சிவன் எங்கும் தோய் உற்று நிற்கின்றான் குற்றம் தெளியார் குணம் கொண்டு கோது ஆட்டார் பித்து ஏறி நாளும் பிறந்து இறப்பாரே. |
12 | மயங்கு கின்றாரும் மதி தெளிந்தாரும் முயங்கி இருவினை முழை முகப் பாச்சி இயங்கிப் பெறுவரேல் ஈறு அது காட்டில் பயம் கெட்டவர்க்கு ஓர் பரநெறி ஆமே. |
13 | சேயன் அணியன் பிணி இலன் பேர் நந்தி தூயன் துளக்கு அற நோக்க வல்லார்கட்கு மாயன் மயக்கிய மானுடராம் அவர் காயம் விளைக்கும் கருத்து அறியார்களே. |
14 | வழி இரண்டுக்கும் ஓர் வித்து அது ஆன பழி அது பார்மிசை வாழ்தல் உறுதல் சுழி அறி வாளன் தன் சொல் வழி முன்நின்று அழிவு அறிவார் நெறி நாட நில்லாரே. |
15 | மாதவர் எல்லாம் மா தேவன் பிரான் என்பர் நாதம் அது ஆக அறியப் படும் நந்தி பேதம் செய்யாதே பிரான் என்று கை தொழில் ஆதியும் அந் நெறி ஆகி நின்றானே. |
16 | அரன் நெறி அப்பனை ஆதிப் பிரானை உரன் நெறி ஆகி உளம் புகுந்தானைப் பரன் நெறி தேடிய பத்தர்கள் சித்தம் பரன் அறியா விடில் பல்வகைத் தூரமே. |
17 | பரிசு அறவான் அவன் பண்பன் பகலோன் பெரிசு அறி வானவர் பேற்றில் திகழும் துரிசு அற நீ நினை தூய் மணி வண்ணன் அரிது அவன் வைத்த அற நெறி தானே. |
18 | ஆன சமயம் அது இது நன்று எனும் மாய மனிதர் மயக்கம் அது ஒழி கானம் கடந்த கடவுளை நாடுமின் ஊனம் கடந்த உரு அது ஆமே. |
19 | அந் நெறி நாடி அமரர் முனிவரும் செல் நெறி கண்டார் சிவன் எனப் பெற்றார் பின் முன் நெறி நாடி முதல்வன் அருள் இலார் செல் நெறி செல்லார் திகைக்கின்ற வாறே. |
20 | உறும் ஆறு அறிவதும் உள் நின்ற சோதி பெறும் ஆறு அறியில் பிணக்கு ஒன்றும் இல்லை அறும் ஆறு அது ஆன அங்கியுள் ஆங்கே இறும் ஆறு அறிகிலர் ஏழைகள் தாமே. |
21 | வழி நடக்கும் பரிசு ஒன்று உண்டு வையம் கழி நடக்கு உண்டவர் கற்பனை கேட்பர் சுழி நடக்கும் துயரம் அது நீக்கிப் பழி நடப் பார்க்குப் பரவலும் ஆமே. |
22 | வழி சென்ற மாதவம் வைகின்ற போது பழி செல்லும் வல்வினைப் பற்று அறுத்து ஆங்கே வழி செல்லும் வல்வினையார் திறம் விட்டிட்டு உழி செல்லில் உம்பர் தலைவன் முன் ஆமே. |
19. நிராசாரம் |
1 | இமையங்களாய் நின்ற தேவர்கள் ஆறு சமையங்கள் பெற்றனர் சாத்திரம் ஓதி அமை அறிந்தோம் என்பர் ஆதி பிரானும் கமை அறிந்தார் உள் கலந்து நின்றானே. |
2 | பாங்கு அமர் கொன்றைப் படர் சடையான் அடி தாங்கு மனிதர் தரணியில் நேர் ஒப்பர் நீங்கிய வண்ணம் நினைவு செய்யாதவர் ஏங்கி உலகில் இருந்து அழுவாரே. |
3 | இருந்து அழுவாரும் இயல்பு கெட்டாரும் அரும் தவம் மேற் கொண்டு அங்கு அண்ணலை எண்ணில் வருந்தா வகை செய்து வானவர் கோனும் பெரும் தன்மை நல்கும் பிறப்பு இல்லை தானே. |
4 | தூர் அறிவாளர் துணைவர் நினைப்பு இலர் பார் அறிவாளர் படுபயன் தான் உண்பர் கார் அறிவாளர் கலந்து பிறப்பார்கள் நீர் அறிவார் நெடு மா முகில் ஆமே. |
5 | அறிவுடன் கூடி அழைத்தது ஓர் தோணி பறியுடன் பாரம் பழம்பதி சிந்தும் குறி அது கண்டும் கொடுவினை யாளர் செறிய நினைக்கிலர் சேவடி தானே. |
6 | மன்னும் ஒருவன் மருவும் மனோ மயன் என்னின் மனிதர் இகழ்வர் இவ் ஏழைகள் துன்னி மனமே தொழுமின் துணை இலி தன்னையும் அங்கே தலைப் படல் ஆமே. |
7 | ஓங்காரத்து உள் ஒளி உள்ளே உதயம் உற்று ஆங்காரம் அற்ற அனுபவம் கை கூடார் சாங்காலம் உன்னார் பிறவாமை சார் உறார் நீங்காச் சமயத்துள் நின்று ஒழிந்தார்களே. |
20. உட் சமயம் |
1 | இமையவர் தம்மையும் எம்மையும் முன்னம் அமைய வகுத்தவன் ஆதி புராணன் சமையங்கள் ஆறும் தன் தாள் இணை நாட அமையம் குழல் கின்ற ஆதி பிரானே. |
2 | ஒன்று அது பேரூர் வழி ஆறு அதற்கு உள என்றது போல இரு முச் சமயமும் நன்று இது தீது இது என்று உரையாளர்கள் குன்று குரைத்து எழு நாயை ஒத்தார்களே. |
3 | சைவப் பெருமைத் தனி நாயகன் தன்னை உய்ய உயிர்க் கின்ற ஒண் சுடர் நந்தியை மெய்ய பெருமையர்க்கு அன்பனை இன்பம் செய் வையத் தலைவனை வந்து அடைந்து உய்மினே. |
4 | சிவன் அவன் வைத்தது ஓர் தெய்வ நெறியில் பவன் அவன் வைத்த பழ வழி நாடி இவன் அவன் என்பது அறிய வல்லார்கட்கு அவன் அவன் அங்கு உளதாம் கடன் ஆமே. |
5 | ஆம் ஆறு உரைக்கும் அறு சமய ஆதிக்குப் போம் ஆறு தான் இல்லை புண்ணியம் அல்லது அங்கு ஆம் ஆம் வழி ஆக்கும் அவ் வேறு உயிர் கட்கும் போம் ஆறு அவ் ஆதாரப் பூங் கொடியாளே. |
6 | அரன் நெறி ஆவது அறிந்தேனும் நானும் சிர நெறி தேடித் திரிந்த அந்நாளும் உர நெறி உள்ளக் கடல் கடந்து ஏறும் தர நெறி நின்ற தனிச் சுடர் தானே. |
7 | தேர்ந்த அரனை அடைந்த சிவ நெறி பேர்ந்தவர் உன்னிப் பெயர்ந்த பெருவழி ஆர்ந்தவர் அண்டத்துப் புக்க அருள் நெறி போந்து புனைந்து புணர் நெறி ஆமே. |
8 | ஈருமனத்தை இரண்டு அற வீசுமின் ஊரும் சகாரத்தை ஓதுமின் ஓதியே வாரும் அரநெறி மன்னியே முன்னியத் தூரும் சுடர் ஒளி தோன்றலும் ஆமே. |
9 | மினல் குறியாளனை வேதியர் வேதத்து அனல் குறியாளனை ஆதிப் பிரான் தன்னை நினைக் குறியாளனை ஞானக் கொழுந்தின் நயக் குறி காணில் அரன் நெறி ஆமே. |
10 | ஆய்ந்து உணரார் களின் ஆன்மாச் சதுர் பல ஆய்ந்து உணரா வகை நின்ற அரன் நெறி பாய்ந்து உணர்வார் அரன் சேவடி கை தொழு தேர்ந்து உணர் செய்வது ஓர் இன்பமும் ஆமே. |
11 | சைவ சமயத் தனிநாயகன் நந்தி உய்ய வகுத்த குருநெறி ஒன்று உண்டு தெய்வச் சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்து உய்ய வையத்து உளார்க்கு வகுத்து வைத்தானே. |
12 | இத்தவம் அத்தவம் என்று இரு பேர் இடும் பித்தரைக் காணின் நகும் எங்கள் பேர் நந்தி எத்தவம் ஆகில் என் எங்குப் பிறக்கில் என் ஒத்து உணர்வார்க்கு ஒல்லையூர் புகல் ஆமே. |
13 | ஆமே பிரான் முகம் ஐந்தொடும் ஆர் உயிர் ஆமே பிரானுக்கு அதோ முகம் ஆறு உள தாமே பிரானுக்கும் தன் சிர மாலைக்கும் நாமே பிரானுக்கு நரர் இயல்பாமே. |
14 | ஆதிப் பிரான் உலகு ஏழும் அளந்தவன் ஓதக் கடலும் உயிர்களும் ஆய் நிற்கும் பேதிப்பு இலாமையின் நின்ற பராசத்தி ஆதிக் கண் தெய்வமும் அந்தமும் ஆமே. |
15 | ஆய்ந்து அறிவார்கள் அமரர் வித்தியாதரர் ஆய்ந்து அறியா வண்ணம் நின்ற அரன் நெறி ஆய்ந்து அறிந்தேன் அவன் சேவடி கை தொழ ஆய்ந்து அறிந்தேன் இம்மை அம்மை கண்டேனே. |
16 | அறிய ஒண்ணாத அவ் உடம்பின் பயனை அறிய ஒண்ணாத அறு வகை ஆக்கி அறிய ஒண்ணாத அறுவகைக் கோசத்து அறிய ஒண்ணாதது ஓர் அண்டம் பதிந்தே. |
ஆறாம் தந்திரம் 1. சிவகுரு தரிசனம் |
1 | பத்திப் பணித்துப் பரவும் அடி நல்கிச் சுத்த உரையால் துரிசு அறச் சோதித்துச் சத்தும் அசத்தும் சத சத்தும் காட்டலால் சித்தம் இறையே சிவகுரு ஆமே. |
2 | பாசத்தைக் கூட்டியே கட்டிப் பறித்திட்டு நேசித்த காயம் விடிவித்து நேர் நேரே கூசற்ற முத்தியில் கூட்டலா நாட்டதுஅது ஆசற்ற சற்குரு அம்பலம் ஆமே. |
3 | சித்திகள் எட்டொடும் திண் சிவம் ஆக்கிய சுத்தியும் எண் சத்தித் தூய்மையும் யோகத்துச் சத்தியும் மந்திர சாதக போதமும் பத்தியும் நாதன் அருளில் பயிலுமே. |
4 | எல்லா உலகிற்கும் அப்பாலோன் இப்பால் ஆய் நல்லார் உள்ளத்து மிக்கு அருள் நல் கலால் எல்லாரும் உய்யக் கொண்டு இங்கே அளித்த லால் சொல்லார்ந்த நல்குரு சுத்த சிவமே. |
5 | தேவனும் சுத்த குருவும் உபாயத்துள் யாவையும் மூன்றாய் உனக் கண்டு உரையாலே மூவாப்பசு பாசம் மாற்றியே முத்திப்பால் யாவையும் நல்கும் குருபரன் அன்பு உற்றே. |
6 | சுத்த சிவன் குருவாய் வந்து தூய்மை செய்து அத்தனை நல்கு அருள் காணா அதி மூடர் பொய்த் தகு கண்ணான் நமர் என்பர் புண்ணியர் அத்தன் இவன் என்று அடி பணிவாரே. |
7 | உண்மையில் பொய்மை ஒழித்தலும் உண்மைப் பார் திண்மையும் ஒண்மைச் சிவம் ஆய அவ் அரன் வண்மையும் எட்டு எட்டுச் சித்தி மயக்கமும் அண்ணல் அருள் அன்றி யார் அறிவாரே. |
8 | சிவனே சிவ ஞானி ஆதலால் சுத்த சிவனே என அடி சேர வல்லார்க்கு நவம் ஆன தத்துவம் நல் முத்தி நண்ணும் பவம் ஆனது இன்றிப் பரலோகம் ஆமே. |
9 | குருவே சிவம் எனக் கூறினன் நந்தி குருவே சிவம் என்பது குறித்து ஓரார் குருவே சிவனும் ஆய்க் கோனும் ஆய் நிற்கும் குருவே உணர்வு அற்றது ஓர் கோவே. |
10 | சித்தம் யாவையும் சிந்தித்து இருந்திடும் அத்தன் உணர்த்துவது ஆகும் அருளாலே சித்தம் யாவையும் திண் சிவம் ஆனக்கால் அத்தனும் அவ் இடத்தே அமர்ந்தானே. |
11 | தான் நந்தி சீர்மை உள் சந்தித்த சீர் வைத்த கோன் நந்தி எந்தை குறிப்பு அறிவார் இல்லை வான் நந்தி என்று மகிழும் ஒருவற்குத் தான் நந்தி அங்கித் தனிச் சுடர் ஆமே. |
12 | திரு ஆய சித்தியும் முத்தியும் சீர்மை மருளாது அருளும் மயக்கு அறும் வாய்மைப் பொருள் ஆய வேத அந்த போதமும் நாதன் உருவாய் அருளா விடில் ஓர ஒண்ணாதே. |
13 | பத்தியும் ஞான வைராக்கியமும் பர சித்திக்கு வித்து ஆம் சிவோகமே சேர்தலான் முத்தியின் ஞானம் முளைத்தலால் அம்முளை சத்தி அருள் தரில் தான் எளிது ஆமே. |
14 | இன் எய்த வைத்தது ஓர் இன்பப் பிறப்பினை முன் எய்த வைத்த முதல்வனை எம் இறை தன் எய்தும் காலத்துத் தானே வெளிப்படும் மன் எய்த வைத்த மனம் அது தானே. |
15 | சிவம் ஆன ஞானம் தெளிய ஒண் சித்தி சிவம் ஆன ஞானம் தெளிய ஒண் முத்தி சிவம் ஆன ஞானம் சிவ பரத்தே ஏகச் சிவம் ஆன ஞானம் சிவ ஆனந்தம் நல்குமே. |
16 | அறிந்து உணர்ந்தேன் இவ் அகல் இடம் முற்றும் செறிந்து உணர்ந்து ஓதித் திரு அருள் பெற்றேன் மறந்து ஒழிந்தேன் மதி மாண்டவர் வாழ்க்கை பிறிந்து ஒழிந்தேன் இப் பிறவியை நானே. |
3. ஞாதுரு ஞான ஞேயம் |
1 | நீங்காச் சிவ ஆனந்த ஞேயத்தே நின்றிடப் பாங்கு ஆன பாசம் படரா படரினும் ஆங்காரம் நீங்கி அதன் நிலை நிற்கவே நீங்கா அமுதம் நிலை பெறல் ஆமே. |
2 | ஞேயத்தே நின்றோர்க்கு ஞான ஆதி நின்றிடும் ஞேயத்தின் ஞாதுரு ஞேயத்தில் வீடு ஆகும் ஞேயத்தின் ஞேயத்தை ஞேயத்தை உற்றவர் ஆயத்தில் நின்ற அறிவு அறிவாறே. |
3 | தான் என்று அவன் என்று இரண்டு ஆகும் தத்துவம் தான் என்று அவன் என்று இரண்டும் தனில் கண்டு தான் என்ற பூவை அவன் அடி சாத்தினால் நான் என்று அவன் என்கை நல்லது ஒன்று அன்றே. |
4 | வைச்சன வாறு ஆறு மாற்றி எனை வைத்து மெச்சப் பரன்தன் வியாத்துவம் மேல் இட்டு நிச்சயம் ஆக்கிச் சிவம் ஆக்கி ஞேயத்தால் அச்சம் கெடுத்து என்னை ஆண்டனள் நந்தியே. |
5 | முன்னை அறிவு அறியாத அம் மூடர் போல் பின்னை அறிவு அறியாமையைப் பேதித்தான் தன்னை அறியப் பரன் ஆக்கித் தன்சிவத்து என்னை அறிவித்து இருந்தனன் நந்தியே. |
6 | காணாத கண்ணுடன் கேளாத கேள்வியும் கோணாத போகமும் கூடாத கூட்டமும் நாணாத நாணமும் நாத அந்தப் போதமும் காணாய் என வந்து காட்டினன் நந்தியே. |
7 | மோனம் கை வந்தோர்க்கு முத்தியும் கை கூடும் மோனம் கை வந்தோர்க்குச் சித்தியும் முன் நிற்கும் மோனம் கை வந்து ஊமையாம் மொழி முற்றும் காண் மோனம் கை வந்து ஐங் கருமமும் முன்னுமே. |
8 | முத்திரை மூன்றின் முடிந்தது மூன்றின் பால் வைத்த கலை கால் நான் மடங்கான் மாற்றி உய்த் தவத்து ஆனந்தத்து ஒண் குரு பாதத்தே பெத்தம் அறுத்தோர் பிறந்து இறவாரே. |
9 | மேலைச் சொரூபங்கள் மூன்று மிகு சத்தி பாலித்த முத்திரை பற்றும் பரஞானி ஆலித்த நட்டமே ஞேயம் புகுந்து அற்ற மூலச் சொரூபன் மொழிஞா துருவனே. |
4. துறவு |
1 | இறப்பும் பிறப்பும் இருமையும் நீங்கித் துறக்கும் தவம் கண்ட சோதிப் பிரானை மறப்பு இலராய் நித்தம் வாய் மொழிவார் கட்கு அறப்பதி காட்டும் அமரர் பிரானே. |
2 | பிறந்தும் இறந்தும் பல் பேதைமை யாலே மறந்து மல இருள் நீங்க மறைந்து சிறந்த சிவன் அருள் சேர் பருவத்துத் துறந்த உயிர்க்குச் சுடர் ஒளி ஆமே. |
3 | அறவன் பிறப்பு இலி யாரும் இலாதான் உறைவது காட்டு அகம் உண்பது பிச்சை துறவனும் கண்டீர் துறந்தவர் தம்மைப் பிறவி அறுத்திடும் பித்தன் கண்டீரே. |
4 | நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான் நெறியில் வழுவின் நெருஞ்சில் முள் பாயும் நெறியில் வழுவாது இயங்க வல்லார்க்கு நெறியின் நெருஞ்சில் முள் பாய கிலாவே. |
5 | கேடும் கடமையும் கேட்டு வந்து ஐவரும் நாடி வளைந்தது நான் கடவேன் அலேன் ஆடல் விடை உடை அண்ணல் திருவடி கூடும் தவம் செய்த கொள்கையான் தானே. |
6 | உழவன் உழ உழ வானம் வழங்க உழவன் உழவினில் பூத்த குவளை உழவன் உழத்தியர் கண் ஒக்கும் என்று இட்டு உழவன் அதனை உழவு ஒழிந்தானே. |
7 | மேல் துறந்து அண்ணல் விளங்கு ஒளி கூற்றுவன் நாள் துறந்தார்க்கு அவன் நண்பன் அவா இலி கார் துறந்தார்க்கு அவன் கண் நுதலாய் நிற்கும் பார் துறந்தார்க்கே பதம் செயல் ஆமே. |
8 | நாகமும் ஒன்று படம் ஐந்து நால் அது போக முள் புற்றில் பொருந்தி நிறைந்தது ஆகம் இரண்டும் படம் விரித்து ஆட்டு ஒழிந்து ஏகப் படம் செய்து உடம்பு இடம் ஆமே. |
9 | அகன்றார் வழி முதல் ஆதிப் பிரானும் இவன் தான் என நின்று எளியனும் அல்லன் சிவன் தாள் பலபல சீவனும் ஆகும் நயன்றான் வரும் வழி நாம் அறியோமே. |
10 | தூம்பு திறந்தன ஒன்பது வாய்தலும் ஆம்பல் குழலியின் கஞ்சுளிப் பட்டது வேம்பு ஏறிநோக்கினன் மீகாமன் கூரையில் கூம்பு ஏறிக் கோயிலில் பூக்கின்ற வாறே. |
5. தவம் |
1 | ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம் நடுங்குவது இல்லை நமனும் அங்கு இல்லை இடும்பையும் இல்லை இராப் பகல் இல்லை படும் பயன் இல்லை பற்று விட்டோர்க்கே. |
2 | எம் ஆர் உயிரும் இரு நிலத் தோற்றமும் செம் மா தவத்தின் செயலின் பெருமையும் அம்மான் திரு அருள் பெற்றவர் அல்லால் இம் மாதவத்தின் இயல்பு அறியாரே. |
3 | பிறப்பு அறியார் பல பிச்சை செய் மாந்தர் சிறப் பொடு வேண்டிய செல்வம் பெறுவர் மறப்பு இலர் ஆகிய மா தவம் செய்வார் பிறப்பினை நீக்கும் பெருமை பெற்றாரே. |
4 | இருந்து வருந்தி எழில் தவம் செய்யும் பெரும் தன்மையாளரைப் பேதிக்க என்றே இருந்து இந்திரன் எவரே வரினும் திருந்து நும் தம் சிந்தை சிவன் அவன் பாலே. |
5 | கரந்தும் கரந்து இலன் கண்ணுக்கும் தோன்றான் பரந்த சடையன் பசும்பொன் நிறத்தன் அரும்தவர்க்கு அல்லால் அணுகலும் ஆகான் விரைந்து தொழப்படும் வெண்மதி ஆனே. |
6 | அமைச்சரும் ஆனைக் குழாமும் அரசும் பகைத்து எழும் பூசல் உட்பட்டார் நடுவே அமைத்தது ஓர் ஞானமும் ஆத்தமும் நோக்கி இமைத்து அழியாது இருந்தார் தவத்தாரே. |
7 | சாத்திரம் ஓதும் சதுர்களை விட்டு நீர் மாத்திரைப் போது மறித்து உள்ளே நோக்கு மின் பார்த்த அப் பார்வை பசுமரத்து ஆணி போல் ஆர்த்த பிறவி அகல விட்டு ஓடுமே. |
8 | தவம் வேண்டும் ஞானம் தலைபட வேண்டில் தவம் வேண்டா ஞான சாமாதிகை கூடில் தவம் வேண்டா அச் சக மார்க்கத் தோர்க்குத் தவம் வேண்டா மாற்றம் தனை அறியாரே. |
6. தவ நிந்தை |
1 | ஓதலும் வேண்டாம் உயிர்க்கு உயிர் உள் உற்றால் காதலும் வேண்டாம் மெய்க் காயம் இடம் கண்டால் சாதலும் வேண்டாம் சமாதிகை கூடினால் போதலும் வேண்டாம் புலன்வழி போகார்க்கே. |
2 | கத்தவும் வேண்டாம் கருத்து அறிந்து ஆறினால் சத்தமும் வேண்டாம் சமாதிகை கூடினால் சுத்தமும் வேண்டாம் துடக்கு அற்று நிற்றல் ஆல் சித்தமும் வேண்டாம் செயல் அற்று இருக்கிலே. |
3 | விளைவு அறிவார் பண்டை மெய்த்தவம் செய்வார் விளைவு அறிவார் பண்டை மெய் செய்வார் விளைவு அறிவார் பண்டை மெய் அறம் செய்வார் விளைவு அறிவார் விண்ணின் மண்ணின் மிக்காரே. |
4 | கூடித் தவம் செய்து கண்டேன் குரை கழல் தேடித் தவம் செய்து கண்டேன் சிவ கதி வாடித் தவம் செய்வதே தவம் இவை களைந்து ஊடில் பல உலகோர் எத்தவரே. |
5 | மனத்து உறை மா கடல் ஏழும் கை நீந்தித் தவத்து இடையாளர் தம் சார்வத்து வந்தார் பவத்து இடையாளர் அவர் பணி கேட்கின் முகத்து இடை நந்தியை முந்தலும் ஆமே. |
6 | மனத்து இடை நின்ற மதிவாள் உருவி இனத்து இடை நீக்கி இரண்டு அற ஈர்த்துப் புனத்து இடை அஞ்சும் போகாமல் மறித்தால் தவத்து இடை ஆறொளி தன் ஒளி ஆமே. |
7 | ஒத்து மிகவும் நின்றானை உரைப்பது பத்தி கொடுக்கும் பணிந்து அடியார் தொழ முத்தி கொடுக்கும் முனிவன் எனும் பதம் சத்தான செய்வது தான் தவம் தானே. |
8 | இலை தொட்டுப் பூப் பறித்து எந்தைக்கு என்று எண்ணி மலர் தொட்டுக் கொண்டேன் வரும் புனல் காணேன் தலை தொட்ட நூல் கண்டு தாழ்ந்தது என் உள்ளம் தலை தொட்டுக் கண்டேன் தவம் கண்ட வாறே. |
9 | படர் சடை மா தவம் பற்றிய பத்தர்க்கு இடர் அடையா வண்ணம் ஈசன் அருளும் இடர் அடை செய்தவர் மெய்த்தவம் நோக்கில் உடர் அடை செய்வது ஒரு மனத்து ஆமே. |
10 | ஆற்றில் கிடந்த முதலை கண்டு அஞ்சிப் போய் ஈற்றுக் கரடிக்கு எதிர்ப்பட்ட தன் ஒக்கும் நோற்றுத் தவம் செய்யார் நூல் அறியாதவர் சோற்றுக்கு நின்று சுழல்கின்ற வாறே. |
11 | பழுக் கின்ற வாறும் பழம் உண்ணும் ஆறும் குழக் கன்று துள்ளியக் கோணியைப் பல்கால் குழக் கன்று கொட்டிலில் கட்டவல்லார்க்கு உள் இழுக் காது நெஞ்சத்து இட ஒன்றும் ஆமே. |
12 | சித்தம் சிவம் ஆகச் செய் தவம் வேண்டா ஆல் சித்தம் சிவ ஆனந்தம் சேர்ந்தோர் உறவு உண்டால் சித்தம் சிவம் ஆகவே சித்தி முத்தி ஆம் சித்தம் சிவம் ஆதல் செய்தவப் பேறே. |
7. அருள் உடைமையின் ஞானம் வருதல் |
1 | பிரான் அருள் உண்டு எனில் உண்டு நல் செல்வம் பிரான் அருள் உண்டு எனில் உண்டு நல் ஞானம் பிரான் அருளில் பெரும் தன்மையும் உண்டு பிரான் அருளில் பெரும் தெய்வமும் ஆமே. |
2 | தமிழ் மண்டலம் ஐந்தும் தாவிய ஞானம் உமிழ்வது போல உலகம் திரிவார் அவிழும் மனமும் எம் ஆதி அறிவும் தமிழ் மண்டலம் ஐந்தும் தத்துவம் ஆமே. |
3 | புண்ணியம் பாவம் இரண்டு உள பூமியில் நண்ணும் பொழுது அறிவார் சில ஞானிகள் எண்ணி இரண்டையும் வேர் அறுத்துப்புறத்து அண்ணல் இருப்பிடம் ஆய்ந்து கொள்வீரே. |
4 | முன் நின்று அருளும் முடிகின்ற காலத்து நல் நின்று உலகில் நடு உயிராய் நிற்கும் பின் நின்று அருளும் பிறவியை நீக்கிடும் முன் நின்று எனக்கு ஒரு முத்தி தந்தானே. |
5 | சிவன் அருளால் சிலர் தேவரும் ஆவர் சிவன் அருளால் சிலர் தெய்வத்தோடு ஒப்பர் சிவன் அருளால் வினை சேர கிலாமை சிவன் அருள் கூடின் அச் சிவலோகம் ஆமே. |
6 | புண்ணியன் எந்தை புனிதன் இணை அடி நண்ணி விளக்கு என ஞானம் விளைந்தது மண்ணவர் ஆவதும் வானவர் ஆவதும் அண்ணல் இறைவன் அருள் பெற்ற போதே. |
7 | காயத் தேர் ஏறி மனப் பாகன் கை கூட்ட மாயத் தேர் ஏறி மங்கும் அவை உணர் நேயத் தேர் ஏறி நிமலன் அருள் பெற்றால் ஆயத் தேர் ஏறி அவன் இவன் ஆமே. |
8 | கதிர் கண்ட காந்தம் கனலின் வடிவு ஆம் மதி கண்ட காந்தம் மணி நீர் வடிவு ஆம் சதி கொண்ட சாக்கி எரியின் வடிவு ஆம் எரி கொண்ட ஈசன் எழில் வடிவு ஆமே. |
9 | நாடும் உறவும் கலந்து எங்கள் நந்தியைத் தேடுவன் தேடிச் சிவ பெருமான் என்று கூடுவன் கூடிக் குறை கழற்கே செல்ல வீடும் அளவும் விடுகின்றிலேனே. |
8. அவ வேடம் |
1 | ஆடம்பரம் கொண்டு அடிசில் உண்பான் பயன் வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள் ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும் தேடியும் காணீர் சிவன் அவன் தாள் களே. |
2 | ஞானம் இல்லார் வேடம் பூண்டு இந்த நாட்டு இடை ஈனம் அதே செய்து இரந்து உண்டு இருப்பினும் மானம் நலம் கெடும் வையகம் பஞ்சம் ஆம் ஈனவர் வேடம் கழிப்பித்தல் இன்பமே. |
3 | இன்பமும் துன்பமும் நாட்டார் இடத்து உள்ள நன் செயல் புன் செயலால் அந்த நாட்டிற்கு ஆம் என்ப இறை நாடி நாள் தோறும் நாட்டினில் மன் பதை செப்பம் செயின் வையம் வாழுமே. |
4 | இழிகுலத்தோர் வேடம் பூண்பர் மேல் எய்த வழி குலத்தோர் வேடம் பூண்பர்தே ஆகப் பழிகுலத்து ஆகிய பாழ் சண்டர் ஆனார் கழி குலத்தோர்கள் களையப் பட்டோரே. |
5 | பொய்த்தவம் செய்வார் புகுவர் நரகத்துப் பொய்த்தவம் செய்தவர் புண்ணியர் ஆகார் ஏல் பொய்த்தவம் மெய்த்தவம் போகத்துள் போக்கி அம் சத்திய ஞானத்தால் தங்கும் தவங்களே. |
6 | பொய் வேடம் பூண்பர் பொசித்தல் பயன் ஆக மெய் வேடம் பூண்போர் மிகு பிச்சைகைக் கொள்வர் பொய் வேடம் மெய் வேடம் போலவே பூணினும் உய் வேடம் ஆகும் உணர்ந்து அறிந்தோர்க்கே. |
9. தவவேடம் |
1 | தவம் மிக்கவரே தலையான வேடர் அவம் மிக்கவரே அதி கொலை வேடர் அவம் மிக்கவர் வேடத்து ஆகார் அவ் வேடம் தவம் மிக்கவர்க்கு அன்றித் தாங்க ஒண்ணாதே. |
2 | பூதி அணிவது சாதனம் ஆதியில் காது அணி தாம்பிர குண்டலம் கண்டிகை ஓதி அவர்க்கும் உருத்திர சாதனம் தீது இல் சிவ யோகி சாதனம் தேரிலே. |
3 | யோகிக்கு இடும் அதுவுள் கட்டுக் கஞ்சுளி தோகைக்குப் பாசத்துச் சுற்றும் சடை அது ஒன்று ஆகத்து நீறு அணி ஆங்கு அக் கபாலம் சீகத்த மாத்திரை திண் பிரம்பு ஆகுமே. |
4 | காது அணி குண்டலம் கண்டிகை நாதமும் ஊது நல் சங்கும் உயர் கட்டி கப்பரை ஏதம் இல் பாதுகம் யோகாந்த மா தனம் ஏதல் இல் யோக பட்ட அம் தண்டம் ஈர் ஐந்தே. |
10. திருநீறு |
1 | நூலும் சிகையும் உணரார் நின் மூடர்கள் நூல் அது வேத அந்தம் நுண் சிகை ஞானம் ஆம் பால் ஒன்றும் அந்தணர் பார்ப்பார் பரம் உயிர் ஓர் ஒன்று இரண்டினில் ஓங்காரம் ஓதிலே. |
2 | கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை மங்காமல் பூசி மகிழ்வரே யாம் ஆகில் தங்கா வினைகளும் சாரும் சிவகதி சிங்காரம் ஆன திருவடி சேர்வரே. |
3 | அரசுடன் ஆலத்தி ஆகும் அக்காரம் விரவு கனலில் வியன் உரு மாறி நிரவயன் நின்மலன் தாள் பெற்ற நீதர் உருவம் பிரமன் உயர் குலம் ஆகுமே. |
11. ஞான வேடம் |
1 | ஞானம் இலார் வேடம் பூண்டும் நரகத்தார் ஞானம் உள்ளார் வேடம் இன்று எனில் நல் முத்தர் ஞானம் உளது ஆக வேண்டுவோர் நக்கன்பால் ஞானம் உள வேடம் நண்ணி நிற்பாரே. |
2 | புன் ஞானத்தோர் வேடம் பூண்டும் பயன் இல்லை நல் ஞானத்தோர் வேடம் பூணார் அருள் நண்ணித் துன் ஞானத்தோர் சமய துரிசு உள்ளோர் பின் ஞானத்தோர் ஒன்றும் பேச கில்லாரே. |
3 | சிவ ஞானி கட்கும் சிவ யோகி கட்கும் அவம் ஆன சாதனம் ஆகாது தேரில் அவம் ஆம் அவர்க்கு அது சாதனம் நான்கும் உவமானம் இல் பொருள் உள் உறம் ஆமே. |
4 | கத்தித் திரிவர் கழுவடி நாய் போல் கொத்தித் திரிவர் குரக்களி ஞாளிகள் ஒத்துப் பொறியும் உடலும் இருக்கவே செத்துத் திரிவர் சிவஞானி யோர்களே. |
5 | அடியார் அவரே அடியார் அலா தார் அடியாரும் ஆகார் அவ் வேடமும் ஆகார் அடியார் சிவ ஞானம் ஆனது பெற்றோர் அடியார் அலாதார் அடியார்கள் அன்றே. |
6 | ஞானிக்குச் சுந்தர வேடமும் நல்ல ஆம் தான் உற்ற வேடமும் தன் சிவ யோகமே ஆன அவ்வேடம் அருள் ஞான சாதனம் ஆனது ஆம் ஒன்றும் ஆகாது அவனுக்கே. |
7 | ஞானத்தினால் பதம் நண்ணும் சிவ ஞானி தானத்தில் வைத்த தனி ஆலயத்தன் ஆம் மோனத்தின் ஆதலின் முத்தன் ஆம் சித்தன் ஆம் ஏனைத் தவசி இவன் எனல் ஆகுமே. |
8 | தான் அற்ற தன்மையும் தான் அவன் ஆதலும் ஏனைய அச் சிவம் ஆன இயற்கையும் தான் உறு சாதக முத்திரை சாத்தலும் ஏனமும் நந்தி பத முத்தி பெற்றதே. |
12. சிவவேடம் |
1 | அருளால் அரனுக்கு அடிமை அது ஆகிப் பொருள் ஆம் தனது உடல் பொன் பதி நாடி இருள் ஆனது இன்றி இரும் செயல் அற்றோர் தெருள் ஆம் அடிமைச் சிவ வேடத்தோரே. |
2 | உடலில் துவக்கிய வேடம் உயிர்க்கு ஆகா உடல் கழன்றால் வேடம் உடனே கழலும் உடல் உயிர் உண்மை என்று ஓர்ந்து கொள்ளாதார் கடலில் அகப்பட்ட கட்டை ஒத்தாரே. |
3 | மயல் அற்று இருள் அற்று மா மனம் அற்று கயல் உற்ற கண்ணியர் கை இணக்கு அற்றுத் தயல் அற்றவரோடும் தாமே தாம் ஆகிச் செயல் அற்று இருப்பார் சிவ வேடத்தாரே. |
4 | ஓடும் குதிரைக் குசை திண்ணம் பற்றுமின் வேடம் கொண்டு என் செய்வீர் வேண்டா மனிதரே நாடுமின் நந்தியை நம் பெருமான் தன்னைத் தேடும் இன்பப் பொருள் சென்று எய்தலாமே. |
13. அபக்குவன் |
1 | குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார் குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார் குருடும் குருடும் குருட்டு ஆட்டம் ஆடிக் குருடும் குருடும் குழிவிழும் ஆறே. |
2 | மனத்தில் எழுந்தது ஓர் மாயக் கண்ணாடி நினைப்பின் அதனின்ல் நிழலையும் காணார் வினைப் பயன் போக விளக்கியும் கொள்ளார் புறக் கடை இச்சித்துப் போகின்ற வாறே. |
3 | ஏய் எனில் என் என மாட்டார் பிரசைகள் வாய் முலை பெய்ய மதுர நின்று ஊறிடும் தாய் முலை ஆவது அறியார் தமர் உளோர் ஊன் நிலை செய்யும் உரு இலிதானே. |
4 | வாய் ஒன்று சொல்லி மனம் ஒன்று சிந்தித்து நீ ஒன்று செய்யல் உறுதி நெடும் தகாய் தீ என்று இங்கு உன்னைத் தெளிவன் தெளிந்தபின் பேய் என்று இங்கு என்னைப் பிறர் தெளியாரே. |
5 | பஞ்சத் துரோகத்துப் பாதகர் தம்மை அஞ்சச் சமயத்தோர் வேந்தன் அரும் தண்டம் விஞ்சச் செய்து இப்புவி வேறே விடா விடில் பஞ்சத்து உளாய்ப் புவி முற்றும் பாழ் ஆகுமே. |
6 | தவத்து இடை நின்றவர் தாம் உண்ணும் கன்மம் சிவத்து இடை நின்றது தேவர் அறியார் தவத்து இடை நின்று அறியாதவர் எல்லாம் பவத்து இடை நின்றது ஓர் பாடு அது ஆமே. |
7 | கன்றலும் கருதலும் கருமம் செய்தலும் நின்றலும் சுவைத்தலும் தீமை செய்தலும் பின்றலும் பிறங்கலும் பெருமை கூறலும் என்று இவை இறை பால் இயற்கை அல்லவே. |
8 | விடிவது அறியார் வெளி காண மாட்டார் விடியில் வெளியில் விழிக்கவும் மாட்டார் கடியது ஓர் உண்மை கட்டு மின் காண்மின் விடியாமை காக்கும் விளக்கு அது ஆமே. |
9 | வைத்த பசு பாச மாற்று நெறி வைகிப் பெத்தம் அற முத்தன் ஆகிப் பிறழ் உற்றுத் தத்துவம் உன்னித் தலைப் படாது அவ்வாறு பித்து ஆன சீடனுக்கு ஈயப் பெறாது ஆனே. |
10 | மன்னும் மலம் ஐந்தும் மாற்றும் வகை ஓரான் துன்னிய காமம் ஆதி தோயும் தொழில் நீங்கான் பின்னிய பொய்யன் பிறப்பு இறப்பு அஞ்சாதான் அன்னியன் ஆவன் அசல் சீடன் ஆமே. |
4. பக்குவன் |
1 | தொழில் அறிவாளர் சுருதி கண் ஆகப் பழுது அறியாத பரம குருவை வழி அறிவார் நல்வழி அறிவாளர் அழிவு அறிவார் மற்றை அல்லாதவரே. |
2 | பதைத்து ஒழிந்தேன் பரமா உனை நாடி அதைத்து ஒழிந்தேன் இனி யாரொடும் கூடேன் சிதைத்து அடியேன் வினை சிந்தனை தீர உதைத்து உடையாய் உகம் தாண்ட அருளாயே. |
3 | பதைக்கின்ற போதே பரம் என்னும் வித்தை விதைக் கின்ற வித்தினை மேல் நின்று நோக்கிச் சிதைக் கின்ற சிந்தையைச் செவ்வே நிறுத்தி இசைக் கின்ற அன்பருக்கு ஈயலும் ஆமே. |
4 | கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக உள்ள பொருள் உடல் ஆவியுடன் ஈக எள்ளத் தனையும் இடைவிடதே நின்று தெள்ளி அறியச் சிவ பதம் தானே. |
5 | சோதி விசாகம் தொடர்ந்து இரு தேள் நண்டு ஓதிய நாளே உணர்வது தான் என்று நீதியுள் நீர்மை நினைந்தவர்க்கு அல்லது ஆதியும் ஏதும் அறிய கிலானே. |
6 | தொழில் ஆரம் ஆம் மணித் தூய்தான சிந்தை எழிலால் இறைவன் இடம் கொண்ட போதே விழலார் விறல் ஆம் வினை அது போகக் கழல் ஆர் திருவடி கண்ட அருள் ஆமே. |
7 | சாத்திகன் ஆய்ப் பர தத்துவம் தான் உன்னி ஆத்திக பேத நெறி தோற்றம் ஆகியே ஆர்த்த பிறவியின் அஞ்சி அற நெறி சாத்த வல்லான் அவன் சற் சீடன் ஆமே. |
8 | சத்தும் அசத்தும் எவ்வாறு எனந் தான் உன்னிச் சித்தை உறுக்கிச் சிவன் அருள் கை காட்டப் பத்தியின் ஞானம் பெறப் பணிந்தான் அந்தச் சத்தியில் இச்சைத் தகுவோன் சற் சீடனே. |
9 | அடி வைத்து அருளுதி ஆசான் நின்று உன்னா அடி வைத்த மா முடி மாயப் பிறவி அடி வைத்த காய அருள் சத்தி யாலே அடி பெற்ற ஞானத்தன் ஆசற்று உளோனே. |
10 | சீராரு ஞானத்தின் இச்சை செலச்செல்ல வாராத காதல் குருபரன் பால் ஆகச் சாராத சாதக நான்கும் தன் பால் உற்றோன் ஆராயும் ஞானத்தன் ஆம் அடிவைக்கவே. |
11 | உணர்த்து மதி பக்குவர்க்கே உணர்த்தி இணக்கில் பராபரத்து எல்லையுள் இட்டுக் குணக்கொடு தெற்குத் தர பச்சிமம் கொண்டு உணர்த்துமின் நாவுடையாள் தன்னை உன்னியே. |
12 | இறை அடி தாழ்ந்து ஐ வணக்கமும் எய்திக் குறை அது கூறிக் குணம் கொண்டு போற்றச் சிறை உடல் நீ அறக் காட்டிச் சிவத்தோடு அறிவுக்கு அறிவிப்போன் சன்மார்க்கி ஆமே. |
13 | வேட்கை விடு நெறி வேதாந்தம் ஆதலால் வாழ்க்கைப் புனல் வழி மாற்றிச் சித்தாந்தத்து வேட்கை விடும் மிக்க வேதாந்தி பாதமே தாழ்க்கும் தலையினோன் சற் சீடன் ஆமே. |
14 | சற்குணம் வாய்மை தயா விவேகம் தண்மை சற்குரு பாதமே சாயை போல் நீங்காமே சிற்பர ஞானம் தெளியத் தெளிவோர்தல் அற்புதமே தோன்றல் ஆகும் சற் சீடனே. |
ஏழாம் தந்திரம் 1. ஆறாதாரம் |
1 | நாலும் இருமூன்றும் ஈர் ஐந்தும் ஈர் ஆறும் கோலி மேல் நின்ற குறிகள் பதினாறும் மூலம் கண்டு ஆங்கே முடிந்து முதல் இரண்டும் காலம் கண்டான் அடி காணலும் ஆமே. |
2 | ஈர் ஆறு நாதத்தில் ஈர் எட்டாம் அந்தத்தின் மேதாதி நாத அந்த மீதாம் பராசத்தி போத அலயத்த விகாரம் தனில் போத மேதாதி ஆதாரம் ஈது ஆன உண்மையே. |
3 | மேல் என்றும் கீழ் என்று இரண்டு அறக் காணுங்கால் தான் என்றும் நான் என்றும் தன்மைகள் ஓர் ஆறும் பார் எங்கும் ஆகிப் பரந்த பராபரம் கார் ஒன்று கற்பகம் ஆகி நின்றானே. |
4 | மேதாதி யாலே விடாதோம் எனத் தூண்டி ஆதார சோதனை அத்துவ சோதனை தாதாரம் ஆகவே தான் எழச் சாதித்தால் ஆதாரம் செய் போகம் ஆவது காயமே. |
5 | ஆறு அந்தமும் கூடி ஆகும் உடம்பினில் கூறிய ஆதாரம் மற்றும் குறிக் கொண்மின் ஆறிய அக்கரம் ஐம்பதின் மேலே ஊறிய ஆதாரத்து ஓர் எழுத்து ஆமே. |
6 | ஆகும் உடம்பும் அழிக்கின்ற அவ்வுடல் போகும் உடம்பும் பொருந்திய வாறுதான் ஆகிய அக்கரம் ஐம்பது தத்துவம் ஆகும் உடம்புக்கும் ஆறந்தம் ஆமே. |
7 | ஆயு மலரின் அணிமலர் மேல் அது ஆய இதழும் பதினாறும் அங்கு உள தூய அறிவு சிவானந்தம் ஆகிப் போய் மேய அறிவாய் விளைந்தது தானே. |
2. அண்ட லிங்கம் |
1 | இலிங்கம் அது ஆவது யாரும் அறியார் இலிங்கம் அது ஆவது எண் திசை எல்லாம் இலிங்கம் அது ஆவது எண் எண் கலையும் இலிங்கம் அது ஆக எடுத்தது உலகே. |
2 | உலகில் எடுத்தது சத்தி முதலா உலகில் எடுத்தது சத்தி வடிவாய் உலகில் எடுத்தது சத்தி குணமாய் உலகம் எடுத்த சதாசிவன் தானே. |
3 | போகமும் முத்தியும் புத்தியும் சித்தியும் ஆகமும் ஆறு ஆறு தத்துவத்து அப்பால் ஆம் ஏகமும் நல்கி இருக்கும் சாதா சிவம் ஆகம துத்துவா ஆறும் சிவமே. |
4 | ஏத்தினர் எண் இலி தேவர் எம் ஈசனை வாழ்த்தினர் வாசப் பசும் தென்றல் வள்ளல் என்று ஆர்த்தனர் அண்டம் கடந்தப் புறநின்று காத்தனர் என்னும் கருத்து அறியாரே. |
5 | ஒண் சுடரோன் அயன் மால் பிரசா பதி ஒண் சுடர் ஆன இரவியோடு இந்திரன் கண் சுடர் ஆகிக் கலந்து எங்கும் தேவர்கள் தண் சுடராய் எங்கும் தற்பரம் ஆமே. |
6 | தாபரத்து உள் நின்று அருள வல்லான் சிவன் மாபரத்து உண்மை வழி படுவார் இல்லை மாபரத்து உண்மை வழிபடுவாளர்க்கும் பூவகத்து உள்நின்ற பொன் கொடி ஆகுமே. |
7 | தூய விமானமும் தூலம் அது ஆகும் ஆல் ஆய சதா சிவம் ஆகும் நல் சூக்குமம் பாய பலி பீடம் பத்திர லிங்கம் ஆம் ஆய அரன் நிலை ஆய்ந்து கொள்வார் கட்கே. |
8 | முத்துடன் மாணிக்கம் மொய்த்த பவளமும் கொத்தும் அக் கொம்பு சிலை நீறு கோமளம் அத்தன் தன் ஆகமம் அன்னம் அரிசி ஆம் உய்த்த தின் சாதனம் பூமண லிங்கமே. |
9 | துன்றும் தயிர் நெய் பால் துய்ய மெழுகுடன் கன்றிய செம்பு கனல் இரதம் சலம் வன்திறல் செங்கல் வடிவு உடை வில்லம் பொன் தென்றி அம் கொன்றை தெளி சிவ லிங்கமே. |
10 | அது உணர்ந்தோன் ஒரு தன்மையை நாடி எது உணரா வகை நின்றனன் ஈசன் புது உணர்வான புவனங்கள் எட்டும் இது உணர்ந்து என் உடல் கோயில் கொண்டானே. |
11 | அகல் இடமாய் அறியாமல் அடங்கும் உகல் இடமாய் நின்ற ஊன் அதன் உள்ளே பகல் இடம் ஆம் முனம் பாவ வினாசன் புகல் இடம் ஆய் நின்ற புண்ணியன் தானே. |
12 | போது புனை கழல் பூமி அது ஆவது மாது புனை முடி வானகம் ஆவது நீதியுள் ஈசன் உடல் விசும்பாய் நிற்கும் ஆதி உற நின்றது அப்பரிசு ஆமே. |
13 | தரை உற்ற சத்தி தனி லிங்கம் விண்ணாம் திரை பொரு நீர் அது மஞ்சன சாலை வரை தவழ் மஞ்சுநீர் வானுடு மாலை கரை அற்ற நந்தி கலை உந்திக்கு ஆமே. |
3. பிண்டலிங்கம் |
1 | மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம் மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம் மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம் மானுடர் ஆக்கை வடிவு திருக் கூத்தே. |
2 | உலந்து இலர் பின்னும் உளர் என நிற்பர் நிலம்தரு நீர் தெளி ஊன் அவை செய்யப் புலம் தரு பூதங்கள் ஐந்தும் ஒன்று ஆக வலம் தரு தேவரை வந்தி செய்யீரே. |
3 | கோயில் கொண்டு அன்றே குடிகொண்ட ஐவரும் வாயில் கொண்டு ஆங்கே வழிநின்று அருளுவர் தாயில் கொண்டால் போல் தலைவன் என் உள் புக வாயில் கொண்டு ஈசனும் ஆள வந்தானே. |
4 | கோயில் கொண்டான் அடி கொல்லைப் பெருமறை வாயில் கொண்டான் அடி நாடிகள் பத்து உள பூசை கொண்டான் புலன் ஐந்தும் பிறகு இட்டு வாயில் கொண்டான் எங்கள் மா நந்தி தானே. |
4. சதாசிவ லிங்கம் |
1 | கூடிய பாதம் இரண்டும் படி மிசை பாடிய கை இரண்டு எட்டும் பரந்து எழுந்து தேடுமுகம் ஐந்து செங் கணின் மூ ஐந்து நாடும் சதா சிவ நல் ஒளி முத்தே. |
2 | வேதா நெடுமால் உருத்திரன் மேல் ஈசன் மீது ஆன ஐம் முகன் விந்துவும் நாதமும் ஆதார சத்தியும் அந்தச் சிவனொடும் சாதாரணம் ஆம் சதா சிவம் தானே. |
3 | ஆகின்ற சத்தியின் உள்ளே கலை நிலை ஆகின்ற சத்தியின் உள்ளே கதிர் எழ ஆகின்ற சத்தியின் உள்ளே அமர்ந்த பின் ஆகின்ற சத்தி உள் அத்திசை பத்தே. |
4 | அத்திசைக்கு உள்ளே அமர்ந்தன ஆறு அங்கம் அத்திசைக்கு உள்ளே அமர்ந்தன நால்வேதம் அத்திசைக்கு உள்ளே அமர்ந்த சரியையோடு அத்திசைக்கு உள்ளே அமர்ந்த சமயமே. |
5 | சமயத்து எழுந்த அவத்தை ஈர் ஐந்து உள சமயத்து எழுந்த இராசி ஈர் ஆறு உள சமயத்து எழுந்த சதி ஈர் ஆறு எட்டு உள சமயத்து எழுந்த சதா சிவம் தானே. |
6 | நடுவு கிழக்குத் தெற்குத் தர மேற்கு நடுவு படிக நல் குங்கும வன்னம் அடைவு உள அஞ்சனம் செவ்வரத் தம்பால் அடியேற்கு அருளிய முகம் இவை அஞ்சே. |
7 | அஞ்சு முகம் உள ஐம் மூன்று கண் உள அஞ்சினோடு அஞ்சு கரதலம் தான் உள அஞ்சுடன் அஞ்சு ஆயுதம் உள நம்பி என் நெஞ்சு புகுந்து நிறைந்து நின்றானே. |
8 | சத்தி தராதலம் அண்டம் சதா சிவம் சத்தி சிவம் மிக்க தாபரம் சங்கமம் சத்தி உருவம் அருவம் சதாசிவம் சத்தி சிவ தத்துவம் முப்பத்து ஆறே. |
9 | தத்துவம் ஆவது அருவம் சராசரம் தத்துவம் ஆவது உருவம் சுகோதயம் தத்துவம் எல்லாம் சகலமும் ஆய் நிற்கும் தத்துவம் ஆகும் சதா சிவன் தானே. |
10 | கூறுமின் ஊறு சதா சிவன் எம் இறை வேறு ஓர் செய்து மிகைப் பொருளாய் நிற்கும் ஏறு செய் தொழில் வானவர் தம்மொடு மாறு செய்வான் என் மனம் புகுந்தானே. |
11 | இருள் ஆர்ந்த கண்டமும் ஏந்து மழுவும் சுருள் ஆர்ந்த செஞ் சடைச் சோதிப் பிறையும் அருள் ஆர்ந்த சிந்தை எம் ஆதிப் பிரானைத் தெருள் ஆர்ந்து என் உள்ளே தெளிந்து இருந்தேனே. |
12 | சத்தி தான் நிற்கின்ற ஐம் முகம் சாற்றிடில் உத்தரம் வாமம் உரையற்று இருந்திடும் தத்துவம் பூருவம் தற்புருடன் சிரம் அத் தகு கோரம் மகுடத்து ஈசனே. |
13 | நாணு நல் ஈசான நடுஉச்சி தான் ஆகும் தாணுவின் தன் முகந்து தற் புருடம் ஆகும் காணும் அகோரம் இருதயம் குய்யமாம் மாண் உற வாமம் ஆம் சத்தி நல் பாதமே. |
14 | நெஞ்சு சிரம் சிகை நீள் கவசம் கண் ஆம் வஞ்சம் இல் விந்து வளர் நிறம் பச்சை ஆம் செஞ்சு உறு செஞ் சுடர் சேகரி மின் ஆகும் செஞ் சுடர் போலும் தெசாயுதம் தானே. |
15 | எண் இல் இதயம் இறை ஞான சத்தி ஆம் விண்ணில் பரை சிரமிக்க சிகை ஆதி வண்ணக் கவசம் வனப்பு உடை இச்சை ஆம் பண்ணும் கிரியை பர நேத்திரத்திலே. |
16 | சத்தி நால் கோணம் சலம் உற்று நின்றிடும் சத்தி அறு கோணம் சயனத்தை உற்றிடும் சத்தி நல் வட்டம் சலம் உற்று இருந்திடும் சத்தி உரு ஆம் சதா சிவன் தானே. |
17 | மா நந்தி எத்தனை காலம் அழைக்கினும் தா நந்தி அஞ்சின் தனிச்சுடராய் நிற்கும் கால் நந்தி உந்தி கடந்து கமலத்தின் மேல் நந்தி ஒன்பதின் மேவி நின்றானே. |
18 | ஒன்றிய வாறும் உடலின் உடன் கிடந்து என்றும் எம் ஈசன் நடக்கும் இயல்பு அது தென் தலைக்கு ஏறத் திருந்தும் சிவன் அடி நின்று தொழுதேன் என் நெஞ்சத்தின் உள்ளே. |
19 | உணர்ந்தேன் உலகினில் ஒண் பொருளானைக் கொணர்ந்தேன் குவலயம் கோயில் என் நெஞ்சம் புணர்ந்தேன் புனிதனும் பொய் அல்ல மெய்யே பணிந்தேன் பகலவன் பாட்டும் ஒலியே. |
20 | ஆங்கு அவை மூன்றினும் ஆர் அழல் வீசிடத் தாங்கிடும் ஈர் ஏழு தான் நடு ஆனதில் ஓங்கிய ஆதியும் அந்தமும் ஆம் என ஈங்கு இவை தம் உடல் இந்துவும் ஆமே. |
21 | தன் மேனி தன் சிவலிங்கம் ஆய் நின்றிடும் தன் மேனி தானும் சதா சிவம் ஆய் நிற்கும் தன் மேனி தன் சிவன் தன் சிவ ஆனந்தம் ஆம் தன் மேனி தான் ஆகும் தற்பரம் தானே. |
22 | ஆரும் அறியார் அகாரம் அவன் என்று பாரும் உகாரம் பரந்திட்ட நாயகி தாரம் இரண்டும் தரணி முழுதும் ஆய் மாறி எழுந்திடும் ஓசை அது ஆமே. |
23 | இலிங்க நல் பீடம் இசையும் ஓங் காரம் இலிங்க நல் கண்ட நிறையும் மகாரம் இலிங்கத்து உள் வட்ட நிறையும் உகாரம் இலிங்க மகார நிறை விந்து நாதமே. |
5. ஆத்தும லிங்கம் |
1 | அகாரம் முதலாய் அனைத்தும் ஆய் நிற்கும் உகாரம் முதல் ஆய் உயிர்ப்பு எய்து நிற்கும் அகார உகாரம் இரண்டும் அறியில் அகார உகாரம் இலிங்கம் அது ஆமே. |
2 | ஆதாரம் மாதேயம் ஆகின்ற விந்துவும் மேதாதி நாதமும் மீதே விரிந்தன ஆதார விந்து அதி பீட நாதமே போதா இலிங்கப் புணர்ச்சி அது ஆமே. |
3 | சத்தி சிவம் ஆம் இலிங்கமே தாபரம் சத்தி சிவம் ஆம் இலிங்கமே சங்கமம் சத்தி சிவம் ஆம் இலிங்கம் சதாசிவம் சத்தி சிவம் ஆகும் தாபரம் தானே. |
4 | தான் நேர் எழுகின்ற சோதியைக் காணலாம் வான் நேர் எழுகின்ற ஐம்பதம் அமர்ந்திடம் பூ நேர் எழுகின்ற பொன் கொடி தன்னுடன் தான் நேர் எழுகின்ற வகாரம் அது தாமே. |
5 | விந்துவும் நாதமும் மேவும் இலிங்கம் ஆம் விந்து அதே பீட நாத இலிங்கம் ஆம் அந்த இரண்டையும் ஆதார தெய்வம் ஆய் வந்த கரு ஐந்தும் செய்யும் அவை ஐந்தே. |
6 | சத்தி நல் பீடம் தகுநல்ல ஆன்மா சத்தி நல் கண்டம் தகு வித்தை தான் ஆகும் சத்தி நல் லிங்கம் தகும் சிவ தத்துவம் சத்தி நல் ஆன்மாச் சதா சிவம் தானே. |
7 | மனம் புகுந்து என் உயிர் மன்னிய வாழ்க்கை மனம் புகுந்து இன்பம் பொழிகின்ற போது நலம் புகுந்து என்னொடு நாதனை நாடும் இலம் புகுந்து ஆதியும் மேல் கொண்டவாறே. |
8 | பராபரன் எந்தை பனி மதி சூடி தராபரன் தன் அடியார் மனக் கோயில் சிராபரன் தேவர்கள் சென்னியில் மன்னும் மராமரன் மன்னி மனத்து உறைந்தானே. |
9 | பிரான் அல்ல நாம் எனில் பேதை உலகம் குரால் என்னும் என் மனம் கோயில் கொள் ஈசன் அரா நின்ற செம் சடை அங்கியும் நீரும் பொரா நின்றவர் செய்யப் புண்ணியன் தானே. |
10 | அன்று நின்றான் கிடந்தான் அவன் என்று சென்று நின்று எண்திசை ஏத்துவர் தேவர்கள் என்று நின்று ஏத்துவன் எம் பெருமான் தனை ஒன்றி என் உள்ளத்தின் உள் இருந்தானே. |
6. ஞானலிங்கம் |
1 | உருவும் அருவும் உருவோடு அருவும் மருவு பரசிவன் மன் பல் உயிர்க்கும் குருவும் என நிற்கும் கொள்கையன் ஆகும் தரு என நல்கும் சதா சிவன் தானே. |
2 | நால் ஆன கீழ் அது உருவ நடு நிற்க மேல் ஆன நான்கும் மருவு மிக நாப்பண் நால் ஆன ஒன்று மரு உரு நண்ணல் ஆல் பால் ஆம் இவை ஆம் பர சிவன் தானே. |
3 | தேவர் பிரானைத் திசை முக நாதனை நால்வர் பிரானை நடு உற்ற நந்தியை ஏவர் பிரான் என்று இறைஞ்சுவர் அவ்வழி யாவர் பிரான் அடி அண்ணலும் ஆமே. |
4 | வேண்டி நின்றே தொழுதேன் வினை போய் அற ஆண்டு ஒரு திங்களும் நாளும் அளக்கின்ற காண் தகையானொடும் கன்னி உணரினும் மூண்ட கை மாறினும் ஒன்று அது ஆமே. |
5 | ஆதி பரம் தெய்வம் அண்டத்து நல் தெய்வம் சோதி அடியார் தொடரும் பெரும் தெய்வம் நீதியுள் மா தெய்வம் நின் மலன் எம் இறை பாதியுள் மன்னும் பராசத்தி ஆமே. |
6 | சத்திக்கு மேலே பரா சத்தி தன் உள்ளே சுத்த சிவ பதம் தோயாத தூ ஒளி அத்தன் திருவடிக்கு அப்பாலைக்கு அப்பால் ஆம் ஒத்தவும் ஆம் ஈசன் தான் ஆன உண்மையே. |
7 | கொழுந்தினைக் காணில் குவலயம் தோன்றும் எழுந்து இடம் காணில் இருக்கலும் ஆகும் பரந்து இடம் காணில் பார்ப்பதி மேலே திரண்டு எழக் கண்டவன் சிந்தை உளானே. |
8 | எந்தை பரமனும் என் அம்மை கூட்டமும் முந்த உரைத்து முறை சொல்லின் ஞானம் ஆம் சந்தித்து இருந்த இடம் பெரும் கண்ணியை உந்தியின் மேல் வைத்து உகந்து இருந்தானே. |
9 | சத்தி சிவன் விளையாட்டாகும் உயிராகி ஒத்த இருமாயா கூட்டத்து இடை ஊட்டிச் சுத்தம் அது ஆகும் துரியம் பிறவித்துச் சித்தம் புகுந்து சிவம் அகம் ஆக்குமே. |
7. சிவ லிங்கம் |
1 | குரைக்கின்ற வாரிக் குவலய நீரும் பரக்கின்ற காற்றுப் பயில் கின்ற தீயும் நிரைக்கின்ற வாறு இவை நீண்டு அகன்றானை வரைத்து வலம் செயும் ஆறு அறியேனே. |
2 | வரைத்து வலம் செய்யும் ஆறு இங்கு ஒன்று உண்டு நிரைத்து வருகங்கை நீர் மலர் ஏந்தி உரைத்தவன் நாமம் உணர வல்லார்க்குப் புரைத்து எங்கும் போகான் புரிசடையோனே. |
3 | ஒன்று எனக் கண்டே எம் ஈசன் ஒருவனை நன்று என்று அடி இணை நான் அவனைத் தொழ வென்று ஐம் புலனும் மிகக் கிடந்து இன்பு உற அன்று என் அருள் செய்யும் ஆதிப் பிரானே. |
4 | மலர்ந்த அயன் மால் உருத்திரன் மகேசன் பலம் தரும் ஐம் முகன் பரவிந்து நாதம் நலம் தரும் சத்தி சிவன் வடிவு ஆகிப் பலம் தரும் லிங்கம் பரா நந்தி ஆமே. |
5 | மேவி எழுகின்ற செஞ் சுடர் ஊடு சென்று ஆவி எழும் அளவு அன்றே உடல் உற மேவப் படுவதும் விட்டு நிகழ்வதும் பாவித்து அடக்கில் பரகதி தானே. |
8. சம்பிரதாயம் |
1 | உடல் பொருள் ஆவி உதகத்தால் கொண்டு படர் வினை பற்று அறப் பார்த்துக் கை வைத்து நொடியின் அடி வைத்து நுண் உணர்வு ஆக்கிக் கடிய பிறப்பு அறக் காட்டினன் நந்தியே. |
2 | உயிரும் சரீரமும் ஒண் பொருள் ஆன வியவார் பரமும் பின் மேவும் பிராணன் செயலார் சிவமும் சிற் சத்தி ஆதிக்கே உயலார் குருபரன் உய்யக் கொண்டானே. |
3 | பச்சி மதிக்கிலே வைத்த ஆசாரியன் நிச்சலும் என்னை நினை என்ற அப்பொருள் உச்சிக்கும் கீழ் அது உள் நாக்குக்கு மேல் அது வைச்ச பதம் இது வாய் திறவாதே. |
4 | பொட்டடித்து எங்கும் பிதற்றித் திரிவேனை பொட்டடித்து உள்ளமார் மாசு எல்லாம் வாங்கிப்பின் தட்டு ஒக்க மாறினன் தன்னையும் என்னையும் வட்டம் அது ஒத்து அது வாணிபம் வாய்த்ததே. |
5 | தரிக்கின்ற பல் உயிர்க்கு எல்லாம் தலைவன் இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார் பிரிக்கின்ற விந்து பிணக்கு அறுத்து எல்லாம் கருக் கொண்ட ஈசனைக் கண்டு கொண்டேனே. |
6 | கூடும் உடல் பொருள் ஆவி குறிக் கொண்டு நாடி அடி வைத்து அருள் ஞான சத்தியால் பாடல் உடலினில் பற்று அற நீக்கியே கூடிய தான் அவன் ஆம் குளிக் கொண்டே. |
7 | கொண்டான் அடியேன் அடிமை குறிக் கொள்ளக் கொண்டான் உயிர் பொருள் காயக் குழாத்தினைக் கொண்டான் பலம் முற்றும் தந்தவன் கோடலால் கொண்டான் என ஒன்றும் கூற கிலேனே. |
8 | குறிக்கின்ற தேகமும் தேகியும் கூடி நெறிக்கும் பிராணன் நிலை பெற்ற சீவன் பறிக்கின்ற காயத்தைப் பற்றிய நேர்மை பிறக்க அறியா தார் பேயுடன் ஒப்பாரே. |
9 | உணர்வு உடையார் கட்கு உலகமும் தோன்றும் உணர்வு உடையார் கட்கு உறு துயர் இல்லை உணர்வு உடையார்கள் உணர்ந்த அக் காலம் உணர்வு உடையார்கள் உணர்ந்து கண்டாரே. |
10 | காயப் பரப்பில் அலைந்து துரியத்துச் சால விரிந்து குவிந்து சகலத்தில் ஆய அவ்வாறு அடைந்து திரிந்தோர்க்குத் தூய அருள் தந்த நந்திக்கு என் சொல்வதே. |
11 | நான் என நீ என வேறு இல்லை நண்ணுதல் ஊன் என ஊன் உயிர் என்ன உடன் நின்று வான் என வானவர் நின்று மனிதர்கள் தேன் என இன்பம் திளைக்கின்ற வாறே. |
12 | அவனும் அவனும் அவனை அறியார் அவனை அறியில் அறிவானும் இல்லை அவனும் அவனும் அவனை அறியில் அவனும் அவனும் அவன் இவன் ஆமே. |
13 | நான் இது தான் என நின்றவன் நாள் தோறும் ஊன் இது தான் உயிர் போல் உணர்வான் உளன் வான் இரு மாமுகில் போல் பொழிவான் உளன் நான் இது வம்பர நாதனும் ஆமே. |
14 | பெரும் தன்மை தான் என யான் என வேறு ஆய் இருந்ததும் இல்லை அது ஈசன் அறியும் பொருந்தும் உடல் உயிர் போலும் ஐ மெய்யே திருந்த முன் செய்கின்ற தேவர் பிரானே. |
9. திருவருள் வைப்பு |
1 | இரு பதம் ஆவது இரவும் பகலும் உரு அது ஆவது உயிரும் உடலும் அருள் அது ஆவது அறமும் தவமும் பொருள் அது உள் நின்ற போகம் அது ஆமே. |
2 | காண்டற்கு அரியன் கருத்து இலன் நந்தியும் தீண்டற்கும் சார்தற்கும் சேயனாத் தோன்றிடும் வேண்டிக் கிடந்து விளக்கு ஒளியான் நெஞ்சம் ஈண்டுக் கிடந்து அங்கு இருள் அறும் ஆமே. |
3 | குறிப்பினில் உள்ளே குவலயம் தோன்றும் வெறுப்பு இருள் நீங்கில் விகிர்தனும் நிற்கும் செறிப்பு உறு சிந்தையைச் சிக்கென நாடில் அறிப்பு உறு காட்சி அமரரும் ஆமே. |
4 | தேர்ந்து அறியாமையின் சென்றன காலங்கள் பேர்ந்து அறிவான் எங்கள் பிஞ்ஞகன் எம் இறை ஆர்ந்து அறிவார் அறிவே துணையாம் எனச் சார்ந்து அறிவான் பெரும் தன்மை வல்லானே. |
5 | தானே அறியும் வினைகள் அழிந்தபின் நானே அறிகிலன் நந்தி அறியும் கொல் ஊனே உருகி உணர்வை உணர்ந்த பின் தேனே அனைய நம் தேவர் பிரானே. |
6 | நான் அறிந்து அன்றே இருக்கின்றது ஈசனை வான் அறிந்தார் அறியாது மயங்கினர் ஊன் அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண் சுடர் தான் அறியான் பின்னை யார் அறிவாரே. |
7 | அருள் எங்கும் ஆன அளவை அறியார் அருளை நுகர அமுது ஆனதும் தேரார் அருள் ஐங்கருமத்து அதி சூக்கம் உன்னார் அருள் எங்கும் கண்ணானது ஆர் அறிவாரே. |
8 | அறிவில் அணுக அறிவது நல்கிப் பொறிவழி ஆசை புகுத்திப் புணர்ந்திட்டு அறிவு அது ஆக்கி அடி அருள் நல்கும் செறிவொடு நின்றார் சிவம் ஆயினாரே. |
9 | அருளில் பிறந்திட்டு அருளில் வளர்ந்திட்டு அருளில் அழிந்து இளைப் பாறி மறைந்திட்டு அருளான ஆனந்தத்து ஆர் அமுது ஊட்டி அருளால் என் நந்தி அகம் புகுந்தானே. |
10 | அருளால் அமுதப் பெருங் கடல் ஆட்டி அருளால் அடி புனைந்து ஆர்வமும் தந்திட்டு அருளான ஆனந்தத்து ஆர் அமுது ஊட்டி அருளால் என் நந்தி அகம் புகுந்தானே. |
11 | பாசத்தில் இட்டது அருள் அந்தப் பாசத்தின் நேசத்தை விட்டது அருள் அந்த நேசத்தின் கூசற்ற முத்தி அருள் அந்தக் கூட்டத்தின் நேசத்துத் தோன்றா நிலை அருள் ஆமே. |
12 | பிறவா நெறி தந்த பேர் அருளாளன் மறவா அருள் தந்த மாதவன் நந்தி அறவாழி அந்தணன் ஆதிப் பராபரன் உறவு ஆகி வந்து என் உளம் புகுந்தானே. |
13 | அகம் புகுந்தான் அடியேற்கு அருளாலே அகம் புகுந்தும் தெரியான் அருள் இல்லோர்க்கு அகம் புகுந்து ஆனந்தம் ஆக்கிச் சிவம் ஆய் அகம் புகுந்தான் அந்தியான் அந்தி ஆமே. |
14 | ஆயும் அறிவோடு அறியாத மா மாயை ஆய கரணம் படைக்கும் ஐம் பூதமும் மாய பல இந்திரியம் அவற்றுடன் ஆய அருள் ஐந்து மா மருள் செய்கையே. |
15 | அருளே சகலமும் ஆய பௌதிகம் அருளே சரா சரம் ஆய அகிலம் இருளே வெளியே எனும் எங்கும் ஈசன் அருளே சகளத்தன் அன்றி இன்று ஆமே. |
16 | சிவமொடு சத்தி திகழ் நாதம் விந்து தவம் ஆன ஐம் முகன் ஈசன் அரனும் பவம் உறு மாலும் பதுமத்தோன் ஈறா நவம் அவை ஆகி நடிப்பவன் தானே. |
17 | அருள் கண் இலாதார்க்கு அரும் பொருள் தோன்றா அருள் கண் உளோர்க்கு எதிர் தோன்றும் அரனே இருள் கண்ணினோர்க்கு அங்கு இரவியும் தோன்றாத் தெருள் கண்ணி னோர்க்கு எங்கும் சீர் ஒளி ஆமே. |
18 | தானே படைத்திடும் தானே அளித்திடும் தானே துடைத்திடும் தானே மறைந்திடும் தானே இவை செய்து தான் முத்தி தந்திடும் தானே வியாபித்து தலைவனும் ஆமே. |
19 | தலை ஆன நான்கும் தனது அருவாகும் அலையா வரு உருவாகும் சதா சிவம் நிலையான கீழ் நான்கு நீடு உரு ஆகும் துலையா இவை முற்றும் ஆய் அல்லது ஒன்றே. |
20 | ஒன்று அதுவாலே உலப்பு இலி தான் ஆகி நின்றது தான்போல் உயிர்க்கு உயிராய் நிலை துன்றி அவை அல்ல ஆகும் துணை என்ன நின்றது தான் விளையாட்டு என் உள் நேயமே. |
21 | நேயத்தே நின்றிடும் நின் மலன்சத்தியோடு ஆயக் குடிலையுள் நாதம் அடைந்து இட்டுப் போயக் கலை பல ஆகப் புணர்ந்திட்டு வீயத் தகா விந்து ஆக விளையுமே. |
22 | விளையும் பர விந்து தானே வியாபி விளையும் தனி மாயை மிக்க மா மாயை கிளை ஒன்று தேவர் கிளர் மனு வேதம் அளவு ஒன்று இலா அண்ட கோடிகள் ஆமே. |
10. அருளொளி |
1 | அருளில் தலை நின்று அறிந்து அழுந்தா தார் அருளில் தலை நில்லார் ஐம் பாசம் நீங்கார் அருளில் பெருமை அறியார் செறியார் அருளில் பிறந்திட்டு அறிந்து அறிவாரே. |
2 | வாரா வழி தந்த மா நந்தி பேர் நந்தி ஆரா அமுது அளித்தான் நந்தி பேர் நந்தி பேர் ஆயிரம் உடைப் பெம்மான் பேர் ஒன்றினில் ஆரா அருள் கடல் ஆடுக என்றானே. |
3 | ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும் தேடியும் கண்டேன் சிவன் பெரும் தன்மையைக் கூடிய வாறே குறியா குறி தந்து என் ஊடு நின்றான் அவன் தன் அருள் உற்றே. |
4 | உற்ற பிறப்பும் உறுமலம் ஆனதும் பற்றிய மாயாப் படலம் எனப் பண்ணி அத்தனை நீ என்று அடி வைத்தான் பேர் நந்தி கற்றன விட்டேன் கழல் பணிந்தேனே. |
5 | விளக்கினை ஏற்றி வெளியை அறிமின் விளக்கின் முன்னே வேதனை மாறும் விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள் விளக்கில் விளங்கும் விளக்கு அவர் தாமே. |
6 | ஒளியும் இருளும் ஒருகாலும் தீரா ஒளி உளோர்க்கு அன்றோ ஒழியாது ஒளியும் ஒளி இருள் கண்ட கண் போல வேறாய் உள் ஒளி இருள் நீங்க உயிர் சிவம் ஆமே. |
7 | புறமே திரிந்தேனைப் பொன் கழல் சூட்டி நிறமே புகுந்து என்னை நின்மலன் ஆக்கி அறமே புகுந்து எனக்கு ஆரமுது ஈந்த திறம் ஏது என்று எண்ணித் திகைத்து இருந்தேனே. |
8 | அருள் அது என்ற அகல் இடம் ஒன்றும் பொருள் அது என்ற புகல் இடம் ஒன்றும் மருள் அது நீங்க மனம் புகுந்தானைத் தெருள் உறும் பின்னைச் சிவகதி ஆமே. |
9 | கூறுமின் நீர் முன் பிறந்து இங்கு இறந்தமை வேறு ஒரு தெய்வத்தின் மெய்ப் பொருள் நீக்கிடும் பார் அணியும் உடல் வீழ விட்டு ஆர் உயிர் தேர் அணிவோம் இது செப்ப வல்லீரே. |
11. சிவபூசை |
1 | உள்ளம் பெரும் கோயில் ஊன் உடம்பு ஆலயம் வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே. |
2 | வேட்டு அவி உண்ணும் விரிசடை நந்திக்குக் காட்டவும் நாம் இலம் காலையும் மாலையும் ஊட்டு அவி ஆவன உள்ளம் குளிர்விக்கும் பாட்டு அவி காட்டுதும் பால் அவி ஆகுமே. |
3 | பால் மொழிப் பாகன் பரா பரன் தான் ஆகும் மான சதா சிவன் தன்னை ஆவாகித்து மேல் முகம் ஈசானம் ஆகவே கைக்கொண்டு சீல் முகம் செய்யச் சிவன் அவன் ஆகுமே. |
4 | நினைவதும் வாய்மை மொழிவதும் அல்லால் கனைகழல் ஈசனைக் காண அரிதாம் கனைகழல் ஈசனைக் காண்குற வல்லார் புனைமலர் நீர் கொண்டு போற்ற வல்லாரே. |
5 | மஞ்சனம் மாலை நிலாவிய வானவர் நெஞ்சின் உள் ஈசன் நிலை பெறு காரணம் அஞ்சு அமுது ஆம் உபசாரம் எட்டு எட்டொடும் அஞ்சலி யோடும் கலந்து அர்ச்சித்தார்களே. |
6 | புண்ணியம் செய்வார்க்குப் பூ உண்டு நீர் உண்டு அண்ணல் அது கண்டு அருள் புரியா நிற்கும் எண் இலி பாவிகள் எம் இறை ஈசனை நண்ணி அறியாமல் நழுவுகின்றாரே. |
7 | மறப்பு உற்று இவ்வழி மன்னி நின்றாலும் சிறப்பொடு பூ நீர் திருந்த முன் ஏந்தி மறப்பு இன்றி உன்னை வழிபடும் வண்ணம் அறப் பெற வேண்டும் அமரர் பிரானே. |
8 | ஆராதனையும் அமரர் குழாங்களும் தீராக் கடலும் நிலத்தும் அதாய் நிற்கும் பேர் ஆயிரமும் பிரான் திரு நாமமும் ஆரா வழி எங்கள் ஆதிப் பிரானே. |
9 | ஆன் ஐந்தும் ஆட்டி அமரர் கணம் தொழத் தான் அந்தம் இல்லாத் தலைவன் அருள் அது தேன் உந்து மாமலர் உள்ளே தெளிந்தோர் பார் ஐங் குணமும் படைத்து நின்றானே. |
10 | உழைக் கொண்ட பூ நீர் ஒருங்கு உடன் ஏந்தி மழைக் கொண்ட மா முகில் மேல் சென்று வானோர் தழைக் கொண்ட பாசம் தயங்கி நின்று ஏத்தப் பிழைப்பு இன்றி எம் பெருமான் அருள் ஆமே. |
11 | வெள்ளக் கடல் உள் விரிசடை நந்திக்கு உள்ளக் கடல் புக்கு வார் சுமை பூக் கொண்டு கள்ளக் கடல் விட்டுக் கை தொழ மாட்டாதார் அள்ளல் கடல் உள் அழுந்து கின்றாரே. |
12 | கழிப்படும் தண் கடல் கௌவை உடைத்து வழிப் படுவார் மலர் மொட்டு அறியார்கள் பழிப் படுவார் பலரும் பழி வீழ வெளிப் படுவோர் உச்சி மேவி நின்றானே. |
13 | பயன் அறிவு ஒன்று உண்டு பன் மலர் தூவிப் பயன் அறிவார்க்கு அரன் தானே பயிலும் நயனங்கள் மூன்று உடையான் அடி சேர வயனங்களால் என்றும் வந்து நின்றானே. |
14 | ஏத்துவர் மா மலர் தூவித் தொழுது நின்று ஆர்த்து எமது ஈசன் அருள் சேவடி என்றன் மூர்த்தியை மூவா முதல் உருவாய் நின்ற தீர்த்தனை யாரும் துதித்து உணராரே. |
15 | தேவர்களோடு இசை வந்து மண்ணோடு உறும் பூவொடு நீர்சுமந்து ஏத்திப் புனிதனை மூவரில் பன்மை முதல்வன் ஆய் நின்று அருள் நீர்மையை யாவர் நினைக்க வல்லாரே. |
16 | உழைக்க வல்லோர் நடு நீர் மலர் ஏந்திப் பிழைப்பு இன்றி ஈசன் பெரும் தவம் பேணிப் இழைக் கொண்ட பாதத்து இனமலர் தூவி மழைக் கொண்டல் போலவே மன்னி நில்லீரே. |
17 | வென்று விரைந்து விரைப் பணி என்றனர் நின்று பொருந்த இறை பணி நேர்படத் துன்று சல மலர் தூவித் தொழுதிடில் கொண்டிடு நித்தலும் கூறிய அன்றே. |
18 | சாத்தியும் வைத்தும் சயம்பு என்று ஏத்தியும் ஏத்தியும் நாளும் இறையை அறிகிலார் ஆத்தி மலக்கிட்டு அகத்து இழுக்கு அற்றக் கால் மாத்திக்கே செல்லும் வழி அது ஆமே. |
19 | ஆவிக் கமலத்தின் அப்புறத்து இன்பு உற மேவித் திரியும் விரிசடை நந்தியைக் கூவிக் கருதிக் கொடு போய்ச் சிவத்து இடை தாவிக்கும் மந்திரம் தாம் அறியாரே. |
20 | சாண் ஆகத்து உள்ளே அழுந்திய மாணிக்கம் காணும் அளவும் கருத்து அறிவார் இல்லை பேணிப் பெருக்கிப் பெருக்கி நினை வோர்க்கு மாணிக்க மாலை மனம் புகுந்தானே. |
21 | பெரும் தன்மை நந்தி பிணங்கி இருள் நேமி இரும் தன்மையாலும் என் நெஞ்சு இடம் கொள்ள வரும் தன்மை யாளனை வானவர் தேவர் தரும் தன்மை யாளனைத் தாங்கி நின்றாரே. |
12. குருபூசை |
1 | ஆகின்ற நந்தி அடித் தாமரை பற்றிப் போகின்று உபதேசம் பூசிக்கும் பூசையும் ஆகின்ற ஆதாரம் ஆறா அதனின் மேல் போகின்ற பொற்பையும் போற்றுவன் யானே. |
2 | மேவிய ஞானத்தின் மிக்கிடின் மெய்ப் பரன் ஆவயின் ஞான நெறி நிற்றல் அர்ச்சனை ஓவற உள் பூசனை செய்யில் உத்தமம் சேவடி சேரல் செயல் அறல் தானே. |
3 | உச்சியும் காலையும் மாலையும் ஈசனை நச்சு மின் நச்சி நம என்று நாமத்தை விச்சு மின் விச்சி விரி சுடர் மூன்றினும் நச்சு மின் பேர் நந்தி நாயகன் ஆகுமே. |
4 | புண்ணிய மண்டலம் பூசை நூறு ஆகும் ஆம் பண்ணிய மேனியும் பத்து நூறு ஆகும் ஆம் எண் இலிக்கு ஐயம் இடில் கோடி ஆகும் ஆல் பண் இடில் ஞானி ஊண் பார்க்கில் விசேடமே. |
5 | இந்துவும் பானுவும் இலங்கும் தலத்து இடை வந்தித்தது எல்லாம் அசுரர்க்கு வாரி ஆம் இந்துவும் பானுவும் இலங்காத் தலத்து இடை வந்தித்தல் நந்திக்கு மா பூசை ஆமே. |
6 | இந்துவும் பானுவும் என்றே எழுகின்றது ஓர் விந்துவும் நாதமும் ஆகி ஈது ஆனத்தே சிந்தனை சாக்கிரா தீதத்தே சென்றிட்டு நந்தியைப் பூசிக்க நல்பூசை ஆமே. |
7 | மன பவனங்களை மூலத்தான் மாற்றி அனித உடல் பூதம் ஆக்கி அகற்றிப் புனிதன் அருள் தனில் புக்கு இருந்து இன்பத்து தனி உறு பூசை சதாசிவற்கு ஆமே. |
8 | பகலும் இரவும் பயில் கின்ற பூசை இயல்பு உடை ஈசர்க்கு இணை மலர் ஆகப் பகலும் இரவும் பயிலாத பூசை சகலமும் தான் கொள்வன் தாழ் சடையோனே. |
13. மகேசுவர பூசை |
1 | பட மாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில் நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயின் பட மாடக் கோயில் பகவற்கு அது ஆமே. |
2 | தண்டு அறு சிந்தை தபோதனர் தாம் மகிழ்ந்து உண்டது மூன்று புவனமும் உண்டது கொண்டது மூன்று புவனமும் கொண்டது என்று எண் திசை நந்தி எடுத்து உரைத்தானே. |
3 | மாத்திரை ஒன்றினில் மன்னி அமர்ந்து உறை யாத்தனுக்கு ஈந்த அரும் பொருள் ஆனது மூர்த்திகள் மூவர்க்கு மூ ஏழ் குரவர்க்கும் தீர்த்தம் அது ஆம் தேர்ந்து கொள்வீரே. |
4 | அகரம் ஆயிரம் அந்தணர்க்கு ஈயில் என் சிகரம் ஆயிரம் செய்து முடிக்கில் என் பகரும் ஞானி பகல் ஊண் பலத்துக்கு நிகர் இலை என்பது நிச்சயம் தானே. |
5 | ஆறிடும் வேள்வி அருமறை நூல் அவர் கூறிடும் அந்தணர் கோடி பேர் உண்பதில் நீறு இடும் தொண்டர் நினைவின் பயன் இலை பேறு எனில் ஓர் பிடி பேறு அது ஆகுமே. |
6 | ஏறு உடையாய் இறைவா எம் பிரான் என்று நீறு இடுவார் அடியார் நிகழ் தேவர்கள் ஆறு அணி செஞ் சடை அண்ணல் இவர் என்று வேறு அணிவார்க்கு வினை இல்லை தானே. |
7 | சீர் நந்தி கொண்டு திருமுகமாய் விட்ட பேர் நந்தி என்னும் பிறங்கு சடையனை நான் நொந்து நொந்து வரும் அளவும் சொல்லப் பேர் நந்தி என்னும் பிதற்று ஒழியேனே. |
8 | அழி தகவு இல்லா அரன் அடியாரைத் தொழு தகை ஞாலத்துத் தூங்கு இருள் நீங்கும் பழுது படா வண்ணம் பண்பனை நாடித் தொழுது எழ வையகத்தோர் இன்பம் ஆமே. |
9 | பகவற்கு ஏதாகிலும் பண்பு இலர் ஆகிப் புகும் அத்தராய் நின்று பூசனை செய்யும் முக மத்தோடு ஒத்து நின்று ஊழி தோறும் ஊழி அகமத்தர் ஆகி நின்று ஆய்ந்து ஒழிந்தாரே. |
10 | தாழ்வு இலர் பின்னும் முயல்வர் அரும்தவம் ஆழ் வினை ஆழ அவர்க்கே அறம் செய்யும் ஆழ் வினை நீக்கி அருவினை தன்னொடும் போழ் வினை தீர்க்கும் அப் பொன் உலகம் ஆமே. |
14. அடியார் பெருமை |
1 | திகைக்கு உரியான் ஒரு தேவனை நாடும் வகைக்கு உரியான் ஒருவாதி இருக்கில் பகைக்கு உரியார் இல்லை பார் மழை பெய்யும் அகக் குறை கேடு இல்லை அவ் உலகுக்கே. |
2 | அவ் உலகத்தே பிறந்த அவ் உடலொடும் அவ் உலகத்தே அரும் தவம் நாடுவர் அவ் உலகத்தே அரன் அடி கூடுவர் அவ் உலகத்தே அருள் பெறுவாரே. |
3 | கொண்ட குறியும் குல வரை உச்சியும் அண்டரும் அண்டத்து அமரரும் ஆதியும் எண் திசை யோரும் வந்து என் கைத் தலத்தின் உள் உண்டு எனில் நாம் இனி உய்ந்து ஒழிந்தோமே. |
4 | அண்டங்கள் ஏழும் அகண்டமும் ஆவியும் கொண்ட சராசரம் முற்றும் குணங்களும் பண்டை மறையும் படைப்பு அளிப்பு ஆதியும் கண்ட சிவனும் கண் அன்றி இல்லையே. |
5 | பெண் அல்ல ஆண் அல்ல பேடு அல்ல மூடத்துள் உள் நின்ற சோதி ஒருவர்க்கு அறி ஒண்ணாக் கண் இன்றிக் காணும் செவி இன்றிக் கேட்டிடும் அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே. |
6 | இயங்கும் உலகினில் ஈசன் அடியார் மயங்கா வழி செல்வர் வான் உலகு ஆள்வர் புயங்களும் எண்திசை போது பாதாள மயங்காப் பகிரண்ட மா முடி தானே. |
7 | அகம் படிகின்ற நம் ஐயனை ஓரும் அகம் படி கண்டவர் அல்லலில் சேரார் அகம் படி உள் புக்கு அறிகின்ற நெஞ்சம் அகம் படி கண்டாம் அழிக்கலும் எட்டே. |
8 | கழிவு முதலும் காதல் துணையும் அழிவும் அதாய் நின்ற ஆதிப் பிரானைப் பழியும் புகழும் படுபொருள் முற்றும் ஒழியும் என் ஆவி உழவு கொண்டானே. |
9 | என் தாயோ என் அப்பன் ஏழ் ஏழ் பிறவியும் அன்றே சிவனுக்கு எழுதிய ஆவணம் ஒன்றா உலகம் படைத்தான் எழுதினான் நின்றான் முகில் வண்ணன் ஏர் எழுந்தாயே. |
10 | துணிந்தார் அகம் படி துன்னி உறையும் பணிந்தார் அகம்படி பால் பட்டு ஒழுகும் அணிந்தார் அகம்படி ஆதிப் பிரானைக் கணிந்தார் ஒருவர்க்குக் கைவிடல் ஆமே. |
11 | தலை மிசை வானவர் தாள் சடை நந்தி மிலை மிசை வைத்தனன் மெய்ப் பணி செய்யப் புலை மிசை நீங்கிய பொன் உலகு ஆளும் பல மிசை செய்யும் படர் சடை யோனே. |
12 | அறியாப் பருவத்து அரன் அடியாரைக் குறியால் அறிந்து இன்பம் கொண்டது அடிமை குறியார் சடைமுடி கட்டி நடப்பார் மறியார் புனல் மூழ்க மாதவம் ஆமே. |
13 | அவன் பால் அணுகியே அன்பு செய்வார்கள் சிவன் பால் அணுகுதல் செய்யவும் வல்லன் அவன் பால் அணுகியே நாடும் அடியார் இவன் பால் பெருமை இலயம் அதாமே. |
14 | முன் இருந்தார் முழுதும் எண் கணத் தேவர்கள் எண் இறந்து தன் பால் வருவர் இருநிலத்து எண் இரு நாலு திசை அந்தரம் ஒக்கப் பன்னிரு காதம் பதம் செய்யும் பாரே. |
15 | சிவ யோகிஞானி செறிந்த அத் தேசம் அவ யோகம் இன்றி அறிவோர் உண்டாகும் நவ யோகம் கை கூடும் நல் இயல் காணும் பவ யோகம் இன்றிப் பரலோகம் ஆமே. |
16 | மேல் உணர்வான் மிகு ஞாலம் படைத்தவன் மேல் உணர்வான் மிகு ஞாலம் கடந்தவன் மேல் உணர்வார் மிகுஞாலத்து அமரர்கள் மேல் உணர்வார் சிவன் மெய் அடியார்களே. |
15. போசனவிதி |
1 | எட்டுத் திசையும் இறைவன் அடியவர்க்கு அட்ட அடிசில் அமுது என்று எதிர் கொள்வர் ஒட்டி ஒரு நிலம் ஆள்பவர் அந்நிலம் விட்டுக் கிடக்கில் விருப்பு அறியாரே. |
2 | அச்சிவன் உள் நின்ற அருளை அறிந்தவர் உச்சியம் போது ஆக உள் அமர் கோவிற்குப் பிச்சை பிடித்து உண்டு பேதம் அற நினைந்து இச்சை விட்டு ஏகாந்தத்து ஏறி இருப்பரே. |
16. பிட்சா விதி |
1 | விச்சுக் கலம் உண்டு வேலிச் செய் ஒன்று உண்டு உச்சிக்கு முன்னே உழவு சமைந்தது அச்சம் கெட்டு அச் செய் அறுத்து உண்ண மாட்டாதார் இச்சைக்குப் பிச்சை இரக்கின்ற வாறே. |
2 | பிச்சை அது ஏற்றான் பிரமன் தலை தன்னில் பிச்சை அது ஏற்றான் பிரியா அறம் செய்யப் பிச்சை அது ஏற்றான் பிரமன் சிரம் காட்டிப் பிச்சை அது ஏற்றான் பிரமன் பரம் ஆகவே. |
3 | பரந்து உலகு ஏழும் படைத்த பிரானை இரந்து உணி என்பார்கள் எற்றுக்கு இரக்கும் நிரந்தரம் ஆக நினையும் அடியார் இரந்து உண்டு தன்கழல் எட்டச் செய்தானே. |
4 | வர இருந்தான் வழி நின்றிடும் ஈசன் தர இருந்தான் தன்னை நல்லவர்க்கு இன்பம் பொர இருந்தான் புகலே புகல் ஆக வர இருந்தால் அறியான் என்பது ஆமே. |
5 | அங்கார் பசியும் அவாவும் வெகுளியும் தங்கார் சிவன் அடியார் சரீரத்து இடைப் பொங்கார் புவனத்தும் புண்ணிய லோகத்தும் தங்கார் சிவனைத் தலைப் படு வாரே. |
6 | மெய் அக ஞானம் மிகத்ம் தெளிந்தார்களும் கை அக நீண்டார் கடைத் தலைக்கே செல்வர் ஐயம் புகாமல் இருந்த தவசியார் வையகம் எல்லாம் வர இருந்தாரே. |
17. முத்திரை பேதம் |
1 | நால் ஏழு மாறவே நண்ணிய முத்திரை பால் ஆன மோன மொழியில் பதிவித்து மேல் ஆன நந்தி திருவடி மீது உய்யக் கோலா கலம் கெட்டுக் கூடு நல் முத்தியே. |
2 | துரியம் கண் மூன்றும் சொருகின் ஆகி அரிய உரைத்தாரம் அங்கே அடக்கி மருவிய சாம்பவி கேசரி உண்மை பெருவிய ஞானம் பிறழ் முத்திரையே. |
3 | சாம்பவி நந்தி தன் அருள் பார்வை ஆம் ஆம் பவம் இல்லா அருள் பணி முத்திரை ஓம் பயில் ஓங்கிய உண்மைய கேசரி நாம் பயில் நாதன் மெய்ஞ் ஞான முத்திரையே. |
4 | தானத்தின் உள்ளே சதாசிவன் ஆயிடும் ஞானத்தின் உள்ளே நல் சிவம் ஆதலால் ஏனைச் சிவம் ஆம் சொரூபம் மறைந்திட்ட மோனத்து முத்திரை முத்தாந்த முத்தியே. |
5 | வாக்கும் மனமும் இரண்டு மவுனம் ஆம் வாக்கு மவுனத்து வந்தாலும் மூங்கை ஆம் வாக்கும் மனமும் மவுனமும் ஆம் சுத்தரே ஆக்கும் அச் சுத்தத்தை யார் அறிவார்களே. |
6 | யோகத்தின் முத்திரை ஓர் அட்ட சித்தி ஆம் ஏகத்த ஞானத்து முத்திரை எண்ணும்கால் ஆகத் தகு வேத கேசரி சாம்பவி யோகத்துக் கேசரி யோக முத்திரையே. |
7 | யோகி எண் சித்தி அருள் ஒலி வாதனை போகி தன் புத்தி புருடார்த்த நல்நெறி ஆகு நன் சத்தியும் ஆதார சோதனை ஏகமும் கண்டு ஒன்றில் எய்த நின்றானே. |
8 | துவாதச மார்க்கம் என் சோடச மார்க்கம் ஆம் அவா அறு ஈர் ஐ வகை அங்கம் ஆறும் தவா அறு வேதாந்த சித்தாந்தத் தன்மை நவா அகமோடு உன்ன நல் சுத்த சைவமே. |
9 | மோனத்து முத்திரை முத்தர்க்கு முத்திரை ஞானத்து முத்திரை நாதர்க்கு முத்திரை தேனிக்கு முத்திரை சித்தாந்த முத்திரை கானிக்கு முத்திரை கண்ட சமயமே. |
10 | தூ நெறி கண்ட சுவடு நடு எழும் பூ நெறி கண்டது பொன் அகம் ஆய் நிற்கும் மேல் நெறி கண்டது வெண்மதி மேதினி நீ நெறி கண்டுள நின் மலன் ஆமே. |
18. பூரணக் குகை நெறிச் சமாதி |
1 | வளர் பிறையில் தேவர் தம் பாலின் மன்னி உளர் ஒளி பானுவின் உள்ளே ஒடுங்கித் தளர்வு இல் பிதிர் பதம் தங்கிச் சசியுள் உளது உறும் யோகி உடல் விட்டால் தானே. |
2 | தான் இவை ஒக்கும் சமாதி கை கூடாது போன வியோகி புகல் இடம் போந்து பின் ஆனவை தீர நிரந்தர மாயோகம் ஆனவை சேர்வார் அருளின் சார்வாகியே. |
3 | தான் இவ்வகையே புவியோர் நெறி தங்கி ஆன சிவயோகத்து ஆம் ஆறு அவ்விந்து தான் அதில் அந்தச் சிவ யோகி ஆகு முன் ஊனத்தோர் சித்தி வந்தோர் காயம் ஆகுமே. |
4 | சிவயோகி ஞானி சிதைந்து உடல் விட்டால் தவ லோகம் சேர்ந்து பின் தான் வந்து கூடிச் சிவ யோக ஞானத்தால் சேர்ந்து அவர் நிற்பர் புவலோகம் போற்றுநர் புண்ணியத் தோரே. |
5 | ஊனம் இல் ஞானி நல் யோகி உடல் விட்டால் தான் அற மோனச் சமாதியுள் தங்கியே தான் அவன் ஆகும் பரகாயம் சாராதே ஊனம் இல் முத்தராய் மீளார் உணர்வு உற்றே. |
6 | செத்தார் பெறும் பயன் ஆவது ஏது எனில் செத்து நீர் சேர்வது சித்தினைக் கூடிடில் செத்தார் இருந்தார் செகத்தில் திரிமலம் செத்தார் சிவம் ஆகியே சித்தர் தாமே. |
7 | உன்னக் கருவிட்டு உரவோன் அரன் அருள் பன்னப் பரனே அருள் குலம் பாலிப்பன் என்னப் புதல்வர்க்கும் வேண்டி இடு ஞானி தன் இச்சைக்கு ஈசன் உருச் செய்யும் தானே. |
8 | எங்கும் சிவமாய் அருளாம் இதயத்துத் தங்கும் சிவஞானிக்கு எங்கும் ஆம் தற்பரம் அங்கு ஆங்கு என நின்று சகம் உண்ட வான் தோய்தல் இங்கே இறந்து எங்குமாய் நிற்கும் ஈசனே. |
19. சமாதிக் கிரியை |
1 | அந்தம் இல் ஞானி தன் ஆகம் தீயினில் வெந்திடின் நாடு எலாம் வெப்புறத் தீயினில் நொந்து அது நாய் நரி நுகரின் உண் செரு வந்து நாய் நரிக்கு உணவு ஆகும் வையகமே. |
2 | எண்ணிலா ஞானி உடல் எரி தாவிடில் அண்ணல் தம் கோயில் அழல் இட்டது ஆங்கு ஒக்கும் மண்ணின் மழை விழா வையகம் பஞ்சம் ஆம் எண் அரு மன்னர் இழப்பார் அரசே. |
3 | புண்ணியம் ஆம் அவர் தம்மைப் புதைப்பது நண்ணி அனல் கோக்கில் நாட்டில் அழிவு ஆகும் மண்ணில் அழியில் அலங்கார பங்கம் ஆம் மண் உலகு எல்லாம் மயங்கும் அனல் மண்டியே. |
4 | அந்தம் இல் ஞானி அருளை அடைந்தக் கால் அந்த உடல் தான் குகை செய்து இருத்திடில் சுந்தர மன்னரும் தொல் புவி உள்ளோரும் அந்தம் இல் இன்ப அருள் பெறுவாரே. |
5 | நவ மிகு சாணாலே நல் ஆழம் செய்து குவை மிகு சூழ ஐஞ் சாண் ஆகக் கோட்டித் தவம் மிகு குகை முக்கோண முச்சாண் ஆக்கிப் பவம் அறு நல்குகை பத்மா சனமே. |
6 | தன் மனை சாலை குளம் கரை ஆற்று இடை நல் மலர்ச் சோலை நகரின் நல் பூமி உன்னருங் கானம் உயர்ந்த மலைச் சாரல் இந் நிலம் தான் குகைக்கு எய்தும் இடங்களே. |
7 | நல் குகை நால் வட்டம் பஞ்சாங்க பாதம் ஆய் நிற்கின்ற பாத நவ பாத நேர்விழப் பொற்பமர் ஓசமும் மூன்றுக்கு மூன்று அணி நிற்பவர் தாம் செய்யும் நேர்மை அது ஆமே. |
8 | பஞ்ச லோகங்கள் நவ மணி பாரித்து விஞ்சப் படுத்த தன் மேல் ஆசனம் இட்டு முஞ்சி படுத்து வெண் நீறு இட்டு அதன் மேலே பொன் செய்த நல் சுண்ணம் பொதியலும் ஆமே. |
9 | நள் குகை நால் வட்டம் படுத்த தன்மேல் சாரக் கள் அவிழ் தாமம் களபம் கத்தூரியும் தெள்ளிய சாந்து புழுகு பன்னீர் சேர்த்து ஒள்ளிய தூபம் உவந்து இடு வீரே. |
10 | ஓதிடும் வெண் நீற்றால் உத் தூள் அம் குப்பாய மீதினில் இட்ட ஆசனத்தின் மேல் வைத்துப் போது அறு சுண்ணமும் நீறும் பொலிவித்து மீதில் இருத்தி விரித்திடு வீரே. |
11 | விரித்த பின்னால் சாரு மேவுதல் செய்து பொரித்த கறி போனகம் இள நீரும் குருத்தலம் வைத்தோர் குழை முகம் பார்வை தரித்த பின் மேல் வட்டம் சாத்திடுவீரே. |
12 | மீது சொரிந்திடும் வெண் நீறும் சுண்ணமும் போது பல கொண்டு தர்ப்பைப் புல் வில்வமும் பாத உகத்தான் மஞ்சனம் செய்து பார் மீது மூன்றுக்கு மூன்று அணி நிலம் செய்யுமே. |
13 | ஆதனம் மீதில் அரசு சிவலிங்கம் போதும் இரண்டினில் ஒன்றைத் தாபித்து மேதகு சந்நிதி மேவுத் தரம் பூர்வம் காதலில் சோடசம் காண் உப சாரமே. |
20. விந்துற்பனம் |
1 | உதயத்தில் விந்துவில் ஓங்கு குண்டலியும் உதயக் குடிலில் வயிந்தவம் ஒன்பான் விதியில் பிரம ஆதிகள் மிகு சத்தி கதியில் கரணம் கலைவை கரியே. |
2 | செய்திடும் விந்து பேதத்தின் திறன் ஐ ஐந்தும் செய்திடும் நாத பேதத் திறனால் ஆறும் செய்திடும் மற்று அவை ஈர் இரண்டில் திறம் செய்திடும் மாறாது சேர் தத்துவங்களே. |
3 | வந்திடு பேதம் எல்லாம் பர விந்துமேல் தந்திடு மா மாயை வாகேசி தற்பரை உந்து குடிலையோடு ஏமுறு குண்டலி விந்துவில் இந்நான்கும் மாவா விளங்குமே. |
4 | விளங்கு நிவிர்த்து ஆதி மேவு அகர ஆதி வளம் கொள் உகார மகாரத்து உள் விந்து களங்கம் இல் நாதாந்தம் கண்ணின் உள் நண்ணி உளம் கொள் மன் ஆதியுள் அந்தமும் ஆமே. |
5 | அந்தமும் ஆதியும் ஆகிப் பரா பரன் வந்த வியாபி எனல் ஆய் அந்நெறி கந்தம் அது ஆகிய காரண காரியம் தந்து ஐங் கருமமும் தான் செய்யும் வீயமே. |
6 | வீயம் அது ஆகிய விந்துவின் சத்தியால் ஆய அகண்டமும் அண்டமும் பாரிப்பக் காய ஐம்பூதமும் காரிய மாயையில் ஆயிட விந்து அகம் புறம் ஆகுமே. |
7 | புறம் அகம் எங்கும் புகுந்து ஒளிர் விந்து நிறம் அது வெண்மை நிகழ் நாதம் செம்மை உற மகிழ் சத்தி சிவ பாதம் ஆய் உள் திறனொடு வீடு அளிக்கும் செயல் கொண்டே. |
8 | கொண்ட இவ் விந்து பரமம் போல் கோது அற நின்ற படம் கடம் ஆய் நிலை நிற்றலில் கண்டகல் ஆதியின் காரண காரியத்து அண்டம் அனைத்தும் ஆய் மா மாயை ஆகுமே. |
9 | அது வித்திலே நின்று அம் கண்ணிக்கு நந்தி இது வித்திலே உள ஆற்றை உணரார் மது வித்திலே மலர் அன்னம் அது ஆகிப் பொது வித்திலே நின்ற புண்ணியம் தானே. |
10 | வித்தினில் அன்றி முளை இல்லை அம் முளை வித்தினில் அன்றி வெளிப்படும் ஆறில்லை வித்தும் முளையும் உடன் அன்றி வேறு அல்ல அத்தன்மை ஆகும் அரன் நெறி காணுமே. |
11 | அருந்திய அன்னம் அவை மூன்று கூறு ஆம் பொருந்தும் உடல் மனம் போல் மலம் என்னத் திருந்தும் உடல் மனம் ஆம் கூறு சேர்ந்திட்டு இருந்தன முன்னாள் இரதம் அது ஆகுமே. |
12 | இரதம் முதல் ஆன ஏழ் தாது மூன்றின் உரிய தினத்தின் ஒரு புல் பனி போல் அரிய துளி வந்து ஆகும் ஏழ் மூன்றின் மருவிய விந்து வளரும் காயத்திலே. |
13 | காயத்திலே மூன்று நாளில் கலந்திட்டு காயத்து உள் தன் மனம் ஆகும் கலா விந்து நேயத்தே நின்றோர்க்கு நீங்கா விடாமையின் மாயத்தே செல்வோர் மனத்தோடு அழியுமே. |
14 | அழிகின்ற விந்து அளவை அறியார் கழிகின்ற தன்னை உள் காக்கலும் தேரார் அழிகின்ற காயத்து அழிந்து அயர் உற்றோர் அழிகின்ற தன்மை அறிந்து ஒழியாரே. |
21. விந்து சயம் - போக சர வேட்டம் |
1 | பார்க்கின்ற மாதரைப் பாராது அகன்று போய் ஓர்க்கின்ற உள்ளம் உருக அழல் மூட்டிப் பார்க்கின்ற கண் ஆசை பாழ் பட மூலத்தே சேர்க்கின்ற யோகி சிவ யோகி தானே. |
2 | தானே அருளால் சிவயோகம் தங்காது தானே அக் காமம் ஆதி தங்குவோனும் உட்கும் தானே அதிகாரம் தங்கில் சடம் கெடும் ஊனே அவற்றுள் உயிர் ஓம்பா மாயுமே. |
3 | மாயாள் வசத்தே சென்று இவர் வேண்டில் ஓயா இரு பக்கத்து உள் வளர் பக்கத்துள் ஏயா எண்ணாள் இன்ப மேல் பனி மூன்று இரண்டு ஆயா அபரத்துள் ஆதி நாள் ஆறு ஆமே. |
4 | ஆறு ஐந்து பன் னொன்றும் அன்றிச் சக மார்க்கம் வேறு அன்பு வேண்டுவோர் பூவரில் பின் னந்தோடு ஏறும் இரு பத்து ஒரு நாள் இடைத்து ஓங்கும் ஆறின் மிகுத்து ஓங்கும் அக்காலம் செய்யவே. |
5 | செய்யும் அளற்று இரு நால் முகூர்த்தமே எய்யும் கலை காலம் இந்து பருதி கால் நையும் இடத்து ஓடினன் காம நூல் நெறி செய்க வலம் இடம் தீர்ந்து விடுக்கவே. |
6 | விடும் காண் முன் ஐந்திரியங்களைப் போல் நடுங்காது இருப்பானும் ஐ ஐந்து நண்ணப் படுங்காதல் மாதின்பால் பற்று அற விட்டுக் கடுங்கால் கரணம் கருத்து உறக் கொண்டே. |
7 | கொண்ட குணனே நலனே நல் கோமளம் பண்டை உருவே பகர்வாய் பவளமே மிண்டு தனமே மிடைய விடும் போதில் கண்ட கரணம் உள் செல்லக் கண்டு ஏவிடே. |
8 | விட்ட பின் கர்ப்ப உற்பத்தி விதியிலே தொட்டு உறும் காலங்கள் தோன்றக் கருதிய கட்டிய வாழ் நாள் சா நாள் குணம் கீழ்மை சீர்ப் பட்ட நெறி இது என்று எண்ணியும் பார்க்கவே. |
9 | பார்த்திட்டு வைத்துப் பரப்பு அற்று உருப் பெற்று வார்ச்சென்ற கொங்கை மடந்தையை நீக்கியே சேர்த்து உற்ற இரு திங்கள் சேராது அகலினும் மூப்பு உற்றே பின் நாளில் ஆம் எல்லாம் உள்ளவே. |
10 | வித்து இடுவோர்க்கு அன்றி மேலோர் விளைவு இல்லை வித்து இடுவோர்க்கு அன்றி மிக்கோர் அறிவு இல்லை வித்தினில் வித்தை விது அர உணர்வ ரேல் மத்தில் இருந்த ஓர் மாங்கனி ஆமே. |
11 | கருத்தினில் அக்கரம் ஆய் உயவும் யாவும் கருத்து உளன் ஈசன் கரு உயிரோடும் கருத்தது வித்தாய்க் காரண காரியம் கருத்து உறுமாறு இவை கற்பனை தானே. |
12 | ஒழியாத விந்து உடன் நிற்க நிற்கும் அழியாப் பிராணன் அதிபலம் சத்தி ஒழியாத புத்தி தபம் செபம் மோனம் அழியாத சித்தி உண்டாம் விந்து வற்றிலே. |
13 | வற்ற அனலைக் கொளுவி மறித்து ஏற்றி உற்ற சுழி அனல் சொருகிச் சுடர் உற்று முற்று மதியத்து அமுதை முறை முறை செற்று உண்பவரே சிவ யோகியாரே. |
14 | யோகியும் ஞானியும் உத்தம சித்தனும் யோகியும் ஞான புரந்தரன் ஆவோனும் மோகம் உறினும் அமிர் உண்போனும் ஆகிய விந்து அழியாத அண்ணலே. |
15 | அண்ணல் உடல் ஆகி அவ் அனல் விந்துவும் மண் இடை மாய்க்கும் பிராணன் ஆம் விந்துவும் கண்ணும் கனல் இடைக் கட்டி கலந்து எரித்து உண்ணில் அமிர்து ஆகி யோகிக்கு அறிவாமே. |
16 | அறியாது அழிகின்ற ஆதலால் நாளும் பொறியால் அழிந்து புலம்பு கின்றார்கள் அறிவாய் நனவில் அதீதம் புரியச் செறிவாய் இருந்து சேரவே மாயுமே. |
17 | மாதரை மாய வரும் கூற்றம் என்று உன்னக் காதல் அது ஆகிய காமம் கழிந்திடும் சாதலும் இல்லை சத கோடி ஆண்டினும் சோதியின் உள்ளே துரிசு அறும் காலமே. |
18 | காலம் கடந்தவன் காண் விந்து செற்றவன் காலம் கடந்து அழிந்தான் விந்து செற்றவன் காலங்களின் விந்து செற்று உற்ற காரிகை காலின் கண் வந்த கலப்பு அறியாரே. |
19 | கலக்கு நாள் முன்னாள் தன் இடைக் காதல் நலத் தக வேண்டில் அந் நாரி உதரக் கலத்தின் மலத்தைத் தண் சீதத்தைப் பித்தை விலக்குவன செய்து மேல் அணைவீரே. |
20 | மேலா நிலத்து எழு விந்துவும் நாதமும் கோலால் நடத்திக் குறி வழியே சென்று பால் ஆம் அமிர்து உண்டு பற்று அறப் பற்றினால் மால் ஆனது மாள மாளும் அவ் விந்துவே. |
21 | விந்து விளையும் விளைவின் பயன் முற்றும் அந்த அழிவும் அடக்கத்தில் ஆக்கமும் நந்திய நாதமும் நாதத்தால் பேதமும் தந்து உணர்வோர்க்குச் சயம் ஆகும் விந்துவே. |
22 | விந்து என் வீசத்தை மேவிய மூலத்து நந்திய அங்கியினாலே நயம் தெரித்து அந்தம் இல் பானு அதி கண்டம் மேல் ஏற்றிச் சந்திரன் சார்பு உறத் தண் அமுது ஆமே. |
23 | அமுதச் சசிவிந்து ஆம் விந்து மாள அமுதப் புனல் ஓடி அங்கியின் மாள அமுதச் சிவ போகம் ஆதலால் சித்தி அமுதப் பலாவன ஆங்கு உறும் யோகிக்கே. |
24 | யோகம் அவ் விந்து ஒழியா வகை புணர்ந்து ஆகம் இரண்டும் கலந்தாலும் ஆங்கு உறாப் போகம் சிவபோகம் போகி நல் போகமா மோகம் கெட முயங்கார் மூடர் மாதர்க்கே. |
25 | மாதர் இடத்தே செலுத்தினும் அவ்விந்து காதலின் ஆல் விடார் யோகம் கலந்தவர் மாதர் உயிர் ஆசை கைக் கொண்டே வாடுவர் காதலர் போன்று அங்ஙன் காதலாம் சாற்றிலே. |
26 | சாற்றிய விந்து சயம் ஆகும் சத்தியால் ஏற்றிய மூலத் தழலை எழ மூட்டி நாற்றிசை ஓடா நடு நாடி நாதத்தோடு ஆற்றி அமுதம் அருந்த விந்து ஆமே. |
27 | விந்துவும் நாதமும் மேவக் கனல் மூல வந்தவன் நன் மயிர்க்கால் தோறும் மன்னிடச் சிந்தனை மாறச் சிவ மகம் ஆகவே விந்துவும் மாளும் மெய்க் காயத்தில் வித்திலே. |
28 | வித்துக் குற்று உண்பான் விலை அறியாதவன் வித்துக் குற்று உண்ணாமல் வித்துச் சுட்டு உண்பவன் வித்துக் குற்று உண்பானில் வேறு அலன் நீற்றவன் வித்துக் குற்று உண்ணாமல் வித்து வித்தான் நன்றே. |
29 | அன்னத்தில் விந்து அடங்கும் படி கண்டு மன்னப் பிராணன் ஆம் விந்து மறித்திட்டு மின் ஒத்த விந்து நாதாந்தத்து விட்டிட அன்ன அத் திரு விந்து ஆயும் காயத்திலே. |
30 | அன்னம் பிராணன் என்றார்க்கும் இருவிந்து தன்னை அறிந்து உண்டு சாதிக்க வல்லார்க்குச் சொன்ன மாம் உருத்தோன்றும் எண் சித்தி ஆம் அன்னவர் எல்லாம் அழிவு அற நின்றதே. |
31 | நின்ற சிகாரம் நினைக்கும் பிராணன் ஆய் ஒன்று மகாரம் ஒரு மூன்றோடு ஒன்று அவை சென்று பரா சத்தி விந்து சயம் தன்னை ஒன்ற உரைக்க உபதேசம் தானே. |
32 | தானே உபதேசம் தான் அல்லாதது ஒன்று இல்லை வானே உயர்விந்து வந்த பதினான்கு மானேர் அடங்க அதன் பின்பு புத்தியும் தானே சிவகதி தன்மையும் ஆமே. |
33 | விந்துவும் நாதமும் விளைய விளைந்தது வந்த இப் பல் உயிர் மன் உயிர்க்கு எலாம் அந்தமும் ஆதியும் ஆம் மந்திரங்களும் விந்து அடங்க விளையும் சிவோகமே. |
34 | வறுக்கின்ற வாறு மனத்து உலா வெற்றி நிறுக்கின்ற வாறும் அந் நீள் வரை ஒட்டிப் பொறிக்கின்ற வாறும் அப் பொல்லா வினையை அறுக்கின்ற நாள் வரும் அத்திப் பழமே. |
35 | விந்துவும் நாதமும் மேவி உடன் கூடிச் சந்திரனோடே தலைப் படும் ஆயிடில் அந்தர வானத்து அமுதம் வந்து ஊறிடும் அங்குதி மந்திரம் ஆகுதி ஆகுமே. |
36 | மனத்தொடு சத்து மனம் செவி அன்ன இனத்து எழுவார்கள் இசைந்தன நாடி மனத்தில் எழுகின்ற வாக்கு வசனம் கனத்த இரதம் அக் காமத்தை நாடிலே. |
37 | சத்தமும் சத்த மனமும் மனக் கருத்து ஒத்து அறிகின்ற இடமும் அறிகிலர் மெய்த்து அறிகின்ற இடம் அறிவாளர்க்கு அத்தன் இருப்பிடம் அவ் இடம் தானே. |
38 | உரமடி மேதினி உந்தியில் அப்பாம் விரவிய தன் முலை மேவிய கீழ் அங்கி கரு முலை மீ மிசை கைக் கீழில் கால் ஆம் விரவிய கந்தரம் மேல் வெளி ஆமே. |
22. ஆதித்த நிலை - அண்டாதித்தன் |
1 | செஞ் சுடரோன் முதல் ஆகிய தேவர்கள் மஞ்சு உடை மேரு வலம் வரு காரணம் எம் சுடர் ஈசன் இறைவன் இணை அடி அம் சுடர் ஆக வணங்கும் தவமே. |
2 | பகலவன் மாலவன் பல் உயிர்க்கு எல்லாம் புகலவன் ஆய் நின்ற புண்ணிய நாதன் இகல் அற ஏழ் உலகும் உற ஓங்கும் பகலவன் பல் உயிர்க்கு ஆதியும் ஆமே. |
3 | ஆதித்தன் அன்பினோடு ஆயிரம் நாமமும் சோதியின் உள்ளே சுடர் ஒளியாய் நிற்கும் வேதியர் வேண்டினும் விண்ணவர் சொல்லினும் ஆதியில் அன்பு பழுக்கின்ற வாறே. |
4 | தானே உலகுக்குத் தத்துவன் ஆய் நிற்கும் தானே உலகுக்குத் தையலும் ஆய் நிற்கும் தானே உலகுக்குச் சம்புவும் ஆய் நிற்கும் தானே உலகுக்குத் தண் சுடர் ஆகுமே. |
5 | வலைய முக் கோணம் வட்டம் அறு கோணம் துலை இரு வட்டம் துய்ய விதம் எட்டில் அலை உற்ற வட்டத்தில் ஈர் எட்டு இதழ் ஆம் மலைவு அற்று உதித்தனன் ஆதித்தன் ஆமே. |
6 | ஆதித்தன் உள்ளில் ஆன முக் கோணத்தில் சோதித்து இலங்கும் நல் சூரியன் நூல் ஆங்கு ஏதம் உறும் கேணி சூரியன் எட்டில் சோதி தன் ஈர் எட்டில் சோடசம் தானே. |
7 | ஆதித்தனோடே அவனி இருண்டது பேதித்த நாலும் பிதற்றிக் கழிந்தது சோதிக்குள் நின்று துடி இடை செய்கின்ற வேதப் பொருளை விளங்குகிலீரே. |
8 | பாருக்குக் கீழே பகலோன் வரும் வழி யாருக்கும் காண ஒண்ணாத அரும் பொருள் நீருக்கும் தீக்கும் நடுவே உதிப்பவன் ஆருக்கும் எட்டாத ஆதித்தன் தானே. |
9 | மண்ணை இடந்து அதின் கீழ் ஓடும் ஆதித்தன் விண்ணை இடந்து வெளி செய்து நின்றிடும் கண்ணை இடந்து களி தந்த ஆனந்தம் எண்ணும் கிழமைக்கு இசைந்து நின்றானே. |
10 | பாரை இடந்து பகலோன் வரும் வழி யாரும் அறியார் அருங் கடை நூலவர் தீரன் இருந்த திரு மலை சூழ் என்பர் ஊரை உணர்ந்தார் உணர்ந்து இருந்தாரே. |
11 | நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் கன்று ஆய நந்திக் கருத்துள் இருந்தனன் கொன்று மலங்கள் குழல்வழி ஓடிட வென்று விளங்கும் விரிசுடர் காணுமே. |
12 | ஆதித்தன் ஓடி அடங்கும் இடம் கண்டு சாதிக்க வல்லவர் தம்மை உணர்ந்தவர் பேதித்து உலகம் பிதற்றும் பிதற்று எல்லாம் ஆதித்தனோடே அடங்கு கின்றாரே. |
13 | உருவிப் புறப்பட்டு உலகை வலம் வந்து சொருகிக் கிடக்கும் துறை அறிவார் இல்லை சொருகிக் கிடக்கும் துறை அறிவாளர்க்கு உருகிக் கிடக்கும் என் உள் அன்பு தானே. |
14 | எறிகதிர் ஞாயிறு மின் பனி சோரும் எறிகதிர் சோமன் எதிர் நின்று எறிப்ப விரிகதிர் உள்ளே வியங்கும் என் ஆவி ஒரு கதிர் ஆகில் உவா அது ஆமே. |
15 | சந்திரன் சூரியன் தான் வரில் பூசனை முந்திய பானுவில் இந்து வந்தேய் முறை அந்த இரண்டும் உபய நிலத்தில் சிந்தை தெளிந்தார் சிவம் ஆயினாரே. |
16 | ஆகும் கலையோடு அருக்கன் அனல் மதி ஆகும் கலை இடை நான்கு எனல் ஆம் என்பார் ஆகும் அருக்கன் அனல் மதியோடு ஒன்ற ஆகும் அப் பூரனை ஆம் என்று அறியுமே. |
17 | ஈர் அண்டத்து அப்பால் இயங்கிய அவ்வொளி ஓர் அண்டத்தார்க்கும் உணரா உணர்வது பேர் அண்டத்து ஊடே பிறங்கு ஒளியாய் நின்ற தார் அண்டத் தக்கார் அரியத்தக்காரே. |
18 | ஒன்பதின் மேவி உலகம் வலம் வரும் ஒன்பதும் ஈசன் இயல் அறிவார் இல்லை முன்பதின் மேவி முதல்வன் அருள் இலார் இன்பம் இலார் இருள் சூழ நின்றாரே. |
19 | விந்து அபரம் பரம் இரண்டாய் விரிந்து அந்த அபரம் பரம் நாதம் ஆகியே வந்தன தம்மில் பரம் கலை ஆதி வைத்து உந்தும் அருணோ தயம் என்ன உள்ளத்தே. |
20 | உள்ள அருணோதயத்து எழும் ஓசை தான் தெள்ளும் பர நாதத்தின் செயல் என்பதால் வள்ளல் பரவிந்து வைகரி ஆதி வாக்கு உள்ளன ஐம் கலைக்கு ஒன்றாம் உதயமே. |
21 | தேவர் பிரான் திசை பத்தும் உதயம் செய்யும் மூவர் பிரான் என முன் ஒரு காலத்து நால்வர் பிரான் நடுவாய் உரையாய் நிற்கும் மேவு பிரான் என்பர் விண்ணவர் தாமே. |
22 | பொய் இலன் மெய்யன் புவனா பதி எந்தை மை இருள் நீக்கும் மதி அங்கி ஞாயிறு செய் இருள் நீக்கும் திரு உடை நந்தி என்று கை இருள் நீங்கக் கலந்து எழுந்தானே. |
23 | தனிச்சுடர் எற்றித் தயங்கு இருள் நீங்க அனித்திடு மேலை அரும் கனி ஊறல் கனிச் சுடராய் நின்ற கயிலையில் ஈசன் நனிச் சுடர் மேல் கொண்ட வண்ணமும் ஆமே. |
24 | நேர் அறிவாக நிரம்பிய பேர் ஒளி போர் அறியாது புவனங்கள் போய் வரும் தேர் அறியாத திசை ஒளி ஆய் இடும் ஆர் அறிவார் இது நாயகம் ஆமே. |
25 | மண்டலத்து உள்ளே மலர்ந்து எழும் ஆதித்தன் கண்டிடத்து உள்ளே கதிர் ஒளியாய் இடும் சென்றிடத்து எட்டுத் திசை எங்கும் போய்வரும் நின்று இடத்தே நிலை நேர் அறிவார்க்கே. |
26 | நாபிக் கண் நாசி நயன நடுவினும் தூபியோடு ஐந்தும் சுடர் விடும் சோதியை தேவர்கள் ஈசன் திருமால் பிரமனும் மூவரும் ஆக உணர்ந்து இருந்தாரே. |
27 | அன்றிய பாச இருளும் அஞ்ஞானமும் சென்றிடு ஞானச் சிவப் பிரகாசத்தால் ஒன்றும் இரு சுடர் ஆம் அருண உதயம் துன்று இருள் நீங்குதல் போலத் தொலைந்ததே. |
28 | கடம் கடம் தோறும் கதிரவன் தோன்றில் அடங்கிட மூடில் அவற்றில் அடங்கான் விடம் கொண்ட கண்டனும் மேவிய காயத்து அடங்கிட நின்றதும் அப் பரிசு ஆமே. |
29 | தானே விரிசுடர் மூன்றும் ஒன்றாய் நிற்கும் தானே அயன் மால் என நின்று தாபிக்கும் தானே உடல் உயிர் வேறு அன்றி நின்று உளன் தானே வெளி ஒளி தான் இருட்டு ஆமே. |
30 | தெய்வச் சுடர் அங்கி ஞாயிறும் திங்களும் வையம் புனல் அனல் மாருதம் வானகம் சைவப் பெரும்பதி தாங்கிய பல் உயிர் ஐவர்க்கு இடம் இடை ஆறு அங்கம் ஆமே. |
23. பசு இலக்கணம் - பிராணன் |
1 | உன்னும் அளவில் உணரும் ஒருவனைப் பன்னும் மறைகள் பயிலும் பரமனை என் உள் இருக்கும் இளையா விளக்கினை அன்ன மயம் என்று அறிந்து கொண்டேனே. |
2 | அன்னம் இரண்டு உள ஆற்றங் கரையினில் துன்னி இரண்டும் துணைப் பிரியாது அன்ன தன்னிலை அன்னம் தனி ஒன்று அது என்றக் கால் பின்ன மட அன்னம் பேறு அணு காதே. |
3 | வைகரி ஆதியும் மாயா மலா தியும் பொய் கரி ஆன புருட ஆதி பேதமும் மெய் கரி ஞானம் கிரியா விசேடத்துச் செய் கரி ஈசன் அனாதியே செய்ததே. |
4 | அணுவில் அணுவினை ஆதிப் பிரானை அணுவில் அணுவினை ஆயிரம் கூறு இட்டு அணுவில் அணுவை அணுக வல்லார் கட்கு அணுவில் அணுவை அணுகலும் ஆமே. |
5 | படர் கொண்ட ஆல் அதின் வித்து அது போலச் சுடர் கொண்ட அணுவினைத் தூவழி செய்ய இடர் கொண்ட பாச இருள் அற ஓட்டி நடர் கொண்ட நல்வழி நாடலும் ஆமே. |
6 | அணுவுள் அவனும் அவனுள் அணுவும் கணு அற நின்ற கலப்பது உணரார் இணை இலி ஈசன் அவன் எங்கும் ஆகித் தணிவு அற நின்றான் சராசரம் தானே. |
7 | மேவிய சீவன் வடிவு அது சொல்லிடில் கோவின் மயிர் ஒன்று நூறுடன் கூறு இட்டு மேவிய கூறு அது ஆயிரம் ஆயினால் ஆவியின் கூறு நூறு ஆயிரத்து ஒன்றே. |
8 | உண்டு தெளிவன் உரைக்க வியோகமே கொண்டு பயிலும் குணம் இல்லை ஆயினும் பண்டு பயிலும் பயில் சீவனார் பின்னைக் கண்டு சிவன் உருக் கொள்வர் கருத்து உளே. |
9 | மாயா உபாதி வசத்து ஆகும் சேதனத்து ஆய குரு அருளாலே அதில் தூண்ட ஓயும் உபாதியோடு ஒன்றி ஒன்றாது உயிர் ஆய துரியம் புகுந்து அறிவு ஆகவே. |
10 | கற்ற பசுக்கள் கதறித் திரியினும் கொற்ற பசுக்கள் குறி கட்டி மேயினும் உற்ற பசுக்கள் ஒரு குடம் பால் போதும் மற்றைப் பசுக்கள் வறள் பசு தானே. |
11 | கொல்லையில் மேயும் பசுக்களைச் செய்வது என் எல்லை கடப்பித்து இறைவன் அடி கூட்டி வல்ல செய்து ஆற்ற மதித்த பின் அல்லது கொல்லை செய் நெஞ்சம் குறிப்பு அறியாதே. |
12 | சீவன் எனச் சிவன் என்ன வேறு இல்லை சீவனார் சிவனாரை அறிகிலர் சீவனார் சிவனாரை அறிந்த பின் சீவனார் சிவனாய் இட்டு இருப்பரே. |
13 | குண விளக்கு ஆகிய கூத்தப் பிரானும் மண விளக்கு ஆகிய மன் உயிர்க்கு எல்லாம் பண விளக்கு ஆகிய பல் தலை நாகம் கண விளக்கு ஆகிய கண் காணி ஆகுமே. |
14 | அறிவாய் அறியாமை நீங்கி அவனே பொறிவாய் ஒழிந்து எங்கும் தான் ஆன போதன் அறிவாய் அவற்றின் உள் தானா அறிவன் செறிவு ஆகி நின்ற அச் சீவனும் ஆகுமே. |
15 | ஆறு ஆறின் தன்மை அறியாது இருந்தேனுக்கு ஆறு ஆறின் தன்மை அறிவித்தான் பேர் நந்தி ஆறு ஆறின் தன்மை அருளால் அறிந்தபின் ஆறு ஆறுக்கு அப்புறம் ஆகி நின்றானே. |
16 | சிவம் ஆகிய அருள் நின்று அறிந்து ஓரார் அவம் ஆம் மலம் ஐந்தும் ஆவது அறியா தவம் ஆன செய்து தலைப் பறிகின்றார் நவம் ஆன தத்துவம் நாட கிலாரே. |
17 | நாள் தோறும் ஈசன் நடத்தும் தொழில் உன்னார் நாள் தோறும் ஈசன் நயந்து ஊட்டல் நாடிடார் நாள் தோறும் ஈசன் நல்லோர்க்கு அருள் நல்கல் ஆல் நாள் தோறும் நாடார்கள் நாள் வினை யாளரே. |
24. ஐந்து இந்திரியம் அடக்கும் அருமை |
1 | ஆக மதத்தன ஐந்து களிறு உள ஆக மதத்து அறியோடு அணை கின்றில பாகனும் மெய்த்தவை தாமும் இளைத்த பின் யோகு திருந்துதல் ஒன்று அறியோமே. |
2 | கருத்தின் நல் நூல் கற்றுக் கால் கொத்திப் பாகன் திருத்தலும் பாய் மாத் திகைத்து அன்றிப் பாயா எருத்து உறவே இருக்கிலும் ஆங்கே வருத்தினும் அம்மா வழி நடவாதே. |
3 | புலம் ஐந்தும் புள் ஐந்து புள் சென்று மேயும் நிலம் ஐந்து நீர் ஐந்து நீர்மையும் ஐந்து குலம் ஒன்று கோல் கொண்டு மேய்ப்பான் ஒருவன் உலம் வந்து போம்வழி ஒன்பது தானே. |
4 | அஞ்சு உள சிங்கம் அடவியில் வாழ்வன அஞ்சும் போய் மேய்ந்ததும் அஞ்சுகமே புகும் அஞ்சின் உகிரும் எயிறும் அறுத்து இட்டால் எஞ்சாது இறைவனை எய்தலும் ஆமே. |
5 | ஐவர் அமைச்சருள் தொண்ணூற்று அறுவர்கள் ஐவரும் மைந்தரும் ஆளக் கருதுவர் ஐவரும் ஐந்து சினத்தொடே நின்றிடில் ஐவர்க்கு இறை இறுத்து ஆற்ற கிலோமே. |
6 | சொல்ல கில்லேன் சுடர்ச் சோதியை நாள் தொறும் சொல்ல கில்லேன் திரு மங்கையும் அங்கு உள வெல்ல கில்லேன் புலன் ஐந்துடன் தன்னையும் கொல்ல நின்று ஓடும் குதிரை ஒத்தேனே. |
7 | எண் இலி இல்லி உடைத்து அவ் இருட்டு அறை எண் இலி இல்லியோடு ஏகில் பிழைதரும் எண் இலி இல்லியோடு ஏகாமை காக்கு மேல் எண் இலி இல்லது ஓர் இன்பம் அது ஆமே. |
8 | விதியின் பெருவலி வேலை சூழ் வையம் துதியின் பெருவலி தொல் வான் உலகம் மதியின் பெருவலி மானுடர் வாழ்க்கை நிதியின் பெருவலி நீர்வலி தானே. |
25. ஐந்து இந்திரியம் அடக்கு முறைமை |
1 | குட்டம் ஒருமுழம் உள்ளது அரை முழம் வட்டம் அமைந்தது ஓர் வாவியுள் வாழ்வன பட்டன மீன் பல பரவன் வலை கொணர்ந்து இட்டனன் யாம் இனி ஏதம் இலோமே. |
2 | கிடக்கும் உடலில் கிளர் இந்திரியம் அடக்கலும் உறும் அவன் தானே அமரன் விடக்கு இரண்டின் புறம் மேவுறு சிந்தை நடக்கின் நடக்கும் நடக்கும் அளவே. |
3 | அஞ்சும் அடக்கு அடக்கு என்பர் அறிவு இலார் அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கு இலை அஞ்சும் அடக்கில் அசேதனம் ஆம் என்று இட்டு அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே. |
4 | முழக்கி எழுவன மும் மத வேழம் அடக்க அறிவு என்னும் கோட்டையை வைத்தேன் பிழைத்தன ஓடிப் பெரும் கேடு மண்டிக் கொழுத்தன வேழம் குலைக்கின்ற வாறே. |
5 | ஐந்தில் ஒடுங்கில் அகல் இடம் ஆவது ஐந்தில் ஒடுங்கில் அரும் தவம் ஆவது ஐந்தில் ஒடுங்கில் அரன் பதம் ஆவது ஐந்தில் ஒடுங்கில் அருள் உடையாரே. |
6 | பெருக்கப் பிதற்றில் என் பேய்த்தேர் நினைந்து என் விரித்த பொருட்கு எல்லாம் வித்து ஆவது உள்ளம் பெருக்கில் பெருக்கும் சுருக்கில் சுருக்கும் அருத்தமும் அத்தனை ஆய்ந்து கொள்வார்க்கே. |
7 | இளைக்கின்ற வாறு அறிந்து இன் உயிர் வைத்த கிளைக்கு ஒன்றும் ஈசனைக் கேடுஇல் புகழோன் தளைக் கொன்ற நாகம் ஐஞ்சு ஆடல் ஒடுக்கத் துளைக் கொண்டது அவ்வழி தூங்கும் படைத்தே. |
8 | பாய்ந்தன பூதங்கள் ஐந்தும் படர் ஒளி சார்ந்திடும் ஞானத் தறியினில் பூட்டு இட்டு ஆய்ந்து கொள் ஆனந்தம் என்னும் அருள் செய்யில் வேய்ந்து கொள் மேலை விதி அது தானே. |
9 | நடக்கின்ற நந்தியை நாள் தோறும் உன்னில் படர்க்கின்ற சிந்தையைப் பைய ஒடுக்கிக் குறிக் கொண்ட சிந்தை குறிவழி நோக்கில் வடக்கொடு தெற்கு மனக் கோயில் ஆமே. |
10 | சென்றன நாழிகை நாள்கள் சில பல நின்றது நீள் பொருள் நீர் மேல் எழுத்து ஒத்து வென்று புலன்கள் விரைந்து விடுமின்கள் குன்று விழ அதில் தாங்கலும் ஆமே. |
11 | போற்றி இசைத்துப் புனிதன் திரு மேனியைப் போற்றி செய் மீட்டே புலன் ஐந்தும் புத்தி ஆல் நால் திசைக்கும் பின்னை யாருக்கும் நாதனை ஊற்று கை உள்ளத்து ஒருங்கலும் ஆமே. |
12 | தரிக்கின்ற நெஞ்சம் சகளத்தின் உள்ளே அரிக்கின்ற ஐவரை யாரும் உணரார் சிரிக்கின்ற வாறு சில பல பேசில் வரிக் கொண்ட மை சூழ் வரை அது ஆமே. |
13 | கை விடலால் ஆவது ஒன்று இல்லை கருத்தின் உள் எய்தி அவனை இசையினால் ஏத்து மின் ஐவருடைய அவா வினில் தோன்றிய பொய் வருடைய புலன்களும் ஐந்தே. |
26. அசற்குரு நெறி |
1 | உணர்வு ஒன்று இலா மூடன் உண்மை ஓராதோன் கணு இன்றி வேத ஆகம நெறி காணான் பணி ஒன்று இலா தோன் பர நிந்தை செய்வோன் அணுவின் குணத்தோன் அசல் குரு ஆமே. |
2 | மந்திர தந்திர மா யோக ஞானமும் பந்தமும் வீடும் தரிசித்துப் பார்ப்பவர் சிந்தனை செய்யாத் தெளிவுயாது ஊண் பொருள் அந்தகர் ஆவோர் அசல் குரு ஆமே. |
3 | ஆம் ஆறு அறியாதோன் மூடன் அதி மூடன் காம ஆதி நீங்காக் கலதி கலதிகட்கு ஆமா அசத்து அறிவிப்போன் அறிவு இலோன்று கோமான் அலன் அசனத்து ஆகும் குரவனே. |
4 | கற்பாய கற்பங்கள் நீக்காமல் கற்பித்தால் தன் பாவம் குன்றும் தனக்கே பகை ஆகும் நற் பால் அரசுக்கும் நாட்டுக்கும் கேடு என்றே முற்பாலே நந்தி மொழிந்து வைத்தானே. |
5 | குருடர்க்குக் கோல் காட்டிச் செல்லும் குருடர் முரணும் பழம் குழி வீழ்வார்கள் முன்பின் குருடரும் வீழ்வார்கள் முன் பின் அறவே குருடரும் வீழ்வார் குருடரோடு ஆகியே. |
27. சற்குரு நெறி |
1 | தாள் தந்து அளிக்கும் தலைவனே சற்குரு தாள் தந்து தன்னை அறியத் தர வல்லோன் தாள் தந்து தத்துவா தீதத்துச் சார் சீவன் தால் தந்து பாசம் தணிக்கும் அவன் சத்தே. |
2 | தவிர வைத்தான் வினை தன் அடியார் கோள் தவிர வைத்தான் சிரத்தோடு தன் பாதம் தவிர வைத்தான் நமன் தூதுவர் கூட்டம் தவிர வைத்தான் பிறவித் துயர் தானே. |
3 | கறுத்த இரும்பே கனகம் அது ஆனால் மறித்து இரும்பு ஆகா வகை அது போலக் குறித்த அப்போதே குரு அருள் பெற்றால் மறித்துப் பிறவியில் வந்து அணுகானே. |
4 | பாசத்தை நீக்கிப் பரனோடு தன்னையும் நேசத்து நாடி மலம் அற நீக்கு வோர் ஆசு அற்ற சற்குரு ஆவோர் அறிவு அற்றுப் பூசற்கு இரங்குவோர் போதக் குரு அன்றே. |
5 | நேயத்தே நிற்கும் நிமலன் மலம் அற்ற நேயத்தை நல்க வல்லோன் நித்தன் சுத்தனே ஆயத்தவர் தத்துவம் உணர்ந்து தாம் கற்ற நேயர்க்கு அளிப்பவன் நீடும் குரவனே. |
6 | பரிசன வேதி பரிசித்தது எல்லாம் வரிசைதரும் பொன் வகை ஆகும் மா போல் குரு பரிசித்த குவலயம் எல்லாம் திரி மலம் தீர்ந்து சிவகதி ஆமே. |
7 | தானே என நின்ற சற்குரு சந்நிதி தானே என நின்ற தன்மை வெளிப்படில் தானே தனைப் பெற வேண்டும் சதுர் பெற ஊனே என நினைந்து ஓர்ந்து கொள் உன்னிலே. |
8 | வரும் வழி போம் வழி மாயா வழியைக் கருவழி கண்டவர் காணா வழியைப் பெரும் வழியா நந்தி பேசும் வழியைக் குரு வழியே சென்று கூடலும் ஆமே. |
9 | குரு என்பவனே வேத ஆகமம் கூறும் பர இன்பன் ஆகிச் சிவயோகம் பாவித்து ஒரு சிந்தை இன்றி உயர் பாசம் நீக்கி வரு நல் குரவன் பால் வைக்கலும் ஆமே. |
10 | சத்தும் அசத்தும் சத சத்தும் தான் காட்டிச் சித்தும் அசித்தும் சிவ பரத்தே சேர்த்துச் சுத்தம் அசுத்தம் அறச் சுகம் ஆன சொல் அத்தன் அருள் குருவாம் அவன் கூறிலே. |
11 | உற்றிடும் ஐம் மலம் பாச உணர்வினால் பற்று அறு நாதன் அடியில் பணிதலால் சுற்றிய பேதம் துரியம் மூன்றால் வாட்டித் தற்பரம் மேவும் ஓர் சாதகர் ஆமே. |
12 | எல்லாம் இறைவன் இறைவி உடன் இன்பம் வல்லார் புலனும் வரும்கால் உயிர் தோன்றிச் சொல்லா மலம் ஐந்து அடங்கி இட்டு ஓங்கியே செல்லாச் சிவ கதி சேர்தல் விளையாட்டே. |
13 | ஈனப் பிறவியில் இட்டது மீட்டு ஊட்டித் தானத்துள் இட்டுத் தனை ஊட்டித் தாழ்த்தலும் ஞானத்தின் மீட்டலும் நாட்டலும் வீடுஉற்று மோனத்துள் வைத்தலும் முத்தன் தன் செய்கையே. |
14 | அத்தன் அருளின் விளையாட்டு இடம் சடம் சித்தொடு சித்து அறத் தெளிவித்த சீவனைச் சுத்தனும் ஆக்கித் துடைத்து மலத்தினைச் சத்துடன் ஐம் கருமத்து இடும் தன்மையே. |
15 | ஈ சத்துவம் கடந்து இல்லை என்று அப்புறம் பாசத்து உள்ளே என்றும் பாவியும் அண்ணலை நேசத்து உள்ளே நின்ற நின் மலன் எம் இறை தேசத்தை எல்லாம் தெளிய வைத்தானே. |
16 | மாணிக்க மாலை மலர்ந்து எழு மண்டலம் ஆணிப் பொன் நின்று அங்கு அமுதம் விளைந்தது பேணிக் கொண்டு உண்டார் பிறப்பு அற்று இருந்தார்கள் ஊணுக்கு இருந்தார் உணராத மாக்களே. |
17 | அசத்தொடு சத்தும் அசத்து சத்து நீங்க இசைத்திடு பாசப் பற்று ஈங்கு அறு மாறே அசைத்து இரு மாயை அணுத்தானும் ஆங்கே இசைத் தானும் ஒன்று அறிவிப்போன் இறையே. |
18 | ஏறு நெறியே மலத்தை எரித்தல் ஆல் ஈறு இல் உரையால் இருளை அறுத்தலால் மாறு இல் பசு பாசம் வாட்டலால் வீடுக கூறு பரனே குரு வாம் இயம்பிலே. |
28. கூடா வொழுக்கம் |
1 | கண் காணி இல் என்று கள்ளம் பல செய்வார் கண் காணி இல்லா இடம் இல்லை காணுங் கால் கண் காணி ஆகக் கலந்து எங்கும் நின்றானைக் கண் காணி கண்டார் களவு ஒழிந்தாரே. |
2 | செய்தான் அறியும் செழும் கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில் விண்ணோர் தொழச் செய்வன் மை தாழ்ந்து இலங்கு மிடறு உடையோனே. |
3 | பத்தி விற்று உண்டு பகலைக் கழிவிடு மத்தகர்க்கு அன்றோ மறு பிறப்பு உள்ளது வித்துக் குற்று உண்டு விளை புலம் பாழ்செய்யும் பித்தர் கட்கு என்றும் பிறப்பு இல்லை தானே. |
4 | வடக்கு வடக்கு என்பர் வைத்தது ஒன்று இல்லை நடக்க உறுவரே ஞானம் இல்லாதார் வடக்கில் அடங்கிய வையகம் எல்லாம் அகத்தில் அடங்கும் அறிவுடை யோர்க்கே. |
5 | காயக் குழப்பனைக் காய நல் நாடனைக் காயத்தின் உள்ளே கமழ்கின்ற நந்தியைத் தேயத்து உளே எங்கும் தேடித் திரிவர்கள் காயத்து உள் நின்ற கருத்து அறியாரே. |
6 | கண் காணி ஆகவே கை அகத்தே எழும் கண் காணி ஆகக் கருத்து உள் இருந்திடும் கண் காணி ஆகக் கலந்து வழி செய்யும் கண் காணி ஆகிய காதலன் தானே. |
7 | கன்னி ஒரு சிறை கற்றோர் ஒரு சிறை மன்னிய மா தவம் செய்வோர் ஒரு சிறை தன் இயல்பு உன்னி உணர்ந்தோர் ஒரு சிறை என் இது ஈசன் இயல்பு அறியாரே. |
8 | காணாத கண்ணில் படலமே கண் ஒளி காணாதவர் கட்கும் காணாத அவ் வொளி காணாதவர் கட்கும் கண் ஆம் பெரும் கண்ணைக் காணாது கண்டார் களவு ஒழிந்தாரே. |
9 | பித்தன் மருந்தால் தெளிந்து பிரகிருதி உய்த்து ஒன்றுமா போல் வழி அந்தன் கண் ஒளி அத்தன்மை ஆதல் போல் நந்தி அருள் தரச் சித்தம் தெளிந்தேன் செயல் ஒழிந்தேனே. |
10 | பிரான் மயம் ஆகப் பெயர்ந்தன எட்டும் பராம் மயம் என்று எண்ணிப் பள்ளி உணரார் சுரா மயம் உன்னிய சூழ்வினை யாளர் நிரா மயம் ஆக நினைப்பு ஒழிந்தாரே. |
11 | ஒன்று இரண்டு ஆகி நின்று ஒன்றி ஒன்று ஆயினோர்க்கு ஒன்றும் இரண்டும் ஒருகாலும் கூடிடா ஒன்று இரண்டு என்றே தருவோர்க்கு எலாம் ஒன்று இரண்டாய் நிற்கும் ஒன்றோடு ஒன்று ஆனதே. |
12 | உயிர் அது நின்றால் உணர்வு எங்கும் நிற்கும் அயர் அறிவு இல்லை ஆல் ஆருடல் வீழும் உயிரும் உடலும் ஒருங்கிக் கிடக்கும் பயிரும் கிடந்து உள்ளப் பாங்கு அறியாரே. |
13 | உயிர் அது வேறா உணர்வு எங்கும் ஆகும் உயிரை அறியில் உணர்வு அறிவு ஆகும் உயிர் அன்று உடலை விழுங்கும் உணர்வை அயரும் பெரும் பொருள் ஆங்கு அறியாரே. |
14 | உலகு ஆணி ஒண்சுடர் உத்தம சித்தன் நில ஆணி ஐந்தின் உள் நேர் உற நிற்கும் சில ஆணி ஆகிய தேவர் பிரானைத் தலைவாணி செய்வது தன்னை அறிவதே. |
15 | தான் அந்தம் ஆம் என நின்ற தனிச்சுடர் ஊன் அந்தம் ஆய் உலகு ஆய் நின்ற ஒண் சுடர் தேன் அந்தம் ஆய் நின்ற சிற்றின்பம் நீ ஒழி கோன் அந்தம் இல்லாக் குணத்து அருள் ஆமே. |
16 | உன் முதல் ஆகிய ஊன் உயிர் உண்டு எனும் கன் முதல் ஈசன் கருத்து அறிவார் இல்லை நன் முதல் ஏறிய நாமம் அற நின்றால் தன் முதல் ஆகிய தத்துவம் ஆமே. |
17 | இந்தியம் அந்தக் கரணம் இவை உயிர் வந்தன சூக்க உடல் அன்றும் ஆனது தந்திடும் ஐ விதத்தால் தற்புருடனும் முந்து உள மன்னும் ஆறு ஆறு முடிவிலே. |
29. கேடு கண்டு இரங்கல் |
1 | வித்துப் பொதிவார் விரைவிட்டு நாற்றுவார் அற்றதம் வாழ்நாள் அறிகிலாப் பாவிகள் உற்ற வினைத்து உயர் ஒன்றும் அறிகிலார் முற்று ஒளிதீயின் முனிகின்ற வாறே. |
2 | போது சடக் எனப் போகின்றது கண்டும் வாதுசெய்து என்னோ மனிதர் பெறுவது நீதி உள்ளே நின்று நின் மலன் தாள் பணிந்து ஆதியை அன்பில் அறிய கில்லார்களே. |
3 | கடன் கொண்டு நெல் குத்துக் கையரை ஊட்டி உடம்பினை ஓம்பி உயிராத் திரிவர் தடம் கொண்ட சாரல் தழல் முருடு ஏறி இடம் கொண்டு உடலார் கிடக்கின்ற வாறே. |
4 | விரைந்து அன்று நால்வர்க்கு மெய்ப்பதி சூழ்ந்து புரந்த கல் ஆல் நிழல் புண்ணியன் சொன்ன பரம் தன்னை ஓராப் பழி மொழி யாளர் உரம் தன்மை ஆக ஒருங்கி நின்றார்களே. |
5 | நின்ற புகழும் நிறை தவத்து உண்மையும் என்றும் எம் ஈசன் அடியவர்க்கே நல்கும் அன்றி உலகம் அது இது தேவென்று குன்று கையாலே குறைப் பட்ட வாறே. |
6 | இன்பத்து உளே பிறந்து இன்பத்து உளே வளர்ந்து இன்பத்து உளே நினைக்கின்ற இது மறந்து துன்பத்து உளே சிலர் சோ றொடு கூறை என்று துன்பத்து உளே நின்று தூங்கு கின்றார்களே. |
7 | பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றும் பெறுதற்கு அரிய பிரான் அடி பேணார் பெறுதற்கு அரிய பிராணிகள் எல்லாம் பெறுதற்கு அரியது ஓர் பேர் இழந்தாரே. |
8 | ஆர்வ மனமும் அளவு இல் இளமையும் ஈரமும் நல்ல என்று இன்பு உறு காலத்துத் தீர வருவது ஓர் காமத் தொழில் நின்று மாதவன் இன்பம் மறந்து ஒழிந்தார்களே. |
9 | இப் பரிசே இள ஞாயிறு போல் உரு அப் பரிசு அங்கியின் உள் உறை அம்மானை இப் பரிசே கமலத்து உறை ஈசனை மெய்ப் பரிசே வினவாது இருந்தோமே. |
10 | கூட கில்லார் குரு வைத்த குறி கண்டு நாட கில்லார் நயம் பேசித் திரிவர்கள் பாட கில்லார் அவன் செய்த பரிசு அறிந்து ஆட வல்லார் அவர் பேறு எது ஆமே. |
11 | நெஞ்சு நிறைந்து அங்கு இருந்த நெடும் சுடர் நஞ்சு எம்பிரான் என்று நாதனை நாள் தொறும் துஞ்சும் அளவும் தொழுமின் தொழா விடில் அஞ்சு அற்று விட்டது ஓர் ஆணையும் ஆமே. |
12 | மிருக மனிதர் மிக்கோர் பறவை ஒருவர் செய் அன்பு வைத்து உன்னாதது இல்லை பருகுவரோடு அவர் பார்ப்பயன் கொள்வர் திரு மரு மாதவம் சேர்ந்து உணர்ந்தாரே. |
13 | நீதி இலோர் பெற்ற பொன் போல் இறைவனைச் சோதியில் ஆரும் தொடர்ந்து அறிவார் இல்லை ஆதி பயன் என்று அமரர் பிரான் என்று நாதியே வைத்து அது நாடுகின்றேனே. |
14 | இரும் தேன் மலர் அளைந்து இன்பு உற வண்டு பெரும் தேன் இழைக்கின்ற பெற்றிமை ஓரார் வரும் தேன் நுகராது வாய்புகு தேனை அரும் தேனை யாரும் அறிய கிலாரே. |
15 | கருத்து அறியாது கழிந்தன காலம் அருத்தி உள்ளான் அமரா பதி நாதன் ஒருத்தன் உள்ளான் உலகத்து உயிர்க்கு எல்லாம் வருத்தி நில்லாது வழுக்கு கின்றாரே. |
16 | குதித்து ஓடிப் போகின்ற கூற்றமும் சார்வாய் விதித்தன நாட்களும் வீழ்ந்து கழிந்த அதிர்த்து இருந்து என் செய்திர் ஆறுதிர் ஆகில் கொதிக்கின்ற கூழில் துடுப்பு இடலாமே. |
17 | கரை அருகு ஆறாக் கழனி விளைந்த திரை அருகா முன்னம் சேர்ந்து இன்பம் எய்தும் வரை அருகு ஊறிய மாதவம் நோக்கின் நரை உருவாச் செல்லும் நாள் இலவாமே. |
18 | வரவு அறிவானை மயங்கி இருள் ஞாலத்து இரவு அறிவானை எழும் சுடர்ச் சோதியை அரவு அறிவார் முன் ஒரு தெய்வம் என்று விரவு அறியாமலே மேல் வைத்த வாறே. |
30. இதோபதேசம் |
1 | மறந்து ஒழி மண் மிசை மன்னாப் பிறவி இறந்து ஒழி காலத்தும் ஈசனை உள்கும் பறந்து அலமந்து படுதுயர் தீர்ப்பான் சிறந்த சிவ நெறி சிந்தை செய்யீரே. |
2 | செல்லும் அளவும் செலுத்துமின் சிந்தையை வல்ல பரிசால் உரைமின்கள் வாய்மையை இல்லை எனினும் பெரிது உளன் எம் இறை நல்ல வரன் நெறி நாடுமின் நீரே. |
3 | ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே சென்றே புகும் கதி இல்லை நும் சித்தத்து நின்றே நிலை பெற நீர் நினைந்து உய்மினே. |
4 | போற்றி செயம் தண் கயிலைப் பொருப்பனை நால் திசைக்கும் நடுவாய் நின்ற நம்பனைக் காற்று இசைக்கும் கமழ் ஆக்கையைக் கைக்கொண்டு கூற்று உதைத்தான் தன்னைக் கூறி நின்று உய்மின்னே. |
5 | இக் காயம் நீக்கி இனி ஒரு காயத்தில் புக்குப் பிறவாமல் போம் வழி நாடுமின் எக்காலத்து இவ் உடல் வந்து எமக்கு ஆனது என் அக் காலம் உன்ன அருள் பெறலாமே. |
6 | போகின்ற ஆறே புகுகின்ற அப்பொருள் ஆகின்ற போதும் அரன் அறிவான் உளன் சாகின்ற போதும் தலைவனை நாடுமின் ஆகின்ற அப் பொருள் அக்கரை ஆகுமே. |
7 | பறக்கின்ற ஒன்று பயன் உற வேண்டின் இறக்கின்ற காலத்தும் ஈசனை உள்கும் சிறப்பொடு சேரும் சிவ கதி பின்னைப் பிறப்பு ஒன்று இலாமையும் பேர் உலகு ஆமே. |
8 | கூடியும் நின்றும் தொழுது எம் இறைவனைப் பாடி உளே நின்று பாதம் பணிமின்கள் ஆடி உளே நின்று அறிவு செய்வார்கட்கு நீடிய ஈற்றுப் பசு அது ஆமே. |
9 | விடுகின்ற சீவனார் மேல் எழும் போது நடு நின்று நாடு மின் நாதன் தன் பாதம் கெடுகின்ற வல் வினை கேடுஇல் புகழோன் இடுகின்றான் உம்மை இமையவ ரோடே. |
10 | இன்பு உறுவீர் அறிந்தே எம் இறைவனை அன்பு உறுவீர் தவம் செய்யும் மெய் ஞானத்துப் பண்பு உறுவீர் பிறவித் தொழிலே நின்று துன்பு உறு பாசத்து உழைத்து ஒழிந்தீரே. |
11 | மேற் கொள்ளல் ஆவது ஓர் மெய்த்தவம் ஒன்று உண்டு மேற் கொள்ளல் ஆவது ஓர் மெய்த்தாளும் ஒன்று உண்டு மேற் கொள்ளல் ஆவது ஓர் மெய்ந் நெறி ஒன்று உண்டு மேற் கொள்ளல் ஆம் வண்ணம் வேண்டி நின்றோர்க்கே. |
12 | சார்ந்தவர்க்கு இன்பம் கொடுக்கும் தழல் வண்ணன் பேர்ந்து அவர்க்கு இன்னாப் பிறவி கொடுத்திடும் கூர்ந்து அவர்க்கே குரைகழல் காட்டிடும் சேர்ந்தவர் தேவரைச் சென்று உணர் வாரே. |
13 | முத்தியை ஞானத்தை முத் தமிழ் ஓசையை எத்தனை காலமும் ஏத்துவர் ஈசனை நெய்த் தலைப் பால் போல் நிமலனும் அங்கு உளன் அத் தரு சோதி அது விரும்பாரே. |
14 | நியமத்தன் ஆகிய நின் மலன் வைத்த உலகம் எத்தனை என்று ஒருவரும் தேறார் பவமத்திலே வந்து பாய்கின்றது அல்லால் சிவம் அத்தை ஒன்றும் தெளிய கில்லாரே. |
15 | இங்கு இத்தை வாழ்வும் எனைத்தோர் அகிதமும் துஞ்சு ஒத்த காலத்துத் தூய் மணி வண்ணனை விஞ்சத்து உறையும் விகிர்தா என நின்னை நஞ்சு அற்றவர்க்கு அன்றி நாட ஒண்ணாதே. |
16 | பஞ்சமும் ஆம் புவி சற்குரு பால் முன்னி வஞ்சகர் ஆனவர் வைகில் அவர் தம்மை அஞ்சுவன் நாதன் அரு நரகத்து இடும் செஞ்ச நிற்போரைத் தெரிசிக்கச் சித்தியே. |
17 | சிவனை வழி பட்டார் எண் இலாத் தேவர் அவனை வழி பட்டு அங்கு ஆம் ஆறு ஒன்று இல்லை அவனை வழி பட்டு அங்கு ஆம் ஆறு காட்டும் குருவை வழி படில் கூடலும் ஆமே. |
18 | நரரும் சுரரும் பசு பாசம் நண்ணிக் கருங் களாலே கழிதலில் கண்டு குரு என்பவன் ஞானி கோது இலன் ஆனால் பரம் என்றல் அன்றிப் பகர் ஒன்றும் இன்றே. |
19 | ஆட் கொண்டவர் தனிநாயகன் அன்பு உற மேற் கொண்டவர் வினை போய் அற நாள் தொறும் நீர்க்கின்ற செம் சடை நீளன் உருவத்தின் மேல் கொண்ட வாறு அலை வீவித்து உளானே. |
எட்டாம் தந்திரம் 1. உடலில் பஞ்சபேதம் |
1 | காயப் பை ஒன்று சரக்குப் பல உள மாயப் பை ஒன்று உண்டு மற்றும் ஓர் பை உண்டு காயப் பைக்கு உள் நின்ற கள்வன் புறப்பட்டால் மாயப் பை மண்ணா மயங்கிய வாறே. |
2 | அத்தன் அமைத்த உடல் இரு கூறினில் சுத்தம் அது ஆகிய சூக்குமம் சொல்லுங்கால் சத்த பரிச ரூப ரச கந்தம் புத்திமான் ஆங்காரம் புரி அட்ட காயமே. |
3 | எட்டினில் ஐந்து ஆகும் இந்திரியங் களும் கட்டிய மூன்று கரணமும் ஆயிடும் ஒட்டிய பாசம் உணர்வு அது ஆகவே கட்டி அவிழ்த்திடும் கண் நுதல் காணுமே. |
4 | இரதம் உதிரம் இறைச்சி தோல் மேதை மருவிய அத்தி வழும்பொடு மச்சை பரவிய சுக்கிலம் பாழ் ஆம் உபாதி உருவம் அலால் உடல் ஒன்று எனலாமே. |
5 | ஆரே அறிவார் அடியின் பெருமையை யாரே அறிவார் அங்கு அவர் நின்றது யாரே அறிவார் அறுபத்து எட்டு ஆக்கையை யாரே அறிவார் அடிக் காவல் ஆனதே. |
6 | எண் சாண் அளவால் எடுத்த உடம்புக்கு உள் கண் கால் உடலில் கரக்கின்ற கைகளில் புண் கால் அறுபத்து எட்டு ஆக்கை புணர்க்கின்ற நண் பால் உடம்பு தன்னால் உடம்பு ஆமே. |
7 | உடம்புக்கும் நாலுக்கும் உயிர் ஆய சீவன் ஒடுங்கும் பரனோடு ஒழியாப் பிரமம் கடம்தொறு நின்ற கணக்கு அது காட்டி அடங்கியே அற்றது ஆர் அறிவாரே. |
8 | ஆறு அந்தம் ஆகி நடுவுடன் கூடினால் தேறிய மூ ஆறும் சிக் என்று இருந்திடும் கூறும் கலைகள் பதினெட்டும் கூடியே ஊறும் உடம்பை உயிர் உடம்பு எண்ணுமே. |
9 | மெய்யினில் தூலம் மிகுத்த முகத்தையும் பொய்யினில் சூக்கம் பொருந்தும் உடலையும் கையினில் துல்லி அம் காட்டும் உடலையும் ஐயன் அடிக்குள் அடங்கும் உடம்பே. |
10 | காயும் கடும் பரி கால் வைத்து வாங்கல் போல் சேய இடம் அண்மை செல்லவும் வல்லது காயத் துகிர் போர்வை ஒன்று விட்டு ஆங்கு ஒன்று இட்டு ஏயும் அவர் என்ன ஏய்ந்திடும் காயமே. |
11 | நாகம் உடல் உரி போலும் நல் அண்டசம் ஆக நனாவில் கனா மறந்து அல்லது போகலும் ஆகும் அரன் அருளாலே சென்று ஏகும் இடம் சென்று இருபயன் உண்ணுமே. |
12 | உண்டு நரக சுவர்க்கத்தில் உள்ளன கண்டு விடும் சூக்கம் காரண மாச் செலப் பண்டு தொடரப் பரகாய யோகி போல் பிண்டம் எடுக்கும் பிறப்பு இறப்பு எய்தியே. |
13 | தான் அவன் ஆகிய தற்பரம் தாங்கினோன் ஆன அவை மாற்றிப் பரமத்து அடைந்திடும் ஏனை உயிர் வினைக்கு எய்தும் இடம் சென்றும் வானும் நிலனும் புகுந்தும் வருந்துமே. |
14 | ஞானிக்குக் காயம் சிவமே தனுவாம் அஞ் ஞானிக்குக் காயம் உடம்பே அது ஆகும் மேல் நிற்கும் யோகிக்கு விந்துவும் நாதமும் மோனிக்குக் காயம் முப் பாழ் கெட்ட முத்தியே. |
15 | விஞ்ஞானத் தோர்க்கு ஆணவமே மிகுதனு எஞ்ஞானத் தோர்க்குத் தனு மாயை தான் என்ப அஞ்ஞானத் தோர்க்குக் கன்மம் தனு ஆகும் மெய் ஞானத் தோர்க்குச் சிவ தனு மேவுமே. |
16 | மலம் என்று உடம்பை மதியாத ஊமர் தலம் என்று வேறு தரித்தமை கண்டீர் நலம் என்று இதனையே நாடி இருக்கில் பலம் உள்ள காயத்தில் பற்றும் இவ் அண்டத்தே. |
17 | நல்ல வசனத்து வாக்கும் அனாதிகள் மெல்ல விளையாடும் விமலன் அகத்திலே அல்ல செவி சத்தம் ஆதி மனத்தையும் மெல்லத் தரித்தார் முகத்தார் பசித்தே. |
2. உடல் விடல் |
1 | பண் ஆகும் காமம் பயிலும் வசனமும் விண் ஆம் பிராணன் விளங்கிய சத்தமும் புண் ஆம் உடலில் பொருந்து மனத்தையும் அண்ணாந்து பார்க்க அழியும் உடம்பே. |
2 | அழிகின்ற ஓர் உடம்பு ஆகும் செவி கண் கழிகின்ற கால் அவ் விரதங்கள் தானம் மொழிகின்ற வாக்கு முடிகின்ற நாடி ஒழிகின்ற ஊனுக்கு உறு துணை இல்லையே. |
3 | இலை ஆம் இடையில் எழுகின்ற காம முலை வாய நெஞ்சத்து மூழ்கும் உளத்துத் தலை ஆய மின் உடல் தாங்கித் திரியும் சிலை ஆய சித்தம் சிவ முன் இடைக்கே. |
3. அவத்தை பேதம் |
1 | ஐ ஐந்து மத்திமை ஆனது சாக்கிரம் கை கண்ட பல் நான்கில் கண்டு அங் கனா என்பர் பொய் கண்டு இலாத புருடன் இதயம் சுழுனை மெய் கண்டவன் உந்தி ஆகும் துரியமே. |
2 | முப்பதோடு ஆறின் முதல் நனா ஐந்து ஆகச் செப் பதின் நான்காய்த் திகழ்ந்து இரண்டு ஒன்று ஆகி அப் பதி ஆகும் நியதி முதலாகச் செப்பும் சிவம் ஈறு ஆய்த் தேர்ந்து கொள்ளீரே. |
3 | இந்தியம் ஈர் ஐந்து ஈர் ஐந்து மாத்திரை மந்திரம் ஆய் நின்ற மாருதம் ஈர் ஐந்தும் அந்தக் கரணம் ஒரு நான்கும் ஆன்மாவும் பந்த அச் சக்கரப் பால் அது ஆகுமே. |
4 | பார் அது பொன்மை பசுமை உடையது நீர் அது வெண்மை செம்மை நெருப்பு அது கார் அது மாருதம் கருப்பை உடையது வானகம் தூமம் மறைந்து நின்றாரே. |
5 | பூதங்கள் ஐந்தும் பொறி அவை ஐந்து உளும் ஏதம் படம் செய்து இருந்த புறநிலை ஓது மலம் குணம் ஆகும் ஆதாரமோடு ஆதி அவத்தைக் கருவி தொண்ணூற்று ஆறே. |
6 | இட வகை சொல்லில் இருபத்து அஞ்சு ஆனை படு பர சேனையும் பாய் பரி ஐந்தும் உடையவன் மத்திமை உள் உறு நால்வர் அடைய நெடும் கடை ஐந்தொடு நான்கே. |
7 | உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி உடம்பு இடை நின்ற உயிரை அறியார் உடம்பொடு உயிர் இடை நட்பு அறியாதார் மடம் புகு நாய் போல் மயங்கு கின்றாரே. |
8 | இருக்கின்ற வாறு ஒன்று அறிகிலர் ஏழைகள் முருக்கும் அசபையை மாற்றி முகந்து கருக்கொண்டு காமாரி சார முகம் தேர்ந்து உருக் கொண்டு தொக்க உடல் ஒழியாதே. |
9 | ஒளித்திட்டு இருக்கும் ஒருபதினாலை அளித்தனன் என் உள்ளே ஆறியன் வந்து அளிக்கும் கலைகளின் அறுபத்து ஒளித்திட்டு வைத்தான் ஒடுங்கிய சித்தே. |
10 | மண்ணினில் ஒன்று மலர் நீரும் அங்காகும் பொன்னினில் அங்கி புகழ் வளி ஆகாயம் மன்னு மனோ புத்தி ஆங்காரம் ஓர் ஒன்றாய் உன்னின் முடிந்த ஒரு பூத சயமே. |
11 | முன்னிக்கு ஒருமகன் மூர்த்திக்கு இருவர் வன்னிக்கு மூவர் வதுவைக்கு நால்வர் கன்னிக்குப் பிள்ளைகள் ஐவர் முனாள் இல்லை கன்னியைக் கன்னியே காதலித்தாளே. |
12 | கண்ட கனவு ஐந்தும் கலந்தன தான் ஐந்தும் சென்று உண்டன நான்கும் ஒருங்கே உணர்ந்தபின் பண்டை அது ஆகிப் பரந்த வியாக்கிரத்து அண்டமும் தான் ஆய் அமர்ந்து நின்றானே. |
13 | நின்றவன் நிற்கப் பதினாலில் பத்து நீத்து ஒன்றிய அந்தக் கரணங்கள் நான்குடன் மன்று கலந்த மனை வாழ்க்கை வாதனை கன்றிய கண்டத்தில் கண்டான் கனவு அதே. |
14 | தானம் இழந்து தனி புக்கு இதயத்து மானம் அழிந்து மதி கெட்டு மால் ஆகி ஆன விரிவு அறியா அவ் வியத்தத்தின் மேனி அழிந்து சுழுத்தியது ஆமே. |
15 | சுழுனையைச் சேர்ந்து உள மூன்று உடன் காட்சி கெழுமிய சித்தம் பிராணன் தன் காட்சி ஒழுகக் கமலத்தின் உள்ளே இருந்து விழுமப் பொருளுடன் மேவி நின்றானே. |
16 | தானத்து எழுந்து தருக்கும் துரியத்தின் வானத்து எழுந்து போய் வையம் பிறகிட்டுக் கானத்து எழுந்த கருத்தின் தலையிலே ஊனத்து அவித்தை விட்டு ஊமனின் நின்றானே. |
17 | ஊமை எழுத்தொடு பேசும் எழுத்து உறில் ஆமை அகத்தினில் அஞ்சும் அடங்கிடும் ஓமயம் உற்றது உள் ஒளி பெற்றது நாமயம் அற்றது நாம் அறியோமே. |
18 | துரியம் இருப்பதும் சாக்கிரத்து உள்ளே நரிகள் பதினாலும் நஞ்சு உண்டு செத்தன பரிய புரவியும் பாறிப் பறந்தது துரியம் இறந்த இடம் சொல்ல ஒண்ணாதே. |
19 | மாறா மலம் ஐந்தான் மன்னும் அவத்தையின் வேறு ஆய மாயா அநு கரண ஆதிக்கு இங்கு ஈறு ஆகாதே எவ் உயிரும் பிறந்து இறுந்து ஆறாத வல் வினையால் அடி உண்ணுமே. |
20 | உண்ணும் தன் ஊடு ஆடாது ஊட்டிடும் மாயையும் அண்ணல் அருள் பெற்ற முத்தி அது ஆவது நண்ணல் இலா உயிர் ஞானத்தினால் பிறந்து எண்ணூறு ஞானத்தின் நேர் முத்தி எய்துமே. |
21 | அதி மூட நித்திரை ஆணவம் நந்த அதனால் உணர்வோன் அரும் கன்மம் உன்னித் திதம் ஆன கேவலம் இத் திறம் சென்று பரம் ஆகா வைய அவத்தைப் படுவானே. |
22 | ஆசான் முன்னே துயில் மாணவர்தமைத் தேசாய தண்டால் எழுப்பும் செயல் போல் நேசாய ஈசனு நீடு ஆணவத் தரை ஏசாத மாயாள் தன்னாலே எழுப்புமே. |
23 | மஞ்சொடு மந்தாகினி குடம் ஆம் என விஞ்சு அறி வில்லோன் விளம்பு மிகுமதி எஞ்சலில் ஒன்று எனும் ஆறு என இவ் உடல் அஞ்சு உணு மன்னன் அன்றே போம் அளவே. |
24 | படி உடை மன்னவன் பாய் பரி ஏறி வடி உடை மாநகர் தான் வரும் போது அடி உடை ஐவரும் அங்கு உறை வோரும் துடி இல்லம் பற்றித் துயின்றனர் தாமே. |
25 | நேரா மலத்தை நீடு அடைந்து அவத்தையின் நேரான வாறு உன்னி நீடு நனவினில் நேரா மலம் ஐந்தும் நேரே தரிசித்து நேர் ஆம் பரத்துடன் நிற்பது நித்தமே. |
மத்திய சாக்கிராவத்தை |
1 | சாக்கிர சாக்கிரம் தன்னில் திரோ தாயி சாக்கிர சொப்பனம் தன் இடை மா மாயை சாக்கிரம் தன்னில் சுழுத்தி தற் காமியம் சாக்கிரம் தன்னில் துரியத்து மாயையே. |
2 | மாயை எழுப்பும் கலாதியை மற்று அதின் நேய விராகு ஆதி ஏய்ந்த துரியத்துத் தோயும் சுழுனை கனா நனாவும் துன்னி ஆயினன் அந்தச் சகலத்து உளானே. |
3 | மேவிய அந்தகன் விழி கண் குருடன் ஆம் ஆவயின் முன் அடிக் காணும் அது கண்டு மேவும் தடி கொண்டு சொல்லும் விழிபெற மூவயினான் மா முயலும் கருமமே. |
4 | மத்திமம் ஒத்த சிலந்தி வலயத்துள் ஒத்து அங்கு இருந்து உயிர் உண்ணும் ஆறுபோல் அத்தனும் ஐம் பொறி ஆடகத்து உள் நின்று சத்தம் முதல் ஐந்தும் தான் உண்ணும் ஆறே. |
5 | வைச்சன வச்சு வகை இருபத்து அஞ்சு முச்சும் ஊடன் அணைவான் ஒருவன் உளன் பிச்சன் பெரியன் பிறப்பு இலி என்று என்று நச்சி அவன் அருள் நான் உய்ந்த வாறே. |
6 | நாலு ஆறு உடன் புருடன் அற்று தத்துவமுடன் வேறு ஆன ஐ ஐந்து மெய்ப்புருடன் பரம் கூறா வியோமம் பரம் எனக் கொண்டனன் வேறு ஆன நாலு ஏழு வேத அந்த தத்துவமே. |
7 | ஏலம் கொண்டு ஆங்கே இடையொடு பிங்கலை கோலம் கொண்டு ஆங்கே குணத்தின் உடன்புக்கு மூலம் கொண்டு ஆங்கே முறுக்கி முக்கோணிலும் காலம் கொண்டான் அடி காணலும் ஆமே. |
8 | நாடிகள் பத்தும் நலம் திகழ் வாயுவும் ஓடிய காலில் ஒடுங்கி இருந்திடும் கூடிய காமம் குளிக்கும் இரதமும் நாடிய நல்ல மனமும் உடலிலே. |
9 | பத்தொடு பத்தும் ஓர் மூன்றும் பகுதியும் உய்த்த துரியமும் உள் உணர் காலமும் மெய்த்த வியோமமும் மேலைத் துரியமும் தத்துவ நால் ஏழு என உன்னத் தக்கதே. |
10 | விளங்கிடும் முந்நூற்று முப்பதோடு ஒருபான் தளம் கொள் இரட்டிய ஆறு நடந்தால் வணங்கிடும் ஐம் மலம் வாயு எழுந்து விளங்கிடும் அவ்வழி தத்துவம் நின்றே. |
11 | நாலு ஒரு கோடியே நாற்பத்து எண் ஆயிரம் மேலும் ஓர் ஐந்து நூறு வேறாய் அடங்கிடும் பால் அவை தொண்ணூறோடு ஆறு உட் படும் அவை கோலிய ஐ ஐந்துள் ஆகும் குறிக்கிலே. |
12 | ஆகின்ற தொண்ணூறோடு ஆறும் பொது என்பர் ஆகின்ற ஆறா அரும் சைவர் தத்துவம் ஆகின்ற நால் ஏழ் வேதாந்தி வயின் அவர்க்கு ஆகின்ற நாலு ஆறு ஐந்தும் மாய வாதிக்கே. |
13 | தத்துவம் ஆனது தன் வழி நின்றிடில் வித்தகன் ஆகி விளங்கி இருக்கலாம் பொய்த்தவம் ஆம் அவை போயிடும் அவ்வழி தத்துவம் ஆவது அகார எழுத்தே. |
14 | அறிவு ஒன்று இலாதன ஐ ஏழும் ஒன்றும் அறிகின்ற என்னை அறியாது இருந்தேன் அறிகின்றாய் நீ என்று அருள் செய்தார் நந்தி அறிகின்ற நான் என்று அறிந்து கொண்டேனே. |
15 | சாக்கிர சாக்கிரம் ஆதி தனில் ஐந்தும் ஆக்கும் மல அவத்தை ஐந்து நனவு ஆதி போக்கி இவற்றொடும் பொய்யான ஆறு ஆறு நீக்கி நெறி நின்றான் ஆகியே நிற்குமே. |
16 | ஆணவம் ஆதி மலம் ஐந்து அலரோனுக்கு ஆணவம் ஆதி நான்கு ஆம் ஆற் அரனுக்கு ஆணவம் ஆதி மூன்று ஈசர்க்கு இரண்டு என்ப ஆணவம் ஒன்றே சதா சிவற்கு ஆவதே. |
அத்துவாக்கள் |
1 | தத்துவம் ஆறு ஆறு தன் மனு ஏழ்கோடி மெய்த்தகு அன்னம் ஐம் பான் ஒன்று மேதினி ஒத்து இரு நூற்று இருபான் நான்கு என்பான் ஒன்று வைத்த பதம் கலை ஓர் ஐந்தும் வந்தவே. |
2 | நாடிய மண்டலம் மூன்று நலம் தெரிந்து ஓடும் அவரோடு உள் இருபத்து அஞ்சும் கூடுவர் கூடிக் குறிவழியே சென்று தேடிய பின்னர்த் திகைத்து இருந்தார்களே. |
3 | சாக்கிர சாக்கிரம் ஆதித் தலை ஆக்கி ஆக்கிய தூலம் அளவு ஆக்கி அதீதத்துத் தாக்கிய அன்பான தாண்டவம் சார்ந்தது தேக்கும் சிவம் ஆதல் ஐந்தும் சிவாயமே. |
சுத்த நனவாதி பருவம் |
1 | நனவு ஆதி தூலமே சூக்கப் பகுதி அனது ஆன ஐ ஐந்தும் விந்துவின் சத்தி தனது ஆம் விந்து தான் நின்று போந்து கனவா நனவில் கலந்தது இவ் ஆறே. |
2 | நனவில் அதீதம் பிறந்தார் கிடந்தார் நனவில் துரியம் நிகழ்ந்தார் தவழ்ந்தார் நனவில் சுழுத்தி நடந்தார் வளர்ந்தார் நனவில் கனவோடு நல் செய்தி ஆனதே. |
3 | செறியும் கிரியை சிவ தத்துவம் ஆம் பிறிவில் சுக யோகம் பேர் அருள் கல்வி குறிதல் திருமேனி குணம் பல ஆகும் அறிவில் சரா சரம் அண்டத்து அளவே. |
4 | ஆதி பரம் சிவம் சத்தி சதாசிவம் ஏதம் இல் ஈசன் நல் வித்தியா தத்துவம் போதம் கலை கால நியதி மா மாயை நீதி ஈறு ஆக நிறுத்தினன் என்னே. |
5 | தேசு திகழ் சிவம் சத்தி சதா சிவம் ஈசன் நல் வித்தை இராகம் கலைகாலம் ஆசு அகல் வித்தை நியதி மகா மாயை ஆசு இல் புருட ஆதி ஆன்மா ஈறு ஆறே. |
6 | ஆணவ மாயையும் கன்மமும் மா மலம் காணு முளைக்கும் தவிடு உமிஆன்மாவும் தாணுவை ஒவ்வாமல் தண் துலம் ஆய் நிற்கும் பேணுவாய் மற்று நின் பாசம் பிரித்தே. |
7 | பசுக்கள் பல வண்ணம் பால் ஒரு வண்ணம் பசுக்களை மேய்க்கின்ற ஆயன் ஒரு வண்ணம் பசுக்களை மேய்க்கின்ற ஆயன் கோல் போடில் பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே. |
8 | உடல் இந்திய மனம் ஒண்புத்தி சித்தம் அடல் ஒன்று அகந்தை அறியாமை மன்னிக் கெடும் அவ் உயிர் மயல் மேலும் கிளைத்தால் அடைவது தான் ஏழ் நரகத்து உளாயே. |
9 | தன் தெரியாத அதீதம் தன் காண அம் சொல் தெரிகின்ற துரியம் சொல் காமியம் பெற்ற சுழுத்திப் பின் பேசு உறும் காதலால் மற்று அது உண்டிக் கன நனவு ஆதலே. |
10 | நனவில் கனவு இல்லை ஐந்து நனவில் கனவு இலாச் சூக்குமம் காணும் சுழுத்தி தனல் உண் பகுதியே தன் கூட்டு மாயை நனவில் துரியது அதீதம் தலை வந்தே. |
11 | ஆறு ஆறில் ஐ ஐந்து அகல நனா நனா ஆறாம் அவை விட ஆகும் நனாக் கனா வேறு ஆன ஐந்தும் விடவே நனா வினில் ஈறு ஆம் சுழுத்தி இதில் மாயை தானே. |
12 | மாயையில் வந்த புருடன் துரியத்தில் ஆய முறை விட்டதுவும் தான் அன்றாகிச் சேய கேவல விந்துடன் செல்லச் சென்றக் கால் ஆய தனுவின் பயன் இல்லை ஆமே. |
13 | அதீதத்து துரியத்து அறிவன் ஆம் ஆன்மா அதீதத் துரிய அதனால் புரிந்தால் அதீதத்து எழுந்து அறிவு ஆகிய மானன் முதிய அனலில் துரியத்து முற்றுமே. |
14 | ஐ ஐந்து பத்துடன் ஆனது சாக்கிரம் கை கண்ட ஐ ஐந்தில் கண்டம் கனா என்பர் பொய் கண்ட மூவர் புருடர் சுழுனையின் மெய் கண்டவன் உந்தி மேவல் இருவரே. |
15 | புரி அட்டகமே பொருந்தல் நனவு புரி அட்டகம் தன்னின் மூன்று கனவு புரி அட்டகத்தில் இரண்டு சுழுத்தி புரி அட்டகத்து ஒன்று புக்கல் துரியமே. |
16 | நனவின் நனவு புலன் இல் வழக்கம் நனவில் கனவு நினைத்தல் மறத்தல் நனவில் சுழுத்தி உண் ஆடல் இலாமை நனவில் துரியம் அதீதத்து நந்தியே. |
17 | கனவின் நனவு போல் காண்டல் நனவு ஆம் கனவினில் கண்டு மறத்தல் கனவு ஆம் கனவில் சுழுத்தியும் காணாமை காணல் அணு ஆதி செய்தலில் ஆன துரியமே. |
18 | சுழுத்தி நனவு ஒன்றும் தோன்றாமை தோன்றல் சுழுத்தி கனவு அதன் உண்மை சுழுத்தியில் சுழுத்தி அறிவு அறிவாலே அழிகை சுழுத்தி துரியம் ஆம் சொல் அறும் பாழே. |
19 | துரிய நனவு ஆம் இதம் உணர் போதம் துரியக் கனவு ஆம் அகம் உணர் போதம் துரியச் சுழுத்தி வியோமம் துரியம் துரியம் பரம் எனத் தோன்றிடும் தானே. |
20 | அறிவு அறிகின்ற அறிவு நனவு ஆம் அறிவு அறியாமை அடையக் கனவு ஆம் அறிவு அறி அவ் அறியாமை சுழுத்தி அறிவு அறிவு ஆகும் ஆனதுரியமே. |
21 | தான் எங்கும் ஆய அவனை அம் மலம் தான் விட்டு ஞானம் தனது உரு ஆகி நயந்தபின் தான் எங்கும் ஆய் நெறி நின்றது தான் விட்டு மேன் அந்தச் சூக்கம் அவை வன்னம் மேல் இட்டே. |
22 | ஐ ஐந்தும் ஆறும் ஓர் ஐந்தும் நனாவினில் எய்யும் நனவு கனவு சுழுத்தியா மெய்யும் பின் சூக்கமும் மெய்ப் பகுதி மாயை ஐயமும் தான் அவன் அத் துரியத்தனே. |
23 | ஈது என்று அறிந்திலன் இத்தனை காலமும் ஈது என்று அறிந்த பின் ஏதும் அறிந்திலேன் ஈது என்று அறியும் அறிவை அறிந்தபின் ஈது என்று அறியும் இயல்பு உடையோனே. |
24 | உயிர்க்கு உயிராகி உருவாய் அருவாய் அயல் புணர்வு ஆகி அறிவாய்ச் செறிவாய் நயப்பு உறு சத்தியும் நாதன் உலகு ஆதி இயற்பு இன்றி எல்லாம் இருள் மூடம் ஆமே. |
25 | சத்தி இராகத்தில் தான் நல் உயிர் ஆகி ஒத்து உறு பாச மலம் ஐந்தோடு ஆறு ஆறு தத்துவ பேதம் சமைத்துக் கருவியும் வைத்தனன் ஈசன் மலம் அறும் ஆறே. |
26 | சாக்கிரா தீதத்தில் ஆணவம் தன் உண்மை சாக்கிரா தீதம் துரியத்தில் தான் உறச் சாக்கிரா தீதத்தில் ஆணவம் தான் விடாச் சாக்கிரா தீதம் பரன் உண்மை தங்குமே. |
27 | மலக் கலப்பாலே மறைந்தது சத்தி மலக் கலப்பாலே மறைந்தது ஞானம் மலக் கலப்பாலே மறைந்தனன் தாணு மலக் கலப்பு அற்றான் மதி ஒளி ஆமே. |
28 | திகைக் கின்ற சிந்தையுள் சிங்கங்கள் மூன்று நகைக் கின்ற நெஞ்சுள் நரிக் குட்டி நான்கு வகைக் கின்ற நெஞ்சின் உள் ஆனைக் கன்று ஐந்து பகைக் கின்ற நெஞ்சுக்குப் பால் இரண்டு ஆமே. |
29 | கதறு பதி னெட்டுக் கண்களும் போகச் சிதறி எழுந்திடும் சிந்தையை நீரும் விதறு படா முன்னம் மெய் வழி நின்றால் அதிர வருவது ஓர் ஆனையும் ஆமே. |
30 | நனவு அகத்தே ஒரு நால் ஐந்தும் வீடக் கனவு அகத்தே உள் கரணங்களோடு முனவு அகத்தே நின்று உதறி உள் புக்கு நினைவு அகத்து இன்றி சுழுத்தி நின்றானே. |
31 | நின்றவன் ஆசான் நிகழ் துரியத்தனாய் ஒன்றி உலகின் நியம் ஆதிகள் உற்றுச் சென்று துரிய ஆதீதத்தே சில காலம் நின்று பரன் ஆய் நின்மலன் ஆமே. |
32 | ஆன அவ் ஈசன் அதீதத்தில் வித்தையாத் தான் உலகு உண்டு சதாசிவ மா சத்தி மேனிகள் ஐந்தும் போய் விட்டுச் சிவம் ஆகி மோனம் அடைந்து ஒளி மூலத்தன் ஆமே. |
33 | மண்டலம் மூன்றின் உள் மாய நல் நாடனைக் கண்டு கொண்டு உள்ளே கருதிக் கழிகின்ற விண்டு அலர் தாமரை மேல் ஒன்றும் கீழ் ஆகத் தண்டமும் தான் ஆக அகத்தின் உள் ஆமே. |
34 | போது அறியாது புலம்பின புள் இனம் மாது அறியா வகை நின்று மயங்கின வேதறி ஆவணம் நின்றான் எம் இறை சூது அறிவார் உச்சி சூடி நின்றாரே. |
35 | கருத்து அறிந்து ஒன்பது கண்டமும் ஆங்கே பொருத்து அறிந்தோன் புவனாபதி நாடித் திருத்து அறிந்தேன் மிகு தேவர் பிரானை வருத்து அறிந்தேன் மனம் மன்னி நின்றானே. |
36 | ஆன விளக்கு ஒளி தூண்டும் அவன் என்னத் தான விளக்கு ஒளியாம் மூல சாதனத்து ஆன விதி மூலத் தானத்தில் அவ் விளக்கு ஏனை மதி மண்டலம் கொண்டு எரியுமே. |
37 | உள் நாடும் ஐவர்க்கும் அண்டை ஒதுங்கிய விண் நாட நின்ற வெளியை வினவுறில் அண்ணாந்து பார்த்து ஐவர் கூடிய சந்தியில் கண்ணாடி காணும் கருத்து என்றானே. |
38 | அறியாத வற்றை அறிவான் அறிவான் அறிவான் அறியாதான் தன் அறிவு ஆகான் அறியா தவத்தை அறிவானைக் கூட்டி அறியாது அறிவானை யார் அறிவாரே. |
39 | துரிய தரிசனம் சொற்றோம் வியோமம் அரியன தூடணம் அந் நனவு ஆதி பெரியன கால பரம்பில் துரியம் அரிய அதீதம் அதீதத்தம் ஆமே. |
40 | மாயையில் சேதனன் மன்னும் பகுதியோன் மாயையின் மற்று அது நீவு தன் மாயை ஆம் கேவலம் ஆகும் சகலமா யோனியுள் தோயும் மனிதர் துரியத்துள் சீவனே. |
கேவல சகல சுத்தம் |
1 | தன்னை அறி சுத்தன் தற்கே ஏவலன் தானும் பின்னம் உற நின்ற பேத சகலனும் மன்னிய சத்து அசத்து சத சத்துடன் துன்னுவர் தத்தம் தொழிற்கு அளவு ஆகவே. |
2 | தானே தனக்குப் பகைவனும் நட்டானும் தானே தனக்கு மறுமையும் இம்மையும் தானே தான் செய்த வினைப் பயன் துய்ப்பானும் தானே தனக்குத் தலைவனும் ஆமே. |
3 | பாசம் அது ஆகும் பழமலம் பற்று அற நேசம் அதாய் நின்ற ஆறாது நீங்கிடக் காசம் இலாத குணம் கேவல சுத்தம் ஆசு அற நிற்றல் அது சுத்த சைவமே. |
4 | ஆம் உயிர் கேவலம் மா மாயை இன் நடந்து ஆம் உயிர் மாயை எறிப்ப அறிவு உற்றுக் காமியம் மாயேயமும் கலவா நிற்பத் தாம் உறு பாசம் சகல அத்தம் ஆமே. |
5 | சகல அவத்தையில் சார்ந்தோர் சகலர் புகலும் மலம் மூ வகையும் புணர்ந்தோர் நிகர் இல் மலரோன் மால் நீடு பல் தேவர்கள் நிகழ் நரர் கீடம் அந்தமும் ஆமே. |
6 | தாவிய மாயையில் தங்கும் பிரளய மேவிய மற்று அது உடம்பாய் மிக்கு உள்ளன ஓவல் இலக்கணர் ஒன்றிய சீகண்டர் ஆவயின் நூற்று எட்டு உருத்திரர் ஆமே. |
7 | ஆகின்ற கேவலத்து ஆணவத் தானவர் ஆகின்ற இத் தேசர் ஆம் அனந்த ஆதியர் ஆகின்ற எண்மர் எழு கோடி மந்திரர் ஆகின்ற ஈசர் அநேகரும் ஆமே. |
8 | ஆம் அவரில் சிவனார் அருள் பெற்று உளோர் போம் மலம் தன்னால் புகழ் விந்து நாதம் விட்டு ஓம் மயம் ஆகி ஒடுங்கனலின் மலம் தோம் அறு சுத்தா அவத்தைத் தொழிலே. |
9 | ஓரினும் மூவகை நால் வகையும் உள தேரில் இவை கேவல மாயை சேர் இச்சை சாரியல் ஆயவை தாமே தணப் பவை வாரி வைத்து ஈசன் மலம் அறுத்தானே. |
10 | பொய் ஆன போதாந்தம் ஆறு ஆறும் விட்டு அகன்று எய்யாமை நீங்கவே எய்தவன் தான் ஆகி மெய் ஆம் சரா சரம் ஆய் வெளி தன் உள்புக்கு எய்தாமல் எய்தும் சுத்தாவத்தை என்பதே. |
11 | அனாதி பசு வியாத்தி ஆகும் இவனை அனாதியில் வந்த மலம் ஐந்தால் ஆட்டி அனாதியில் கேவலம் அச்ச கலத்து இட்டு அனாதி பிறப்பு அறச் சுத்தத்து உளாகுமே. |
12 | அந்தரம் சுத்தா வத்தை கேவலத்து ஆறு தந்தோர் தம் சுத்த கேவலத்து அற்ற தற்பரத்து இன் பால் துரியத்து இடையே அறிவுறத் தன் பால் தனை அறி தத்துவம் தானே. |
13 | ஐ ஐந்து ஒடுங்கும் ஆன்மாவில் ஆன்மாவும் மெய் கண்டு சுத்த அவத்தையில் வீடாகும் துய்ய அவ் வித்தை முதல் மூன்றும் தொல் சத்தி ஐய சிவம் சித்தி ஆம் தோற்றம் அவ்வாறே. |
14 | ஐ ஐந்தும் ஆன்மாவில் ஆறோடு அடங்கிடும் மெய் கண்ட மேல் மூன்று மேவும் மெய் யோகத்தில் கை கண்ட சத்தி சிவ பாகத்தே காண எய்யும் படி அடங்கும் நால் ஏழ் எய்தியே. |
15 | ஆணவத்தார் ஒன்று அறியாத கேவலர் பேணிய மாயைப் பிரளயாகலர் ஆகும் காணும் உருவினர் காணாமை காண்பவே பூணும் சகலர் முப் பாசமும் புக்கோரே. |
16 | ஆணவம் ஆகும் விஞ்ஞான கலருக்குப் பேணிய மாயை பிரளயா கலருக்கே ஆணவ மாயையும் கன்மம் மூன்றுமே காணும் சகலர்க்குக் காட்டு மலங்களே. |
17 | கேவலம் தன்னில் கிளர்ந்த விஞ்ஞாகலர் கேவலம் தன்னில் கிளர் விந்து சத்தியால் ஆவயில் கேவலத்து அச் சகலத்தையும் மேவிய மந்திர மா மாயை மெய்ம்மையே. |
18 | மாயையின் மன்னும் பிரளயாகலர் வந்து மாயையும் தோன்றா வகை நிற்க ஆணவ மாய சகலத்துக் காமிய மாமாயை ஏய மன் நூற்று எட்டு உருத்திரர் என்பவே. |
19 | மும் மலம் கூடி முயங்கி மயங்குவோர் அம் மெய்ச் சகலத்தர் தேவர் சுரர் நரர் மெய்ம்மை இல் வேதா விரிமிகு கீடாந்தத்து அம் முறை யோனி புக்கார்க்கும் சகலரே. |
20 | சுத்த அவத்தையில் தோய்ந்தவர் மும் மலச் சத்து அசத்தோடு அத்தனித் தனி பாசமும் மத்த இருள் சிவன் ஆன கதிராலே தொத்து அற விட்டிடச் சுத்தர் ஆவார்களே. |
21 | தற்கே வலம் முத்தி தானே தனிமை ஆம் பிற்பால் சகலம் கலாதிப் பிறிவது ஆம் சொற்பால் புரிசுத்த கேவலம் சாக்கிரம் தற்பால் புரிவது தற் சுத்தம் ஆமே. |
22 | அறிவு இன்றி முத்தன் அரா காதி சேரான் குறி ஒன்று இலா நித்தன் கூடான் கலாதி செறியும் செயல் இலான் இனம் கற்றவல்லோன் கிறியன் மல வியாபிக்கே வலம் தானே. |
23 | விந்துவும் மாயையும் மேவும் கிரியையும் சந்தத ஞான பரையும் தனுச் சத்தி விந்துவின் மெய்ஞ் ஞானம் மேவும் பிரளயர் வந்த சகல சுத்த ஆன்மாக்கள் வையத்தே. |
24 | கேவலம் ஆதியில் பேதம் கிளக்குறில் கேவலம் மூன்றும் கிளரும் சகலத்துள் ஆவயின் மூன்று மதி சுத்த மூடவே ஒவல் இல்லா ஒன்பான் உற்று உணர்வோர் கட்கே. |
25 | கேவலத்தில் கேவலம் அதீதா தீதம் கேவலத்தில் சகலங்கள் வயின் தவம் கேவலத்தில் சுத்தம் கேடு இல் விஞ்ஞாகலவர்க்கு ஆவயின் ஆதன் அருண் மூர்த்தி தானே. |
26 | சகலத்தில் கேவலம் சாக்கிரா தீதம் சகல சகலமே சாக்கிர சாக்கிரம் சகலத்தின் சுத்தமே தற் பரா வத்தை சகலத்தில் இம் மூன்று தன்மையும் ஆமே. |
27 | சுத்தத்தில் சுத்தமே தொல் சிவம் ஆகுதல் சுத்தத்தில்கேவலம் தொல் உப சாந்தம் ஆம் சுத்த சகலம் துரிய விலாசம் ஆம் சுத்தத்தில் இம் மூன்றும் சொல்லலும் ஆமே. |
28 | சாக்கிர சாக்கிரம் தன்னில் கனவொடும் சாக்கிரம் தன்னில் சுழுத்தி துரியமே சாக்கிரா தீதம் தனில் சுக ஆனந்தமே ஆக்கு மறை ஆதி ஐம் மல பாசமே. |
29 | சாக்கிரா தீதத்தில் தான் அறும் ஆணவம் சாக்கிரா தீதம் பராவத்தை தங்காது ஆக்கு பரோ பாதியா உப சாந்தத்தை நோக்கு மலம் குண நோக்குதல் ஆகுமே. |
30 | பெத்தமும் முத்தியும் பேணும் துரியமும் சுத்த அதீதமும் தோன்றாமல் தான் உணும் அத்தன் அருள் என்று அருளால் அறிந்தபின் சித்தமும் இல்லை செயல் இல்லை தானே. |
31 | எய்திய பெத்தமும் முத்தமும் என்பன எய்தும் அரன் அருளே விளையாட்டோடு எய்திடு உயிர் சுத்தத்து இடு நெறி என்னவே எய்தும் உயிர் இறை பால் அறிவாமே. |
32 | ஐம் மலத்தாரும் மதித்த சகலத்தர் ஐம் மலத்தாரும் அருவினைப் பாசத்தார் ஐம் மலத்தார் சுவர்க்க நெறி ஆள்பவர் ஐம் மலத்தார் அரனார்க்கு அறிவோரே. |
33 | கருவில் அதீதம் கலப்பிக்கும் மாயை அரிய துரியம் அதில் உண்ணும் ஆசையும் உரிய சுழுமுனை முதல் எட்டும் சூக்கத்து அரிய கனா, தூலாம் அந் நனவு ஆமே. |
34 | ஆணவம் ஆகும் அதீத மேல் மாயையும் பூணும் துரியம் சுழுத்தி பொய்க் காமியம் பேணும் கனவும் மா மாயை திரோதாயி காணும் நனவில் மலக் கலப்பு ஆகுமே. |
35 | அரன் முதல் ஆக அறிவோன் அதீ தத்தன் அரன் முதல் ஆம் மாயை தங்கிச் சுழுனை கருமம் உணர்ந்து மா மாயைக் கைக் கொண்டோர் அருளும் அறைவர் சகலத்து உற்றாரே. |
36 | உரு உற்றுப் போகமே போக்கி அந்துற்று மரு உற்றுப் பூதம் அனாதியான் மன்னி வரும் அச் செயல் பற்றிச் சத்து ஆதி வைகிக் கரு உற்றிடும் சீவன் காணும் சகலத்தே. |
37 | இருவினை ஒத்திட இன் அருள் சத்தி மருவிட ஞானத்தில் ஆதன மன்னிக் குருவினைக் கொண்டு அருள் சத்திமுன் கூட்டிப் பெருமலம் நீங்கிப் பிறவாமை சுத்தமே. |
38 | ஆறு ஆறும் ஆறதின் ஐ ஐந்து அவத்தையோடு ஈறு ஆம் அதீதத் துரியத்து இவன் எய்தப் பேறு ஆன ஐவரும் போம் பிரகாசத்து நீறு ஆர் பரம் சிவ மாதேயம் ஆகுமே. |
39 | தன்னை அறியாது உடலை முன் தான் என்றான் தன்னை முன் கண்டான் துரியம் தனைக் கண்டான் உன்னும் துரிய மும் ஈசனோடு ஒன்று ஆக்கால் பின்னையும் வந்து பிறந்திடும் தானே. |
40 | சாக்கிரம் தன்னில் அதீதம் தலைப்படில் ஆக்கிய அந்த வயிந் தவம் ஆனந்த நோக்கும் பிறப்பு அறு நோன் முத்தி சித்தி ஆம் வாக்கும் மனமும் மருவல் செய்யாவே. |
41 | அப்பும் அனலும் அகலத்துளே வரும் அப்பும் அனலும் அகலத்துளே வாரா அப்பும் அனலும் அகலத்து உளே ஏது எனில் அப்பும் அனலும் கலந்தது அவ்வாறே. |
42 | அறு நான்கு அசுத்தம் அதி சுத்தா சுத்தம் உறும் ஏழு மாயை உடன் ஐந்தே சுத்தம் பெறு மாறு இவை மூன்றும் கண்டத்தால் பேதித்து உறும் மாயை மா மாயை ஆன்மாவினோடே. |
43 | மாயை கைத் தாய் ஆக மா மாயை ஈன்றிட ஆய பரசிவன் தந்தையாய் நிற்கவே ஏயும் உயிர்க்கேவல சகலத்து எய்தி ஆய்தரு சுத்தமும் தான் வந்து அடையுமே. |
பராவத்தை |
1 | அஞ்சும் கடந்த அனாதி பரம் தெய்வ நெஞ்சம் அது ஆய நிமலன் பிறப்பு இலி விஞ்சும் உடல் உயிர் வேறு படுத்திட வஞ்சத்து இருந்த வகை அறிந்தேனே. |
2 | சத்தி பரா பரம் சாந்தி தனில் ஆன சத்தி பரானந்தம் தன்னில் சுடர் விந்து சத்திய மாயை தனுச் சத்தி ஐந்துடன் சத்தி பெறும் உயிர் தான் அங்கத்து ஆறுமே. |
3 | ஆறு ஆறுக்கு அப்பால் அறிவார் அறிபவர் ஆறு ஆறுக்கு அப்பால் அருளார் பெறுபவர் ஆறு ஆறுக்கு அப்பால் அறிவு ஆம் அவர்கட்கே ஆறு ஆறுக்கு அப்பால் அரன் இனிது ஆமே. |
4 | அஞ்சொடு நான்கும் கடந்து அகமே புக்குப் பஞ்சணி காலத்துப் பள்ளி துயில் நின்ற விஞ்சையர் வேந்தனும் மெல்லியலாளோடு நஞ்சு உற நாதி நயம் செய்யும் ஆறே. |
5 | உரிய நனாத் துரியத்தில் இவன் ஆம் அரிய துரிய நனா ஆதி மூன்றில் பரிய பர துரியத்தில் பரன் ஆம் திரிய வரும் துரியத்தில் சிவமே. |
6 | பரம் ஆம் அதீதமே பற்று அறப் பற்றப் பரம் ஆம் அதீதம் பயிலப் பயிலப் பரம் ஆம் அதீதம் பயிலாத் தபோதனர் பரம் ஆகார் பாசமும் பற்று ஒன்று அறாதே. |
7 | ஆயும் பொய்ம் மாயை அகம்புறம் ஆய் நிற்கும் வாயும் மனமும் கடந்த மயக்கு அறின் தூய அறிவு சிவானந்தம் ஆகிப் போய் வேயும் பொருளாய் விளைந்தது தானே. |
8 | துரியப் பரியில் இருந்த அச்சீவனைப் பெரிய வியாக்கிரத்து உள்ளே புகவிட்டு நரிகளை ஓடத் துரத்திய நாதர்க்கு உரிய வினைகள் நின்று ஓலம் இட்டு அன்றே. |
9 | நின்ற இச் சாக்கிர நீள் துரியத்தினின் மன்றனும் அங்கே மணம் செய்ய நின்றிடும் மன்றன் மணம் செய்ய மாயை மறைந்திடும் அன்றே இவனும் அவன் வடிவு ஆமே. |
10 | விரிந்திடில் சாக்கிரம் மேவும் விளக்காய் இருந்த இடத்து இடை ஈடு ஆன மாயை பொருந்தும் துரியம் புரியில் தான் ஆகும் தெரிந்த துரியத்தே தீது அகலாதே. |
11 | உன்னை அறியாது உடலை முன் நான் என்றாய் உன்னை அறிந்து துரியத்து உற நின்றாய் தன்னை அறிந்தும் பிறவி தணவாது ஆல் அன்ன வியாத்தன் அமலன் என்று அறிதியே. |
12 | கரு வரம்பு ஆகிய காயம் துரியம் இருவரும் கண்டீர் பிறப்பு இறப்பு உற்றார் குருவரம் பெற்றவர் கூடிய பின்னை இருவரும் இன்றி ஒன்று ஆகி நின்றாரே. |
13 | அணுவின் துரியத்தில் ஆன நனவும் அணு அசைவின் கண் ஆன கனவும் அணு அசைவில் பரா தீதம் சுழுத்தி பணியில் பரதுரியம் பரம் ஆமே. |
14 | பர துரியத்து நனவும் பரந்து விரி சகம் உண்ட கனவு மெய்ச் சாந்தி உரு உறுகின்ற சுழுத்தியும் ஓவத் தெரியும் சிவ துரி அத்தனும் ஆமே. |
15 | பரமா நனவின் பின் பாற்சகம் உண்ட திரமார் கனவும் சிறந்த சுழுத்தி உரம் ஆம் உப சாந்தம் உற்றல் துறவே தரனாம் சிவ துரி அத்தனும் ஆமே. |
16 | சீவன் துரிய முதல் ஆகச் சீர் ஆன ஆவ சிவன் துரி யாந்தம் அவத்தை பத்து ஓவும் பரா நந்தி உண்மைக்குள் வைகியே மேவிய நால் ஏழ் விடுத்து நின்றானே. |
17 | பரம் சிவன் மேல் ஆம் பரமம் பரத்தில் பரம் பரன் மேல் ஆம் பர நனவு ஆக விரிந்த கனா இடர் வீட்டும் சுழுனை உரம்தகு மா நந்தி ஆம் உண்மை தானே. |
18 | சார்வாம் பரசிவம் சத்தி பரநாதம் மேல் ஆய விந்து சதா சிவம் மிக்கு ஓங்கிப் பால் ஆய்ப் பிரமன் அரி அமராபதி தேவாம் உருத்திரன் ஈசன் ஆம் காணிலே. |
19 | கலப்பு அறியார் கடல் சூழ் உலகு ஏழும் உலப்பு அறியார் உடலோடு உயிர் தன்னை அலப்பு அறிந்து இங்கு அர சாள கிலாதார் குறிப்பது கோல மடல் அது வாமே. |
20 | பின்னை அறியும் பெரும் தவத்து உண்மைசெய் தன்னை அறியில் தயாபரன் எம் இறை முன்னை அறிவு முடிகின்ற காலமும் என்னை அறியல் உற்று இன்புற்ற வாறே. |
21 | பொன்னை மறைத்தது பொன் அணி பூடணம் பொன்னின் மறைந்தது பொன் அணி பூடணம் தன்னை மறைத்தது தன் கணரணங்கள் ஆம் தன்னின் மறைந்தது தன் கரணங்களே. |
22 | மரத்தை மறைத்தது மா மத யானை மரத்தில் மறைந்தது மா மத யானை பரத்தை மறைத்தது பார் முதல் பூதம் பரத்தில் மறைந்தது பார் முதல் பூதமே. |
23 | ஆறு ஆறு அகன்று நமவிட்டு அறிவாகி வேறு ஆன தானே அகரமாய் மிக்கு ஓங்கி ஈறார் பரையின் இருள் அற்ற தற்பரன் பேறார் சிவாய அடங்கும் பின் முத்தியே. |
24 | துரியத்தில் ஓர் ஐந்தும் சொல் அகராதி விரியப் பரையின் மிகுநாதம் அந்தம் புரியப் பரையின் பரா வத்தார் போதம் திரியப் பரமம் துரியம் தெரியவே. |
25 | ஐந்தும் சகலத்து அருளால் புரிவற்றுப் பந்திடும் சுத்த அவத்தைப் பதைப் பினில் நந்தி பராவத்தை நாடச் சுடர் முனம் அந்தி இருள் போலும் ஐம் மலம் ஆறுமே. |
26 | ஐ ஐந்தும் எட்டுப் பகுதியும் மாயையும் பொய் கண்ட மா மாயை தானும் புருடன் கண்டு எய்யும் படியாய் எவற்றும் ஆய் அன்று ஆகி உய்யும் பராவத்தை உள்ளுதல் சுத்தமே. |
27 | நின்றான் அருளும் பரமும் முன் நேயமும் ஒன்றாய் மருவும் உருவும் உபாதியும் சென்றான் எனை விடுத்து ஆங்கில் செல்லாமையும் நன்றான ஞானத்தின் நாதப் பிரானே. |
முக்குண நிர்க்குணம் |
1 | சாத்திகம் எய்து நனவு எனச் சாற்றுங் கால் வாய்த்த இராசதம் மன்னும் கனவு என்ப ஓய்த்திடும் தாமதம் உற்ற சுழுத்தி ஆம் மாய்த்திடு நிர்க்குண மாசு இல் துரியமே. |
அண்டாதி பேதம் |
1 | பெறு பகிரண்டம் பேதித்த அண்டம் எறிகடல் ஏழின் மணல் அளவு ஆகப் பொறி ஒளி பொன் அணி என்ன விளங்கிச் செறியும் அண்டா சனத் தேவர் பிரானே. |
2 | ஆனந்த தத்துவம் அண்டா சனத்தின் மேல் மேனி ஐந்து ஆக வியாத்தம் முப்பத்து ஆறாய்த் தான் அந்தம் இல்லாத தத்துவம் ஆனவை ஈனம் இலா அண்டத்து எண் மடங்கு ஆமே. |
பதினொராம் தானமும் அவத்தை எனக் காணல் |
1 | அஞ்சில் அமுதும் ஓர் ஏழின் கண் ஆனந்த முஞ்சில் ஓங்காரம் ஓர் ஒன்பான் பதினொன்றில் வஞ்சமே நின்று வைத்திடில் காயம் ஆம் கிஞ்சுகச் செவ்வாய்க் கிளிமொழி கேளே. |
2 | புருடன் உடனே பொருந்திய சித்தம் அருவ மொடு ஆறும் அதீதத் துரியம் விரியும் சுழுத்தியின் மிக்கு உள எட்டும் அரிய பதினொன்றும் ஆம் அவ் அவத்தையே. |
3 | காட்டும் பதினொன்றும் கை கலந்தால் உடல் நாட்டி அழுத்திடின் நந்தி அல்லால் இல்லை ஆட்டம் செய்யாத அது விதியே நினை ஈட்டும் அது திடம் எண்ணலும் ஆமே. |
கலவு செலவு |
1 | கேவலம் தன்னில் கலவச் சகலத்தின் மேவும் செலவு விட வரு நீக்கத்துப் பாவும் தனைக் காண்டல் மூன்றும் படர் அற்ற தீது அறு சாக்கிரா தீதத்தில் சுத்தமே. |
2 | வெல்லும் அளவில் விடுமின் வெகுளியை செல்லும் அளவும் செலுத்துமின் சிந்தையை அல்லும் பகலும் அருளுடன் தூங்கினால் கல்லும் பிளந்து கடுவெளி ஆமே. |
நின்மலாவத்தை |
1 | ஊமைக் கிணற்று அகத்து உள்ளே உறைவது ஓர் ஆமையின் உள்ளே அழுவைகள் ஐந்து உள வாய்மையின் உள்ளே வழுவாது ஒடுங்குமேல் ஆமையின் மேலும் ஓர் ஆயிரத்து ஆண்டே. |
2 | காலங்கி நீர்பூக் கலந்த ஆகாயம் மாலங்கி ஈசன் பிரமன் சதா சிவன் மேல் அஞ்சும் ஓடி விரவ வல்லார் கட்குக் காலனும் இல்லை கருத்து இல்லை தானே. |
3 | ஆன்மாவே மைந்தன் ஆயினான் என்பது தான் மா மறை அறை தன்மை அறிகிலர் ஆன் மாவே மைந்தன் அரனுக்கு இவன் என்றல் ஆன் மாவும் இல்லைஆல் ஐ ஐந்தும் இல்லையே. |
4 | உதயம் அழுங்கல் ஒடுங்கல் இம் மூன்றின் கதி சாக்கிரம் கனவு ஆதி சுழுத்தி பதி தரு சேதனன் பற்று ஆம் துரியத்து அதி சுபன் ஆயன் தான் நந்தி ஆகுமே. |
5 | எல்லாம் தன்னுள் புக யாவுளும் தான் ஆகி நல்லாம் துரியம் புரிந்தக்கால் நல் உயிர் பொல்லாத ஆறா உள் போகாது போதம் ஆய்ச் செல்லாச் சிவகதி சென்று எய்தும் அன்றே. |
6 | காய்ந்த இரும்பு கனலை அகன்றாலும் வாய்ந்த கனல் என வாதனை நின்றால்போல் ஏய்ந்த கரணம் இறந்த துரியத்துத் தோய்ந்த கருமத்து துரிசு அகலாதே. |
7 | ஆன மறை ஆதி யாம் உரு நந்தி வந்து ஏனை அருள் செய் தெரி நனா வத்தையில் ஆன வகையை விடும் அடைத்தாய் விட ஆன மலா தீதம் அப்பரம் தானே. |
8 | சுத்த அதீதம் சகலத்தில் தோய் உறில் அத்தன் அருள் நீங்கா ஆங்கு அணிற்றான் ஆகச் சித்த சுகத்தைத் தீண்டாச் சமாதி செய் அத்தனோடு ஒன்றற்கு அருள் முதல் ஆமே. |
9 | வேறு செய்தான் இருபாதியின் மெய்த் தொகை வேறு செய்தான் என்னை எங்கணும் விட்டு உய்த்தான் வேறு செய்யா அருள் கேவலத்தே விட்டு வேறு செய்யா அத்தன் மேவி நின்றானே. |
10 | கறங்கு ஓலை கொள்ளிவட்டம் கடலில் திரை நிறம்சேர் ததிமத்தின் மலத்தே நின்று அங்கு அறம் காண் சுவர்க்க நரகம் புவி சேர்ந்து இறங்கா உயிர் அருளால் இவை நீங்குமே. |
11 | தானே சிவம் ஆன தன்மை தலைப் பட ஆன மலமும் அப் பாச பேதமும் மான குணமும் பரான்மா உபாதியும் பானுவின் முன் மதிபோல் படராவே. |
12 | நெருப்பு உண்டு நீர் உண்டு வாயுவும் உண்டு அங்கு அருக்கனும் சோமனும் அங்கே அமரும் திருத் தக்க மாலும் திசை முகன் தானும் உருத்திர சோதியும் உள்ளத்து உளாரே. |
13 | ஆனைகள் ஐந்தும் அடக்கி அறிவு என்னும் ஞானத் திரியைக் கொளுவி அதன் உள்புக்கு கூனை இருள் அற நோக்கும் ஒருவற்கு வானகம் ஏற வழி எளிது ஆமே. |
14 | ஆடிய காலில் அசைக்கின்ற வாயுவும் தாடித்து எழுந்த தமருக ஓசையும் பாடி எழுகின்ற வேத ஆகமங்களும் நாடியின் உள் ஆக நான் கண்ட வாறே. |
15 | முன்னை அறிவினில் செய்த முது தவம் பின்னை அறிவினைப் பெற்றால் அறியலாம் தன்னை அறிவது அறிவாம் அஃது அன்றிப் பின்னை அறிவது பேய் அறிவு ஆகுமே. |
16 | செயல் அற்று இருக்கச் சிவானந்தம் ஆகும் செயல் அற்று இருப்பார் சிவ யோகம் தேடார் செயல் அற்று இருப்பார் செகத் தொடும் கூடார் செயல் அற்று இருப்பார்க்கே செய்தி உண்டாமே. |
17 | தான் அவன் ஆகும் சமாதி கை கூடினால் ஆன மலம் அறும் அப் பசுத் தன்மை போம் ஈனம் இல் காயம் இருக்கும் இருநிலத்து ஊனங்கள் எட்டு ஒழித்து ஒன்றுவோர் கட்கே. |
18 | தொலையா அரன் அடி தோன்றும் அம் சத்தி தொலையா இருள் ஒளி தோற்ற அணுவும் தொலையா தொழில் ஞானம் தொன்மையில் நண்ணித் தொலையாத பெத்த முத்திக்கு இடை தோயுமே. |
19 | தோன்றிய பெத்தமும் முத்தியும் சூழ் சத்தி மான்றும் தெருண்டு உயிர் பெறும் மற்று அவை தான் தரு ஞானம் தன் சத்திக்குச் சாதன் ஆம் ஊன்றல் இல்லா உள் ஒளிக்கு ஒளி ஆமே. |
20 | அறிகின்று இலாதன ஐ ஏழும் ஒன்றும் அறிகின்ற என்னை அறியாது இருந்தேன் அறிகின்றாய் நீ என்று அருள் செய்தான் நந்தி அறிகின்ற நான் என்று அறிந்து கொண்டேனே. |
21 | தான் அவன் ஆகிய ஞானத் தலைவனை வானவர் ஆதியை மா மணிச் சோதியை ஈனம் இல் ஞானத்தின் அருள் சத்தியை ஊனம் இலாள் தன்னை ஊன் இடைக் கண்டதே. |
22 | ஒளியும் இருளும் பரையும் பரையுள் அளியது எனல் ஆகும் ஆன் மாவை அன்றி அளியும் அருளும் தெருளும் கடந்து தெளிய அருளே சிவானந்தம் ஆமே. |
23 | ஆனந்தம் ஆகும் அரன் அருள் சத்தியில் தான் அந்தம் ஆம் உயிர் தானே சமாதி செய் ஊன் அந்தம் ஆய் உணர்வாய் உள் உணர்வு உறில் கோன் அந்தம் வாய்க்கும் மகா வாக்கியம் ஆமே. |
24 | அறிவிக்க வேண்டாம் அறிவற்று அயர் வோர்க்கும் அறிவிக்க வேண்டாம் அறிவில் செறிவோர்க்கும் அறிவு உற்று அறியாமை எய்தி நிற்போர்க்கே அறிவிக்கத் தம் அறிவார் அறிவோரே. |
25 | சத்தும் அசத்தும் சத சத்தும் தான் கூடிச் சித்தும் அசித்தும் சிவ சித்தாய் நிற்கும் சுத்தம் அசுத்தம் தொடங்கா துரியத்துச் சுத்தரா மூன்றுடன் சொல் அற்றவர்களே. |
26 | தானே அறியான் அறிவிலோன் தான் அல்லன் தானே அறிவான் அறிவு சத சத்து என்று ஆனால் இரண்டும் அரன் அருளாய் நிற்கத் தானே அறிந்து சிவத்துடன் தங்குமே. |
27 | தத்துவ ஞானம் தலைப்பட்டவர் கட்கே தத்துவ ஞானம் தலைப்படலாய் நிற்கும் தத்துவ ஞானத்துத் தான் அவன் ஆகவே தத்துவ ஞானம் தந்தான் தொடங்குமே. |
28 | தன்னை அறிந்து சிவனுடன் தான் ஆக மன்னும் மலம் குணம் மாளும் பிறப்பு அறும் பின்னது சன் முத்தி சன்மார்க்கப் பேர் ஒளி நன்னது ஞானத்து முத்திரை நண்ணுமே. |
29 | ஞானம் தன் மேனி கிரியை நடு அரங்கம் தான் உறும் இச்சை உயிர் ஆகத் தற்பரன் மேனி கொண்டு ஐங் கருமத்து வித்து ஆதலான் மோனிகள் ஞானத்து முத்திரை பெற்றார்களே. |
30 | உயிர்க்கு அறிவு உண்மை உயிர் இச்சை மானம் உயிர்க்குக் கிரியை உயிர் மாயை சூக்கம் உயிர்க்கு இவை ஊட்டுவோன் ஊட்டும் அவனே உயிர்ச் செயல் அன்றி அவ் உள்ளத்து உளானே. |
31 | தொழில் இச்சை ஞானங்கள் தொல் சிவ சீவர் கழிவு அற்ற மா மாயை மாயையின் ஆகும் பழி அற்ற காரண காரியம் பாழ் விட்டு அழிவு அற்ற சாந்தன் அதீதன் சிவன் ஆமே. |
32 | இல்லதும் உள்ளதும் யாவையும் தான் ஆகி இல்லதும் உள்ளதும் ஆயன் தாம் அண்ணலைச் சொல்லாது சொல்லிடில் தூர் ஆதி தூரம் என்று ஒல்லை உணர்ந்தால் உயிர்க்கு உயிர் ஆகுமே. |
33 | உயிர் இச்சை ஊட்டி உழி தரும் சத்தி உயிர் இச்சை வாட்டி ஒழித்திடும் ஞானம் உயிர் இச்சை ஊட்டி உடன் உறலாலே உயிர் இச்சை வாட்டி உயர் பதம் சேருமே. |
34 | சேரும் சிவம் ஆனார் ஐம்மலம் தீர்ந்தவர் ஓர் ஒன்று இலார் ஐம் மல இருள் உற்றவர் பாரின் கண் விண்ணர் அகம்புகும் பான்மையர் ஆரும் கண்டு ஓரார் அவை அருள் என்றே. |
35 | எய்தினர் செய்யும் இரு மாயா சத்தியின் எய்தினர் செய்யும் இரு ஞான சத்தியின் எய்தினர் செய்யும் இரு ஞால சத்தியின் எய்தினர் செய்யும் இறை அருள் தானே. |
36 | திருந்தனர் விட்டார் திருவின் அரகம் திருந்தனர் விட்டார் திருவார் சுவர்க்கம் திருந்தனர் விட்டார் செறிமலக் கூட்டம் திருந்தனர் விட்டார் சிவமாய் அவமே. |
37 | அவமும் சிவமும் அறியார் அறியார் அவமும் சிவமும் அறிவார் அறிவார் அவமும் சிவமும் அருளால் அறிந்தால் அவமும் சிவமும் அவன் அருள் ஆமே. |
38 | அருளான சத்தி அனல் வெம்மை போலப் பொருள் அவன் ஆகத்தான் போதம் புணரும் இருள் ஒளியாய் மீண்டும் மும் மலம் ஆகும் திரு அருள் ஆன நந்தி செம் பொருள் ஆமே. |
39 | ஆதித்தன் தோன்ற வரும் பதுமாதிகள் பேதித்த அவ்வினையால் செயல் சேதிப்ப ஆதித்தன் தன் கதிரால் அவை சேட்டிப்பப் பேதித்துப் பேதியா வாறு அருட் பேதமே. |
40 | பேதம் அபேதம் பிறழ் பேதா பேதமும் போதம் புணர் போதம் போதமும் நாதமும் நாதமுடன் நாத நாதாதி நாதமும் ஆதன் அருளின் அருள் இச்சை ஆமே. |
41 | மேவிய பொய்க் கரி ஆட்டும் வினை எனப் பாவிய பூதம் கொண்டாட்டிப் படைப் பாதி பூ இயல் கூட்டத்தால் போதம் புரிந்து அருள் ஆவியை நாட்டும் அரன் அருள் ஆமே. |
42 | ஆறு அகன்று தனை அறிந்தான் அவன் ஈறு ஆகி யாவினும் யாவும் தனில் எய்த வேறு ஆய் வெளிபுக்கு வீடு உற்றான் அம் அருள் தேறாத் தெளி உற்றுத் தீண்டச் சிவம் ஆமே. |
43 | தீண்டற்கு அரிய திருவடி நேயத்தை மீண்டு உற்று அருளால் விதி வழியே சென்று தூண்டிச் சிவ ஞான மா வினைத் தான் ஏறித் தாண்டிச் சிவனுடன் சாரலும் ஆமே. |
44 | சார்ந்தவர் சாரணர் சித்தர் சமாதியர் சார்ந்தவர் மெய்ஞ்ஞான தத்துவ சாத்தியர் சார்ந்தவர் நேயம் தலைப்பட்ட ஆனந்தர் சார்ந்தவர் சத்தி அருள் தன்மை யாரே. |
45 | தான் என்று அவன் என்று இரண்டு என்பர் தத்துவம் தான் என்று அவன் என்று இரண்டு அற்ற தன்மையைத் தான் என்று இரண்டு உன்னார் கேவலத்து ஆனவர் தான் இன்றித் தான் ஆகத் தத்துவ சுத்தமே. |
46 | தன்னினில் தன்னை அறியும் தலைமகன் தன்னினில் தன்னை அறியத் தலைப்படும் தன்னினில் தன்னைச் சார்கிலன் ஆகில் தன்னினில் தன்னையும் சார்தற்கு அரியவே. |
47 | அறியகிலேன் என்று அரற்றாதே நீயும் நெறி வழியே சென்று நேர் பட்ட பின்னை இரு சுடர் ஆகி இயற்ற வல்லானும் ஒரு சுடரா வந்து என் உள்ளத்துள் ஆமே. |
48 | ஓம்புகின்றான் உலகு ஏழையும் உள் நின்று கூம்புகின்றார் குணத்தினொடும் கூறுவர் தேம்பு கின்றார் சிவம் சிந்தை செய்யாதவர் கூம்ப கில்லார் வந்து கொள்ளலும் ஆமே. |
49 | குறி அறியார்கள் குறிகாண மாட்டார் குறி அறியார்கள் தம் கூடல் பெரிது குறி அறியா வகை கூடுமின் கூடி அறிவு அறியா விருந்து அன்னமும் ஆமே. |
50 | ஊனோ உயிரோ உறுகின்றதே இன்பம் வானோர் தலைவி மயக்கத்து உற நிற்கத் தானோ பெரிது அறிவோம் என்னும் மானுடர் தானே பிறப்போடு இறப்பு அறியாரே. |
4. அறிவுதயம் |
1 | தன்னை அறியத் தனக்கு ஒரு கேடு இல்லை தன்னை அறியாமல் தானே கெடுகின்றான் தன்னை அறியும் அறிவை அறிந்தபின் தன்னையே அர்ச்சிக்கத் தான் இருந்தானே. |
2 | அங்கே அடல் பெரும் தேவர் எல்லாம் தொழச் சிங்கா சனத்தே சிவன் இருந்தான் என்று சங்கார் வளையும் சிலம்பும் சரேல் எனப் பொங்கார் குழலியும் போற்றி என்றாளே. |
3 | அறிவு வடிவு என்று அறியாத என்னை அறிவு வடிவு என்று அருள் செய்தான் நந்தி அறிவு வடிவு என்று அருளால் அறிந்தே அறிவு வடிவு என்று அறிந்து இருந்தேனே. |
4 | அறிவுக்கு அழிவு இல்லை ஆக்கமும் இல்லை அறிவுக்கு அறிவல்லது ஆதாரம் இல்லை அறிவே அறிவை அறிகின்றது என்று இட்டு அறைகின்றன மறை ஈறுகள் தாமே. |
5 | மன்னி நின்றார் இடை வந்த அருள் மாயத்து முன்னி நின்றானை மொழிந்தேன் முதல்வனும் பொன்னின் வந்தான் ஓர் புகழ் திருமேனியைப் பின்னி நின்றேன் நீ பெரியை என்றானே. |
6 | அறிவு அறிவு ஆக அறிந்து அன்பு செய்ம்மின் அறிவு அறிவு ஆக அறியும் இவ் வண்ணம் அறிவு அறிவு ஆக அணிமா ஆதி சித்தி அறிவு அறிவு ஆக அறிந்தனன் நந்தியே. |
7 | அறிவு அறிவு என்று அங்கு அரற்றும் உலகம் அறிவு அறியாமை யாரும் அறியார் அறிவு அறியாமை கடந்து அறிவானால் அறிவு அறியாமை அழகிய வாறே. |
8 | அறிவு அறியாமையை நீவி அவனே பொறிவாய் ஒழிந்து எங்கும் தான் ஆன போது அறிவாய் அவற்றின் உள் தான் ஆய் அறிவின் செறிவு ஆகி நின்றவன் சீவனும் ஆமே. |
9 | அறிவுடையார் நெஞ்சு அகல் இடம் ஆவது அறிவுடையார் நெஞ்சு அரும் தவம் ஆவது அறிவுடையார் நெஞ்சொடு ஆதிப் பிரானும் அறிவுடையார் நெஞ்சத்து அங்கு நின்றானே. |
10 | மாயனும் ஆகி மலரோன் இறையும் ஆய்க் காய நல் நாட்டுக் கருமுதல் ஆனவன் சேயன் அணியன் தித்திக்கும் தீங் கரும்பு ஆய அமுதாகி நின்று அண்ணிக் கின்றானே. |
11 | என்னை அறிந்திலேன் இத்தனை காலமும் என்னை அறிந்த பின் ஏதும் அறிந்திலேன் என்னை அறிந்திட்டு இருத்தலும் கை விடாது என்னை இட்டு என்னை உசாவு கின்றானே. |
12 | மாய விளக்கு அது நின்று மறைந்திடும் தூய விளக்கு அது நின்று சுடர் விடும் காய விளக்கு அது நின்று கனன்றிடும் சேய விளக்கினைத் தேடு கின்றேனே. |
13 | தேடு கின்றேன் திசை எட்டோடு இரண்டையும் நாடு கின்றேன் நலமே உடையான் அடி பாடுகின்றேன் பரமே துணை ஆம் எனக் கூடுகின்றேன் குறையா மனத்தாலே. |
14 | முன்னை முதல் விளையாட்டத்து முன்வந்து ஓர் பின்னைப் பெருமலம் வந்தவர் பேர்த்திட்டுத் தன்னைத் தெரிந்து தன் பண்டைத் தலைவன் தாள் மன்னிச் சிவம் ஆக வாரா பிறப்பே. |
5. ஆறந்தம் |
1 | வேதத்தின் அந்தமும் மிக்க சித்தாந்தமும் நாதத்தின் அந்தமும் நல்போத அந்தமும் ஓதத்தகும் எட்டு யோகாந்த அந்தமும் ஆதிக் கலாந்தமும் ஆறு அந்தம் ஆமே. |
2 | அந்தம் ஓர் ஆறும் அறிவார் அதி சுத்தர் அந்தம் ஓர் ஆறும் அறிவார் அமலத்தர் அந்தம் ஓர் ஆறும் அறியார் அவர்தமக்கு அந்தமோடு ஆதி அறிய ஒண்ணாதே. |
3 | தான் ஆன வேதாந்தம் தான் என்னும் சித்தாந்தம் ஆனாத் துரியத்து அணுவன் தனைகண்டு தேனார் பராபரம் சேர் சிவ யோகமாய் ஆனா மலம் அற்று அரும் சித்தியாலே. |
4 | நித்தம் பரனோடு உயிர் உற்று நீள் மனம் சத்தம் முதல் ஐந்தும் தத்துவத்தால் நீங்கிச் சுத்தம் அசுத்தம் தொடரா வகை நினைந்து அத்தன் பரன்பால் அடைதல் சித்தாந்தமே. |
5 | மேவும் பிரமனே விண்டு உருத்திரன் மேவும் செய் ஈசன் சதாசிவன் மிக்கப்பால் மேவும் பரவிந்து நாதம் விடா ஆறுஆறு ஓவும் பொழுது அணு ஒன்று உளதாமே. |
6 | உள்ள உயிர் ஆறுஆறு அது ஆகும் உபாதியைத் தெள்ளி அகன்று நாத அந்தத்தைச் செற்று மேல் உள்ள இருள் நீங்க ஓர் உணர்வு ஆகுமேல் எள்ளலின் நாதாந்தத்து எய்திடும் போதமே. |
7 | தேடும் இயம நியம ஆதி சென்று அகன்று ஊடும் சமாதியில் உற்றுப் பரசிவன் பாடு உறச் சீவன் பரமாகப் பற்று அறக் கூடும் உபசாந்தம் யோகாந்தக் கொள்கையே. |
8 | கொள்கையில் ஆன கலாந்தம் குறிக் கொள்ளில் விள்கையில் ஆன நிவிர்தாதி மேதாதிக்கு உள்ளனவாம் விந்து உள்ளே ஒடுங்கலும் தெள்ளி அதனைத் தெளிதலும் ஆமே. |
9 | தெளியும் இவை அன்றித் தேர் ஐங் கலை வேறு ஒளியுள் அமைத்து உள்ளது ஓர வல்லார் கட்கு அளியவன் ஆகிய மந்திரம் தந்திரம் தெளிவு உபதேச ஞானத் தொடு ஐந்தாமே. |
10 | ஆகும் அனாதி கலை ஆகம வேதம் ஆகும் அத் தந்திரம் அந்நூல் வழி நிற்றல் ஆகும் அனாதி உடல் அல்லா மந்திரம் ஆகும் சிவ போதகம் உபதேசமே. |
11 | தேசார் சிவம் ஆகும் தன் ஞானத்தின் கலை ஆசார நேயம் அறையும் கலாந்தத்துப் பேசா உணர்வு அற்ற பெருந்தகை வாசா மகோசர மா நந்தி தானே. |
12 | தான் அவன் ஆகும் சமாதி தலைப் படில் ஆன கலாந்த நாதாந்த யோகாந்தமும் ஏனைய போதாந்தம் சித்தாந்தம் ஆனது ஞானம் என ஞேய ஞாதுரு ஆகுமே. |
13 | ஆறு அந்தமும் சென்று அடங்கும் அந்நேயத்தே ஆறு அந்த ஞேயம் அடங்கிடு ஞாதுரு கூறிய ஞானக் குறியுடன் வீடவே தேறிய மோனம் சிவானந்தம் உண்மையே |
14 | உண்மைக் கலை ஆறு ஓர் ஐந்தான் அடங்கிடும் உண்மைக் கலாந்தம் இரண்டு ஐந்தோடு ஏழ் அந்தம் உண்மைக் கலை ஒன்றில் ஈறு ஆய நாத அந்தத்து உண்மைக் கலை சொல்ல ஓர் அந்தம் ஆமே. |
15 | ஆவுடையாளை அரன் வந்து கொண்டபின் தேவுடையான் எங்கள் சீர் நந்தி தாள் தந்து வீவு அற வேதாந்த சித்தாந்த மேன்மையைக் கூவி அருளிய கோனைக் கருதுமே. |
16 | கருதும் அவர் தம் கருத்தினுக்கு ஒப்ப அரன் செய்து அருள் ஆகமம் தன்னில் வரு சமயப் புற மாயை மா மாயை உருவிய வேதாந்த சித்தாந்த உண்மையே. |
17 | வேதாந்தம் கேட்க விருப்பொடு முப்பதப் போதாந்தத் ஆன பிரணவத்துள் புக்கு நாதாந்த வேதாந்த போதாந்த நாதனை ஈதாம் எனாது கண்டு இன்புறுவோர்களே. |
18 | வேதாந்தம் சித்தாந்தம் வேறு இலா முத்திரை போதாந்தம் ஞானம் யோகாந்தம் பொது ஞேய நாதாந்தம் ஆனந்தம் சீரா உதயம் ஆகும் மூதாந்த முத்திரை மோனத்து மூழ்கவே. |
19 | வேதாந்தம் தன்னில் உபாதி மேல் ஏழ் விட நாதாந்த பாசம் விடு நல்ல தொம் பதம் மீதாந்த காரணோ பாதி ஏழ் மெய்ப் பரன் போதாந்த தற்பதம் போமசி என்பவே. |
20 | வேதாந்த ஞானம் விளங்க விதியிலோர் நாதாந்த போதம் நணுகிய போக்கது போதாந்தமாம் பரன் பால் புகப் புக்கதால் நாதாந்த முத்தியும் சித்தியும் நண்ணுமே. |
21 | அண்டங்கள் ஏழும் கடந்து அகன்று அப்பாலும் உண்டு என்ற பேர் ஒளிக்கு உள்ளாம் உள ஒளி பண்டு உறு நின்ற பராசத்தி என்னவே கொண்டவன் அன்றி நின்றான் தங்கள் கோவே. |
22 | கோ உணர்த்தும் சத்தியாலே குறி வைத்துத் தே உணர்த்தும் கருமம் செய்தி செய்யவே பா அனைத்தும் படைத்து அர்ச்சனை பாரிப்ப ஒவ அனைத்து உண்டு ஒழியாத ஒருவனே. |
23 | ஒருவனை உன்னார் உயிர் தனை உன்னார் இருவினை உன்னார் இருமாயை உன்னார் ஒருவனுமே உள் உணர்த்தி நின்று ஊட்டி அருவனும் ஆகிய ஆதரத் தானே. |
24 | அரன் அன்பர் தானம் அது ஆகிச் சிவத்து வரும் அவை சத்திகள் முன்னா வகுத்திட்டு உரன் உறு சந்நிதி சேட்டிப்ப என்றும் திரன் உறு தோயாச் சிவா நந்தி ஆமே. |
25 | வேதாந்த தொம் பதம் மேவும் பசு என்ப நாதாந்த பாசம் விடநின்ற நன்பதி போதாந்த தற்பதம் போய் இரண்டு ஐக்கியம் சாதாரணம் சிவ சாயுச்சியம் ஆமே. |
26 | சிவம் ஆதல் வேதாந்த சித்தாந்தம் ஆகும் அவம் அவம் ஆகும் அவ் அவ் இரண்டும் சிவம் ஆம் சதா சிவம் செய்து ஒன்றான் ஆனால் நவம் ஆன வேதாந்த ஞான சித்தாந்தமே. |
27 | சித்தாந்தத் தேசீவன் முத்தி சித்தித்தலால் சித்தாந்தத்தே நிற்போர் முத்தி சித்தித்தவர் சித்தாந்த வேதாந்தம் செம் பொருள் ஆதலால் சித்தாந்த வேதாந்தம் காட்டும் சிவனையே. |
28 | சிவனைப் பரமன் உள் சீவன் உள் காட்டும் அவம் அற்ற வேதாந்த சித்தாந்தம் ஆனான் நவம் உற்று அவத்தையில் ஞானம் சிவம் ஆம் தவம் மிக்கு உணர்ந்தவர் தத்துவத்தாரே. |
29 | தத்துவம் ஆகும் சகள வகளங்கள் தத்துவம் ஆம் விந்து நாதம் சதா சிவம் தத்துவம் ஆகும் சீவன் தன் தற்பரம் தத்துவம் ஆம் சிவ சாயுச் சியமே. |
30 | வேதமோடு ஆகமம் மெய் ஆம் இறைவன் நூல் ஓதும் பொதுவும் சிறப்பும் என்று உள்ளன நாதன் அவை நாடில் இரண்டு அந்தம் பேதம் அது என்பர் பெரியோர்க்கு அபேதமே. |
31 | பரா னந்தி மன்னும் சிவானந்தம் எல்லாம் பரா னந்த மேல் மூன்றும் பாழ் உறு ஆனந்தம் விரா முத்திரானந்தம் மெய்ந் நடன ஆனந்தம் பொரா நின்ற உள்ளமே பூரிப்பியாமே. |
32 | ஆகும் கலாந்தம் இரண்டு அந்த நாதாந்தம் ஆகும் பொழுதில் கலை ஐந்தாம் ஆதலில் ஆகும் அரனே பஞ்சாந்தகன் ஆம் என்ன ஆகும் மறை ஆகமம் மொழிந்தான் அன்றே. |
33 | அன்று ஆகும் என்னாது ஐவகை அந்தம் தன்னை ஒன்று ஆன வேதாந்த சித்தாந்தம் உள்ளிட்டு நின்றால் யோகாந்தம் நேர்படும் நேர்பட்டால் மன்று ஆடி பாதம் மருவலும் ஆமே. |
34 | அனாதி சீவன் ஐம் மலம் அற்றப் பாலாய் அனாதி அடக்கித் தனைக் கண்டு அரனாய் தனாதி மலம் கெடத் தத்துவா தீதம் வினாவு நீர் பால் ஆதல் வேதாந்த உண்மையே. |
35 | உயிரைப் பரனை உயர் சிவன் தன்னை அயர்வு அற்று அறி தொந்தத் தசி அதனால் செயல் அற்ற அறிவாகியும் சென்று அடங்கி அயர்வு அற்ற வேதாந்த சித்தாந்தம் ஆமே. |
36 | மன்னிய சோகமா மாமறையாளர் தம் சென்னியது ஆன சிவயோகம் ஆம் ஈது என்ன அன்னது சித்தாந்த மா மறையாய் பொருள் துன்னிய ஆகம நூல் எனத் தோன்றுமே. |
37 | முதல் ஆகும் வேத முழுது ஆகமம் அப் பதியான ஈசன் பகர்ந்த இரண்டு முதிது ஆன வேத முறை முறையால் அலமந்து அதிகாதி வேதாந்த சித்தாந்தம் ஆகவே. |
6. பதிபசு பாசம் வேறின்மை |
1 | அறிவு அறிவு என்ற அறிவும் அனாதி அறிவுக்கு அறிவாம் பதியும் அனாதி அறிவினைக் கட்டிய பாசம் அனாதி அறிவு பதியில் பிறப்பு அறும் தான் |
2 | பசுபல கோடி பிரமன் முதலாய்ப் பசுக்களைக் கட்டிய பாசம் மூன்று உண்டு பசுத் தன்மை நீக்கி அப் பாசம் அறுத்தால் பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே. |
3 | கிடக்கின்ற வாறே கிளர் பயன் மூன்று நடக்கின்ற ஞானத்தை நாள் தோறும் நோக்கித் தொடக்கு ஒன்றும் இன்றித் தொழுமின் தொழுதால் குடக் குன்றில் இட்ட விளக்கு அதுவாமே. |
4 | பாசம் செய்தானைப் படர்சடை நந்தியை நேசம் செய்து ஆங்கே நினைப்பவர் நினைத்தலும் கூசம் செய்துஉன்னிக் குறிக் கொள்வது எவ் வண்ணம் வாசம் செய் பாசத்துள் வைக்கின்ற வாறே. |
5 | விட்ட விடம் ஏறா வாறு போல் வேறு ஆகி விட்ட பசு பாச மெய் கண்டோன் மேவுறான் கட்டிய கேவலம் காணும் சகலத்தைச் சுட்டு நனவில் அதீதத்துள் தோன்றுமே. |
6 | நாடும் பதியுடன் நல் பசு பாசமும் நீடுமா நித்தன் நிலை அறிவார் இல்லை நீடிய நித்தம் பசு பாச நீக்கமும் நாடிய சைவர்க்கு நந்தி அளித்ததே. |
7 | ஆய பதிதான் அருள் சிவலிங்கம் ஆம் ஆய பசுவும் அடலேறு என நிற்கும் ஆய பலி பீடம் ஆகும் நல்பாசம் ஆம் ஆய அரன் நிலை ஆய்ந்து கொள்வார்கட்கே. |
8 | பதி பசு பாசம் பயில் வியா நித்தம் பதிபசு பாசம் பகர்வோர்க்கு ஆறாக்கிப் பதிபசு பாசத்தைப் பற்று அற நீக்கும் பதிபசு பாசம் பயில நிலாவே. |
9 | பதியும் பசுவொடு பாசமும் மேலைக் கதியும் பசுபாச நீக்கமும் காட்டி மதி தந்த ஆனந்த மா நந்தி காணும் துதி தந்து வைத்தனன் சுத்த சைவத்திலே. |
10 | அறிந்த அணு மூன்றுமே யாங்கணும் ஆகும் அறிந்த அணு மூன்றுமே யாங்கணும் ஆக அறிந்த அனாதி வியாத்தனும் ஆவன் அறிந்த பதி படைப்பான் அங்கு அவற்றையே. |
11 | படைப்பு ஆதி ஆவது பரம்சிவம் சத்தி இடைப்பால் உயிர்கள் கடைத்து இவை தூங்கல் படைப்பு ஆதி சூக்கத்தைத் தற்பரம் செய்யப் படைப்பு ஆதி தூய மலம் அப்பரத்திலே. |
12 | ஆகிய சூக்கத்தை அவ்விந்து நாதமும் ஆகிய சத்தி சிவ பர மேல் ஐந்தால் ஆகிய சூக்கத்தில் ஐங் கருமம் செய்வோன் ஆகிய தூய ஈசானனும் ஆமே. |
13 | மேவும் பரசிவ மேல் சத்தி நாதமும் மேவும் பரவிந்து ஐம் முகன் வேறு ஈசன் மேவும் உருத்திரன் மால் வேதா மேதினி ஆகும்படி படைப்போன் அரன் ஆமே. |
14 | படைப்பும் அளிப்பும் பயில் இளைப் பாற்றும் துடைப்பு மறைப்பு முன் தோன்ற அருளும் சடத்தை விடுத்த அருளும் சகலத்து அடைத்த அனாதியை ஐந்து எனல் ஆமே. |
15 | ஆறு ஆறு குண்டலி தன்னின் அகத்து இட்டு வேறு ஆகும் மாயையின் முப்பான் மிகுத்துஇட்டு அங்கு ஈறு ஆம் கருவி இவற்றால் வகுத்து இட்டு வேறு ஆம் பதி பசு பாசம் வீடு ஆகுமே. |
16 | வீட்கும் பதி பசு பாசமும் மீது உற ஆட்கும் இருவினை ஆங்கு அவற்றால் உணர்ந்து ஆட்கும் நரக சுவர்க்கத்தில் தான் இட்டு நாட்கு உற நான் தங்கு நல் பாசம் நண்ணுமே. |
17 | நண்ணிய பாசத்தில் நான் எனல் ஆணவம் பண்ணிய மாயையில் ஊட்டல் பரிந்தனன் கண்ணிய சேதனன் கண் வந்த பேர் அருள் அண்ணல் அடிசேர் உபாயம் அது ஆகுமே. |
18 | ஆகும் உபாயமே அன்றி அழுக்கு அற்று மோகம் அறச் சுத்தன் ஆதற்கு மூலமே ஆகும் அறுவை அழுக்கு ஏற்றி ஏற்றல் போல் ஆகுவது எல்லாம் அருள் பாசம் ஆகுமே. |
19 | பாசம் பயில் உயிர் தானே பர முதல் பாசம் பயில் உயிர் தானே பசு என்ப பாசம் பயிலப் பதி பரம் ஆதலால் பாசம் பயிலப் பதி பசு ஆகுமே. |
20 | அத்தத்தில் உத்தரம் கேட்ட அரும் தவர் அத்தத்தில் உத்தரம் ஆகும் அருள் மேனி அத்தத்தினாலே அணையப் பிடித்தலும் அத்தத்தில் தம்மை அடைந்து நின்றாரே. |
7. அடித்தலை அறியும் திறம் கூறல் |
1 | காலும் தலையும் அறியார் கலதிகள் கால் அந்தச் சத்தி அருள் என்பர் காரணம் பால் ஒன்று ஞானமே பண்பார் தலை உயிர் கால் அந்த ஞானத்தைக் காட்ட வீடு ஆகும். |
2 | தலைஅடி ஆவது அறியார் காயத்தில் தலை அடி உச்சியில் உள்ளது மூலம் தலை அடி ஆன அறிவை அறிந்தோர் தலை அடி ஆகவே தான் இருந்தாரே. |
3 | நின்றான் நிலம் முழுது அண்டமும் மேல் உற வன் தாள் அசுரர் அமரரும் உய்ந்திடப் பின் தான் உலகம் படைத்தவன் பேர் நந்தி தன் தாள் இணை என் தலை மிசை ஆனதே. |
4 | சிந்தையின் உள்ளே எந்தை திருவடி சிந்தையும் எந்தை திருவடிக் கீழ் அது எந்தையும் என்னை அறியகிலன் ஆகில் எந்தையை யானும் அறிய கிலேனே. |
5 | பன்னாத பார் ஒளிக்கு அப்புறத்து அப்பால் என் நாயகனார் இசைந்து அங்கு இருந்திடு இடம் உன்னா ஒளியும் செய்யா மந்திரம் சொன்னான் கழல் இணை சூடி நின்றேனே. |
6 | பதி அது தோற்றும் பதம் அது வைம்மின் மதி அது செய்து மலர்ப் பதம் ஓதும் நதி பொதியும் சடை நாரி ஓர் பாகன் கதி செயும் காலங்கள் கண்டு கொளீரே. |
7 | தரித்து நின்றான் அடி தன்னிட நெஞ்சில் தரித்து நின்றான் அமராபதி நாதன் கரித்து நின்றான் கருதாதவர் சிந்தை பரித்து நின்றான் அப் பரி பாகத்தானே. |
8 | ஒன்று உண்டு தாமரை ஒண் மலர் மூன்று உள தன் தாதை தாளும் இரண்டு உள காயத்துள் நன்றாகக் காய்ச்சிப் பதம் செய வல்லார்கட்கு இன்றே சென்று ஈசனை எய்தலும் ஆமே. |
9 | கால் கொண்டு என் சென்னியில் கட்டறக் கட்டற மால் கொண்ட நெஞ்சின் மயக்கு இற்று துயக்கு அறப் பால் கொண்ட என்னைப் பரன் கொள்ள நாடினான் மேல் கொண்டு என் செம்மை விளம்ப ஒண்ணாதே. |
10 | பெற்ற புதல்வர் போல் பேணிய நாற்றமும் குற்றமும் கண்டு குணம் குறை செய்ய ஓர் பற்றைய ஈசன் உயிரது பான்மைக்குச் செற்றம் இலாச் செய்கைக்கு எய்தின செய்யுமே. |
8. முக் குற்றம் |
1 | மூன்று உள குற்றம் முழுது நலிவன மான்று இருள் தூங்கி மயங்கிக் கிடந்தன மூன்றினை நீங்கினர் நீக்கினர் நீங்காதார் மூன்றின் உள் பட்டு முடிகின்ற வாறே. |
2 | காமம் வெகுளி மயக்கம் இவை கடிந்து ஏமம் பிடித்து இருந் தேனுக்கு எறி மணி ஓம் எனும் ஓசையின் உள்ளே உறைவது ஓர் தாமம் அதனைத் தலைப் பட்டவாறே. |
9. முப்பதம் |
1 | தோன்றியது தொம் பதம் தற் பதம் சூழ்தர ஏன்ற அசிபதம் இம் மூன்றோடு எய்தினோன் ஆன்ற பராபரம் ஆகும் பிறப்பு அற ஏன்றனன் மாளச் சிவமாய் இருக்குமே. |
2 | போதம் தனை உன்னிப் பூதாதி பேதமும் ஓதும் கருவி தொண்ணூறு உடன் ஓர் ஆறு பேதமும் நாத அந்தப் பெற்றியில் கைவிட்டு வேதம் சொல் தொம் பதம் ஆகும் தன் மெய்மையே. |
3 | தற்பதம் என்றும் தொம்பதம் தான் என்றும் நிற்ப தசியத்துள் நேர் இழையாள் பதம் சொல் பதத்தாலும் தொடர ஒண்ணாச் சிவன் கற்பனை இன்றிக் கலந்து நின்றானே. |
4 | அணுவும் பரமும் அசி பதத் தேய்ந்து கணு ஒன்று இலாத சிவமும் கலந்தால் இணை அறு பால் தேன் அமுது என இன்பத் துணை அது வாய் அற்றிடத் தோன்றுமே. |
5 | தொம் பதம் தற்பதம் தோன்றும் அசிபதம் நம்பிய சீவன் பரன் சிவனாய் நிற்கும் அம்பத மேலைச் சொரூபமா வாக்கியம் செம் பொருள் ஆண்டு அருள் சீர் நந்தி தானே. |
6 | ஐம்பது அறியா தவரும் அவர் சிலர் உம்பனை நாடி முப் பதத்து இடைச் செம்பரம் ஆகிய வாசி செலுத்திடத் தம் பர யோகமாய்த் தானவன் ஆகுமே. |
7 | நந்தி அறிவும் நழுவில் அதீதம் ஆம் இந்தியம் சத்து ஆதி விட வியன் ஆகும் நந்திய மூன்று இரண்டு ஒன்று நலம் ஐந்தும் நந்தி நனவாதி மூட்டும் அனாதியே. |
8 | பர துரியத்து நனவு படி உண்ட விரிவில் கனவும் இதன் உப சாந்தத்து உரிய சுழுனையும் ஓவும் சிவன் பால் அரிய துரியம் அசி பதம் ஆமே. |
10. முப்பரம் |
1 | தோன்றி என் உள்ளே சுழன்று எழுகின்றது ஓர் மூன்று படி மண்டலத்து முதல்வனை ஏன்று எய்தி இன்புற்று இருந்தே இளம் கொடி நான்று நலம் செய் நலம் தரும் ஆறே. |
2 | மன்று நிறைந்தது மா பரம் ஆயது நின்று நிறைந்தது நேர் தரு நந்தியும் கன்று நினைந்து எழு தாய் என வந்தபின் குன்று நிறைந்த குணவிளக்கு ஆமே. |
3 | ஆறாறு தத்துவத்து அப்புறத்து அப் பரம் கூறா உபதேசம் கூறில் சிவபரம் வேறாய் வெளிப்பட்ட வேதப் பகவனார் பேறு ஆக ஆனந்தம் பேணும் பெருகவே. |
4 | பற்று அறப் பற்றில் பரம் பதி ஆவது பற்று அறப் பற்றில் பரன் அறிவே பரம் பற்று அறப் பற்றினில் பற்ற வல்லார்க்கே பற்று அறப் பற்றில் பரம் பரம் ஆமே. |
5 | பரம் பரம் ஆன பதி பாசம் பற்றாப் பரம் பரம் ஆகும் பரம் சிவம் மேவப் பரம் பரம் ஆன பர சிவானந்தம் பரம் பரம் ஆகப் படைப்பது அறிவே. |
6 | நனவில் கலாதியா நால் ஒன்று அகன்று தனி உற்ற கேவலம் தன்னில் தான் ஆகி நினைவுற்று அகன்ற அதீதத்து உள் நேயம் தனை உற்றிடத் தானே தற்பரம் ஆமே. |
7 | தன் கண்ட தூயமும் தன்னில் விலாசமும் பின் காணும் தூடணம் தானும் பிறழ்வுற்றுத் தற் பரன் கால பரமும் கலந்து அற்ற நற் பரா தீதமும் நாட அகராதியே. |
11. பர லட்சணம் |
1 | அதீதத்து உள் ஆகி அகன்றவன் நந்தி அதீதத்து உள் ஆகி அறிவிலோன் ஆன்மா மதி பெற்று இருள் விட்ட மன் உயிர் ஒன்று ஆகும் பதியில் பதியும் பரவுயிர் தானே. |
2 | ஆதியும் அந்தமும் இல்லா அரும் பதி சோதிப் பரம் சுடர் தோன்றத் தோன்றாமையின் நீதி அதாய் நிற்கும் நீடிய அப் பர போதம் உணர்ந்தவர் புண்ணியத் தோரே. |
3 | துரியம் கடந்து துரியா தீதத்தே அரிய வியோகம் கொண்டு அம்பலத்து ஆடும் பெரிய பிரானைப் பிரணவக் கூபத்தே துரிய வல்லார்க்குத் துரிசில்லை தானே. |
4 | செம்மை முன் நிற்பச் சுவேதம் திரிவபோல் அம்மெய்ப் பரத்தோடு அணுவன் உள் ஆயிடப் பொய்ம்மைச் சகம் உண்ட போத வெறும் பாழில் செம்மைச் சிவமேரு சேர் கொடி ஆகுமே. |
5 | வைச்ச கலாதி வரு தத்துவம் கெட வெச்ச இரு மாயை வேறு ஆக வேர் அறுத்து உச்ச பரசிவம் ஆம் உண்மை ஒன்றவே அச்சம் அறுத்து என்னை ஆண்டனன் நந்தியே. |
6 | என்னை அறிய இசைவித்த என் நந்தி என்னை அறிந்து அறியாத இடத்து உய்த்துப் பின்னை ஒளியில் சொரூபம் புறப்பட்டுத் தன்னை அளித்தான் தற்பரம் ஆகவே. |
7 | பரந்தும் சுருங்கியும் பார் புனல் வாயு நிரந்த வளியொடு ஞாயிறு திங்கள் அரந்த அரன் நெறி ஆயது ஆகித் தரந்த விசும்பு ஒன்று தாங்கி நின்றானே. |
8 | சத்தின் நிலையினில் தான் ஆன சத்தியும் தற்பரையாய் நிற்கும் தான் ஆம் பரற்கு உடல் உய்த்தகும் இச்சையில் ஞான ஆதி பேதம் ஆய் நித்த நடத்து நடிக்குமா நேயத்தே. |
9 | மேலொடு கீழ்ப்பக்கம் மெய் வாய் கண் நராசிகள் பாலிய விந்து பரையுள் பரையாகக் கோலிய நான்கு அவை ஞானம் கொணர் விந்து சீலம் இலா அணுச் செய்தி அது ஆமே. |
10 | வேறு ஆம் அதன் தன்மை போலும் இக் காயத்தில் ஆறு ஆம் உபாதி அனைத்து ஆகும் தத்துவம் பேறு ஆம் பர ஒளி தூண்டும் பிரகாசம் ஆய் ஊறா உயிர்த்து உண்டு உறங்கிடும் மாயையே. |
11 | தற்பரம் மன்னும் தனி முதல் பேர் ஒளி சிற்பரம் தானே செகம் உண்ணும் போதமும் தொல் பதம் தீர் பாழில் சுந்தரச் சோதிபுக்கு அப்புறம் அற்றது இங்கு ஒப்பு இல்லை தானே. |
12 | பண்டை மறைகள் பரவான் உடல் என்னும் துண்ட மதியோன் துரியா தீதம் தன்னைக் கண்டு பரனும் அக் காரணோ பதிக்கே மிண்டின் அவன் சுத்தன் ஆகான் வினவிலே. |
13 | வெளி கால் கனல் அப்பு மேவும் மண் நின்ற தளி ஆகிய தற்பரம் காண் அவன் தான் வெளி கால் கனல் அப்பு மேவும் மண் நின்ற வெளி ஆய சத்தி அவன் வடிவாமே. |
14 | மேருவி னோடே விரிகதிர் மண்டலம் ஆர நினையும் அரும் தவ யோகிக்குச் சீர் ஆர் தவம் செய்யில் சிவன் அருள் தான் ஆகும் பேரவும் வேண்டாம் பிறிது இல்லை தானே. |
11. பர லட்சணம் |
1 | அதீதத்து உள் ஆகி அகன்றவன் நந்தி அதீதத்து உள் ஆகி அறிவிலோன் ஆன்மா மதி பெற்று இருள் விட்ட மன் உயிர் ஒன்று ஆகும் பதியில் பதியும் பரவுயிர் தானே. |
2 | ஆதியும் அந்தமும் இல்லா அரும் பதி சோதிப் பரம் சுடர் தோன்றத் தோன்றாமையின் நீதி அதாய் நிற்கும் நீடிய அப் பர போதம் உணர்ந்தவர் புண்ணியத் தோரே. |
3 | துரியம் கடந்து துரியா தீதத்தே அரிய வியோகம் கொண்டு அம்பலத்து ஆடும் பெரிய பிரானைப் பிரணவக் கூபத்தே துரிய வல்லார்க்குத் துரிசில்லை தானே. |
4 | செம்மை முன் நிற்பச் சுவேதம் திரிவபோல் அம்மெய்ப் பரத்தோடு அணுவன் உள் ஆயிடப் பொய்ம்மைச் சகம் உண்ட போத வெறும் பாழில் செம்மைச் சிவமேரு சேர் கொடி ஆகுமே. |
5 | வைச்ச கலாதி வரு தத்துவம் கெட வெச்ச இரு மாயை வேறு ஆக வேர் அறுத்து உச்ச பரசிவம் ஆம் உண்மை ஒன்றவே அச்சம் அறுத்து என்னை ஆண்டனன் நந்தியே. |
6 | என்னை அறிய இசைவித்த என் நந்தி என்னை அறிந்து அறியாத இடத்து உய்த்துப் பின்னை ஒளியில் சொரூபம் புறப்பட்டுத் தன்னை அளித்தான் தற்பரம் ஆகவே. |
7 | பரந்தும் சுருங்கியும் பார் புனல் வாயு நிரந்த வளியொடு ஞாயிறு திங்கள் அரந்த அரன் நெறி ஆயது ஆகித் தரந்த விசும்பு ஒன்று தாங்கி நின்றானே. |
8 | சத்தின் நிலையினில் தான் ஆன சத்தியும் தற்பரையாய் நிற்கும் தான் ஆம் பரற்கு உடல் உய்த்தகும் இச்சையில் ஞான ஆதி பேதம் ஆய் நித்த நடத்து நடிக்குமா நேயத்தே. |
9 | மேலொடு கீழ்ப்பக்கம் மெய் வாய் கண் நராசிகள் பாலிய விந்து பரையுள் பரையாகக் கோலிய நான்கு அவை ஞானம் கொணர் விந்து சீலம் இலா அணுச் செய்தி அது ஆமே. |
10 | வேறு ஆம் அதன் தன்மை போலும் இக் காயத்தில் ஆறு ஆம் உபாதி அனைத்து ஆகும் தத்துவம் பேறு ஆம் பர ஒளி தூண்டும் பிரகாசம் ஆய் ஊறா உயிர்த்து உண்டு உறங்கிடும் மாயையே. |
11 | தற்பரம் மன்னும் தனி முதல் பேர் ஒளி சிற்பரம் தானே செகம் உண்ணும் போதமும் தொல் பதம் தீர் பாழில் சுந்தரச் சோதிபுக்கு அப்புறம் அற்றது இங்கு ஒப்பு இல்லை தானே. |
12 | பண்டை மறைகள் பரவான் உடல் என்னும் துண்ட மதியோன் துரியா தீதம் தன்னைக் கண்டு பரனும் அக் காரணோ பதிக்கே மிண்டின் அவன் சுத்தன் ஆகான் வினவிலே. |
13 | வெளி கால் கனல் அப்பு மேவும் மண் நின்ற தளி ஆகிய தற்பரம் காண் அவன் தான் வெளி கால் கனல் அப்பு மேவும் மண் நின்ற வெளி ஆய சத்தி அவன் வடிவாமே. |
14 | மேருவி னோடே விரிகதிர் மண்டலம் ஆர நினையும் அரும் தவ யோகிக்குச் சீர் ஆர் தவம் செய்யில் சிவன் அருள் தான் ஆகும் பேரவும் வேண்டாம் பிறிது இல்லை தானே. |
12. முத்துரியம் |
1 | நனவு ஆதி மூன்றினில் சீவ துரியம் தனது ஆதி மூன்றினில் பர துரியம் தான் நனவு ஆதி மூன்றினில் சிவ துரியம் ஆம் இனது ஆகும் தொந்தத் தசி பதத்து ஈடே. |
2 | தானா நனவில் துரியம் தன் தொம் பதம் தான் ஆம் துரிய நனவு ஆதி தான் மூன்றில் ஆனாப் பர பதம் அற்ற தரு நனா வான் ஆன மேல் மூன்றும் துரியம் அணுகுமே. |
3 | அணுவின் துரியத்து நான்கும் அது ஆகிப் பணியும் பரதுரியம் பயில் நான்கும் தணிவில் பரம் ஆகிச் சார் முத்துரியக் கணுவில் இந்நான்கும் கலந்த ஈர் ஐந்தே. |
4 | ஈர் ஐந்து அவத்தை இசைமுத் துரியத்துள் நேர் அந்தம் ஆக நெறிவழியே சென்று பார் அந்தம் ஆன பரா பரத்து அயிக்கியத்து ஓர் அந்தம் ஆம் இரு பாதியைச் சேர்த்திடே. |
5 | தொட்டே இருமின் துரிய நிலத்தினை எட்டாது எனின் நின்று எட்டும் இறைவனைப் பட்டு ஆங்கு அறிந்திடில் பல் நா உதடுகள் தட்டாது ஒழிவது ஓர் தத்துவம் தானே. |
6 | அறிவாய் அசத்து என்னும் மாறா அகன்று செறிவு ஆய மாயை சிதைத்து அருளாலே பிரியாத பேர் அருள் ஆயிடும் பெற்றி நெறியான அன்பர் நிலை அறிந்தாரே. |
7 | நனவின் நனவு ஆதி நால் ஆம் துரியம் தனது உயிர் தொம் பதம் ஆமாறு போல வினை அறு சீவன் நனவு ஆதி ஆகத்து அனைய பர துரியம் தற் பதமே. |
8 | தொம் பதம் தற்பதம் சொல் முத்துரியம் போல் நம்பிய மூன்று ஆம் துரியத்து நல் தாமம் அம்புவி உன்னா அதி சூக்கம் அப்பாலைச் செம் பொருள் ஆண்டருள் சீர் நந்தி தானே. |
13. மும்முத்தி |
1 | சீவன் தன் முத்தி அதீதம் பரமுத்தி ஓ உபசாந்தம் சிவ முத்தி ஆனந்த மூவயின் முச் சொரூப முத்தி முப்பாலது ஆய் ஓ உறு தாரத்தில் உள்ளு நாதாந்தமே. |
2 | ஆவது அறியார் உயிர் பிறப்பால் உறும் ஆவது அறியும் உயிர் அருள் பால் உறும் ஆவது ஒன்று இல்லை அகம் புறத்து என்று அகன்று ஓவு சிவனுடன் ஒன்று தன் முத்தியே. |
3 | சிவம் ஆகி மும்மல முக்குணம் செற்றுத் தவம் ஆன மும் முத்தி தத்துவத்து அயிக்கியத்து உவம் ஆகிய நெறி சோகம் என்போர்க்குச் சிவம் ஆம் அமலன் சிறந்தனன் தானே. |
4 | சித்தியும் முத்தியும் திண் சிவம் ஆகிய சுத்தியும் முத்தீ தொலைக்கும் சுக ஆனந்த சத்தியும் மேலைச் சமாதியும் ஆயிடும் பெத்தம் அறுத்த பெரும் பெருமானே. |
14. முச் சொரூபம் |
1 | ஏறிய வாறே மலம் ஐந்து இடை அடைத்து ஆறிய ஞானச் சிவோகம் அடைந்திட்டு வேறும் என முச் சொரூபத்து வீடு உற்று அங்கு ஈறு அதில் பண்டைப் பரன் உண்மை செய்யுமே. |
2 | மூன்று உள மாளிகை மூவர் இருப்பிடம் மூன்றினில் முப்பத்தாறும் உதிப்பு உள மூன்றினின் உள்ளே முளைத்து எழும் சோதியைக் காண்டலும் காயக் கணக்கு அற்ற வாறே. |
3 | உலகம் புடை பெயர்ந்து ஊழியும் போன நிலவு சுடர் ஒளி மூன்றும் ஒன்று ஆய பலவும் பரிசொடு பான்மையுள் ஈசன் அளவும் பெருமையும் ஆர் அறிவாரே. |
4 | பெருவாய் முதல் எண்ணும் பேதமே பேதித்து அருவாய் உருவாய் அருஉரு ஆகிக் குருவாய் வரும் சத்தி கோன் உயிர்ப் பன்மை உருவாய் உடன் இருந்து ஒன்றாய் அன்று ஆமே. |
5 | மணி ஒளி சோபை இலக்கணம் வாய்த்து மணி எனல் ஆய் நின்றவாறு அது போலத் தணி முச்சொருப ஆதி சத்தி ஆதி சாரப் பணி வித்த பேர் நந்தி பாதம் பற்றாயே. |
6 | கல் ஒளி மா நிறம் சோபைக் கதிர் தட்ட நல்ல மணி ஒன்றின் ஆடி ஒண் முப்பதம் சொல் அறு முப் பாழில் சொல் அறு பேர் ஊரைத்து அதல் அறு முத்திராம் அந்தத்து அனு பூதியே. |
7 | உடந்த செந்தாமரை உள் உறு சோதி நடந்த செந்தாமரை நாத அம் தகைந்தால் அடைந்த பயோதரி அட்டி அடைத்து அவ் விடம் தரு வாசலை மேல் திறவீரே. |
14. முச் சொரூபம் |
1 | ஏறிய வாறே மலம் ஐந்து இடை அடைத்து ஆறிய ஞானச் சிவோகம் அடைந்திட்டு வேறும் என முச் சொரூபத்து வீடு உற்று அங்கு ஈறு அதில் பண்டைப் பரன் உண்மை செய்யுமே. |
2 | மூன்று உள மாளிகை மூவர் இருப்பிடம் மூன்றினில் முப்பத்தாறும் உதிப்பு உள மூன்றினின் உள்ளே முளைத்து எழும் சோதியைக் காண்டலும் காயக் கணக்கு அற்ற வாறே. |
3 | உலகம் புடை பெயர்ந்து ஊழியும் போன நிலவு சுடர் ஒளி மூன்றும் ஒன்று ஆய பலவும் பரிசொடு பான்மையுள் ஈசன் அளவும் பெருமையும் ஆர் அறிவாரே. |
4 | பெருவாய் முதல் எண்ணும் பேதமே பேதித்து அருவாய் உருவாய் அருஉரு ஆகிக் குருவாய் வரும் சத்தி கோன் உயிர்ப் பன்மை உருவாய் உடன் இருந்து ஒன்றாய் அன்று ஆமே. |
5 | மணி ஒளி சோபை இலக்கணம் வாய்த்து மணி எனல் ஆய் நின்றவாறு அது போலத் தணி முச்சொருப ஆதி சத்தி ஆதி சாரப் பணி வித்த பேர் நந்தி பாதம் பற்றாயே. |
6 | கல் ஒளி மா நிறம் சோபைக் கதிர் தட்ட நல்ல மணி ஒன்றின் ஆடி ஒண் முப்பதம் சொல் அறு முப் பாழில் சொல் அறு பேர் ஊரைத்து அதல் அறு முத்திராம் அந்தத்து அனு பூதியே. |
7 | உடந்த செந்தாமரை உள் உறு சோதி நடந்த செந்தாமரை நாத அம் தகைந்தால் அடைந்த பயோதரி அட்டி அடைத்து அவ் விடம் தரு வாசலை மேல் திறவீரே. |
15. முக்கரணம் |
1 | இடன் ஒரு மூன்றில் இயைந்த ஒருவன் கடன் உறு அவ் உருவேறு எனக் காணும் திடம் அது போலச் சிவ பர சீவர் உடன் உறை பேதமும் ஒன்று எனல் ஆமே. |
2 | ஒளியை ஒளிசெய்து ஓம் என்று எழுப்பி வளியை வளி செய்து வாய்த்திட வாங்கி வெளியை வெளி செய்து மேல் எழ வைத்துத் தெளியத் தெளியும் சிவ பதம் தானே. |
3 | முக்கரணங்களின் மூர்ச்சை தீர்த்து ஆவது அக் கைக் காரணம் என்னத் தந்தனன் காண் நந்தி மிக்க மனோன்மணி வேறே தனித்து ஏக ஒக்கும் அது உன்மணி ஓது உள் சமாதியே. |
16. முச்சூனிய தொந்தத் தசி |
1 | தற்பதம் தொம் பதம் தான் ஆம் அசி பதம் தொற்பதம் மூன்றும் துரியத்துத் தோற்றவே நிற்பது உயிர் பரன் நிகழ் சிவமும் மூன்றின் சொல் பதம் ஆகும் தொந்தத் தசியே. |
2 | தொந்தத் தசி மூன்றில் தொல் காமியம் ஆதி தொந்தத் தசி மூன்றில் தொல் தாமதம் ஆதி வந்த மலம் குணம் மாளச் சிவம் தோன்றின் இந்துவின் முன் இருள் ஏகுதல் ஒக்குமே. |
3 | தொந்தத் தசியை அவ் வாசியில் தோற்றியே அந்த முறை ஈர் ஐந்து ஆக மதித்து இட்டு அந்தம் இலாத அவத்தை அவ்வாக்கியத்து உந்து முறையில் சிவ முன் வைத்து ஓதிடே. |
4 | வைத்துச் சிவத்தை மதி சொரு பானந்தத்து உய்த்துப் பிரணவம் ஆம் உபதேசத்தை மெய்த்த இதயத்து விட்டிடும் மெய் உணர்ந்து அத்தற்கு அடிமை அடைந்து நின்றானே. |
5 | தொம் பதம் மாயை உள் தோன்றிடும் தற்பதம் அம்பரை தன்னில் உதிக்கும் அசிபதம் நம்புறு சாந்தியில் நண்ணும் அவ் வாக்கியம் உம்பர் தொந்தத் தசி வாசி ஆமே. |
6 | ஆகிய அச்சோயம் தேவதத் தன்னிடத்து ஆகிய வை விட்டால் காயம் உபாதானம் ஏகிய தொந்தத் தசி என்ப மெய் அறிவு ஆகிய சீவன் பரசிவன் ஆமே. |
7 | தாமத காமியம் ஆகித் தகுகுண மா மலம் மூன்றும் அகார உகாரத்தோடு ஆமறும் அவ்வும் அவ் வாயுடன் மூன்றில் தாம் ஆம் துரியமும் தொந்தத் தசி அதே. |
17. முப்பாழ் |
1 | காரியம் ஏழ் கண்டு அறு மாயப் பாழ்விடக் காரணம் ஏழ் கண்டு அறும் போதப் பாழ்விடக் காரிய காரண வாதனை கண்டு அறும் சீரூப சாந்த முப் பாழ் விடத் தீருமே. |
2 | மாயப் பாழ் சீவன் வியோமப் பாழ்மன் பரன் சேய முப் பாழ் எனச் சிவசத்தியில் சீவன் ஆய வியாப்தம் எனும் முப்பாழாம் அந்தத் தூய சொரூபத்தில் சொல் முடி வாகுமே. |
3 | எதிர் அற நாளும் எருது வந்து ஏறும் பதி எனும் நந்தி பதம் அது கூடக் கதி எனப் பாழைக் கடந்த அந்தக் கற்பனை உதறிய பாழில் ஒடுங்கு கின்றேனே. |
4 | துரியம் அடங்கிய சொல் அறும் பாழை அரிய பரம் பரம் என்பர்கள் ஆதர் அரிய பரம் பரம் என்றே துதிக்கும் அரு நிலம் என்பதை யார் அறிவாரே. |
5 | ஆறு ஆறு நீங்க நமவாதி அகன்றிட்டு வேறு ஆகிய பரை ஆ என்று மெய்ப் பரன் ஈறு ஆன வாசியில் கூட்டும் அது அன்றோ தேறாச் சிவாய நம எனத் தேறிலே. |
6 | உள்ளம் உரு என்றும் உருவம் உளம் என்றும் உள்ள பரிசு அறிந்தோறும் அவர்கட்குப் பள்ளமும் இல்லை திடர் இல்லை பாழ் இல்லை உள்ளமும் இல்லை உரு இல்லை தானே. |
18. காரிய காரண உபாதி |
1 | செற்றிடும் சீவ உபாதித் திறன் ஏழும் பற்றும் பரோபாதி ஏழும் பகர் உரை உற்றிடும் காரிய காரணத் தோடு அற அற்றிட அச்சிவம் ஆகும் அணுவனே. |
2 | ஆறு ஆறு காரியோ பாதி அகன்றிட்டு வேறு ஆய் நனவு மிகுத்த கனா நனா ஆறா அகன்ற சுழுத்தி அதில் எய்தாப் பேறா நிலத்து உயிர் தொம் பதம் பேசிலே. |
3 | உயிர்க்கு உயிர் ஆகி ஒழிவு அற்று அழிவு அற்று அயிர்ப்பு அறு காரணோ பாதி விதிரேகத்து உயிர்ப்பு உறும் ஈசன் உபமிதத்தால் அன்றி வியர்ப்பு உறும் ஆணவம் வீடல் செய்யாவே. |
4 | காரியம் ஏழில் கலக்கும் கடும் பசு காரணம் ஏழில் கலக்கும் பரசிவன் காரிய காரணம் கற்பனை சொல் பதம் பார் அறும் பாழில் பரா பரத் தானே. |
5 | முத்திக்கு வித்து முதல்வன் தன் ஞானமே பத்திக்கு வித்துப் பணிந்து உற்றுப் பற்றலே சித்திக்கு வித்துச் சிவபரம் தான் ஆதல் சத்திக்கு வித்துத் தனது உப சாந்தமே. |
19. உபசாந்தம் |
1 | காரியம் ஏழும் கரந்திடும் மாயையுள் காரணம் ஏழும் கரக்கும் கடுவெளி காரிய காரண வாதனைப் பற்று அறப் பாரணவும் உப சாந்தப் பரிசு இதே. |
2 | அன்ன துரியமே ஆத்தும சுத்தியும் முன்னிய சாக்கிரா தீதத்து உறு புரி மன்னு பரங்காட்சி ஆவது உடன் உற்றுத் தன்னின் வியாத்தி தனின் உப சாந்தமே. |
3 | ஆறு ஆறு அமைந்த ஆணவத்தை உள் நீங்குதற்கு பேறு ஆன தன்னை அறிந்து அதன் பின் தீர் சுத்தி கூறாத சாக்கிரா தீதம் குருபரன் பேறு ஆம் வியாத்தம் பிறழ் உப சாந்தமே. |
4 | வாய்ந்த உப சாந்த வாதனை உள்ளப் போய் ஏய்ந்த சிவம் ஆதலின் சிவ ஆனந்தத்துத் தோய்ந்து அறல் மோனச் சுக அனுபவத் தோடே ஆய்ந்ததில் தீர்க்கை ஆனது ஈர் ஐந்துமே. |
5 | பரையின் பரவ பரத்துடன் ஏகமாய்த் திரையின் இன்றாகிய தெண்புனல் போல உற்று உணர்ந்தார் ஆரமும் தொக்க உணர்ந்துளோன் கரை கண்டான் அற்ற கணக்கிலே. |
6 | பிறையுள் கிடந்த முயலை எறிவான் அறை மணி வாள் கொண்டவர் தமைப் போலக் கறை மணி கண்டனைக் காண்குற மாட்டார் நிறை அறிவோம் என்பர் நெஞ்சிலர் தாமே. |
20. புறங் கூறாமை |
1 | கரும் தாள் கருடன் விசும்பு ஊடு இறப்பக் கரும் தாள் கயத்தில் கரும் பாம்பு நீங்கப் பெரும் தன்மை பேசுதி நீ ஒழி நெஞ்சே அருந்தா அலை கடல் ஆறு சென்றாலே. |
2 | கருதலர் மாளக் கருவாயில் நின்ற பொருதலைச் செய்வது புல் அறிவு ஆண்மை மருவலர் செய்கின்ற மா தவம் ஒத்தால் தரு அலர் கேட்ட தனி உம்பர் ஆமே. |
3 | பிணங்கவும் வேண்டாம் பெரு நிலம் முற்றும் இணங்கி எம் ஈசனை ஈசன் என்று உன்னில் கணம் பதினெட்டும் கழல் அடி காண வணங்கு எழு நாடி அங்கு அன்பு உறல் ஆமே. |
4 | என்னிலும் என் உயிர் ஆய இறைவனைப் பொன்னிலும் மா மணி ஆய புனிதனை மின்னிய எவ்வுயிர் ஆய விகிர்தனை உன்னிலும் உன்னும் உறுவகை யாலே. |
5 | நின்றும் இருந்தும் கிடந்தும் நிமலனை ஒன்றும் பொருள்கள் உரைப்பவர்கள் ஆகிலும் வென்று ஐம் புலனும் விரைந்து பிணக்கு அறுத்து ஒன்றாய் உணரும் ஒருவனும் ஆமே. |
6 | நுண் அறிவாய் உலகாய் உலகு ஏழுக்கும் எண் அறிவாய் நின்ற எந்தை பிரான் தன்னைப் பண் அறிவாளனைப் பாவித்த மாந்தரை விண் அறிவாளர் விரும்பு கின்றாரே. |
7 | விண்ணவ ராலும் அறிவறியான் தன்னைக் கண் உற உள்ளே கருதிடில் காலையில் எண் உற ஆக முப்போதும் இயற்றி நீ பண்ணிடில் தன்மை பரா பரன் ஆமே. |
8 | ஒன்றா உலகுடன் ஏழும் பரந்தவன் பின் தான் அருள் செய்த பேர் அருளாள வன் கன்றா மனத்தார் தம் கல்வியுள் நல்லவன் பொன்றாத போது புனை புகழானே. |
9 | போற்றி என்றேன் எந்தை பொன் ஆன சேவடி ஏற்றியேது என்றும் எறிமணி தான் அகக் காற்றின் விளக்கு அது காய மயக்கு உறும் ஆற்றலும் கேட்டதும் அன்று கண்டேனே. |
10 | நேடிக் கொண்டு என் உள்ளே நேர் தரு நந்தியை ஊடுபுக்கு ஆரும் உணர்ந்து அறிவார் இல்லை கூடுபுக்கு ஏறல் உற்றேன் அவன் கோலம் கண் மூடிக் கண்டேன் உலகு ஏழும் கண்டேனே. |
11 | ஆன புகழும் அமைந்தது ஓர் ஞானமும் தேனும் இருக்கும் சிறுவரை ஒன்று கண்டு ஊனம் ஒன்று இன்றி உணர்வு செய்வார் கட்கு வானகம் செய்யும் மறவனும் ஆமே. |
12 | மா மதி ஆம் மதியாய் நின்ற மாதவர் தூய் மதி ஆகும் சுடர் பரம் ஆனந்தம் தா மதி ஆகச் சகம் உணச் சாந்தி புக்கு ஆம் மலம் அற்றார் அமைவு பெற்றாரே. |
13 | பத முத்தி மூன்றும் பழுது என்று கைவிட்டு இதம் உற்ற பாச இருளைத் துரந்து மதம் அற்று எனது யான் மாற்றி விட்டு ஆங்கே திதம் உற்றவர்கள் சிவ சித்தர் தாமே. |
14 | சித்தர் சிவத்தைக் கண்டவர் சீர் உடன் சுத்த ஆசுத்தத்துடன் தோய்ந்து தோயாதவர் முத்தரம் முத்திக்கு மூலத்தர் மூலத்துச் சத்தர் சதா சிவத் தன்மையர் தாமே. |
15 | உதிக்கின்ற இந்திரன் அங்கி யமனும் துதிக்கும் நிருதி வருணன் நல் வாயு மதிக்கும் குபேரன் வடதிசை ஈசன் நிதித் தெண் திசையும் நிறைந்து நின்றாரே. |
21. எட்டிதழ்க் கமல முக்குண அவத்தை |
1 | ஒருங்கிய பூவும் ஓர் எட்டு இதழ் ஆகும் மருங்கிய மாயா புரி அதன் உள்ளே சுருங்கிய தண்டின் சுழுனையின் ஊடே ஒருங்கிய சோதியை ஓர்ந்து எழும் உய்ந்தே. |
2 | மொட்டு அலர் தாமரை மூன்று உள மூன்றினும் விட்டு அலர் கின்றனன் சோதி விரி சுடர் எட்டு அலர் உள்ளே இரண்டு அலர் உள் உறில் பட்டு அலர் கின்றது ஓர் பண்டு அங்ஙண் ஆமே. |
3 | ஆறே அருவி அகம் குளம் ஒன்று உண்டு நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும் கூறே குவி முலைக் கொம்பு அனையாளொடும் வேறே இருக்கும் விழுப் பொருள் தானே. |
4 | திகை எட்டும் தேர் எட்டும் தேவதை எட்டும் வகை எட்டும் ஆய் நின்ற ஆதிப் பிரானை வகை எட்டு நான்கும் மற்று ஆங்கே நிறைந்து முகை எட்டும் உள் நின்று உதிக்கின்ற வாறே. |
5 | ஏழும் சகளம் இயம்பும் கடந்து எட்டில் வாழும் பரம் என்றது கடந்து ஒன்பதில் ஊழி பரா பரம் ஓங்கிய பத்தினில் தாழ்வு அது ஆன தனித் தன்மை தானே. |
6 | பல் ஊழி பண்பன் பகலோன் இறையவன் நல் ஊழி ஐந்தின் உள்ளே நின்ற ஊழிகள் செல் ஊழி அண்டத்துச் சென்ற அவ் வூழியுள் அவ்வூழி உச்சியுள் ஒன்றில் பகவனே. |
7 | புரியம் உலகினில் பூண்ட எட்டானை திரியும் களிற்றொடு தேவர் குழாமும் எரியும் மழையும் இயங்கும் வெளியும் பரியும் ஆகாசத்தில் பற்றது தானே. |
8 | ஊறும் அருவி உயர் வரை உச்சி மேல் ஆறு இன்றிப் பாயும் அரும் குளம் ஒன்று உண்டு சேறு இன்றிப் பூத்த செழும் கொடித் தாமரைப் பூ இன்றிச் சூடான் புரி சடையோனே. |
9 | ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து நின்றும் இருந்தும் நிலம் பல பேசினும் வென்றும் இருந்தும் விகிர்தனை நாடுவர் சென்றும் இருந்தும் திரு உடையோரே. |
10 | தொல் பத விசுவன்றை சதன் பிராஞ்ஞன் நல் பத விராட்டன் பொன் கர்ப்பன் அவ் யாகிர்தன் பிற் பதம் சொலிதையன் பிரசா பத்தியன் பொன் புவி சாந்தன் பொரு அபிமானியே. |
22. ஒன்பான் அவத்தை - ஒன்பான் அபிமானி |
1 | நவம் ஆம் அவத்தை நனவு ஆதி பற்றில் பவம் ஆம் மலம் குணம் பற்று அற்றுப் பற்றாத் தவம் ஆன சத்திய ஞானப் பொதுவில் துவம் ஆர் துரியம் சொரூபம் அது ஆமே. |
2 | சிவம் ஆன சிந்தையில் சீவன் சிதைய பவம் ஆன மும் மலம் பாறிப் பறிய நவம் ஆன அந்தத்தின் நல் சிவ போதம் தவம் ஆம் அவை ஆகித் தான் அல்ல ஆகுமே. |
3 | முன் சொன்ன ஒன்பானின் முன் உறு தத்துவம் தன் சொல்லில் எண்ணத் தகா ஒன்பான் வேறு உள பின் சொல்ல ஆகும் இவ் ஈர் ஒன்பான் பேர்த்திட்டு தன் செய்த ஆண்டவன் தான் சிறந்தானே. |
4 | உகந்தன ஒன்பதும் ஐந்தும் உலகம் பகர்ந்த பிரான் என்னும் பண்பினை நாடி அகந்து எம்பிரான் என்பான் அல்லும் பகலும் இகந்தன வல்வினையோடு அறுத்தானே. |
5 | நலம் பல காலம் தொகுத்தன நீளம் குலம் பல வண்ணம் குறிப் பொடும் கூடும் பலம் பல பன்னிரு கால நினையும் நிலம் பலவாறு இன நீர்மையன் தானே. |
6 | ஆதி பராபரம் ஆகும் பரா பரை சோதி பரம் உயிர் சொல்லும் நல் தத்துவம் ஓதும் கலை மாயை ஓர் இரண்டு ஓர் முத்தி நீதி ஆம் பேதம் ஒன்பானுடன் ஆதியே. |
7 | தேறாத சிந்தை தெளியத் தெளிவித்து வேறா நரக சுவர்க்கமும் மேதினி ஆறாப் பிறப்பும் உயிர்க்கு அருளால் வைத்தான் வேறாத் தெளியார் வினை உயிர் பெற்றதே. |
8 | ஒன்பான் அவத்தை உள் ஒன்பான் அபிமானி நன்பால் பயிலும் நவ தத்துவம் ஆதி ஒன்பானில் நிற்பது ஓர் முத்துரியத்து உறச் செம்பால் சிவம் ஆதல் சித்தாந்த சித்தியே. |
9 | நாசி நுனியினில் நான்கு மூவிரல் இடை ஈசன் இருப்பிடம் யாரும் அறிகிலர் பேசி இருக்கும் பெரு மறை அம் மறை கூசி இருக்கும் குணம் அது ஆமே. |
23. சுத்தா சுத்தம் |
1 | கருமங்கள் ஒன்று கருதும் கருமத்து உரிமையும் கன்மமும் முன்னும் பிறவிக்கு அருவினை ஆவது கண்டு அகன்றபின் புரிவன கன்மக் கயத்துள் புகுமே. |
2 | மாயை மறைக்க மறைந்த மறைப் பொருள் மாயை மறைய வெளிப்படும் அப்பொருள் மாயை மறைய மறைய வல்லார் கட்குக் காயமும் இல்லை கருத்து இல்லை தானே. |
3 | மோழை அடைந்து முழை திறந்து உள் புக்குக் கோழை அடைகின்றது அண்ணல் குறிப்பினில் ஆழ அடைத்து அங்கு அனலில் புறம் செய்து தாழ அடைப்பது தன் வலி ஆமே. |
4 | ஆசூசம் ஆசூசம் என்பார் அறிவிலார் ஆசூசம் ஆம் இடம் ஆரும் அறிகிலார் ஆசூசம் ஆம் இடம் ஆரும் அறிந்தபின் ஆசூசம் ஆளிடம் ஆசூசம் ஆமே. |
5 | ஆசூசம் இல்லை அரு நியமத் தருக்கு ஆசூசம் இல்லை அரனை அர்ச்சிப் பவர்க்கு ஆசூசம் இல்லை ஆம் அங்கி வளர்ப் போர்க்கு ஆசூசம் இல்லை அருமறை ஞானிக்கே. |
6 | வழிபட்டு நின்று வணங்கும் அவர்க்குச் சுழிபட்டு நின்றது ஓர் தூய்மை தொடங்கும் குழிபட்டு நின்றவர் கூடார் குறிகள் கழி பட்டவர்க்கு அன்றிக் காண ஒண்ணாதே. |
7 | தூய் மணி தூய் அனல் தூய ஒளிவிடும் தூய் மணி தூய் அனல் தூர் அறிவார் இல்லை தூய் மணி தூய் அனல் தூர் அறிவார் கட்குத் தூய் மணி தூய் அனல் தூயவும் ஆமே. |
8 | தூயது வாளாக வைத்தது தூ நெறி தூயது வாளாக நாதன் திரு நாமம் தூயது வாளாக அட்டமா சித்தியும் தூயது வாளாகத் துய் அடிச் சொல்லே. |
9 | பொருள் அதுவாய் நின்ற புண்ணியன் எந்தை அருள் அது போற்றும் அடியவர் அன்றிச் சுருள் அதுவாய் நின்ற துன்பச் சுழியின் மருள் அதுவாச் சிந்தை மயங்குகின்றாரே. |
10 | வினை ஆம் அசத்து விளைவது உணரார் வினை ஞானம் தன்னில் வீடலும் தேரார் வினை விட வீடு என்னும் வேதமும் ஓதார் வினையாளர் மிக்க விளைவு அறியாரே. |
24. முத்திநிந்தை |
1 | பரகதி உண்டு என இல்லை என்போர்கள் நரகதி செல்வது ஞாலம் அறியும் இரகதி செய்திடுவார் கடை தோறும் துரகதி உண்ணத் தொடங்குவர் தாமே. |
2 | புறப்பட்டுப் போகும் புகுதும் என் நெஞ்சில் திறப்பட்ட சிந்தையைத் தெய்வம் என்று எண்ணி அறப்பட்ட மற்றப் பதி என்று அழைத்தேன் இறப் பற்றினேன் இங்கு இது என் என்கின்றானே. |
3 | திடர் இடை நில்லாத நீர் போல ஆங்கே உடல் இடை நில்லா உறு பொருள் காட்டிக் கடல் இடை நில்லாக் கலம் சேருமாப் போல் அடல் எரி வண்ணனும் அங்கு நின்றானே. |
4 | தாமரை நூல் போல் தடுப்பார் பரத்தொடும் போம் வழி வேண்டிப் புறமே உழிதர்வர் காண் வழி காட்டக் கண் காணா கலதிகள் தீ நெறி செல்வான் திரிகின்ற வாறே. |
5 | மூடுதல் இன்றி முடியும் மனிதர்கள் கூடுவர் நந்தி அவனைக் குறித்து உடன் காடும் மலையும் கழனி கடந்தோறும் ஊடும் உருவினை உன்ன கிலாரே. |
6 | ஆவது தெற்கும் வடக்கும் அமரர்கள் போவர் குடக்கும் குணக்கும் குறி வழி நாவின் இன் மந்திரம் என்று நடு அங்கி வேவது செய்து விளங்கிடுவீரே. |
7 | மயக்கு உற நோக்கினும் மா தவம் செய்யார் தமக்கு உறப் பேசின தாரணை கொள்ளார் சிணக்கு உறப் பேசின தீவினை யாளர் தமக்கு உறவல் வினை தாங்கி நின்றாரே. |
8 | விட்ட இலக்கணை தான் போம் வியோ மத்துத் தொட்டு விடாத துப சாந்தத்தே தொகும் விட்டு விடாதது மேவும் சத்து ஆதியில் சுட்டும் இலக்கண ஆதீதம் சொரூபமே. |
25. இலக்கணாத் திரயம் |
1 | வில்லின் விசை நாணில் கோத்து இலக்கு எய்தபின் கொல்லும் களிறு ஐந்தும் கோலொடு சாய்ந்தன இல்லுள் இருந்து எறி கூரும் ஒருவற்குக் கல் கலன் என்னக் கதிர் எதிர் ஆமே. |
26. தத்துவமசி வாக்கியம் |
1 | சீவ துரியத்துத்தொம் பதம் சீவன் ஆர் தாவு பர துரியத் தினில் தற்பதம் மேவு சிவ துரியத் தசி மெய்ப் பதம் ஓவி விடும் தத்துவ மசி உண்மையே. |
2 | ஆறு ஆறு அகன்ற அணுத் தொம் பதம் சுத்தம் ஈறு ஆன தற்பதம் எய்துப சாந்தத்துப் பேறு ஆகிய சீவன் நீங்கிப் பிரசாதத்து வீறு ஆன தொந்தத் தசி தத்வ மசியே. |
3 | துவந்தத் தசியே தொந்தத் தசியும் அவை மன்னா வந்து வயத் தேகம் ஆன தவம் உறு தத்துவ மசி வேதாந்த சிவமாம் அதும் சித்தாந்த வேதாந்தமே. |
4 | தொம் பதம் தற்பதம் சொல்லும் அசிபதம் நம்பிய முத் துரியத்துமேல் நாடவே உம் பதமும் பதம் ஆகும் உயிர்பரன் செம் பொருள் ஆன சிவம் எனல் ஆமே. |
5 | வைத்த துரியம் அதில் சொரு பானந்தத்து உய்த்த பிரணவம் ஆம் உப தேசத்தை மெய்த்த விதயத்து விட்டிடும் மெய் உணர் வைத்த படியே அடைந்து நின்றானே. |
6 | நனவாதி ஐந்தையும் நாத ஆதியில் வைத்துப் பினமா மலத்தைப் பின்வைத்துப் பின் சுத்தத் தனதாம் சிவகதி சத்து ஆதி சாந்தி மனவாசகம் கெட்ட மன்னனை நாடே. |
7 | பூரணி யாது புறம்பு ஒன்று இலாமையின் பேரணி யாது அது பேச்சு ஒன்று இலாமையில் ஓரணை யாது அது ஒன்றும் இலாமையில் காரணம் இன்றியே காட்டும் தகைமைத்தே. |
8 | நீ அது ஆனாய் என நின்ற பேருரை ஆயது நான் ஆனேன் என்னச் சமைந்து அறச் சேய சிவம் ஆக்கும் சீர் நந்தி பேர் அருள் ஆய அதுவாய் அனந்து ஆன் நந்தி ஆகுமே. |
9 | உயிர் பரம் ஆக உயர் பர சீவன் அரிய சிவம் ஆக அச்சிவ வேதத் திரியிலும் சீர் ஆம் பரா பரன் என்ன உரிய அற்ற ஓம் மயம் ஆமே. |
10 | வாய் நாசியே புரு மத்தகம் உச்சியில் ஆய் நாசி உச்சி முதல் அவையாய் நிற்கும் தாய் நாடி ஆதிவாக்கு ஆதி சகலாதி சேய் நாடு ஒளி எனச் சிவகதி ஐந்துமே. |
11 | அறிவு அறியாமை இருண்டும் அகற்றிச் செறிவு அறிவாய் எங்கும் நின்ற சிவனைப் பிறிவு அறியாது பிரான் என்று பேணும் குறி அறியாதவர் கொள் அறியாரே. |
12 | அறிவார் அறிவன அப்பும் அனலும் அறிவார் அறிவன அப்பும் கலப்பும் அறிவான் இருந்து அங்கு அறிவிக்கின் அல்லால் அறிவான் அறிந்த அறிவு அறியோமே. |
13 | அடி தொழ முன் நின்று அமரர்கள் அத்தன் முடி தொழ ஈசனும் முன் நின்று அருளிப் படி தொழ நீ பண்டு பாவித்தது எல்லாம் கடி தொழக் காண் என்னும் கண் நுதலானே. |
14 | நின்மல மேனி நிமலன் பிறப்பு இலி என்னுளம் வந்து இவன் என் அடியான் என்று பொன் வளர் மேனி புகழ் கின்ற வானவன் நின்மலம் ஆகென்று நீக்க வல்லானே. |
15 | துறந்து புக்கு ஒள் ஒளி சோதியைக் கண்டு பறந்தது என் உள்ளம் பணிந்து கிடந்தே மறந்து அறியா என்னை வானவர் கோனும் இறந்து பிறவாமல் ஈங்கு வைத்தானே. |
16 | மெய்வாய் கண் மூக்கு செவி என்னும் மெய்த் தோற்றத்து அவ்வாய அந்தக் கரணம் அகிலமும் எவ்வாய் உயிரும் இறை ஆட்ட ஆடலால் கை வாய் இலா நிறை எங்கும் மெய் கண்டதே. |
27. விசுவக் கிராசம் |
1 | அழிகின்ற சாயா புருடனைப் போலக் கழிகின்ற நீரில் குமிழியைக் காணில் எழுகின்ற தீயில் கற்பூரத்தை ஒக்கப் பொழிகின்ற இவ்வுடல் போம் அப்பரத்தே. |
2 | உடலும் உயிரும் ஒழிவற ஒன்றில் படரும் சிவ சத்தி தாமே பரம் ஆம் உடலை விட்டு இந்த உயிர் எங்கும் ஆகிக் கடையும் தலையும் கரக்கும் சிவத்தே. |
3 | செவி மெய் வாய் கண் மூக்குச் சேர் இந்திரியம் அவி இன்றி யமனம் ஆதிகள் ஐந்தும் குவி ஒன்று இலாமல் விரிந்து குவிந்து தவிர் ஒன்று இலாத சரா சரம் தானே. |
4 | பரன் எங்கும் ஆரப் பரந்து உற்று நிற்கும் திரன் எங்கும் ஆகிச் செறிவு எங்கும் எய்தும் உரன் எங்கும் ஆய் உலகு உண்டு உமிழ்க்கும் வரம் இங்ஙன் கண்டு யான் வாழ்ந்து உற்ற வாறே. |
5 | அளந்து துரியத்து அறிவினை வாங்கி உளம் கொள் பரம்சகம் உண்டது ஒழித்து கிளர்ந்த பரம் சிவம் சேரக் கிடைத்தால் விளங்கிய வெட்ட வெளியனும் ஆமே. |
6 | இரும்பு இடை நீர் என என்னை உள்வாங்கிப் பரம்பரம் ஆன பரம் அது விட்டே உரம் பெற முப்பாழ் ஒளியை விழுங்கி இருந்த என் நந்தி இதயத்து உளானே. |
7 | கரி உண் விளவின் கனிபோல் உயிரும் உரிய பரமும் முன் ஓதும் சிவமும் அரிய துரிய மேல் அகிலமும் எல்லாம் திரிய விழுங்கும் சிவ பெருமானே. |
8 | அந்தமும் ஆதியும் ஆகும் பரா பரன் தந்தம் பரம் பரன் தன்னில் பரம் உடன் நம்தமை உண்டு மெய்ஞ்ஞான நேயந்தத்தே நந்தி இருந்தனன் நாம் அறியோமே. |
28. வாய்மை |
1 | அற்றது உரைக்கில் அருள் உபதேசங்கள் குற்றம் அறுத்த பொன்போலும் கனல் இடை அற்று அற வைத்து இறை மாற்று அற ஆற்றிடில் செற்றம் அறுத்த செழும் சுடர் ஆகுமே. |
2 | எல்லாம் அறியும் அறிவு தனை விட்டு எல்லாம் அறிந்தும் இலாபம் அங்கு இல்லை எல்லாம் அறிந்த அறிவினை நான் என்னில் எல்லாம் அறிந்த இறை எனல் ஆமே. |
3 | தானே உலகில் தலைவன் எனத் தகும் தானே உலகுக்கு ஓர் தத்துவம் ஆய் நிற்கும் வானே மழை பொழி மா மறை கூர்ந்திடும் ஊனே உருகிய உள்ளம் ஒன்று ஆமே. |
4 | அருள் பெற்ற காரணம் என் கொல் அமரில் இருள் அற்ற சிந்தை இறைவனை நாடி மருள் உற்ற சிந்தையை மாற்றி அருமைப் பொருள் உற்ற சேவடி போற்றுவர் தாமே. |
5 | மெய் கலந்தாரொடு மெய் கலந்தான் தன்னைப் பொய் கலந்தார் முன் புகுதா ஒருவனை உய் கலந்து ஊழித் தலைவனும் ஆய் நிற்கும் மெய் கலந்து இன்பம் விளைந்திடும் மெய்யர்க்கே. |
6 | மெய் கலந்தாரொடு மெய் கலந்தான் மிகப் பொய் கலந்தார் உள் புகுதா புனிதனைக் கை கலந்து ஆவி எழும் பொழுது அண்ணலைக் கை கலந்தார்க்கே கருத்து உறல் ஆமே. |
7 | எய்திய காலத்து இரு பொழுதும் சிவன் மெய் செயின் மேலை விதி அதுவாய் நிற்கும் பொய்யும் புலனும் புகல் ஒன்று நீத்திடில் ஐயனும் அவ்வழி ஆகி நின்றானே. |
8 | எய்துவது எய்தாது ஒரு இது அருள் உய்ய அருள் செய்தான் உத்தமன் சீர் நந்தி பொய் செய்புலன் நெறி ஒன்பதும் ஆட் கொளின் மெய் என் புரவியை மேற் கொள்ளல் ஆமே. |
9 | கை கலந்தானைக் கருத்தினுள் நந்தியை மெய் கலந்தான் தன்னை வேத முதல்வனை பொய் கலந்தார் முன் புகுதாப் புனிதனைப் பொய் ஒழிந்தார்க்கே புகல் இடம் ஆமே. |
10 | மெய்த்தாள் அகம்படி மேவிய நந்தியைக் கைத்தாள் கொண்டாரும் திறந்து அறிவார் இல்லை பொய்த்தாள் இடும்பையைப் பொய் அற நீ விட்டு அங்கு அத்தாள் திறக்கில் அரும் பேறு அது ஆமே. |
11 | உய்யும் வகையால் உணர்வினால் ஏத்துமின் மெய்யன் அரன் நெறி மேல் உண்டு திண் எனப் பொய் ஒன்றும் இன்றிப் புறம் பொலிவார் நடு ஐயனும் அங்கே அமர்ந்து நின்றானே. |
12 | வம்பு பழுத்த மலர்ப் பழம் ஒன்று உண்டு தம்பால் பறவை புகுந்து உணத்தான் ஒட்டாது அம்பு கொண்டு எய்திட்ட கலத் துரத்திடில் செம் பொன் சிவகதி சென்று எய்தலாமே. |
13 | மயக்கிய ஐம் புலப் பாசம் அறுத்துத் துயக்கு அறுத்தானைத் தொடர்மின் தொடர்ந்தால் தியக்கம் செய்யாதே சிவன் எம் பெருமான் உயப்போ என மனம் ஒன்று வித்தானே. |
14 | மனம் அது தானே நினைய வல்லார்க்குக் இனம் எனக் கூறும் இரும் காயம் ஏவல் தனிவு இனி நாதன்பால் தக்கன செய்யில் புனிதன் செயல் ஆகும் போது அப் புவிக்கே. |
29. ஞானிசெயல் |
1 | முன்னை வினைவரின் முன் உண்டே நீங்குவர் பின்னை வினைக் கணார் பேர்ந்து அறப் பார்ப்பார்கள் தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள் நன்மை இல் ஐம்புலன் நாடலினாலே. |
2 | தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள் முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பார்கள் பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள் சென்னியில் வைத்த சிவன் அருளாலே. |
3 | மன வாக்குக் காயத்தால் வல்வினை மூளும் மன வாக்கு நேர் நிற்கில் வல்வினை மன்னா மன வாக்குக்கு எட்ட அவர் வாதனை தன்னால் தனை மாற்றி ஆற்றத் தகு ஞானி தானே. |
4 | நிற்றல் இருத்தல் கிடத்தல் நடை ஓடல் பெற்ற அக்காலும் திருவருள் பேராமல் சற்றியல் ஞானந்தம் தானந்தம் தங்கவே உற்ற பிறப்பு அற்று ஒளிர் ஞான நிட்டையே. |
30. அவா அறுத்தல் |
1 | வாசியும் மூசியும் பேசி வகையினால் பேசி இருந்து பிதற்றிப் பயன் இல்லை ஆசையும் அன்பும் அறுமின் அறுத்தபின் ஈசன் இருந்த இடம் எளிதாமே. |
2 | மாடத்து உளான் அலன் மண்டபத்தான் அலன் கூடத்து உளான் அலன் கோயில் உள்ளான் அலன் வேடத்து உளான் அலன் வேட்கை விட்டார் நெஞ்சில் மூடத்து உளே நின்று முத்தி தந்தானே. |
3 | ஆசை அறுமின் கள் ஆசை அறுமின் கள் ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள் ஆசைப் படப் பட ஆய் வரும் துன்பங்கள் ஆசை விட விட ஆனந்தம் ஆமே. |
4 | அடுவன பூதங்கள் ஐந்தும் உடனே படுவழி செய்கின்ற பற்று அற வீசி விடுவது வேட்கையை மெய்ந் நின்ற ஞானம் தொடுவது தம்மைத் தொடர்தலும் ஆமே. |
5 | உவாக் கடல் ஒக்கின்ற ஊழியும் போன துவாக் கடல் உட் பட்டுத் துஞ்சினர் வானோர் அவாக் கடல் உட்பட்டு அழுந்தினர் மண்ணோர் தவாக் கடல் ஈசன் தரித்து நின்றானே. |
6 | நின்ற வினையும் பிணியும் நெடும் செயல் துன் தொழில் அற்றுச் சுத்தம் அது ஆகலும் பின்றை அம் கருமமும் பேர்த்து அருள் நேர் பெற்றுத் துன்ற அழுத்தலும் ஞானிகள் தூய்மையே. |
7 | உண்மை உணர்ந்து உற ஒண் சித்தி முத்தி ஆம் பெண் மயல் கெட்டு அறப் பேறு அட்ட சித்தி ஆம் திண்மையின் ஞானி சிவ காயம் கை விட்டால் வண்மை அருள்தான் அடைந்து அன்பில் ஆறுமே. |
8 | அவன் இவன் ஈசன் என்று அன்பு உற நாடிச் சிவன் இவன் ஈசன் என்று உண்மையை ஓரார் பவன் இவன் பல் வகையாம் இப் பிறவி புவன் இவன் போவது பொய் கண்ட போதே. |
9 | கொதிக்கின்ற வாறும் குளிர்கின்ற வாறும் பதிக்கின்ற வாறு இந்தப் பார் அகம் முற்றும் விதிக்கின்ற ஐவரை வேண்டாது உலகம் நொதிக்கின்ற காயத்து நூல் ஒன்றும் ஆமே. |
31. பத்தி உடைமை |
1 | முத்தி செய் ஞானமும் கேள்வியும் ஆய் நிற்கும் அத்தனை மாயா அமரர் பிரான் தன்னைச் சுத்தனைத் தூய் நெறியாய் நின்ற சோதியைப் பத்தர் பரசும் பசுபதி தான் என்றே. |
2 | அடியார் அடியார் அடியார்க்கு அடிமைக்கு அடியனாய் நல்கிட்டு அடிமையும் பூண்டேன் அடியார் அருளால் அவன் அடி கூட அடியான் இவன் என்று அடிமை கொண்டானே. |
3 | நீரில் குளிரும் நெருப்பினில் சுட்டிடும் ஆரிக் கடன் நந்தியாம் அறிபவர் பாரில் பயனாரைப் பார்க்கிலும் நேரியர் ஊரில் உமாபதி ஆகி நின்றானே. |
4 | ஒத்து உலகு ஏழும் அறியா ஒருவன் என்று அத்தன் இருந்திடம் ஆர் அறிவார் சொல்லப் பத்தர் தம் பத்தியில் பால் படில் அல்லது முத்தினை யார் சொல்ல முந்து கின்றாரே. |
5 | ஆன் கன்று தேடி அழைக்கும் அது போல் நான் கன்றாய் நாடி அழைத்தேன் என் நாதனை வான் கன்றுக்கு அப்பால் ஆய் நின்ற மறைப்பொருள் ஊன் கன்றாய் நாடி வந்து உள் புகுந்தானே. |
6 | பெத்தத்தும் தன் பணி இல்லை பிறத்தலான் முத்தத்தும் தன் பணி இல்லை முறைமை யால் அத்தற்கு இரண்டும் அருளால் அளித்தலால் பத்தி பட்டோர்க்குப் பணி ஒன்றும் இல்லையே. |
7 | பறவையில் கற்பமும் பாம்பு மெய் ஆகக் குறவம் சிலம்பக் குளிர் வரை ஏறி நறவு ஆர் மலர் கொண்டு நந்தியை அல்லால் இறைவன் என்று என் மனம் ஏத்தகிலாவே. |
8 | உறு துணை நந்தியை உம்பர் பிரானைப் பெறு துணை செய்து பிறப்பு அறுத்து உய்மின் செறி துணை செய்து சிவன் அடி சிந்தித்து உறு துணை ஆய் அங்கி ஆகி நின்றானே. |
9 | வானவர் தம்மை வலிசெய்து இருக்கின்ற தானவர் முப்புரம் செற்ற தலைவனைக் கானவன் என்றும் கருவரையான் என்றும் ஊனதன் உள் நினைந்து ஒன்று பட்டாரே. |
10 | நிலை பெறு கேடு என்று முன்னே படைத்த தலைவனை நாடித் தயங்கும் என் உள்ளம் மலையுளும் வான் அகத்து உள்ளும் புறத்தும் உலையுளும் உள்ளத்து மூழ்கி நின்றேனே. |
32. முத்தி உடைமை |
1 | முத்தியில் அத்தன் முழுத்த அருள் பெற்றுத் தத்துவ சுத்தி தலைப்பட்டுத் தன் பணி மெய்த் தவம் செய்கை வினைவிட்ட மெய் உண்மைப் பத்தியில் உற்று ஓர் பரானந்த போதரே. |
2 | வளம் கனி தேடிய வன் தாள் பறவை உளம் கனி தேடி அழி தரும் போது களம் கனி அங்கியில் கை விளக்கு ஏற்றி நலம் கொண்ட நால்வரும் நாடுகின்றாரே. |
33. சோதனை |
1 | பெம்மான் பெரு நந்தி பேச்சு அற்ற பேர் இன்பத்து அம்மான் அடி தந்து அருள் கடல் ஆடினோம் எம்மாயமும் விடுத்து எம்மைக் கரந்திட்டுச் சும்மா இருந்து இடம் சோதனை ஆகுமே. |
2 | அறிவு உடையான் அரு மாமறை உள்ளே செறிவு உடையான் மிகு தேவர்க்கும் தேவன் பொறி உடையான் புலன் ஐந்தும் கடந்த குறி உடையானொடும் கூடுவன் நானே. |
3 | குறியாக் குறியினில் கூடாத கூட்டத்து அறியா அறிவில் அவிழ்ந்து ஏக சித்தம் ஆய் நெறி ஆம் பரா நந்தி நீடு அருள் ஒன்றும் செறியாச் செறிவே சிவம் எனலாமே. |
4 | காலினில் ஊறும் கரும்பினில் கட்டியும் பாலின் உள் நெய்யும் பழத்துள் இரதமும் பூவின் உள் நாற்றமும் போல் உளன் எம் இறை காவலன் எங்கும் கலந்து நின்றானே. |
5 | விருப்பொடு கூடி விகிர்தனை நாடிப் பொருப்பு அகம் சேர் தரு பொன் கொடி போல இருப்பர் மனத்து இடை எங்கள் பிரானார் நெருப்பு உரு ஆகி நிகழ்ந்து நின்றாரே. |
6 | நந்தி பெருமான் நடுவுள் வியோமத்து வந்து என் அகம் படி கோயில் கொண்டான் கொள்ள எந்தை வந்தான் என்று எழுந்தேன் எழுதலும் சிந்தையின் உள்ளே சிவன் இருந்தானே. |
7 | தன்மை வல்லோனைத் தத்துவத்துள் நலத்தினை நன்மை வல்லோனை நடுவுறை நந்தியைப் புன்மை பொய்யாதே புனிதனை நாடுமின் பன்மையில் உம்மைப் பரிசு செய்வானே. |
8 | தொடர்ந்து நின்றான் என்னைச் சோதிக்கும் போது தொடர்ந்து நின்றான் அல்ல நாதனும் அங்கே படர்ந்து நின்று ஆதிப் பராபரன் எந்தை கடந்து நின்று அவ்வழி காட்டு கின்றானே. |
9 | அவ்வழி காட்டும் அமரர்க்கு அரும்பொருள் இவ்வழி தந்தை தாய் கேள் யான் ஒக்கும் செவ்வழி சேர் சிவலோகத்து இருந்திடும் இவ்வழி நந்தி இயல்பு அது தானே. |
10 | எறிவது ஞானத்து உறைவாள் உருவி அறிவு அதனோடே அவ் ஆண் தகையானைச் செறிவது தேவர்க்குத் தேவர் பிரானைப் பறிவது பல் கணப் பற்று விட்டாரே. |
11 | ஆதிப்பிரான் தந்த வாள் அங் கைக் கொண்டபின் வேதித்து என்னை விலக்க வல்லார் இல்லை சோதிப்பன் அங்கே சுவடு படா வண்ணம் ஆதிக் கண் தெய்வம் அவன் இவன் ஆமே. |
12 | அந்தக் கருவை அருவை வினை செய்தல் பந்தம் பணி அச்சம் பல் பிறப்பும் வாட்டிச் சிந்தை திருத்தலும் சேர்ந்தார் அச்சோதனை சந்திக்கத் தற்பரம் ஆகும் சதுரர்க்கே. |
ஒன்பதாம் தந்திரம் 1. குருமட தரிசனம் |
1 | பலியும் அவியும் பரந்து புகையும் ஒலியும் எம் ஈசன் தனக்கு என்றே உள்கிக் குவியும் குருமடம் கண்டவர் தாம் போய்த் தளிரும் மலர் அடி சார்ந்து நின்றாரே. |
2 | இவன் இல்லம் அல்லது அவனுக்கு அங்கு இல்லை அவனுக்கும் வேறு இல்லம் உண்டா அறியின் அவனுக்கு இவன் இல்லம் என்று என்று அறிந்தும் அவனைப் புறம்பு என்று அரற்று கின்றாரே. |
3 | நாடும் பெரும் துறை நான் கண்டு கொண்டபின் கூடும் சிவனது கொய் மலர்ச் சேவடி தேட அரியன் சிறப்பு இலி எம் இறை ஓடும் உலகு உயிராகி நின்றானே. |
4 | இயம்புவன் ஆசனத் தோடு மலையும் இயம்புவன் சித்தக் குகையும் இடமும் இயம்புவன் ஆதாரத் தோடு வனமும் இயம்புவன் ஈரா இரு நிலத்தோர்க்கே. |
5 | முகம் பீடம் ஆம் மடம் உன்னிய தேயம் அகம் பர வர்க்கமே ஆசு இல் செய் காட்சி அகம் பரம் ஆதனம் எண் எண் கிரியை சிதம்பரம் தற்குகை ஆதாரம் தானே. |
6 | ஆக முகம் ஆம் பீடம் ஆதாரம் ஆகும் சக முகம் ஆம் சத்தி ஆதனம் ஆகும் செகமுகம் ஆம் தெய்வமே சிவம் ஆகும் அக முகம் ஆய்ந்த அறிவு உடையோர்க்கே. |
7 | மாயை இரண்டு மறைக்க மறை உறும் காயம் ஓர் ஐந்தும் கழியத் தான் ஆகியே தூய பரம் சுடர் தோன்றச் சொரூபத்து உள் ஆய் பவர் ஞான ஆதி மோனத்தர் ஆமே. |
2. ஞானகுரு தரிசனம் |
1 | ஆறொடு முப்பதும் அங்கே அடங்கிடில் கூறக் குருபரன் கும்பிடு தந்திடும் வேறே சிவ பதம் மேலாய் அளித்திடும் பேறு ஆக ஆனந்தம் பேணும் பெருகவே. |
2 | துரியங்கள் மூன்றும் கடந்து ஒளிர் சோதி அரிய பரசிவம் யாவையும் ஆகி விரிவு குவிவற விட்ட நிலத்தே பெரிய குருபதம் பேச ஒண்ணாதே. |
3 | ஆயன நந்தி அடிக்கு என் தலை பெற்றேன் வாயன நந்தியை வாழ்த்த என் வாய் பெற்றேன் காயன நந்தியைக் காண என் கண் பெற்றேன் சேயன நந்திக்கு என் சிந்தை பெற்றேனே. |
4 | கருடன் உருவம் கருதும் அளவில் பருவிடம் தீர்ந்து பயம் கெடு மா போல் குருவின் உருவம் குறித்த அப்போதே திரிமலம் தீர்ந்து சிவன் அவன் ஆமே. |
5 | தோன்ற அறிதலும் தோன்றல் தோன்றாமையும் ஆன்ற அறிவும் அறிநனவு ஆதிகள் மூன்று அவை நீங்கும் துரியங்கள் மூன்று அற ஊன்றிய நந்தி உயர் மோனத் தானே. |
6 | சந்திர பூமிக்கு உடன் புருவத்து இடைக் கந்த மலரில் இரண்டு இதழ்க் கன்னியும் பந்தம் இலாத பளிங்கின் உருவினள் பந்தம் அறுத்த பரம் குரு பற்றே. |
7 | மனம் புகுந்தான் உலகு ஏழும் மகிழ நிலம் புகுந்தான் நெடுவான் நிலம் தாங்கிச் சினம் புகுந்தான் திசை எட்டும் நடுங்க வனம் புகுந்தான் ஊர் வடக்கு என்பதாமே. |
8 | தான் ஆன வண்ணமும் கோசமும் சார் தரும் தான் ஆம் பறவை வனம் எனத் தக்கன தான் ஆன சோடச மார்க்கம் தான் நின்றிடில் தான் ஆம் தசாங்கமும் வேறு உள்ள தானே. |
9 | மருவிப் பிரிவு அறியா எங்கள் மா நந்தி உருவ நினைக்க நின்று உள்ளே உருக்கும் கருவில் கரந்து உள்ளம் காண வல்லார்க்கு இங்கு அருவினை கண் சோரும் அழிவார் அகத்தே. |
10 | தலைப் படலாம் எங்கள் தத்துவன் தன்னைப் பலப் படு பாசம் அறுத்து அறுத்து இட்டு நிலைப் பெற நாடி நினைப்பு அற உள்கில் தலைப் படல் ஆகும் தருமமும் தானே. |
11 | நினைக்கின் நினைக்கும் நினைப்பவர் தம்மைச் சுனைக்குள் விளை மலர் சோதியினானைத் தினைப் பிளந்து அன்ன சிறுமையர் ஏனும் கனத்த மனத்து அடைந்தால் உயர்ந்தாரே. |
12 | தலைப்படும் காலத்துத் தத்துவன் தன்னை விலக்கு உறின் மேலை விதி என்றும் கொள்க அனைத்து உலகாய் நின்ற ஆதிப் பிரானை நினைப்பு உறுவார் பத்தி நேடிக் கொள்வாரே. |
13 | நகழ்வு ஒழிந்தார் அவர் நாதனை உள்கி நிகழ்வு ஒழிந்தார் எம் பிரானொடும் கூடித் திகழ்வு ஒழிந்தார் தங்கள் சிந்தையின் உள்ளே புகழ் வழி காட்டிப் புகுந்து நின்றானே. |
14 | வந்த மரகத மாணிக்க ரேகை போல் சந்திடும் மா மொழிச் சற்குரு சன்மார்க்கம் இந்த ரேகை இலாடத்தின் மூலத்தே சுந்தரச் சோதியுள் சோதியும் ஆமே. |
15 | உண்ணும் வாயும் உடலும் உயிரும் ஆய்க் கண்ணுமா யோகக் கடவுள் இருப்பது மண்ணுநீர் அனல் காலொடு வானும் ஆய் விண்ணும் இன்றி வெளி ஆனோர் மேனியே. |
16 | பரசு பதி என்று பார் முழுது எல்லாம் பரசிவன் ஆணை நடக்கும் பாதியால் பெரிய பதி செய்து பின் ஆம் அடியார்க்கு உரிய பதியும் பார் ஆக்கி நின்றானே. |
17 | அம்பர நாதன் அகல் இட நீள் பொழில் தம்பரம் அல்லது தாம் அறியோம் என்பர் உம்பருள் வானவர் தானவர் கண்டிலர் எம்பெருமான் அருள் பெற்று இருந்தாரே. |
18 | கோ வணங்கும் படி கோவணம் ஆகிப் பின் நா வணங்கும் படி நந்தி அருள் செய்தான் தே வணங்கோம் இனிச் சித்தம் தெளிந்தனம் போய் வணங்கும் பொருளாய் இருந்தோமே. |
3. பிரணவ சமாதி |
1 | தூலப் பிரணவம் சொரூப ஆனந்தப் பேர் உரை பாலித்த சூக்கும மேலைச் சொரூபப் பெண் ஆலித்த முத்திரை ஆம் அதில் காரணம் மேலைப் பிரணவம் வேத அந்த வீதியே. |
2 | ஓம் எனும் ஓங்காரத்து உள்ளே ஒருமொழி ஓம் எனும் ஓங்காரத்து உள்ளே உருவரு ஓம் எனும் ஓங்காரத்து உள்ளே பல பேதம் ஓம் எனும் ஓங்காரம் ஒண் முத்தி சித்தியே. |
3 | ஓங்காரத்து உள்ளே உதித்த ஐம் பூதங்கள் ஓங்காரத்து உள்ளே உதித்த சரா சரம் ஓங்காரா தீதத்து உயிர் மூன்றும் உற்றன ஓங்கார சீவ பர சிவ ரூபமே. |
4 | வருக்கம் சுகம் ஆம் பிரமமும் ஆகும் அருக்கம் சரா சரம் ஆகும் உலகில் தருக்கிய ஆதாரம் எல்லாம் தன் மேனி சுருக்கம் இன் ஞானம் தொகுத்து உணர்ந்தோரே. |
5 | மலையு மனோ பவம் அருள்வன ஆவன நிலையில் தரிசனம் தீப நெறி ஆம் தலமும் குலமும் தவம் சித்தம் ஆகும் நலமும் சன் மார்க்கத்து உபதேசம் தானே. |
6 | சோடச மார்க்கமும் சொல்லும் சன் மார்க்கி கட்கு ஆடிய ஈற் ஆறின் அந்தமும் ஈர் ஏழில் கூடிய அந்தமும் கோதண்டமும் கடந்து ஏறிய ஞான ஞேயாந் தத்து இருக்கவே. |
4. ஒளி |
1 | ஒளியை அறியில் உருவும் ஒளியும் ஒளியும் உருவம் அறியில் உருவாம் ஒளியின் உருவம் அறியில் ஒளியே ஒளியும் உருக உடன் இருந்தானே. |
2 | புகல் எளிது ஆகும் புவனங்கள் எட்டும் அகல் ஒளிதாய் இருள் ஆசு அற வீசும் பகல் ஒளி செய்தது அத் தாமரை யிலே இகல் ஒளி செய்து எம்பிரான் இருந்தானே. |
3 | விளங்கு ஒளி அங்கி விரிகதிர் சோமன் துளங்கு ஒளி பெற்றன சோதி அருள வளங்கு ஒளி பெற்றதே பேர் ஒளி வேறு களங்கு ஒளி செய்து கலந்து நின்றானே. |
4 | இளங்கு ஒளி ஈசன் பிறப்பு ஒன்றும் இல்லி துளங்கு ஒளி ஞாயிறும் திங்களும் கண்கள் வளங்கு ஒளி அங்கியும் அற்றைக் கண் நெற்றி விளங்கு ஒளி செய்கின்ற மெய் காயம் ஆமே. |
5 | மேல் ஒளி கீழ் அதன் மேவிய மாருதம் பால் ஒளி அங்கி பரந்து ஒளி ஆகாசம் நீர் ஒளி செய்து நெடுவிசும்பு ஒன்றிலும் மேல் ஒளி ஐந்தும் ஒருங்கு ஒளி ஆமே. |
6 | மின்னிய தூ ஒளி மே தக்க செவ் ஒளி பன்னிய ஞானம் பரந்த பரத்து ஒளி துன்னிய வாறு ஒளி தூய் மொழி நாள் தொறும் உன்னிய வாறு ஒளி ஒத்தது தானே. |
7 | விளங்கு ஒளி மின் ஒளி ஆகிக் கரந்து துளங்கு ஒளி ஈசனைச் சொல்லும் எப்போதும் உளங்கு ஒளி ஊன் இடை நின்று உயிர்க்கின்ற வளங்கு ஒளி எங்கும் மருவி நின்றானே. |
8 | விளங்கு ஒளி அவ் ஒளி அவ் இருள் மன்னும் துளங்கு ஒளியான் தொழுவார்க்கும் ஒளியான் அளங்கு ஒளி ஆர் அமுதாக நம் சாரும் களங்கு ஒளி ஈசன் கருத்து அது தானே. |
9 | இலங்கியது எவ் ஒளி அவ் ஒளி ஈசன் துலங்கு ஒளி போல்வது தூங்கு அருள் சத்தி விளங்கு ஒளி மூன்றே விரிசுடர் தோன்றி உளங்கு ஒளி உள்ளே ஒருங்கு கின்றானே. |
10 | உளங்கு ஒளி ஆவது என் உள்நின்ற சீவன் வளங்கு ஒளியாய் நின்ற மா மணிச்சோதி விளங்கு ஒளியாய் மின்னி விண்ணில் ஒடுங்கி வளங்கு ஒளி ஆயத்து உளாகி நின்றானே. |
11 | விளங்கு ஒளியாய் நின்ற விகிர்தன் இருந்த துளங்கு ஒளி பாசத்துள் தூங்கு இருள் சேராக் களங்கு இருள் நட்டமே கண் நுதல் ஆட விளங்கு ஒளி உன் மனத்து ஒன்றி நின்றானே. |
12 | போது கருங் குழல் போனவர் தூது இடை ஆதி பரத்தை அமரர் பிரானொடும் சோதியும் அண்டத்து அப்பால் உற்ற தூ ஒளி நீதியின் அல் இருள் நீக்கிய வாறே. |
13 | உண்டு இல்லை என்னும் உலகத்து இயல்வது பண்டு இல்லை என்னும் பரம் கதி உண்டு கொல் கண்டு இல்லை மானுடர் கண்ட கருத்து உறில் விண்டு இல்லை உள்ளே விளக்கு ஒளி ஆமே. |
14 | சுடர் உற ஓங்கிய ஒள் ஒளி ஆங்கே படர் உறு காட்சிப் பகலவன் ஈசன் அடர் உறு மாயையின் ஆர் இருள் வீசில் உடல் உறு ஞானத் துறவியன் ஆமே. |
15 | ஒளி பவளத் திருமேனி வெண்ணீற்றன் அளி பவளச் செம்பொன் ஆதிப் பிரானும் களி பவளத்தினன் கார் இருள் நீங்கி ஒளி பவளத்து என்னோடு ஈசன் நின்றானே. |
16 | ஈசன் நின்றான் இமையோர்கள் நின்றார் நின்ற தேசம் ஒன்று இன்றித் தகைத்து இழைக்கின்றார் பாசம் ஒன்று ஆகப் பழவினைப் பற்று அற வாசம் ஒன்று ஆம் மலர் போன்றது தானே. |
17 | தானே இருக்கும் அவற்றில் தலைவனும் தானே இருக்கும் அவன் என நண்ணிடும் வானாய் இருக்கும் இம்மா இரு ஞாலத்துப் பானாய் இருக்கப் பரவலும் ஆமே. |
5. தூல பஞ்சாக்கரம் |
1 | ஐம்பது எழுத்தே அனைத்து வேதங்களும் ஐம்பது எழுத்தே அனைத்து ஆகமங்களும் ஐம்பது எழுத்தின் அடைவை அறிந்த பின் ஐம்பது எழுத்தே அஞ்சு எழுத்து ஆமே. |
2 | அகார முதல் ஆக ஐம்பத்து ஒன்று ஆகி உகார முதல் ஆக ஓங்கி உதித்து மகார இறுதியாய் மாய்ந்து மாய்ந்து ஏறி நகார முதல் ஆகும் நந்தி தன் நாமமே. |
3 | அகர ஆதி ஈர் எண் கலந்த பரையும் உகர ஆதி தன் சத்தி உள் ஒளி ஈசன் சிகர ஆதி தான் சிவ வேதமே கோண நகர ஆதி தான் மூல மந்திரம் நண்ணுமே. |
4 | வாயொடு கண்டம் இதயம் மருவு உந்தி ஆய இலிங்கம் அவற்றின் மேலே அவ்வாய்த் தூயது ஓர் துண்டம் இருமத்து அகம் செல்லல் ஆயது ஈறாம் ஐந்தோடு ஆம் எழுத்து அஞ்சுமே. |
5 | கிரணங்கள் ஏழும் கிளர்ந்து எரி பொங்கிக் கரணங்கள் விட்டு உயிர் தான் எழும் போது மரணம் கை வைத்து உயிர் மாற்றிடும் போதும் அரணம் கை கூட்டுவது அஞ்சு எழுத்து ஆமே. |
6 | ஞாயிறு திங்கள் நவின்று எழு காலத்தில் ஆய் உறு மந்திரம் ஆரும் அறிகிலர் சேய் உறு கண்ணி திரு எழுத்து அஞ்சையும் வாய் உற ஓதி வழுத்தலும் ஆமே. |
7 | குருவழி ஆய குணங்களின் நின்று கருவழி ஆய கணக்கை அறுக்க வரும் வழி மாள மறுக்க வல்லார் கட்கு அருள்வழி காட்டுவது அஞ்சு எழுத்து ஆமே. |
8 | வெறிக்க வினைத் துயர் வந்திடும் போது செறிக்கின்ற நந்தி திரு எழுத்து ஓதும் குறிப்பது உன்னில் குரை கழல் கூட்டும் குறிப்பு அறிவான் தவம் கோன் உரு ஆமே. |
9 | நெஞ்சு நினைந்து தம் வாயால் பிரான் என்று துஞ்சும் பொழுது உன் துணைத் தாள் சரண் என்று மஞ்சு தவழும் வடவரை மீது உறை அஞ்சில் இறைவன் அருள் பெறல் ஆமே. |
10 | பிரான் வைத்த ஐந்தின் பெருமை உணராது இரா மாற்றம் செய்வார் கொல் ஏழை மனிதர் பரா முற்றும் கீழொடு பல்வகை யாலும் அரா முற்றும் சூழ்ந்த அகல் இடம் தானே. |
6. சூக்கும பஞ்சாக்கரம் |
1 | எளிய வாது செய்வார் எங்கள் ஈசனை ஒளியை உன்னி உருகு மனத்தர் ஆய்த் தெளிய ஓதிச் சிவாய நம என்னும் குளிகை இட்டுப் பொன் ஆக்குவன் கூட்டையே. |
2 | சிவன் சத்தி சீவன் செறு மல மாயை அவம் சேர்த்த பாச மலம் ஐந்து அகலச் சிவன் சத்தி தன்னுடன் சீவனார் சேர அவம் சேர்த்த பாசம் அணுக கிலாவே. |
3 | சிவன் அருள் ஆய சிவன் திரு நாமம் சிவன் அருளான் மாத் திரோத மலமாயை சிவன் முதல் ஆகச் சிறந்து நிரோதம் பவம் அது அகன்று பரசிவன் ஆமே. |
4 | ஓதிய நம் மலம் எல்லாம் ஒழித்திட்டு அவ் வாதி தனை விட்டு இறை அருள் சத்தியால் தீது இல் சிவஞான யோகமே சித்திக்கும் ஓதும் சிவாய மலம் அற்ற உண்மையே. |
5 | தெள்ளமுது ஊறச் சிவாய நம என்று உள்ளமுது ஊற ஒருகால் உரைத்திடும் வெள்ளமுது ஊறல் விரும்பி உண்ணாதவர் துள்ளிய நீர்போல் சுழல்கின்றவாறே. |
6 | நம ஆதி நனஆதி திரோதாயி ஆகித் தம் ஆதியாய் நிற்கத் தான் அந்தத்து உற்றுச் சமாதித் துரியம் தமது ஆகம் ஆகவே நமஆதி சமாதி சிவ ஆதல் எண்ணவே. |
7 | அருள் தரு மாயமும் அத்தனும் தம்மில் ஒருவனை ஈன்றவள் உள்ளுறு மாயை திரி மலம் நீங்கிச் சிவாய என்று ஓதும் அருவினை தீர்ப்பதும் அவ் எழுத்து ஆமே. |
8 | சிவ சிவ என்றே தெளிகிலர் ஊமர் சிவ சிவ வாயுவும் தேர்ந்து உள் அடங்கச் சிவ சிவ ஆய தெளிவின் உள்ளார்கள் சிவ சிவ ஆகும் திரு அருள் ஆமே. |
9 | சிவ சிவ என்கிலர் தீ வினை யாளர் சிவ சிவ என்றிடத் தீவினை மாளும் சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர் சிவ சிவ என்னச் சிவகதி தானே. |
10 | நம என்னும் நாமத்தை நாவில் ஒடுக்கிச் சிவம் என்னும் நாமத்தைச் சிந்தை உள் ஏற்றப் பவம் அது தீரும் பரிசும் அது அற்றால் அவமதி தீரும் அறும் பிறப்பு அன்றோ. |
7. அதி சூக்கும பஞ்சாக்கரம் |
1 | சிவாய நம எனச் சித்தம் ஒருக்கி அவாயம் அறவே அடிமை அது ஆக்கிச் சிவாய சிவ சிவ என்று என்றே சிந்தை அவாயம் கெட நிற்க ஆனந்தம் ஆமே. |
2 | செஞ் சுடர் மண்டலத்து ஊடு சென்று அப்புறம் அஞ்சணவும் முறை ஏறி வழிக் கொண்டு துஞ்சும் அவன் சொன்ன காலத்து இறைவனை நெஞ்சு என நீங்கா நிலை பெறல் ஆகுமே. |
3 | அங்கமும் ஆகம வேதம் அது ஓதினும் எங்கள் பிரான் எழுத்து ஒன்றில் இருப்பது சங்கை கெட்ட அவ் எழுத்து ஒன்றையும் சாதித்தால் அங்கரை சேர்ந்த அரும் கலம் ஆமே. |
4 | நாய் ஓட்டு மந்திரம் நான்மறை வேதம் நாய் ஓட்டு மந்திரம் நாதன் இருப்பிடம் நாய் ஓட்டு மந்திரம் நாதாந்த சோதி நாய் ஓட்டு மந்திரம் நாமறியோம் அன்றே. |
5 | பழுத்தன ஐந்தும் பழமறை உள்ளே விழித்து அங்கு உறங்கும் வினை அறிவார் இல்லை எழுத்து அறிவோம் என்று உரைப்பார்கள் ஏதர் எழுத்தை அழுத்தும் எழுத்து அறியாரே. |
8. திருக்கூத்துத் தரிசனம் |
1 | எங்கும் திருமேனி எங்கும் சிவ சத்தி எங்கும் சிதம்பரம் எங்கும் திரு நட்டம் எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கு எங்கும் தங்கும் சிவன் அருள் தன் விளையாட்டு அதே. |
2 | சிற்பரம் சோதி சிவ ஆனந்தக் கூத்தனைச் சொல் பதம் ஆம் அந்தச் சுந்தரக் கூத்தனைப் பொன் பதிக் கூத்தனைப் பொன் தில்லைக் கூத்தனை அற்புதக் கூத்தனை யார் அறிவாரே. |
சிவானந்தக் கூத்து |
1 | தான் அந்தம் இல்லாச் சதானந்த சத்தி மேல் தேன் உந்தும் ஆனந்த மா நடம் கண்டீர் ஞானம் கடந்து நடம் செய்யும் நம்பிக்கு அங்கு ஆனந்தக் கூத்து ஆட ஆட அரங்கு ஆனதே. |
2 | ஆனந்தம் ஆடு அரங்கம் ஆனந்தம் பாடல்கள் ஆனந்தம் பல் இயம் ஆனந்த வாச்சியம் ஆனந்தம் ஆக அகில சராசரம் ஆனந்தம் ஆனந்தக் கூத்து உகந்தானுக்கே. |
3 | ஒளி ஆம் பரமும் உளது ஆம் பரமும் அளியார் சிவகாமி ஆகும் சமயக் களியார் பரமும் கருதுறை அந்தத் தெளிவு ஆம் சிவ ஆனந்த நட்டத்தின் சித்தியே. |
4 | ஆன நடம் ஐந்து அகள சகளத்தர் ஆன நடம் ஆடி ஐங் கருமத்து ஆக ஆன தொழில் அருளால் ஐந் தொழில் செய்தே தேன் மொழி பாகன் திரு நடம் ஆடுமே. |
5 | பூதாண்ட பேதாண்ட போகாண்ட யோகாண்ட மூதாண்ட முத்தாண்ட மோகாண்ட தேகாண்ட தாகாண்ட ஐங் கருமத்து ஆண்ட தற்பரம் தேகாந்தம் ஆம் பிரமாண்டத்த என்பவே. |
6 | வேதங்கள் ஆட மிகு ஆகமம் ஆடக் கீதங்கள் ஆடக் கிளர் அண்டம் ஏழ் ஆடப் பூதங்கள் ஆடப் புவனம் முழுது ஆட நாதம் கொண்டு ஆடினான் ஞான ஆனந்தக் கூத்தே. |
7 | பூதாண்ட பேதாண்ட போகாண்ட யோகாண்ட மூதாண்ட முத்தாண்ட மோகாண்ட தேகாண்ட தாகாண்ட மைங்கரு மத்தாண்ட தற்பரத்து ஏகாந்தமாம் பிரமாண்டத்த என்பவே. |
8 | வேதங்கள் ஓட மிகு ஆகமம் ஆடக் கீதங்கள் ஆடக் கிளர் அண்டம் ஏழு ஆடப் பூதங்கள் ஆடப் புவன முழுது ஆட நாதம் கொண்டு ஆடினான் ஞானானந்தக் கூத்தே. |
9 | பூதங்கள் ஐந்தில் பொறியில் புலன் ஐந்தில் வேதங்கள் ஐந்தின் மிகும் ஆகமம் தன்னில் ஓதும் கலை காலம் ஊழியுடன் அண்டப் போதங்கள் ஐந்தில் புணர்ந்து ஆடும் சித்தனே. |
10 | தேவர் சுரர் நரர் சித்தர் வித்தியா தரர் மூவர்கள் ஆதியின் முப்பத்து மூவர்கள் தாபதர் சத்தர் சமயம் சரா சரம் யாவையும் ஆடிடும் எம் இறை ஆடவே. |
சுந்தரக் கூத்து |
1 | அண்டங்கள் ஏழினுக்கு அப்புறத்து அப்பால் உண்டு என்ற சத்தி சதா சிவத்து உச்சி மேல் கண்டம் கரியான் கருணை திரு உருக் கொண்டு அங்கு உமை காணக் கூத்து உகந்தானே. |
2 | கொடு கொட்டி பாண்டரம் கோடு சங்கார நடம் எட்டோடு ஐந்து ஆறு நாடி உள் நாடும் திடம் உற்று எழும் தேவ தாரு ஆம் தில்லை வடம் உற்றமாவனம் மன்னவன் தானே. |
3 | பரமாண்டத்து ஊடே பரா சத்தி பாதம் பரமாண்டத்து ஊடே படர் ஒளி ஈசன் பரமாண்டத்து ஊடே படர் தரு நாதம் பரமாண்டத்து ஊடே பரன் நடம் ஆடுமே. |
4 | அங்குசம் என்ன எழு மார்க்கம் போதத்தில் தங்கியது ஒந்தி எனும் தாள ஒத்தினில் சங்கரன் மூல நாடிக்குள் தரித்து ஆடல் பொங்கிய காலம் புகும் போகல் இல்லையே. |
5 | ஆனத்து ஆடிப் பின் நவக் கூத்து ஆடிக் கானத்து ஆடிக் கருத்தில் தரித்து ஆடி மூனச் சுழுனையுள் ஆடி முடிவு இல்லா ஞானத்துள் ஆடி முடித்தான் என் நாதனே. |
6 | சத்திகள் ஐந்தும் சிவ பேதம் தான் ஐந்தும் முத்திகள் எட்டும் முதல் ஆம் பதம் எட்டும் சித்திகள் எட்டும் சிவ பதம் தான் எட்டும் சுத்திகள் எட்டு ஈசன் தொல் நடம் ஆடுமே. |
7 | மேகங்கள் ஏழும் விரி கடல் தீவு ஏழும் தேகங்கள் ஏழும் சிவ பாற் கரன் ஏழும் தாகங்கள் ஏழும் சாந்திகள் ஏழும் ஆகின்ற நந்தி அடிக் கீழ் அடங்குமே. |
பொன்பதிக் கூத்து |
1 | தெற்கு வடக்குக் கிழக்கு மேற்கு உச்சியில் அற்புதம் ஆனது ஓர் அஞ்சு முகத்திலும் ஒப்பு இல் பேர் இன்பத்து உபய உபயத்துள் தற்பரன் நின்று தனிநடம் செய்யுமே. |
2 | அடியார் அரன் அடி ஆனந்தம் கண்டோர் அடியார் ஆனவர் அத்தர் அருள் உற்றோர் அடியார் பவரே அடியவர் ஆம் ஆல் அடியார் பொன் அம்பலத்து ஆடல் கண்டாரே. |
3 | அடங்காத என்னை அடக்கி அடி வைத்து இடம் காண் பர ஆனந்தத்தே என்னை இட்டு நடந்தான் செயும் நந்தி நல் ஞானக் கூத்தன் படம்தான் செய்து உள் உடனே படிந்து இருந்தானே. |
4 | உம்பரில் கூத்தனை உத்தமக் கூத்தனைச் செம்பொன் திரு மன்றுள் சேவகக் கூத்தனைச் சம்பந்தக் கூத்தனைத் தற்பரக் கூத்தனை இன்பு உற நாடி என் அன்பில் வைத்தேனே. |
5 | மாணிக்கக் கூத்தனை வண் தில்லைக் கூத்தனைப் பூண் உற்ற மன்றுள் புரிசடைக் கூத்தனைச் சேண் உற்ற சோதிச் சிவ ஆனந்தக் கூத்தனை ஆணிப் பொன் கூத்தனை யார் உரைப் பாரே. |
6 | விம்மும் வெருவும் விழும் எழும் மெய் சோரும் தம்மையும் தாம் அறியார்கள் சதுர் கெடும் செம்மை சிறந்த திரு அம்பலக் கூத்துள் அம் மலர்ப் பொன் பாதத்து அன்பு வைப்பார் கட்கே. |
7 | தேட்டு அறும் சிந்தை திகைப்பு அறும் பிண்டத்து உள் வாட்டு அறும் கால் புந்தி ஆகி வரும் புலன் ஓட்டு அறும் ஆசை அறும் உளத்து ஆனந்த நாட்டம் உறும் குறு நாடகம் காணவே. |
8 | காளியோடு ஆடிக் கனகா சலத்து ஆடிக் கூளியோடு ஆடிக் குவலயத்தே ஆடி நீடிய நீர் தீ கால் நீள் வான் இடை ஆடி நாள் உற அம்பலத்தே ஆடும் நாதனே. |
9 | மேரு நடு நாடி மிக்கு இடை பிங்கலை கூரும் இவ் வானின் இலங்கைக் குறி உறும் சாரும் திலை வனத் தண் மா மலையத்து ஊடு ஏறும் சுழுனை இவை சிவ பூமியே. |
பொற்றில்லைக் கூத்து |
1 | பூதல மேருப் புறத்து ஆன தெக்கணம் ஓதும் இடை பிங்கலை ஒண் சுழுனை ஆம் பாதி மதியோன் பயில் திரு அம்பலம் ஏதம் இல் பூதாண்டத்து எல்லையின் ஈறே. |
2 | அண்டங்கள் ஓர் ஏழும் அம் பொன் பதி ஆகப் பண்டை ஆகாசங்கள் ஐந்தும் பதி ஆகத் தெண்டினில் சத்தி திரு அம்பலம் ஆகக் கொண்டு பரம் சோதி கூத்து உகந்தானே. |
3 | குரானந்த ரேகையாய்க் கூர்ந்த குணம் ஆம் சிரானந்தம் பூரித்துத் தென் திசை சேர்ந்து புரானந்த போகனாய்ப் பூவையும் தானும் நிரானந்தம் ஆகி நிருத்தம் செய்தானே. |
4 | ஆதி பரன் ஆட அங் கைக் கனல் ஆட ஓதும் சடை ஆட உன்மத்தம் உற்று ஆடப் பாதி மதி ஆடப் பார் அண்டம் மீது ஆட நாத மோடு ஆடினான் நாத அந்த நட்டமே. |
5 | கும்பிட அம்பலத்து ஆடிய கோன் நடம் அம்பரன் ஆடும் அகிலாண்ட நட்டம் ஆம் செம் பொருளாகும் சிவலோகம் சேர்ந்து உற்றால் உம்பர மோன ஞான அந்தத்தில் உண்மையே. |
6 | மேதினி மூ ஏழ் மிகும் அண்டம் ஓர் ஏழு சாதகம் ஆகும் சமயங்கள் நூற்று எட்டு நாதமோடு அந்த நடானந்த நாற்பதப் பாதியோடு ஆடிப் பரன் இரு பாதமே. |
7 | இடை பிங்கலை இம வானோடு இலங்கை நடு நின்ற மேரு நடு ஆம் சுழுனை கடவும் திலை வனம் கை கண்ட மூலம் படர் ஒன்றி என்னும் பரம் ஆம் பரமே. |
8 | ஈறு ஆன கன்னி குமரியே காவிரி வேறா நவ தீர்த்தம் மிக்கு உள்ள வெற்பு ஏழுள் பேறு ஆன வேத ஆகமமே பிறத்தலான் மாறாத தென் திசை வையகம் சுத்தமே. |
9 | நாதத்தினில் ஆடி நார் பதத்தே ஆடி வேதத்தில் ஆடித் தழல் அந்தம் மீது ஆடி போதத்தில் ஆடிப் புவனம் முழுதும் ஆடும் தீது அற்ற தேவாதி தேவர் பிரானே. |
10 | தேவரோடு ஆடித் திரு அம்பலத்து ஆடி மூவரோடு ஆடி முனி சனத்தோடு ஆடிப் பாவின் உள் ஆடிப் பரா சத்தியில் ஆடிக் கோவின் உள் ஆடிடும் கூத்த பிரானே. |
11 | ஆறு முகத்தில் அதிபதி நான் என்றும் கூறு சமயக் குருபரன் நான் என்றும் தேறினர் தெற்குத் திரு அம்பலத்து உள்ளே வேறு இன்றி அண்ணல் விளங்கி நின்றானே. |
12 | அம்பலம் ஆடு அரங்கு ஆக அதன் மீதே எம் பரன் ஆடும் இரு தாளின் ஈர் ஒளி உம் பரம் ஆம் ஐந்து நாதத்து ரேகையுள் தம் பதம் ஆய் நின்று தான் வந்து அருளுமே. |
13 | ஆடிய காலும் அதில் சிலம்பு ஓசையும் பாடிய பாட்டும் பல ஆன நட்டமும் கூடிய கோலம் குருபரன் கொண்டு ஆடத் தேடி உளே கண்டு தீர்ந்து அற்ற வாறே. |
14 | இருதயம் தன்னில் எழுந்த பிராணன் கர சரண் ஆதி கலக்கும் படியே அர தனம் மன்றினின் மாணிக்கக் கூத்தன் குரவனாய் எங்கணும் கூத்து உகந்தானே. |
அற்புதக் கூத்து |
1 | குரு உரு அன்றிக் குனிக்கும் உருவம் அரு உரு ஆவதும் அந்த அருவே திரிபுரை ஆகித் திகழ் தரு வாளும் உரு அருவு ஆகும் உமை அவள் தானே. |
2 | திரு வழி ஆவது சிற்றம் பலத்தே குரு வடிவு உள்ளாக் குனிக்கும் உருவே உருவு அருவு ஆவது முற்றும் உணர்ந்தோர்க்கு அருள் வழி ஆவதும் அவ்வழி தானே. |
3 | நீரும் சிரசு இடை பன்னிரண்டு அங்குலம் ஓடும் உயிர் எழுத்து ஓங்கி உதித்திட நாடு மின் நாத அந்த நம் பெருமான் உகந்து ஆடும் இடம் திரு அம்பலம் தானே. |
4 | வளி மேக மின் வில்லு வானக ஓசை தெளிய விசும்பில் திகழ்தரு வாறு போல் களி ஒளி ஆறும் கலந்து உடன் வேறாய் ஒளி உரு ஆகி ஒளித்து நின்றானே. |
5 | தீ முதல் ஐந்தும் திசை எட்டும் கீழ் மேலும் ஆயும் அறிவினுக்கு அப்புறம் ஆனந்தம் மாயை மா மாயை கடந்து நின்றார் காண நாயகன் நின்று நடம் செய்யும் ஆறே. |
6 | கூத்தன் கலந்திடும் கோல் வளையா ளொடும் கூத்தன் கலந்திடும் கோது இலா ஆனந்தம் கூத்தன் கலந்திடும் கோது இலா ஞானத்துக் கூத்தனும் கூத்தியும் கூத்து அதின் மேலே. |
7 | இடம் கொண்ட சத்தியும் எந்தை பிரானும் நடம் கொண்டு நின்றமை நானும் அறிந்தேன் படம் கொடு நின்ற இப் பல் உயிர்க்கு எல்லாம் அடங்கலும் தாம் ஆய் நின்று ஆடு கின்றாரே. |
8 | சத்தி வடிவு சகல ஆனந்தமும் ஒத்த ஆனந்தம் உமை அவள் மேனி ஆம் சத்தி வடிவு சகளத்து எழும் திரண்டு ஒத்த ஆனந்தம் ஒரு நடம் ஆமே. |
9 | நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி உற்று உற்றுப் பார்க்க ஒளி விடும் மந்திரம் பற்றுக்குப் பற்று ஆய்ப் பரமன் இருந் திடம் சிற்றம் பலம் என்று சேர்ந்து கொண்டேனே. |
10 | அண்டங்கள் தத்துவம் ஆகிச் சதா சிவம் தண்டினில் சாத்தவி சாம்பவி ஆதனம் தெண்டினில் ஏழும் சிவ ஆசனம் ஆகவே கொண்டு பரஞ்சோதி கூத்து உகந்தானே. |
11 | மன்று நிறைந்த விளக்கு ஒளி மா மலர் நன்று இது தான் இதழ் நாலொடு நூறு அவை சென்றது தான் ஒரு பத்து இரு நூறு உள நின்றது தான் நெடு மண்டலம் ஆமே. |
12 | அண்டம் எழு கோடி பிண்டம் எழு கோடி தெண் திரை சூழ்ந்த திசைகள் எழு கோடி எண் திசை சூழ்ந்த இலிங்கம் எழு கோடி அண்ட நடம் செயும் ஆலயம் தானே. |
13 | ஆகாசம் ஆம் உடல் அலங்கார் முயலகன் ஏகாசம் ஆம் திசை எட்டும் திருக்கை கள் மோகாய முக் கண்கள் மூன்று ஒளி தான் ஆக மாகாய மன்றுள் நடம் செய் கின்றானே. |
14 | அம்பலம் ஆவது அகில சரா சரம் அம்பலம் ஆவது ஆதிப் பிரான் அடி அம்பலம் ஆவது அப்புத் தீ மண்டலம் அம்பலம் ஆவது அஞ்சு எழுத்து ஆமே. |
15 | கூடிய திண் முழவம் குழலோம் என்று ஆடிய மானுடர் ஆதிப் பிரான் என்ன நாடி நல் கணம் ஆர் அம்பல் பூதங்கள் பாடிய வாறு ஒரு பாண்டரங்கம் ஆமே. |
16 | அண்டத்தில் தேவர்கள் அப்பாலைத் தேவர்கள் தெண் திரை சூழ் புவிக்கு உள் உள்ள தேவர்கள் புண்டரிகப் பதப் பொன் அம்பலக் கூத்துக் கண்டு சேவித்துக் கதி பெறுவார் களே. |
17 | புளிக் கண்டவர்க்குப் புனல் ஊறு மா போல் களிக்கும் திருக் கூத்துக் கண்டவர்க்கு எல்லாம் அளிக்கும் அருள் கண்ணீர் சோர் நெஞ்சு உருக்கும் ஒளிக்குள் ஆனந்தத்து அமுது ஊறும் உள்ளத்தே. |
18 | திண்டாடி வீழ்கை சிவ ஆனந்தம் ஆவது உண்டார்க்கு உணவு உண்டால் உன்மத்தம் சித்திக்கும் கொண்டாடு மன்றுள் குனிக்கும் திருக்கூத்துக் கண்டார் வரும் குணம் கேட்டார்க்கும் ஒக்குமே. |
19 | அங்கி தமருகம் அக்கு மாலை பாசம் அங்குசம் சூலம் கபாலமுடன் ஞானம் தங்கு பயம் தரு நீலமும் உடன் மங்கை யோர் பாகம் ஆய் நடம் ஆடுமே. |
20 | ஆடல் பதினோர் உறுப்பும் அடைவு ஆகக் கூடிய பாதம் சிலம்பு கைக் கொள் துடி நீடியநாதம் பரால் பர நேயத்தே ஆடிய நந்தி புறம் அகத்தானே. |
21 | ஒன்பதும் ஆட ஒரு பதினாறு ஆட அன்பு உறு மார்க்கங்கள் ஆறும் உடன் ஆட இன்பு உறும் ஏழினும் ஏழ் ஐம் பத்து ஆறு ஆட அன்பதும் ஆடினான் ஆனந்தக் கூத்தே. |
22 | ஏழினில் ஏழாய் இகந்து எழுத்து ஏழதாய் ஏழினில் ஒன்றாய் இழிந்து அமைந்து ஒன்றாகி ஏழினில் சன்மார்க்கம் எங்கள் பரம் சோதி ஏழ் இசை நாடகத்தே இசைந்தானே. |
23 | மூன்றினில் அஞ்சாகி முந்நூற்று அறுபதாய் மூன்றினில் ஆறாய் முதல் பன்னீர் மூலமாய் மூன்றினில் அக்க முடிவு ஆகி முந்தியே மூன்றிலும் ஆடினான் மோகாந்தக் கூத்தே. |
24 | தாம் முடி வானவர் தம் முடி மேல் உறை மா மணி ஈசன் மலர் அடித் தாள் இணை வா மணி அன்பு உடையார் மனத்து உள் எழும் கா மணி ஞாலம் கடந்து நின்றானே. |
25 | புரிந்தவன் ஆடில் புவனங் களோடும் தெரிந்தவன் ஆடும் அளவு எங்கள் சிந்தை புரிந்தவன் ஆடில் பல் பூதங்கள் ஆடும் எரிந்தவன் ஆடல் கண்டு இன்புற்ற வாறே. |
26 | ஆதி நடம் செய்தான் என்பர்கள் ஆதர்கள் ஆதி நடம் செய்கை யாரும் அறிகிலர் ஆதி நடம் ஆடல் ஆரும் அறிந்தபின் ஆதி நடம் ஆடல் ஆம் அருள் சத்தியே. |
27 | ஒன்பதோடு ஒன்பது ஆம் உற்ற இருபதத்து அன்பு உறு கோணம் அசி பதத்து ஆடிடத் துன்பு உறு சத்தியுள் தோன்றி நின்று ஆடவே அன்பு உறு எந்தை நின்று ஆடல் உற்றானே. |
28 | தத்துவம் ஆடச் சதாசிவம் தான் ஆடச் சித்தமும் ஆடச் சிவ சத்தி தான் ஆட வைத்த சரா சரம் ஆட மறை ஆட அத்தனும் ஆடினான் ஆனந்தக் கூத்தே. |
29 | இருவரும் காண எழில் அம்பலத்தே உருவோடு அருவோடு உருபர ரூபமாய்த் திரு அருள் சத்திக்குள் சித்தன் ஆனந்தன் அருள் உரு ஆக நின்று ஆடல் உற்றானே. |
30 | சிவம் ஆடச் சத்தியும் ஆடச் சகத்தில் அவம் ஆட ஆடாத அம்பரம் ஆட நவம் ஆன தத்துவ நாத அந்தம் ஆடச் சிவம் ஆடும் வேத அந்தச் சித்தாந்தத்து உள்ளே. |
31 | நாதத்தின் அந்தமும் நால் போத அந்தமும் வேதத்தின் அந்தமும் மெய்ச் சிவ ஆனந்தமும் தாது அற்ற நல்ல சதா சிவ ஆனந்தத்து நாதப் பிரமம் சிவ நடம் ஆமே. |
32 | சிவம் ஆதி ஐவர் திண்டாட்டமும் தீரத் தவம் ஆர் பசு பாசம் ஆங்கே தனித்துத் தவம் ஆம் பரன் எங்கும் தான் ஆக ஆடும் தவம் ஆம் சிவ ஆனந்தத் தோர் ஞானக் கூத்தே. |
33 | கூடி நின்றான் ஒரு காலத்துத் தேவர்கள் வீட நின்றான் விகிர்தா என்னும் நாமத்தைத் தேட நின்றான் திகழும் சுடர் மூன்று ஒளி ஆட நின்றான் என்னை ஆள் கொண்ட வாறே. |
34 | நாதத்துவம் கடந்து ஆதி மறை நம்பி பூதத்துவத்தே பொலிந்து இன்பம் எய்தினர் நேதத்துவமும் அவற்றொடு நேதியும் பேதப் படா வண்ணம் பின்னி நின்றானே. |
35 | ஆனந்தம் ஆனந்தம் என்பர் அறிவு இலர் ஆனந்த மா நடம் ஆரும் அறிகிலர் ஆனந்த மா நடம் ஆரும் அறிந்த பின் தான் அந்தம் அற்றிடம் ஆனந்தம் ஆமே. |
36 | திருந்து நல் என்று உதறிய கையும் அரும் தவர் வா என்று அணைத்த மலர்க் கையும் பொருந்தில் இமைப் பிலி அவ் என்ற பொன் கையும் திருந்தத் தீ ஆகும் திரு நிலை மவ்வே. |
37 | மருவம் துடியுடன் மன்னிய வீச்சு மருவிய அப்பும் அனலுடன் கையும் கருவின் மிதித்த கமலப் பதமும் உருவில் சிவாய நம என ஓதே. |
38 | அரன் துடி தோற்றம் அமைத்தல் திதி ஆம் அரன் அங்கி தன்னில் அறையில் சங்காரம் அரன் உற்று அணைப்பில் அமரும் திரோதாயி அரன் அடி என்றும் அனுக் கிரகம் என்னே. |
39 | தீத் திரள் சோதி திகழ் ஒளி உள் ஒளி கூத்தனைக் கண்ட அக் கோமளக் கண்ணினள் மூர்த்திகள் மூவர் முதல்வன் இடை செல்லப் பார்த்தனள் வேதங்கள் பாடினள் தானே. |
40 | நந்தியை எந்தையை ஞானத் தலைவனை மந்திரம் ஒன்றுள் மருவி அது கடந்து அந்தர வானத்தின் அப்புறத்து அப்பர சுந்தரக் கூத்தனை என் சொல்லும் ஆறே. |
41 | சீய குரு நந்தி திரு அம்பலத்திலே ஆய் உறு மேனியை யாரும் அறிகிலர் தீய் உறு செம்மை வெளுப் பொடு அத் தன்மை ஆய் உறு மேனி அணை புகல் ஆமே. |
42 | தான் ஆன சத்தியும் தற்பரை ஆய் நிற்கும் தான் ஆம் பரற்கும் உயிர்க்கும் தகும் இச்சை ஞான ஆதி பேத நடத்து நடித்து அருள் ஆனால் அரன் அடி நேயத்தம் ஆமே. |
43 | பத்தி விதையில் பயிர் ஒன்று நாணத்தைச் சித்தி தரு வயிராக்கத்தால் செய்து அறுத்து உய்த்த சமாதி சிவானந்தம் உண்டிடச் சித்தி திகழ் முத்தி யானந்தம் சித்தியே. |
9. ஆகாசப் பேறு |
1 | உள்ளத்து உளோம் என ஈசன் ஒருவனை உள்ளத்து உளே அங்கி ஆய ஒருவனை உள்ளத்து உளே நீதி ஆய ஒருவனை உள்ளத்து உளே உடல் ஆகாயம் ஆமே. |
2 | பெரு நிலம் ஆய் அண்டம் ஆய அண்டத்து அப்பால் குரு நிலம் ஆய் நின்ற கொள்கையான் ஈசன் பெரு நிலம் ஆய் நின்று தாங்கிய தாளோன் அரு நிலை ஆய் நின்ற ஆதிப் பிரானே. |
3 | அண்ட ஒளியும் அகண்ட ஒளியுடன் பிண்ட ஒளியால் பிதற்றும் பெருமையை உண்ட வெளிக்குள் ஒளிக்குள் ஒளித்தது கொண்ட குறியைக் குலைத்தது தானே. |
4 | பயன் உறு கன்னியர் போகத்தின் உள்ளே பயன் உறும் ஆதி பரம் சுடர்ச் சோதி அயனொடு மால் அறியா வகை நின்றிட்டு உயர் நெறியாய் ஒளி ஒன்று அது ஆமே. |
5 | அறிவுக்கு அறிவு ஆம் அகண்ட ஒளியும் பிறியா வலத்தினில் பேர் ஒளி மூன்றும் அறியாது அடங்கிடில் அத்தன் அடிக்குள் பிறியாது இருக்கில் பெரும் காலம் ஆமே. |
6 | ஆகாச வண்ணன் அமரர் குலக் கொழுந்து ஏகாச மாசுணம் இட்டு அங்கு இருந்தவன் ஆகாச வண்ணம் அமர்ந்து நின்று அப்புறம் ஆகாசம் ஆய் அங்கி வண்ணனும் ஆமே. |
7 | உயிர்க்கின்ற வாறும் உலகமும் ஒக்க உயிர்க்கின்ற உள் ஒளி சேர்கின்ற போது குயில் கொண்ட பேதை குலாவி உலாவி வெயில் கொண்டு என் உள்ளம் வெளியது ஆமே. |
8 | நணுகில் அகல் இலன் ஆதன் உலகத்து அணுகில் அகன்ற பெரும் பதி நந்தி நணுகிய மின் ஒளி சோதி வெளியைப் பணியின் அமுதம் பருகலும் ஆமே. |
9 | புறத்து உள ஆகாசம் புவனம் உலகம் அகத்து உள ஆகாசம் எம் ஆதி அறிவு சிவத்துள் ஆகாசம் செழும் சுடர்ச் சோதி சகத்துள் ஆகாசம் தானம் சமாதியே. |
10. ஞானோதயம் |
1 | மன சந்தியில் கண்ட மன்நனவு ஆகும் கனவுற ஆனந்தம் காண்டல் அதனை வினவுற ஆனந்தம் ஈது ஒழி என்ப இனம் உற்ற் ஆனந்தி ஆனந்தம் இரண்டே. |
2 | கரி அட்ட கையன் கபாலம் கை ஏந்தி எரியும் இளம் பிறை சூடும் எம்மானை அரியன் பெரியன் என்று ஆட் பட்டது அல்லால் கரியன் கொல் சேயன் கொல் காண்கின்றிலேனே. |
3 | உண்ணல் உறங்கல் உலாவல் உயிர்போதல் நண்ணல் நரக சுவர்க்கத்து நாட்டிடப் பண்ணல் அவன்பணியால் இவன் பாலிடை திண்ணிதில் செய்கை சிவன் பணி ஆகுமே. |
4 | ஓடும் இருக்கும் கிடக்கும் உடன் எழுந்து ஆடும் பறக்கும் அகண்டமும் பேசிடும் பாடும் புறத்து எழும் பல்லுயிர் ஆனந்தம் கூடும் பொழுதில் குறிப்பு இவை தான் அன்றே. |
5 | மிக்கார் அமுது உண்ண நஞ்சு உண்ட மேலவன் தக்கார் உரைத்த தவநெறியே சென்று புக்கால் அருளும் பொன் ஞானத்தை நக்கார் கழல் வழி நாடுமின் நீரே. |
6 | விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி விளக்கினுக்கு உள்ளே விளக்கினைத் தூண்டி விளக்கில் விளக்கை விளக்க வல்லார்க்கு விளக்கு உடையான் கழல் மேவலும் ஆமே. |
7 | தத்துவம் எங்கு உண்டு தத்துவன் அங்கு உண்டு தத்துவம் எங்கு இல்லை தத்துவன் அங்கு இல்லை தத்துவ ஞானத்தின் தன்மை அறிந்த பின் தத்துவன் அங்கே தலைப்படும் தானே. |
8 | விசும்பு ஒன்று தாங்கிய மெய்ஞ் ஞானத்து உள்ளே அசும்பின் நின்று ஊறிய தார் அமுதாகும் பசும் பொன் திகழும் படர் சடை மீதே குசும்ப மலர்க் கந்தம் கூடி நின்றானே. |
9 | முத்தின் வயிரத்தின் முந்நீர்ப் பவளத்தின் கொத்தும் பசும் பொன்னின் தூ ஒளி மாணிக்கம் ஒத்து உயர் அண்டத்து உள் அமர் சோதியை எத்தன்மை வேறு என்று கூறு செய்வீரே. |
10 | நான் என்றும் தான் என்றும் நாடினேன் நாடலும் நான் என்றும் தான் என்று இரண்டு இல்லை என்பது நான் என்ற ஞான முதல்வனே நல்கினான் நான் என்று நானும் நினைப்பு ஒழிந்தேனே. |
11 | ஞானத்தின் நன் நெறி நாத அந்த நல் நெறி ஞானத்தின் நல் நெறி நான் என்று அறிவோர்தல் ஞானத்தின் நல் யோக நல் நிலையே நிற்றல் ஞானத்தின் நல் மோன நாத அந்த வேதமே. |
12 | உய்ய வல்லார் கட்கு உயிர் சிவ ஞானமே உய்ய வல்லார் கட்கு உயிர் சிவ தெய்வமே உய்ய வல்லார் கட்கு ஒடுக்கம் பிரணவம் உய்ய வல்லார் அறிவு உள் அறிவு ஆமே. |
13 | காண வல்லார்க்கு அவன் கண்ணின் மணி ஒக்கும் காண வல்லார்க்குக் கடலின் அமுது ஒக்கும் பேண வல்லார்க்குப் பிழைப்பு இலன் பேர் நந்தி ஆண வல்லார்க்கே அவன் துணை ஆமே. |
14 | ஓம் எனும் ஓர் எழுத்து உள் நின்ற ஓசை போல் மேல் நின்ற தேவர் விரும்பும் விழுப்பொருள் சேய் நின்ற செஞ் சுடர் எம் பெருமான் அடி ஆய் நின்ற தேவர் அகம் படி ஆமே. |
11. சத்திய ஞானாந்தம் |
1 | எப்பாழும் பாழும் யாவும் ஆய் அன்றாகி முப்பாழும் கீழ் உள முப்பாழும் முன்னியே இப்பாழும் இன்னவாறு என்பதில் இலா இன்பத்து தற்பர ஞான ஆனந்தம் தான் அது ஆகுமே. |
2 | மன்னும் சத்தி ஆதி மணி ஒளி மாசோபை அன்னதோடு ஒப்பமிடல் ஒன்றாம் ஆறது இன்னிய வுற்பலம் ஒண்சீர் நிறமணம் பன்னிய சோபை பகர் ஆறும் ஆனதே. |
3 | சத்தி சிவன் பரஞானமும் சாற்றும் கால் உய்த்த அனந்தம் சிவம் உயர் ஆனந்தம் வைத்த சொரூபத்த சத்தி வரு குரு உய்த்த உடல் இவை உற்பலம் போலுமே. |
4 | உருஉற் பலம் நிறம் ஒண் மணம் சோபை தரநிற்ப போல் உயிர் தற்பரம் தன்னில் மருவச் சிவம் என்ற மா முப் பதத்தின் சொரு பத்தன் சத்தி ஆதி தோன்ற நின்றானே. |
5 | நினையும் அளவின் நெகிழ வணங்கிப் புனையில் அவனைப் பொதியலும் ஆகும் எனையும் எம்கோன் நந்தி தன் அருள் கூட்டி நினையும் அளவில் நினைப் பித்தனனே. |
6 | பாலொடு தேனும் பழத்து உள் இரதமும் வாலிய பேர் அமுதாகும் மதுரமும் போலும் துரியம் பொடி பட உள் புகச் சீலம் மயிர்க்கால் தொறும் தேக்கிடுமே. |
7 | அமரத்துவம் கடந்து அண்டம் கடந்து தமரத்து நின்ற தனிமையன் ஈசன் பவளத்து முத்தும் பனிமொழி மாதர் துவள் அற்ற சோதி தொடர்ந்து நின்றானே. |
8 | மத்திமம் ஆறு ஆறு மாற்றி மலம் நீக்கிச் சுத்தம் அது ஆகும் துரியத்து துரிசு அற்றுப் பெத்தம் அறச் சிவம் ஆகிப் பிறழ் உற்றுச் சத்திய ஞான ஆனந்தம் சார்ந்தனன் ஞானியே. |
9 | சிவம் ஆய் அம் ஆன மும் மலம் தீரப் பவம் ஆன முப்பாழைப் பற்று அறப் பற்றத் தவம் ஆன சத்திய ஞான ஆனந்தத்தே துவம் ஆர் துரியம் சொரூபம் அது ஆமே. |
12. சொரூப உதயம் |
1 | பரம குரவன் பரம் எங்கும் ஆகித் திரம் உற எங்கணும் சேர்ந்து ஒழிவு அற்று நிரவு சொரூபத்து உள் நீடும் சொரூபம் அரிய துரியத்து அணைந்து நின்றானே. |
2 | குலைக்கின்ற நீரில் குவலய நீரும் அலைக்கின்ற காற்றும் அனலொடு ஆகாச நிலத்து இடை வான் இடை நீண்டு அகன்றானை வரைத்து வலம் செயும் மாறு அறியேனே. |
3 | அங்கு நின்றான் அயன் மால் முதல் தேவர்கள் எங்கு நின்றாரும் இறைவன் என்று ஏத்துவர் தங்கி நின்றான் தனி நாயகன் எம் இறை பொங்கி நின்றான் புவனா பதி தானே. |
4 | சமையச் சுவடும் தனை அறியாமல் கமை அற்ற காமம் ஆதி காரணம் எட்டும் திமிரச் செயலும் தெளிவுடன் நின்றோர் அமரர்க்கு அதிபதி ஆகி நிற்பாரே. |
5 | மூவகைத் தெய்வத்து ஒருவன் முதல் உரு வாய் அது வேறு ஆம் அதுபோல் அணுப் பரன் சேய சிவமுத் துரியத்துச் சீர் பெற ஏயும் நெறி என்று இறை நூல் இயம்புமே. |
6 | உருவு அன்றியே நின்று உருவம் புணர்க்கும் கரு அன்றியே நின்று தான் கரு ஆகும் அரு அன்றியே நின்ற மாயப் பிரானைக் குரு அன்றி யாவர்க்கும் கூட ஒண்ணாதே. |
7 | உருவ நினைப்பவர்க்கு உள் உறும் சோதி உருவ நினைப்பவர் ஊழியும் காண்பர் உருவ நினைப்பவர் உம்பரும் ஆவர் உருவ நினைப்பவர் உலகத்தில் யாரே. |
8 | பரஞ்சோதி ஆகும் பதியினைப் பற்றாப் பரஞ்சோதி எனுள் படிந்ததன் பின்னைப் பரஞ்சோதி உண்ணான் படியப் படியப் பரஞ்சோதி தன்னைப் பறையக் கண்டேனே. |
9 | சொரூபம் உருவம் குணம் தொல் விழுங்கி அரியன உற்பலம் ஆம் ஆறு போல மருவிய சத்தி ஆதி நான்கு மதித்த சொரூபக் குரவன் சுகோதயம் தானே. |
10 | அற்ற ஆனந்த மோன சொரூபத்தன் கரை அற்ற சத்தி ஆதி காணில் அகார மரு உற்று உகார மகாரம் அது ஆக அற்ற தாரத்தில் உள் ஒளி ஆமே. |
11 | தலை நின்ற தாழ்வரை மீது தவம் செய்து முலை நின்ற மாது அறி மூர்த்தியை யானும் புலை நின்ற பொல்லாப் பிறவி கடந்து கலை நின்ற கள்வனில் கண்டு கொண்டேனே. |
12 | ஆம் ஆறு அறிந்தேன் அகத்தின் அரும் பொருள் போம் ஆறு அறிந்தேன் புகும் ஆறும் ஈது என்றே ஏமாப்பது இல்லை இனி ஓர் இடம் இல்லை நாம் ஆம் முதல்வனும் நான் எனல் ஆமே. |
13. ஊழ் |
1 | செற்றில் என் சீவில் என் செஞ் சாந்து அணியில் என் மத்தகத்தே உளி நாட்டி மறிக்கில் என் வித்தகன் நந்தி விதிவழி அல்லது தத்துவ ஞானிகள் தன்மை குன்றாரே. |
2 | தான் முன்னம் செய்த விதி வழி தான் அல்லால் வான் முன்னம் செய்து அங்கு வைத்தது ஓர் மாட்டு இல்லை கோன் முன்னம் சென்னி குறிவழியே சென்று நான் முன்னம் செய்ததே நல் நிலம் ஆனதே. |
3 | ஆறு இட்ட நுண் மணல் ஆறே சுமவாதே கூறு இட்டுக் கொண்டு சுமந்து அறிவார் இல்லை நீறு இட்ட மேனி நிமிர் சடை நந்தியைப் பேறு இட்ட என் உள்ளம் பிரிய கிலாவே. |
4 | வான் நின்று இடிக்கில் என் மா கடல் பொங்கில் என் கான் நின்ற செந் தீக் கலந்து உடன் வேகில் என் தான் ஒன்றி மாருதம் சண்டம் அடிக்கில் என் நான் ஒன்றி நாதனை நாடுவேன் நானே. |
5 | ஆனை துரக்கில் என் அம்பு ஊடு அறுக்கில் என் கானத்து உழுவை கலந்து வளைக்கில் என் ஏனைப் பதியினில் எம் பெருமான் வைத்த ஞானத்து உழவினை நான் உழுவேனே. |
6 | கூடு கெடின் மற்று ஓர் கூடு செய்வான் உளன் நாடு கெடினும் நமர் கெடுவார் இல்லை வீடு கெடின் மற்று ஓர் வீடு புக்கால் ஒக்கும் பாடது நந்தி பரிசு அறிவார்க்கே. |
14. சிவதரிசனம் |
1 | சிந்தை அது என்னச் சிவன் என்ன வேறு இல்லை சிந்தையின் உள்ளே சிவனும் வெளிப்படும் சிந்தை தெளியத் தெளிய வல்லார் கட்குச் சிந்தையின் உள்ளே சிவன் இருந்தானே. |
2 | வாக்கும் மனமும் மறைந்த மறைப் பொருள் நோக்குமின் நோக்கப்படும் பொருள் நுண்ணிது போக்கு ஒன்றும் இல்லை வரவு இல்லை கேடு இல்லை ஆக்கமும் அத்தனை ஆய்ந்து கொள்வார்க்கே. |
3 | பரனாய்ப் பராபரன் ஆகி அப்பால் சென்று உரனாய் வழக்கு அற ஒண் சுடர் தானாய்த் தரனாய் தனாது எனவாறு அறி ஒண்ணா அரனாய் உலகில் அருள் புரிந்தானே. |
15. சிவசொரூப தரிசனம் |
1 | ஓதும் மயிர்க்கால் தொறும் அமுது ஊறிய பேதம் அபேதம் பிறழாத ஆனந்தம் ஆதி சொரூபங்கள் மூன்று அகன்று அப்பாலை வேதம் அது ஓதும் சொரூபி தன் மேன்மையே. |
2 | உணர்வும் அவனே உயிரும் அவனே புணர்வும் அவனே புலவி அவனே இணரும் அவன் தன்னை எண்ணலும் ஆகான் துணரின் மலர்க் கந்தம் துன்னி நின்றானே. |
3 | இணங்க வேண்டா இனி உலகோருடன் நுணங்கு கல்வியும் நூல்களும் என்செயும் வணங்க வேண்டா வடிவை அறிந்தபின் பிணங்க வேண்டா பிதற்றை ஒழியுமே. |
4 | துன்னி நின்றான் தன்னை உன்னி முன்னா இரு முன்னி அவர் தம் குறையை முடித்திடும் மன்னிய கேள்வி மறையவன் மாதவன் சென்னியுள் நின்றது ஓர் தேற்றத்தன் ஆமே. |
5 | மின் உற்ற சிந்தை விழித்தேன் விழித்தலும் தன் உற்ற சோதித் தலைவன் இணை இலி பொன் உற்ற மேனிப் புரிசடை நந்தியும் என் உற்று அறிவான் என் விழித்தானே. |
6 | சத்திய ஞானத் தனிப் பொருள் ஆனந்தம் சித்தத்தின் இல்லாச் சிவ ஆனந்தப் பேர் ஒளி சுத்தப் பிரம துரியம் துரியத்துள் உய்த்த துரியத்து உறு பேர் ஒளியே. |
7 | பரன் அல்ல நீடும் பரா பரன் அல்ல உரன் அல்ல மீது உணர் ஒண் சுடர் அல்ல தரன் அல்ல தான் அவையாய் அல்ல ஆகும் அரன் அல்ல ஆனந்தத்து அப்புறத்தாணே. |
8 | முத்தியும் சித்தியும் முற்றிய ஞானத்தோன் பத்தியுள் நின்று பரம் தன்னுள் நின்று மா சத்தியுள் நின்றோர்க்குத் தத்துவம் கூடலால் சுத்தி அகன்றோர் சுக ஆனந்த போதமே. |
9 | துரிய அதீதம் சொல் அறும் பாழ் ஆம் அரிய துரியம் அதீதம் புரியில் விரியும் குவியும் விள்ளாம் மிளிரும் தன் உருவும் திரியும் உரைப்பது எவ்வாறே. |
16. முத்தி பேதம் - கரும நிருவாணம் |
1 | ஓதிய முத்தி அடைவே உயிர் பர பேதம் இல் அச் சிவம் எய்தும் துரியமோடு ஆதி சொரூபம் சொரூபத்தது ஆகவே ஏதம் இலா நிருவாணம் பிறந்தவே. |
2 | பற்று அற்றவர் பற்றி நின்ற பரம் பொருள் கற்று அற்றவர் கற்றுக் கருதிய கண்நுதல் சுற்று அற்றவர் சுற்றி நின்ற என் சோதியை பெற்று உற்றவர்கள் பிதற்று ஒழிந்தாரே. |
3 | சித்தம் சிவமாம் சிவஞானி சேர்விடம் சத்தச் சிவாலயம் தொல் பாச நாசமாம் அத்த மழையகம் அனந்த மேலிடும் முத்தம் பெருகும் முழுப் பொருள் ஆகுமே. |
4 | ஆணவ மூலத்து அகாரம் உதித்திடப் பேணி உகாரம் கலாதி பிறிவிக்கத் தாணு மகாரம் சதாசிவம் ஆகவே ஆணவ பாசம் அடர்தல் செய்யா அன்றே. |
5 | நெற்றி நடுவுள் நினைவு எழு கண்டமும் உற்ற விதையமும் ஓதிய நாபிக்கீழ்ப் பெற்ற துரியமும் பேசிய மூலத்தே உற்ற அதீதம் ஒடுங்கும் உடன் அன்றே. |
17. மறைபொருட் கூற்று |
1 | காயம் பல கை கவறு ஐந்து கண் மூன்றா ஆயம் பொருவது ஓர் ஐம்பத்து ஓர் அக்கரம் ஏய பெருமான் இருந்து பொருகின்ற மாயக் கவற்றின் மறைப்பு அறியேனே. |
2 | தூறு படர்ந்து கிடந்தது தூ நெறி மாறிக் கிடக்கும் வகை அறிவார் இல்லை மாறிக் கிடக்கும் வகை அறிவாளர்க்கு ஊறிக் கிடந்தது என் உள் அன்பு தானே. |
3 | ஆறு தெருவில் அகப்பட்ட சந்தியில் சாறு படுவன நான்கு பனை உள ஏறற்கு அரியது ஓர் ஏணி இட்டு அப்பனை ஏறல் உற்றேன் கடல் ஏழும் கண்டேனே. |
4 | வழுதலை வித்து இடப் பாகல் முளைத்தது புழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்தது தொழுது கொண்டு ஓடினார் தோட்டக் குடி கள் முழுதும் பழுத்தது வாழைக் கனியே. |
5 | ஐ என்னும் வித்தினில் ஆனை விளைப்பது ஓர் செய் உண்டு செய்யின் தெளிவு அறிவார் இல்லை மை அணி கண்டனன் மனம் பெறின் அந் நிலம் பொய் ஒன்றும் இன்றிப் புக எளிது ஆமே. |
6 | பள்ளச் செய் ஒன்று உண்டு பாழச் செய் இரண்டு உள கள்ளச் செய் அங்கே கலந்து கிடந்தது உள்ளச் செய் அங்கே உழவு செய்வார் கட்கு வெள்ளச் செய் ஆகி விளைந்தது தானே. |
7 | மூ அணை யேரும் உழுவது முக் காணி தாம் அணி கோலித் தறிஉறிப் பாய்ந்திடு நாவணை கோலி நடுவில் செறு உழார் கால் அணை கோலிக் களர் உழுவாரே. |
8 | ஏற்றம் இரண்டு உள ஏழு துரவு உள மூத்தான் இறைக்க இளையான் படுத்த நீர் பாத்தியில் பாயாது பாழ்ப் பாய்ந்து போயிடில் கூத்தி வளர்த்தது ஓர் கோழிப் புள் ஆமே. |
9 | பட்டிப் பசுக்கள் இருபத்து நால் உள குட்டிப் பசுக்கள் ஓர் ஏழு உள ஐந்து உள குட்டிப் பசுக்கள் குடப் பால் சொரியினும் பட்டிப் பசுவே பனவற்கு வாய்த்ததே. |
10 | ஈற்றுப் பசுக்கள் இருபத்து நால் உள ஊற்றுப் பசுக்கள் ஒரு குடம் பால் போதும் காற்றுப் பசுக்கள் கறந்து உண்ணும் காலத்து மாற்றுப் பசுக்கள் வரவு அறியோமே. |
11 | தட்டான் அகத்தில் தலை ஆன மச்சின் மேல் மொட்டாய் எழுந்தது செம் பால் மலர்ந்தது வட்டம் பட வேண்டி வாய்மை மடித்திட்டுத் தட்டான் அதனைத் தகைந்து கொண்டானே. |
12 | அரிக்கின்ற நாற்றங்கால் அல்லல் கழனி திரிக்கின்ற வொட்டம் சிக் கெனக் கட்டி வரிக்கின்ற நல்லான் கறவையைப் பூட்டில் விரிக்கின்ற வெள்ளரி வித்து வித்து ஆமே. |
13 | இடாக் கொண்டு தூவி எரு இட்டு வித்திக் கிடாக் கொண்டு பூட்டிக் கிளறி முளையை மிடாக் கொண்டு சோறு அட்டு மெள்ள விழுங்கார் கிடாக் கொண்டு செந்நெல் அறுக்கின்ற வாறே. |
14 | விளைந்து கிடந்தது மேலைக்கு வித்து அது விளைந்து கிடந்தது மேலைக்குக் காதம் விளைந்து விளைந்து விளைந்து கொள்வார்க்கு விளைந்து கிடந்தது மேவு முக் காதமே. |
15 | களர் உழுவார்கள் கருத்தை அறியோம் களர் உழுவார்கள் கருதலும் இல்லை களர் உழுவார்கள் களரின் முளைத்த வளர் இள வஞ்சியின் மாய்தலும் ஆமே. |
16 | கூப்பிடு கொள்ளாக் குறுநரிக் கொட்டகத்து ஆப்பு இடு பாசத்தை அங்கி உள் வைத்து இட்டு நாள் பட நின்று நலம் புகுந்து ஆய் இழை ஏற்பட இல்லத்து இனிது இருந்தானே. |
17 | மலை மேல் மழை பெய்ய மான் கன்று துள்ளக் குலை மேல் இருந்த கொழும் கனி வீழ உலை மேல் இருந்த உறுப்பு எனக் கொல்லன் முலை மேல் அமிர்தம் பொழிய வைத்தானே. |
18 | பார்ப்பான் அகத்திலே பால் பசு ஐந்து உண்டு மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால் பார்ப்பான் பசு ஐந்தும் பாலாச் சொரியுமே. |
19 | ஆ மாக்கள் ஐந்தும் அரி ஏறு முப்பதும் தே மா இரண்டொடு திப்பிலி ஒன்பதும் தாமாக் குரங்கு கொளில் தம் மனத்து உள்ளன மூவாக் கடா விடின் மூட்டு கின்றாரே. |
20 | எழுதாத புத்தகத்து ஏட்டின் பொருளைத் தெருளாத கன்னி தெளிந்து இருந்து ஓத மலராத பூவின் மணத்தின் மதுவைப் பிறவாத வண்டு மணம் உண்ட வாறே. |
21 | போகின்ற பொய்யும் புகுகின்ற பொய் வித்தும் கூகின்ற நாவலின் கூழைத் தரும் கனி ஆகின்ற பைங்கூழ் அவை உண்ணும் ஐவரும் வேகின்ற கூரை விருத்தி பெற்றாரே. |
22 | மூங்கில் முளையில் எழுந்தது ஓர் வேம்பு உண்டு வேம்பினில் சார்ந்து கிடந்த பனையில் ஓர் பாம்பு உண்டு பாம்பைத் துரத்தின் பார் இன்றி வேம்பு கிடந்து வெடிக்கின்ற வாறே. |
23 | பத்துப் பரும் புலி யானை பதினைந்து வித்தகர் ஐவர் வினோதகர் ஈர் எண்மர் அத்தகு மூவர் அறுவர் மருத்துவர் அத்தலை ஐவர் அமர்ந்து நின்றாரே. |
24 | இரண்டு கடா உண்டு இவ்வூரின் உள்ளே இரண்டு கடாவுக்கும் ஒன்றே தொழும்பன் இரண்டு கடாவும் இருத்திப் பிடிக்கில் இரண்டு கடாவும் ஒரு கடா ஆமே. |
25 | ஒத்த மனக் கொல்லை உள்ளே சமன் கட்டிப் பத்தி வலையில் பருத்தி நிறுத்தலால் முத்தக் கயிறு ஆக மூவர்கள் ஊரின் உள் நித்தம் பொருது நிரம்ப நின்றாரே. |
26 | கூகையும் பாம்பும் கிளியொடு பூஞையும் நாகையும் பூழும் நடுவில் உறைவன நாகையைக் கூகை நணுகல் உறுதலும் கூகையைக் கண்டு எலி கூப்பிடும் ஆறே. |
27 | குலைக்கின்ற நல் நகை ஆம் கொங்கு உழக்கின் நிலைக்கின்ற வெள் எலி மூன்று கொணர்ந்தான் உலைக்குப் புறம் எனில் ஓடும் இருக்கும் புலைக்குப் பிறந்தவை போகின்ற ஆறே. |
28 | காடுபுக்கு ஆர் இனிக் காணார் கடு வெளி கூடு புக்கான் அவை ஐந்து குதிரையும் மூடுபுக்கு ஆனவை ஆறு உள ஒட்டகம் மூடு புகா விடின் மூவணை ஆமே. |
29 | கூறையும் சோறும் குழாய் அகத்து எண்ணெயும் காறையும் நாணும் வளையலும் கண்டவர் பாறையில் உற்ற பறக்கின்ற சீலை போல் ஆறைக் குழியில் அழுந்து கின்றாரே. |
30 | துருத்தியுள் அக்கரை தோன்று மலைமேல் விருத்தி கண் காணிக்கப் போவார் முப்போதும் வருத்தி உள் நின்ற மலையைத் தவிர்ப்பான் ஒருத்தி உள்ளாள் அவர் ஊர் அறியோமே. |
31 | பருந்தும் கிளியும் படு பறை கொட்டத் திருந்திய மாதர் திருமணப் பட்டார் பெரும் தவப் பூதம் பெறல் உரு ஆகும் இருந்திய பேற்றினில் இன்புறுவாரே. |
32 | கூடும் பறவை இரை கொத்தி மற்று அதன் ஊடு புக்கு உண்டி அறுக்குறில் என் ஒக்கும் சூடு எறி நெய் உண்டு மை கான்றிடு கின்ற பாடு அறிவார்க்குப் பயன் எளிது ஆமே. |
33 | இலை இல்லை பூ உண்டு இன வண்டு இங்கு இல்லை தலை இல்லை வேர் உண்டு தாள் இல்லை பூவின் குலை இல்லை கொய்யும் மலர் உண்டு சூடும் தலை இல்லை தாழ்ந்த கிளை புலராதே. |
34 | அக்கரை நின்றது ஓர் ஆல மரம் கண்டு நக்கரை வாழ்த்தி நடுவே பயன் கொள்வார் மிக்கவர் அஞ்சு துயரமும் கண்டு போய்த் தக்கவர் தாழ்ந்து கிடக்கின்ற வாறே. |
35 | கூப்பிடும் ஆற்றிலே வன்காடு இருகாதம் காப்பு இடு கள்ளர் கலந்து நின்றார் உளர் காப்பு இடு கள்ளரை வெள்ளர் தொடர்ந்து இட்டுக் கூப்பிடு மீண்டது ஓர் கூரை கொண்டாரே. |
36 | கொட்டியும் ஆம்பலும் பூத்த குளத்து இடை எட்டியும் வேம்பும் இனியது ஓர் வாழையும் கட்டியும் தேனும் கலந்து உண்ண மாட்டாதார் எட்டிப் பழத்துக்கு இளைக்கின்ற வாறே. |
37 | பெடை வண்டும் ஆண் வண்டும் பீடிகை வண்ணக் குடை கொண்ட பாசத்துக் கோலம் உண்டானும் கடை வண்டு தான் உண்ணும் கண் கலந்து இட்ட பெடை வண்டு தான் பெற்றது இன்பமும் ஆமே. |
38 | தட்டத்து நீரிலே தாமரை பூத்தது குட்டத்து நீரில் குவளை எழுந்தது விட்டத்தின் உள்ளே விளங்க வல்லார் கட்குக் குட்டத்தில் இட்டது ஓர் கொம்மட்டி ஆமே. |
39 | ஆறு பறவைகள் ஐந்து அகத்து உள்ளன நூறு பறவை நுனிக் கொம்பின் மேலன ஏறும் பெரும் பதி ஏழும் கடந்த பின் மாறுதல் இன்றி மனை புகல் ஆமே. |
40 | கொட்டனம் செய்து குளிக்கின்ற கூவல் உள் வட்டனப் பூமி மருவி வந்து ஊறிடும் கட்டனம் செய்து கயிற்றால் தொழுமி உள் ஒட்டணம் செய்து ஒளி யாவர்க்கும் ஆமே. |
41 | ஏழு வளை கடல் எட்டுக் குலவரை ஆழும் விசும்பினில் அங்கி மழை வளி தாழும் இரு நிலம் தன்மை அது கண்டு வாழ நினைக்கில் அது ஆலயம் ஆமே. |
42 | ஆலிங்கனம் செய்து அகம் சுடச் சூலத்துச் சால் இங்கு அமைத்துத் தலைமை தவிர்த்தனர் கோல் இங்கு அமைத்த பின் கூபப் பறவை கண் மால் இங்கன் வைத்தது முன் பின் வழியே. |
43 | கொட்டுக்கும் தாலி இரண்டே இரண்டுக்கும் கொட்டுக்கும் தாலிக்கும் பாரை வலிது என்பர் கொட்டுக்கும் தாலிக்கும் பாரைக்கும் மூன்றுக்கும் இட்டம் வலிது என்பர் ஈசன் அருளே. |
44 | கயல் ஒன்று கண்டவர் கண்டே இருப்பர் முயல் ஒன்று கண்டவர் மூவரும் உய்வர் பறை ஒன்று பூசல் பிடிப்பான் ஒருவன் மறை ஒன்று கண்ட துருவம் பொன் ஆமே. |
45 | கோரை எழுந்து கிடந்த குளத்தினில் ஆரை படர்ந்து தொடர்ந்து கிடந்தது நாரை படுகின்றாற் போல் அல்ல நாதனார் பாரை கிடக்கப் படிகின்ற வாறே. |
46 | கொல்லை முக் காதமும் காடு அரைக் காதமும் எல்லை மயங்கிக் கிடந்த இரு நெறி எல்லை மயங்காது இயங்க வல்லார்கட்கு ஒல்லை கடந்து சென்று ஊர் புகல் ஆமே. |
47 | உழவு ஒன்று வித்து ஒருங்கின காலத்து எழு மழை பெய்யாது இரு நிலச் செவ்வி தழுவி வினை சென்று தான் பய வாது வழுவாது போவன் வளர் சடையோனே. |
48 | பதுங்கிலும் பாய் புலி பன்னிரு காதம் ஒதுங்கிய தண் கடல் ஓதம் உலவ மதுங்கிய வார் களியார் அமுது ஊறப் பொதுங்கிய ஐவரைப் போய் வளைத் தானே. |
49 | தோணி ஒன்று ஏறித் தொடர்ந்து கடல் புக்கு வாணிபம் செய்து வழங்கி வளர் மகன் நீலிக்கு இறையுமே நெஞ்சின் நிலை தளர்ந்து ஆலிப் பழம் போல் அளிக்கின்ற அப்பே. |
50 | முக் காதம் ஆற்றிலே மூன்று உள வாழைகள் செக்குப் பழுத்த திரிமலம் காய்த்தன பக்கனார் மிக்கார் படங்கினார் கன்னியர் நக்கு மலர் உண்டு நடுவு நின்றாரே. |
51 | அடியும் முடியும் அமைந்தது ஓர் ஆத்தி முடியும் நுனியும் கண் முத்தலை மூங்கில் கொடியும் படையும் கோட்சரன் ஐ ஐந்து மடியும் வலம்புரி வாய்த்தது அவ்வாறே. |
52 | பன்றியும் பாம்பும் பசு முசு வானரம் தென்றி கிடந்த சிறு நரிக் கூட்டத்துக் குன்றாமை கூடித் தராசின் நிறுத்த பின் குன்றி நிறையைக் குறைக் கின்ற வாறே. |
53 | மொட்டித்து எழுந்தது ஓர் மொட்டு உண்டு மொட்டினைக் கட்டு விட்டு ஓடின் மலர்தலும் காணலாம் பற்று விட்டு அம்மனை பாழ் பட நோக்கினால் கட்டு விட்டார்க்கு அன்றிக் காண ஒண்ணாதே. |
54 | நீர் இன்றிப் பாயும் நிலத்தினில் பச்சை ஆம் யாவரும் என்றும் அறிய வல்லார் இல்லை கூரு மழை பொழியாது பொழி புனல் தேரின் இந் நீர்மை திடரில் நில்லாதே. |
55 | கூகை குருந்தம் அது ஏறிக் குணம் பயில் மோகம் உலகுக்கு உணர்கின்ற காலத்து நாகமும் ஒன்று நடுவுரை செய்திடும் பாகனும் ஆகின்ற பண்பனும் ஆமே. |
56 | வாழையும் சூரையும் வந்து இடம் கொண்டன வாழைக்குச் சூரை வலிது வலிது என்பர் வாழையும் சூரையும் வன் துண்டம் செய்திட்டு வாழை இடம் கொண்டு வாழ்கின்ற வாறே. |
57 | நிலத்தைப் பிளந்து நெடும் கடல் ஓட்டிப் புனத்துக் குறவன் புணர்ந்த கொழு மீன் விலக்குமின் யாவர்க்கும் வேண்டில் குறையாது அருத்தமும் இன்றி அடுவதும் ஆமே. |
58 | தளிர்க்கும் ஒரு பிள்ளை தட்டான் அகத்தில் விளிப்பது ஓர் சங்கு உண்டு வேந்தனை நாடிக் களிக்கும் குசவர்க்கும் காவிதி யார்க்கும் அளிக்கும் பதத்து ஒன்று ஆய்ந்து கொள்வார்க்கே. |
59 | குடை விட்டுப் போந்தது கோயில் எருமை படை கண்டு மீண்டது பாதி வழியில் உடையவன் மந்திரி உள்ளலும் ஊரார் அடையா நெடும் கடை ஐந்தொடு நான்கே. |
60 | போகின்ற எட்டும் புகுகின்ற பத்து எட்டும் ஆகிப் படைத்தன ஒன்பது வாய்தலும் நாகமும் எட்டொடு நாலு புரவியும் பாகன் விடா விடில் பன்றியும் ஆமே. |
61 | பாசி படர்ந்து கிடந்த குளத்து இடைக் கூசி இருக்கும் குருகு இரை தேர்ந்து உண்ணும் தூசி மறவன் துணை வழி எய்திடப் பாசம் கிடந்து பதைக்கின்ற வாறே. |
62 | கும்ப மலைமேல் எழுந்தது ஓர் கொம்பு உண்டு கொம்புக்கும் அப்பால் அடிப்பது ஓர் காற்று உண்டு வம்பாய் மலர்ந்தது ஓர் பூ உண்டு அப் பூவுக்குள் வண்டாய்க் கிடந்து மணம் கொள்வன் ஈசனே. |
63 | வீணையும் தண்டும் விரவி இசை முரல் தாணுவும் மேவித் தகு தலைப் பெய்தது வாணிபம் சிக் என்று அது அடையா முன்னம் காணியும் அங்கே கலக்கின்ற வாறே. |
64 | கொங்கு புக்காரொடு வாணிபம் செய்தது அங்கு புக்கால் அன்றி ஆய்ந்து அறிவார் இல்லை திங்கள் புக்கால் இருள் ஆவது அறிந்திலர் தங்கு புக்கார் சிலர் தாபதர் தாமே. |
65 | போதும் புலர்ந்தது பொன் நிறம் கொண்டது தாது அவிழ் புன்னை தயங்கும் இரு கரை ஏதம் இல் ஈசன் இயங்கு நெறி இது மாதர் இருந்தோர் மண்டலம் தானே. |
66 | கோம் உற்று அமரும் குடிகளும் தம்மிலே காம் உற்று அகத்து இடுவர் கடை தொறும் ஈவற்ற எல்லை விடாது வழி காட்டி யாம் உற்ற தட்டினால் ஐந்து உண்ணலாமே. |
67 | தோட்டத்தில் மாம் பழம் தொண்டி விழுந்தக்கால் நாட்டின் புறத்தில் நரி அழைத்து என் செய்யும் மூட்டிக் கொடுத்த முதல்வனை முன்னிட்டுக் காட்டிக் கொடுத்தவர் கை விட்ட வாறே. |
68 | புலர்ந்தது போது என்று புட்கள் சிலம்பப் புலர்ந்தது போது என்று பூங்கொடி புல்லிப் புலம்பின் அவளொடும் போகம் நுகரும் புலம்பனுக்கு என்றும் புலர்ந்திலை போதே. |
69 | போது இரண்டு ஓதிப் புரிந்து அருள் செய்திட்டு மாது இரண்டு ஆகி மகிழ்ந்து உடனே நிற்கும் தாது இரண்டு ஆகிய தண்ணம் பறவைகள் வேது இரண்டு ஆகி வெறிக்கின்றவாறு அன்றே. |
70 | தோணி ஒன்று உண்டு துறையில் விடுவது ஆணி மிதித்து நின்று ஐவர் கோல் ஊன்றலும் வாணிபம் செய்வார் வழி இடை ஆற்று இடை ஆணி கலங்கில் அது இது ஆமே. |
18. மோன சமாதி |
1 | நின்றார் இருந்தார் கிடந்தார் என இல்லை சென்றார் தம் சித்த மோன சமாதி மன்றேயும் அங்கே மறைப் பொருள் ஒன்று சென்று ஆங்கு அணைந்தவர் சேர்கின்ற வாறே. |
2 | காட்டும் குறியும் கடந்தவர் காரணம் ஏற்றின் புறத்தில் எழுதி வைத்து என் பயன் கூட்டும் குரு நந்தி கூட்டிடின் அல்லது ஆட்டின் கழுத்தில் அதர் கிடந்து அற்றே. |
3 | உணர்வு உடையார் கட்கு உலகமும் தோன்றும் உணர்வு உடையார் கட்கு உறுதுயர் இல்லை உணர்வு உடையார்கள் உணர்ந்த அக்காலம் உணர்வு உடையார்கள் உணர்ந்து கண்டாரே. |
1 | மறப்ப அதுவாய் நின்ற மாய நல் நாடன் பிறப்பினை நீங்கிய பேர் அருளாளன் சிறப்பு உடையான் திரு மங்கையும் தானும் உறக்கம் இல் போகத்து உறங்கிடும் தானே. |
2 | துரியங்கள் மூன்றும் கடந்து ஒளிர் சோதி அரிய துரியம் அதில் மீது மூன்றாய் விரிவு குவிவு விழுங்கி உமிழ்ந்தே இல் அநுபூதிகத்து உள்ளானே. |
3 | உருவு இலி ஊன் இலி ஊனம் ஒன்று இல்லி திரு இலி தீது இலி தேவர்க்குத் தேவன் பொருஇலி பூதப் படை உடையாளி மரு இலி வந்து என் மனம் புகுந்தானே. |
4 | கண்டு அறிவார் இல்லைக் காயத்தின் நந்தியை எண் திசை யோரும் இறைவன் என்று ஏத்துவர் அண்டம் கடந்த அளவு இலா ஆனந்தத் தொண்டர் முகந்த துறை அறியோமே. |
5 | தற்பரம் அல்ல சதாசிவன் தான் அல்ல நிட்களம் அல்ல சகள நிலை அல்ல அற்புதம் ஆகி அநுபோகக் காமம் போல் கற்பனை இன்றிக் கலந்து நின்றானே. |
6 | முகத்தில் கண் கொண்டு காண்கின்ற மூடர்காள் அகத்தில் கண் கொண்டு காண்பதே ஆனந்தம் மகட்குத் தாய் தன் மணாளனோடு ஆடிய சுகத்தைச் சொல் என்றால் சொல்லும் ஆறு எங்ஙனே. |
7 | அப்பினில் உப்பு என அத்தன் அணைந்திட்டுச் செப்பு பரா பரம் சேர் பரமும் விட்டுக் கப்புறு சொற்பதம் ஆளக் கலந்தமை எப்படி அப்படி என்னும் அவ்வாறே. |
8 | கண்டார்க்கு அழகு இது காஞ்சிரத்தின் பழம் தின்றார்க்கு அறியலாம் அப்பழத்தின் சுவை பெண்தான் நிரம்பி மடவியள் ஆனால் கொண்டான் அறிவன் குணம் பல தானே. |
9 | நந்தி இருந்தான் நடுவுள் தெருவிலே சந்தி சமாதிகள் தாமே ஒழிந்தன உந்தியின் உள்ளே உதித்து எழும் சோதியைப் புந்தியினாலே புணர்ந்து கொண்டேனே. |
10 | விதறு படா வண்ணம் வேறு இருந்து ஆய்ந்து பதறு படாதே பழ மறை பார்த்துக் கதறிய பாழைக் கடந்த அந்தக் கற்பனை உதறிய பாழில் ஒடுங்கு கின்றேனே. |
11 | வாடா மலர் புனை சேவடி வானவர் கூடார் அற நெறி நாள்தொறும் இன்பு உறச் சேடார் கமலச் செழும் சுடருள் சென்று நாடார் அமுது உற நாடார் அமுதமே. |
12 | அதுக்கு என்று இருவர் அமர்ந்த சொல் கேட்டும் பொதுக்கு எனக் காமம் புலப்படு மா போல் சதுக்கு என்று வேறே சமைந்தாரைக் காண மதுக் கொன்றைத் தாரான் வளம் தரும் அன்றே. |
13 | தானும் அழிந்து தனமும் அழிந்து நீடு ஊனும் அழிந்து உயிரும் அழிந்து உடன் வானும் அழிந்து மனமும் அழிந்து பின் நானும் அழிந்தமை நான் அறியேனே. |
14 | இருளும் வெளியும் இரண்டையும் மாற்றிப் பொருளில் பொருளாய்ப் பொருந்த உள் ஆகி அருளால் அழிந்திடும் அத்தன் அடிக்கே உருளாத கல் மனம் உற்று நின்றேனே. |
15 | ஒன்றி நின்று உள்ளே உணர்ந்தேன் பராபரம் ஒன்றி நின்று உள்ளே உணர்ந்தேன் சிவகதி ஒன்றி நின்று உள்ளே உணர்ந்தேன் உணர்வினை ஒன்றி நின்றே பல ஊழி கண்டேனே. |
19. வரை மாட்சி |
1 | தான் வரை அற்ற பின் ஆரை வரைவது தான் அவன் ஆன பின் ஆரை நினைவது காமனை வென்ற கண்ணாரை உகப்பது தூ மொழி வாசகம் சொல்லுமின் நீரே. |
2 | அற்றது ஒன்றை செய்யும் ஊமர்காள் கரை அற்றது ஒன்றைக் கரை காணல் ஆகுமோ திரை அற்ற நீர் போல் சிந்தை தெளிவார்க்குப் புரை அற்று இருந்தான் புரிசடை யோனே. |
3 | மன மாயை மாயை இம் மாயை மயக்க மன மாயை தான் மாய மற்று ஒன்றும் இல்லை பினை மாய்வது இல்லை பிதற்றவும் வேண்டா தனைஆய்ந்து இருப்பது தத்துவம் தானே. |
20. அணைந்தோர் தன்மை |
1 | மலம் இல்லை மாசு இல்லை மான அபிமானம் குலம் இல்லை கொள்ளும் குணங்களும் இல்லை நலம் இல்லை நந்தி ஞானத்தி னாலே பல மன்னி அன்பில் பதித்து வைப்போர்க்கே. |
2 | ஒழிந்தேன் பிறவி உறவு என்னும் பாசம் கழிந்தேன் கடவுளும் நானும் ஒன்று ஆனேன் அழிந்து ஆங்கு இனிவரு மார்க்கமும் வேண்டேன் செழும் சார்புடைய சிவனைக் கண்டேனே. |
3 | ஆலைக் கரும்பும் அமுதும் அக்காரமும் சோலைத் தண்ணீரும் உடைத்து எங்கள் நாட்டு இடைப் பீலிக் கண்ணன் அன்ன வடிவு செய்வாள் ஒரு கோலப் பெண்ணாட்குக் குறை ஒன்றும் இல்லையே. |
4 | ஆராலும் என்னை அமட்ட ஒண்ணாது இனிச் சீரார் பிரான் வந்து என் சிந்தை புகுந்தனன் சீராடி அங்கே திரிவது அல்லால் இனி யார் பாடும் சாரா அறிவு அறிந்தேனே. |
5 | பிரிந்தேன் பிரமன் பிணித்தது ஓர் பாசம் தெரிந்தேன் சிவகதி செல்லும் நிலையை அரிந்தேன் வினையை அயில் மன வாளால் முரிந்தேன் புரத்தினை முந்து கின்றேனே. |
6 | ஒன்று கண்டீர் உலகுக்கு ஒரு தெய்வமும் ஒன்று கண்டீர் உலகுக்கு உயிர் ஆவது நன்று கண்டீர் நல் நமச்சிவாயப் பழம் தின்று கண்டேற்கு இது தித்தித்த வாறே. |
7 | சந்திரன் பாம்பொடும் சூடும் சடாதரன் வந்து என்னை ஆண்ட மணிவிளக்கு ஆனவன் அந்தமும் ஆதியும் இல்லா அரும் பொருள் சிந்தையின் மேவித் தியக்கு அறுத்தானே. |
8 | பண்டு எங்கள் ஈசன் நெடுமால் பிரமனைக் கண்டு அங்கு இருக்கும் கருத்து அறிவார் இல்லை விண்டு அங்கே தோன்றி வெறு மனம் ஆயிடில் துண்டு அங்கு இருந்தோர் தூறது ஆமே. |
9 | அன்னையும் அத்தனும் அன்பு உற்றது அல்லது அன்னையும் அத்தனும் ஆர் அறிவார் என்னை அன்னையும் அத்தனும் யானும் உடன் இருந்து அன்னையும் அத்தனை யான் புரந்தேனே. |
10 | கொண்ட சுழியும் குலவரை உச்சியும் அண்டரும் அண்டத் தலைவரும் ஆதியும் எண் திசை யோரும் வந்து என் கைத் தலத்து உளே உண்டனர் நான் இனி உய்ந்து ஒழிந்தேனே. |
11 | நமன் வரின் ஞான வாள் கொண்டே எறிவன் சிவன் வரின் நான் உடன் போவது திண்ணம் பவம் வரும் வல்வினை பண்டே அறுத்தேன் தவம் வரும் சிந்தைக்குத் தான் எதிர் யாரே. |
12 | சித்தம் சிவமாய் மலம் மூன்றும் செற்றவர் சுத்தச் சிவம் ஆவர் தோயார் மல பந்தம் கத்தும் சிலுகும் கலகமும் கை காணார் சத்தம் பரவிந்து தான் ஆம் என்று எண்ணியே. |
13 | நினைப்பும் மறப்பும் இலாதவர் நெஞ்சம் வினைப் பற்று அறுக்கும் விமலன் இருக்கும் வினைப் பற்று அறுக்கும் விமலனைத் தேடி நினைக்கப் பெறில் அவன் நீளியன் ஆமே. |
14 | சிவ பெருமான் என்று நான் அழைத்து ஏத்தத் தவ பெருமான் என்று தான் வந்து நின்றான் அவ பெருமான் என்னை ஆள் உடை நாதன் பவ பெருமானைப் பணிந்து நின்றேனே. |
15 | பணிந்து நின்றேன் பரமாதி பதியைத் துணிந்து நின்றேன் இனி மற்று ஒன்றும் வேண்டேன் அணிந்து நின்றேன் உடல் ஆதிப் பிரானைத் தணிந்து நின்றேன் சிவன் தன்மை கண்டேனே. |
16 | என் நெஞ்சம் ஈசன் இணை அடி தாம் சேர்ந்து முன்னம் செய்து ஏத்த முழுதும் பிறப்பு அறும் தன் நெஞ்சம் இல்லாத் தலைவன் தலைவிதி பின்னம் செய்து என்னைப் பிணக்கு அறுத்தானே. |
17 | பிணக்கு அறுத்தான் பிணி மூப்பு அறுத்து எண்ணும் கணக்கு அறுத்து ஆண்டனன் காண் நந்தி என்னைப் பிணக்கு அறுத்து என்னுடன் முன் வந்த துன்பம் வணக்கல் உற்றேன் சிவம் வந்தது தானே. |
18 | சிவன் வந்து தேவர் குழாம் உடன் கூடப் பவம் வந்திட நின்ற பாசம் அறுத்திட்டு அவன் எந்தை ஆண்டு அருள் ஆதிப் பெருமான் அவன் வந்து என் உள்ளே அகப்பட்ட வாறே. |
19 | கரும்பும் தேனும் கலந்த ஓர் காயத்தில் அரும்பும் கந்தமும் ஆகிய ஆனந்தம் விரும்பியே உள்ளம் வெளி உறக் கண்டபின் கரும்பும் கைத்தது தேனும் புளித்ததே. |
20 | உள்ள சரி ஆதி ஒட்டியே மீட்டு என்பால் வள்ளல் அருத்தியே வைத்த வளம் பாடிச் செய்வன எல்லாம் சிவம் ஆகக் காண்டலால் கை வளம் இன்றிக் கருக் கடந்தேனே. |
21 | மீண்டார் கமலத்து உள் அங்கி மிகச் சென்று தூண்டா விளக்கின் தகளி நெய் சோர்தலும் பூண்டாள் ஒருத்தி புவன சூடா மணி மாண்டான் ஒருவன் கை வந்தது தானே. |
22 | அன்பு உள் உருகி அழுவன் அரற்றுவன் என்பும் உருக இராப் பகல் ஏத்துவன் என் பொன் மணியை இறைவனை ஈசனைத் தின்பன் கடிப்பன் திருத்துவன் தானே. |
23 | மனம் விரிந்து குவிந்தது மாதவ மனம் விரிந்து குவிந்தது வாயு வனம் விரிந்து குவிந்தது மன் உயிர் மனம் விரிந்து மாண்டது முத்தியே. |
21. தோத்திரம் |
1 | மாயனை நாடி மன நெடும் தேர் ஏறிப் போயின நாடு அறியாதே புலம்புவர் தேயமும் நாடும் திரிந்து எங்கள் செல்வனைக் காயமின் நாட்டிடைக் கண்டு கொண்டேனே. |
2 | மன்னும் மலைபோல் மத வாரணத்தின் மேல் இன்னிசை பாட இருந்தவர் ஆர் எனில் முன்னியல் கால முதல்வனார் நாமத்தைப் பன்னினர் என்றே பாடு அறிவீரே. |
3 | முத்தினின் முத்தை முகிழ் இள ஞாயிற்றை எத்தனை வானோரும் ஏத்தும் இறைவனை அத்தனைக் காணாது அரற்று கின்றேன் ஏனையோர் பித்தன் இவன் என்று பேசு கின்றாரே. |
4 | புகுந்து நின்றான் எங்கள் புண்ணிய மூர்த்தி புகுந்து நின்றான் எங்கள் போதறி வாளன் புகுந்து நின்றான் அடியார் தங்கள் நெஞ்சம் புகுந்து நின்றானையே போற்று கின்றேனே. |
5 | பூதக் கண்ணாடியில் புகுந்திலன் போதுளன் வேதக் கண்ணாடியில் வேறே வெளிப்படு நீதிக் கண்ணாடி நினைவார் மனத்து உளன் கீதக் கண்ணாடியில் கேட்டு நின்றேனே. |
6 | நாமம் ஓர் ஆயிரம் ஓதுமின் நாதனை ஏமம் ஓர் ஆயிரத்து உள்ளே இசைவீர்கள் ஓமம் ஓர் ஆயிரம் ஓத வல்லார் அவர் காமம் ஓர் ஆயிரம் கண்டு ஒழிந்தாரே. |
7 | நானாவிதம் செய்து நாடுமின் நந்தியை ஊனார் கமலத்தின் ஊடு சென்று அப்புறம் வானோர் உலகம் வழிப் பட மீண்டபின் தேன் ஆர உண்டு தெவிட்டலும் ஆமே. |
8 | வந்து நின்றான் அடியார் கட்கு அரும் பொருள் இந்திரன் ஆதி இமையவர் வேண்டினும் சுந்தர மாதர் துழனி ஒன்று அல்லது அந்தர வானத்தின் அப்புறம் ஆமே. |
9 | மண்ணில் கலங்கிய நீர் போல் மனிதர்கள் எண்ணில் கலங்கி இறைவன் இவன் என்னார் உண்ணில் குளத்தின் முகந்து ஒருபால் வைத்துத் தெண்ணில் படுத்த சிவன் அவன் ஆமே. |
10 | மெய்த் தவத்தானை விரும்பும் ஒருவர்க்குக் கைத் தலம் சேர்தரு நெல்லிக் கனி ஒக்கும் சுத்தனைத் தூய் நெறியாய் நின்ற தேவர்கள் அத்தனை நாடி அமைந்து ஒழிந்தேனே. |
11 | அமைந்து ஒழிந்தேன் அளவு இல் புகழ் ஞானம் சமைந்து ஒழிந்தேன் தடு மாற்றம் ஒன்று இல்லை புகைந்து எழும் பூதலம் புண்ணியன் நண்ணி வகைந்து கொடுக்கின்ற வள்ளலும் ஆமே. |
12 | வள்ளல் தலைவனை வான நல் நாடனை வெள்ளப் புனல் சடை வேத முதல்வனைக் கள்ளப் பெருமக்கள் காண்பர் கொலோ என்று உள்ளத்தின் உள்ளே ஒளித்து இருந்து ஆளுமே. |
13 | ஆளும் மலர்ப் பதம் தந்த கடவுளை நாளும் வழிபட்டு நன்மையுள் நின்றவர் கோளும் வினையும் அறுக்கும் குரிசிலின் வாளும் மனத் தொடும் வைத்து ஒழிந்தேனே. |
14 | விரும்பில் அவன் அடி வீர சுவர்க்கம் பொருந்தில் அவன் அடி புண்ணிய லோகம் திருந்தில் அவன் அடி தீர்த்தமும் ஆகும் வருந்தி அவன் அடி வாழ்த்த வல்லார்க்கே. |
15 | வானகம் ஊடு அறுத்தான் இவ் உலகினில் தானகம் இல்லாத் தனி ஆகும் போதகன் கானக வாழைக் கனி நுகர்ந்து உள் உறும் பானகச் சோதியைப் பற்றி நின்றேனே. |
16 | விதி அது மேலை அமரர் உறையும் பதி அது பாய் புனல் கங்கையும் உண்டு துதி அது தொல்வினைப் பற்று அறுவிக்கும் பதி அது அவ்விட்ட அந்தமும் ஆமே. |
17 | மேல் அது வானவர் கீழ் அது மாதவர் தான் இடர் மானுடர் கீழ் அது மாதனம் கான் அது கூவிள மாலை கமழ் சடை ஆனது செய்யும் எம் ஆர் உயிர் தானே. |
18 | சூழும் கருங் கடல் நஞ்சு உண்ட கண்டனை ஏழும் இரண்டிலும் ஈசன் பிறப்பு இலி யாழும் சுனையும் அடவியும் அங்கு உளன் வாழும் எழுத்து ஐந்து மன்னனும் ஆமே. |
19 | உலகம் அது ஒத்து மண் ஒத்து உயர் காற்றை அலர் கதிர் அங்கி ஒத்து ஆதிப் பிரானும் நிலவிய மா முகில் நீர் ஒத்து மீண்டச் செலவு ஒத்து அமர் திகைத் தேவர் பிரானே. |
20 | பரிசு அறிந்து அங்கு உளன் அங்கி அருக்கன் பரிசு அறிந்து அங்கு உளன் மாருதத்து ஈசன் பரிசு அறிந்து அங்கு உளன் மாமதி ஞானப் பரிசு அறிந்து தன்னிலம் பாரிக்கும் ஆறே. |
21 | அந்தம் கடந்தும் அது அதுவாய் நிற்கும் பந்த உலகினில் கீழோர் பெரும் பொருள் தந்த உலகு எங்கும் தானே பராபரன் வந்து படைக்கின்ற மாண்பு அது ஆமே. |
22 | முத்தண்ட வீரண்டமே முடி ஆயினும் அத்தன் உருவம் உலகு ஏழ் எனப்படும் அத்தனின் பாதாளம் அளவு உள்ள சேவடி மத்தர் அதனை மகிழ்ந்து உணராரே. |
23 | ஆதிப் பிரான் நம் பிரான் அவ் அகல் இடச் சோதிப் பிரான் சுடர் மூன்று ஒளியாய் நிற்கும் ஆதிப் பிரான் அண்டத்து அப்புறம் கீழ் அவன் ஆதிப் பிரான் நடு ஆகி நின்றானே. |
24 | அண்டம் கடந்து உயர்ந்து ஓங்கும் பெருமையன் பிண்டம் கடந்த பிறவிச் சிறுமையன் தொண்டர் நடந்த கனை கழல் காண் தொறும் தொண்டர்கள் தூய் நெறி தூங்கி நின்றானே. |
25 | உலவு செய் நோக்கம் பெரும் கடல் சூழ நில முழுது எல்லா நிறைந்தனன் ஈசன் பல முழுது எல்லாம் படைத்தனன் முன்னே புலம் உழு பொன் நிறம் ஆகி நின்றானே. |
26 | பரா பரன் ஆகிப் பல் ஊழிகள் தோறும் பரா பரன் ஆய் இவ் அகல் இடம் தாங்கித் தரா பரன் ஆய் நின்ற தன்மை உணரார் நிரா பரன் ஆகி நிறைந்து நின்றானே. |
27 | போற்றும் பெரும் தெய்வம் தானே பிறர் இல்லை ஊற்றமும் ஓசையும் ஓசை ஒடுக்கமும் வேற்று உடல் தான் என்றது பெரும் தெய்வம் ஆம் காற்றது ஈசன் கலந்து நின்றானே. |
28 | திகை அனைத்தும் சிவனே அவன் ஆகின் மிகை அனைத்தும் சொல்ல வேண்டா மனிதரே புகை அனைத்தும் புறம் அங்கியில் கூடு முகைஅனைத்தும் எங்கள் ஆதிப் பிரானே. |
29 | கலை ஒரு மூன்றும் கடந்து அப்பால் நின்ற தலைவனை நாடுமின் தத்துவ நாதன் விலை இல்லை விண்ணவ ரோடும் உரைப்பன் நரை இல்லை உள்ளுறும் உள்ளவன் தானே. |
30 | படிகால் பிரமன் செய் பாசம் அறுத்து நெடியான் குறுமை செய் நேசம் அறுத்துச் செடியார் தவத்தினில் செய் தொழில் நீக்கி அடியேனை உய்ய வைத்து அன்பு கொண்டானே. |
31 | ஈசன் என்று எட்டுத் திசையும் இயங்கின ஓசையினின்று எழு சத்தம் உலப்பு இலி தேசம் ஒன்று ஆங்கே செழும் கண்டம் ஒன்பதும் வாச மலர் போல் மருவி நின்றானே. |
32 | இல்லனும் அல்லன் உளன் அல்லன் எம் இறை கல்லது நெஞ்சம் பிளந்திடும் காட்சியன் தொல்லையன் தூயன் துளக்கிலன் தூய் மணி சொல் அரும் சோதி தொடர்ந்து நின்றானே. |
33 | உள்ளத்து ஒடுங்கும் புறத்து உளும் நான் எனும் கள்ளத் தலைவன் கமழ் சடை நந்தியும் வள்ளல் பெருமை வழக்கம் செய்வார்கள் தம் அள்ளல் கடலை அறுத்து நின்றானே. |
34 | மாறு எதிர் வானவர் தானவர் நாள் தொறும் கூறுதல் செய்து குரை கழல் நாடுவர் ஊறுவர் உள்ளத்து அகத்தும் புறத்துளும் வேறு செய்து ஆங்கே விளக்கு ஒளி ஆமே. |
35 | விண்ணிலும் வந்த வெளி இலன் மேனியன் கண்ணிலும் வந்த புலன் அல்லன் காட்சியன் பண்ணினில் வந்த பயன் அல்லன் பான்மையன் எண் இல் ஆனந்தமும் எங்கள் பிரானே. |
36 | உத்தமன் எங்கும் உகக்கும் பெரும் கடல் நித்திலச் சோதியன் நீலக் கருமையன் எத்தனை காலமும் எண்ணுவர் ஈசனைச் சித்தர் அமரர்கள் தேர்ந்து அறியாரே. |
37 | நிறம் பல எவ் வண்ணம் அவ் வண்ணம் ஈசன் அறம் பல எவ் வண்ணம் அவ் வண்ணம் இன்பம் மறம் பல எவ் வண்ணம் அவ் வண்ணம் பாவம் புறம் பல காணினும் போற்ற கிலாரே. |
38 | இங்கு நின்றான் அங்கு நின்றனன் எங்கு உளன் பொங்கி நின்றான் புவனா பதி புண்ணியன் கங்குல் நின்றான் கதிர் மா மதி ஞாயிறு எங்கும் நின்றான் மழை போல் இறை தானே. |
39 | உணர்வு அது வாயுமே உத்தமம் ஆயும் உணர்வு அது நுண் அறிவு எம் பெருமானைப் புணர்வு அது வாயும் புல்லியது ஆயும் உணர் உடல் அண்டமும் ஆகி நின்றானே. |
40 | தன் வலியால் உலகு ஏழும் தரித்தவன் தன் வலியாலே அணுவினும் தான் ஒய்யன் தன் வலியான் மலை எட்டினும் தான் சாரான் தன் வலியாலே தடம் கடல் ஆமே. |
41 | ஏனோர் பெருமையன் ஆகிலும் எம் இறை ஊனே சிறுமையுள் உள் கலந்து அங்கு உளன் வானோர் அறியும் அளவு அல்லன் மாதேவன் தானே அறியும் தவத்தின் அளவே. |
42 | பிண்டால் அம் வித்தில் எழுந்த பெருமுளைக்கு உண்டால் அம் காயத்துக் குதிரை பழுத்தது உண்டனர் உண்டார் உணர்வு இலா மூடர்கள் பிண்டத்து உட்பட்டுப் பிணங்கு கின்றார்களே. |
22. சர்வ வியாபி |
1 | ஏயும் சிவ போகம் ஈது அன்றி ஓர் ஒளி ஆயும் அறிவையும் மாயா உபாதியால் ஏய பரிய புரியும் தனது எய்தும் சாயும் தனது வியா பகம் தானே. |
2 | நான் அறிந்த அப் பொருள் நாட இடம் இல்லை வான் அறிந்து அங்கே வழியுற விம்மிடும் ஊன் அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண் சுடர் தான் அறிந்து எங்கும் தலைப் படல் ஆமே. |
3 | கடல் இடை வாழ்கின்ற கௌவை உலகத்து உடல் இடை வாழ்வு கொண்டு உள் ஒளி நாடி உடல் இடை வைகின்ற உள் உறு தேவனைக் கடலின் மலி திரைக் காணலும் ஆமே. |
4 | பெரும் சுடர் மூன்றினும் உள் ஒளி ஆகித் தெரிந்து உடலாய் நிற்கும் தேவர் பிரானும் இரும் சுடர் விட்டிட்டு இகல் இடம் எல்லாம் பரிந்து உடன் போகின்ற பல் கோரை ஆமே. |
5 | உறுதியின் உள் வந்த உள் வினைப் பட்டு இறுதியின் வீழ்ந்தார் இரணம் அது ஆகும் சிறுதியின் உள் ஒளி திப்பிய மூர்த்தி பெறுதியின் மேலோர் பெரும் சுடர் ஆமே. |
6 | பற்றின் உள்ளே பரம் ஆய பரம் சுடர் முற்றினும் முற்றி முளைக் கின்ற மூன்று ஒளி நெற்றியின் உள்ளே நினைவாய் நிலை தரு மற்றவன் ஆய் நின்ற மாதவன் தானே. |
7 | தேவனும் ஆகும் திசை திசை பத்துளும் ஏவனும் ஆம் விரி நீர் உலகு ஏழையும் ஆவனும் ஆம் அமர்ந்து எங்கும் உலகினும் நாவனும் ஆகி நவிற்று கின்றானே. |
8 | நோக்கும் கருடன் நொடி ஏழ் உலகையும் காக்கும் அவனித் தலைவனும் அங்கு உள நீக்கும் வினை என் நிமலன் பிறப்பு இலி போக்கும் வரவும் புணர வல்லானே. |
9 | செழும் சடையன் செம்பொனே ஒக்கும் மேனி ஒழிந்தன வாயு ஒருங்குடன் கூடும் கழிந்திலன் எங்கும் பிறப்பு இலன் ஈசன் ஒழிந்திலன் ஏழு உலகு ஒத்து நின்றானே. |
10 | புலமையின் நாற்றம் இல் புண்ணியன் எந்தை நலமையின் ஞான வழக்கமும் ஆகும் விலமையில் வைத்துள வேதியர் கூறும் பலமையில் எங்கும் பரந்து நின்றானே. |
11 | விண்ணவன் ஆய் உலகு ஏழுக்கும் மேல் உளன் மண்ணவன் ஆய் வலம் சூழ் கடல் ஏழுக்கும் தண்ணவன் ஆய் அது தன்மையின் நிற்பது ஓர் கண்ணவன் ஆகிக் கலந்து நின்றானே. |
12 | நின்றனன் மாலொடு நான் முகன் தான் ஆகி நின்றனன் தான் நிலம் கீழொடு மேல் என நின்றனன் தான் நெடு மால் வரை ஏழ் கடல் நின்றனன் தானே வளம் கனி ஆயே. |
13 | புவனா பதி மிகு புண்ணியன் எந்தை அவனே உலகில் அடர் பெரும் பாகன் அவனே அரும் பல சீவனும் ஆகும் அவனே இறை என மால் உற்ற வாறே. |
14 | உள் நின்று ஒளிரும் உலவாப் பிராணனும் விண் நின்று இயங்கும் விரிகதிர்ச் செல்வனும் மண் நின்று இயங்கும் வாயுவும் ஆய் நிற்கும் கண் நின்று இலங்கும் கருத்தவன் தானே. |
15 | எண்ணும் எழுத்தும் இனம் செயல் அவ்வழிப் பண்ணும் திறனும் படைத்த பரமனைக் கண்ணில் கவரும் கருத்தில் அது இது உள் நின்று உருக்கி ஓர் ஆயமும் ஆமே. |
16 | இருக்கின்ற எண் திசை அண்டம் பாதாளம் உருக்கொடு தன் நடு ஓங்க இவ் வண்ணம் கருக்கொடு எங்கும் கலந்து இருந்தானே திருக் கொன்றை வைத்த செழும் சடையானே. |
17 | பலவுடன் சென்ற அப் பார் முழுது ஈசன் செலவு அறிவார் இல்லை சேயன் அணியன் அலைவு இலன் சங்கரன் ஆதி எம் ஆதி பல இலது ஆய் நிற்கும் பான்மை வல்லானே. |
18 | அது அறிவு ஆனவன் ஆதிப் புராணன் எது அறியா வகை நின்றவன் ஈசன் பொது அது ஆன புவனங்கள் எட்டும் இது அறிவான் நந்தி எங்கள் பிரானே. |
19 | நீரும் நிலனும் விசும்பு அங்கி மாருதம் தூரும் உடம்பு உறு சோதியும் ஆய் உளன் பேரும் பராபரன் பிஞ்ஞகன் எம் இறை ஊரும் சகலன் உலப்பு இலி தானே. |
வாழ்த்து |
1 | வாழ்கவே வாழ்க என் நந்தி திருவடி வாழ்கவே வாழ்க மலம் அறுத்தான் பதம் வாழ்கவே வாழ்க மெய்ஞ் ஞானத்தவன் தாள் வாழ்கவே வாழ்க மலம் இலான் பாதமே. |