தமிழில் வணக்கவழிபாடு, பயபக்தி என்று இரு சொற்களை கூறுவார்.
இவைகள் இரு சொற்கள் இணைந்த ஒருசொல்.
வணக்கம் - வணங்குதல், தொழுதல்
வழிபாடு - வழிபடுதல், உபதேசத்தை பின்பற்றுதல்
பயம் - அஞ்சுதல், விளைவு பற்றி கவலை கொள்ளுதல்
பக்தி - அன்பு செய்தல், அன்பு செய்யப் படுபவர் விரும்பியவற்றை செய்து தருதல்
இரண்டையும் ஒன்றாக இணைத்து ஒரு சொல்லாக அடையாள படுத்துவதற்கு ஓர் நோக்கமுண்டு.
கடவுளை வணங்குவது மட்டுமல்லால் அவன் மறை நூல்கள் சொல்லும் நெறிகளை பின்பற்றுபவனாக இருக்கவேண்டும். இரண்டும் ஒரு சேர இருந்தால் தான் அவன் உண்மையிலேயே கடவுளை வாங்குபவனாவான்.
கடவுளின் மீதும் அன்பும் இருக்கவேண்டும், பயமும் இருக்கவேண்டும். இரண்டில் ஒன்று இல்லாது போனாலும் கடவுளை நம்புபவனின் குணம் முழுமை பெறாது, அவன் அடுத்தவருக்கு தீங்கு செய்ய எண்ணுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
வணக்கவழிபாடு என்பது
பதிலளிநீக்குஇரு பொருளை கொண்ட ஒரு சொல்.
இரு சொற்கள் கலந்த ஒரு சொல்.
ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய இரு சொல்.
வணக்கம் என்பது கடவுளை எவ்வாறு வணங்குவது என்று கடவுளே கொடுத்த செயல்முறைகளாகும். அந்த வணக்க முறைகளை கற்று அதற்கு வழிபட்டால்தான் அந்த இறைவணக்கம் ஏற்று கொள்ளப்படும். இது எந்த தர்க்க வாதங்களையும் அடிப்படையாக கொள்ளாமல் முழுக்க முழுக்க இறைவனுக்கு கட்டுப்படுகிறோமா இல்லையாஅன்று உணர்த்துவதையே அடிப்படையாககொண்டு அமைந்து இருக்கும்.
எனவே நமக்கு சொல்லப்படுவது ஆதியும் அந்தமும் ஆன அனைத்தையும் படைத்த ஏக இறைவனால்தானா என்று ஆய்ந்து அறிவது நம் கடமையாகிறது. ஏனென்றால் பொய் தெய்வம், பொய் வேதம், பொய் குருக்கள் பற்றி அனைத்து வேதமும் எச்சரித்து உள்ளது. எவை எவையெல்லாம் வணக்கமாகும் என்பதை ஆய்வின் தொடரில் காணலாம்.
வழிப்படுவதே வழிபாடாகும். வழிப்படு என்பது மறைநூல்களில் சொல்லப்பட்ட அறநெறிகளை வாழ்க்கை வழியாக ஏற்று அதை நடைமுறைப்படுத்தும் முயற்சியில் உண்டாகும் இன்பதுங்களை அனுபவிப்பதும் படுவதுமாகும்.
செய்யப்படும் வணக்கம் அவனுக்கு முறையாக வழிபடுவதால் மட்டுமே அவனால் ஏற்றுக்கொள்ளப்படும். வணக்க முறையும் அவனது கட்டளைப்படி இருக்க வேண்டும் என்பதால் வணக்கமும் வழிபாடாகும், அவனுக்கு கட்டுப்படுவது வணக்கம் என்பதால் அவனுக்கு வழிப்படுவதும் வணக்கமாகும். எனவே இது வணக்கவழிபாடு எனப்பட்டது.
ஆதமுடைய இரு புதல்வர்களின் உண்மை வரலாற்றை அவர்களுக்குக் கூறுவீராக! அவ்விருவரும் ஒரு வணக்கத்தைப் புரிந்தனர். அவர்களில் ஒருவரிடம் அது ஏற்கப்பட்டது. மற்றொருவரிடம் ஏற்கப்படவில்லை. “நான் உன்னைக் கொல்வேன்” என்று (ஏற்கப்படாதவர்) கூறினார். “(தன்னை) அஞ்சுவோரிடமிருந்தே அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்” என்று (ஏற்கப்பட்டவர்) கூறினார். (அல்குர்ஆன் 5:27)
இத்தேசத்தின் முற்பிதாக்களுடன் நான் செய்து கொண்ட உடன்படிக்கையை இவர்கள் மீறினார்கள். இவர்கள் நான் கூறியவற்றைக் கேட்டு நடக்கவில்லை. எனவே இனிமேல் நான் பிறரைத் தோற்கடித்து இஸ்ரவேலருக்கு வழியைச் சரிப்படுத்திக் கொடுக்கமாட்டேன். (நியாயாதிபதிகள் 2:20&21)
"வழிபடுதல்" என்றால் என்ன?
பதிலளிநீக்குஇக்கேள்விக்கு விடையளிக்கும் முன், அதோடு தொடர்புடைய இன்னொரு வார்த்தை பற்றியும் அறிவோம்.
வணக்கவழிபாடு என்று இணைத்து சொல்லப்படும் இவ்விரு வார்த்தைகளும் ஒரே பொருளில் பயன்படுத்தப் படுகிறது.
உதாரணமாக கோயிலில் அருச்சனை தீப ஆராதனை செய்தல் போன்றவற்றுக்கு வழிபாடு என்று சொல் இன்று பொதுவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் வணக்கமும் வழிபடும் இருவேறு பொருளை தரும் சொற்களாகும்.
வணக்கம் என்றால் தவம், தியானம், வேதம் ஓதுதல், பிராத்தனை செய்தல், பாவமன்னிப்பு கோருதல், தலையை தரையில் வைத்து வணங்குதல் போன்றவை அடங்கும்.
வழிபடுதல் என்றால் இறைவன் வகுத்த அறநெறியைப் பின்பற்றுதல், அதற்கு கட்டுப்படுத்தல் என்று பொருள். அதாவது இறைவன் அவனது வேதத்தின் மூலம் காட்டும் வழிக்கு கட்டுப்படுத்தல், வழிபடுதல் ஆகும்.
ஆனால் இன்றைய தமிழ் சமூகம் தமிழர் மறை நூல் எது என்பதிலேயே போதுமான அறிவில்லாமல், அதை ஆய்வு செய்யும் எண்ணமுமில்லாமல் விரும்பியவாறு வாழும் நிலையை காண்கிறோம்.
தமிழர் வேதம் எது என்று கேட்டால், ஒன்று இருக்கும் அனைத்து சங்க நூல்களையும் சொல்வது, அல்லது தான் விரும்பும் எதாவது ஒன்றை சொல்வது என்ற நிலை நிலவுகிறதே தவிர, அதன் இலக்கணம் என்ன, எதுவெல்லாம் வேதம்? எது வேதம் அல்ல? என்றெல்லாம் ஆய்வு செய்து கண்டறியும் சிந்தனை எவருக்கும் இல்லை. பொருளாதாரத்தில் போட்டி போடும் ஆர்வத்தில், மற்றவரை விட திறமையில் பணத்தில் அந்தஸ்தில் நான் சிறந்தவன் என்று காட்டும் முயற்சியில் இவ்விடயங்களை சிந்திப்பது இல்லை. சுருக்கமாக சொன்னால் உலக மோகம் இவர்களை ஏமாற்றி விட்டது.
சுருக்கமாக,
வழிபாடு என்பது இறைவனுக்கு கட்டுப்படுவது. கட்டுப்பட இறைவன் என்ன சொல்கிறான் என்று ஒருவன் அறிய வேண்டும். அதற்கு அவனது வார்த்தையான வேதம் தமிழில் உள்ள நூல்களைக் எது என்று அறிய வேண்டும். இதை அறியாமல் வனகுவதும் பிழையாக அமையக்கூடும். ஏனென்றால் இறைவனை எப்படி வணங்க வேண்டும் என்பதையும் அந்த மறை நூல்கள் தான் குறிப்பிடும்.
எனவே நாம் இறைவனை அவன் விரும்பியபடி வணங்கவும் இல்லை, அவனது அற நெறிகளுக்கு கட்டுப்படவும் இல்லை. https://ta.quora.com/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/answers/1477743705447480