நிகண்டுகள் என்பன தமிழ் சொற்களின் அகராதியை விளக்கும் முகமாக அமைந்து உள்ளது. அவற்றை பற்றிய ஆய்வு கருத்துகள் இங்கே. சிலர் முரண்படலம், அனால் சில அடிப்படைகளை கொண்டு இந்த கருத்து எட்டப்பட்டது.
அடிப்படைகள்:
- எந்த நூலும் கடவுள் வாழ்த்தை கொண்டு துவங்கபடவேண்டும். அது பாரதம் பாடிய பெருந்தேவனார் போல பல நூல்களுக்கு இடைச்சொறுகளாக எழுதியது போலல்லாமல், நூலை எழுதியவர் மூலமாக கடவுள் வாழ்த்த்து இடம் பெற்று இருக்கவேண்டும்.
- ஒப்பிட்டால் நான்மறைகளுக்கு முரண்படக்கூடாது.
- முதல்நூலா வழிநூலா என்று அதிலோ அல்லது வேறு நம்பத்தகுந்த நூலிலோ ஆதாரங்கள் எட்டப்பட வேண்டும்.
- கிபி 5 ஆம் நூற்றாண்டுக்கு முன் இயற்றப்பட்டு இருக்க வேண்டும்.
போகர் நிகண்டு:
அகத்தியர் நிகண்டு: பஞ்சகாவிய நிகண்டு,
அரும்பொருள் விளக்க நிகண்டு: சமீபத்தில் வெளியிடப்பட்ட நிகண்டு.
சேந்தன் திவாகர நிகண்டு: கி.பி. 6 -ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திவாகர முனிவர் என்ற சமண முனிவரால் இயற்றப்பட்டது. (சிலர் 8 ஆம் நூற்றாண்டு என்றும் 10 என்றும் சிலர் கூறுகின்றனர்) ஒன்றே தெய்வம் என்று அறுதியிட்டு கூறும் தமிழர் பண்பாட்டில் பல தெய்வங்களுக்கு உரிய பெயர்கள் ஊன்று என்பது போல துவங்கி இருப்பதும், இலிங்கம் போன்ற சொற்களுக்கு தவறான பொருள் கூறியதன் மூலம், இந்நூல் திட்டமிட்டு அல்லது அறிவு குறைபாட்டால் பல சொற்களுக்கு பொருள் திரிந்த விளக்கத்தை கொடுக்கிறது. மேலும் இந்த நூல் எழுதியவர் யார்? எக்காலத்தை சார்ந்தவர்? என்ன சமயத்தை சார்ந்தவர்? என்பது பற்றிய உறுதியான தகவல்கள் இல்லை.
பிங்கல நிகண்டு: இது சோழர்கள் ஆண்ட கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் பிங்கல முனிவர் என்பவரால் இயற்றப்பட்டது. இவர் திவாகர முனிவரின்மாணவர்/மகனின் ஆவார்.
அகராதி நிகண்டு: இது கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இரேவண சித்தர் என்பவரால் இயற்றப்பட்டது. இவர் வீர சைவ சமயத்தைச் சார்ந்தவர்.
அகம்பொருள் விளக்க நிகண்டு: கி.பி. 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருமந்தைய தேசிகர் என்பவரால் இயற்றப்பட்டது.
ஆசிரிய நிகண்டு: ஆண்டிப் புலவரால் இயற்றப்பட்டது. நூலாசிரியர் தமிழ்நாட்டில் உள்ள செஞ்சியை அடுத்த ஊற்றங்காலில் பிறந்தவர். இவர் பாவாடை வாத்தியார் என்பவரின் மகன். இந்த நிகண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது ஆகும்.
உரிச்சொல் நிகண்டு: கி.பி.14-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காங்கேயர் என்னும் சைவ சமயத்தைச் சேர்ந்தவர் இயற்றினார்
ஐந்திணை மஞ்சிகன் சிறுநிகண்டு: இந்நூல் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்திணைகளுக்கு உரியத் தாவரங்களைப் பற்றிக் கூறும் சிறு நூல் ஆகும். ஆசிரியர்பெயர், ஐந்திணைச் சார்பு, அளவு, சிறுமை ஆகியவற்றால், இந்நூலுக்கு ஐந்திணை மஞ்சிகன் சிறுநிகண்டு எனப்பெயர் அமைந்தது. மஞ்சிகன் என்பவரால் எழுதப்பட்டது ஆகும். இந்நிகண்டு மாகறல் தி.பொன்னுசாமி முதலியாரால் பதிப்பிக்கப்பட்டுள்ளது.இவர் தமது முன்னுரையில், மாகறல் கார்த்திகேய முதலியாரிடமிருந்து இந்நிகண்டு கிடைத்ததாகக் கூறியுள்ளார்.
கயாதர நிகண்டு: கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கயாதர முனிவர் என்னும் சைவ சமயத்தைச் சேர்ந்தவரால் இயற்றப்பட்டது. இது காலத்தால் நான்காவதாக அறியப்படும் நிகண்டு நூல். இதில் புதிய சொற்களோ விளக்கங்களோ இல்லை, ஆனால் நூல் கட்டளைக் கலித்துறையில் இயற்றபட்டுள்ளது.
சிந்தாமணி நிகண்டு: 1876-இல் யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் வாழ்ந்த ச.வைத்தியலிங்கம்பிள்ளை என்பவரால் இயற்றப்பட்டது.
சூடாமணி நிகண்டு: கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மண்டல புருடர் என்னும் சமணரால் இயற்றப்பட்டது.
நாமதீப நிகண்டு: கி.பி. 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவசுப்பிரமணியக் கவிராயர் என்பவரால் இயற்றப்பட்டது.
பொதிகை நிகண்டு: கி.பி. 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சாமிநாத கவிராயர் என்பவரால் இயற்றப்பட்டது.
நானார்த்த தீபிகை: கி.பி. 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த முத்துசாமிப் பிள்ளை என்பவரால் இயற்றப்பட்டது.
பல்பொருட் சூளாமணி: இது ஒரு தமிழ் நிகண்டு. இதன் ஆசிரியர் ஈசுவர பாரதியார்
பொருள் தொகை நிகண்டு: கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுப்பிரமணிய பாரதியாரால் இயற்றப்பட்டது.
நிகண்டுகளின் ஆண்டுகள் பொறுத்தவரையில் முரண்பட்ட கருத்துகள் கிடைக்கின்றது. ஒரு நூலின் ஆண்டு என்பது ஒப்பீட்டளவில் பெறபபடக்கூடிய ஒன்று, எனவே கிடைக்கப்பெறும் தரவை பொறுத்துதான் ஆண்டை கூறமுடியும் தவிர உண்மையான ஆண்டினை கூறுவது கடினம். எனவே தாதுவா அளவில் பொருந்தும் நிகண்டுதான் சரியானதாக அமையும்.
ஆய்வு தொடர்கிறது . ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக