அவரவர் குணங்களுக்கேற்ப சிரத்தையும் சாத்விகம், ராஜசம், தாமசம் என மூவகைப்படும். சாத்விக சிரத்தையுடையோர் சாஸ்திரத்தைத் தழுவி தேவர்களை வணங்குவார். ராஜச சிரத்தை யுடையோர் யக்ஷர்களையும் ராக்ஷதர்களையும் வணங்குவார். தாமச சிரத்தையுடையோர் பூத பிரேத பிசாசங்களை வணங்குவார்.
அவர்களுக்குக் கிட்டும் பலன்களும் குணங்களுக்குத் தக்கபடியே வேறுபட்டிருக்கும். அப்படியிருக்க சாஸ்திரத்தை மீறுவோரைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அவர்கள் நினைத்த பலன் கிட்டாதென்பது மாத்திரமன்று; அவர்களுக்குக் கேடுமுண்டாகும். அவரவர் குணங்களுக்கேற்ப உண்ணும் உணவும், செய்யும் தவமும், கொடுக்கும் தானமும் மூவகைப் பட்டிருக்கும்.
अर्जुन उवाच
ये शास्त्रविधिमुत्सृज्य यजन्ते श्रद्धयान्विताः ।
तेषां निष्ठा तु का कृष्ण सत्त्वमाहो रजस्तमः ॥१७- १॥
அர்ஜுந உவாச
யே ஸா²ஸ்த்ரவிதி⁴முத்ஸ்ருஜ்ய யஜந்தே ஸ்²ரத்³த⁴யாந்விதா: |
தேஷாம் நிஷ்டா² து கா க்ருஷ்ண ஸத்த்வமாஹோ ரஜஸ்தம: || 17- 1||
அர்ஜுந உவாச, க்ருஷ்ண = அர்ஜுனன் சொல்லுகிறான்: கண்ணா
யே ஸா²ஸ்த்ரவிதி⁴ம் உத்ஸ்ருஜ்ய = எவர்கள் சாஸ்திர விதியை மீறி
ஸ்²ரத்³த⁴யா அந்விதா: யஜந்தே = ஆனாலும் நம்பிக்கையுடன், வேள்வி செய்கிறார்களோ
தேஷாம் நிஷ்டா² து கா = அவர்களுக்கு என்ன நிலை கிடைக்கிறது?
ஸத்த்வம் ஆஹோ ரஜ: தம: = சத்துவமா அல்லது ரஜசா, தமசா?
அர்ஜுனன் சொல்லுகிறான்: கண்ணா, சாஸ்திர விதியை மீறி, ஆனாலும் நம்பிக்கையுடன், வேள்வி செய்வோருக்கு என்ன நிலை கிடைக்கிறது? ஒளி நிலையா? கிளர்ச்சி நிலையா? அல்லது இருள் நிலையா? (சத்துவமா, ரஜசா, தமசா?)
श्रीभगवानुवाच
त्रिविधा भवति श्रद्धा देहिनां सा स्वभावजा ।
सात्त्विकी राजसी चैव तामसी चेति तां शृणु ॥१७- २॥
ஸ்ரீப⁴க³வாநுவாச
த்ரிவிதா⁴ ப⁴வதி ஸ்²ரத்³தா⁴ தே³ஹிநாம் ஸா ஸ்வபா⁴வஜா |
ஸாத்த்விகீ ராஜஸீ சைவ தாமஸீ சேதி தாம் ஸ்²ருணு || 17- 2||
ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்
தே³ஹிநாம் ஸ்வபா⁴வஜா = ஜீவர்களிடம் இயற்கையான சுபாவத்தால் உண்டான
ஸா ஸ்²ரத்³தா⁴ = அந்த நம்பிக்கை
த்ரிவிதா⁴ ப⁴வதி = மூன்று வகையாகத் தோன்றுகிறது
ஸாத்த்விகீ ராஜஸீ ச தாமஸீ ஏவ இதி = சாத்விகம், ராஜசம், தாமசம் என
தாம் ஸ்²ருணு = அதைக் கேள்
ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: ஜீவர்களிடம் இயற்கையால் நம்பிக்கை மூன்று வகையாகத் தோன்றுகிறது. சாத்விகம், ராஜசம், தாமசம் என; அதைக் கேள்
सत्त्वानुरूपा सर्वस्य श्रद्धा भवति भारत ।
श्रद्धामयोऽयं पुरुषो यो यच्छ्रद्धः स एव सः ॥१७- ३॥
ஸத்த்வாநுரூபா ஸர்வஸ்ய ஸ்²ரத்³தா⁴ ப⁴வதி பா⁴ரத |
ஸ்²ரத்³தா⁴மயோऽயம் புருஷோ யோ யச்ச்²ரத்³த⁴: ஸ ஏவ ஸ: || 17- 3||
பா⁴ரத = பாரதா
ஸர்வஸ்ய ஸ்²ரத்³தா⁴ ஸத்த்வாநுரூபா ப⁴வதி = யாவருக்கும் நம்பிக்கை தத்தம் உள்ளியல்புக்கு ஒத்தபடியாகவே அமைகிறது
அயம் புருஷ: ஸ்²ரத்³தா⁴மய: = மனிதன் சிரத்தை மயமானவன்
ய: யத் ஸ்²ரத்³த⁴: ஸ: = எவன் எந்தப் பொருளில் நம்பிக்கையுடையவனோ அவன்
ஸ: ஏவ = அந்தப் பொருளேதான் ஆகிறான்
பாரதா, யாவருக்கும் தத்தம் உள்ளியல்புக்கு ஒத்தபடியாகவே நம்பிக்கை அமைகிறது. மனிதன் சிரத்தை மயமானவன் எவன் எந்தப் பொருளில் நம்பிக்கையுடையவனோ, அந்தப் பொருளேதான் ஆகிறான்.
यजन्ते सात्त्विका देवान्यक्षरक्षांसि राजसाः ।
प्रेतान्भूतगणांश्चान्ये यजन्ते तामसा जनाः ॥१७- ४॥
யஜந்தே ஸாத்த்விகா தே³வாந்யக்ஷரக்ஷாம்ஸி ராஜஸா: |
ப்ரேதாந்பூ⁴தக³ணாம்ஸ்²சாந்யே யஜந்தே தாமஸா ஜநா: || 17- 4||
ஸாத்த்விகா தே³வாந் யஜந்தே = ஒளியியல்புடையோர் வானவர்க்கு வேள்வி செய்கின்றனர்
ராஜஸா: யக்ஷரக்ஷாம்ஸி = ரஜோ குணமுடையோர் யக்ஷர்களுக்கும் ராக்ஷஸருக்கும் (வேள்வி செய்கிறார்கள்)
அந்யே தாமஸா ஜநா: = மற்றத் தமோ குணமுடையோர்
ப்ரேதாந் பூ⁴தக³ணாந் ச = பிரேத பூத கணங்களுக்கு
யஜந்தே = வேள்வி செய்கிறார்கள்
ஒளியியல்புடையோர் வானவர்க்கு வேள்வி செய்கின்றனர். ரஜோ குணமுடையோர் யக்ஷர்களுக்கும் ராக்ஷஸருக்கும் வேள்வி செய்கிறார்கள். மற்றத் தமோ குணமுடையோர் பிரேத பூத கணங்களுக்கு வேள்வி செய்கிறார்கள்.
अशास्त्रविहितं घोरं तप्यन्ते ये तपो जनाः ।
दम्भाहंकारसंयुक्ताः कामरागबलान्विताः ॥१७- ५॥
அஸா²ஸ்த்ரவிஹிதம் கோ⁴ரம் தப்யந்தே யே தபோ ஜநா: |
த³ம்பா⁴ஹங்காரஸம்யுக்தா: காமராக³ப³லாந்விதா: || 17- 5||
யே ஜநா: = எந்த மக்கள்
அஸா²ஸ்த்ரவிஹிதம் = நியமத்தை மீறி
த³ம்ப⁴ அஹங்கார ஸம்யுக்தா: = டம்பமும் அகங்காரமுமுடையராய்
காமராக³ ப³ல அந்விதா: = விருப்பத்திலும் விழைவிலும் சார்பற்றவர்களாய்
கோ⁴ரம் தப: தப்யந்தே = கோரமான தவஞ் செய்கிறார்களோ
(சிலர்) சாஸ்திர நியமத்தை மீறி, டம்பமும் அகங்காரமுமுடையராய், விருப்பத்திலும் விழைவிலும் சார்பற்றவர்களாய், கோரமான தவஞ் செய்கிறார்கள்.
कर्षयन्तः शरीरस्थं भूतग्राममचेतसः ।
मां चैवान्तःशरीरस्थं तान्विद्ध्यासुरनिश्चयान् ॥१७- ६॥
கர்ஷயந்த: ஸ²ரீரஸ்த²ம் பூ⁴தக்³ராமமசேதஸ: |
மாம் சைவாந்த:ஸ²ரீரஸ்த²ம் தாந்வித்³த்⁴யாஸுரநிஸ்²சயாந் || 17- 6||
ஸ²ரீரஸ்த²ம் பூ⁴தக்³ராமம் ச = உடம்பிலுள்ள பூதத் தொகுதிகளையும்
அந்த:ஸ²ரீரஸ்த²ம் மாம் ஏவ = அகத்திலுள்ள என்னையும்
கர்ஷயந்த: = வருத்துகிறார்கள்
தாந் அசேதஸ: = அந்த அறிவு கெட்டவர்கள்
ஆஸுர நிஸ்²சயாந் வித்³தி⁴= அசுர நிச்சய முடையோரென்றுணர்
இங்ஙனம் அறிவு கெட்டோராய்த் தம் உடம்பிலுள்ள பூதத் தொகுதிகளையும் அகத்திலுள்ள என்னையும் வருத்துகிறார்கள். இவர்கள் அசுர நிச்சய முடையோரென்றுணர்.
आहारस्त्वपि सर्वस्य त्रिविधो भवति प्रियः ।
यज्ञस्तपस्तथा दानं तेषां भेदमिमं शृणु ॥१७- ७॥
ஆஹாரஸ்த்வபி ஸர்வஸ்ய த்ரிவிதோ⁴ ப⁴வதி ப்ரிய: |
யஜ்ஞஸ்தபஸ்ததா² தா³நம் தேஷாம் பே⁴த³மிமம் ஸ்²ருணு || 17- 7||
ஸர்வஸ்ய ப்ரிய: ஆஹார: அபி = ஒவ்வொருவருக்கும் பிரியமான உணவும்
த்ரிவித⁴: ப⁴வதி = மூன்று வகைப்படுகிறது
ததா² யஜ்ஞ: தப: தா³நம் = அங்ஙனமே வேள்வியும், தவமும் தானமும்
தேஷாம் இமம் பே⁴த³ம் = அவற்றின் வேற்றுமையைக்
ஸ்²ருணு = கேள்
ஒவ்வொருவருக்கும் பிரியமான உணவும் மூன்று வகைப்படுகிறது. வேள்வியும், தவமும் தானமும் அங்ஙனமே மும்மூன்று வகைப்படுகின்றன. அவற்றின் வேற்றுமையைக் கேள்.
आयुःसत्त्वबलारोग्यसुखप्रीतिविवर्धनाः ।
रस्याः स्निग्धाः स्थिरा हृद्या आहाराः सात्त्विकप्रियाः ॥१७- ८॥
ஆயு:ஸத்த்வப³லாரோக்³யஸுக²ப்ரீதிவிவர்த⁴நா: |
ரஸ்யா: ஸ்நிக்³தா⁴: ஸ்தி²ரா ஹ்ருத்³யா ஆஹாரா: ஸாத்த்விகப்ரியா: || 17- 8||
ஆயு: ஸத்த்வ ப³ல ஆரோக்³ய ஸுக² ப்ரீதி = உயிர், சக்தி, பலம், நோயின்மை, இன்பம், பிரீதி
விவர்த⁴நா:, ரஸ்யா: ஸ்நிக்³தா⁴: = மிகுதிப்படுத்துவன, சுவையுடையன, குழம்பாயின
ஸ்தி²ரா: ஹ்ருத்³யா: ஆஹாரா: = உறுதியுடையன, உள முகந்த இவ்வுணவுகள்
ஸாத்த்விகப்ரியா: = சத்துவ குணமுடையோருக்கு பிரியமானவை
உயிர், சக்தி, பலம், நோயின்மை, இன்பம், பிரீதி – இவற்றை மிகுதிப்படுத்துவன, சுவையுடையன, குழம்பாயின, உறுதியுடையன, உள முகந்தன. இவ்வுணவுகள் சத்துவ குணமுடையோருக்கு பிரியமானவை.
कट्वम्ललवणात्युष्णतीक्ष्णरूक्षविदाहिनः ।
आहारा राजसस्येष्टा दुःखशोकामयप्रदाः ॥१७- ९॥
கட்வம்லலவணாத்யுஷ்ணதீக்ஷ்ணரூக்ஷவிதா³ஹிந: |
ஆஹாரா ராஜஸஸ்யேஷ்டா து³:க²ஸோ²காமயப்ரதா³: || 17- 9||
கடு அம்ல லவண தீக்ஷ்ண = கசப்பும், புளிப்பும், உப்பும் உறைப்பும்
அதிஉஷ்ண = அதிகச் சூடு கொண்டன
ரூக்ஷ விதா³ஹிந: = உலர்ந்தன, எரிச்சலுடையன
ஆஹாரா: ராஜஸஸ்ய இஷ்டா: = இவ்வுணவுகளை ரஜோ குணமுடையோர் விரும்புவர்
து³:க² ஸோ²க ஆமயப்ரதா³: = இவை துன்பத்தையும் துயரையும் நோயையும் விளைவிப்பன
கசப்பும், புளிப்பும், உப்பும், உறைப்பும் மிகுந்தன, அதிகச் சூடு கொண்டன, உலர்ந்தன, எரிச்சலுடையன – இவ்வுணவுகளை ரஜோ குணமுடையோர் விரும்புவர். இவை துன்பத்தையும் துயரையும் நோயையும் விளைவிப்பன.
यातयामं गतरसं पूति पर्युषितं च यत् ।
उच्छिष्टमपि चामेध्यं भोजनं तामसप्रियम् ॥१७- १०॥
யாதயாமம் க³தரஸம் பூதி பர்யுஷிதம் ச யத் |
உச்சி²ஷ்டமபி சாமேத்⁴யம் போ⁴ஜநம் தாமஸப்ரியம் || 17- 10||
யத் போ⁴ஜநம் யாதயாமம் = எந்த உணவு கெட்டுப் போனது
க³தரஸம் = சுவையற்றது
பூதி = அழுகியது
பர்யுஷிதம் ச = பழையது
உச்சி²ஷ்டம் ச = எச்சில் பட்டது
அமேத்⁴யம் அபி = அசுத்தம்
தாமஸப்ரியம் = தமோ குணமுடையோருக்குப் பிரியமானது
பழையது, சுவையற்றது, அழுகியது, கெட்டுப் போனது, எச்சில் அசுத்தம், இத்தகைய உணவு தமோ குணமுடையோருக்குப் பிரியமானது.
अफलाकाङ्क्षिभिर्यज्ञो विधिदृष्टो य इज्यते ।
यष्टव्यमेवेति मनः समाधाय स सात्त्विकः ॥१७- ११॥
அப²லாகாங்க்ஷிபி⁴ர்யஜ்ஞோ விதி⁴த்³ருஷ்டோ ய இஜ்யதே |
யஷ்டவ்யமேவேதி மந: ஸமாதா⁴ய ஸ ஸாத்த்விக: || 17- 11||
ய: விதி⁴த்³ருஷ்ட: = எவர் விதிகள் சொல்லியபடி
யஜ்ஞ: யஷ்டவ்யம் ஏவ = வேள்வி புரிதல் கடமையென்று
இதி மந: ஸமாதா⁴ய = மனம் தேறி
அப²லாகாங்க்ஷிபி⁴: இஜ்யதே = பயனை விரும்பாதவர்களாய் வேள்வி செய்கிறார்களோ
ஸ ஸாத்த்விக: = அந்த வேள்வி சத்துவ குணமுடையது
பயனை விரும்பாதவர்களாய், வேள்வி புரிதல் கடமையென்று மனந்தேறி விதிகள் சொல்லியபடி இயற்றுவாரின் வேள்வி சத்துவ குணமுடைத்து.
अभिसंधाय तु फलं दम्भार्थमपि चैव यत् ।
इज्यते भरतश्रेष्ठ तं यज्ञं विद्धि राजसम् ॥१७- १२॥
அபி⁴ஸந்தா⁴ய து ப²லம் த³ம்பா⁴ர்த²மபி சைவ யத் |
இஜ்யதே ப⁴ரதஸ்²ரேஷ்ட² தம் யஜ்ஞம் வித்³தி⁴ ராஜஸம் || 17- 12||
து ப⁴ரதஸ்²ரேஷ்ட² = பாரதரிற் சிறந்தாய்!
த³ம்பா⁴ர்த²ம் ஏவ ச ப²லம் அபி அபி⁴ஸந்தா⁴ய = ஆடம்பரத்துக் கெனினும் பயனைக் குறித்தெனினும் கருத்தில் கொண்டு
யத் இஜ்யதே= வேள்வி வேட்கப் படுகிறதோ
தம் ராஜஸம் யஜ்ஞம் வித்³தி⁴ = அது ராஜச வேள்வி என்று உணர்
பயனைக் குறித்தெனினும் ஆடம்பரத்துக் கெனினும் செய்யப்படும் வேள்வி ராஜச மென்றுணர்; பாரதரிற் சிறந்தாய்!
विधिहीनमसृष्टान्नं मन्त्रहीनमदक्षिणम् ।
श्रद्धाविरहितं यज्ञं तामसं परिचक्षते ॥१७- १३॥
விதி⁴ஹீநமஸ்ருஷ்டாந்நம் மந்த்ரஹீநமத³க்ஷிணம் |
ஸ்²ரத்³தா⁴விரஹிதம் யஜ்ஞம் தாமஸம் பரிசக்ஷதே || 17- 13||
விதி⁴ஹீநம் = விதி தவறியது
அஸ்ருஷ்டாந்நம் = பிறர்க்குணவு தராததும்
மந்த்ரஹீநம் = மந்திர மற்றது
அத³க்ஷிணம் = தக்ஷிணையற்றது
ஸ்²ரத்³தா⁴விரஹிதம் = நம்பிக்கையின்றிச் செய்யப்படுவது
யஜ்ஞம் தாமஸம் பரிசக்ஷதே = இத்தகைய வேள்வியைத் தாமசமென்பார்
விதி தவறியது, பிறர்க்குணவு தராததும் மந்திர மற்றது, தக்ஷிணையற்றது, நம்பிக்கையின்றிச் செய்யப்படுவது – இத்தகைய வேள்வியைத் தாமசமென்பார்.
देवद्विजगुरुप्राज्ञपूजनं शौचमार्जवम् ।
ब्रह्मचर्यमहिंसा च शारीरं तप उच्यते ॥१७- १४॥
தே³வத்³விஜகு³ருப்ராஜ்ஞபூஜநம் ஸௌ²சமார்ஜவம் |
ப்³ரஹ்மசர்யமஹிம்ஸா ச ஸா²ரீரம் தப உச்யதே || 17- 14||
தே³வ த்³விஜ கு³ரு ப்ராஜ்ஞ பூஜநம் = தேவர், அந்தணர், குருக்கள், அறிஞர் இவர்களுக்குப் பூஜை செய்தல்
ஸௌ²சம் ஆர்ஜவம் ப்³ரஹ்மசர்யம் அஹிம்ஸா ச = தூய்மை, நேர்மை, பிரம்மசரியம், கொல்லாமை
ஸா²ரீரம் தப உச்யதே = இவை உடம்பைப் பற்றிய தவமெனப்படும்
தேவர், அந்தணர், குருக்கள், அறிஞர் – இவர்களுக்குப் பூஜை செய்தல், தூய்மை, நேர்மை, பிரம்மசரியம், கொல்லாமை – இவை உடம்பைப் பற்றிய தவமெனப்படும்.
अनुद्वेगकरं वाक्यं सत्यं प्रियहितं च यत् ।
स्वाध्यायाभ्यसनं चैव वाङ्मयं तप उच्यते ॥१७- १५॥
அநுத்³வேக³கரம் வாக்யம் ஸத்யம் ப்ரியஹிதம் ச யத் |
ஸ்வாத்⁴யாயாப்⁴யஸநம் சைவ வாங்மயம் தப உச்யதே || 17- 15||
யத் அநுத்³வேக³கரம் ஸத்யம் ச = சினத்தை விளைவிக்காததும் உண்மை யுடையது,
ப்ரியஹிதம் = இனியது, நலங் கருதியதுமாகிய
வாக்யம் ச = சொல்லுதல்
ஸ்வாத்⁴யாய அப்⁴யஸநம் ஏவ = கல்விப் பயிற்சி
வாங்மயம் தப: உச்யதே = இவை வாக்குத் தவமெனப்படும்
சினத்தை விளைவிக்காததும் உண்மை யுடையது, இனியது, நலங் கருதியதுமாகிய சொல்லல், கல்விப் பயிற்சி – இவை வாக்குத் தவமெனப்படும்.
मनः प्रसादः सौम्यत्वं मौनमात्मविनिग्रहः ।
भावसंशुद्धिरित्येतत्तपो मानसमुच्यते ॥१७- १६॥
மந: ப்ரஸாத³: ஸௌம்யத்வம் மௌநமாத்மவிநிக்³ரஹ: |
பா⁴வஸம்ஸு²த்³தி⁴ரித்யேதத்தபோ மாநஸமுச்யதே || 17- 16||
மந: ப்ரஸாத³: = மன மகிழ்ச்சி
ஸௌம்யத்வம் = அமைதி,
மௌநம் = மௌனம்
ஆத்மவிநிக்³ரஹ: = தன்னைக் கட்டுதல்
பா⁴வஸம்ஸு²த்³தி⁴: = எண்ணத் தூய்மை
இதி ஏதத் மாநஸம் தப: உச்யதே = இவை மனத் தவமெனப்படும்
மன அமைதி, மகிழ்ச்சி, மௌனம், தன்னைக் கட்டுதல், எண்ணத் தூய்மை – இவை மனத் தவமெனப்படும்.
श्रद्धया परया तप्तं तपस्तत्त्रिविधं नरैः ।
अफलाकाङ्क्षिभिर्युक्तैः सात्त्विकं परिचक्षते ॥१७- १७॥
ஸ்²ரத்³த⁴யா பரயா தப்தம் தபஸ்தத்த்ரிவித⁴ம் நரை: |
அப²லாகாங்க்ஷிபி⁴ர்யுக்தை: ஸாத்த்விகம் பரிசக்ஷதே || 17- 17||
அப²லாகாங்க்ஷிபி⁴: யுக்தை: நரை: = பயனை விரும்பாத யோகிகளான மனிதர்களால்
பரயா ஸ்²ரத்³த⁴யா தப்தம் = உயர்ந்த நம்பிக்கையுடன்
தத் த்ரிவித⁴ம் தப: = மேற்கூறிய மூன்று வகைகளிலும் செய்யப்படும் தவம்
ஸாத்த்விகம் பரிசக்ஷதே = சாத்வீகமெனப்படும்
பயனை விரும்பாத யோகிகளால் மேற்கூறிய மூன்று வகைகளிலும் உயர்ந்த நம்பிக்கையுடன் செய்யப்படும் தவம் சாத்வீகமெனப்படும்.
सत्कारमानपूजार्थं तपो दम्भेन चैव यत् ।
क्रियते तदिह प्रोक्तं राजसं चलमध्रुवम् ॥१७- १८॥
ஸத்காரமாநபூஜார்த²ம் தபோ த³ம்பே⁴ந சைவ யத் |
க்ரியதே ததி³ஹ ப்ரோக்தம் ராஜஸம் சலமத்⁴ருவம் || 17- 18||
யத் தப: = எந்த தவம்
ஸத்காரமாநபூஜார்த²ம் ச ஏவ = மதிப்பையும் பெருமையையும் பூஜையையும் (போற்றுதலையும்)
த³ம்பே⁴ந க்ரியதே = ஆடம்பரத்துக்காகவும் செய்வதுமாகிய
இஹ ராஜஸம் ப்ரோக்தம் = தவம் ராஜசமெனப்படும்
தத் அத்⁴ருவம் சலம் = அஃது நிலையற்றது; உறுதியற்றது
மதிப்பையும் பெருமையையும் பூஜையையும் நாடிச் செய்வதும், ஆடம்பரத்துக்காக செய்வதுமாகிய தவம் ராஜசமெனப்படும்; அஃது நிலையற்றது; உறுதியற்றது.
मूढग्राहेणात्मनो यत्पीडया क्रियते तपः ।
परस्योत्सादनार्थं वा तत्तामसमुदाहृतम् ॥१७- १९॥
மூட⁴க்³ராஹேணாத்மநோ யத்பீட³யா க்ரியதே தப: |
பரஸ்யோத்ஸாத³நார்த²ம் வா தத்தாமஸமுதா³ஹ்ருதம் || 17- 19||
யத் மூட⁴க்³ராஹேண = எந்த மூடக் கொள்கையுடன்
ஆத்மந: பீட³யா வா = தன்னைத் தான் துன்பப்படுத்திக் கொண்டு
பரஸ்ய உத்ஸாத³நார்த²ம் க்ரியதே = பிறரைக் கெடுக்குமாறு செய்வதுமாகிய
தத் தப: தாமஸம் உதா³ஹ்ருதம் = அந்த தவம் தாமசம் எனப்படும்
மூடக் கொள்கையுடன் தன்னைத் தான் துன்பப்படுத்திக் கொண்டு செய்வதும், பிறரைக் கெடுக்குமாறு செய்வதுமாகிய தவம் தாமசமெனப்படும்.
दातव्यमिति यद्दानं दीयतेऽनुपकारिणे ।
देशे काले च पात्रे च तद्दानं सात्त्विकं स्मृतम् ॥१७- २०॥
தா³தவ்யமிதி யத்³தா³நம் தீ³யதேऽநுபகாரிணே |
தே³ஸே² காலே ச பாத்ரே ச தத்³தா³நம் ஸாத்த்விகம் ஸ்ம்ருதம் || 17- 20||
தா³தவ்யம் இதி யத் தா³நம் = கொடுத்தல் கடமையென்று கருதி எந்த தானம்
தே³ஸே² காலே ச பாத்ரே ச = தகுந்த இடத்தையும் காலத்தையும் பாத்திரத்தையும்
அநுபகாரிணே தீ³யதே = கைம்மாறு வேண்டாமல் கொடுக்கப் படுகிறதோ
தத் தா³நம் ஸாத்த்விகம் ஸ்ம்ருதம் = அந்த தானம் சாத்வீகமென்பர்
கொடுத்தல் கடமையென்று கருதிக் கைம்மாறு வேண்டாமல், தகுந்த இடத்தையும் காலத்தையும் பாத்திரத்தையும் நோக்கிச் செய்யப்படும் தானத்தையே சாத்வீகமென்பர்.
यत्तु प्रत्युपकारार्थं फलमुद्दिश्य वा पुनः ।
दीयते च परिक्लिष्टं तद्दानं राजसं स्मृतम् ॥१७- २१॥
யத்து ப்ரத்யுபகாரார்த²ம் ப²லமுத்³தி³ஸ்²ய வா புந: |
தீ³யதே ச பரிக்லிஷ்டம் தத்³தா³நம் ராஜஸம் ஸ்ம்ருதம் || 17- 21||
து யத் பரிக்லிஷ்டம் ச = ஆனால் மன வருத்தத்துடன்
ப்ரத்யுபகாரார்த²ம் வா = கைம்மாறு வேண்டியும்
ப²லம் உத்³தி³ஸ்²ய புந: தீ³யதே = பயனைக் கருதியும் கொடுக்கப்படுகிறதோ
தத் தா³நம் ராஜஸம் ஸ்ம்ருதம் = அந்த தானத்தை ராஜசமென்பர்
கைம்மாறு வேண்டியும், பயனைக் கருதியும், கிலேசத்துடன் கொடுக்கப்படும் தானத்தை ராஜசமென்பர்.
अदेशकाले यद्दानमपात्रेभ्यश्च दीयते ।
असत्कृतमवज्ञातं तत्तामसमुदाहृतम् ॥१७- २२॥
அதே³ஸ²காலே யத்³தா³நமபாத்ரேப்⁴யஸ்²ச தீ³யதே |
அஸத்க்ருதமவஜ்ஞாதம் தத்தாமஸமுதா³ஹ்ருதம் || 17- 22||
யத் தா³நம் அஸத்க்ருதம் = எந்த தானம் மதிப்பின்றி
அவஜ்ஞாதம் = இகழ்ச்சியுடன்
அதே³ஸ²காலே ச = தகாத இடத்தில், தகாத காலத்தில்
அபாத்ரேப்⁴ய தீ³யதே = தகாதர்க்குச் தரப் படுகிறதோ
தத் தாமஸம் உதா³ஹ்ருதம் = அந்த தானம் தாமசமெனப்படும்
தகாத இடத்தில், தகாத காலத்தில், தகாதர்க்குச் செய்யப்படுவதும், மதிப்பின்றி இகழ்ச்சியுடன் செய்யப்படுவதுமாகிய தானம் தாமசமெனப்படும்.
ॐतत्सदिति निर्देशो ब्रह्मणस्त्रिविधः स्मृतः ।
ब्राह्मणास्तेन वेदाश्च यज्ञाश्च विहिताः पुरा ॥१७- २३॥
ஓம்தத்ஸதி³தி நிர்தே³ஸோ² ப்³ரஹ்மணஸ்த்ரிவித⁴: ஸ்ம்ருத: |
ப்³ராஹ்மணாஸ்தேந வேதா³ஸ்²ச யஜ்ஞாஸ்²ச விஹிதா: புரா || 17- 23||
ஓம் தத் ஸத் இதி த்ரிவித⁴: = ஓம் தத் ஸத்” என்ற மூன்று விதமாக
ப்³ரஹ்மண: நிர்தே³ஸ²: ஸ்ம்ருத: = பிரம்மத்தைக் குறிப்பது என்பர்
தேந புரா = அதனால் முன்பு
ப்³ராஹ்மணா: வேதா³: ச யஜ்ஞா: ச = பிரமாணங்களும், வேதங்களும், வேள்விகளும்
விஹிதா: = வகுக்கப்பட்டன
“ஓம் தத் ஸத்” என்ற மும்மைப் பெயர் பிரம்மத்தைக் குறிப்பதென்பர். அதனால் முன்பு பிரமாணங்களும், வேதங்களும், வேள்விகளும் வகுக்கப்பட்டன.
तस्मादोमित्युदाहृत्य यज्ञदानतपःक्रियाः ।
प्रवर्तन्ते विधानोक्ताः सततं ब्रह्मवादिनाम् ॥१७- २४॥
தஸ்மாதோ³மித்யுதா³ஹ்ருத்ய யஜ்ஞதா³நதப:க்ரியா: |
ப்ரவர்தந்தே விதா⁴நோக்தா: ஸததம் ப்³ரஹ்மவாதி³நாம் || 17- 24||
தஸ்மாத் ப்³ரஹ்மவாதி³நாம் = ஆதலால், பிரம்மவாதிகள்
விதா⁴நோக்தா: யஜ்ஞ = விதிப்படி புரியும் வேள்வி
தா³ந தப: க்ரியா: = தவம், தானம் என்ற கிரியைகள்
ஸததம் ஓம் இதி = எப்போதும் ‘ஓம்’ என்று
உதா³ஹ்ருத்ய ப்ரவர்தந்தே = தொடங்கிச் செய்யப்படுகின்றன
ஆதலால், பிரம்மவாதிகள் விதிப்படி புரியும் வேள்வி, தவம், தானம் என்ற கிரியைகள் எப்போதும் ‘ஓம்’ என்று தொடங்கிச் செய்யப்படுகின்றன.
तदित्यनभिसन्धाय फलं यज्ञतपःक्रियाः ।
दानक्रियाश्च विविधाः क्रियन्ते मोक्षकाङ्क्षिभिः ॥१७- २५॥
ததி³த்யநபி⁴ஸந்தா⁴ய ப²லம் யஜ்ஞதப:க்ரியா: |
தா³நக்ரியாஸ்²ச விவிதா⁴: க்ரியந்தே மோக்ஷகாங்க்ஷிபி⁴: || 17- 25||
தத் இதி = ‘தத்’ என்ற சொல்லை உச்சரித்து
ப²லம் அநபி⁴ஸந்தா⁴ய = பயனைக் கருதாமல்
விவிதா⁴: யஜ்ஞதப:க்ரியா: = பல வகைப்பட்ட வேள்வியும் தவமும்
தா³நக்ரியா: ச = தானமுமாகிய கிரியைகள்
மோக்ஷகாங்க்ஷிபி⁴: க்ரியந்தே = மோக்ஷத்தை விரும்புவோரால் செய்யப்படுகின்றன
‘தத்’ என்ற சொல்லை உச்சரித்து பயனைக் கருதாமல், பல வகைப்பட்ட வேள்வியும் தவமும் தானமுமாகிய கிரியைகள் மோக்ஷத்தை விரும்புவோரால் செய்யப்படுகின்றன.
सद्भावे साधुभावे च सदित्येतत्प्रयुज्यते ।
प्रशस्ते कर्मणि तथा सच्छब्दः पार्थ युज्यते ॥१७- २६॥
ஸத்³பா⁴வே ஸாது⁴பா⁴வே ச ஸதி³த்யேதத்ப்ரயுஜ்யதே |
ப்ரஸ²ஸ்தே கர்மணி ததா² ஸச்ச²ப்³த³: பார்த² யுஜ்யதே || 17- 26||
ஸத் இதி = ‘ஸத்’ என்ற சொல்
ஏதத் ஸத்³பா⁴வே = உண்மை யென்ற பொருளிலும்
ஸாது⁴பா⁴வே ச ப்ரயுஜ்யதே = நன்மையென்ற பொருளிலும் வழங்கப்படுகிறது
பார்த² = பார்த்தா
ததா² ப்ரஸ²ஸ்தே கர்மணி = புகழ்தற்குரிய செய்கையைக் குறிப்பதற்கும்
ஸத் ஸ²ப்³த³: யுஜ்யதே =‘ஸத்’ என்ற சொல் வழங்குகிறது
‘ஸத்’ என்ற சொல் உண்மை யென்ற பொருளிலும், நன்மையென்ற பொருளிலும் வழங்கப்படுகிறது. பார்த்தா, புகழ்தற்குரிய செய்கையைக் குறிப்பதற்கும் ‘ஸத்’ என்ற சொல் வழங்குகிறது.
यज्ञे तपसि दाने च स्थितिः सदिति चोच्यते ।
कर्म चैव तदर्थीयं सदित्येवाभिधीयते ॥१७- २७॥
யஜ்ஞே தபஸி தா³நே ச ஸ்தி²தி: ஸதி³தி சோச்யதே |
கர்ம சைவ தத³ர்தீ²யம் ஸதி³த்யேவாபி⁴தீ⁴யதே || 17- 27||
யஜ்ஞே தபஸி தா³நே ச ஸ்தி²தி: ஏவ = வேள்வி, தவம், தானம் இவற்றில் உறுதி நிலையும்
ஸத் இதி உச்யதே = ‘ஸத்’ எனப்படுகிறது
ச தத³ர்தீ²யம் = மேலும் பிரம்மத்தின் பொருட்டாகச் செய்யும்
கர்ம ஏவ ஸத் இதி அபி⁴தீ⁴யதே = கர்மமும் ‘ஸத்’ என்றே சொல்லப்படும்
வேள்வி, தவம், தானம் இவற்றில் உறுதி நிலையும் ‘ஸத்’ எனப்படுகிறது. பிரம்மத்தின் பொருட்டாகச் செய்யும் கர்மமும் ‘ஸத்’ என்றே சொல்லப்படும்.
अश्रद्धया हुतं दत्तं तपस्तप्तं कृतं च यत् ।
असदित्युच्यते पार्थ न च तत्प्रेत्य नो इह ॥१७- २८॥
அஸ்²ரத்³த⁴யா ஹுதம் த³த்தம் தபஸ்தப்தம் க்ருதம் ச யத் |
அஸதி³த்யுச்யதே பார்த² ந ச தத்ப்ரேத்ய நோ இஹ || 17- 28||
பார்த² = பார்த்தா
அஸ்²ரத்³த⁴யா ஹுதம் த³த்தம் = அசிரத்தையுடன் வேள்வியும் தானமும்
தப்தம் தப: ச = செய்யும் தவமும்
யத் க்ருதம் = கர்மமும்
அஸத் இதி உச்யதே = ‘அஸத்’ எனப்படும்
தத் இஹ நோ ப்ரேத்ய ச ந = அவை இம்மையிலும் பயனில்லை மறுமையிலும் இல்லை
அசிரத்தையுடன் செய்யும் வேள்வியும் தானமும், தவமும், கர்மமும், ‘அஸத்’ எனப்படும். பார்த்தா, அவை மறுமையிலும் பயன்படா; இம்மையிலும் பயன்படா;
ॐ तत्सदिति श्रीमद् भगवद्गीतासूपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे
श्रिकृष्णार्जुन सम्वादे श्रद्धात्रयविभागयोगो नाम सप्तदशोऽध्याय: || 17 ||
ஓம் தத் ஸத் – பிரம்ம வித்யை, யோக சாஸ்திரம், உபநிஷத்து எனப்படும்
ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த
உரையாடலில் ‘சிரத்தாத்ரய விபாக யோகம்’ எனப் பெயர் படைத்த
பதினேழாம் அத்தியாயம் நிறைவுற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக